போகப் போகத் தெரியும் – 1

சந்திராவும் அபயாவும்

மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழை எழுதியவர் குமரகுருபரர். இவர் குருநாதரைத் தேடிப் பல இடங்களில் அலைந்தார். இறுதியில் தருமபுர ஆதீனத்துக்கு வந்தார். மயிலாடு துறையைக் கடந்து குருநாதர் மாசிலாமணி தேசிகர் வாழும் தருமபுரி மண்ணை மிதித்த உடனேயே அவருடைய மனதிலிருந்த கேள்விகள் அகன்றன.

இந்தத் தகவலை

ஊரிற் குறுகினேன்; ஓர் மாத்திரையளவு
பேரிற் குறுகினேன் பின்

பண்டார மும்மணிக் கோவையில் அவரே எழுதினார். முதல் வரியில் வரும் குறுகினேன் என்பது அவ்வூரைச் சேர்ந்தேன் என்பதைக் குறிக்க. இரண்டாவது வரியில் வரும் ‘குறுகினேன்’ சொல்வது குறைந்தது என்பதை. சீவனாக இருந்த தான் ஒரு மாத்திரை குறைந்து சிவனாக ஆனேன் என்கிறார் குமரகுருபரர்.

சில சன்னிதிகளை அடைந்த உடனேயே கேள்விகள் புசுக்கென்று காணாமல் போய்விடும். ஆன்மிக ஆற்றலின் விளைவு அது.

நமக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. விஷயத்தை விலாவாரியாகச் சொன்னால்தான் ஓரளவாவது போய்ச் சேரும். ஆகவே மின்வெளிச் சிந்தனைகளாக வெளிப்படும் எனது கருத்தாக்கங்கள் போகப் போகத் தெரியும்…

இனி தினமலரிலிருந்து ஒரு செய்தி…

Chandra, Rajapalayam MLAராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.யான சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் சந்திரா வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதியில் சந்திரா போட்டியிட முடியாது. ஆதி திராவிடர் எனப் பொய்கூறி அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய பெயர் குளோரி சந்திரா. அவருடைய பள்ளிச் சான்றிதழில் அவர் கிறிஸ்தவர் என்று கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ முறைப்படிதான் சந்திராவுக்கும் அவரது கணவர் சூசை மாணிக்கத்துக்கும் திருமணம் நடந்தது. எனவே இந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை என்பது மனுவின் சாரம்.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பன் சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்தார். (பார்க்க: தினமலர், 03 டிசம்பர் 2008).

கிறிஸ்தவர்கள் செய்யும் அண்ட மோசடி ஆகாச மோசடிகளில் இதுவும் ஒன்று. அப்பத்தைப் பங்கிடவும் அவ்வப்போது ஜெபிக்கவும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். சட்டத்தை வளைக்கவும் சாமானியர்களை ஏமாற்றவும் ஹிந்துவாகப் பதிவு செய்துகொள்வார்கள். பாரத தேசத்தின் மீது சில ஒட்டடைகள் படிந்துள்ளன. சிலந்திகள் சிலவும் சேர்ந்து இழுத்துப் பார்க்கின்றன. சுதந்திர தேவியின் இருப்பிடத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.

சில கிறிஸ்தவ மேய்ப்பர்கள் பகலில் மட்டும் பத்தினி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். என்னடா, மதத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசலாமா என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்காக சேரநாட்டிலிருந்து இதோ ஒரு செய்தி.

Sister Abhaya murdered by a bishopகத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த அபயா என்ற கன்னிகாஸ்திரீ 1992ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொலை செய்யப்பட்டார். ஒரு பாதிரியாருடன் வேறொரு கன்னிகாஸ்திரீ உறவுகொள்வதை அபயா பார்த்துவிட்டதால், அவர் தீர்த்துக் கட்டப்பட்டார் என்று சொல்லப் பட்டது. போலீஸ் விசாரணைக்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஒத்துழைப்புத் தராததால் பொதுமக்களிடையே எதிர்ப்பு உருவானது. பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு, 16 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த வழக்கில் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ரகயில் என்ற பாதிரியார்களும் செஃபி என்ற கன்னிகாஸ்திரீயும் CBI போலீசாரால் கோட்டயத்தில் கைது செய்யப்பட்டனர்.

கேரளத்தைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கும் செய்தி இது. ‘பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து’ என்ற சொலவடையை ‘பாவத்தையும் மன்னிப்பையும் பக்கத்தில் வைத்து’ என்று மாற்றிக் கொள்ளலாம்.

நம்முடைய அழகையும் ஐஸ்வர்த்தையும் திருச்சபை கடத்திக் கொண்டு போகிறதே, உயிரோடிருந்தும் நாம் ஊமையாகிவிட்டோமே என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு வருகிறது ஒரு சேதி, அடுத்த தவணையில்…

மேற்கோள் மேடை:

“ஈழத் தமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வெஞ்சிறையை ஏற்பதாகச் சொல்லும் வைகோ ஒருமுறையாவது சேரித் தமிழர்களுக்காகச் சிறை சென்றதுண்டா?”

– தலித் முரசு, திங்களிதழ், தலையங்கம்

10 Replies to “போகப் போகத் தெரியும் – 1”

 1. அபயாவை கோடரியால் வெட்டிப்போட்ட கிருத்துவ பாதிரிகள் அந்த யூதமகனின் பிரதிநிதிகள்தானே! கிருத்துவம் ஒரு அசாதாரணமான மனம் பிறழ்ச்சியை மனிதர்களிடம் ஏற்படுத்துகிறதோ! ஆனால், இது போன்ற வக்கிரங்கள் இந்து மத ஆன்மீக போர்வையில் உலவும் சில புல்லுருவிகளிடமும் உண்டு என்று எதிர்கேள்வி எழுப்புவர்களுக்காக – இந்து மதத்தில் ஆன்மீக சாமியார்கள் திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, காக்கப்படுவதில்லை. இறைவனின் பிரதிநிதியாக இயக்கப்படுவதில்லை. மெய்ப்பொருள் நாயனார் போல இறை உடைக்கு மதிப்பு கொடுக்கப்படுவதால் அதை உபயோகப்படுத்தும் கயவர்கள்தாம் இந்து போலி சாமியார்கள். அதை நாம் அத்தாட்சி பெற்ற கத்தோலிக்க பாதிரிகளோடு கம்பேர் செய்ய முடியாது. கத்தோலிக்க பாதிரி கயவர்கள் புரையோடிப்போன ஒரு ஆதிக்கசக்தியின் அறிகுறி.

  தங்கள் கட்டுரை மிகவும் கிண்டலாக இருந்தது. ரசித்தேன்.

  நன்றி

  ஜயராமன்

 2. அன்புள்ள சுப்பு,

  கட்டுரைத்தொடர் அற்புதமாக ஆரம்பித்துள்ளது..வாழ்த்துக்கள்..
  இந்த தேசத்தில் நாத்திகமும்,கிறித்தவமும், இஸ்லாமும் வியாபாரத் தந்திரங்கள்..

  மகேஷ்.

 3. It is good that Hindu society is waking up to the danger of these abrahamic cults, though very slowly.

  Your site is doing a great service to mankind. Please continue this noble service. If there is anyway we can send money to you, please let me know. I have given my email id in registration.

 4. அன்புள்ள சுப்பு!

  நல்ல ஆரம்பம். தேவையான பணி. விவரங்களை இன்னும் முழுமையாகக் கொடுக்கவும்

 5. இஸ்லாமிய நாடுகள் எண்ணெயால் பெற்ற அபரிமிதமான செல்வத்தை கொண்டு உலகெங்கும் புனித போர் நடத்துவதற்காக கோடிகணக்கில் தீவிரவாதிகளை பயிற்சி அளிப்பதற்கும் நவீன கொடிய ஆயுத தளவாடங்களை வாங்குவதற்கும் மதத்தை பரப்புவதற்கும்,இந்தியாவில் ஹவாலா பண பரிமாற்றம் செய்வதற்கும்,இந்தியாவில் புழங்குவதற்கு,கள்ள ருபாய் நோட்டுகளை அச்சிட்டு ,விநியோகிப்பதற்கும்,இந்தியாவுடன் நட்பு நாடுகள் போல் நடந்துகொண்டு அனைத்து தீவிர வாத செயல்கள் அரங்கேற்றி நாசத்தை விளவிப்பதர்க்கும்தான் அந்த பணம் பயன்படுகின்றது.இந்தியாவில் கொடும் செயல்களை அரங்கேற்றிவிட்டு தப்பிஓடிய குற்றவாளிகளுக்கு புகலிடமும் தருவது அவர்களே.அது போக அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுகொண்டு லட்சகணக்கான தம்முடைய மக்களையே போரில் பலியிடுவதர்க்கும்தான் அந்த செல்வம் பயன்படுகிறது.உலக மக்களிடையே சகோதரத்துவத்தை போதித்த இஸ்லாம் இன்று அதை தழுவுபவர்களும் அமைதியாக இல்லை.அவர்களால் உலக மக்களும் அமைதியாக வாழ முடிய வில்லை என்பதே உண்மை.

 6. Dear hindu brothers pls dont say all christians fathers are doing as u say. We can find people those who not following their religion lot. By seeing that people dont come to the conclusion about christianity.

 7. The tricks of christian in propagation of their religion is very fantastic and cunning. At Chennai padappai a nair man himself claiming as Adidravida he joined in puratchi bharatham movement to attract local Schedule cast people. As if he is doing some service, he is teaching christianity and also exposed himself as a pastor. Actually he is missionary agent in the attire of social service man. I could not understand how he obtained Adidravida, as he is a son of Nair man. that pastor is now 51 years and he is acting as pastor as well a active member of Puratchi Bharatham. it is realy a trick to attract the Schedule caste people to Christianity. He is protecting his brother not to visit his house to see his mother because if his brother visits his house automatically his village people will doubt about his caste. We heard conversion to religion, but here conversion to caste. Such dangerous tricky pastors should be exposed or the poor ignorant people will fall as prey to conversion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *