லயோலா போன்ற கிறித்துவர்களின் கல்வியோ தெரசா போன்றோரின் உதவியோ, எல்லாமே கிறித்துவ மத மாற்றத்திற்கான ஒரு கருவியே. இதனாலே தான் கிறித்துவர்கள் கொடுக்கும் கல்வி பூதனையின் பால் போன்றது. அதில் சில நச்சு வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மிதமான வகையில் கிறித்தவத்தின் மீது ஒரு நன்றியும்,நன்மதிப்பும் கொடுக்கும்; சராசரியாக இந்து மரபின் மீது ஒரு அக்கறையின்மையும் ஏளனமும் உண்டுபண்ணும்; தீவிரமாயின் இந்து சமய பண்டிகைகள் கொண்டாடினாலோ, மரபின் அடையாளங்களை அணிந்தாலோ தண்டிக்க கூடச்செய்யும். அண்மையில் கூட அத்தகைய செய்திகள் வந்துள்ளன…. இந்த பொய் வரலாற்றிற்கு வைரமுத்து போன்றோர் சாட்சி கூறிவருவது மிகவும் ஈனச்செயல். “கிறிஸ்துவர்கள் வராவிட்டால் தமிழ் நாட்டில் கல்வி பொதுவுடைமை ஆகியிருக்காது”, என்று அவர் கூறுவது, ஒரு திருடன் ஊர் சொத்தை கொள்ளையடித்து தன் வீட்டில் அன்னதானம் செய்வதை போற்றுதல் போல. மரபுக்கல்வியாகிய அழகிய மரத்தின் நிழலில் பொதுவாக அனைவரும் படித்தனர், அதை சாய்த்துவிட்டு, பெஞ்சுகள் செய்து, கிறித்துவக்கல்வி என்னும் கலப்படப்பாலை ஊட்டுவோர்க்கு நன்றி அறிவித்தல் அறிவீனம்…
View More அழகிய மரமும் பூதனையின் பாலும்