கல்வியிற் சிறந்த பெரியோர்கள் கற்க வேண்டியதைக் கற்று, அறிய வேண்டியதை அறிந்தவர்கள். தாம் பெற்ற அறிவின்பங்களை உலகிலுள்ள எல்லோரும் அடையும்படி பிறருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அதன்படியே திரு.சுந்தர் அவர்களும் கர்நாடக சங்கீதத்தின் இசை நுணுக்கங்களைப் பாமரனும் புரிந்து இன்புறும் வண்ணம் நமக்குத் தந்திருக்கிறார். திரு.ரமணன் அவர்கள் தந்துள்ள வாழ்த்துரையின்படி, இந்நூல் ஒரு பயிலரங்கு என்பதை இதனைப் படிப்பவர் யாவரும் உய்த்துணர்வர். யானும் இந்நூலைக் கற்றேன். கடுகளவு இசைஞானம் கொண்டிருந்த நான் நிறையத் தெரிந்துகொண்டபின் உள்ளம் பூரித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இறையடி பணிந்தேன்….
View More இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்Author: பி.ஆர்.கீதா
நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னை
நவராத்திரிப் பாட்டு
View More நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னைபூரணப் பொருளன் – விநாயகர் பாட்டு
விநாயகர் பாட்டு
View More பூரணப் பொருளன் – விநாயகர் பாட்டுநவ இரவுப் பண்டிகை
புனிதமான காலமிது
புரட்டாசித் திங்களிது!
மனிதகுலம் வாழ்ந்திடவே
மழைதொடரும் காலமிது!
மலைமகளும் அலைமகளும்
மகிழ்வுடவே கலைமகளும்
குலமகளிர் இல்லமெலாங்
குடியிருக்குங் காலமிது!
வலம்புரி நாயகன்
வயிருபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.
ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.
அழகு
காஞ்சிப் பெரியவர் கனிவே அழகு
கமலத் திருவடி மலரும் அழகு
தேன்சிந் தும்மலர் தெவிட்டா அழகு
தெளிவாய் ஓடும் ஆறும் அழகு.
கருணைக் கணபதி
பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி
பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான்
கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான்
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.