திரைப் படங்களில் இந்து மதச் சித்தரிப்பு

திராவிட இயக்கம் தமிழ் சினிமாவைக் கடத்திச் செல்ல ஆரம்பித்த 50கள் வரை தமிழில் பெரும்பாலும் பக்தித் திரைப்படங்களும், இந்து மதப் புராண, இதிகாசங்களின் மேன்மைகளைச் சொல்லும் படங்களே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தன. திராவிட இயக்கத்தினர் தமிழ் சினிமாவை ஒரு சக்தி வாய்ந்த பிரச்சார உத்தியாகப் பயன் படுத்தத் தொடங்கியதில் இருந்து இந்த நிலை மாறியது. சமூக அவலங்களைச் சாடுகிறோம் என்ற போர்வையில் பெரும்பாலும் இந்து மதக் கடவுள்களையும், இந்து மதப் பாரம்பரியங்களையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் விமர்சித்துக் கேலி செய்யும் திரைப்படங்கள் மெதுவாக தமிழ்த் திரைப்பட உலகில் வரத் தொடங்கின. பராசக்தி போன்ற கருணாநிதியும், அண்ணாதுரை கதை வசனம் எழுதிய படங்களிலும், என் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவை என்ற பெயரில் பகுத்தறிவைப் பரப்புகிறேன் என்று வைத்த காட்சிகளிலும் தொடங்கி பின்னர் எம் ஆர் ராதா போன்றோரால் தொடரப் பட்டு இன்று விவேக், சீமான் வரை இந்து மதத்தை இழிவாகச் சித்தரிக்கும் வழக்கம் தமிழ் பட உலகில் தொடர்கதையாகி வருகிறது. ஆரம்பத்தில் சமூகச் சீர்திருத்தக் கருத்தக்களைச் சொல்வது போலத் தோன்றினாலும் திராவிட இயக்கப் பிடியில் சிக்கிச் சீரழிந்த தமிழ் பட உலகில் பெருமாலும் இந்து மதம் மட்டும் மோசமாகவே காட்டப் பட்டு வந்தன. இதர மதங்களைப் பற்றி இவர்கள் மூச்சு விடுவதில்லை. இன்று வரை அந்த நிலை மாறவில்லை.

கருணாநிதியும், அண்ணாதுரையும், என் எஸ் கிருஷ்ணனும் வெளிப்படையாகச் செய்து வந்த நாஸ்திகப் பிரச்சாரங்களும் இந்து மதம் குறித்த அபவாதங்களும் பீம்சிங் போன்ற இயக்குனர்களால் திரைமறைவில் சற்றே சாதுரியமான நுட்பத்துடன் செய்யப் பட்டன. பாவ மன்னிப்பு போன்ற படங்களை மிக உன்னிப்பாகக் கவனித்தால் அதில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும், முஸ்லீம்களும் அன்பும் பண்பும் நிறைந்த நாகரீகமானவர்களாகவும் இந்து மதத்தினர்கள் மிக மோசமான வில்லன்களாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கும் உத்தியினைக் காணலாம். இதையே கமலஹாசன் தன் அன்பே சிவத்திலும், தசாவதாரத்திலும் தொடர்ந்திருப்பார். இப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்து மதம் தமிழ் திரைப்படங்களில் மோசமாகச் சித்தரிக்கப் படுவது தொடர்ந்து இன்று விவேக் போன்ற இந்து எதிர்ப்பாளர்களால் (இவர் கிறிஸ்துவராக இருக்கக்கூடும் என்பது சிலருடைய ஊகம்) மிகவும் கேவலமான முறையில் இந்து மத நம்பிக்கைகள் கேலி செய்யப் பட்டு வருகின்றன. இது போன்ற ஒரு இந்து எதிர்ப்புச் சூழ்நிலைக்கு நடுவிலும், சாண்டோ எம் எம் ஏ சின்னாப்பாத் தேவர், ஏ பி நாகராஜன் ஆகியோரின் முயற்சியினால் தொடர்ந்து மக்களிடம் இந்து மத நம்பிக்கைகளைத் தூண்டும் விதமான படங்களும் வந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் இந்த நம்பிக்கைகளை வியாபாரமாக்கி விற்க முயன்ற ராமநாராயணன் போன்ற இயக்குனர்களால் மலினப் படுத்தப் படுவதும் தொடர்கின்றன. ஒரு புறம் இந்து மத நம்பிக்கைகள் கேலி செய்யும் திரைப்படங்களும் மறுபுறம் இந்து மதத்தை மலினப் படுத்தி வியாபாரமாக்கி விற்க முயற்சிக்கும் திரைப்படங்களுமாக தமிழ்த் திரையுலகில் இந்து மதம் என்பது ஒரு கேலிப் பொருளாகவோ அல்லது வியாபாரப் பொருளாகவோ ஆகிவிட்டது. இந்து மதத்தின் தத்துவங்களையும், ஆன்மீக உணர்வுகளையும் சிரத்தையுடனும் அழகிய கலையுணர்வுடனும் மக்களிடையே எடுத்துச் சொல்லும் சினிமாக்காரர்களே இல்லாமல் போய் விட்டார்கள்.

