‘ஒரு ரொமிலா தாப்பரை உருவாக்கியிருக்கிறீர்களா’ என கொக்கரிக்கிறார்கள் இடதுசாரிகள். இல்லை என்பதுதான் சந்தோசமான விசயம்.. அரசு அதிகார உதவியுடன் வெளிநாட்டு பல்கலைக்கு சென்று இந்திய வரலாற்றைப் படித்து அதை காலனிய-மார்க்சிய நோக்கில் மட்டுமே அணுகி தன்னை ஒரு அதிகார மையமாக மாற்றிய ஒரு ஆளுமையை இந்துத்துவம் உருவாக்கவில்லை. ஆனால் பீம்பெதகா குகைகளை கண்டுபிடித்து அவற்றுக்கு உலக குகையோவியங்களின் தொல்வரலாற்றில் சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு வகங்கர் ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆசியாவின் மிகச் சிறந்த தொல்லியலாளர் என சர்வதேச தொல்லியலாளர்களால் அறியப்பட்ட பிரஜ் பஸி லால் இந்துத்துவர்… இந்துத்துவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என்பது அவர்களின் வாழ்க்கைகளேதான். ‘களப்பணி’, ‘அறிவியக்கம்’ என்பது போன்ற பாகுபாடுகளை கேட்கும் போது துணுக்குற செய்கிறது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவும் தத்தோபந்த் தெங்கடிஜியும் தாணுலிங்க நாடாரும் சுவாமி சித்பவானந்தரும் செமினார் சிந்தனையாளர்களல்ல. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் சிந்தனைக்கும் கோடு கிழிக்க முடியாது…
View More இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?