நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்…. 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது…
மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது. இந்த பண்டமாற்றில் மிகப்பெரும் நன்மை அடைந்தவர்கள் நன்கொடை தந்தவர்கள். கிஞ்சித்தும் நன்மை காணாதவர்கள் ஏழைகள்… .(மொழிபெயர்ப்புக் கட்டுரை)
Tag: மிஷனரீஸ் ஆஃப் சாரிடி
மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1
”உங்களைப் போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்கள் எல்லாம் இந்தப் பெண்மணியை ஏன் இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை!” என்கிறார் ராம்பகன் சேரியின் பண்ணாலால் மாணிக். அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார் அவர். ““மதர் தெரசாவின் அமைப்பு? மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர்கள் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது!”.. உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள் – இந்த வசூல் பலப்பல வருடங்களாகத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து உதாசீனப் படுத்தி வருகிறது. STERN நிறுவனம் இந்திய நிதி அமைச்சகத்தை இது குறித்து கேட்டதில் இது வெளியிட முடியாத ரகசியத் தகவல் என்று கூறி விவரங்கள் தர மறுத்து விட்டது… (மொழிபெயர்ப்புக் கட்டுரை)
View More மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1