பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1

தமிழர்கள் தமது தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆம், மே 13ம் தேதி நமது எதிர்காலத்தை நிச்சயிக்கும் நாள். நல்லவர்கள் கூடவே திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களும் வந்து ஓட்டுக் கேட்கும் பொழுது யாருக்கு ஆதரவளிப்பது என்று வாக்களர் குழம்பிப் போவது இயற்கைதான். நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பமில்லாமல் சிந்திக்க உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்…

View More பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1

இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்

சென்னையில் GFCH என்கிற தன்னார்வ அமைப்பு, பிப்ரவரி 6,7,8 ஆகிய நாட்களில், 40 இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் ஒரு சம்மேளனம் மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. மாதா அம்ருதானந்தமயி மடம், வாழும் கலை அமைப்பு, ஈஷா அறக்கட்டளை, விவேகானந்த கேந்திரம், சேவா பாரதி, வனவாசிகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கு கொள்கின்றன. அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் உள்ளே காணலாம்.

View More இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்

மகான்கள் வாழ்வில் – 7: ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை…

View More மகான்கள் வாழ்வில் – 7: ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…

View More ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி

அருட்திரு காளிதாஸ் சுவாமிகள் அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக சங்கத்தின் தலைவர். அவர் கூறுகிறார்: “…தலித்துகளுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை இந்த நாட்டுக்குக் கொண்டு வருகின்றனர்… இதனால் தலித் மக்களுக்கு சக இந்துக்கள் தங்களைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பது போன்ற எண்ணத்தைத் தோன்ற வைக்கிறது.”…

View More தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி

மதியும் காந்திமதியும்

காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ் நெல்லை நகரில் கோவில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய…

View More மதியும் காந்திமதியும்

வலம்புரி நாயகன்

வயிருபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.

ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.

View More வலம்புரி நாயகன்

தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி

தருமம் மிகு தூத்துக்குடி செங்கோல் ஆதீன மகாசன்னிதான சுவாமிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி வீரத்திருமகன் அர்ஜுன் சம்பத் அவர்கள் மற்றும் குமரி மாவட்ட செந்தூரான் பேரவையும் இணைந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 346 மக்கள் தாய்மதமாம் இந்து தருமத்தில் இணைந்த ‘தாய் மதம் திரும்பும் விழா‘ நாகர்கோவில் அருள் மிகு நாகராஜா திருக்கோவில் அருகில் உள்ள ‘அனந்த சமுத்திரம்’ திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

View More தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி

தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா

தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

View More தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா

ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!

“அமர்நாத் கோயில் நில விவகாரம்” என்பது ஏதோ அயோத்யா பிரச்சனை போல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்காக இரு வேறு குழுவினர் சண்டை போட்டுக் கொள்வது போல ஒரு மேலோட்டமான உருவம் நிலவுகிறது. இது வெறும் அமர்நாத் நிலம் பற்றிய பிரச்சனை தானா ? ஒரு நூறு ஏக்கர் நிலத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? முதலில் இந்த அமர்நாத் பிரச்சனை எப்படி ஆரம்பித்தது ? அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், பத்திரிகைகளும், காஷ்மீரிகள் என்று சொல்லை காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லீம்களை மட்டுமே குறிக்கும்படி பயன்படுத்துகிறார்கள். உண்மையில் காஷ்மீரிகள் யார்? பண்டிட்கள் என்பவர்கள் யார்? இன்னும் பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடையாக அமைகிறது.

View More ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!