வேலூர், கொசப்பேட்டை பகுதியில் தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் திரு. அர்விந்த் ரெட்டி அவர்கள் தமது மருத்துவ மனைக்கு முன்பாக குரூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார். திரு அர்விந்த் ரெட்டி அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி… இந்தப் படுகொலை தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பா.ஜ.க தொண்டர்களும் கருதுகின்றனர்… இளையாங்குடியில் நடந்த பாஜக போராட்டத்தில் ம.ம.க, த.மு.மு.க கட்சியினர் பாஜக கூட்டத்திற்குள் புகுந்து வன்முறைத் தாக்குதலில் இறங்கினர்..
View More பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை