தொடர்ந்த தோல்விகளால் மிகவும் மோசமான நிலையிலிருந்த பரமேஸ்வரன் அவனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முஸ்லிம் படைவீரர்களை முழுவதும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான். 1410-ஆம் வருடம் முஸ்லிமாக மதம் மாறிய பரமேஸ்வரன், ஸ்ரீவிஜய அரசினை ஒரு முஸ்லிம் சுல்தானிய நாடாக – சுல்தானேட் ஆஃப் மலாக்கா – அறிவித்ததுடன் அவனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றி கொண்டான்…. மலாக்கா சுல்தானிய ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்த வன்முறை (ஜிகாத்) பெருமளவில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது. இஸ்லாமின் ஆக்கிரமிப்பை அந்தப் பகுதிகளில் பரப்பும் நோக்கத்துடன் சுல்தானேட்டைச் சுற்றியிருந்த நாடுகளின் மீதான ஜிகாத் பெருமளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. மத அடிப்படைவாதம் கொண்ட சுல்தானியப் படையினர் “காஸி”களாகும் (காஃபிரை கொல்பவர்கள்) நோக்கத்துடன் சுற்றியிருந்த நாடுகளின் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்…
View More வன்முறையே வரலாறாய்… – 19