இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்… என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்…
View More மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்Tag: ஹிந்துத்துவ சிறுகதைகள்
தலைமுறை [சிறுகதை]
நான் சொன்னேல்ல, நம்ம கோவில் திருவிழாவுக்கு அவங்க ஆளுங்க எதுக்கு. வெறும் மாலைய மட்டும் வாங்கிட்டு போகவா? பிராசாதம் வாங்கிப்பாங்களா, குங்குமம் வச்சுப்பாங்களா? துளசி வாங்கிப்பாங்களா?….. டேய், ராவுத்தர் அப்பா எல்லாம் வாங்கிட்டிருந்தவர்தான், நானே சின்ன பிள்ளைல பாத்திருக்கேன். ராவுத்தரும் அப்படி இருந்தவர்தான், பின்னாடி அவங்க ஆளுங்க கொஞ்சம் சங்கடப்படறாங்கன்னு ஜாடையா சொன்னாப்ல, அதனால நாமளும் அத மதிச்சி ஒன்னும் தர்றதில்ல…. சற்று யோசித்த கவுண்டர், “வேண்டாம்யா, ஒவ்வொரு ஜாதிக்கும் வடக்கயிறுல பங்கிருக்கு, எங்க ஜாதிப் பங்க வெட்டிடாங்கன்னு கலாட்டா வரும், எதுக்கு. பாத்து சமாளிச்சிக்கலாம், கட்ட போடறவங்கள கொஞ்சம் பாத்துக்க சொல்றேன்”…
View More தலைமுறை [சிறுகதை]ஹிந்துத்துவ சிறுகதைகள்
தமிழ்ஹிந்து இணையதளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைபெயரில் அரவிந்தன் நீலகண்டன் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியது நினைவிருக்கும். அந்தக் கதைகள் வாசகர்களால் தொடர்ந்து விவாதிக்கப் பட்டு, பாரட்டவும் பட்டன. அவற்றை மிக நேர்த்தியாகத் தொகுத்து தடம் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது…. பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது. அத்தகைய கதைகளின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி, வரலாற்றுப் பின்னணியில் இந்திய உணர்வுடன் வெளிவரும் சிறுகதைகளை இத்தொகுப்பில் நாம் விழிவிரிய வாசிக்கலாம். பாரதப் பண்பாட்டில் வேர்கொண்டு நம் மரபின் மகத்துவக்கொடியைப் பறக்கவிடும் கதைகள் இவை…
View More ஹிந்துத்துவ சிறுகதைகள்