அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!

Converts returning to Hinduism பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாய் மதம் திரும்பும் விழாவில் 10 குடும்பத்தினர் இந்து மதத்தில் சேர்ந்தனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருஸ்துவ, முஸ்லிம் மதத்தினர் தாய்ச்சமயம் மதம் திரும்பும் விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கோவில் அலுவலர்கள் விழாவிற்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து கடந்த 18ம் தேதி வீரட்டானேஸ்வரர் கோவில் முன் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று பண்ருட்டி ராமசாமி செட்டியார் திருமண மண்டபத்தில் தாய் மதம் திரும்பும் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வெங்கடசர்மா நடத்தினார்.
தாய்மதம் திரும்புவர்களுக்கு சடங்கு செய்வதற்காக கங்கை தீர்த்தம், காவிரி தீர்த்தம், கெடில நதி தீர்த்தம் ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர் தாய்ச்சமயம் திரும்பியவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டு குங்குமம், மாலை அணிவித்து இணைந்தனர்.

இதில் திருக்கோவிலூர் மணம்பூண்டியைச் சேர்ந்த ஐசக் என்பவருக்கு சுந்தரர் எனவும், அலெக்ஸ்பாண்டியன் என்பவருக்கு சிவராமபாண்டியன் எனவும், வினோத்குமார் என்பவருக்கு வினோத் எனவும், சாந்தி என்பவருக்கு சாந்தி எனவும், சந்தானம் என்பவருக்கு சந்தானம், மாணிக்கவாசகம் என்பவருக்கு மணிவாசகர் எனவும் பெயர் சூட்டப்பட்டது. விருத்தாசலம் ஆலடி ரோடு, எருமானூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிக்கு திருநாவுக்கரசு எனவும், அந்தோணி ஜெகன்நாதன் என்பவருக்கு திருஞானசம்பந்தம் எனவும், சந்தோஷ்ஆரோக்கியராஜ் என்பவருக்கு மாணிக்கவாசகர் எனவும், எழிலரசி என்பவருக்கு திலகவதியார் எனவும் பெயர் சூட்டினார். தாய்மதம் திரும்பிய அனைவரும் பின்னர் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

படமும் செய்தியும்: நன்றி, தினமலர்

11 Replies to “அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!”

  1. பத்து குடும்பங்கள் மிக குறைவாக தெரிந்தாலும், இந்த முயற்சி மலையளவு மதிக்கத்தக்கது.
    வாழ்த்துகள் ! ஆனால் ஒன்று. வெறும் பெயரளவில் இல்லாமல், உண்மையாகவே இவர்கள் இனி ஹிந்துக்களாக நடக்க வேண்டும், நடத்தப்பட வேண்டும்.

  2. Mr, Velmurugan,

    Do you mean to say that the whole article is not readable in your computer?

    It is rendered in Tamil Unicode font.

    But I can help you in making it visible to you if you could furnish some basic details of your PC like its Operating system, the browser and its version number etc.

    Regards,

    S.K

  3. Dear Mr.SK,

    I also think that the problem is with my system. Let me try to correct it.

    (It is a wonderful news, and my sytem is not showing it.

    May be my system also could have got baptised before it came to me. I will do the re-conversion !)

    Tamilhindu.com is a great site designed well to satisfy every user with modern features.

    The only way I could appreciate your efforts is to introduce it to everyone who can read tamil.

    Thanks once again for the user experience !

  4. திருமிகு அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு , என் உளங்கனிந்த வாழ்த்துக்கள். நாத்திகர்களிடமிருந்தும், கிறித்துவ இசுலாமியர்களிடமிருந்தும் தமிழ்ச்சமயத்தை மீட்டெடுப்பதில் அர்ஜுன் சம்பத் மிகச் சிறந்த செயல் வீரராகத் திகழ்கின்றார். அவருக்குப் பின் பக்கபலமாக நிற்கவேண்டியது நம் கடமை.

  5. i am very happy to read this news –

    10 families great –

    10 families and we need more families to come back –

    time has come for all hindus to unite –

    thanks
    akila

  6. hare krishna!!!
    welcomes to the people our mother nation religion thanks for Srimaan.arjun sampath!!!

    Jai Hind
    Best Regards
    sathish Kumar.N

  7. திருநாவுக்கரசர் பெருமான் தாய்மதம் திரும்பிய புனித திருத்தலத்தில் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியிருக்கும் இந்து மக்கள் கட்சிக்கு வாழ்த்துக்கள் ! இத்தகைய நிகழ்ச்சிகள் மேன்மேலும் நடைபெறவேண்டும்.

  8. நன்றி ஐயா!
    வெளுக்கட்டும் சாயம் ! விடியட்டும் தமிழகம்!
    இதுபோன்ற பணிகளில் என் சகோதரர்கள் களம் இறங்கட்டும்.2013க்குள் வெற்றி உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *