மூலம்: டாக்டர் திருமதி ஹில்டா ராஜா
மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
“நான் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள்தான். எனது புரிதலின்படி கன்வர்ஷன் என்பது வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தொடர்ந்து தேடும் ஒரு வாழ்க்கைமுறை. மத மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம், ஒரு தெருக்கூத்தல்ல, எண்ணிக்கையைக் கூட்ட நிகழ்த்தப்படும் ஒரு செயலுமல்ல. மதமாற்றம் என்பது கண்டிப்பாக ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மனிதர்களைக் களவாடும் வேலை அல்லவே அல்ல… அன்னிய நாட்டு நிறுவனங்கள் எதற்காக இவ்வித மதமாற்றத்திற்குப் பண உதவி புரிகின்றன? சர்ச்சுகளுக்கு வரும் அன்னிய நாட்டு பண வரவை நாம் சட்டப் படி தடை செய்து விட்டு, அதற்குப் பிறகு எவ்வளவு மத மாற்றங்கள் நடை பெறுகின்றன என்று தான் பார்க்கலாமே!