எனவே, பாரதி சீனிவாசனை ‘சிக்க வைத்துவிட்டான்’ என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை’ என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ‘நம்பி இருக்கலாம்.’
View More ஓடிப் போனானா பாரதி? – 09