வெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை… மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள். உங்கள் நதிகளை அழித்து விடாதீர்கள். உங்கள் மலைகளை இழந்து விடாதீர்கள்…
View More தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)Tag: பா.ஜ.க சாதனைகள்
பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)
முதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரத்தை தடையின்றி அளித்து வருவதே காரணம்.., இனி பாஜக மத்திய பாஜக அரசின் மகத்தான சாதனைகளை எடுத்துச் சொல்ல பல ஆயிரம் பக்கங்கள் தேவைப் படும். முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்..
View More பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)
தமிழ் நாடு அழிவுப் பாதையில் இருந்தும், ஊழல்களின் பிடியில் இருந்தும், வன்முறைகள் பயங்கரவாதப் பிடிகளில் இருந்தும், அழிந்து கொண்டிருக்கும் கல்விகளில் இருந்தும், சூழல் அழிவுகளில் இருந்தும், கடன்களில் இருந்தும் விட்டு விடுதலையாகி வளர்ச்சிப் பாதையில் சென்று ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்களர்களின் முன்னால் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பா ஜ க கட்சி மட்டுமே. பா ஜ க எந்த வகையில் முந்தைய நான்கு கட்சிகளை விட வேறு பட்டது? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்… அவர்கள் இது வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் ஆளும் மாநிலங்களிலும், மத்திய அரசிலும், தமிழ் நாட்டுக்காகவும் பி ஜே பி இது வரை செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை….
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)