அவர்-அவன்

Nri familyபேர்சொல்லப் பிள்ளையும் பேரனும் பேத்தியும்
பெற்றதில் பெருமை கொண்டார்.அவன்
பாருக்குள் நற்றமிழ் நாட்டினை விட்டிட
‘போர்’என்று புலம்பி நின்றார்…

வாய்ப்புள்ள போதெல்லாம் பேசிக் கொள்வார்.அவர்
வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வார்
‘வாய்ப்’பினில், ‘சாட்’டினில் தம்மக்கள் பெருமையை
வாயாறப் பீற்றிக் கொள்வார்…

தன்பட்டம் தன்பிள்ளைப் பட்டங்கள் நூறென்று
தம்பட்டம் தட்டிக் கொள்வார்.அவன்
திரைகட லோடியே திரவியம் தேடச்.சிலர்
தெருவிற்கே வந் திடுவார்…

திரைமேல் வரும்நிழற் படமென் றறியாமல்
திறமையில் மகிழ்ந் திருந்தார்.அவர்
நரைதிரை விழுந்திட நஷ்டங்கள் புரிந்திட
நடுங்கியே பதை பதைத்தார்…

கோட்டையும் கோபுரங் கட்டிடுங் கனவினில்
கோமணம் கோட்டை விட்டார்.அவன்
ஓட்டத்தில் பணத்தினின் வேட்டையில் மறந்திட
ஓட்டையாய் மிஞ்சி நின்றார்.

பலகாலம் பட்டதன் கஷ்டங்கள் போய்விடும்
பகல்கனா பார்த் திருந்தார்.பாவம்,
சிலகாலம் முதியவர் காப்பகம் என்றிந்தச்
சிறையினில் சிக்கிக் கொண்டார்…

பெருவாழ்வு வாழ்ந்தநம் முன்னோரின் பாதையை
பிரிந்ததால் வாடு கின்றார்.அவர்
திருமகள் மருகனை தொழுதிட தினம்மறந்
திருவினை பற்றிக் கொண்டார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *