அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்

பனிலிங்கம்காஷ்மீர் பிரிவினைவாதிகளும் அவர்களின் “மதச்சார்பற்ற” தோழர்களும் அமர்நாத் யாத்திரை சமீப காலத்தில் ஏற்பட்டது என்கிறார்கள். இவர்களின் கருத்துப்படி, பதான்கோட் நகரின் பூடாமாலிக் என்கிற ஒரு முஸ்லிம் குடியானவனால் தன் கால்நடைகளை தேடும்போது 150 வருடம் முன்பு அமர்நாத் குகை “கண்டெடுக்கப்பட்டது”. இந்த பூடாமாலிக்கின் வம்சத்தினர் என்று சிலர் இன்றும் அமர்நாத் புனிதகோயிலின் வருமானத்தில் பங்கு பெற்று வருகிறார்கள்

ஆனால், இந்த பூடாமாலிக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த கதை இந்துக்களின் மிகப் புனிதமான ஒரு யாத்திரைக்கு முஸ்லிம்களை காரணமாக்கும் ஒரு திரிப்பு முயற்சியாகக் கூட இருக்கலாம்.

இதற்கு நேர்மாறாக, இந்த புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன.

அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன. இந்நூல்கள் நீலமத புராணத்தை விட பழைமையானவை.

வரலாற்றுக் குறிப்புநூலான ராஜதரங்கிணி மற்றும் பல மேலைநாட்டு பிரயாணிகளின் குறிப்புகளில் அமர்நாத் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனால் இந்தத் தலத்தை மக்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தார்கள் என்பது விளங்குகிறது. இந்தத் தலத்தின் பழங்காலப் பெயர் அமரேஸ்வரா எனப்படும். அமர்நாத் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது.

அமர்நாத் யாத்திரிராஜதரங்கிணி பிரயாண வரலாற்றாளர் கல்ஹனா என்பவரால் 1148-49 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜதரங்கிணியில் ஸூஸ்ருவஸ் என்ற நாகத்தின் கதை சொல்லப்படுகிறது. அந்தண இளைஞர் ஒருவரை மணந்த தன் மகளை அபகரிக்க ராஜா முயல்கிறார். அந்த இளைஞர் ராஜாவையும் அவர் தேசத்தையும் சாம்பலாகச் சபிக்கிறார். அதிலிருந்து தப்புவதற்கு சேஷ்நாக் என்ற புனிதக் குளத்தில் (தற்போது காஷ்மீரில் சுஷ்ரம்நாக் என்று அறியப்படுகிறது) ஸூஸ்ருவஸ் அடைக்கலமானதாக அந்தக் கதை சொல்கிறது.

“பாற்கடலை ஒத்த, ஒளிரும் வெண்ணிற நீர்நிலை, நாகம் படைத்த மாயம், தூர மலையின் மட்டில் காண்போம் அமரேசர் யாத்திரையில்” – ராஜதரங்கிணி (அத். 1: பா. 267 – ஆங்கில மொழியாக்கம். M.A. Stein).

ராஜதரங்கிணியில் இன்னோர் இடத்தில் (அத். 2, பா. 138) அரசர் ஸம்திமத ஆர்யராஜா (காலம் கி.மு. 34–கி.பி. 17) “மிக இனிமையான காஷ்மீர கோடைநாட்களை” “காட்டிற்கு மேல் அமைந்த” பனிலிங்கத்தை வணங்குவதில் கழித்தார் என்று சொல்கிறது. இது அமர்நாத் கோவிலைப் பற்றிய குறிப்பே.

அந்த அரசரின் பட்டத்து ராணி, தன் கணவரின் பெயரால் அமரேஸ்வரர் கோயிலுக்கு அக்ரகாரங்களை அளித்ததும், திரிசூலம், பாணலிங்கங்கள் அளித்ததும் கலஹனரால் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிற்காலத்தில், ஜோனராசர் என்பவர் எழுதிய ஒரு வரலாற்றுக் குறிப்பில் சுல்தான் ஜைனுல்-அபிதீன் (1420-1470) லித்தர் நதியின் அருகே ஒரு கால்வாய் அமைத்தபோது அமர்நாத் கோவிலுக்கு விஜயம் செய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இக்கால்வாய் இன்று ஷாஹ் கோல் என்று அழைக்கப்படுகிறது.

பிராக்ஞபட்டர் மற்றும் சுகர் என்பவர்களால் எழுதப்பட்ட ராஜவளிபதகா என்ற இன்னொரு வடமொழிக் குறிப்பில், இந்த யாத்திரைக்கான அதிக விவரங்கள் கிடைக்கின்றன. அக்பர் ஆட்சியில் காஷமீரத்தின் கவர்னராக இருந்த காஷ்மீர்யூசுப்கான் அக்பருக்கு யாத்திரையை விளக்கிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. அந்த விவரங்களின்படி அக்பர் காலத்தில் இந்த யாத்திரை மிக பிரசித்தமாய் இருந்ததும், இந்தப் பனிலிங்கம் தேய்ந்து பின் வளரும் சிறப்பும் தெரிந்திருக்கின்றன என்பது விளங்குகிறது (அக்பர் காஷ்மீரைக் கைப்பற்றியது 1586ல்).

முகலாய மன்னர் ஷாஜகான் காலத்திலும் அமரேஸ்வரர் (அமர்நாத்) யாத்திரை மிகவும் புகழ்பெற்றிருந்தது. ஜகன்னாத பண்டிதராஜர் என்பவர் எழுதிய ஷாஜஹானின் மாமனார் அசிஃப் கான் புகழ்பாடும் ‘அசிஃப் விலாஸம்’ என்ற வடமொழி நூலில் அசிஃப் கான் நிர்மாணித்த நிஷத் என்கிற முகலாய தோட்டத்தின் வர்ணனையும் அமரேஸ்வரர் (அமர்நாத்) சிறப்பும் பேசப்படுகிறது. “தேவர்களின் தலைவன் இந்திரனே சிவபெருமானைத் தொழ அமரேஸ்வர் வருகிறான்” என்கிறது அசிஃப் விலாஸம்.

பிரான்ஸ்வா பெர்னியேபிரான்ஸ் தேசத்து மருத்துவர் பிரான்ஸ்வா பெர்னியே (Francois Bernier) ஔரங்கசீப்புடன் காஷ்மீரத்துக்கு 1663ல் வந்த குறிப்புகள் அந்த மருத்துவரின் “முகலாய அரசில் சுற்றுலா” என்கிற நூலில் கிடைக்கின்றன. ஔரங்கசீப் “ஸங்ஸஃபேத் என்ற இடத்திலிருந்து உறைந்த பனிபிம்பங்கள் நிறைந்த குகையை நோக்கித் தொடர்ந்து இரு நாட்கள் பயணித்தார்” என்கிறார். அவர் குறிப்பிடும் “குகை” (grotto) என்பது அமர்நாத் குகையே என்று இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வின்சென்ட் ஸ்மித் எழுதுகிறார். வின்சென்ட் எழுதிய முகவுரையில் “அற்புதமான பனி பிம்பங்களால் நிறைந்த அமர்நாத் குகையில் உருகும் பனிநீரில் எழும்பிய பனிப்பாளங்கள் (stalagmites) பல இந்துக்களால் சிவ ரூபமாக பூஜிக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார்.

வைக்ன் (Vigne) என்னும் இன்னொரு பிரயாண வரலாற்றாளரின் “காஷ்மீர், லடாக், இஸ்கார்த் பிரயாணங்கள்” என்ற நூலில் இந்தப் புனித தலத்தைப்பற்றி விவரமான பல குறிப்புகள் உள்ளன. இந்த யாத்திரை “இந்துக்களின் சிராவண மாதத்தின் 15ஆம் நாளில் நிகழ்கிறது” என்றும் “எல்லா நிலையிலுள்ள மற்றும் எல்லா சாதி இந்துக்களும் ஒன்று சேர்ந்து லத்தார் பள்ளத்தாக்கின் இந்த புகழ்வாய்ந்த குகை”க்குப் போவதாக அந்த குறிப்புகள் விவரிக்கின்றன. வைக்ன் லடாக்கிலிருந்து திரும்பும் வழியில் 1840-41ல் காஷ்மீரத்துக்கு விஜயம் செய்து இந்த நூலை 1842ல் வெளியிட்டார். இவரது நூல் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பெரும் உற்சாகத்துடன் இந்த யாத்திரைக்கு மக்கள் திரண்டதாகச் சொல்கிறது.

