இந்தியாவில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மத்திய ஆசியா நோக்கி நடத்திச் செல்லப்பட்ட பெருவாரியான ஹிந்துக்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் மலைகளைக் கடக்கையில் குளிர் தாளாமால் இறந்து போனார்கள். அதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தானத்து மலைகள் “ஹிந்து குஷ் (hindu killers or slayer of hindus) என்று பெயரிடப்பட்டன. இதனைக் குறித்து எழுதும் இப்ன்-பதூதா, “இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைச் சிறுவர்களும், சிறுமிகளும் அந்த மலைகளைக் கடக்கையில் பனியிலும், குளிரிலும் சிக்கி இறந்து போனார்கள்” என்கிறார்… திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் (பின்னால் திப்புவின் மகனால் அது சரிபார்த்துச் செப்பனிடப்பட்டது), திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000 ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றதுடன், 7000 பேர்களை அடிமைகளாகப் பிடித்தான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலோனோர் இந்துக்கள்) ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டுப் பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டார்கள்….
View More வன்முறையே வரலாறாய்… – 13