மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?

மீண்டும் ஒரு பயங்கர செயல். சற்று முன் வரை கிடைத்த தகவலின்படி, எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள், தீவிரவாதிகளின் தாறுமாறான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீவிரவாத சம்பவத்தில் பல உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் (ATS chief) ஹேமந்த் கார்காரே கொல்லப்பட்டிருக்கிறார். இது தவிர, நட்சத்திர ஓட்டல்கள் இரண்டில் தீவிரவாதிகள் மக்களைப் பிணை வைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் டெக்கான் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.

தன்னுடைய மக்களை அரசாங்கத்தால் பாதுக்காக்க முடியாவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டு இருக்கிறது. இத்தனை சம்பவங்களுக்கு பிறகும், இந்து தீவிரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சர்ச்சை செய்து கொண்டு இருப்பதில் பயன் என்ன என்பதை யோசிக்க வேண்டும். எந்த வகையின் கீழ் வந்தாலும் தீவிர வாதம் என்பது நசுக்கப்படவேண்டியதே என்பது தெளிவு. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கடுமையாக எதிர்கொள்ள இதைவிடவும் வேறொரு காரணம் வேண்டியதில்லை.

இந்த நடவடிக்கைகளில் அரசு புதிய சட்டங்களை இயற்றவேண்டியிருந்தாலும் சரி, அல்லது புதிய படை அமைப்புகளை உருவாக்குவதானாலும் சரி; அரசு இது நாள் வரை காட்டாத முனைப்பைக் காட்ட வேண்டும். இப்போதுள்ள நிலையில் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் தேவைக்கு அதிகமான மென்மையை இந்த அரசு காட்டி வருகிறது. இது மென்மையோ அல்லது மெத்தனமோ, இதனுடைய பலனை அனுபவிப்பது என்னவோ மக்கள்தாம். ந்யூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த மும்பை துப்பாக்கி சூடு சம்பவத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறது, “Even by the standards of terrorism in India, which has suffered a rising number of attacks this year, the assaults were particularly brazen and drastically different in scale and execution.”

ஆங்கில பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் Think as Mumbai Bleeds – தங்கள் வட்டங்களில், அறிந்தவர்களுக்கு அனுப்புங்கள்.

தீவிரவாதிகள் மும்பை, டெல்லி போன்ற மிக முக்கியமான மாநகரங்களை சர்வ சாதாரணமாக தாக்கி வருகிறார்கள். இந்த நிலையி்ல் இன்னமும் நூறு நாட்களே ஆயுள் மீதம் இருக்கிற அரசு என்ன செய்யப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுகிறது. இந்த நேரத்தில் தேர்தலுக்காக புதிது புதிதாக வெற்று அறிக்கைப் போர்களை நடத்தாமல் உருப்படியாக ஏதாவது இந்த அரசு செய்து தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைந்தாக வேண்டும். அது ஒன்றுதான் அரசாங்கத்துக்கு மக்களின்மேல் இன்னமும் அக்கறை இருக்கிறது என்பதையும், மக்கள் என்பவர்கள் வெறும் ஓட்டுப்பெட்டியை நிறைக்கும் எண்ணிக்கை அல்ல என்பதையும் நிரூபிக்கும்.

8 Replies to “மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?”

 1. //மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?//

  இஃது உங்கள் கட்டுரையின் தலைப்பு. இத்தலைப்பைக் குறித்து எனக்குள் ஒரு வினா.

  தமிழில் கேட்டால் சற்றுக் கடுமையாகத் தோன்றும்.

  ஆங்கிலத்தில் கேட்கட்டுமா?

  Is there a government in your country?

 2. மும்பை நிகழ்வுகளை பார்க்கும் பொழுது நெஞ்சு குமுறுகிறது. மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக பார்க்கும் எண்ணத்தை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். தீவரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். முஸ்லீம் ஓட்டு அரசின் கண்களை மறைக்கின்றது. அரசு சிறிதளவேணும் நாட்டுபற்றோடு நடந்து கொள்ள வேண்டும். பாக்கிஸ்தான் மற்றும் வ்ங்கதேசத்திற்கு கடுமையான எச்சரிக்கை கொடுக்க வேண்டும். உலகில் இதை விட மோசமான தீவிர வாத தாக்குதல் நடந்ததாக தெரியவில்லை. தாக்குதலின் உக்கிரம் நம் நாட்டு முஸ்லிம் தீவிர வாத அமைப்புகளுக்கும் அல் குவைதா வுக்கும் உள்ள தொடர்பினை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

 3. நெஞ்சு பொறுக்குதில்லையே ரத்தம் கொதிக்கிறது. எவ்வளவு கேவலமான அரசியல்வாதிகள் பிடியில் நாம் சிக்கியுள்ளோம். நம் எதிரிகள் முஸ்லீம் தீவீர்வாதிகள் அல்ல. மன்மோகனும் லாலுவும், கருணாநிதியும், முலையமும், சோனியாவும் அர்ஜுன் சிங்கும், அமர்சிங்கும் பட்டீலும் இன்னும் ஆயிரக்கணக்கான ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள்தான்.

  முஸ்லீம் தீவீரவாதி கைதானால் தனக்குத் தூக்கம் போகிறது என்கிறார் பிரதமர்

  சிமி தீவீரவாதிகள் மீது காங்கிரஸ் பரிதாபம் காட்டி விடுதலை செய்ய வேண்டும் என்கிறார் இத்தாலிய சோனியா மொய்னோ

  சிமி தீவீரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார் லாலு

  சி மி பயங்கரவாதிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கேஸ் போடுகிறது காங்கிரஸ் கட்சி

  இஸ்லாமிய பயங்கரவாதிகளின் விடுதலைக்காக தமிழ் நாட்டின் இந்தியாவின் எழுத்தாளர்கள் போராடுகிறார்கள்

  இப்படி தலைவர்களும் சிந்தனையாளர்களும் அறிவு ஜீவிகளும் ஒட்டு மொத்தமாக இந்துக்களுக்கு எதிராகச் செயல் பட்டால் இந்தியாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு ஏது? யாரை அவர்கள் நம்ப முடியும்?

  இந்த நிலையில் இந்துக்கள் இருப்பதற்கு யார் காரணம்?

  இந்த பயங்கரமான நிலையில் நாடு இருப்பதற்கு யார் காரணம்?

  டெல்லியிலும், மும்பையிலும், காசியிலும், இந்துக்கள் லட்சக்கணக்கில் கொல்லப் படுவதற்கு யார் காரணம்?

  புத்தி கெட்டுப் போய் சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் மன்மோகன் போன்ற மானம் கெட்ட பிறவிகளுக்கும் ஓட்டுப் போட்ட இந்துக்கள்தான் இதற்கெல்லாம் காரணம். நாம் பலவீனமாக இருந்தால் ஏன் முஸ்லீம் தீவீரவாதி வந்து குண்டு வைக்க மாட்டான். நாம் கருணாநிதிக்கும் மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் ஓட்டுப் போட்டால் நமக்கு இந்த நிலை வராமல் என்ன செய்யும்? இந்தியாவின் எதிர்காலம் இந்திய ஓட்டர்கள் கைகளில் மட்டுமே உள்ளது.

  அடுத்த முறை ஓட்டுப் போடும் பொழுது கீழ்க்கண்ட ஒவ்வொரு இந்தியனும் இந்துவும் கேட்க்க வேண்டும்

  நான் ஓட்டுப் போடப் போகும் கட்சி தீவிரவாதத்தை எந்த விதத்திலாவது ஆதரித்துள்ளதா? சி மி க்கும் இஸ்லாமியத் தீவீர்வாதத்திற்கும் ஆதரவாகச் செயல் பட்டுள்ளதா? பொடா போன்ற சட்டங்களை எதிர்த்துள்ளதா? இந்துக்களின் நம்பிக்கைக்கும் கடவுள்களுக்கும் எதிராகச் செயல் பட்டுள்ளதா? முஸ்லீம் தீவீரவாதத்திற்கு ஆதரவாக மதவாத அரசியல் செய்துள்ளாதா என்று கேள்வி கேட்ட்டுக் கொள்ள வேண்டும்.

  மேற்கொண்ட கேள்விகளில் ஒரு கேள்விக்காவது ஆம் என்று பதில் கிடைத்தால் அந்தக் கட்சியை எதிர்த்து ஓட்டுப் போட வேண்டும் அப்படி போட்டால் இந்துக்களின் உயிர் இனியாவது பாதுகாக்கப் படும் இல்லையென்றால் கடவுள் கூட அவர்களின் உயிரைப் பாதுகாக்க மாட்டார்.

  இந்துக்களே ஒன்று படுவீர். நம் எதிரிகள் நம் அரசியல்வாதிகளே. அவர்களில் தீவீரவாதத்திற்கு ஆதரவானவானவர்களைக் கண்டு கொண்டு களை எடுங்கள். இல்லா விட்டால் உங்கள் குழந்தைகள் அநாதைகளாகத் தெருவில் நிற்க வேண்டி வரும்.

  இந்த பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீர்வு உங்கள் கைகளில்தான் உள்ளது.

  வந்தேமாதரம்
  விஸ்வா

 4. கொஞ்சம் நாளைக்கு முன் தான் உள்நாட்டு நடவடிக்கைக்கு பொறுப்பான (அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள் என்ன செய்ய ? நாமும் அப்படியே கருதுவோமாக) உள்துறை அமைச்சர் 100 நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களும் தீவிரவாத எதிர்ப்புப்படை என்று உருவாக்க வேண்டும் என்று சொன்னவர். என்னவென்று சொல்வது ?

  அவர் சோனியா காந்தி சொன்னால் ஒழிய தூக்கத்தில் இருந்து விழிக்கமாட்டார். தூங்கிக்கொண்டே இருக்கட்டும். சோனியா சொன்னால் ஒழிய நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக மாட்டேன் என்று கூறியவர் ஆயிற்றே. உள்நாட்டு பாதுகாப்பு உள்துரை அமைச்சரின் பொறுப்புதானே ? இது கூட அறியாதவரா நம் அமைச்சர் ? அந்த அளவுக்கு பொறுப்பானவர் உள்துறை”பொறுப்பு” வகிக்கும் சிவராஜ் பாட்டீல். சோனியாவுக்கு காட்டும் விசுவாசத்தை கொஞ்ச நஞ்சம் தம் தாய்நாட்டும் காட்டி இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் இவ்வளவு நடந்திருக்காதே ?

  நமது பிரதமர் மிகவும் நாசூக்கான மென் அரசியல்வாதி, எது நடந்தாலும் அறிக்கைகள் விட்டே காலத்தை தள்ளுபவர். அவர் என்ன செய்வால் பாவம், சோனியா அந்த அளவுக்குத்தானே அதிகாரம் கொடுத்துள்ளார்.

  ராஜ் தாக்கரே மும்பையில் இருந்து வடநாட்டவரை வெளியேற்றுவதை விட்டு விட்டு மகாராஷ்டிர பாதுகாப்புக்கு உருப்படியாக ஏதாவது செய்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே ?

  மத்திய அரசும் மகாராஷ்டிர மாநில அரசும் இந்து பயங்கரவாதம், இந்து பயங்கரவாதிகள் என சாத்வி பிரக்ஞா மீது காட்டிய் அதீத அக்கறையில் பத்தில் ஒரு பங்கு நாட்டின் பாதுகாப்பு மீது காட்டி இருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா ?

  இந்தியாவில் மதிப்பை சர்வதேச மேடையில் கலங்கப்படுத்த வேண்டும், என்பது தான் தீவிரவாதிகளின் எண்ணம். அதை அவர்கள் ஈடேற்றியும் விட்டனர்.

  இதில் மிகக்கொடுமையான விஷயம் என்னவெனில் செயலற்று இருந்து மறைமுகமாக தீவிரவாதிகளுக்கு துணை போன குற்றம் நமது அரசையும் அரசியல்வாதிகளையுமே சாரும்.

  இதற்குத்தானே மக்கள் வாக்களத்தனர்.

  வாழ்க மக்களாட்சி ! வளர்க ஜன்நாயம் !!

  அது சரி..

  நம்பி கேட்டது போல,

  இனி, இந்தியாவில்,

  அரசு என்று உள்ளதா என்ன ?

 5. Following is a chronology of some of the major attacks in India in the past five years:

  March 13, 2003 – A bomb attack on a commuter train in Mumbai kills 11 people.

  Aug. 25, 2003 – Two car bombs kill about 60 in Mumbai.

  Aug. 15, 2004 – A bomb explodes in Assam, killing 16 people, mostly schoolchildren, and wounding dozens.

  Oct. 29, 2005 – Sixty-six people are killed when three blasts rip through markets in New Delhi.

  March 7, 2006 – At least 15 people are killed and 60 wounded in three blasts in the northerly Hindu pilgrimage city of Varanasi.

  July 11, 2006 – More than 180 people are killed in seven bomb explosions at railway stations and on trains in Mumbai that are blamed on Islamist militants.

  May 18, 2007 – A bomb explodes during Friday prayers at a anti-wahhabi mosque in Hyderabad, killing 11 worshippers.

  Aug. 25, 2007 – Three coordinated explosions at an amusement park and a street stall in Hyderabad kill at least 40 people.

  May 13, 2008 – Seven bombs rip through the crowded streets of Jaipur, killing at least 63 people in markets and outside Hindu temples.

  July 25 – Eight small bombs hit the IT city of Bangalore, killing at least one woman and wounding at least 15.

  July 26 – At least 16 small bombs explode in Ahmedabad killing 45 people and wounding 161. A little-known group called the “Indian Mujahideen” claims responsibility for the attack and the May 13 attack in Jaipur.

  Sept 13 – At least five bombs explode in crowded markets and streets in the heart of New Delhi, killing at least 18 people and injuring scores more. The Indian Mujahideen again claim responsibility.

  Nov 26 – At least 80 people were killed in a series of attacks apparently aimed at tourists in India’s financial capital Mumbai on Wednesday. Police said at least 250 people had been wounded.

  25 August 2004: 6 People died in two car bomb blasts in Mumbai.
  5 July 2005: Terrorists attacked Ram Janma Boomi, Ayodhya.

  28 July 2005: 13 killed and 50 injured in an explosion on board Shramjivi Express at Jaunpur Uttar Pradesh.

  8 September 2006: 38 people killed and more than 100 injured when three bombs simultaneously exploded, including one in a Mosque at Malegon in Maharashtra.

  19 February 2007: 68 people killed and dozens injured after four explosions on board the Lahore bound Samjhauta Express.

  23 November 2007: 13 people killed and 40 wounded in a serial blast outside Courts in three cities of Uttar Pradesh.

  1 October 2008 – Tripura – 5 dead and over 100 injured

  30 October 2008 – Assam – 75 dead and over 200 injured

 6. I watched the movie ” Wednesday”. I wish and hope in this country another 100 will emerge like the hero in that movie. The appeasement and abiding the law by the majority of the population, have not made one iota of difference to the terrorist atack.Until and unless Hindus stand up for themselves, they are doomed. I wanted to puke after watching ” blah blah address to the nation” by our PM, the esteemed spineless poodle of Sonia . I bet this whole episode will die down in few weeks and will be repeated again, ad nauseam, after the next Islamic attack. When will we have a nationwide party that will care about Hindus and India?

 7. //// பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்

  Latest News : மும்பையையும் இந்த நடு இரவில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. பல நட்சித்திர ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

  https://tmpolitics.blogspot.com/2008/11/blog-post_86.html

  ///

  இந்த மும்பைத் தாக்குதலை நடத்தியது பிஜேபி தானாம். தமிழ் இஸ்லாமிய இணைய தளங்க்ள் சொல்லுகின்றன. வெட்கம்!! வெட்கம்!!

  நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும்வரை தீவிரவாதத்தை தீர்க்க முடியாது. இஸ்லாமிய சகோதரர்கள் தீவிரவாதிகளை இஸ்லாத்துடன் இணைத்து அவர்களைக் காக்கும் இழி முயற்சியில் இருக்கும்வரை இந்தியாவில் அமைதி திரும்பாது.

  நன்றி

  ஜயராமன்

 8. ஒரு இந்திய வாழ்க்கை

  இந்தியாவில் ஒவ்வொரு தீவிரவாத செயலும், அதற்கு முந்தைய தீவிரவாத செயலைவிட அதீத வன்முறையை கொண்டிருக்கும். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் (காங்கிரஸ் அல்லது பாஜாக) பாக்கிஸ்தானின்மேல் பழியைப் போடுவார்கள்.

  பாக்கிஸ்தான், இந்தியாவிலுள்ள இந்துக்கள் அங்குள்ள இஸ்லாமியர்களை கொடுமைப்படுத்துகிறார்கள், இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி காஃபிர்களை நடத்த அனுமதிப்பது இல்லை, எனவே தீவிரவாதிகள் தங்களது உரிமைக்காக போராடும் போராளிகள் என்று சொல்லும்.

  இங்கிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்களைப் பற்றி உயர்வாக மீடியாக்கள் சொல்வதில்லை என்று வருத்தப்படுவார்கள்.

  மீடியாவோ, தீவிரவாதிகள் பாசமுள்ள பண்புள்ள பொறுப்புள்ள கடமை உணர்வுள்ளவர்கள் என்று காட்டும். தீவிரவாதிகளின் வீட்டில் உள்ள மனைவிகள், குழந்தைகள், பெரியம்மா, வீட்டுப் பூனை, சாக்கடை கொசு எல்லாவற்றையும் பேட்டி கண்டு அந்த தீவிரவாதி எவ்வளவு நல்லவர், வல்லவர், நியாயமானவர், நேர்மையானவர், அன்பானவர் என்று மீண்டும் மீண்டும் சொல்லும். உயிரிழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையோ, குடும்பத்தாரையோ காட்டி, அவர்களது வாழ்க்கை எங்கனம் அழிந்துபோய்விட்டது என்பதை காட்டாது.

  கொலை செய்ய சொல்லும், வன்முறையை அங்கீகரிக்கும் ஆபிரகாமிய மதங்களின் அச்சுறுத்தலுக்கும், கையூட்டுகளுக்கும் பணிந்து, மிருகங்களைவிட கீழான இந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுதுபவர்களை அறிவுஜீவிகளாகக் கொண்டாடும். இதற்கு எதிரான கருத்துக்களை வெளியிடாது.

  இந்த மீடியாவை பார்க்கும் பொதுமக்கள் இந்திய அரசாங்கம்தான் தீவிரவாத அரசாங்கம் என்றும், கொலை-கொள்ளை-கற்பழிப்பை அல்லா, மார்க்ஸ், மற்றும் ஏசுவின் பெயரால் நிகழ்த்துபவர்கள் எல்லாம் மனித இனத்தை உய்விக்கவே அத்தகைய செயல்களை செய்கிறாரகள் என்று நம்பும். எதனால் இந்த தீவிரவாத செயல்களில் ஒரு முஸ்லீம்கூட பாதிக்கப்படுவதில்லை என்று கேள்வி கேட்காது.

  இஸ்லாமிலிருந்து மதம் மாறுபவர்களை கொல்லச்சொல்லும் குர்-ஆன் வழியாளர்கள், அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை விதித்தது உயர்ந்த மனித கலாசாரத்திற்கு எதிரானது எதனால் கேட்கிறார்கள் என்று கேள்வி எழுப்புபவர்களை “இந்துத்துவாதிகள்” என்ற ஒற்றை முத்திரைகுத்தி தூக்கி எறிந்துவிட்டு போய்விடும்.

  பிறகு மார்க்கட்டிற்கோ, சினிமா தியேட்டருக்கோ, அவரவர் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ போய் அங்கு நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளில் மாட்டிக்கொண்டு தன்னுடைய மற்றும் தன்னுடைய குடும்பத்தாருடைய வாழ்க்கையை தொலைக்கும்.

  அதற்கு மற்ற மீடியாக்கள் போல் இல்லாமல் தமிழ்ஹிந்து, திண்ணை, மற்றும் சில மனசாட்சியுள்ள வலைத்தளங்கள் உண்மையை அறியத்தூண்டும் கட்டுரைகளை வெளியிடும். அவற்றில் அப்படி கட்டுரை எழுதுபவர்கள் குற்றவாளியாக்கப்படுவார்கள். யாரோ ஒரு நாலு பேர்மட்டும் உண்மையை புரிந்து கேள்வி கேட்பார்கள்.

  மற்றவர்கள் இந்த சம்பவங்களின்போது மட்டும் வருத்தப்பட்டு, எல்லாத்துக்கும் இந்த அரசியல்வாதிகள்தான் காரணம் என்பார்கள்.

  அரசியல்வாதிகள் எதிர்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சியை குறை சொல்லுவார்கள்.

  ஆளும்கட்சியாக இருந்தால்,…………… (மீண்டும் முதலில் இருந்து படியுங்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *