தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.
Tag: விஞ்சையன்
உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18
‘அடி பாவி! எத்தகைய தன்மையுடைய நாவல் பழத்தை இப்படிச் சிதைத்துவிட்டாய் என்று உனக்குத் தெரியுமா? சாதாரணப் பழமில்லை இது. தெய்வத்தன்மை வாய்ந்தது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கனியும் இந்த அரிய கனியை உண்பவர்களுக்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பசி ஏற்படாது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கனியை உண்டு மற்ற நேரங்களில் தவம்புரிபவன். அப்படிப்பட்ட கனியை நாசம்செய்து என் தவத்தை நாசம் செய்துவிட்டாயே, பாவி! வானில் பறந்து செல்லும் உன்னுடைய ஆற்றல் செயலற்றுப் போகட்டும். யானைத்தீ என்று அழைக்கப்படும் கடும்பசி நோயால் நீ பனிரெண்டு ஆண்டுகள் அவதிப்படு. மீண்டும் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து நான் இதே போன்ற நாவல் கனியை உண்ணும்போது உன் பசிப்பிணி இளம்பெண் ஒருத்தியால் தீரட்டும்’
View More உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18