குமுதம் கட்டுரை

இந்த வார குமுதம் ஜோதிடம் புத்தகத்தில், சிறப்புக் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. பொதுவாக இது போன்ற கட்டுரைகளை பொது ஊடகங்களில் காண்பது அரிது. ஹிந்து விரோத சக்திகளின் கையில் சிக்கியுள்ள ஊடகங்கள் தொடர்ந்து பொது மக்களை ஒரு வித மூளைச் சலவைக்கு ஆளாக்கி வருகின்றன. ஹிந்துக்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்துவது, ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை இருட்டடிப்பு செய்வது, உண்மையை திரிப்பது என்று பலவித வரலாற்று தவறுகளை ஊடகங்கள் செய்து வருகின்றன. வெறும் வியாபார நோக்கம் மட்டும் அல்லது, தேச விரோதமாகவே ஊடகங்கள் செயல்பட்டும் இதனை கண்டுகொள்ளவோ, கண்டிக்கவோ சற்றும் எண்ணம் இல்லாத அரசாங்கம் வேறு. இந்நிலையில் இது போன்ற ஒரு கட்டுரை குமுதத்தில் வெளியாகி இருப்பது வரவேற்க தகுந்தது.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சுமார் ஆயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்களின் பூமியாக இருந்த ஆப்கனிஸ்தான் இன்று இந்துக்களின் சுவடே இன்றி ஆகி விட்டிருப்பதை கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அகண்ட பாரதமாக இருந்த இந்த தேசம், துண்டாடப்பட்டு அடையாளம் இழந்து நிற்கிறது.

இந்துக்களின், வேத, தர்ம சாத்திர, புராண, இதிகாச மொழியான சமஸ்க்ருதத்துக்கு புகழ் பெற்ற இலக்கண நூலை எழுதிய பாணினி இன்றைய ஆப்கனிஸ்தானில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சங்கரரும், ராமானுஜரும் தமது முக்கிய ஆன்மீக உரைகளை எழுத துவங்கியது நமது காஷ்மீரத்தில் தான் என்பது எத்தனை பேர் அறிவர்? காஷ்மீர ராஜ வம்ச வரலாற்றை பற்றி கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்கிற நூலை இன்றைக்கு காஷ்மீரில் அறிந்தவர்கள் ஓரிருவராவது மிச்சம் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஜனநாயகத்தின் வரவால், நாம் நமது பாரம்பரியத்தை இழந்து விட்டிருக்கிறோம். நமது நாட்டுக்கே உரிய கலாச்சாரங்கள் அழியும் நிலை அடைந்து, அரபி கலாச்சாரத்துக்கும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கும் மக்கள் ஏற்றுமதி ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கும் பாட திட்டத்தில், சங்கரர், ராமானுஜர் எல்லாம் எங்கே இடம் பெறுகிறார்கள்? இது திட்டமிட்ட இருட்டடிப்புதானே…!

India_change11100533604-1இங்கே நீங்கள் காண்பவை ஒரு பாகிஸ்தானிய பத்திரிகையில் (Daily Mirror) வெளியாகியுள்ள இந்தியாவின் வரைபடங்கள். எதிர்வரும் ஆண்டுகளில் பாகிஸ்தானின் துணையுடன் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தால் இந்தியா எப்படி உருமாறும் என்கிற இந்த படங்கள் வெறும் கற்பனை மட்டும் அல்ல – அவை நிஜத்தில் நடக்க சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன. சுயநலமான அரசியல் வாதிகள், அவர்களின் நேர்மையில்லாத அரசாங்கம் என்கிற இந்த சூழ்நிலை அந்நிய சக்திகளுக்கு நிறையவே ஊக்கம் கொடுத்து வருகின்றன.

இதைத்தான் அந்த கட்டுரை, “சுதந்திரம் கிடைத்தபின்பு, தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு மந்திரி பதவிகளை அள்ளிக்கொடுப்பது; தகுதி இல்லாவிடினும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை முக்கியப் பதவிகளில் அமர்த்துவது, அரசியல் சட்டத்தை அவ்வப்போது தங்கள் இஷ்டம்போல் மாற்றுவது, ஒரு சிலரைத் திருப்திபடுத்துவதற்காகத் தேசத்தின் நலனைப் புறக்கணிப்பது, தங்கள் கோழைத்தனத்தை மறைப்பதற்காக அவ்வப்போது சாதுர்யமாக அறிக்கைகள் விடுவது, நாட்டு நலனின் முக்கியக் காவலர்களான பத்திரிகைகளைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்வது என்று காலம் காலமாக நம் அரசியல் கட்சிகள் – அதிலும் முக்கியமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்ததன் விளைவைத்தான் இன்று இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.” என்று மிகச்சரியாக குறிப்பிடுகிறது.

இது போன்ற ஒரு சூழல் நமக்கு புராணங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு அரக்கன், மக்களை கொடுமைப் படுத்தி அடக்குவதும், அதற்காக கடவுள் ஒரு அவதாரமெடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவதும் நமது நூல்களில் காணப்படும் ஒன்றுதான். கண்ணனே, யுகந்தோறும் தீமை மலியும்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட மறுபடி அவதரிப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறான். இந்த தேசத்தைக் தீய சக்திகளிடமிருந்து காக்க கண்ணனின் அவதாரமாக ஒரு தேச பக்தன் கிடைக்க மாட்டானா என்று அந்த குமுதம் கட்டுரை எழுப்புகிற கேள்வி மிக முக்கியமானது.

ஊடகங்களும், கல்வி முறையும், அரசியல் கடந்த பல ஆண்டுகளாக எழுப்பியுள்ள இந்த மேக மூட்டத்தை மீறி இந்துக்கள் உண்மையை கண்டுகொள்ள வேண்டிய தருணம் இது.

15 Replies to “குமுதம் கட்டுரை”

 1. Kumudham Jothidam is very good.Its editor Sri AM.Rajagopal is not only an able astrologer but also a fiery hindu.I request all to buy this on Wednesdays.

 2. i am a regular reader of kumudam jothidam and kumudam bakthi, if you read A.M.Rajagopal’s editorials and articles you will come to know how much he is worried about the state of the country, hinduism and how much he elaborates on preserving temples , a must read for all tamil hindu followers

 3. ஐயா,

  குமுதம் கட்டுரையை படிக்க இயலவில்லை. லாகின் கேட்கிறது. நீங்கள் கொடுத்த சுட்டியில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை. உங்கள் கட்டுரையில் நீங்கள் சொல்லும் பொருள்கள் குமுதம்-ஜோதிடத்தில் வந்ததா, உங்கள் கருத்தா என்று விளங்கவில்லை. உங்கள் கட்டுரையில் எது குமுதம்-ஜோதிடம் கருத்துக்கள் எது சுயமாக எழுதியது என்று குழப்பமாய் இருக்கிறது.

  நன்றி

  ஜயராமன்

 4. பெரியவர் ராஜகோபாலன் அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள். தாய் நாட்டையும், இந்து தர்மத்தையும் உயிரினும் மேலாய் நேசிக்கும் அவரைபோன்ற பெரியவர்கள்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டி. பாரதத்தாயின் மீது படிந்துள்ள இருள் விலகுவதாக….

  சுற்றி நில்லாதே பகையே போ துள்ளி வருகுது வேல்.. என்ற பாரதியாரின் வரிகள் மெய்யாக வேண்டும்..

  ஸ்ரீதர்

 5. Kumudam is more popular than Kumudham Jodhidam. right ?

  How many people read Kumudham Jodhidam ? any idea ?

  Why not this gentle man right one article in Kumudham atleast once in a month ?

 6. துக்ளக்கில், அத்வானியின் “என் தேசம், என் வாழ்க்கை” புத்தகத்திலிருந்து சில பகுதிகள் தொடராக வர ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் துக்ளக் வாசகர்களுக்கு நிறைய தகவல்கள் அறிந்துக் கொள்ள நல்ல வாய்ப்பு !

 7. /// It is very simple to register with kumudam, and it is free and you can access all the kumudam publications magazines. ///

  திரு. ராம்குமார் ஐயா,

  தகவலுக்கு நன்றி. ஆயினும், குமுதத்தில் பதிய விருப்பமில்லை.

  சுட்டி கொடுக்கப்படும்போது பதிவு தேவைப்படும் சுட்டிகளை இயன்றவரை தவிர்ப்பதும், தவிர்க்க முடியாதபோது “பதிவு தேவை” என்று எச்சரிப்பதும் இணைய நல்வழக்காக அறியப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

  கட்டுரையில் ஆசிரியரின் கருத்தையும், குமுதத்தின் கருத்தையும் பிரித்து அறிவதில் எனக்கு இருக்கும் குழப்ப்த்திற்கான தீர்வு நீங்கள் தரவில்லை.

  நன்றி

  ஜயராமன்

 8. ********8

  அகண்ட பாரதமாக இருந்த இந்த தேசம், துண்டாடப்பட்டு அடையாளம் இழந்து நிற்கிறது.

  இந்துக்களின், வேத, தர்ம சாத்திர, புராண, இதிகாச மொழியான சமஸ்க்ருதத்துக்கு புகழ் பெற்ற இலக்கண நூலை எழுதிய பாணினி இன்றைய ஆப்கனிஸ்தானில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சங்கரரும், ராமானுஜரும் தமது முக்கிய ஆன்மீக உரைகளை எழுத துவங்கியது நமது காஷ்மீரத்தில் தான் என்பது எத்தனை பேர் அறிவர்? காஷ்மீர ராஜ வம்ச வரலாற்றை பற்றி கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்கிற நூலை இன்றைக்கு காஷ்மீரில் அறிந்தவர்கள் ஓரிருவராவது மிச்சம் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்

  *******************
  இது தான் குமுதத்தில் வந்தது, நான் ஏன் சொன்னேன் என்றால் அந்த கட்டுரை போல நீங்கள் வேறு பல கட்டுரைகளை அங்கே நீங்கள் படிக்கலாம் என்பதற்காக தான். எல்லா கட்டுரைகள் மீதும் சுட்டிகள் வராது.

 9. All opinions expressed in articles unless explicitly stated would only belong to the author – in this case, Srikanth. In this article, it is clearly stated which part of the content is from Kumudam Jothidam as follows:

  //
  இதைத்தான் அந்த கட்டுரை, “சுதந்திரம் கிடைத்தபின்பு, தங்களுக்குப்
  பிடித்தமானவர்களுக்கு மந்திரி பதவிகளை அள்ளிக்கொடுப்பது; தகுதி
  இல்லாவிடினும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை முக்கியப் பதவிகளில் அமர்த்துவது, அரசியல் சட்டத்தை அவ்வப்போது தங்கள் இஷ்டம்போல் மாற்றுவது, ஒரு சிலரைத் திருப்திபடுத்துவதற்காகத் தேசத்தின் நலனைப் புறக்கணிப்பது, தங்கள் கோழைத்தனத்தை மறைப்பதற்காக அவ்வப்போது சாதுர்யமாக
  அறிக்கைகள் விடுவது, நாட்டு நலனின் முக்கியக் காவலர்களான பத்திரிகைகளைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்வது என்று காலம் காலமாக நம் அரசியல் கட்சிகள் – அதிலும் முக்கியமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்ததன் விளைவைத்தான் இன்று இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.” என்று மிகச்சரியாக குறிப்பிடுகிறது.
  //

  The rest are all opinions of Srikanth.

  TamilHindu.com Editor

 10. Regarding Kumudam or any popular tamil magazine one should be conscious of the compulsions of trade.
  Some establishments have two faces-while kumudam jothidam (a.m.r) may breathe fire for the hindu cause, kumudam reporter acts like the mouthpiece of the anti indian outfit LTTE.
  Decades back Aananda Vikatan would be a strong congress supporter while Thuglak (owned by the vikatan – later Cho bought it) will dish out satirical soups against the same party.

  Media owners do not have ideaology. Consistency of viewpoints is a rarity. The latest is Nakkeeran. Nakkeeran is known for strong anti hindu stories but they do have a religious magazine. My point is we have to live with the mainstream media but should be conscious of their intent. AMR and Cho are not guilty on this count. The problem lies with the ownership.

 11. Hello All

  I am Govindarajan VS.I am part of Bharati Tamil Sangam.
  I am impressed by this site and article.
  Some times we may have “Agree to Disagree” mentality.
  We have to develop certain qualities in us and see how well we can utilize good of all political Views.
  Politics and Political Ideologies are an art.

  We need to study history as how

  ( 1 ) Britain was able to go and establish in a lot of countries and failed in Russia,China and North and South America

  ( 2 ) Mughals/Arabs were able to establish easter than India till Indonesia and Malaysia but had tough fights from Indian Hindu rulers like Marathas, Vijayanagar,Travancore and Nayaks.

  ( 3 ) When going from Monarchy to Democracy what should
  ( a ) Political parties focus ?
  ( b ) Government focus ??
  ( c ) Corporate and Intelligence focus on ??
  and
  ( d ) People and Kids focus on ??

  People can give their thoughts and we can discuss

  Govindarajan VS

 12. AMR does a great work on preservation on ancient culture.
  We need to work to develop a strong cultural presentation and integration of social organizations to take the culture to the next stage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *