பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை

வேலூர், கொசப்பேட்டை பகுதியில் கடந்த அக்டோபர்-23ம் தேதி அன்று தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் திரு. அர்விந்த் ரெட்டி அவர்கள் தமது மருத்துவ மனைக்கு முன்பாக ஒரு மூன்று நபர் கும்பலால் குரூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.

துடிப்பான இளைஞரும் செயல்வீரருமான அர்விந்த் ரெட்டி அவர்களின் மரணம் அந்த பகுதி மக்களையும் பாஜக தொண்டர்களையும் கடும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறது.

திரு அர்விந்த் ரெட்டி அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். நாயகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் படுகொலை தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பா.ஜ.க தொண்டர்களும் கருதுகின்றனர். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் கண்டு இஸ்லாமிய மதவெறி இயக்கங்கள் அசூயையும் கடுப்பும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை தீவிர நடவடிக்கை மூலம் கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை, வேலூர் மற்றும் மாநிலத்தின் பல இடங்களில் பா.ஜ.கவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகக் கிளைத் தலைவர் ஜெயலால், முதல்வர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு இந்தக் கொலைவழக்கில் நீதி வழங்கப் பட்டு, குற்றவாளீகள் தண்டிக்கப் பட ஆவன செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

வேலூர் கலெக்டர் அலுவகலம் முன்பு நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார். ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் நடந்த பாஜக போராட்டத்தில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. இளையாங்குடியில் பாஜக சார்பில் வேலூர் பாஜக மருத்துவர் அணிச் செயலாளர் அரவிந்த் ரெட்டிபடுகொலைக்கு கண்டனமும், இரங்கலும் தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் அரவிந்த் ரெட்டிபடுகொலைக்கு காரணமானவர்களை கடுமையாக சாடிப் பேசினார். இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) ஆகிய கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டு வந்தனர். பாஜக கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதலில் இறங்கினர். இதில் பாஜக நிர்வாகிகள் இருவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் இளையாங்குடியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் கலவரமாகி விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்து இயக்கங்களின் செயல்வீரர்கள் மிக குரூரமாக படுகொலை செய்யப் பட்டு வருவது ஒரு தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. மதுரையில் பேராசியர் பரமசிவம், இந்து முன்னணி தலைவர்கள் காளிதாஸ், ராஜகோபாலன் மற்றும் கோவையில் வீர கணேஷ், வீர சிவா, தென்காசியில் குமார பாண்டியன் சகோதரர்கள் என்று இந்தப் பயங்கரவாத செயல்கள் தொடர்கின்றன. இதற்கு முன்பு நடைபெற்ற படுகொலைகள் எவற்றிலும் குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப் படவில்லை. காவல்துறை மற்றும் மாநில அரசின் மெத்தனமும், சம்பந்தப் பட்ட இந்து இயக்கங்களே ஒரு கட்டத்தில் அயர்ச்சியும் விரக்தியும் அடைந்து தங்கள் நீதிமன்ற செயல்பாடுகளில் தொய்வடைந்து விடுவதும் இதற்குக் காரணமாகியுள்ளது.

இந்தப் படுகொலையும் அப்படி ஆகி விடக் கூடாது. நீதி வழங்கப் படும் என்றும் கொலையாளிகள் தண்டிக்கப் படும் வரை பாஜகவினர் தொடர்ந்து போராடுவார்கள் என்றும் நம்புவோம்.

21 Replies to “பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை”

 1. சமூக நலச் சங்கம், அரசியல் கட்சி என்னும் போர்வைகளில் வன்முறைகளில் துணிந்து இறங்கும் போக்கிரிகளுக்கு ஜயலலிதா அரசியல் அங்கீகாரம் அளித்து மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டார். இதற்கு அவரேதான் பரிகாரம் செய்தாக வேண்டும். வாக்குகளை மொத்தமாகப் பெற வெண்டும் என்ற சுயநலப் பேராசை காரணமாகத் தெரிந்தே தவறு செய்யும் காரியத்தில் அவர் இறங்கியிருக்கிறார். எனக்குத் தெரிந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவிக்கையில், இந்தக் கும்பல்களுக்கு அரசியல் அங்கீகாரம் வேறு தரப்பட்டுவிட்டதால் கடை நிலை, இடை நிலை காவல் துறை அதிகாரிகள் துணிந்து செயல்படத் தயங்குகிறார்கள். என்று சொன்னார். இதைப் பலர் ஒன்று சேர்ந்து கையொப்பம் இட்டு தமிழக முதல்வருக்க்குத் தெரிவிப்பது நல்லது என நினைக்கிறேன். ஊர், ஊருக்கு ஹிந்து அமைப்புகள் இதைச் செய்ய வேண்டும். நான் ஒரு செல்லாக் காசு என்பதால் மெளனமாக இருக்கிறேன். மேலும் தற்சமயம் நான் சென்னையில் இல்லை.
  -மலர்மன்னன்