புகழ்பெற்ற சீக்கிய குரு அர்ஜூன்தேவ் இந்த அமர்நாத் குகைக்கோயிலுக்கு நிலம் வழங்கியுள்ளார். “சரி” எனப்படும் சிவபெருமானின் புனித வாள் அமர்நாத் குகைக்கு கொண்டுசெல்லப்படும் திருவிழாவிற்காக இந்த நிலம் வழங்கப்பட்டது.

காஷ்மீரத்தில் 1819ல் ஆப்கன் இனத்தவர் ஆட்சி ஒழிந்ததும், ஹர்தாஸ் டிகு என்கிற காஷ்மீர பண்டிதரால் ஸ்ரீநகரில் “சாவ்னி அமர்நாத்” அமைக்கப்பட்டு, அங்கு திரளும் ஏராளமான பக்தர்களுக்கு யாத்திரையின் போகவர இரு பிரயாணத்திலும் இலவச உணவு அவரின் தனி நிதியால் வழங்கப்பட்டது என்று வரலாற்று ஆவணங்கள் குறிக்கின்றன.

அமர்நாத் புனிதபூமி காஷ்மீர் மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ளதை சோதா வோனி முதலான பல காஷ்மீர நாடோடிக் கதைகள் நிரூபிக்கின்றன.

ஆகவே காஷ்மீரத்து அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்துக்களின் ஆன்மீகப் பாரம்பரியம். இது வெறும் 150 வருட காலக் கதை அல்ல.

ஆப்கன் இன ஆட்சியின்போது காஷ்மீரத்து இந்துக்கள்மீதான இனக்கொடுமைகள் பெருகி இந்தப் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்யும் உரிமை இந்துக்களுக்கு மறுக்கப்பட்டது. ஆனால், பின்னர், அந்த ஆட்சி மறைந்ததும் கடந்த 150 வருடமாக இது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இதை வைத்து அமர்நாத் கோயிலின் முக்கியத்துவத்தையும் அதன் தொன்மையையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

15 Replies to “அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்”

  1. அருமையான வரலாற்றுக் குறிப்புக்கள் ஜயராமன்.

    அமர்நாத் இமயத்தின் அதி தொன்மையான புனிதத் தலம் என்பதில் ஐயமில்லை. இந்த யாத்திரையின் புனிதத்தை அழிக்க இந்து விரோதிகள் செய்யும் அனைத்து திட்டமிட்ட சதிகளையும் வென்று, சிவபிரானின் பனிமால் இமயப் பீடம் தன் பெருமையை நிலைநாட்டும்.

  2. Fantastic.
    Thanks a LOT Jeyaraman.
    Really a great knowledge on Amarnath.
    The depth & care with which you have presented them is extraordinary.
    God Bless.
    Thanks .
    Srinivasan.

  3. சைவ பூமியான காஷ்மீரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அமர்நாத் குகைக் கோவிலை பற்றிய ஏராளமான செய்திகள் தந்து, இந்த இணைய தளத்தை தொடர்பு கொள்ளும் அனைத்து மக்களுக்கும் பெரும் சேவை புரிந்துள்ளீர்கள் ஜயராமன்.

    இப்பேர்ப்பட்ட புராதனமான மற்றும் புனிதமான யாத்திரையும் வழிபாட்டுத் தலமும் இன்று துலுக்கர்கள் கையில் சிக்கிக் கொண்டு இருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது இரத்தம் கொதிக்கின்றது.

    காஷ்யப முனிவரின் பெயரால் காஷ்மீரம் என்று அழைக்கப் படும் இப் புனித பூமி மீண்டும் சிவ மயமாக ஆகவேண்டும் என்று அந்த ஈசனைப் பிரார்த்திக்கிறேன்.

    நன்றி / அன்புடன்

    ப.இரா.ஹரன்.

  4. Respected Sir,
    I studied somewhere that swamy vivekanandha also
    mentioned about amarnath. As per his words he felt very good vibration and meditative state in amarnath cave.
    with love and regards,
    B. Murali Daran.

  5. ஜயராமன் அவர்களே:

    சரியான ஆய்வுக் குறிப்புகளையும், பண்டைய நூல்களிலிருந்து மேற்கோள்களையும் காட்டி அமர்நாத்தின் தொன்மையையும், முக்கியத்துவம் உள்ள ஒரு இந்து வழிபாட்டுத்தலமாக அது காலம் காலமாக விளங்குவதையும் விளக்கியுள்ளீர்கள்.

