மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்…. 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது…
மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது. இந்த பண்டமாற்றில் மிகப்பெரும் நன்மை அடைந்தவர்கள் நன்கொடை தந்தவர்கள். கிஞ்சித்தும் நன்மை காணாதவர்கள் ஏழைகள்… .(மொழிபெயர்ப்புக் கட்டுரை)

View More மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1

”உங்களைப் போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்கள் எல்லாம் இந்தப் பெண்மணியை ஏன் இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை!” என்கிறார் ராம்பகன் சேரியின் பண்ணாலால் மாணிக். அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார் அவர். ““மதர் தெரசாவின் அமைப்பு? மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர்கள் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது!”.. உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள் – இந்த வசூல் பலப்பல வருடங்களாகத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து உதாசீனப் படுத்தி வருகிறது. STERN நிறுவனம் இந்திய நிதி அமைச்சகத்தை இது குறித்து கேட்டதில் இது வெளியிட முடியாத ரகசியத் தகவல் என்று கூறி விவரங்கள் தர மறுத்து விட்டது… (மொழிபெயர்ப்புக் கட்டுரை)

View More மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1

ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.

ஆபிரஹாமிய மதங்களின் வரலாறு என்பது உண்மையில் போர்களின் வரலாறுதான்… போர்களின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக, ”அழிவும் நாசமும் போர்களின் விளைவு” என்பதை ”அழிவும் நாசமும் கடவுளின் விருப்பம்” என்று ஆபிரஹாமியம் மாற்றியமைத்தது… பிற கடவுளர்களை இழிவுறுத்தல், பிற மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்தல், அவர்களது பண்பாட்டு அம்சங்களை கேவலப்படுத்துதல், வழிபாட்டுத்தலங்கள் உடைத்தெறியப்படுதல் ஆகியவை இறைவனுக்கான புனிதக் கடமை என்கிற பெயரில், அற விழுமியங்களாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கைமாற்றித்தரப்பட்டு மதப்பரவல் முயற்சிகளால் பரவிக்கொண்டே செல்கின்றன. இதன் நீண்ட கால விளைவு…

View More ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.

கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

இந்து சமுதாயம் கிறித்துவ இறையியலைப்புரிந்து கொள்ளாமல் மதமாற்றத்திற்கு எதிராக வலுவான எதிர்த்தரப்பைக் கட்டியெழுப்ப முடியாது… போப் செய்த தவறுகள் என்று பட்டியலிட்டால், போப்பே பாவிதான் என்று சொல்லி விடுவார்கள். காலனியம், நிறவெறி, செவ்விந்தியர்களை அழித்தது என்று எதைசொன்னாலும்… மேற்கு இந்தியா மீது காட்டும் ’சிறிய அக்கறை’ இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்…

View More கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்

மதமாற்ற மதங்களின் தொடர்ச்சியான பணபலமும், அதிகார பலமும் மிக்க தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள் மூவகை இந்துத்துவர்களும்தான். ஆனால் இந்த சக்திகளை எதிர்கொள்ளும் நுட்பமான அறிவுத் தெளிவும், செயல் திட்பமும் அரசியல் இந்துத்துவத்தினாலேயே சாத்தியமாகிறது… சடங்கு இந்துக்களும் அரசியல் இந்துக்களும் அறிவின் தளங்களில் திரள்வதும், ஆன்மீக இந்துத்துவம் விரிந்து பரவி வலுவடைவதும் இதன் மூலமே சாத்தியமாகும்.

View More மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்

கூகுள் கொண்ட கோபம்

அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.

View More கூகுள் கொண்ட கோபம்

ஒரு குடும்பத்தின் கதை…

நண்பனின் மனைவி சில நிமிடங்களிலேயே வேற்றாட்கள் என்று பாராமல் எங்கள் முன் குமுறி அழ ஆரம்பித்தார். “என்னைச் சந்தேகப்படுகிறார், திட்டுகிறார், அடிக்கிறார், நிம்மதியே இல்லை, வயதுக்கு வந்த பெண் குழந்தை வேறு, நான் என்ன செய்வேன்!” என்று அழுதார்…

View More ஒரு குடும்பத்தின் கதை…