 2. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி முதல் அரவிந்த் ரெட்டி வரை யாரெல்லாம் தேசிய இயக்கத்தில் பெரும் தலைவர்களாக வர வாய்ப்பு உள்ளவர்களாகக் கருதப் படுகிறார்களோ அவர்களெல்லாம் கொலை செய்யப் படுகிறார்கள்

  இது உள்நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு வெளி நாட்டில் இருந்து பணம் மற்ற உதவிகள் செய்யப் பட்டு நடக்கிறது

  பாரதீய ஜனதா கட்சி இனிமேலும் மெத்தனமாக இருக்காமல் முக்கியமான கட்சித் தலைவர்களுக்கு கட்டாயப் பாதுகாப்பு தர ஏற்பாடு செய்ய வேண்டும் .
  பணத்தை சம்பாதிக்க முடியும்.
  ஆனால் ஒரு ஷ்யாமா பிரசாத் முகர்ஜியையோ ஒரு தீன் தயாள் உபாத்யாவையோ ,அரவிந்த் ரெட்டியையோ இனி உருவாக்க முடியுமா ?
  ஆகவே இனிமேலாவது பாஜக மிகக் கவனமாக இருக்க வேண்டும்
  ஒரு உயிர் கூடப் போக அனுமதிக்கக் கூடாது.

  கொலை நடந்த அடுத்த கணமே போலீஸ் ‘நிலம் சம்பந்தப் பட்ட பகையாக இருக்கலாம்’ என்று சொல்வது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
  காவல் துறையையோ ,ஜெயலலிதாவையோ நம்புவது வேஸ்ட்!

 3. // காவல் துறையையோ ,ஜெயலலிதாவையோ நம்புவது வேஸ்ட் – sidharan//

  உண்மைதான். ஆனால் பெரும்பாலானவர்களின் மன உணர்வு எவ்வாறாக உள்ளது என்பதை ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தோடு நிறுத்தி விடாமல் எழுத்துப் பூர்வமாக அரசுக்குத் தெரிவிப்பதும் அவசியம். அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம். பின்னர் எமது கோரிக்கை(!) யின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நினைவூட்டல்களும் செய்துகொண்டிருக்க வேண்டும். இதில் எல்லாம் ஒரு தொடர் நடவடிக்கை தேவை.
  -மலர்மன்னன்

 4. ஸ்ரீ அரவிந்த் ரெட்டியின் படுகொலை அநியாயம். கண்டணத்திற்குறியது. இஸ்லாமிய தீவிரவாதத்தின் கோரமுகத்தினை மக்கள் உணர்வார்கள். உணரவேண்டும். அனைத்திற்கும் தீர்வு ஹிந்து ஒற்றுமைதான் அதுமட்டுமே.
  சிவஸ்ரீ.

 5. நாம் பலமுறை பேசி வருவது போலே ஹிந்துக்களின் ஒற்றுமை குறிப்பிடத்தக்க அளவில் நிகழாமல் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒன்று படுவோம்.
  ஹிந்துக்களுக்காக உழைக்கும் தலைவர்களையும் தொண்டர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு பா ஜ க விற்கு உள்ளது. நம் அனைவருக்குமே உள்ளது.
  வாழ்க பாரதம்.

 6. அர்விந்த் ரெட்டி கொலைக்கான காரணத்தை ‘அரசியல் அல்ல’ என்றே திசை திருப்ப முயற்சிப்பார்கள்.பாராளு மன்றத்தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில்
  ஓட்டுவங்கி அரசியலால் உண்மையைச் சொல்லி ஒரு குழு ஓட்டினை இழக்கவா செய்வார்கள்?

  அரவிந்த் ரெட்டியின் கொலையை ஒவ்வொரு இந்துவும் கண்டிக்க வேண்டும்.
  அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தொடர் ந‌டவடிக்கை வேண்டும்.

 7. மிகவும் வருத்தம் தந்த நிகழ்வு;
  குற்றவாளிகளைத் தண்டிப்பதில்
  அரசு மெத்தனம் காட்டக்கூடாது

  தேவ்

 8. எப்படி ஆன்மிகம் என்ற பயிரை நம் முன்னோர்கள் ‘மறை’ என்று ஓதி வந்தார்களோ அதே மாதிரி பொது மக்களிடையே அமைதியாக, குடும்பங்களின் மூலமாகவே, அவர் தம் பழக்க வழக்கங்களின் மூலமாகவே சமயம் பரவ செய்ய வேண்டும். இது போல கூட்டம் போடுவது, தாக்குதலில் இறங்குவது இதெல்லாம் ஹிந்துக்களுக்கு உடன்பாடு அல்ல எனினும், “அமைதியை” விரும்புவதாக கூறிக் கொள்ளும் பிற மக்களும் இச்செயல்களை புரிந்தவர்களின் கோர முகங்களை கண்டு கொள்ள வேண்டும். ஹிந்து இயக்கம் என்பது ஒரு மனத்தால் இயங்கும் இயக்கம் ஆக வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒன்று பட வேண்டும், அது ஒன்றே இந்தியாவின் எப்போதைக்குமான பிரச்சனையாக இருந்து வந்திருக்கிறது.

 9. ஓட்டுப் பொறுக்கி அரசியல் நடத்துவதில் முகவும் ஜெவும் ஒரே மாதிரிதான். ஒரு வித்யாசம் உண்டு. முன்னவர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டார். பின்னவர் சொல்லுகிறார். மற்றபடி சிறுபான்மைக்கு வால் பிடிப்பதில் ஒன்றும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை. நேர்மையான முதல்வர் என்றால் அமெரிக்க துணைதூதரகத்தை தாக்க கும்பல் கூடும்போது அதனை தகுந்த முறையில் எதிர்கொள்ள காவல் துறைக்கு உத்திரவிட்டிருப்பார். முஸ்லிம்களின் ஒட்டு முக்கியம் சட்டம் ஒழுங்கு வோட்டைப் பெற்றுத்தருமா என்ன? கல்கி அவதாரத்துக்கு காத்திருக்க வேண்டுமா அல்லது வலிமையான பிரசாரத்தை கொண்டு இஸ்லாமிய வெறித்தனத்தை தேசத்தில் உள்ளவர் உணரச் செய்யாவேண்டுமா என்பதை பாஜகவும் மற்ற ஹிந்து இயக்கங்களும் முடிவு செய்யவேண்டும்(காலம் தாழ்த்தாமல்)

 10. ஒரு காலத்தில் உலகெங்கிலும் யூதர்களை ஓட ஓட விரட்டி கொன்றார்கள்,ஆனால் இன்று எந்த யூதனையும் எவரும் சீண்ட கூட முடியாது காரணம் ஒட்டு மொத யூத சமூகமும் அறிவார்ந்த இராணுவமயம் ஆகிவிட்டது ,அதே போல் என்று இந்த ஹிந்து சமுகம் இராணுவமயம் ஆகுகிறதோ அன்றே இந்த அவலங்கலக்கு ஒரு முடிவு ஏற்படும்…

  நமஸ்காரம்
  Anantha Saithanyan

 11. அரவிந்த் ரெட்டியின் படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது இளையான்குடியில் தமுமுக-’மனிதநேய’ மக்கள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு என்ன காரணம். தம் கட்சிக்காரரின் கொலைக்கு நியாயம் கேட்டு பாஜக போராடுவது தமுமுகவுக்கு ஏன் எரிகிறது?

  இந்துக்கள் ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு.

 12. ஜெயலலிதா கருணாநிதியை விட மிகவும் புத்திசாலித்தனமானவர் .
  ஏனென்றால் கருணாநிதி தான் ஹிந்து விரோதி என்று வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறார்.
  ஆனால் ஜெயலலிதாவோ தான் ஹிந்து தர்மத்துக்கு ஆதரவளிப்பதாகக் காட்டிக் கொண்டு ,ஆனால் அதை வோட்டுக்காக மட்டுமே பயன் படுத்திக்கொண்டு, உள்ளூர ஹிந்து த்ரோஹியாகவே இருக்கிறார்
  விநாயக சதுர்த்தி ஊர்வலங்களின் மீதும் , ஏன் ஹிந்துக்களின் இறுதி ஊர்வலங்களின் மீதும் காவல் துறை விதிக்கும் சட்ட விரோதக் கட்டுப் பாடுகள்( வழியில் மசூதி இருக்கிறது என்பதால் ) ஜெயா ஆட்சியிலும் தொடர்கின்றன.
  ஜெயலலிதாதான் ஹஜ் பயணத்திற்கான கோட்டாவை அதிகரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்
  கிறிஸ்தவ புனிதப் பயணத்துக்கு மான்யம் அளிக்கிறார்.
  கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஹிந்துக்களுக்கும்
  வாகப் சொத்துகளைஎல்லாம் மீட்க ஆவல் காட்டுகிறார்
  ஆனால் கோயில் சொத்துகளை மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை.
  ஹிந்துக்களின் நம்பிக்கையை மிக சாமர்த்தியமாக தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை
  உதாரணம்: கோயிலில் அன்னதானம் .
  நாள் பூராவும் கோயிலில் அன்னதானம் என்பதெல்லாம் அடாவடியே.
  கோயில் என்ன தெரு ஓர டீக்கடையா ?
  எப்போது பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ?
  அதற்கு ஒரு புனிதம் இல்லையா?
  கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற கதை தான்!
  படித்தவர்கள் கூட இதையெல்லாம் பார்த்து ஏமாறுவதுதான் வேடிக்கை!

 13. In the last elections a radical muslim party allied with the AIADMK and got a few seats
  How can we say Jayalalitha is pro-Hindutva?

 14. Let us give spiritual education to all youngsters. Atleast BJP ruling states should be implemented the same first. When I spoke with our younger generation, they are not even aware about neither our spirituality nor our ‘real history’. Once people know our culture, meaning of rituals, past history, real freedom fightors and etc they will get true national devotion. Those people voting for our (BJP) party. Let us make ‘Hindu vote bank’. Then only pseudo secularist parties consider us also a ‘man’. Since, Christians & muslims have been voting as per their bishop / imam instruction. In our case… Let us do proper ground work to create Hindu vote bank. Automatically everythings will get solved. .

 15. காஷ்மீரத்திற்கு தனி ப்ரதமமந்த்ரி தனி ஜனாதிபதி போன்ற அவலங்களை அடக்கி ஒடுக்கிய பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களுக்கு மதசார்பற்ற ஹிந்துஸ்தான சர்க்கார் தந்த பரிசு அவர் கொலை செய்யப்பட்டது. இன்று வரை அவரது கொலைக்கான மர்மம் துலக்கப்படவே இல்லை. மஹாத்மா காந்தி அவர்களின் கொலை மட்டும் துப்பறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய கொலை. ஷ்யாம் ப்ரசாத் முகர்ஜியின் கொலை விசாரணைக்குக் கூட அவசியமில்லாத ஒரு நிகழ்வு என்பது அன்றைய சர்க்காரின் நிலை. அன்று திசை காணாத ஹிந்து சமூஹத்தின் அவலம் இன்று வரை தொடர்கிறது.

  வீரத்துறவி ஸ்ரீ இராமகோபாலன் அவர்கள் தாக்கப்பட்டது மதறாஸ் சேத்துப்பட்டு பஞ்சவடியில் ஆர்.எஸ்.எஸ் கார்யாலயம் தாக்கப்பட்டது இவையெல்லாம் ராஜ்ய சர்க்காரால் சரியாக விசாரிக்கப்படாமையும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமையும் இன்று ஸ்ரீ அர்விந்த் ரெட்டி அவர்கள் கொலை அதை எதிர்த்துப்போராடுபவர்களை வன்முறை கொண்டு தாக்குதல் என தொடர்கிறது.

  2G விஷயத்தை ஸ்ரீமான் சுப்ரமண்ய ஸ்வாமி கச்சம் கட்டி எதிர்கொண்டது போல உச்சந்யாயாலயம் வரை வழக்காடி ஹிந்துத்வ இயக்க தலைவர்கள் மற்றும் சான்றோர்களை தாக்குபவர்களுக்கு தண்டனை வாங்கப் போராடினால் ஒழிய இது போன்ற அவலங்களை ஒடுக்குவது கடினம். இன்றைய ஹிந்துத்வ இயக்கங்களுக்கு பணத்திற்கோ திறமை வாய்ந்த வழக்கறிஞர்களுக்கோ எந்த குறையும் இல்லை. ஒரு இயக்கம் என்ற படிக்கு மனத்திண்மையுடன் இது போன்ற வன் செயல்களை எதிர்கொள்ளும் திண்மையில் குறை உள்ளது என்பது நிதர்சனம்.

 16. காவல் துறை இடத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக சந்தேகிக்கிறது. இன்னும் குற்றவாளிகள் யாரென்றே தெரியாத போது ஆளாளுக்கு இஸ்லாமிய தீவரவாதம் என்று பின்னூட்டமிடுவது நகைப்பிற்குரியது. இனியும் ராமரை வைத்து காலம் தள்ள முடியாது. மக்கள் விழிப்புடனே இருக்கிறார்கள். எனவே சமூகத்தில் தீண்டாமையை ஒழித்து இந்து மதத்தில் சமதர்ம சமூகம் அமைக்க பாடுபடுங்கள்.

 17. கோவை பகுதியி்ல் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுவது கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

  கோவையில் நடைபெற்ற கலவரத்துக்குப் பிறது முஸ்லிம்கள் மிகவும் உஷாராகிவிட்டனர். கடந்த 15 ஆண்டுகளில் கோவையில் முஸ்லிம் அமைப்புகள் வலுவாக காலூன்றிவிட்டன. ஆனால், 1998-ல் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக இப்போது செல்லாக்காசாகி நிற்கிறது.

  இப்போது முஸ்லிம்கள் யாரை அடித்தாலும், வெட்டினாலும், கொன்றாலும் கேட்க நாதியில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. முஸ்லிம்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காது என்கிற பயம் இப்போது அதிமுகவுக்கும் வந்து விட்டது. அதனால் கொன்றாலும் நடவடிக்கை இல்லை.

  பாஜக மாநில மருத்துவ அணியின் செயலாளராக இருந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை

  தங்கள் கட்சியின் முக்கியப் பிரமுகர் அதுவும் ஒரு டாக்டர் படுகொலையி்ல் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி வி்ட்டு பாஜகவினர் அமைதியாக இருக்கின்றனர். டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலையை ஏன் பாஜக பெரிய பிரச்னையாக ஆக்கவில்லை? இந்த படுகொலையை கண்டித்து பாஜக தேசிய தலைவர்கள் யாரும் அறிக்கை கூட விடவில்லை.

  அடிக்கடி தமிழகம் வரும் வெங்கய்ய நாயுடு, முரளிதர்ராவ் போன்றவர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாநில அரசுக்கும், காவல் துறைக்கும் நெருக்கடி கொடுத்திருக்க வேண்டாமா? இதற்காக ஒரு குழு முதல்வர் ஜெயலலிதா சந்திருக்க வேண்டாமா? அவர் சந்திக்க மறுத்தால் அதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கலாமே?

  வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஆனந்தன் தலையில் இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களைச் சார்ந்தவர்களிடம் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி ஹிந்து இயக்கங்களில் பணிபுரிவது உயிருக்கு உத்தரவாதமற்ற செயல் என்று இயக்கத்தில் இருப்பவர்களே நினைக்கத் தொடங்கினால், அது எவ்வளவு அபாயகரமான விஷயம்?

  இதனை மாற்ற தமி்ழக ஆர்.எஸ்.எஸ்., தமிழக பாஜக என்ன செய்யப் போகிறது? இப்படியே இரங்கல் கூட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி கொண்டே இருக்கப் போகிறார்களா?

 18. காவல்துறைஹிந்துஇயக்கங்கள்சம்மந்தப்படும்போதுசம்பவம்நடந்தபத்துநிமிடங்களிலேயேமிக கெட்டிக்காரர்கள் போல்’பணத்தகராறு’ ‘நிலத்தகராறு’ பெண்களைக்கேலிசெய்தது’ என்றுசொல்வதும்

  ஆளும்கட்சிசம்மந்தப்பட்டிருந்தாலோஅல்லதுஅரசுக்குவேண்டாதவர்களாகஇருந்தாலோ
  ‘ குற்றவாளிதலைமறைவு’ பத்துதனிப்படைஅமைப்பு, பதினேழுபிரிவுகளின்கீழ்வழக்கு என்றெல்லாம்சொல்வதும் வாடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *