பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.

View More பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு