உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். இது தொடர்பாக மத்தியிலிருந்து எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது… இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான். தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை… இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?…
View More அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?Tag: கட்சிப் பூசல்கள்
தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்திலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு” தலைமை அடிமை”யாகவே உள்ளன. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது. தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும்…. கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர் அடையாளம் காணாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது என்பதே நிதர்சனம்..
View More தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?பாஜகவில் பிதாமகர்கள்
காலம் மாறி வருவதையும் துடிப்பும் ஆற்றலும் ஓரளவு குறைந்த வயதும் கூடிய தலைவர்களை இன்றைய பாரதம் எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. வாக்களர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். எதிர்காலம் குறித்த கனவுகளையும் அதை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய தலைவர்களையும் எதிர் நோக்கிக் காத்திருப்பவர்கள்…. இது நாள் வரை மதிப்பையும் மரியாதையையும் பிரமிப்பையும் ஈட்டிய அந்த முது பெரும் தலைவர்கள் எல்லோரும் சாதாரண திராவிடக் கட்சி அரசியல்வாதிகள் போல தேர்தலில் போட்டியிடப் பிடிவாதம் பிடிப்பதும் இந்த சீட்டுதான் வேண்டும் என்று சிறு பிள்ளை போல அடம் பிடிப்பதும் அவர்கள் மீது பெரும் மரியாதைக் குறைவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன….
View More பாஜகவில் பிதாமகர்கள்மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி
மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்… 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்….தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை….
View More மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணிகான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்
”மைனாரிட்டி அரசு என்று சொல்வதால் நான் கவலைப்படப் போவதில்லை. சிறுபான்மை சமூகத்தை மைனாரிட்டி என்பார்கள். அதைப் போல தி.மு.க சிறுபான்மையினருக்காக என்றும் பாடுபடக் கூடியது”.. தமிழகத்தை வளர்க்க வேண்டுமானால் அழகிரியையும் ஸ்டாலினையும் பலிகொடுக்கத் தயாராக இருப்பதாக முழங்கியதுதான் உச்சகட்ட நகைச்சுவை… தி.மு.கவைப் பிளந்த கோபாலசாமி அளித்த அனுபவத்தை “முதியவர்’ மறந்திருக்க மாட்டார். ஆயினும், தனது பங்குக்கு சாமிகளை மேடையேற்றி அழகு பார்த்தார்…
View More கான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்
ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும் … தன்னுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும், செயல்பாட்டிற்கும் தக்க அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை சென்று மோகன்ஜி சந்தித்தது, அவரின் நற்பண்பைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
View More ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்