நகரம் நானூறு – 6

நகரம் நானூறு

ஹரி கிருஷ்ணன்

cityscape-1a1

ஆற்றுநீர் ஓட்டம் அடிக்கின்ற காற்றெல்லாம்
போற்றியென்றும் மக்கள் பொதுவென்று – நேற்றொருநாள்
சொல்லித் திரிந்தார்கள்; சொற்பப் பொழுதுக்குள்
எல்லாமும் மாறியதே இங்கு.

விற்பனைக்குத் தண்ணீர்; விளம்பரங்கள்; போட்டிகள்;
சொற்புனைந்து காசாம்* சுவர்ப்பரப்பு – நிற்பதற்குள்
மூச்சுவிடக் காசு; முனகுதற்கும் காசினிமேல்
பேச்செடுத்தால் காசொன்றே பேச்சு.

[*காசு ஆகும்.]
தொட்டதெல்லாம் காசாக்கும் சூக்குமம் கற்றபின்னும்
விட்டுவிட்டார் உன்னை விழிதப்பி – முட்டாள்கள்!
அப்பா ஒளிக்கலனே, ஆதிநாள் சூரியனே
எப்போது காசாவாய் இங்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *