போன மாதம் ஒருநாள் ஒரு நண்பர் என் வீட்டுக்கு வந்தார். இந்துக்களை மதம் மாற்றப் பிற மதத்தினர் என்னென்ன அக்கிரமங்களைச் செய்கிறார்கள் என்று பலமுறை அவரிடம் நான் பேசியதுண்டு. நான் ஏதோ செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்று சொன்னதுபோல அக்கறையில்லாத முகத்தோடு கேட்டுக்கொண்டு போவார். சில சமயம் அவருக்கு எரிச்சல்கூட வரும். நான் சொல்பவற்றை அவர் நம்பியதில்லை அல்லது அலுப்பான விஷயம் என்று கருதினார். நான் பேசிய பிற அமெரிக்கத் தமிழர்களும் இந்த மனப்பான்மைக்கு விலக்கல்ல.
“உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும் – ஊரில் நடந்தது” என்ற பீடிகையுடன் தொடங்கினார் அவர்.
“இந்தியா சென்றிருந்தபோது பள்ளி நண்பர்களுடன் ஒரு ‘கெட்-டுகெதர் பார்ட்டி’ வைத்தோம். அவர்களில் ராஜமாணிக்கம், பொன்னுசாமி, கிரீஷ், தண்டபாணி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்கள். பள்ளி நாட்களில் நாங்கள் நால்வரும் ஒரு குழுவாகவே திரிவோம். திருட்டு சிகரெட்டிலிருந்து சைக்கிளில் ஒரு காலூன்றி ஸ்டைலாக சைட் அடித்த கதைவரை, நெருங்கிய பள்ளி நண்பர்கள் சேர்ந்தால் என்னென்ன விஷயங்கள் வெளிவருமோ அத்தனையையும் நினைவுபடுத்திப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். பள்ளி நாட்களில் கலகலப்பாகப் பேசி எல்லாரையும் கலாய்ப்பவன் தண்டபாணி. ஆனால் அன்று அவன் மட்டும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தான்.
“அவன் மனது சரியில்லாமல் இருந்ததை என்னால் உணர முடிந்தது. ‘என்ன இருந்தாலும் அவனே சொல்லட்டும்’ என்று நான் காத்திருக்க, அவனோ திடீரென எழுந்து கொண்டான். “ஊருக்குப் போகணும்டா, கொஞ்சம் வேலையிருக்கு, அப்புறம் பாக்கலாம்” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான். “என்னடா பிரச்சனை இவனுக்கு” என்றேன் நண்பர்களிடம். ”அவன் திருமண வாழ்வில் தகராறு என்று கேள்விப்பட்டோம்” என்றார்கள். அதற்கு மேல் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. தண்டபாணி மிகவும் ஜாலியானவன்; சட்டென கோபப்படமாட்டான்; தனிப்பட்ட முறையில் பிறருக்கு உதவும் குணம் கொண்ட நல்லவன் என்றுதான் எங்களுக்குத்தெரியும். ‘இப்படிப்பட்டவன் வீட்டில் பிரச்சனையா’ என்று கஷ்டமாக இருந்தது. மிகவும் நெருங்கிய நண்பன் வேறு. “இதனை இப்படியே விட வேண்டாம், அவன் வீட்டிற்கே போய் என்னவென்று பேசிப் பார்ப்போம்” என்றேன்.
சிறிது நேரம் விவாதித்த பின் மூவருமே ஒன்றாக அவன் கிராமத்துக்குப் போய் அவனைச் சந்தித்து பேசுவது, தேவையானால் ஆத்ம நண்பர்கள் என்ற முறையில் அறிவுரை சொல்வது என்று தீர்மானித்தோம். முன்தகவல் சொன்னால் அவன் ஏதாவது சால்ஜாப்பு சொல்லித் தவிர்க்க முயலக்கூடும் என்பதால், அறிவிக்காமல் நேராக அங்கே சென்றுவிடுவது என்று தீர்மானித்தோம்.
பெரிய ஊர் என்று சொல்ல முடியாது. பல குடியிருப்புகள் அடங்கிய சிற்றூர். கதவைத் திறந்து வரவேற்றது தண்டபாணியின் மனைவி. தண்டபாணி வெளியில் சென்றிருந்தான். சிறிய சுத்தமான வீடு. பதின்ம வயதில் ஒரு பெண் குழந்தை மட்டும். உபசாரமாகப் பேச ஆரம்பித்த நண்பனின் மனைவி சில நிமிடங்களிலேயே வேற்றாட்கள் என்று பாராமல் எங்கள் முன் குமுறி அழ ஆரம்பித்தார். “என்னைச் சந்தேகப்படுகிறார், திட்டுகிறார், அடிக்கிறார், நிம்மதியே இல்லை, வயதுக்கு வந்த பெண் குழந்தை வேறு, நான் என்ன செய்வேன்!” என்று அழுதார்.
நாங்கள் திகைத்து நின்றோம். இது நாங்கள் அறிந்த தண்டபாணியே கிடையாது. எங்கள் பள்ளிநண்பன் தண்டபாணி கலகலப்பானவன். பிறர் கஷ்டம் பொறுக்காதவன்.
எங்களுடன் வந்திருந்த கிரீஷ் கொஞ்சம் தயக்கத்துடன் “தண்டபாணிக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா?” என்று கேட்டான். இல்லையென்று பதில் வந்தது. எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மூன்றாம் நபர்களான எங்களை நம்பித் தன் கணவன் பற்றிய குறைகளைக் கண்ணீராய்க் கொட்டி நிற்கும் அந்தச் சகோதரியின் நிலை பரிதாபமாக இருந்ததது. உள்ளுக்குள்ளோ ஒவ்வொருவருக்கும் கோபம் தலைக்கேறி விட்டிருந்தது. ஒரு அழகான சித்திரமாக இருக்க வேண்டிய குடும்பத்தை இப்படிச் சிதைக்கிறானே என்று குமுறிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம்.
சில மணிநேரங்களில் தண்டபாணி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். மகிழ்ச்சியுடனும் கொஞ்சம் தயக்கத்துடனும் எங்களுடன் பேசத்தொடங்க நாங்கள் கொஞ்சம் வெளியில் நடக்கலாமா என்று சொல்லி வெளியே கூட்டிச் சென்றோம். தனியாக வயற்காட்டுப் பகுதிக்கு அழைத்துப் போய் கடுமையாகச் சாடத் துவங்கினோம். “அதெல்லாம் ஒண்ணுமில்லடா” என்று மழுப்பலாகப் பேசினான் தண்டபாணி. எங்கள் குழுவில் பொன்னுசாமி கொஞ்சம் தாட்டியானவன். அவன் கோபப்பட்டால் அது கவனிக்கப்படும். ஒரு கட்டத்தில் அவன் தண்டபாணியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, அடிக்கப்போக, நாங்கள் இடையில் புகுந்து விலக்கினோம். “இவன் ஃப்ரண்ட்ஷிப்பே வேணாண்டா” என்று கத்தினான். அதுவரை அதிகம் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த தண்டபாணி “முழுக்கதையையும் கேளுங்கடா” என்று மெதுவாக சொல்லத் தொடங்கினான்:
சில வருடங்களாக தண்டபாணியின் ஊர்ப்பகுதியில் கிறித்துவ மதமாற்றக் குழுக்கள் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துள்ளன. அப்போதிருந்த பாஸ்டரும் அவருடனான குழுக்களும் இவனைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் பலவற்றையும் கொத்துக் கொத்தாக கிறித்துவ மதத்திற்கு மாற்றியிருக்கின்றனர். இவனது குடியிருப்பு ஏரியாவில் உள்ள குடும்பங்கள் மட்டும் மதம் மாறாமல் கட்டுப்பாடாக இருந்திருக்கின்றன. இவன் மதமாற்றச் செயல்களைக் கடுமையாக எதிர்த்திருக்கிறான். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவனுக்கு அதிகம், ஆதலால் இவனது குடியிருப்பும் இவனுக்கு உறுதுணையாகவே இருந்திருக்கிறது. இவனது குடியிருப்பினுள் பாஸ்டர் மதமாற்றம் செய்ய முனைகையில் அவரை எதிர்த்துப் பேசியிருக்கிறான்.
இந்நிலையில் பழைய பாஸ்டர் மாறி புதியவர் வந்திருக்கிறார் முந்தையவரை விட இளைய வயதினர் இவர். மதம் மாற்றுவதில் அவரைவிட மிகத்தீவிரமானவர். இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று பழிப்பதும், ஏசுவை வணங்காவிட்டால் நரகத்திற்குப் போவீர்கள் என்று பெண்டு பிள்ளைகள் இருக்கும் வீட்டில் வந்து துண்டு நோட்டீஸ் தருவதும், கிறித்துவத்திற்கு மாறினால் ஏற்றமிகு வாழ்க்கை கிடைக்கும் என்று ஆசை காட்டுவதும் பலமுறை இவரது குடியிருப்புக்குள் வந்து பிரசாரம் செய்திருக்கிறார். தண்டபாணி தொடர்ந்து இதைத் தனிமனிதனாக எதிர்க்க பாஸ்டரோ அவன் வேலைக்குச் சென்ற பின் வந்து அதே பிரசாரங்களை இன்னும் அதிகமாகச் செய்ய, நிலைமை தீவிரம் ஆகியிருக்கிறது.
இந்நிலையில் ஒரு கல்யாணத்தில் வைத்து அந்த பாஸ்டர் தண்டபாணியின் மனைவியிடம் வந்து அன்பாகப் பேசத் தொடங்கியிருக்கிறார். இவனது குடும்பத்திற்குச் சில உதவிகளும் வலிந்து வந்து செய்யத் தொடங்கியிருக்கிறார். இது தண்டபாணிக்குத் தெரியவந்தபோது வீட்டில் பெரிய சண்டை வெடித்திருக்கிறது. மனைவியோ “பாஸ்டரிடம் பேசாதே” என்ற தண்டபாணியின் சொல்லையும் மீறித் தன் மகளையும் கூட அழைத்துக் கொண்டு சர்ச்சுக்குப் போகத் தொடங்கியிருக்கிறார். மீண்டும் ஒரு கல்யாணத்தில் பாஸ்டர் வர அவருடன் தண்டபாணியின் மனைவி பேச, அதைக்கண்ட அவன் கோபத்தில் அங்கேயே வைத்து மனைவியை அறைய ரசாபாசமாகி இருக்கிறது.
அதன் பின் வீட்டில் பேச்சு வார்த்தை குறைந்து போன நிலையில்தான் எங்கள் ’கெட்-டுகெதர்’ பார்ட்டி நடந்திருக்கிறது. . தண்டபாணி சொன்னான்: “என் மகளை என்னிடமிருந்து பிரிக்கணும்னு அந்த ஃபாதரோட சேர்ந்துகிட்டு இவ ப்ளான் பண்றாடா, என் குடும்பத்துலயே ஒரு ஆள மதம் மாத்திட்டா இந்தக் குடியிருப்பையே மாத்திரலாம்னு அந்த ஃபாதர் கணக்கு போட்டு இவளுக்கு என் சம்பளத்த மீறிச் செலவுக்கு பணம் கொடுக்கற மாதிரில்லாம் செஞ்சிருக்காரு; ஒவ்வொரு ஏரியாவுலயும் முக்கியமான ஒரு ஆள மதம் மாற்றிதான் இந்த வேலையையே துவங்குவாங்க இவங்க; இப்ப என் வீட்டுலயே கைய வெச்சிருக்காங்க, என் கொழந்தையும் என்ன விட்டுப் போயிரும்போல இருக்குடா” என்று கதறி அழத்தொடங்கினான். நாங்கள் அதிர்ந்து போய் நின்றோம்.
கொஞ்ச நேரம் கழித்து மெதுவாக அவனிடம் “உன் மனைவியை உண்மையிலேயே நீ சந்தேகப்படுறயா” என்று கேட்டோம். அவன் “இல்லவே இல்லை, ஆனால் கடைசி வழியா அப்படி சொன்னாலாவது அந்த ஆள்கூட பேசறத நிறுத்துவாளான்னு பாக்கறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்றான். “முட்டாள், அதுக்காக இப்படியா பேசுவது” என்று திட்டினான் பொன்னுசாமி. “சர்ர்சுக்குப் போகாதன்னு சொல்ற நீ, ஆனா உன் பேச்சை உன் மனைவி ஏன் கேட்க மாடேங்கறா” என்று கேட்டேன். “என் சம்பளத்தில் குடும்பத்துக்கு வேணும்னு அவள் நினைக்கிற எல்லாத்தையும் என்னால வாங்கித்தர முடியல (குழந்தைக்கு படிக்க டெஸ்க், சில புதுப் புத்தகங்கள், சில ஆஸ்பத்திரி செலவுகள் இப்படி சிறு சிறு விஷயங்கள்) சர்ச்சுக்குப் போனா நெறய விஷயம் இந்த மாதிரி ஃப்ரீயா கெடைக்கும்னு அவ நெனைக்கிறா, அத அந்த ஃபாதர் உபயோகப்படுத்தி என் குடும்பத்தையே சிதைக்கப் பாக்கறாரு, எனக்கு என்ன பண்றதுனு தெரியலடா, என் கொழந்தையையாவது மீட்டுக்க முடியுமானு பாக்கறேன்” என்று இயலாமையுடன் தரையை வெறித்துக்கொண்டே அவன் சொன்னான்.
நகரத்தில் வளர்ந்த கிரீஷ் ‘இப்படியெல்லாம் கூட செய்வாங்களா’ங்கற மாதிரி கேட்க ராஜமாணிக்கம் உடனே அவனை முறைத்தான். “சிலபேர் சொல்றத கேட்டிருக்கேன், ஆனால் நம்பினதில்லை” என்றான் கிரீஷ். ராஜமாணிக்கம் பல்லைக் கடித்துக்கொண்டே “ஒனக்குத் தெரியாது, எல்லா எடத்துலயும் இந்த மாதிரி இப்ப நெறயா நடக்குது” என்றான்.
இந்த இடத்தில் என் நண்பர் நிறுத்தினார். “அமெரிக்காவுல பேசுறப்ப நீங்க சொன்ன விஷயங்க எல்லாம் எந்த அளவுக்கு உண்மைனு முகத்தில அறஞ்சது மாதிரி அப்பப் புரிஞ்சுதுங்க” என்றார். “திருப்பித் திருப்பி மதமாற்ற கும்பல் பத்தியும் ஜோஷுவா ப்ராஜக்ட் பத்தியும் நீங்க சொன்ன விஷயங்கள ஃப்ரெண்ட்ஸுங்க கிட்ட அப்ப எடுத்துச் சொன்னேங்க” என்றார்.
பண்டைக் கலாசாரங்களையும், அவற்றின் வழிபாட்டு வாழ்வியலையும் சமூக, அரசியல் தளங்களில் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் மதமாற்றக் கிறித்துவ குழுக்களின் தொலைநோக்குத் திட்டம் குறித்து என் நண்பர் சொன்ன விஷயங்கள் கண்டு மற்ற நண்பர்களும் ‘ இதுக்குப்பின்னால இவ்வளவு இருக்கா, இத சும்மா விடக்கூடாது, ‘ என்று கொதித்திருக்கிறார்கள்.
தண்டபாணிகிட்ட “நீ கொஞ்ச நேரம் கழித்து வா” என்று சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குச் சென்றோம். அவனது மனைவியிடம் மெதுவாக நடந்ததைச் சொன்னோம். தண்டபாணி எங்களுக்குச் சொன்ன எந்த விஷயத்தையும் அவர் மறுக்கவில்லை. “மதம் மாறணும்ங்கற எண்ணமெல்லாம் இல்லைங்க” என்று தீர்மானமாகச் சொன்னார். “அவனுக்குப் பிடிக்காதுனு தெரிஞ்சும் ஏன் பாஸ்டர்கிட்ட பேசினீங்க, குடும்பம் நடத்த அவர் கிட்டபோய் ஏன் ஹெல்ப் வாங்கிக்கிட்டீங்க” என்றதற்கு “குழந்தைக்கு சின்ன சின்ன விஷயங்களக் கூட நம்மால வாங்கிக்கொடுக்க முடியலயேங்கற ஆதங்கத்துல செஞ்சுட்டேங்க, ஆனா பொது இடத்தில் வெச்சு அடிச்சது ரொம்ப அவமானமா போயிருச்சுங்க” என்றார். எங்களால் அவரது உணர்வையும் வலியையும் புரிந்து கொள்ள முடிந்தது. ‘வில் எங்கோ இருக்க அம்பு வந்து இங்கே அழுது கொண்டிருக்கிறது’ என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.
பொருளாதாரத்திலும் மன அளவிலும் வலுவிழந்து கிடக்கும் ஒருவரின் நலிந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு உதவிகள் செய்வதாக முன்வந்து, நைச்சியமாகக் கைக்குள் போட்டுக்கொண்டு, தனது ஒட்டுமொத்த மத மாற்றத் திட்டத்திற்கு அவரை உபயோகப்படுத்திக்கொள்ளும் வஞ்சகம் பற்றித் தெளிவாக அவரிடம் நிதானமாக எடுத்துச்சொன்னோம். பிறகு தண்டபாணி சொன்னதையும் எடுத்துச்சொன்னோம் “உங்கள்மேல் சந்தேகப்படவில்லை, இந்த பாஸ்டர் செய்யும் வேலையால் குடும்பம் சிதைந்து விடுமோ, உங்கள் ஒருவரால் இந்தப் பகுதியே கிறித்துவத்துக்கு மாற்றப்படுமோ என்று குமுறிக் கொண்டிருக்கிறான், அந்தக் கோபம்தான் உங்கள் மேல் திரும்பியிருக்கிறது” என்று பக்குவமாகச் சொன்னோம்.
சிறிது நேரத்தில் தண்டபாணி உள்ளே வந்தான். “இங்க வாம்மா” என்று தன் குழந்தையை அருகே அழைத்தான். மெதுவாக அதன் உச்சந்தலையில் முத்தமிட்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. அவனது மனைவி அப்படியே சரிந்து அவன் கால்களில் விழுந்தார். இதை எதிர்பார்க்காத அவன் சட்டென்று குனிந்து அவரைத் தொட்டு “ஸாரிம்மா” என்றான். நாங்கள் மெதுவாக வெளியே வந்தோம். இரவு நன்றாகக் கவிந்து சிலுசிலுவென்று காற்று அடித்துக்கொண்டிருந்தது.
அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு மீண்டும் சென்றபோது இறுக்கம் வெகுவாகக் குறைந்திருந்ததைக் காணமுடிந்தது. அவன் மனைவி எங்களை “வாங்கண்ணா” என்று சிரித்து வரவேற்றது இதமாக இருந்தது. முந்தின நாள் இல்லாத “ஓம்” என்ற ஸ்டிக்கர் நிலைக்கதவில் தெளிவாகத் தெரிந்தது. “இனி சர்ச்சுக்குச் செல்வதில்லை, அந்தப் பாஸ்டரிடம் பேசுவதில்லை” என அவனிடம் உறுதி கூறியிருப்பதாகச் சொன்னார். “என்ன வேண்டுமென்றாலும் எங்களிடம் கேளுங்கள், முடிந்தவரை குழந்தையின் கல்விச்செலவு, மருத்துவச்செலவு என்று எதற்கு வேண்டுமானாலும் உதவுகிறோம், உங்கள் முன்னோர்களெல்லாம் இதைவிடப் பல கொடுமையான காலகட்டங்களிலும் விட்டுக்கொடுத்து விடாமல் கட்டிக்காத்த நம் சாமியையும் நம்பிக்கைகளையும் காசுக்காக விட்டு விடாதீர்கள்” என்று அறிவுரை சொன்னோம். தண்டபாணியிடம் “மனைவியை அடிப்பது, பொது இடத்தில் கண்டிப்பது போன்ற வேலைகளைச்செய்யாதே” என்று கடுமையாகச் சொன்னோம். பஸ் ஏற்றிவிட வந்த அவனிடத்தில் மீண்டும் இதை வலியுறுத்தினோம்.
அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவிலிருக்கும் பிற மூன்று பேரும் மாதத்துக்கொரு முறை சென்று பார்த்துவருவது என்று முடிவு செய்தோம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது, இதுவரை ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று முடித்தார்.
சரியான சமயத்தில் எனது வார்த்தைகள் நண்பருக்கு நினைவுக்கு வந்ததே என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால், இப்படி லட்சக்கணக்கான சம்பவங்கள் இந்தியாவெங்கிலும் நடக்கின்றன, அதைக் குறித்து நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் வாட்டி எடுத்தது. பெரும்பாலான ‘செக்யூலர்’ மேதைகளுக்கு மட்டுமல்ல, சாதாரண இந்தியர்களுக்குக் கூடத் தாம் எப்படி ஒருவருக்கெதிராக மற்றவர் திருப்பப் படுகிறோம் என்கிற பிரக்ஞை கூட இருப்பதில்லை.
இதைப் படிக்கும் நீங்கள் விழித்தெழ வேண்டும். உங்களை ஒரு ‘போர்’ என்று மற்றவர் கருதினாலும் பரவாயில்லை, இதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள். ஏசு கூறியதை நினைவில் கொள்ளுங்கள்:
”யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.”
– லூக்கா 14:26, விவிலியம்
இந்த மாதிரி எத்தனை குடும்பங்களை மதம் மாற்றினார்களோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
முதலில் இயேசு என்று ஒருவர் இருந்தாரா என்பதுவே கேள்விக்குறியாய்
இருக்கும்போதே இப்படியென்றால்….
நம் ஜனங்களுக்கு நல்ல புத்தி அருளும்படி ஆண்டவனை வேண்டிக்கொள்ளும் போது நாமும் நம்மால் ஆனதை செய்யவேண்டும்.குறிப்பாக நமது மதத்தின் மேன்மைகளை எடுத்துச்சொல்லி இந்த தளத்தை விடாமல் படிக்க சொல்லலாம்.
இந்தியாவில் “அறுவடை”க்காக விளையாடும் கிறிஸ்துவப் பணம், கடந்த பத்து வருடங்களில் மேற்கத்திய நாடுகளில் இருந்து, குறிப்பாக அமேரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மத மாற்றத்திற்காக ஏழை-உதவி, கல்வி மற்றும் சுகாதாரம் என்கிற போர்வையில் வருவது பல மடங்கு உயர்ந்துள்ளது.
1999-2000 -ல் ரூ 4000 கோடியாக இருந்த நிதி வரவு தற்போது 2006-2007 ல் ரூ 12000 கோடியாக அதிகரித்துள்ளது.
சோனியா அரசு பதவி ஏற்றவுடன், பண வரத்து மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகம் அதிகம் நிதி பெரும் மாநிலமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரம், கர்நாடகம் இருக்கின்றன.
2002-ல் ரூ 775 கோடி பெற்ற தமிழகம் 2007-ல் ரூ 2200 கோடி பெற்றுள்ளது. அதேபோல் ஆந்திராவின் வரத்து ரூ 600 கோடியிலிருந்து ரூ 1200 கோடியாக உயர்ந்துள்ளது. ரூ 500 கோடி பெற்றுக்கொண்டிருந்த கர்நாடகம் தற்போது ரூ 1100 கோடி பெற்று வருகிறது.
கர்நாடகம் விழித்துக் கொண்டு விட்டது. மக்கள் நிலைமை மோசமாவதை உணர்ந்து பா ஜ க விற்கு வாக்களித்துஆட்சி மாற்றம் கொணர்ந்துள்ளனர். பா ஜ க அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கிறிஸ்துவ மிஷநரிகளையும், சர்ச்சுகளையும் கண்காணிக்கத் துவங்கியுள்ளது. அவைகளால் முன் போல் இப்போது “நரி” வேலைகளில் இறங்க முடியவில்லை. ஆனால் தமிழகமும், ஆந்திரமும் என்ன கதிக்கு ஆளாகப் போகின்றனவோ தெரியவில்லை.
தமிழக அளவில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, மதுரை மாவட்டங்கள் அதிக அளவில் கிறிஸ்துவ நிதி பெறுகின்றன. சென்னை ரூ 900 கோடியும், மற்ற மாவட்டங்கள் தலா ரூ 200 கோடிக்கு குறையாமலும் பெறுகின்றன.
தமிழகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் கிறிஸ்துவ இயக்கம் “வேர்ல்டு விஷன்” ஆகும். இந்த இயக்கத்தை எந்த வகையிலும் தமிழ் இந்துக்கள் ஆதரிக்கக் கூடாது. இது ஒரு என் ஜி ஒ வாக இருந்து கொண்டு, ஏழை மக்களின் மருத்துவத்திற்கும், அவர்கள் பிள்ளைகளின் கல்விக்கும் உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அவர்களை ஏமாற்றி மதம் மாற்றுவதைத் தொழிலாகக் கொண்டு இருக்கின்றது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு தெரிந்தே இவ்வளவு ஆயிரம் கோடி ரூபாய்கள் வருகிறதென்றால், தெரியாமல் எவ்வளவு வரும் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு வருகின்ற கோடிக்கணக்கான பணத்தில் போலி மதச்சார்பின்மை பேசி ஓட்டுப் பொறுக்கும் நம் அரசியல்வாதிகள் எவ்வளவு கமிஷன் பெற்றுக்கொண்டு கிறிஸ்துவ இயக்கங்களுக்கு காவடி தூக்குகிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ் இந்துக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களிடையே இந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் மற்ற இடங்களிலும் முக்கியமாக நம் கோவில் வாசல்களிலும் கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்யும் குள்ள நரிகளையும் மதமாற்றம் செய்ய முனைபவர்களையும் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும்.
தமிழ்செல்வன்.
கிறித்தவத்திற்கு மதம் மாற்றுவது என்பது அவர்களது இறைக்கடமையைப் போல. பணம் கொழிக்கும் தொழிலாகவும் இருப்பதால் அவசரம் அவசரமாகச் செய்து முடிக்கின்றனர். மேலும் மேலும் அவர்களது “முதலாளிகளிடமிருந்து” பணம் பெறுவதற்காக. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இந்த மதமாற்ற முயற்சிகளுக்கு கிட்டத்தட்ட 2500 கோடி புழங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியா ஒழிந்துபோவதில் பலருக்கு ஆசையிருக்கலாம். ஆனால் இங்கேயே இருந்துகொண்டு தேசத்துரோகம் செய்வபவர்களை இனம்காண வேண்டும்.
இந்து தர்மம் இவர்களைப் போன்ற கூலிக்கு மாரடிக்கும் கும்பல்களால் அழிந்துவிடாது என்பது திண்ணம். இவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதில் தரவேண்டும்.. உத்திரப்பிரதேச சகோதரர்கள் செய்ததுபோல இவர்கள் மதம் மாற்றியபின்பு மீண்டும் எல்லோரையும் தாய்மதத்திற்கு மதம் மாற்றிவிட்டால் இதுபோன்ற மதமாற்றங்கள் செய்வது குறையும். ஓட்டுக்காகச் சிறுபான்மையினரின் கால்களை நக்கும் அரசியல்வாதிகளால் இதுபோன்ற மதமாற்றங்களை நிறுத்த முடியாது. நாமே நமது சகோதரர்களை இதுபோன்ற மூளைச்சலவையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
“உங்களை ஒரு ‘போர்’ என்று மற்றவர் கருதினாலும் பரவாயில்லை, இதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள். ”
Very well said !
எங்கள் பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “ஊதர சங்கை ஊதிக் கொண்டே இரு. பாடற பாட்டை பாடிக் கொண்டே இரு. இன்னிக்கு இல்லைனாலும் என்னிக்காவது அது உறைக்கும். ‘ அட ! அவன் அன்னிக்கே சொன்னானே’ என்று தோனும்”.
சென்னையில்:
ஒரு தற்கொலை: ஒரு செய்தி, ஒரு கட்டுரை
https://nanavuhal.wordpress.com/2009/03/04/oru-seythi/
பணம் படைத்தவன் செய்வது எல்லாம் பாவம் என்பர் கம்யூனிஸ்ட்கள். ஆனால் மத மாற்ற சித்து விளையாட்டுகள் பற்றி வாய் திறக்கமாட்டார்கள். ஆனால் சமூக அமைதி பற்றி ஹிந்துகளுக்குத்தான் உபதேசிப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகளாவது மனசாட்சி உள்ளவர்களின் கண்களைத் திறக்கட்டும்
எதேச்சியாக உங்கள் வலைத்தளதுள் பிரவேசித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உங்களை போன்றே இந்து தர்மத்தை காக்க ஒரு சங்கத்தை சென்ற வருட விஜயதசமி நன்னானில் துவக்கினேன். எனது வலை தளத்தை படித்தால் உங்களக்கு புரியும். உங்கள் கருத்துக்களையும் எங்கள் தளத்தில் வரவேற்கின்றோம். விருப்பம் உள்ளவர்கள் அனுப்பலாம்.
தீய சக்திகள் ஒன்றாய் இருக்கையில், நல்லசக்தியான நாம் ஏன் தனித் தனியாய் போராட வேண்டும்.
உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ஈசன் உங்கள் முயற்சிக்கு வெற்றி தந்து பேரருள் புரியட்டும்.
வெங்கட்
Dear friends ,
Please inform these king of news thro e mail to your friends and relatives
Venkatraman,
What is your web site ? you have not mentioned that..
Good sensitive article
Thiru Raja.r.s
venkatraman website is linked in icon that is
https://www.sanadhanasevasathsangam.org/
உங்கள் சேவைக்கு நன்றி. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
முதன்முதலில் கல்வியை வியாபாரமாக மாற்றியவர்கள் இந்த மதம்மாற்றிக் கிருத்துவர்கள்தான்.
இந்துக்கள் நல்ல முறையில் கல்வி நிலையங்களை நடத்த முடியாதபோது, அப்பாவி பொதுமக்கள் என்னதான் செய்யமுடியும்?
கிராமங்களில் மதம் மாறியவர்களுக்கு சீட் தருகிறார்கள். நகரங்களில் நன்கொடை தருபவர்களுக்கு சீட் தருகிறார்கள்.
கிராமங்களில் ஆத்மாவை அறுவடை செய்கிறார்கள். நகரங்களில் அறுவடைக்குத் தேவையான கூலிப் பணத்தை வசூல் செய்கிறார்கள்.
எங்கள் உறவினர் பெண்ணை பள்ளியில் சேர்த்துக்கொள்ள மதம் மாற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அந்தப் பெண்ணை வேறு ஒரு சாதாரணமான அரசாங்கப் பள்ளியில் சேர்த்தோம். ஆனால், அந்தப் பெண் தன்னுடைய வாழ்க்கையை பெற்றோர்கள் கெடுத்துவிட்டதாகச் சொல்லி தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.
இந்துசமயம் புராதனமானது.புதுமையானது…ஏன் சமயம் மாறவேண்டும்..அவரவர் சமயத்தில் இருங்கோ…மனிசராய் இருங்கோ….!!!
ஐரோப்பாவில் தமிழர் பல கோவீல் உருவாக்கியுள்ளனர்….தமிழர் ஒற்றுமை ஓங்குக!!!!!!!
This is year 2009. What is it? There is ‘Before Christ’ and ‘After Christ’.
No question of if Jesus existed or not. He did exist.
I advise people not to get converted to another religion.
Religion does not take you to heaven.
It is the forgiveness of sin by God the creator, and Jesus is the only way to heaven as the bible says.
Jesus has to be God because he is the only one recorded in the History that he died and rose again.
He brought the dead alive, healed the blind, deaf, lame and dumb…
Siva,
Arent you ashamed to talk like this… that too after reading the article… its people like who have the bad attitude to convert…
“he is the only one recorded in the History that he died and rose again.”
The first moto of you such convertors are to rewrite the history…. so you dont have the rights to talk about it !!!!
feel ashamed at least once… if you are an Indian citizen…
கிறிஸ்தவம் என்பது ஒரு மதமே அல்ல
நன்றாக சிந்தித்துப் பாருங்கள்
மதம் என்பது என்ன சொல்ல வேண்டும்?
நீ உன் சுய அறிவைக் கொண்டு மனதை உள்முகமாகத் திருப்பி உண்மையைக் கண்டு பிடி. அப்படிக் கண்டால் அந்தப் பாதையில் செல்
எல்லோருக்குள்ளும் ஏன் எல்லா உயிர்களுக்குள்ளும் தெய்வீகத் தன்மை உள்ளது
உண்மையே பேசு
பேராசை கொள்ளாதே
மற்றவர்களை வஞ்சித்து வாழாதே.
ஆனால் கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள்?- நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பைபிளை மட்டுமே படி.ஏசு மட்டுமே கடவுள்.ஹிந்துக் கடவுளர்கள் சாத்தான்கள் .மனிதனுக்காகவே மற்ற உயிர்கள் படைக்கப் பட்டுள்ளன’ என்றெல்லாம் சொல்கிறார்கள் .
எனவே அது மதமாகாது
இது ஒரு தனியார் கம்பனி தனது பொருள்கள் மட்டுமே உயர்ந்தவை என்று சொல்வதைப் போலாகும்.
ஓகே . இயேசு இருந்தார் .பல போதனைகள் செய்தார் என்றே வைத்துக் கொள்வோம்
அதனால் என்ன?
அதை இவ்வளவு ஜரூராக, இவ்வளவு பெரும் பணம் செலவழித்து ,அதற்கு லட்சக் கணக்கில் ஆட்களை வைத்து உலகம் பூராவும் கிளிப் பிள்ளை போல் சொல்லி, அவர்களை மாற்றா விட்டால் என்ன வானம் இடிந்து கீழே விழுந்து விடுமா?
சொல்பவர்கள் ஏசு சொன்னதைக் கடைப் பிடித்து வாழ்ந்தாலே போதுமே
மற்றவர்கள் அவர்களைப் பார்த்து ஏசுவின் போதனையை புரிந்து கொள்வார்களே
இதற்கெல்லாம் மூன்று அடிப்படைக் காரணங்கள் உள்ளன
ஒன்று ‘நான் நினைப்பது போல்தான் நீயும் நினைக்க வேண்டும்’ என்று நினைப்பது.
இரண்டு ‘என்னுடைய சிந்தனைகள்,பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளே உயர்ந்தவை. உன்னது தாழ்வானது ‘என்று நினைப்பது.- இது தாழ்வு மனப்பான்மையால் வருவது
.உண்மையிலேயே உனது கோட்பாடுகளில் உயர்வு இருந்தால் நீ ஏன் கூப்பாடு போட வேண்டும்.மக்கள் தானாக தேடி வருவார்களே.
மூன்று முதலில் வெறும் தனியார் மற்றும் நிறுவனங்களிடம் இருந்த இந்த கோட்பாடுகள் இப்போது நாடுகளின் கையில் கருவிகளாக மாறி விட்டன
இது ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப் படுத்த உபயோகமாகிறது.
கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்ற வேலைகளுக்கு அடித்தளமே குடும்பங்களை உடைப்பதுதான்.
முதலில் குடும்பத்துடன் நட்பாக இருப்பது போல் நடிப்பார்கள்
அவர்களில் யாருக்கு என்ன குறை என்று கண்டறிவார்கள்.
அவர்களில் மனதளவில் மிக பலவீனமாக இருப்பவரை தேர்ந்தெடுத்து தங்கள்’வேலையை’ஆரம்பிப்பார்கள்
‘உங்களுக்காக நான் ஜெபம் செய்கிறேன்’ என்று ஆரம்பித்து,பைபிளைக் கொடுத்து,சர்ச்சுக்கு இட்டுச் சென்று ,கடைசியில் ஞான ஸ்நானம் வரை கொண்டு விட்டு விடுவார்கள்
அதுவரை மற்றவர்களுக்கு முழு உண்மையும் புரியாது
அனால் பாதிக்கப் பட்டவரின் நடத்தையில் மாறுபாட்டைப் பார்த்துக் குழம்பிக் கொண்டே இருப்பார்கள்
இதனால் குடும்பத்தில் எரிச்சல்,உரசல்,பிணக்குகள்,உறவுகள் பாதிப்பு என்று போய் கடைசியில் அவர்கள் எலியும் பூனையுமாய் ஆகி விடுவார்கள்.
மிகவும் கிராதகத் தனமான நடத்தை உள்ளவர்கள் இந்த மதம் மாற்றிகள்
அதனால் கிறிஸ்தவ மதமாற்றிகள் நண்பர்களாக ஆனாலும் அவர்களுக்கு அதிக இடம் கொடுக்கக் கூடாது.
கொடுத்தால் நம் குடும்பம் சின்னா பின்னமாக ஆகும் நிலை வரலாம்
வணக்கம்,
சகோதரர்களே,
துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று சொல்வது போல் மத மாற்றிக் காரர்களை கண்டால் அவர்களை விலக்கி வையுங்கள்.
ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன்.
எந்த ஒரு கிறிஸ்துவ நண்பராயிருப்பினும் அவர்களது உங்களுடனான அணுகுமுறையை மிகவும் கவனித்து பின் அவருடனான நட்பை தொடருங்கள். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று எதாவது ஒரு நபரைக் அழைத்து வந்து உங்களிடம் அறிமுகப் படுத்தினால் அவர்களை அனுமதிக்காதீர்கள். GOD BLESS YOU என்று உங்களின் தலை மீது கை வைத்து ஆசிர்வாதம் செய்ய விடாதீர்கள். காரணம்
அவ்வாறு வருபவர்கள் மனோதத்துவம் ஹிப்னாடிசம் போன்ற சில கலைகளை கற்றுக் கொண்டு வருபவர்கள். இது உண்மை.
மேலும் செய் வினை என்று சொல்லப் படும் சில சித்து வேலைகளைய்ம் அவர்களால் செய்ய முடியும்.
எல்லாம் செய்து விட்டு ஒன்றுமே தெரியாதவர்போல் உங்களை அழைத்துக் கொண்டு போய் சர்ச்சில் அமரவைத்து அவைகளை நீக்குவதாக சொல்லி உங்களை படுத்துவதோடு , அதை நீக்கி உங்களை மதம் மாற வழி வகுப்பார்கள். ஆனால் அதை செய்ததுவே அவர்கள்தான் என்பது எந்தக் காலத்திலும் உங்களுக்கு தெரியாது.
உண்மையில் செய்வினை என்பதும் ஒரு வகையான மனோதத்துவ விளையாட்டே. எனவே எச்சரிக்கையோடு இருங்கள்.
CHIRISTIANITY IS NOT A RELIGION BUT A FALSE FAITH FORCED BY ROMAN KING CONSTAINE ON GREEK PEOPLE TO DESTROY PAGAN FAITHS PREVAILING DURING THAT TIME. JESUS EXISTENCE ITSELF IS A QUESTION MARK BECOUSE EVEN CHRISTIANS SCHOLARS ARE NOT ABLE TO DESCRIBE THE EVENTS INBETWEEN JESUS BIRTH TO DEATH. HIS BIRTH WAS DESCRIBED BUT AFTER HIS CHILD BIRTH, SUDDENTLY JESUS APPEARENCE WAS MENTIONED WITH THE AGE OF 28 YEARS. WHERE DID HE GO BETWEEN HIS CHILDHOOD TO THE YOUNG AGE OF 28 YEARS OLD. SO THIS IS ONLY A INDUCED STORY FORCED BY ROMANS ON EUROPEANS WHO IN TURN FORCED ON INDIANS AND OTHER COUNTRIES TO MAKE ALL THE NATIONS UNDER THEIR MONARCH AND BROUGHT UNDER THE KING OF BRITISH EMPEROR.
MANY FOOLS IN INDIA NOT REALISING THE SMELL OF OUR OWN SOIL ARE ATTRACTED TOWARDS THIS FORCED FAITH CAME WITH THE SMELL OF BAD ODOUR. IF YOU READ CAREFULLY THE CHRISTIANITY BOOKS, ‘SATAN’ IS NONE BUT TERMED AS ”LUCIFIER’ WHO IS CALLED AS ‘ VENUS’ , THE GURU OF ASURAS IN HINDUISM BELIEF. THIS ‘VENUS’ IS CALLED AS ” MORNING STAR” AND ”EVENING STAR” AS IT APPEARS IN THE SKY BOTH IN THE MORNING AND EVENING BRIGHT ON VARIOUS SEASONS.
IF YOU LOOK IN TO BIBLE FOUR GOSPELS, JESUS IS CALLED AS ” MORNING STAR” IN SOME VERSES AND IN SOME VERSES JESUS IS ALSO CALLED AS ”EVENING STAR”
SO JESUS IS CONSIDERED AS ” LUCIFIER” WHO IN TURN IS CALLED AS ” SATAN” THE BITTER ENEMY OF JESUS. FINALLY IT GOES WITHOUT SAYING ON ABOVE STATEMENT
” JESUS IS A SATAN” ACCORDING TO BIBLE ITSELF.
SO LET PEOPLE REALISE THE TRUTH AND DO NOT FALL PREY TO WHITE SKINS WHO EMPLY THIS METHOD OF CONVERTING THE PEOPLE TO BRING INDIA UNDER THEIR SLAVE COUNTRY AGAIN. MANY FAMLITIES LIFE AND HAPPINESS HAVE BEEN DESTROYED IN ANDHRA BY THE CONVERSION. SON BECAME THE ENEMY OF FATHER AND DAUGHTER BECAME THE ENEMY OF MOTHER- THIS IS THE THEME OF CHRSITIANITY AS IT IS MENTIONED IN THE BIBLE ITSELF.
CONVERT PEOPLE ARE MANY CUNNING AND DANGEROUS THAN ‘TRUE CHRISTIANS’ AS CONVERTS PLAY THE GAME OF ”DIVIDE AND ”RULE” SO WE MUST AVOID THOSE CONVERTS IN FRIENDSHIP, OR IN BUSINESS OR IN TALKING PARTICULARLY IF ANY OF THE PEOPLE HAVE ANY FAMILY PROBLEMS, THOSE CONVERTS WILL BE ON THE JOB OF CONVERTING. THEY ARE THE VULTURES FLYING THE SKY FOR PREYS – WEAK MINDED PEOPLE – DEVILS WILL ATTACK ONLY WEAK MINDED PEOPLE – SIMILARLY NEO CONVERTS WILL LOOK FOR PROBLEMATIC PEOPLE LOOKING FOR MONEY OR
MENTALLY IN DISTRESS, OR SHELTERS OR FOOLISH IN NATURE.
TO PREVENT THOSE PEOPLE HEADING FOR CHURCH, TO STOP THEM GOING, HINDUS MUST CIRCULATE THAT CHURCH IS THE PLACE FOR BRINGING DEAD BODIES ANYTIME AND THOSE VISIT CHURCH MUST TAKE BATH. ALL HINDUS MUST INFORM THOSE IGNORANT PEOPLE WHICH WILL MAKE THEM THINK 100 TIMES BEFORE GOING TO CHURCH BECOUSE MANY PEOPLE EVEN LEARNED PERSONS ARE NOT AWARE THAT CHURCH IS THE PLACE FOR CONDUCTING FUNERAL SERVICES ALSO. THIS IS THE ONLY WAY TO MAKE THEM FEAR FROM CONVERTING THE IGNORANT PEOPLE.
OVER
இந்த கிறிஸ்துவ மதமாற்ற கும்பல் நம்மை ஏமாற்ற்றுவத்தின் முக்கிய காரணம் ,நமக்கு நம்முடைய மதத்தையும் மத நூல்களையும் பற்றிய விழிப்புணர்வு ,அறிவு சுத்தமாக இல்லை .யாராவது நம்மிடம் ஏதாவது கூறினால் நமக்கு பதில் சொல்ல தெரியாது.நம்மில் எத்தனைபேரின் வீட்டில் ராமாயணம் ,மகாபாரதம்,பகவத் கீதை உள்ளது.அப்படியே இருந்தாலும் அதை எத்தனைபேர் படிதிருப்போம்.தவறு நம்மிடம் உள்ளது அதை நாம் திருதிகொள்ளவேண்டும்.ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள் அர்த்தமுள்ள ஹிந்துமதம் பாணியில் கேள்வி பதில் திருநீறு எதற்கு இடுகிறோம் ,ஐயப்பன் சாமி பிறப்பு,விநாயகர் பிறப்பு போன்ற கேள்விகள் இடம்பெறவேண்டும் .எதிர்காலத்தில் போட்டிகள் வைத்து பரிசு வழங்கலாம்.
எங்கள் ஊரிலும் …….. இது போன்று மதமாற்றம் செய்கிறார்கள் ………
என்ன செய்வது …..
இறைவா நீ இருப்பது உண்மையானால்…… தயவு செய்து இவ்வுலகை அழித்துவிடு……….