தமிழ் திரைப்படங்களில் எங்காவது அபூர்வமாக ‘அப்பனே முருகா’ என்றோ ‘நாராயணா’ என்றோ யாராவது சொல்லி விட்டால் ஏதோ அபச்சாரம் ஏற்பட்டு விட்டாற் போல் உணர்ந்து உடனடியாக ‘ஏசுவே’ என்றோ ‘அல்லாவே’ என்றோ கூவும் இன்னொரு பாத்திரத்தை வைக்க வேண்டியது ஒரு எழுதப்படாத கட்டாயம். இந்து மதம் பாரம்பரியமிக்கது, நம் சாஸ்திரங்களிலும் சம்பிரதாயங்களிலும் அர்த்தம் உள்ளது, அதை மதிக்க வேண்டும் என்று சொல்ல முயலுவது கூட தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தையாகிப் போனது. தமிழ் சினிமாக்களில் கடவுள் நம்பிக்கையை அழுத்தமாகச் சொல்லும் படங்கள் வருவது வெகுவாக அருகி மசாலாப் பக்திப் படங்கள் மட்டுமே எப்பொழுதாவது வருகின்றன. தனக்குக் கடவுள் (இந்துக் கடவுள்களிடம் மட்டும்) நம்பிக்கையில்லை என்று மேடைக்கு மேடை ஏறிச் சொல்வதும், இந்துக் கடவுள்களை , இந்து நம்பிக்கைகளள மட்டும் இகழ்வதும் கமலஹாசன்களுக்கும், சத்தியராஜ்களுக்கும் இன்று ஒரு கொளரவமான அடையாளமாகி விட்டது. கிறிஸ்துவர்களாக அறியப்படும் விவேக்கும், விஜய்யையும் இந்து நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்வதும் கிண்டல் அடிப்பதும் மக்களால் பெரிய தத்துவமாக எண்ணப்பட்டு பெரிய வரவேற்பைப் பெறுகிறது. மணிவண்னனும், விவேக்கும் பெரிய தத்துவ மேதைகளாகத் தமிழர்களால் புகழப் படுகிறார்கள். எனக்கு இந்துக் கடவுள்களிடமும், இந்து மதத்திடமும் அபரிதமான நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளவே கூசுகிறார்கள் நம் சினிமாக்காரர்கள். அப்படியே தப்பி தவறி சொல்லி விட்டாலும் உடனடியாக அடுத்த நாளே ஓடிப் போய் ஒரு கைக்குட்டையைத் தலையில் மாட்டிக் கொண்டு கஞ்சி குடித்து தனது சமதர்ம மேன்மையைக் காட்டிக் கொள்கிறார்கள்.

பொதுவாகவே தமிழ் படங்களில் ஒரு கிறித்துவப் பாதிரியார் என்பவர் அன்பும் கருணையும் உடையவராகவே காண்பிக்கப் படுவார். எல்லோரும் உதவும் உத்தமராகவே சித்தரிக்கப் படுவார். அது போல முஸ்லீம்கள் எப்பொழுதும் சகோதர மனப்பான்மையுடனும் கருணையுடனுமே காண்பிக்கப் படுவார்கள். அவர்கள் மத நம்பிக்கைகளும் வழிபடும் இடங்களும் கூட அதீத மரியாதையுடன் எவ்வித கேலி கிண்டல் நக்கல் இன்றியே காண்பிக்கப் படும் இது தமிழ் திரைப்படங்களின் எழுதப் படாத இலக்கணம். அதே நேரத்தில் இந்துக் கோவில் அர்ச்சகர்கள் கற்பழிப்பாளர்களாகவும், இந்து மத பக்தர்கள் அயோக்கியர்களுமாகவே எப்பொழுதும் சித்தரிக்கப் பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் உதாரணங்களுடன் பின்னால் பார்க்கலாம்.

ஒரு புறம் இந்து மத விரோதிகளினாலும், கிறிஸ்துவ மதப் பிரச்சாரங்களினாலும் திரைப்படங்கள் மூலமாக இந்து மத நம்பிக்கைகள் இழிவு செய்யப் பட்டு வரும் வேளையில் அதே நம்பிக்கைகளைப் பயன் படுத்தி மிகவும் மலினமான முறையில் மக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்தி பக்திப் படங்கள் என்ற போர்வையில் வியாபாரப் படங்களும் அதே தமிழ் சினிமாவில்தான் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

ஒரு ரஜினிகாந்த் தன் பாபா படம் மூலமாகவும், ஒரு ராமநாராயணன் தன் மசாலா பக்தி படங்கள் மூலமாகவும் இந்துக்களின் பக்தியுணர்வைத் தட்டியெழுப்பியிருப்பதாகச் சொல்ல முடியாது. ரஜினிகாந்த் போன்ற ஒரு ஹீரோவோ அல்லது மிருகங்களோ இல்லாமல் இருந்திருந்தாலும் மக்களால் பார்க்கப்பட்டு அவர்களிடம் அமோகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமானால் அவற்றை இந்து மத மேன்மையைப் போற்றும் சினிமாக்களாகக் கருதலாம். ரஜினிகாந்துக்காகப் பார்க்கப் படும் மற்றும் குரங்கு பாம்புகள் செய்யும் வித்தைக்காகப் பார்க்கப் படும் படங்களை வெறும் மசாலா பக்திப் படங்கள் என்ற வகையில்தான் சேர்க்கமுடியும். ஒரு உண்மையான ஆன்மீகப் படம் என்ப்து சினிமா மூலமாக மக்களின் மனதில் இந்து மதத்தின் மீதும், அதன் நம்பிக்கைகள், தத்துவங்கள், ஆதர்சங்கள், நியமங்கள், சம்பிரதாயங்கள், குறீயீடுகள் ஆகியவை மீதும் அழுத்தமான ஒரு ஈர்ப்பை, ஒரு தாக்கத்தை, ஆயுளுக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்றதொரு உணர்வை மசாலா பக்திப் படங்கள் அளிக்க வல்லவையல்ல. அப்படிப் பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுததக் கூடிய ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு “உதாரந்த்” திரைப்படம் மூலம் பார்க்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஒரு திரைப்படத்தை நாம் தமிழில் எதிர்பார்க்க முடியாது என்பதனால் நான் ஒரு மலையாளப் படத்தினை இதற்காகத் தேடிப் போக வேண்டியுள்ளது.

தமிழ்த் திரைப்படங்களில் இந்து மதம் எப்படி எப்படியெல்லாம் கேவலமாகச் சித்தரிக்கப் படுகின்றன என்பதை பல உதாரணங்கள் மூலமாகப் பார்க்கலாம். அதற்கு முன்பாக நம் பெருமைக்குரிய பாரம்ப்பரியங்களையும், நம்பிக்கைகளையும் சடங்குகளையும், உரிய முறையில் அதன் அர்த்தத்துடன் விளக்கும் திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து விடலாம். (விரைவில் தொடர்வது: “பைத்ருக்கம் – மலையாளத் திரைப்படம் – ஒரு பார்வை”)

16 Replies to “திரைப் படங்களில் இந்து மதச் சித்தரிப்பு”

  1. அருமையான கட்டுரை விஸ்வாமித்ரா சார். தமிழ் சினிமா பற்றிய இந்த முக்கியமான அவதானிப்பை தமிழ் எழுத்துலகில் யாரும் பெரிதாக எழுதியதில்லை. உங்கள் கூரிய விமரிசனம் தொடரட்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  2. திரு விஸ்வாமித்ரா அவர்களே

    நல்ல கருத்துக்கள். தக்க நேரத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்.

    ரஜினி என்பதனாலேயே மஸாலாப் படம் எனக் கூறுவதுதான் உதைக்கிறது. எப்படிச்சொன்னால் என்ன, யார் சொன்னால் என்ன, கருத்து நல்லதா எனப் பார்ப்பதே முறை.

    ரஜினியின் ‘ராகவேந்திரர்’ எத்தனை பக்தி நயத்துடன் எடுக்கப் பட்டிருந்தது என்பதை ஏன் மறந்தீர்கள்? ஒன்றிரன்டு நல்ல பக்திப் படங்கள் வந்தாலும் அவற்றை நாம் பாராட்டினால்தானே படத்தயாரிப்பாளருக்கு ஊக்கம் அளிக்கும்?

    உமாச‌ங்க‌ர்.

  3. உமா சங்கர்

    அவர்களுக்கு நான் ரஜினிகாந்த் அவர்களின் ஆன்மீக நோக்கில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ராகவவேந்திரர் படம் ரஜினிகாந்த் இல்லாவிட்டாலும் அதே பிரபலத்துடன் ஓடியிருந்தால் அது உண்மையிலேயே ஆன்மீகமான படம் என்று எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி ரஜினிகாந்த் அவர்களைக் குறை சொல்லும் நோக்கம் எனக்கு இல்லை. ஒரு உதாரணத்திற்காகச் சொல்லப் பட்டது மட்டுமே. ராகவேந்திரர் ரஜினி அர்ப்பணிப்புடன் நடித்து எடுக்கப் பட்டுள்ள ஒரு நல்ல சினிமா என்பதில் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.

    ஜடாயு அவர்களுக்கு, உங்களது ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

    தமிழ் இந்து தளத்தின் ஆசிரியர்களுக்கும் இந்த நீண்ட கட்டுரையை வெளியிட்டமைக்காக எனது நன்றிகள்.

    அன்புடன்
    விஸ்வா

  4. Dear Sir

    This is one of the most thought provoking piece of write up bringing out the status of contemporary cinema in Tamilnadu!
    In Tamil Nadu Cinema is used as a tool to brainwash one and all and to get into assembly as well as parliment. Presently apart from the big screen,the small screen is also used for the same purpose. This situation will not change as we have got nearly two generations enslaved by these media!

    The sad plight is, these so called rationalists start every movie production with all the rituals of Hindu culture with a big pooja and are so sentimental.. they use astrology, numerology, gemology etc. to ensure that they reap rich rewards by enticing the masses by their acts.

    We can eradicate the menace of mocking at Hindu Gods and Hindu Culture only by boycotting such films, serials enmass !

    Regards

    Mugunthanchari

  5. அருமை ! அருமை !
    இதைப் பற்றி ஏன் எழுதக்கூடாது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். எழுதிவிட்டீர்கள்.

    ரஜினியின் பாபா பற்றி ஒரு வார்த்தை. அவர் அந்த படத்தை எடுத்த விதம் சொதப்பி விட்டது என்றாலும், அவருடைய நோக்கம் நல்லதாகத்தான் இருந்தது என்பது என் கருத்து. இன்னும் சுவையாக அதே சமையத்தில் சுத்தமாக பாபாவை பற்றி சொல்லி இருக்கலாம். மனிஷாவையும் மசாலாவையும் கலந்து சொதப்பி விட்டார்.

    ராம நாராயணன்…நம்ம ஊரு அம்மன்-களுக்கெல்லாம் மந்திரவாதிகளுடனும் ரோபோ-களுடனும் சண்டை போடுவது தான் வேலை என்று சித்தரிக்கிறார். அதில் இந்த அதிக பிரசங்கி விவேக் வேறு !

    நம் மக்களை சொல்ல வேண்டும். கடவுளை இழிவு படுத்தினாலும் பரவாயில்லை..ஆனால் நமக்கு இரண்டரை மணி நேரம் பொழுது போக வேண்டும் என்ற நினைப்பு இருக்கும் வரை இப்படித் தான் தொடரும்.

    இதைப் பற்றி நானும் ஏர்க்கனவே கொஞ்சம் புலம்பி இருக்கிறேன்.

    https://tamilhindu.com/2008/09/behaviour-of-hindus/

  6. மத எதிர்ப்பு என்பது “இந்து மத எதிர்ப்பு” என்பதாகவும், பகுத்தறிவு என்பது “இந்து மத துவேஷம்” என்பதாகவும், மதச்சார்பின்மை என்பது “இந்து மதச் சார்பின்மை” என்பதாகவும் அர்த்தம் கொள்ளப்படும் இன்றய அரசியல் (குறிப்பாக திராவிட இயக்கங்கள்) சூழ்நிலையில், தமிழ் சினிமாவின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட செறிவான கட்டுரைகளை வாசித்ததில்லை.

    கிறிஸ்தவத்தையோ முகமதியத்தையோ திரைப்படங்களில் மோசமாக சித்தரிக்கப்பட்டால் ஏற்படும் எதிர்வினைகள் குறித்து விளக்கமாக விவரிக்கத்தேவையில்லை. திரைப்படங்களில் இந்துமத நம்பிக்கைகள் இவ்வளவு மோசமாக சித்தரிக்கப்ட்டும்கூட பெரிதான எதிவினைகள் ஏதும் நிகழாதது சகிப்புத்தன்மை மிகுந்த இந்துமதத்துக்கே உரித்தான சிறப்பு. தனது மிக்க அருகாமையிலிள்ள குடும்பத்தாரைக்கூட பாதிக்க முடியாத பகுத்தறிவுப்பாதையில் செல்லும் நமது முதல்வரைப்போல, மோசமாக தோல்வியடைந்துவரும் நாத்திகவாதத்தையும் நம் கண்முன்னே காண்கிறோம்.

    இவ்வாறாக பல்வேறு இந்து எதிர்ப்புச் சூழ்நிலைக்கு நடுவிலும் சிதைந்து போகாத‌ இந்து மதத்தின் தத்துவங்களையும், ஆன்மீக உணர்வுகளையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் கடமை நாம் அனவருக்கும் இருக்கிறது.

    இந்தரீதியில், திரு விஸ்வாமித்ரா அவர்களின் இந்த த‌மிழ் சினிமா பற்றிய கட்டுரைத் தொடர் இன்றய காலகட்டத்தில் மிகவும் அவசிமானதும் முக்கியமானதுமான ஒன்று. தமக்கே உரித்தான தகவல்கள் / விமர்சனங்களுடன் கூடிய இந்த கட்டுரைத்தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். வாசகர்களும் தங்ளது அனுப‌வங்களயும் இன்னபிற விபரங்களையும் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்துகொண்டால், பிற வாசகர்களுக்கும் கட்டுரை ஆசிரியருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் இன்று நம்புகிறேன்.

    அன்புடன்

    பாலா

  7. //திரைப்படங்களில் இந்துமத நம்பிக்கைகள் இவ்வளவு மோசமாக சித்தரிக்கப்ட்டும்கூட பெரிதான எதிவினைகள் ஏதும் நிகழாதது சகிப்புத்தன்மை மிகுந்த இந்துமதத்துக்கே உரித்தான சிறப்பு.//

    பாலா அவர்களே,

    இந்துமதத்தின் சகிப்புத்தன்மை வேறு; இந்துக்களின் —— வேறு.

    சகிக்க முடியாதனவற்றையும் சகிக்கக் கூடாதனவற்றையும் சகித்துக்கொண்டிருப்பதற்குப் பெயர் சகிப்புத்தன்மையன்று; அதற்கு வேறு பெயர்கள் உள்ளன; வேண்டா; சொல்லாமல் விடுகிறேன்.

  8. Well done Viswamithra
    You are right about Ramanarayan’s “Bhakthi”movies.
    He seems to show Devi as a sort of vengefuul wrathful Goddess.
    That has nothing to do with the concept of or Dharma.
    Vivek is consistently deriding long cherished beliefs.
    It is nice to see that he isnt so popular nowadays.
    Will look forward to your specific examples.
    You may have noticed the scene in the much acclaimed “Kadhal” [ among other scenes] where the newly wed couple -instead of prostarting before the shrine where they get married-fall at their benefactor Stephen’s feet and the camera zooms in on the Jesus pendant on his chest.
    Many dont even notice these cute scenes.Many people need to come out from their hynotised state.
    Continue your good work.

  9. உலகில் அடி முட்டாள் என்றல் தமிழன் என்பது எப்போதோ நிரூபணம் ஆகிவிட்டது, குக்ஷ்பு கொவில் கட்டிய அன்று. இன்றும் குக்ஷ்பு போன்ற நடிகைகள் விழா மேடைகழிலேயே பகிரங்கமாக தெய்வ அவமதிப்பு செய்வதை நாம் காணமுடிகிறது. பகுத்தறிவாழர் பெருமக்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிவருடிகளகவும் தமிழ் இன துரோகிகளகவும் எப்போதோ மறிவிட்டார்கள்

  10. தமிழ் சினிமா எப்போதும் செக்குலர்தான். நாம் தான் அதனைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். சினிமா மாயைத் துணைகொண்டு ஆட்சிக் கட்டில் ஏறியவர்கள் தான் நமது “தமிழ் இனத் தலைவர்(லி்)”்

  11. Excellent article. This absurdity has hardly been talked about by anybody. Bhim Singh was not alone- there were other directors as well. I eagerly await the next part.

  12. Dear Viswa,
    Very thought provoking article.
    Selectively ridiculing Hindu religion and its ethos is an intrinsic aspect of socio-cultural life of TN.
    Even in those well-meaning films made by APN there were some crass commercial compromises which have been condoned by people at large.
    But I do not know how many people have observed the veiled barbs aimed at Hindu deities by another person who is popular amongst rural population with his seemingly innocuous patti manrams on Tamil film music – Dindigul Leoni!
    Well, everything passes and everything is forgotten by the ever forgiving Tamil Hindus! What did we do when TR Balu openly attacked Hindu religion in a Christian function. What are we doing now over the recent announcement of naming Greenways Road after an evangelist who indiscriminately converted Hindus?

  13. Show me one taml film which does not degrade hinduism.

    Show me one tamil film which portrays muslims/christians as rogues.

    The irony is that almost all the films have been made by hindu directors.

    This will never change.

  14. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக ஆகி சினிமா கூடாது, தியேட்டர் கூடாது என்று வந்து விட்டால் இங்கு இந்த நடிகர்களின் கார் ,பங்களா வாழ்வு முடிவுக்கு வரும்.அப்போது தெரியும் இந்த ஹிந்து மதத்தை கேலி செய்வதெல்லாம்.

  15. நமது சினிமாக்களில் ஒரு தாய் இல்லாத ,தகப்பன் இல்லாத குழந்தையை கிறிஸ்தவ பாதிரிகளிடம் தான் ஒப்படைப்பார்கள்.
    அப்போது அவர் சிலுவைக் குறி செய்து பெற்றுக் கொள்வார்.பின்னணி இசை? வேறு என்ன? சர்ச் மணி ஓசைதான்!
    அதாவது அவர் ரொம்ப கருணை உள்ளவராம்!

    (அனால் நடப்பது என்ன பல குழந்தைகள் பெரும் விலைக்கு விற்கப் படுகிறார்கள் .பாலியல் கொடுமைக்கு ஆளாகப் படுகிறார்கள்)
    ஆனால் கோயில் குருக்கள் அல்லது பூசாரி ஒரு காமெடி கேரக்டர் மாதிரி காட்டப் படுவார்.
    நடு நடுவே ஏதோ தாங்கள் தான் பெரிய அறிவாளிகள் போலவும்,பகுத்தறிவு வாதிகள் போலவும் சில காமெடி நடிகர்கள் வசனம் வேறு.
    ஆனால் அதெல்லாம் ஹிந்துக்களுக்கு மட்டும் தான்.
    இவர்களுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு இருந்தால் ‘மாரடி உற்சவத்தை’ கிண்டல் செயட்டுமே.
    பாவ மன்னிப்பை கிண்டல் செய்யட்டுமே
    இவர்கள் எல்லோருமே ஆட்டு மந்தைகள்.
    சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்கள்.யாராவது கை தட்டினால் தலை கிறு கிறுத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *