புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன. அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன…
View More அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்