நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம்.
மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.
View More அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்