காலமெல்லாம் ஆத்ம விசாரம் நிகழ்ந்து வருகிறது. மக்கள் மனது ஆத்ம விசாரத்தில் ஈடுபடாத காலமே கிடையாது. ஆத்மவிசாரம் செய்கின்ற முறை காலத்திற்கேற்றவாறு அமையலாம். தாங்களாகவே ஆத்ம விசாரம் செய்யும் பொழுதுதான் சமயத்தைப்பற்றிய அனுபவ ஞானம் ஒவ்வொருவருக்கும் கிட்டுகிறது… ஆத்ம ஞானத்தைப் பற்றிய தெளிவு பெறாதவர்கள் குருவை நாடிப் போவது உண்டு. பிப்பலாதரிடம் பரத்வாஜருடைய புத்திரர் சுகேசர், சிபியின் புத்திரர் சத்தியகாமர், சூரியனுடைய பெளத்திரர் கார்க்கியர், அசுவலரின் புத்திரர் கெளசல்யர், விதர்ப்பநாட்டினராகிய பார்க்கவர், கத்தியரின் புத்திரர் கபந்தி என்னும் அறுவர்…
View More [பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்