அருணகிரி எழுப்பியிருந்த வினாக்களுக்கான விடைகளின் இரண்டாவது தவணை இது:
இ). கர்ணன் பிறப்பு உண்மை தெரியாத பலருக்கும் தம்முடன் சேர்த்து வித்தை கற்பிக்கப்பட்ட அவன் மேல் அசூயை பிறந்திருக்கலாம். அதனால் டெமான்ஸ்ட்ரேஷனின்போது அவனைப் பொதுவில் அவமானப்படுத்த அவனது பிறப்பைப் பற்றிக் கேட்டிருக்கலாம்.
இந்தப் பகுதியின் விடையைத் தொடர்கிறேன்.
ஆட்டக் களத்தில் கர்ணனுடைய நுழைவு துரியோதனன் எதிர்பார்த்திருந்த ஒன்று என்று ஊகிக்க இடமிருக்கிறது. இது ஊகம்தான்.
இனி ஆட்டக் களத்து நிகழ்வுக்கு வருவோம்.
What we should keep in mind is that this was something of the kind of a tournament, where the Kuru princes were supposed to display the skills they have acquired, in the presence of the general public. அதற்குமேல் ஒரேஒரு அங்குலம்கூட இல்லை. கற்ற வித்தைகளை மக்களின் முன்னிலையில் செய்து காட்டுவது என்பது மட்டும்தான் நோக்கம். மாணவர்களுடைய திறமை, ஆசிரியருடைய பெருமை இரண்டும் ஒருசேர மக்களுக்குக் காட்டப்படுகிறது. கிட்டத்தட்ட நம் காலத்து குடியரசுதின ராணுவ அணிவகுப்புபோல என்று வைத்துக் கொள்ளலாம். அந்தச் சமயத்தில் ஆயுதங்களை எல்லாம் எதற்காக வரிசையாக எடுத்துச் செல்கிறார்கள்? இப்படிப்பட்ட ஆயுதங்கள் இந்த அரசின் கையில் இருக்கின்றன, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மக்களிடையே நம்பிக்கையை ஊட்டவும்; அதே சமயத்தில் ‘கபர்தார்’ என்று எதிரியை எச்சரிக்கவும்தான், இல்லையா? Can you imagine some fool firing a heavy mortar gun during the parade? Or, a group of soldiers challenging another group for a level-to-level combat, for instance?
இப்படித்தான் அன்று நடந்தது. வாத்திய கோஷங்கள் அடங்கிய பிறகு, தர்மபுத்திரன் தலைமையில் முதலில் ஒரு குழு தங்களுடைய பயிற்சிகளைச் செய்து காட்டினார்கள். ஈட்டி எறிதல், அம்பு எய்தல், வாள் சுழற்றுதல், தேரை விதவிதமான நெருக்கடிகளுக்கிடையில் செலுத்துதல் என்றெல்லாம் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஆடுகளத்தின் போக்கு பீமனும் துரியோதனனும் இறங்கியதும் திடுமென மாறியது. இருவரும் உள்ளே இறங்கும்போதே வன்மத்துடன்தான் இறங்கினார்கள் என்று சொல்கிறார் வியாசர்.
Then Vrikodara and Suyodhana, internally delighted (at the prospect of fight), entered the arena, mace in hand, like two single-peaked mountains.
(சுயோதனன் என்பது துரியோதனன் என்ற பெயரின் தமிழ் வடிவம் என்றுதான் என் பள்ளியில் ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தார்கள். இல்லை, அது வடமொழி வடிவம்தான் என்பதைக் காண்கையில் என் வியப்பை அடக்க முடியவில்லை. ஆகவேதான் வண்ணத்தை மாற்றிக் குறித்து வைத்திருக்கிறேன். All Vyasa texts quoted here are from my archive.)
துரியோதன, துச்சாதன, கர்ண, சகுனிகளின் பகை எண்ணத்தை, பீமனுக்கு விஷம் கொடுத்து ஆற்றில் உருட்டிவிட்ட சம்பவத்துக்குப் பிறகுதான் தர்மன் புரிந்துகொள்கிறான். அதுவரையில் பீமன் ஒரு விஷமக்கார தீனிப்பண்டார, குண்டுப் பையன், முரடன். ஆனால் யாரிடமும் பகைமையோ, பொறாமையோ கொண்டவனாக இருந்திருக்கவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பீமன் தன் கோபத்தைக் காட்டத் தயங்கவில்லை. துரியோதனனுடைய தீச்செயல்கள் தொடர்ந்தவண்ணமாக இருந்தன. இரண்டு பேரும் ‘கிடைத்தது சந்தர்ப்பம்’ என்று புகுந்து ஆட்டக் களத்ததை அதகளமாக்கினார்கள். (அதகளம் என்று ஏதோ ரைமுக்காகச் சொல்லவில்லை. அதகளம் என்றால் போர்க்களம் என்றுதான் பொருள். அதகளம், அமர்க்களம் எல்லாம் போர்க்களத்தைதான் குறிக்கும்.)
அவர்களுடைய மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. பார்வையாளர்களுக்குத் திகிலும் திகைப்பும் உண்டாயிற்று. துரோணர் அஸ்வத்தாமனிடம் சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக நிறுத்த வைத்தார். என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்:
“And seeing the place become like a troubled ocean, the intelligent Bharadwaja said unto his dear son, Aswatthaman, ‘Restrain both these mighty warriors so proficient in arms. Let not the ire of the assembly be provoked by this combat of Bhima and Duryodhana.” (மஹாபாரதம், ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 137)
மக்கள் மத்தியில் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படும்; பிறகு நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் என்பதல்லவா பொருள். அப்படி மக்கள் கூட்டம் இரண்டாகப் பிரியும் நிலையில்தான் இருந்தது. பாண்டுவின் பிள்ளை மூத்தவனாகவும், வாரிசுரிமை உடையவனாகவும் இருக்கும் நிலையில், மக்களுடைய ஆதரவில் பெரும்பங்கு தர்மனின் பக்கம் இருந்த நிலையில், துரியோதனனுடைய பொறாமை (என்ன, மொத்தத்தையுமா வாரிசுரிமையாகப் பெறப் போகிறான் தர்மன்! பாதி நாடு என்று பகிர்ந்து தரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், பாண்டு தன் ஆட்சிக் காலத்தில் திக்விஜயங்களால் தேசத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி, செல்வ வளத்தைப் பெருக்கி, வளர்ச்சியில் பெரும்பங்கேற்றிருந்தான். Therefore his Government was more than a care-taker Government. இந்த வாரிசு சிக்கலில் இப்போது நுழையவேண்டாம். ஆனால் இந்த விஷயத்தில் துரியோதனன் தரப்பு நியாயம் மிகவும் பலவீனமானது என்பதை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.)
ஆகவே, அப்படிப்பட்ட சூழலில், மக்களுடைய அபிப்பிராயம் இரண்டு பக்கத்து இளவரசர்களுக்குமாகப் பிரிவதை எந்த முதிர்ந்த நிர்வாகியும் விரும்பமாட்டான். துரோணர் ஆணைப்படி அஸ்வத்தாமன் ‘நிறுத்துங்கள்! இது குருவின் ஆணை!’ என்று பெருங்குரலில் கூவித்தான் இருவரையும் நிறுத்த முடிந்தது.
இதன் பின்னர் அர்ஜுனனுடைய டிஸ்ப்ளே. A very graceful and breath-taking performance that changed the mood of the audience in a trice. அந்தச் சமயத்தில்தான் நம்மாள், பெரியவர், கர்ணர் உள்ளே வருகிறார். உள்ளே வரும்போதே என்ன அலட்சியம் என்பதை கவனியுங்கள்:
Begotten by the Sun himself, he was tall in stature like a golden palm tree, and, endued with the vigour of youth, he was capable of slaying a lion. Handsome in features, he was possessed of countless accomplishments. The mighty-armed warrior, eyeing all around the arena, bowed indifferently to Drona and Kripa. And the entire assembly, motionless and with steadfast gaze, thought, ‘Who is he?’ And they became agitated in their curiosity to know the warrior. (மஹாபாரதம், ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 138)
‘சர்த்தான் நிறுத்தப்பேன்…எங்களுக்கும் தெரியும் இதெல்லாம்.. நாங்களும் கொஞ்சம் ஆடிக் காட்டவா’ என்றுதான் கர்ணன் தொடங்கினான். ஆடுகளம் அமைக்கப்பட்டது இளவரசர்களுக்காக. குருவம்சத்து இளவரசர்கள் எப்படிப்பட்ட திறமைசாலிகள் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக அமைக்கப்பட்ட களம் அது. பொதுக்களம் அன்று. இவனோ, துரோணரிடம் கற்று, பிறகு அவரிடமிருந்து பிரிந்துசென்று, பரசுராமரிடம் வித்தை கற்றுக் கொண்டு எதிர்பாராத தருணத்தில் திரும்பி வந்திருப்பவன். இந்தச் சமயத்திலேயே இவனை நிறுத்தியிருக்கலாம். விலக்கியிருக்கலாம். ‘ஒங்க அப்பன் பேர் என்ன’ என்று இப்போதே கேட்டிருந்திருக்கலாம். முடியுமா, முடியாதா? ஆனால் அப்படியா செய்தார்கள்?
‘O Partha, I shall perform feats before this gazing multitude; excelling all thou hast performed! Beholding them, thou shall be amazed.’ And, O thou best of those blest with speech, he had hardly done when the spectators stood up all at once, uplifted by some instrument, as it were. And, O tiger among men, Duryodhana was filled with delight, while Vibhatsu was instantly all abashment and anger. Then with the permission of Drona, the mighty Karna, delighting in battle, there did all that Partha had done before. (மஹாபாரதம், ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 138)
துரோணர் அவனைத் தன் திறமைகளைக் காட்ட அனுமதித்தார். He was only an ex-student and could easily have been disqualified, by saying that this venue was open only for the students of Acharya Drona. Drona has been generous in this respect, in that he did not stop Karna from displaying his skills. ஒருவிஷயம் என்னவென்றால், துரோணரும் (தந்தை பரத்வாஜரிடம் பயின்றவர் என்றபோதிலும்) பரசுராமரின் சீடர்தான்.
கர்ணனும் அர்ஜுனன் செய்ததை எல்லாம் செய்துகாட்டினான். மக்கள் மகிழ்ந்தார்கள். ஆர்பரித்தார்கள். விஷயம் அத்துடன் முடிந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. கர்ணன் எதிர்பாரத திசையில் அடியெடுத்து வைத்தான். இந்த இடத்தைப் பாருங்கள்:
Duryodhana with his brothers thereupon embraced Karna in joy and then addressed him saying, ‘Welcome O mighty-armed warrior! I have obtained thee by good fortune, O polite one! Live thou as thou pleasest, and command me, and the kingdom of the Kurus.’ Kama replied, ‘When thou hast said it, I regard it as already accomplished. I only long for thy friendship. And, O lord, my wish is even for a single combat with Arjuna.’ Duryodhana said, ‘Do thou with me enjoy the good things of life! Be thou the benefactor of thy friend, and, O represser of enemies, place thou thy feet on the heads of all foes. (மஹாபாரதம், ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 138)
துரியோதனன், ‘குருவம்ச அரண்மனைக்கு வா, உன் விருப்பம்போல் வாழ், எனக்கும், குருவம்ச அரசாங்கத்துக்கும் உத்தரவிடு’ என்றெல்லாம் பேசிக்கொண்டே போகிறான். இவன், அவனுடைய நேசக்கரத்தை ‘உடனடியாக’ (ஏதோ அப்போதுதான் இருவரும் முதன்முறையாகச் சந்திக்கும் பாவனையில்) அவனுடைய நட்பை ஏற்றுக்கொண்டு, அர்ஜுனனை ‘ஒண்டிக்கு ஒண்டி’ கூப்பிடுகிறான். உடனே அதையும் துரியோதனன் ஆமோதிக்கிறான். ‘எல்லாப் பகைவர்களின் தலைமீதும் உன் காலை வை’ என்று கொக்கரிக்கிறான்.
ஐயா, ரெண்டுபேரும் பங்காளிகள். ரெண்டு பேருக்கும் உரிமை இருக்கிறது. பெரிய ஜமீன்தார் கண்ணில்லாதவர். சின்ன ஜமீன்தார் ஜமீனைக் கவனித்துக் கொண்டார். பண்ணையை விருத்தி செய்தார். காட்டுக்குப் போய் செத்துப் போயிட்டார். அவருடைய பிள்ளைகளுக்கு ஜமீனில் உரிமையே இல்லாமல் போய்விடுமா? அவர்களை வைத்துக் கொண்டே அவர்களைக் கேவலப்படுத்தி இப்படிப் பேசினால் அவர்கள் உடலில் மட்டும் க்ஷத்திரிய ரத்தம் ஓடவில்லையா? தர்மன் எதிர்த்துப் பேசினானா? ஒருவார்த்தை பேசவில்லை அல்லவா? ஆனால் அர்ஜுனன் மட்டும் எதிர்வார்த்தை சொன்னான் என்பதையும் நான் சொல்லவேண்டும்:
‘Arjuna, after this, deeming himself disgraced, said unto Karna stationed amidst the brothers like unto a cliff, ‘That path which the unwelcome intruder and the uninvited talker cometh to, shall be thine, O Karna, for thou shall be slain by me.’ (மஹாபாரதம், ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 138)
உணர்ச்சி வெள்ளம் அணைபோட முடியாத அளவுக்கு உடைப்பெடுத்துக் கொண்டது. பார்த்தனுக்குப் போரிடுவதற்கான அனுமதியை துரோணர் வழங்கிவிட்டார். இப்படி ஒரு அவமானத்தை அவரால் மட்டும் சகித்துக்கொள்ள முடியுமா என்ன! அர்ஜுனனன் போருக்காக ஓர் எட்டு எடுத்து வைத்தான். தன்னுடைய இரண்டு மகன்களும் போருக்குத் தயாராக நிற்பதைப் பார்த்த குந்தி மறுபடி மயங்கி விழுந்தாள். விதுரன் பணிப்பெண்களைக் கொண்டு அவளை கவனிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் சமயத்தில் மக்களிடையே கொந்தளிப்பு பெருகிக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில்தான் கிருபர் குறுக்கிட்டார்.
And beholding both the warriors with bows strung in their hands the son of Saradwat, viz., Kripa, knowing all duties and cognisant of the rules regulating duels, addressed Karna, saying ‘This Pandava, who is the youngest son of Kunti, belongeth to the Kaurava race: he will engage in combat with thee. But, O mighty-armed one, thou too must tell us thy lineage and the names of thy father and mother and the royal line of which thou art the ornament. Learning all this, Partha will fight with thee or not (as he will think fit). Sons of kings never fight with men of inglorious lineage.’
திறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் ‘அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு’ என்று கேட்கவில்லை. ‘என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா’ என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள்.
யுத்தத்தில் த்வந்த யுத்தம், சங்குல யுத்தம் என்று இரண்டு வகையுண்டு. இரண்டு சமமான எதிரிகள் மோதுவது த்வந்தம். தேராளியுடன் தேராளி, குதிரை வீரனோடு குதிரை வீரன், யானை ஆளுடன் யானயாள், காலாளுடன் காலாள் இப்படி சமமமான தகுதி உள்ளவர்கள் மோதுவது த்வந்த யுத்தம். சங்குல யுத்தத்தில் இந்த வேறுபாடு கிடையாது. It is a free for all. ஒவ்வொரு தோட்டாவாக லோட் செய்து, load, cock, fire, unload, reload, cock, fire என்று சுட்டுக்கொண்டிருந்த .303 துப்பாக்கி காலம் வரையில் துப்பாக்கி முனையில் பயனெட் பொருத்தப்பட்டுக் கொண்டிருந்தது இப்படிப்பட்ட கணங்களுக்காகத்தான். விரைந்து எதிரெதிரில் ஓடிவரும் எதிரி வீரர்கள் (both with cocked rifles, but would prefer to use the boyonet first instead of the bullet, for it involves a vivid procedure of unloading, reloading and firing, the time spent in this process thus giving advantage to the enemy) முதலில் கத்தியால் குத்தவே விரும்புவார்கள். சங்குல யுத்தம் என்பது இதைப் போன்றதுதான். இந்தச் சமயத்தில் யார்கையில் 303 யார் கையில் எல்எம்ஜி, யார் கையில் மார்ட்டர் (எல்லாம் 70கள் வரையில் பயன்பட்ட ஆயுதங்கள். பிறகு SLR வந்த பின் நிலைமை சுத்தமாக மாறிப்போனது) என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அடி, கொல்லு, குத்து. அவ்வளவுதான்.
இது யுத்த சந்தர்ப்பத்தின் உச்சகட்ட நிலைமை. யுத்தத்தின் தொடக்கமோ த்வந்தமாகத்தான் இருக்கும்.. இன்றைக்கும் இது பொருந்தும். Even an aggressor would start with infantry first, may be with some armour and sporadic artillery support. அதன் பின்னால்தான் மற்ற ரெஜிமென்ட்கள் தொடரும். கொஞ்சம் தீவிரமடைந்த பிறகுதான் பலம்பொருந்திய, பெரிய வகை பீரங்கிகள் களமிறங்கும்.
யுத்தத்துக்கே இப்படி என்றால், ஒண்டிக்கு ஒண்டி (duel) என்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. (ரஷ்யக் கவிஞன் புஷ்கின் ஒரு ட்யூவலில்தான் செத்துப் போனான்.) அரச குடும்பத்தைச் சேர்ந்தவனை எல்லோரும் எதிர்த்து நின்றுவிட முடியாது. அப்படி ஒரு சவால் விடவேண்டும் என்றால், சவால் விடுபவனுக்கு அடிப்படைத் தகுதிகள் இருக்கவேண்டும்.
ஏன்? ஏனெனில், களத்தில் இறங்கப் போகிறவன் மன்னன் (அல்லது மன்னாக அமரும் வாய்ப்பு உள்ளவன்). அவன் வென்றால் கவலையே இல்லை. ஒருவேளை தோற்றான் என்றால், தோற்பது அவன் மட்டுமில்லை, ஒரு முழு நாடும்தான். ஆகவே, பொதுவாகவே இப்படிப்பட்ட ‘நீயா நானா’ சவால்களுக்கு என்று விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறைகளைத்தான் மேலே அடிக்கோடிட்டுள்ள பகுதி குறிப்பிடுகிறது.
இந்த விதிமுறையைக் கையில் எடுத்த காரணத்தால்தான் அன்று நடக்க இருந்த பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. கர்ணனுக்கும் சரி, அர்ஜுனனுக்கும் சரி, மானக்கேடு ஏதும் ஏற்படாமல் காக்கப்பட்டது.
அப்படியானால், அர்ஜுனன் கர்ணனைவிடவும் தேர்ச்சி குறைந்தவன்; அவனைப் பாதுகாக்கத்தானே கிருபர் இந்த வாதத்தைக் கையில் எடுத்தார் என்று கேட்பீர்கள். நான் என்ன பதில்கேள்வி தொடுப்பேன் தெரியுமோ?
Let us not talk on assumptions. Let us look at track-records. It is on record that Karna was defeated by Arjuna in a one-on-one once, during the chaos that followed Draupadi’s Swayamvara; and then again Karna fled (virtually ran away from) the field in Virata Parva, unable to stand the wrath of Brahanala. And a third time, he was miserably defeated by Chitrasena, the Gandharva, when he deserted his friend, protector, ‘helper-in-distress’ Duryodhana and ran long long away. தேர்ச் சக்கரத்தில் கட்டப்பட்டு பரிதாபகரமாக இழுத்துச் செல்லப்பட்ட துரியோதனனைக் காப்பாற்ற பீமனும் அர்ஜுனனும் செல்லவேண்டி இருந்தது.
I can quote one or two more instances of Karna tasting defeat at the hands of others, including that of Bhima once in the Battle. Give me just ONE instance when Arjuna was defeated by ANYONE. And then judge for yourself.
விவாதங்கள் தொடர்கின்றன. அடுத்த தவணையில் சந்திப்போம்.
அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதி இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட்டால் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பிரமாதமான அறிவுக் கருவூலமாக இருக்கும்.
Fantastic article, keep up your good work, enjoying every bit of it
Give me just ONE instance when Arjuna was defeated by ANYONE
When Arjuna was worshiping for divine weapons from Lord Shiva, Shiva tested him by becoming a hunter and then defeated him in a one-on-one duel
Hanuman is also set to have broken bridge of arrows built by Arjuna to quell his arrogance somewhere near Rameshwaram
மைத்ரேயா, ராமா இருவருக்கும் நன்றி. எவ்வளவு எழுதிப் பழகியவனாக இருந்தாலும் நன்மொழிகள் உற்சாகம் தருகின்றன. மீண்டும் நன்றி.
விக்னேஷ்,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை.
1) அர்ஜுனன் சிவபெருமானால் தோற்கடிக்கப்பட்டவன், அனுமனால் அவனுடைய அம்புப் பாலம் உடைக்கப்பட்டது. ஆகவே அவன் கர்ணனுக்குப் பயிற்சியில் இளைத்தவன் என்பதா, அல்லது,
2) யாராவது ஒருவர், ஒரேஒருவர் அர்ஜுனனைத் தோற்கடித்திருக்கிறார்களா என்ற என் கேள்வியை ஒரு சவாலாகக் கருதிவிட்டீர்களா?
சவால் என்று கருதி இதை ஒரு விடையாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்றால் —
1) சிவ-அர்ஜுன கைகலப்பு வெற்றி-தோல்வியில் முடிந்தது; சிவபெருமான் வென்றார், அர்ஜுனன் தோற்றான் என்று வியாச, வில்லி பாரதங்களில் சொல்லப்படும் ஸ்லோகம் அல்லது செய்யுளின் குறிப்பு எது என்று சொல்ல இயலுமா?
2) இது ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒன்று என்றால், அந்தக் கைகலப்பு எப்படி ஒரு விளையாட்டுச் சண்டையாக முடிந்தது, வெற்றியோ, தோல்வியோ இல்லாமல் அர்ஜுனனுக்குச் சிவபெருமான் பாசுபதம் தந்தார் என்பதைச் சான்றுகளுடன் விளக்குவேன்.
அடுத்ததாக இன்னொன்று. அனுமன் பீமனிடத்தில் விளையாட்டாக பலப் பரீட்சை நடத்திய சம்பவம் உள்ளது. அர்ஜுனன் கட்டிய அம்புப் பாலத்தை ராமேஸ்வரத்துக்கு அருகில் அனுமார் உடைத்தார் என்பது இதுவரையில் நான் கேள்வியே படாத நிகழ்வாக இருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் எந்தச் சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது? ராமேஸ்வரத்துக்கு அர்ஜுனன் சென்றது அவனுடைய தீர்த்த யாத்திரை சமயத்தில். அந்தச் சமயத்தில் யாரோடு மோதினான், என்ன காரணத்துக்காக அம்புகளால் பாலம் அமைத்தான் என்பன போன்ற விவரங்களைத் தர இயலுமானால் புதியன கற்றுக் கொள்கிறேன்.
உங்களுடைய பங்கேற்புக்கு நன்றி.
Harikrishnan ayya
I have not read the sanskrit or tamil versions of mahabharatha
These were the stories which i have read or heard and i pasted them here to say Arjuna was defeated by Lord Shiva/Hanuman
I have heard that all arrows shot by Arjuna on Lord Shiva became a garland on the Lord and Arjuna was forced to apologise on realising his mistake of not able to recognize the Lord.
Kannappa nayanar was supposed to be Arjuna who had to give away his eyes as the karma for not able to recognize the Lord.
So, i took this incident as Arjuna defeat 🙂
விக்னேஷ்,
\\So, i took this incident as Arjuna defeat//
அப்படியானால், இந்தச் சம்பவத்தைக் குறித்து இத்தொடரிலேயே விளக்கமாக எழுதுகிறேன். It needs to be looked at from its proper perspective.
அன்புள்ள ஹரிகி,
அற்புதம். அதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.
What I really adore is the conviction you have in what you say and the extent of the preparation and the sincere effort you put in to get the message acoross.
Blessed we are to read these. Hence looking forward to more.
varadharajan.