அக்கவிதையில் பாரதி சொல்லும் “உயிர்த்தெழுதல்” சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்… கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்….
View More பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதைTag: சமய நல்லிணக்கம்.
ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?
ஞாயிறு, பக்ரி-ஈத், ரம்சான் போன்ற சமயப்பண்டிகைகளின்போது, அனைத்துச் சமயத்தோரும், சமயமறுப்பாளரும் ஒன்றுகூடி, நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளை வாழ்த்துகிறார்கள். இப்படி வாழ்த்துவது சமயநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாராட்டத்தகுந்த ஒரு நற்செயலே ஆகும்… ஆயினும், இந்துக்களின் பண்டிகை எனில் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்ன பிற] அப்பண்டிகை ஏன் கொண்டாடப்படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன….
View More ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?