தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள்… தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது…
View More பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்Tag: இலங்கை ஜிகாத்
சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்
சென்னையில் இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகியுள்ள நிலையில், மீதமுள்ள சக பயங்கரவாதிகளைக் காப்பாற்ற, காவல்துறையை திசைதிருப்புவதற்காக இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது… மே 1 முதல் மூன்று நாட்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதைக் கணக்கிட்டு, மோடியின் சுற்றுப்பயணத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம்… கைதாகியுள்ள ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதிலுமே பயங்கரவாதிகள் திட்டமிட்ட முறையில் காலூன்றி இருப்பது தெரிகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம், பூம்புகார், வேதாரண்யம், காயல்குடி, கோடியக்கரை, சென்னை, எண்ணூர் பகுதிகளில் சத்தமின்றிச் செயல்படும் பயங்கரவாத ஆதரவுக் குழுக்கள் இயங்குவதாக மத்திய புலனாய்வுத் துறையே தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி கள்ளநோட்டுப் புழக்கம், தங்கக் கடத்தல், மர்ம நபர்கள் நடமாட்டம் போன்ற சமூகவிரோத நிகழ்வுகள் நடப்பதைக் கணக்கிட்டால், நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கர ஆபத்தின் பரிமாணம் விளங்கும்…
View More சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்