    பிற மதத்தினருடன் வறட்டு வாதம் செய்வதற்கு இல்லையானாலும், இந்து மதத்தினரை நல்ல விவரம் உள்ளவராக மாற்றுவதில் இது போன்ற குறும்-ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரிதும் பயன்படும்.

    உங்களுக்கு ஏராளமான நன்றிகள் சொல்ல இந்துக்கள் எல்லோரும் கடமைப் பட்டிருக்கிறோம்.

    இந்த வளைத்தளத்தை, தமிழ் அறியாத இளைய இந்துக்களுக்கு போய் சேர, ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால் நமக்கு அடுத்துள்ள மற்றும் பிற்கால தலைமுறைகளுக்கு உபயோகமாக இருக்கும்…

  6. Fantastic article, thanks for bringing the history of Amranath cave to the people of Bhrath.Hinduisim will triumph in the end. I have no doubt about it.
    God bless you, please continue your good work
    Ramji

  7. Excellent article. Our own country , our own temple, our own religion. Inspite of that we need to fight to get
    land for basic facilities to the hindu devottees.

    What a shame . Muslims get huj subsidy to go to
    overseas – our own hindu people gets nothing-They even denied even basic facility like toilets at Amarnath area –

    PL translate this into english and
    we canforward it to so many people –

    esp SDF Dallas group FHRS america group etc –
    thanks
    akila

  8. dear all hindu people
    this very nice true history
    each and every family should visit amanath & take blessing from him
    each and every Hindus don’t ignore to take our Hindus rights from our foolish government
    pls allot some time for our culture

    your m.balasubramanian

  9. அமர்நாத் புனிதத் தலம் குறித்தும் யாத்திரையின் வரலாறு குறித்தும் நிறைய தகவல்களுடன் அருமையாக தொடுக்கப்பட்ட கட்டுரை. ஜயராமன் சாருக்கு நன்றிகள் பல.

    திண்ணை இணைய இதழில் பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய கீழ்காணும் கட்டுரைகளையும் இந்த சந்தர்பத்தில் வாசகர்கள் படித்துக்கொண்டால் நலம்.

    https://www.thinnai.com/?module=displaystory&story_id=20808071&format=html

    https://www.thinnai.com/?module=displaystory&story_id=20808214&format=html

    அன்புடன்
    R.பாலா

  10. VERY MANY THANKS FOR THE ARTICLE. EXCELLENT AND THE CARE YOU HAVE TAKEN IS REALLY LAUDABLE. GOD BLESS YOU
    Seshadri Rajagopalan

  11. இதுபோன்ற வரலாற்று சிந்தனைகள் எங்கள் பள்ளி நாட்களில் எங்களுக்கு அறியாமலே போய்விட்டது. நாங்கள் படித்ததெல்லாம் போலிமதச்சார்பின்மை பாடங்கள்தான். ஆயினும் ஸ்வயம்ஸேவகர்கள் பலர் எங்களுக்கு கல்லூரி நாட்களில் கிடைத்தபோது இதுபோன்ற தகவல்கள் எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுண்டு. இந்த தேசம் எப்போது தன் இழந்த பெருமையை பெறப்போகிறது ? அந்நாள் விரைவில் மலர இறைவன் அருள்புரியட்டும்.

  12. சரியான நேரத்தில் எழுதப் பட்ட அருமையான கட்டுரை.
    நான் இன்று தான் அமர்நாத் யாத்திரையினை நல்ல படியாக முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினேன். கடந்த பதினொன்றாம் தேதியன்று அமரநாதனை தரிசித்தேன். மிகப் பழம் பெருமை வாய்ந்த இந்த ஸ்தலத்தினை பற்றி அமர்நாத பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களும் பெருமை படக் கூறுகிறார்கள். இதனை என் காதால் கேட்டேன். காஷ்மீர் மக்கள் (முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள்) இன்றும் அமர்நாத் யாத்திரிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் மனதார செய்து வருகிறார்கள். இதையும் நான் சமீபத்தில் நேரில் அனுபவித்து இருக்கிறேன். கட்டுரையாளருக்கு என் இதய நன்றி.

  13. ஆதாரங்களோடு இங்கே தரப் படும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

    ஆசிரியருக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *