பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

மின்நூலை PDF வடிவில் இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்

தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். மூலத்தில் உள்ளதை கருத்துச் சேதாரமின்றி மொழிபெயர்ப்பதில் பாரதிக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது.

பகவத்கீதையைப் படிக்க விரும்பும் எவரும் ஆரம்ப நிலையி்ல், உரை எதுவும் இல்லாத, எளிய, மூலத்துக்கு நெருங்கிய பொருள் தரக்கூடிய சுலோக மொழிபெயர்ப்பில் தொடங்குவது அதிகப் பயனுள்ளதாகும்.

உரையாசிரியர்களின் விளக்கம் இல்லாமல், மூலத்தை அல்லது அதற்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை மட்டுமே தொடர்ச்சியாகப் படித்து, அதன் பிறகு உரையாசிரியர்களின் விளக்கங்களுக்குச் செல்வது திருக்குறள் உள்ளிட்ட எந்த நூலையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்பது அனுபவ மொழி.

இதைக் கருத்தில் கொண்டு, இதுவரை இணையத்தில் முன்னுரையாக மட்டுமே கிடைத்துவந்த பாரதியின் பகவத்கீதை மொழிபெயர்ப்பின் முழுவடிவத்தை இந்தியச் சுதந்திர தினப் பரிசாக தமிழ்இந்து தளம் வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறது. இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு, அது தனி நூலாகவே பதிப்பிக்கப்பட்டும், படிக்கப்பட்டும் வருகின்றது. மொழிபெயர்ப்பின் சிறப்பைக் குறித்து சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இந்த நூலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மின்நூலை PDF வடிவில் இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்

பாரதி செய்துள்ள இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போகிறது என்பது இயல்பாகவே விளங்கும். மற்ற உபநிடதங்களில் நிகழும் குரு-சீட உரையாடல்களில், சீடனுடைய கேள்விகளில் தொனிக்கும் பாவத்துக்கும், உறவினனும், நெருங்கிய தோழனுமாக விளங்கிய ஒருவனிடம் உபதேசம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒருவன் கேள்விகளை எழுப்பும் தோரணையில் தென்படும் பாவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றே போதும், இத்தகைய வாதம் செல்லாத செப்புக்காசு கூட பெறா ஒன்று என்பதை எடுத்துக் காட்டுவதற்கு.

இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள அச்சுப் பதிப்புகளில் சுலோகங்களின் மொழிபெயர்ப்பில் பல பிழைகள் இனங்காண முடியாத அளவில் மலிந்திருக்கின்றன. வாக்கிய அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தாத, ஆனால் பொருள் அளவில் கொஞ்சமும் தொடர்பில்லாத பிழைகள் (எடுத்துக்காட்டாக, ‘செல்கிறான்’ என்ற சொல்லை ‘சொல்கிறான்’ என்று அச்சிட்டிருப்பது) நிறைந்திருக்கின்றன. மூலத்தையும், மூலத்துக்குப் பிற ஆசிரியர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு எல்லாப் பிழைக்ளையும் நீக்கிய முழுமையான, சுத்தமான பதிப்பாக இதனை வெளியிடுவதில் தமிழ்இந்து தளம் உண்மையிலேயே பெருமிதம் அடைகிறது.

நாங்கள் எடுத்துள்ள இத்தனை முயற்சிகளையும் மீறி, எங்காகிலும் பிழைககள் தென்படுமாயின் அருள்கூர்ந்து அவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கோருகிறோம்.

37 Replies to “பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு”

  1. சுதந்திர தினத்தன்று இக்கட்டுரை வெளியானது பாரதிக்கு பொருத்தாமானதாகவே அமைகிறது. பாரதியைப் போன்று கருத்து, எண்ணம், ஆன்மீகம், சமூக நிலை, இலக்கியம், அன்பு, ஞானம் அனைத்திலும் சுதந்திரமடைந்த எல்லையற்ற ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது. ஆசிரியர் குழுவுக்கு மிக்க நன்றி.

  2. மிகப் பெரிய சேவை. உங்களது முயற்சிக்கும் தரவிறக்கம் செய்யும் வகையில் வலையேற்றியதற்கும் எனது நன்றிகள். இந்தியா தீவீராவதிகளிடமிருந்தும், ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்தும், ஊழலிலடமிருந்தும், அராஜகங்களில் இருந்தும் விடுதலை பெற்று இந்து என்ற உணர்வுடன் ஒன்று பட தமிழ் இந்து தளம் எடுத்து வரும் முயற்சிக்கு எனது ஆதரவும் நன்றியும் என்றும் உண்டு

    அன்புடன்
    ச.திருமலை

  3. வேளக்குடி கிருஷ்ணனின் கண்ணனின் ஆரமுது முடிந்தவரை தவறாது கேட்டு வருகிறேன். அவ்வப்போது மூல சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அவர் சொல்லும் விளக்கங்களைக் கேட்கும் போது, அவ்வப்போது ஒரு சமஸ்கிருத சொல்லுக்கும் இடத்திற்குத் தகுந்தவாறு வெவ்வேறு பொருள் சொல்கிறார். உதாரணமாக யோகம் என்ற சொல்லுக்கே நாலைந்து அர்த்தங்கள் சொல்லி விட்டார். அப்போது எனக்குத் தோன்றும். இன்னும் வேறு உரைகள் கிடைத்தால் பார்க்கவேண்டுமென்று. பாரதி உரை பற்றி இவ்வளவு சிறப்பாகச் சொல்கிறீர்கள். பார்க்கவேண்டும். பார்ப்பேன். அவ்வப்போது. வேளக்குடி கிருஷ்ணன் உரை டிவியில் முடிந்த உடன் இங்கு வந்து பார்க்கவேண்டும். அந்த சுறுசுறுப்பு என்னிடம் இல்லை. புதிதாக வரவழைத்துக் கொள்ளவேண்டும். மொத்தத்தில் எனக்கு ஒரு நல்லது செய்யும்போதே, ஒரு கஷ்டத்தையும் உடன் கொடுத்துவிட்டீர்கள் நன்றி. வெ.சா.

  4. மிக அருமையான தமிழ்ச் சேவை! அதுவும் சுதந்திர தினத்தன்று மெய்சிலிர்க்கவைக்கிறது. வாழ்க தமிழ்! வளமோடு வளர்க உமது தமிழ்ப் பணி!

  5. Vanakkam
    Aiya ungaludaya sevai alapidairkariyadhu.
    Thangal sevai thodara en vazthukkal.

  6. மிக அருமையான தமிழ்ச் சேவை! மெய்சிலிர்க்கவைக்கிறது. வாழ்க தமிழ்! வளமோடு வளர்க உமது தமிழ்ப் பணி!

  7. Onnume puriyale…Eliya nadayil..enna madhiri vegu janangal puriyiramadiri Geetha-vai padiukumbadiya edhavadhu podureengala sami?

  8. Enaku romba naala geethai padikanum nnu aasai irundhathu, Thanks for your team. Am going to start to read……… Thank You once again

  9. தமிழ் இந்து வலைத்தளம் செய்து வரும் பணிகள் போற்றுதற்குரியது. பாரதியாரின் பகவத்கீதை விளக்கம் தமிழில் வாராது வந்த மாமணி. இதை பொதுவில் வைத்து அனைவரும் தரவிறக்கம் செய்துகொள்வதுபோல அமைத்த உங்கள் குழுவிற்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

  10. வணக்கம்.

    தமிழ் இந்து.காம் இணையதளத்திற்கு என் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது அறிய மற்றும் சிறந்த செயலாகும். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.மிக அருமையான தமிழ்ச் சேவை!

    அன்புடன்
    பார்த்திபன்.
    காஞ்சிபுரம்
    தமிழ்நாடு
    இந்தியா

  11. பாரதி பரமாத்மா கண்ணன் மனித குலத்திற்கு அளித்த பகவத் கீதையின் சாரத்தை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டான்.
    அவன் எழுதிய முழு உரையையும் படிக்க பொறுமையில்லாதவர்கள் கீழ்கண்ட இரண்டு வரிகளை மனதில் கொண்டால் போதும்

    பக்தி பண்ணி பிழைக்க சொன்னான்
    பலனை எண்ணாமல் உழைக்க சொன்னான்.

  12. என் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  13. இந்து சமயத்தை பற்றி மக்கள் கேட்கும் 10 கேள்விகளும் 10 அற்புதமான பதில்களும்
    from Hinduism today

    in tamil
    https://rapidshare.com/files/276530062/Ten-Questions-About-Hinduism-and-Ten-Terrific-Answers-in-Tamil.by.VPNTS.pdf

    in English
    https://rapidshare.com/files/276530064/Ten-Questions-About-Hinduism-and-Ten-Terrific-Answers-in-English.by.VPNTS.pdf

    Hinduism today இதழில் இருந்து மேலும் யாராவது மொழிபெயர்த்து Tamilhinduவில் பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  14. இந்து மதத்தை போற்றுபவர்களும் அதை தூற்றுபவர்களும் கடவுளை பற்றிய உண்மை அறிவு அற்றவர்கள் உண்மையை உணர்ந்தவர்கள் யார் மீதும் குறை காண்பதில்லை அனைவரையும் ஒன்றாக கருதி அன்பு செலுத்துகிறார்கள் என்பது வரலாறு கண்ட உண்மை. மதம் மாற்றும் செயல் என்பது ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைபடுத்த செய்யும் முயற்சியாகும் அதற்க்கு இந்து மதத்தில் இருந்துகொண்டு உண்மை தத்துவங்களுக்கு மாறாக செயல்படும் போலிகளை ஒழிப்பதும்,இந்து மதத்தில் நிலவும் தீண்டாமையை அகற்றுவதும், அடித்தட்டு மக்களுக்கு உண்மையான வழிபாட்டு முறைகளை பயிற்றுவிப்பதும்,இந்து மதத்தின் பெருமைகளையும் மற்ற மதங்களிலிருந்து எந்த வகையில் வழிபாட்டில் அது சுதந்திரம் அளித்துள்ளது என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதிலுமே தீர்வு உள்ளது.

  15. அன்புமிக்க தமிழ் ஹிந்து இனயத்லதிருக்கு என் நன்றியும் வணக்கமும்
    நான் தமிழ் மிதும் ஹிந்து களின் மிதும் திராத காதல் கொண்டுஇலன் உங்கள் மனிக்கவும் நமது இணையதளம் உதவுகிறது

  16. Thank you very much i downlod the Bhagavat gita and also i informed my friends they also download and studying here I thank for the authors for gave good things.

  17. நல்ல பணி செய்திருக்கிறிர்கள்
    வாழ்க வளர்க
    நன்றி வணக்கம்

  18. naan enna terinthukulla vendum endru ninaitheno athellam padithu terinthu konden
    mikka nandri

  19. ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. ஓம் நமோ நாராயணாய

  20. நான் கண்ட கீதை தமிழ் உரைகளிலே பாரதியார் உரை போல் எங்கும் காணோம்!
    இதை உண்மை பக்தர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்

  21. thangal tharavu yeatriyulla edukayil kadaisiyaga neengal oru vendukol viduthuleergal.athu”yeathavathu thavaru irunthal arul koornthu therivikavum” endru.anal neengal theivathidam matume arul koornthu endra varthayai ubayokika vendum.matravargalidam thayavu seithu endra varthayai ubayokikumaru anbudan ketu kolkiren.

  22. Vaalga valmudan. I am so happy to log in here. It is so good. May Almighty bless you to continue.

  23. Vanakkam

    Can you please share the name of the book where I can get the translation in poem form for each shloka by Bharatiyar ?

    in the PDF given above, I could see the explanation of the shloka

    Regards
    Ganapathy

  24. Is Bharathiar Bhagavad Geetha book available in pdf format that can be downloaded as document. I see that it is available in e book form If it is available in book form also I would like to buy.I am teaching Bhagavad Geetha Mahatmyam thro’ whatsapp .I would like to have access to this copy.
    Tku Ramaa
    94454 25557

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *