வயிறுபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.
ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.
பொங்குத மிழ்ப்புல மைத்திற மெங்கணும்
புத்துயிர் பெறவேணும்
கங்கைய ணிந்தருள் கயிலே சன்மகன்
கனிவுகொ டுக்கவேணும்.
நாட்டினில் பகையும் நலிவும கன்று
நமக்குளான் றிடவேண்டும்
பாட்டினில் மகிழும் பசுபதி மகனே!
பாவந்தொ லையவேண்டும்.
அவ்வைக் கிழவிக் கன்றருள் செய்தாய்
ஐந்துக ரத்தனே! நீ
பவ்விய மாகப் பாதம்ப ணிந்தேன்
பக்தனைக் காத்தருள்வாய்!
பாட்டில் இறையை உணர்தல் அழகு என்று கூறி பாட்டினைப் பெருமைப் படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. கயிறு பிடித்த கரங்களினால் என்று கூறி உள்ளீர்கள். எனக்குப் பொருள் புரியவில்லை. அருள் கூர்ந்து விளக்கும்படி வேண்டுகிறேன். மிக்க நன்றி.
அன்புள்ள அமர்நாத் மல்லி சந்திர சேகரன்…
“‘…கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்…’
கயிறாவது பாசக்கயிறு. நம்மைப் பாச பந்தங்களில் பிணிக்க (கட்டுப்பட) வைப்பவனும் அத்தகைய கட்டுக்களிலிருந்து விடுவிப்பவனும் இறைவனே என்னும் பொருளில் இந்தக் கயிறு இறைவன் (விநாயகர்) திருக்கரங்களுள் ஒன்றில் அமைந்துள்ளது.
“விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்” “பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை” ஆகிய கட்டுரைகள் இந்த வலைத் தளத்திலேயே வெளிவந்துள்ளன. அவை இரண்டையும் படித்தீர்களானால், உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
தங்கள் வினாவுக்கு நன்றி.