பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)

திருக்குறளைப் பற்றிய முரண்பாடு:

‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்த அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர், இதற்கு முரண்பட்ட வகையிலும் பேசியிருக்கிறார். முரண்பட்ட வகையில் பேசுவது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கரேதான். அப்படி என்ன முரண்பாடு ஏற்படும் வகையில் பேசினார் தெரியுமா? இதோ!

14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும்

‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

23, 24-10-1948 அன்று ஈ. வே. ராமசாமி நாயக்கர்,

‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

முதலில், திருக்குறள் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்று பல்டி அடித்தார்.

இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்று கூறி பல்டி அடித்தார்.

மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்று கூறி பல்டி அடித்தார்.

20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. ராமசாமி நாயக்கர், ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று முரண்படக் கூறுகிறார்.

முரண்பாட்டின் மொத்த உருவம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஈ. வே. ராமசாமி நாயக்கர்,

‘‘நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது? தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள். மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள். ஆரியத்திலிருந்து விலகி, ஆரியக்கருத்துக்களை எதிர்த்து சொன்னார் என்ற முறையில் அதில் ஒன்றுமே இல்லை’’ என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சி!

ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?

‘‘உண்மையாகப் பார்ப்போமானால் நமக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இருக்கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.

இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு.

சங்க இலக்கியங்கள் இருக்கின்றனவே! அந்த இலக்கியங்களில் புறநானூறு இருக்கின்றனவே! அதில் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பின்பற்றத் தகுந்தவையாக இருக்கின்றதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார் இருக்கின்றதே! இதையெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் படித்திருக்க மாட்டாரா? நிச்சயம் படித்திருப்பார். ஆனால் அவருடைய நோக்கமே தமிழரை, தமிழைக் கேவலப்படுத்துவதுதானே! சரி நமக்கு இலக்கியங்களே இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஈ.வே. ராமசாமி நாயக்கராவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே! அல்லது அவரது கழகத் தோழர்களாவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி ஒரு இலக்கியம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை? நாம் பின்பற்றும் முறையில், நமக்குப் பயன்படுகிற முறையில் ஒரு இலக்கியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொடுத்திருக்கலாமே! இதிலிருந்தே தமிழ் மொழி பழிப்புதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய நோக்கம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் வளர பகுத்தறிவுவாதிகளின் பங்கு என்ன? தமிழை வளர்ப்பதற்கு பதில் ஆங்கிலம் வளர்வதற்கு மாநாடு நடத்தியவர்கள்தானே இந்த பகுத்தறிவுவாதிகள்!

திருக்குறளை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் 23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில்,

‘‘முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது’’ என்றும் ‘‘குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது’’ என்றும் கூறுகிறார்.

முஸ்லிம்களை குறள் மதத்துக்காரர் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது திருக்குறளைத்தான் முஸ்லிம்கள் மதித்தார்களா? இல்லவே இல்லை என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை!

1968-டிசம்பர் மாதம், மதனீ என்பவர், திருச்சியிலே ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார். அந்த புத்தகத்தினுடைய தலைப்பு ‘‘முஸ்லீம்களுக்குப் பொதுமறை எது? குறளா? குர் ஆனா?’’ என்பதுதான். இந்தப் புத்தகத்திலே அவர் திருக்குறளையும், குரானையும் ஒப்பிட்டு ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.

‘‘…அத்தகைய தகுதி திருக்குர்ஆனுக்கே உண்டு. குறளுக்கில்லை. திருக்குரான் இறைவன் அமைப்பு. குறள் மனித அமைப்பு. ஒப்பிட்டு பேசுவதோ, போட்டி மனப்பான்மையில் வாதிடுவதோ பெருந்தவறு, கூடாத வினையாகும். ஐந்து வயதுச் சிறுவன், போலு பயில்வானிடம் மல்லுக்கு நிற்பது போலாகும்.’’ (பக்.2)

‘‘இஸ்லாமியனுக்கு இது ஏற்புடையத்தன்று’’ (பக்.3)

‘‘குறள் ஒன்றே பொதுமறை என்று எவர் கூறியிருந்தாலும் சரி; கூறிக்கொண்டிருந்தாலும் சரி, அனைவரெல்லாம் திருகுரானை கற்றுணராதவர்கள் என்றே துணிவுபடக் கூறலாம்.’’ (பக்.5)

‘‘உருப்படியான ஒழுக்க நூல் திருகுரானைத் தவிர உலகில் வேறு எந்த நூலும் இல்லை. இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்து வருபவர்கள் இஸ்லாமியர்கள். இறுதி மூச்சுப் பிரியும் வரை இதே நம்பிக்கையில் தான் இருப்பார்கள், இறப்பார்கள்.’’ (பக்.6)

‘‘களங்கமுள்ள ஓர் ஏடு எப்படிப்புனித இலக்கியமாகும்? வாழ்க்கை நூலாகும்? பொது மறையாகும்? எல்லார்க்கும், எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாகும்? திருக்குரானைத் தேன் நிலாவாகக் கருதிடும் சீலர்கள் சிறிதேனும் சிந்தித்தால் நல்ல தெளிவேற்படும்-உண்மை பல பளிச்சிடும்.’’ (பக்.8)

‘‘குறள்நெறி, குரானின் நெறி கொண்டதல்ல. இரண்டின் வழியும் விழியும் வேறு. குரலும் கோட்பாடும் வேறு. (பக்.23)

‘‘வள்ளுவர்க்கு ஒரு கொள்கை இல்லை. ஒரு குறிக்கோள் இல்லை. அதனால் மக்களைத் தன் கொடியின் கீழ் கொண்டு வரமுடியவில்லை’’ (பக்.30)

‘‘திருக்குறளை பாலுக்கு ஓப்பிட்டால், திருக்குரானை தண்ணீருக்கு ஒப்பிடலாம். பால் எல்லோருக்கும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படக்கூடியதல்ல. பொது உணவுப் பொருளாகவும் அது இருந்திட முடியாது. விரும்பக் கூடியதும் அல்ல. தண்ணீரோ அப்படியல்ல. எல்லோருக்கும் எல்லாக் காலத்துக்கம் எல்லாச் சந்தர்ப்பத்திலும் பயன்படக் கூடியதாகும்.’’ (பக்.139)

இவ்வாறு 144 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் திருக்குறளைத் தாழ்த்தி திருக்குரானை உயர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது. திருக்குறளை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் உயிரோடு இருக்கும் போதே – அதுவும் திராவிடர் கழகம் நிலை கொண்ட திருச்சியிலேயே ஆணி அடித்தாற் போல் சொல்லப்பட்டு இருக்கிறது.

குறளை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று திருச்சியிலே, முஸ்லிமின் குரல் ஒலித்ததே – அப்படியானால் முஸ்லிம்கள் குறள் மதக்காரர்கள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே – அது ஏன்? அப்படிச் சொன்ன மதனீக்காவது கண்டனம் தெரிவித்தாரா? அந்த புத்தகத்துக்கு எதிராக விடுதலையில் ஒரு வரியாவது கண்டித்து எழுதினாரா? இல்லையே ஏன்?

ஒருவேளை முஸ்லிம்களின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாரோ என்னவோ! முஸ்லிம்கள் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்பது கூட விமர்சனம்தான். ஆனால் அந்த புத்தகத்திலே திருக்குறளை கண்டபடி திட்டியிருக்கிறார்களே அதைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது அடியார் வீரமணியோ கண்டித்தார்களா? களங்கமுள்ள ஏடு என்றெல்லாம் திருக்குறளை முஸ்லிம்கள் சொன்ன போது – திருக்குறள் வழியில் நடக்கும் கழகம் திராவிடர் கழகம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது வீரமணியோ எங்கு போனார்கள்? திருக்குறள் திராவிடர்களின் வா¡க்கை நூல் என்று சொன்ன ஈ. வே. ராமசாமி நாயக்கர் – அதை கேவலப்படுத்திய முஸ்லிமையோ அந்த புத்தகத்துக்கோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்? – இதுதான் திருக்குறளுக்கு திராவிடர் கழகம் செய்த தொண்டா?

ஒருவேளை இந்த புத்தகம் வந்ததே தெரியாது என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இந்து முன்னணி இந்த புத்தகங்களை வாங்கி பதிவுத் தபாலில் திராவிடர் கழகம் முதல் பகுத்தறிவுவாதிகள் அனைவருக்கும் அனுப்பியதே – அப்போது கூட வீரமணியோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ அல்லது தமிழறிஞர்களோ கூட கண்டிக்க வில்லையே ஏன்? இதுதான் தமிழ்ப் பற்றா? இவர்கள்தான் தமிழைக் காக்க புறப்பட்ட வீரர்களா? சரி அப்போதுதான் கண்டிக்கவில்லை. இப்பொழுதாவது கண்டிக்கத் துணிவு உண்டா? ‘தடை செய் இராமாயணத்தை’ என்று சொன்னார்களே? – அதே போல ‘தடை செய் மதனீயின் புத்தகத்தை’ என்று சொல்லத் தயாரா? பதில் சொல்வார்களா பகுத்தறிவுவாதிகள்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலிருந்தே தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓலித்துக்கொண்டு வருகின்றன. தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தான் போராடுகிறோம் என்று தி.க.வினர் சொல்கின்றனர், ஆனால்முதன் முதலில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று கூறியவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது நாத்திகர்களோ அல்ல. ஆத்திகர்கள்தான்.

மறைமலை அடிகள் முதல் தனித் தமிழ் இயக்க ஆத்திகர்கள் அதற்காக போராடினார்கள். இதில் தி.க.வினர் சொந்தம் கொண்டாட உரிமையில்லை. ஏனென்றால் கடவுளும் வேண்டாம், கோயிலும் வேண்டாம் என்று சொல்லுகின்ற தி.க.வினர் கோயிலில் எந்த மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்ல உரிமையில்லைதானே!

— தொடரும்

32 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)”

  1. “Consistency is the virtue of an ASS”, Periyar need not to be consistent. You can take EV Ramasamy Periyar’s last statement.

  2. மகிழ்நன், உங்கள் மிக நீண்ட மறுமொழிகள் எல்லாம், ஒரு புத்தகத்திலிருந்து வெட்டி ஒட்டியவையாக உள்ளன. அவை எல்லாவற்றையும் இங்கு பதிப்பிக்க இயலாது. .

    அதற்குப் பதிலாக, இதற்கு எதிர்வினையாகத் தங்கள் வலைப்பதிவில் இவற்றையெல்லாம் வைத்து ஒரு நீண்ட கட்டுரையாக எழுதி, அதன் சுட்டியை மட்டும் இங்கு இடலாமே?

  3. மகிழ்நன்,

    நீங்கள் கொடுத்திருந்த கீற்று இதழின் கட்டுரையைப் படித்தேன். நன்றி.

    அந்தக் கட்டுரையில் பெண்களின் கற்பு குறித்து இந்து ரிஷியான வள்ளுவர் அறிவுறுத்தியதைச் சொல்லியுள்ளனர். நல்லது. ஆனால், அதே வள்ளுவர் அதே அறத்தை ஆண்களுக்கும் பொதுவில் வைத்ததை அந்தக் கட்டுரை ஏனோ மறைத்துவிட்டது.

    கீற்றில் கீற்று்தான் கிடைக்கிறது. தமிழ் இந்துவில் முழு மரமும் தெரிகிறது.

  4. Periyar need not be consistent. But every body else have to be consistent in the eyes of and as per the wishes of Periyar. Hypocrisy and psychopancy at its best. Periyar himself said he needed only ‘fools’ for his organisation.

  5. ஈவேரா அரைகுறை மனிதர் என்பதே உண்மை. குறுகிய பார்வையும், அனைத்தையும் பார்ப்பன எதிரிக் கண்ணோட்டதிலுமே பார்க்கத் தெரிந்தவருக்கு நேர்மை, நியாயமான பார்வை என்பது கிஞ்சிற்றும் இல்லை என்பதே அவரது தமிழ், வள்ளுவர், கண்ணகி, பாரதி, இஸ்லாம் போன்ற கருத்துக்களில் தெளிவாகின்றது.

    இன்றைக்கு ’மச்சி அவ துப்புனா எச்சி’ என்று பேசிய டி. ராஜேந்தருக்கு கை தட்டியவர்களைப் போலவே பெரியாருக்கும் தட்டினார்கள் என்பதே உண்மை.

  6. பெரியார் என்றும் தன்னை முழுமனிதராக கருதியதில்லை, தன் பட்டறிவுக்கு பட்டதை மக்களுக்கு எடுத்து சொன்னார். சரி-தவறு என்ன? என்பதை பகுத்து பார்த்தே தன் கருத்துக்களை ஏற்க சொன்னார்.

    பெரியாரை பற்றி பேசும்போது வரித்து கட்டிக்கொண்டு பின்னூட்டம் எழுத வரும் தோழர்கள், சாதி வெறிக்கு எதிராக எழுத முயற்சியாவது செய்ததுண்டா?

    தமிழில் ஆங்கில கலப்புக்கு ஒருவகையில் பெரியாரிய இயக்கங்களே காரணம் என்றே வைத்துக் கொள்ளுங்கள், வடமொழி கலப்புக்கு எதிராக நீங்கள் பேசத்தயங்குவதன் மர்மம் என்ன?

    பெரியாரியலின் அடுத்தக் கட்டம், பெரியாரிய கண்ணோட்டத்தின் அடுத்த கட்டம், தமிழின விடுதலை, மொழி விடுதலை நோக்கி நகர்த்த நாங்கள் முயற்சிக்கிறோம்.

    உங்கள் இந்துத்வ கருத்துகள், மேலும் வடஇந்திய பார்ப்பன சுயநல தேசியத்துக்கு அடகு வைக்கத்தான் பார்க்கும்.

    என்னை பொருத்தவரை பெரியார் என்பவர் வரலாறு..அவர் இந்திய பார்ப்பன இந்து தேசியம் என்னும் மண்ணுக்குள் புதைந்து கிடைந்த தமிழின விடியலை தோண்டி எடுக்க புறப்பட்டவர், அவருக்கு கிடைத்த பட்டறிவால் தோண்டியிருக்கிறார்.

    இப்பொழுது, படித்த இளைஞர்களாகிய ஓரளவு உலக அரசியலை, வரலாற்றை கற்ற தேர்ச்சியானவர்கள் வருகிறோம்…

    தமிழின விடியல் என்ற கண்டிப்பாய கிடைக்கும்…

    பெரியார் தமிழர்களின் தந்தை, ஆனால், தருதலை, களவாணி பிள்ளைகளான கருணாநிதி போன்றோர்களால், இந்த தலைமுறைக்கு பெரியார் கருணாக்களின் சுயநலத்திற்காக மறைக்கப்பட்டிருக்கிறார்.

    தந்தையிடம் தவறிருந்தாலும், அவர் எங்கள் விடியலுக்காக தன்னலம் பாராமல் உழைத்த தந்தை, அவரை விமர்சிக்க எந்த மேட்டுக்குடிக்கும் தகுதி கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து

  7. //தமிழில் ஆங்கில கலப்புக்கு ஒருவகையில் பெரியாரிய இயக்கங்களே காரணம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்//

    தோழர் மகிழ்நன், மூண்றே வாரத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்! என்ன ஒரு மாற்றம். இன்னும் முப்பது வாரங்கள் வந்தால் கோவில் குளம் என்று சுற்ற ஆரம்பித்துவிடுவீர்கள் போலவே! பெரியாரை மீண்டும் படியுங்கள் ஐயா. தீர்க்கதரிசியான அவர் இப்படி கேட்கப்போகும் கேள்விகலுக்கெல்லாம் பதில் சொல்லியிருப்பார். வெற்றி உமதே!

    போதாக்குறைக்கு கருணாநிதியைத் திட்டத் தொடங்கிவிட்டீர்களே ஐயா. அப்படியானால் பெரியாரின் தீர்க்கதரினத்துக்குள் கருணாநிதி தப்பியது எப்படி? ஒன்றுமே புரியவில்லை. குழப்பமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது! தொடர்ந்து கட்டுரைகளை படியுங்க. மாற்றம் ஒன்றே மாறாததாம்!

    //தந்தையிடம் தவறிருந்தாலும்//

    குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்ககொளல் என்று (பெரியாருக்குப் பிடிக்காத, பெரியவர்களுக்குப் பிடித்த) குறள் கூறுகிறது. நாடி என்றால் ஜோதிடம் சம்பந்தப்பட்டது என்று உங்கள் குமுகாயம் ஒதுக்கியிருக்கக்கூடும். இக்குறள்படிப் பார்த்தால் தவறுகள்தான் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறதே ஐயா. உடனே ஒரு முடிவுக்கு வரவேண்டாம். பெரியாரின் மறுபக்கத்தில் வெங்கடேசன் என்னதான் சொல்கிறார் என்றுத்தான் பாப்போமே.

  8. //தோழர் மகிழ்நன், மூண்றே வாரத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்! என்ன ஒரு மாற்றம். இன்னும் முப்பது வாரங்கள் வந்தால் கோவில் குளம் என்று சுற்ற ஆரம்பித்துவிடுவீர்கள் போலவே!//

    :))

  9. Apologies for writing in English…

    In my humble opinion, development should always be constructive. Anything destructive is not development. If I want raise above another person, in terms of knowledge or wealth or whatever it is, either I should work as the other person work or work even hard than the other person to raise above him. If I am running a race with a person who runs much faster than me, I should improve my stamina, my skills and my strength to increase my running speed and then win him in the race.

    But ‘Periyars’ and his followers philosophy is – You are running faster than me and always winning the race…so you are cheating me. you are not allowing me to win. You are prejudiced and hence evil. You should not run in the race at all so that I can win. Only because of you I am not able to win the race.

    Periyar and his followers always criticized the brahmins and spat venom at them and pulled them down in the name of upliftment of the downtrodden. If he had not spat venom and did the so called upliftment of the downtrodden in a constructive way, I would have saluted him. But he failed and I wonder how he is called ‘Periyar’. In fact he is a ‘Siriyar’ because he was incapabable of appreiciating others ‘plus’.

    I dont know whether it is because of Periyar or his followers or god knows who….I think the only community in the entire world with out a family or proper surname are the ‘Tamils’. Only the Tamil Population has their father’s name as surname, where as all the others, let it be our neighbouring states or any state in India or any country in the world, has a proper family / surname. The entire family will have the same family name, except tamils. It is very embarrasing when you live outside the country, becuase people look at you down when you and your wife have different last name…and we say we should take pride that these ‘tamil kavalar’s helped tamil’s to establish our identity…where as the fact is, these ‘tamil kavalars’ actually erased our identities…

  10. கலீல் கிப்ரானின் ”சாத்தான்” சிறு கதையை படியுங்கள். பெரியார் அதில் வருகிற சாத்தான் பணியைச் செய்ய வந்தவர் என்பதினை உணர்வீர்கள்.

    உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நான் இந்து ஆத்திகவாதி. ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவன்.

  11. பெரியாரையும் அவரது போலி பகுத்தறிவு வாதிகளையும் குற்றவாளி கூண்டில் ஏற்றி சாடையால் அடித்த திரு.வெங்கடேசன் என் முன் நின்றிருந்தால் அவரது காலில் விழிந்திருப்பேன்!

  12. EVR criticised anna & is party severely & campaigned against them in all the elections from 1949 to 1967.

    When annadurai won & went to seek his “blessings”, EVR was totally embarrased.

    He then offered his support to anna’s govt.

    Later, when Mu.ka became CM, EVR was asked if he had anything negative to comment on the govt, his answer was “No”.

    EVR became a spent force from the time anna broke away from him.

    He instructed his followers to break Lord Rama’s idols. It was a huge flop.

    If today, tamil society is ravaged by caste feelings, it is due to EVR.

  13. About 20 years ago, in Mayilapore lived a very ordinary person by the name Kannuthal (meaning person having eye on the forehead – Lord Shiva) . He won a fortune in the lottery and spent the money for social purposes. He wrote a book in Tamil by the title “Ulagap Podhumarai Kuranalla , Kuralae” and distributed it freely to the public. He was murdered similar to the fate of many who espouse the cause of Hinduism… A case was
    registered with no result so far.

  14. “ivarin karuththukkaL sari” enru vaadhiduvoarukku ‘edhir vaadham ‘ enRu solvadhaivida “aRiyaamaiyin viLaivae ivaradhu seyalgaL ellaam” enRu koLvadhae sariyaaga irukkum. aanaal, “oruvarin aRiyaamaiyin viLaivu oru samudhaayaththaip pala thalaimuraigaL baadhippadhaa?” ennum kaeLvikku badhil? nichchayamaagak karmak koatpaadaeyanri vaeRenna irukka mudiyum?

  15. இவரின் கருத்துக்கள் சரி என்று வாதிடுவோருக்கு எதிர் வாதம் என்று சொல்வதைவிட “அறியாமையின் விளைவே இவரது செயல்கள் எல்லாம் ” என்று கொள்வதே சரியாக இருக்கும் . ஆனால் ஒருவரின் அறியாமையின் விளைவு ஒரு சமுதாயத்தை பல தலைமுறைகளுக்கு பாதிப்பதா என்னும் கேள்விக்கு பதில் ? நிச்சயமாக கர்மக் கோட்பாடேயன்றி வேறு என்ன இருக்க முடியும் ?

  16. Venkatesan – Your name itself shows you are a Brahmin guy.This story which you had written above is not to spread the athesism instead you tried to enlarge the sin of brahminism.thatsy Blaberred something. Periyar will remain a star for you fools which you cannot even touch but can comment.Hahaha…Carry on your articles..nice to read..funny…

  17. ஐயா அர்சுன்,
    தயவு செய்து பெரியாரின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதில் மறுமொழி இடுங்கள் அதை விடுத்து ஏன் பதிலளிக்கமுடியாத வயிதெரிச்சலில் ஆசிரியர்மீது பாய்கிறீர்கள்.இதுதான் பெரியார் விசுவாசிகளின் பண்பாடோ? நம்மிடம் பதில் மொழி இல்லாதபோது சும்மா நீ ஒரு பிராமணன் அப்படி இப்படி என்று தில்லாலங்கடி எல்லாம் உடக்கூடாது.இப்படியே தானே ஐயா உங்கள் காலம் ஓடுகிறது. உங்கள் பதிலிலேயே ஆசிரியரின் வெற்றி தெரிகிறது.

  18. ///This story which you had written above is not to spread the athesism instead you tried to enlarge the sin of brahminism////
    please eplain,what do you mean? i didnt understand.
    ////Periyar will remain a star for you fools /////
    realy he is a star for fools only.

  19. EVR’s speech in a muslim function

    Eppadi pammaraar paaru! This is paghutharivu for U

    சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படியிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்திலும் இதேமாதிரி கொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேகருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும் நியாயத்தை ஒத்துக்கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்குகிறது. ஆனால் இன்னும் அநேக விஷயங்களில் திருத்துப்பாடு ஆகவேண்டி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முஸ்லீம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை வலியுறுத்திக்கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலிய வற்றையும் நிறுத்தி விடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப்போகாது. இவை இருந்தால் தான் பரிகாசத்திற்கிடமானதாகும்.

    இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மௌல்வி சாயபு அவர்கள் குர்ஆனின் மேன்மையையும் திரு. முகமது நபி அவர்களின் உபதேசத்தின் பெருமையையும் பற்றி சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெனில் நான் அவற்றை படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை. நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி ஏதாவது நான் படித்து அதைப்பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப்பிரசங்கித்தனமேயாகும். ஏனெனில் பெரிய பெரிய மௌல்விகள் இருக்கும் போது அவர்கள் முன் நான் என்னதான் படித்தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதை விட பிரத்தியக்ஷத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுவதே பலனளிக்கக்கூடும். நான் இந்த சந்தர்ப்பத்தை எதற்கு உபயோகித்துக் கொள்ள கூடுமென்றால் மக்களிடம் பிரத்தியக்ஷத்தில் காணும் விஷயங்களைப் பற்றியும் இன்னமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயத்தைப்பற்றியும் பேசுவதும் பயன்படுவதாகும் என்று கருதுகின்றேன்.

    திரு.நபி அவர்களின் இவ்வளவு அருமையான உபதேசம் என்பவற்றில் உலக மக்கள் எல்லாம் பயன்அடையும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

    செட்டி முடுக்கா? சரக்கு முடுக்கா?

    இஸ்லாம் மார்க்கம் “மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாக்கியங்களிலும் மேன்மையானதாய் இருக்கின்றது” என்கின்ற திருப்தியானது மனிதசமூகத்திற்கு எல்லாப் பயனையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்திற்கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச் செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலகமக்களை ஒன்றுபடுத்தவும் அனைவரையும் சகோதரத்தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்யவேண்டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக்கொண்டு தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது.

    உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத்தியக்ஷ அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது. அதற்கு துணிந்தும் விட்டது. செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும். ‘என் சரக்கை பரீக்ஷிக்கலாமா?’ என்கின்ற அடக்குமுறை இனிப்பலிக்காது. ‘அவர் ஒஸ்தியென்று சொன்னார்.’ ‘இவர் ஒஸ்தியென்று சொன்னார்’ ‘ஆண்டவன் சொன்னான்’ என்பதெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்டா விட்டால் இனி மதிப்புப்பெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப்பார்த்துதான் மதிக்க வேண்டியதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப்பயனைப் கொண்டும் தான் மதிக்கப் படமுடியும். உலகம் சிரிக்காதா?

    இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லீம்கள் பரிகாசம் செய்து விட்டு முஸ்லீம்கள் கூண்டுகட்டி சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, பாணம் வேடிக்கைசெய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்கமாட்டாதா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு “பாவம் துலைந்துவிட்டது” என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லீம்கள் சிரித்துவிட்டு முஸ்லீம்கள் நாகூருக்கும், முத்துப் பேட்டைக்கும், மக்காவுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு போய் விட்டு வந்து தங்கள் “பாவம் எல்லாம் துலைந்து விட்டது” என்று கருதிக் கொண்டு புதுக்கணக்குப்போட வந்தார்களானால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும்.

    மக்கள் மார்க்கத்தைக் காப் பாற்றுவதென்றால் கொள்கைகளை பகுத்தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதையாய் பார்த்து பயன்படுத்தவேண்டும். “தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விறோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அருத்தம் செய்து கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பயனாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதின் கருத்தையும், உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.

    பகுத்தறிவு

    நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும், துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டு பிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொண்டு ‘இதுதான் நபிகள் சொன்னது’ என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக்கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப்பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.

    மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும். சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாகவுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடிகொண்டு பார்க்கவேண்டும். அது போலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிபேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகி விடும்.

    நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய் கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார் கள்? நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.

    மற்றவர்கள் மதிப்பது

    நபி அவர்கள் உபதேசங்களை துருக்கியர் எப்படி மதிக்கின்றார்கள்? எப்படி அர்த்தம் செய்கின்றார்கள்? அவர்கள் என்ன பலன் அடைகின்றார்கள்? என்பவைபோல உலகத்தின் முஸ்லீம்களின் நடப்பு முழுவதையும், அமுலையும், பலனையும் நன்றாய் கவனித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ‘எதிரி’ மதத்தை (கொள்கைகளை) பரிசோதிப்பதுபோல் எதிரிஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம் அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக்கத்துடன், அந்த வேகத்துடன் உங்கள் கொள்கைகள் என்று உங்களுக்குப் புரோகிதர்களால் போதிக்கப்பட்டு நீங்கள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

    கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு குற்றமிருப்பின் திருத்தவேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகமும் முழு முற்போக்கை அடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்ப பயமோ வெட்கமோ அடையக்கூடாது.

    இந்தியாவும் அப்படித்தான்

    நபி அவர்கள் தோன்றிய காலத்தில் அரேபியாதேசம் எப்படி இருந்ததென்று மௌல்வீ சாயபு அவர்கள் சொன்னார்களோ அப்படியேதான் இன்னமும் இந்தியா இந்து கொள்கைகள் இருந்து வருகின்றது. அரேபியர்களிடத்தில் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்பட்டு கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மௌல்வி சாயபு சொன்னார்கள். இந்துக்களிடத்திலும் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும் இருக்கின்றது. சமீப காலம் வரை பெண்களை பெரிய பெரிய பெண்களை புருஷன் இறந்துபோனால் பக்கத்தில் உயிருடன் வைத்து நெருப்புக்கொளுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி சகுனத்தடையாகப் பாவித்து கொடுமைப்படுத்தும் முறை இருந்துதான் வருகின்றது.

    அரேபியர் பல கடவுள்களை வணங்கினதாகச் சொன்னார்கள். அதுபோலவே இன்றும் இந்துக்கள் ஒவ்வொருவரும் பல கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமல்லாமல் பெண்டு, பிள்ளை வைப்பாட்டி ஆடு மாடு குதிரை யானை எலி பெருச்சாளி மயில் கெருடன் பாம்புவாகிய உருவங்களுடன் வணங்குகின்றார்கள். இவையெல்லாம் கீழ் மக்கள் என்று சொல்லுகின்றவர்களிடம்தான் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். மேல்மக்கள் என்று மதத்தின்பேரால் முடிவு கட்டப்பட்ட மக்களிடமே இருக்கின்றது. ஆதலால் திரு.மகமதுநபி அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இருந்ததோ அதுபோலவேதான் இன்றைய வரையில் இந்தியாவின் இந்து சமூகம் இருந்து வருகின்றது.

    இந்த லட்சணத்தில் இதை எடுத்துச் சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்தமாதிரியான ஒரு மதசம்பந்தமான முக்கிய நாள் என்பதற்கு உங்களைப் போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட வும் மாட்டார்கள். நான் ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள். என்னை வைவதையே அவர்கள் மதப்பிரசாரமாய் கருதுவார்கள். ஆனால் இஸ்லாம் கொள்கை என்பது எவ்வளவு பெருமையாய் எவ்வளவு சகோதரத் தன்மையாய் யாரையும் எந்தவித அபிப்பிராயக்காரனையும் கூப்பிடவும் அவர்கள் சொல்லும் எதையும் பொருமையாய் கேட்கவும் இருக்கின்ற சுதந்திரத்தைப் பார்த்து இவ்விஷயத்தில் இந்துக்கள் வெட்கப்பட வேண்டுமென்றே சொல்லுவேன்.

    துலுக்கர் துடுக்கரா?

    மௌல்வி ஆஜீ அப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக்களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார். ஏனெனில் ஜாதிப்பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருவனுக்கு மற்றவர்களிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. ஜாதிப்பிரிவு இல்லாத காரணத்தாலேயே முஸ்லீம் மக்களுக்கு சகோதரத்தன்மை இருந்து வருகின்றது.

    சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான். ஆதலால் இந்துக்கள் உங்களை குற்றம் சொல்லுகிறார்களே என்று கருதி உங்கள் சகோதரத்தன்மையையும் வீரத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். எண்ணிக்கையில் கொஞ்சமாயிருந்தாலும் உலகத்தில் நீங்களும் தலைசிறந்து விளங்கக் காரணமே உங்கள் சகோதரத்தன்மையே யாகும். ஆகையால் அதைவிட்டு விடாதீர்கள். ஆனால் மற்ற கொள்கைக்காரரையும் உங்கள் சகோதரர்களாக ஆக்கிக்கொள்ள முயலுங்கள். அதற்குத் தடையாயிருக்கும் சாதாரண காரியங்களையும் வெரும் வேஷமாத்திரத்தால் இருக்கும் வித்தியாசங்களையும் லக்ஷியம்செய்யாமல் ராஜிக்குத் தயாராயிருங்கள். இந்த வகையில் தான் ஒவ்வொரு கொள்கையும் செல்வாக்குப் பெற்று தலை சிறக்கமுடியும். இஸ்லாம் கொள்கையைப்பற்றி யாராவது தப்பிதமாய் நினைத்திருந்தால் தைரியமாய் திருத்த முற்படுங்கள்.

    சந்தேகத்தை திருத்துங்கள்

    உதாரணமாக மக்கா யாத்திரையைப் பற்றி மலேயா நாட்டில் உள்ள கிடாசுங்கப்பட்டானியில் என்னிடம் ஒரு இந்து என்பவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது ‘இந்துக்களது காசி ராமேஸ்வரம் மதுரை யாத்திரையை மூடநம்பிக்கை என்கின்றாயே, இஸ்லாமானவர்கள் மக்கா யாத்திரை செய்ய மலேயாவில் அநேக முஸ்லீம்கள் செல்வதால் கஷ்ட நஷ்டப்படுகின்றார்களே’ என்றார். நான் பதில் சொல்லமுடியாமல் அப்படியானால் முஸ்லீம்கள் அநுசரிக்கும் கொள்கைகள் முழுவதும் பகுத்தறிவுக்கொள்கை என்று நான் சொல்லவரவில்லை என்றும் அதில் அநேக நல்ல கொள்கை பிரத்தியட்சத்தில் பார்க்கிறேன் என்றும் சொன்னேன்.

    பிறகு சென்ற வருஷம் இதே கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மௌல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். முஸ்லீம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை,

    உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும் “கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்லுவது தப்பு” என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை என்றும் சொன்னார். யாராவது அந்தப்படி போனாலும் அது தெரியாத்தனமென்றே சொன்னார்கள். ஆகவே மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில் இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது என்பது பகுத்தறிவில் பட்டதேயாகும். ஆனால் இந்து கொள்கைகள் என்பவற்றில் ‘ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், கொலை செய்தாலும், திருடினாலும், நம்பிக்கை துரோகம் வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும், ஒரு ஊரை நினைத்தால் ஒரு ஊருக்குப் போனால் ஒரு ஊரில் ஒரு குளத்திலுள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் பாபம் பரிகாரமாகிவிடும், மோட்சமடைந்து விடுவான்’ என்று எவ்வளவோ அடியோடு பொய் பெருமைகளை கற்பித்து மூடநம்பிக்கை உண்டாக்கி அங்குள்ள சோம்பேறிகள் பிழைக்க ஸ்தல யாத்திரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தென்றும், அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்புரட்டுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு விறோதமானது ,மூடநம்பிக்கையில் பட்டது என்றும் சொல்லும்போது மற்றவர்கள் யாராவது அது போல் செய்தாலும், அந்தந்த தலைப்பின் கீழ்தான் வருமல்லவா? என்பதை யோசித்து நடக்க வேண்டியது மக்கள் கடமையாகும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

    இப்படிப்பட்ட நாள்

    ஆகவே இப்படிப்பட்ட அருமையான நாட்களை மனிதன் மேன்மைக்கும் முற்போக்கிற்கும் ஒற்றுமைக்கும் அறிவு விளக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இங்குள்ள இந்து முஸ்லீம்களை சகோதரர்களாகக் கருதியே என் மனதில் பட்டதைச் சொன்னேன். மௌல்வி சாயபு அவர்கள் இருவரும் சொன்ன விஷயங்களிலும் பெரிதும் அறிவுக்கு விறோதமானதோ கேள்விக்கு இடமானதோ இல்லை என்பதை முக்கியமாய் முஸ்லீம்களும் மற்ற இந்துக்களும் கவனித்துப் பார்த்து இதுபோலவே எல்லாக் கொள்கைகள் விஷயங்களிலும் பகுத்தறிவுடனிருக்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

    மற்றும் நான் சொன்ன விஷயங்களில் உங்கள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளாததைத் தள்ளி விடுங்கள். மற்றும் இம் மாதிரி நாட்களை வெறும் விருந்துக்கு உபயோகித்துக் கொள்ளாதீர்கள். இன்று சுமார் 500 ரூ. வசூல் செய்து பெரிய விருந்து சாப்பாடு செய்து சாப்பிட்டதாகத் தெரிகின்றது. இது பிரயோஜனமில்லை. பணங்கள் வசூல் செய்து பகுத்தறிவு பிரசாரம் செய்யவும் ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

    02.08.1931 அன்று ஈரோடு முஸ்லீம் வாலிப சங்கக்கட்டிடத்திற்கு முன் நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமையுரை – “குடி அரசு” – சொற்பொழிவு – 09.08.1931

  20. பம்முகிறாரா? அட கொடுமையே!!!! வேறு யாரவது ஒருவர் இப்படி பேசமுடியுமா? அம்மதத்தை சாராத ஒருவர் அம்மதத்தின் குறைகளை பற்றி அமமதவர்களிடையே இப்படி பேசிவிட முடியமா. தன்னிகரில்லா தலைவர் பெரியார் ஒருவரால் மட்டுமே முடியும்!!!

  21. மகிழ்னன்,

    //பெரியார் தமிழர்களின் தந்தை, ஆனால், தருதலை, களவாணி பிள்ளைகளான கருணாநிதி போன்றோர்களால், இந்த தலைமுறைக்கு பெரியார் கருணாக்களின் சுயநலத்திற்காக மறைக்கப்பட்டிருக்கிறார்…

    கருணாநிதி போன்றோர்களால் எனின், அவருக்கு ஜால்ரா அடிக்கும் வீரமணியையும் சேர்த்து தான் சொல்கிறீர்கள் என்று கொள்ளலாமா?

    //பிறகு சென்ற வருஷம் இதே கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மௌல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். //

    ஹய், கூட்டத்தில் யார் இல்லையோ, அவர் விளக்கினார், இவர் விளக்கினார் என்று போட்டு விட்டால் போச்சு. சொன்னவரை எங்கே தேடுவது? இதற்கு, “வேறு யாரவது ஒருவர் இப்படி பேசமுடியுமா? அம்மதத்தை சாராத ஒருவர் அம்மதத்தின் குறைகளை பற்றி அமமதவர்களிடையே இப்படி பேசிவிட முடியமா. தன்னிகரில்லா தலைவர் பெரியார் ஒருவரால் மட்டுமே முடியும்!!!” என்று பாராட்டுப் பத்திரம் வேறு!

    //மௌல்வி ஆஜீ அப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக்களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார்.// வருபவர்களையும் வரவொட்டாமல் செய்து விட இப்படிப் பட்ட பேச்சால் தான் முடியும். ஒரு கண்ணில் வெண்ணெய். ஒரு கண்ணில் சுண்ணாம்பு. இந்துக்களை இகழ்ந்து முஸ்லிம்களிடத்திலே பேசி கைத் தட்டல் வாங்கிக் கொண்டு, அவர்களையும் பெயருக்கு அறிவுரைகள் வழங்குவது போல் நடித்து, கடைசியில் அவர்களின் புனித யாத்திரையைப் பெருமைப்படுத்தி, ” முஸ்லீம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று” வலிக்காமல் கேப்பில் கிடா வெட்டி விட்டு சாதுர்யமாக வந்துள்ளார். அவர்கள் சகோதரத்துவம் வாய்ந்தவர்களாம். ஹிந்துக்கள் மோசமானவர்கலாம். இது தான் அவர் பேச்சின் மொத்த சாராம்சம். இடையிடையே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்வது போல், ”ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.” என்று பொதுவாக முடித்து விட்டார். வேறென்ன செய்ய முடியும்? அவர்கள் அழைத்து விட்டனர். இவர் கடவுள் மறுப்பாளர் என்று தெரிந்தே எதற்கு அழைத்தனர்? ஹிந்துக்களைத் திட்டுவார், நாம் கேட்டு சிறிது மகிழலாம் என்று! இவரும் போன காரியத்தைக் கச்சிதமாக செய்து விட்டார். ஆன்மத்தேடலா? ஆளை விடுங்கப்பா!

  22. வஹாபிகளான நாங்கள் இன்று என்ன சொல்கிறோமோ அதைத்தானே அன்றே பெரியாரும் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா…பெரியாரும் வஹாபியா? 🙂

    //அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை //

    இது தவறான புரிதல். முகமது நபி பிறந்த நாடு என்பதனால் அந்த பூமி புண்ணியமாகி விடவில்லை. உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது. இதை அங்குள்ள மௌலவியாவது பெரியாருக்கு விளக்கி சொல்லியிருக்கலாம்.

  23. ஜனாப் சுவனப்பிரியன்
    “உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது”. உலகில் கஃபாவிற்கு முன்னால் கோயில்களே எழுப்பபட்ட வில்லையா. என்ன? ஏன் அபிராஹாமிய மதங்களில் மூத்ததான யூதசமயக்கோயில் ஏதும் முன்னர் கட்டப்படவில்லையா. வரலாற்று ஆதாரங்கள் தேவை.

  24. சுவனப்ரியன் சார்

    //
    இது தவறான புரிதல். முகமது நபி பிறந்த நாடு என்பதனால் அந்த பூமி புண்ணியமாகி விடவில்லை. உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது. இதை அங்குள்ள மௌலவியாவது பெரியாருக்கு விளக்கி சொல்லியிருக்கலாம்.

    //

    அட 🙂

    இஸ்லாத்துக்கு முன்னாடி அந்த இடம் பாகன்களிடமிருந்தது தானே? வஹாபிகள் அப்போ ஸல் அவர்களுக்காக அங்க போகல. இந்த பாகன்களின் புண்ணியத் தலத்தை மதித்தே போகிறார்கள் என்பதை அறிய சந்தோசமா இருக்கு.

    வஹாபிகளுக்கு தான் ஆலயத்தில் புண்ணியம் கிண்ணியமேல்லாம் கிடையாதே. எதுக்கு இம்புட்டு காசு செலவு பண்ணி போய் வாறீங்க?

  25. Vidhya,
    அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேகருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே நடத்துகின்றார்கள்.

    Correct, it requires lot of “guts” to criticise your own religion in front of other religion’ people. 🙂

  26. //வஹாபிகளுக்கு தான் ஆலயத்தில் புண்ணியம் கிண்ணியமேல்லாம் கிடையாதே. எதுக்கு இம்புட்டு காசு செலவு பண்ணி போய் வாறீங்க?//

    இனம், நிறம் எல்லாம் துறந்து தூய வெள்ளை ஆடையை அதுவும் தைக்கப்படாத வெள்ளை ஆடையை உடுத்திக் கொண்டு பெரும் கோடீஸ்வரர்களும் ஏழைகளோடு ஒன்றாக செலவிடும் அந்த 10 நாட்களில் மனிதன் பண்பட்டு விடுகிறான். குல வெறி, சாதி வெறி, நிற வெறி, பொருளாதார வெறி அனைத்தையும் தூரமாக்குகிறது இந்த ஹஜ் பயணம். இதை நேரில் அனுபவித்ததனால் சொல்கிறேன்.

  27. திரு சிவஸ்ரீ விபூதி பூஷன்!

    //“உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது”. உலகில் கஃபாவிற்கு முன்னால் கோயில்களே எழுப்பபட்ட வில்லையா. என்ன? ஏன் அபிராஹாமிய மதங்களில் மூத்ததான யூதசமயக்கோயில் ஏதும் முன்னர் கட்டப்படவில்லையா. வரலாற்று ஆதாரங்கள் தேவை.//

    இறைத் தூதர் ஆபிரஹாமுக்கு முன்பும் பல தூதர்கள் வந்துள்ளனர். முதல் மனிதர் ஆதம் இறைவனை வழிபட கட்டிய பள்ளியை ஆபிரஹாம் புணருத்தானம் செய்தார். அதுதான் தற்போது கஃபா என்று அழைக்கப்படுகிறது. பிறகு தான் உலகம் முழுக்க பல ஆலயங்கள் இறைத் தூதர்களால் உருவாக்கப்பட்டதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. ஜெருசலத்தில் உள்ள பள்ளியும் மிக பழமை வாய்ந்தது.

    திருக்குர்ஆன் கூறுவது.
    3:96. இறை வணக்கத்திற்கென மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக மக்காவில் உள்ளதுதான். அது பாக்கியம் மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

  28. திருவள்ளுவரின் பெண்ணுரிமை

    தற்காலம் நமது தமிழ் நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூற்களிலெல்லாம் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகிற தானாலும் அதையும் பார்ப்பனர்களோ, சைவர்களோ, வைணவர்களோ மற்றும் எந்த பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்க ளென்றாலோ திருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

    இவ்வளவும் இருந்தாலும், திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன? என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரை தம்சமயத்தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை தம்சமயத் தலைவர்கள் என்கிறார்கள். சமணர்கள் அவரை தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒருசாரராகிய பறையர் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரை தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகின்றார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ, மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேல் லோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களையும் பார்க்கக் காணலாம்.

    எனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர், தற்காலம் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள் புராணங்கள் முதலாகியவற்றை எல்லாம், ஏற்றுக் கொண்டு, பார்ப்பனியம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி, கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு, தங்களை வெளியில் சமரச சன்மார்க்க சமயத்தவர்கள் என்றும் உள்ளுக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும், மற்றும் இதுபோல் உள்ளொன்றும் புறம் ஒன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்து கொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இப்போதைய சீர்த்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகின்றார்.

    இவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளில் உள்ள நீதிகள் ஒருபுறமிருக்க, திருவள்ளுவர் மனைவியாகிய வாசுகி அம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமல் இருக்கமுடியாது அதாவது வாசுகி அம்மையாரை திருவள்ளுவர், தம் மனைவியாக ஏற்றுக் கொள்ளுமுன் ஆற்றுமணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க, அவ்வம்மையார் அந்தப்படியே மணலைச் சாதமாகச் சமைத்துக் கொடுத்து திருவள்ளுவருக்குத் தமது கற்பைக் காட்டினாராம்.

    அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.

    திருவள்ளுவர், ஒருநாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழ உடனே அம்மையாரைக் கூப்பிட்டு விளக்கேற்றிக் கொண்டுவா நூற்கதிரைத் தேடவேண்டும் என்று சொல்ல, அம்மையார், பகல் நேரத்தில் விளக்கெதற்கு என்று கேட்காமல் கேட்டால் பதிவிரதா தன்மைக்கும், கற்புக்கும் பங்கம் வந்துவிடும் எனக்கருதி உடனே விளக்குபற்ற வைத்துக் கொண்டு வந்து கொடுத்தார்களாம்.

    ஒருநாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது சாதம் சுடுகின்றது என்று சொன்னவுடன் அம்மையார், பழைய சாதம் சுடுமா என்று கூடக் கேட்காமல், கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதி, உடனே விசிறி எடுத்துக் கொண்டு வந்துவீசி ஆற்றினாராம்.

    திருவள்ளுவர், அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாக கொண்டு வந்து வைத்துவிட்டு சாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும், இது எதற்கு? என்று கேட்காமல் – கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப்படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் இறுதியான காலத்தில்
    அம்மையார் உயிர் போகாமல் வாதாடிக் கொண்டிருக்க அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது அம்மையார் பயந்துகொண்டு தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் வைக்கச் சொன்னீர்களே! அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றே ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர்போகாமல் வாதாடி மரணவதைபடுகிறேன் என்று சொன்னாராம். பிறகு திருவள்ளுவர் தயவு செய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை அதாவது – சாப்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம்.

    இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச்செருகலாகவோ கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால், கற்பனையல்லாத புராணம் எது? அதற்கு என்ன பரிட்சை? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக.

    —————-

    சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை – ”குடிஅரசு”, 20-01-192

  29. பெரியார் ஒரு குழப்ப வாதி. கள்ளுக்கடை மறியல், மதுவிலக்கு என்று சொல்லிக்கொண்டு , காங்கிரஸ் என்ற கட்சியில் இருந்தபோது , தனக்கு சொந்தமான தோப்புக்களில் இருந்த தென்னை மற்றும் பனை மரங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி சாய்த்தவர். அவை என்ன பாவம் செய்தன ? தென்னை மரம் தேங்காய், ஓலை, இளநீர் ஆகிய பலனுள்ள பொருட்களை தருகிறது. பனைமரத்தில் இருந்து நுங்கு, பனை வெள்ளை, கருப்பெட்டி, பனங்கற்கண்டு ஆகியவை கிடைக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் கருதிப்பார்க்காமல் , பெரியார் என்ன சொன்னார் என்ன செய்தார் ? மரம் இருந்தால் தான் கள்ளு இறக்குவான் : எனவே மரத்தை எல்லாம் வெட்டு என்றார். எவ்வளவு அறிவுக்களஞ்சியம் ? அது சரி மனிதர்களில் சிலரோ பலரோ அடிக்கடி தவறு செய்கிறார்கள் என்பதற்காக , மனித இனம் இருந்தால் தானே தவறு செய்ய முடியும்? எல்லா மனிதர்களையும் கொன்று விடு என்று சொல்வது சரியா ? பெரியார் ஒரு பெர்வெர்ட். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்ட கோமாளி. அவ்வளவு தான். திருவள்ளுவரைப்பற்றி சஞ்சய் மேலே கூறியுள்ள பெரியாரின் கட்டுரை ஒரு கோமாளியின் குழப்பமே ஆகும். இந்து மதத்தில் பல நீதிக்கதைகள் உள்ளன. நீதிக்கதைகள் உண்மை நிகழ்ச்சியா என்று யாருக்கும் தெரியாது. சஞ்சய் போன்றோர் சுயமாக சிந்திக்க வேண்டும். இந்து மதத்தின் சிறப்பு என்ன வென்றால் , நீங்களே உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பது தான். நீங்கள் அடிமை அல்ல. உங்களுக்கு சரியானதை, சிந்தித்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீங்களே புதிய முறைகளை உருவாக்கலாம் என்று நமது உபநிஷதத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிற்க, பெரியார் எனக்கு மூடர்கள், முட்டாள்கள் மட்டுமே தேவை என்றார், நீங்கள் முட்டாளா அல்லது மூடரா ? அவர் கருத்தை படித்தால் நீங்கள் மூடரே என்று நீங்களே முத்திரை குத்திக்கொள்வது போலாகும். தெளிவு பெறவேண்டுமானால் தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, அம்மா ஜெயஸ்ரீ சாரநாதன், வெங்கடேசன் ஆகியோரின் அனைத்து கட்டுரைகளையும் படித்துவிட்டு, நீங்களே உண்மையை தேடுங்கள். உங்களுக்கு உண்மையை அறியும் பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கை மிக மிக இனிமையானது. ஆனால் மனித வாழ்க்கை மிக மிக கேவலமானது என்ற கண்ணோட்டத்திலேயே பெரியார் பார்க்கிறார். அவர் எப்போதுமே தவறான பாதைகளை காட்டி சமுதாயத்தை கெடுத்தவர். குளம் ஊரில் உள்ள பொதுமக்கள் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். குளத்தில் பாசியும், குப்பை கூளங்களும் அதிகம் பிளாஸ்டிக் பைகளும் மிதக்கின்றன என்றால் நாம் என்ன செய்யவேண்டும் ? ஒரு பத்து பேரை சேர்த்துக்கொண்டு, குளத்தில் இறங்கி பாசி , குப்பைகள், மற்றும் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்ய வெளியே எடுத்து எறியவேண்டும். அதை செய்யாமல் குளக்கரையில் நின்று கொண்டு , இந்த குளம் ஒரே குப்பையாக இருக்கு என்று சொல்லிக்கொண்டு ஒரு 94 வருடகாலத்தி வீண் செய்தவர் தான் பெரியார். சஞ்சய் தயவு செய்து சிந்தியுங்கள் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

  30. முகம்மது நபியும் – வள்ளுவப் பெரியாரும்

    1400 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டில் தோன்றிய முகமது நபி அவர்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவப் பெரியாரும் அடிப்படைத் தத்துவத்தில் சமமான சீர்திருத்தவாதிகளேயாவர்.

    நபிகள் நாயகம் அவர்கள் மக்களுக்குப் போதித்த நல்லறிவுக் கருத்துகளும், வள்ளுவப் பெருந்தகையார் மக்களுக்குப் போதித்த அறிவுக் கருத்துகளும், ஒரே தன்மையுடையன என்றே கூறலாம். நபிகள் நாயகம் அரபு மக்களின் காட்டுமிராண்டித்தன்மையை எதிர்த்துப் போராடி, அறிவுக் கருத்துக்களை நாட்டில் பரப்பினார்.

    வள்ளுவப் பெருந்தகை ஆரிய மக்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட காட்டுமிராண்டித் தன்மைகளை எதிர்த்துப் போராடி அறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார்.

    நபிகள் நாயகம் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர். வள்ளுவப் பெருத்தகையார் அறிவு நம்பிக்கை கொண்டவர். நபிகள் நாயகம்கடவுளால் தனது கொள்கைகளை மக்களுக்கு அறிவுறுத்த தூதராக அனுப்பப்பட்டவர் என்று சொல்லப் பட்டவர்.

    வள்ளுவப் பெருந்தகையார் கடவுள் ஒருவர் இருப்பதாகவோ, கடவுளுக்கும் தனக்கும் யாதாவதொரு சம்பந்தம் இருப்பதாகவோ சொல்லவேயில்லை; கருத்துக் கொண்டிருப்பதாகக் காட்டவும் இல்லை.

    நபிகள் நாயகம் தன் கருத்தில், தனது உபதேசத்தில் வெற்றி பெற்றார். பல கோடி மக்களைத் தன்னைப் பின்பற்றுபவர்களாகவும், சிஷ்யர்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் மதத் தலைவராகவும் ஆனார்.

    வள்ளுவப் பெருந்தகையோ எவருக்குமே சமயத் தலைவராகவில்லை. தன்னைப் பின்பற்ற தனக்கு சிஷ்யர்களாக ஒருவருமே இல்லாதவரானார்; இதன் காரணம் என்ன என்றால் அரபு நாட்டில் ஆரியன் (பார்ப்பனன்) இல்லை; தமிழகத்தில் (இந்திய நாட்டில்) பார்ப்பனன் எல்லாத் துறையிலும், மற்ற மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கங் கொண்டு இருந்ததே, இருப்பதே ஆகும். தமிழ் நாட்டில் மாத்திரமே வள்ளுவரைப் பாராட்டுவோர் சிலர் (இப்போது சற்று அதிகமானவர்கள்) உண்டு என்றாலும், அவர்கள் வள்ளுவரைப் பின்பற்றுபவர் என்று சொல்லி விட முடியாது.

    பாராட்டுகிறவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். நபிகள் நாகயக்தை முஸ்லிம் மக்கள் எல்லோரும் கடவுளின் தூதர் என்றே கருதி பக்தியும், பயமும் மரியாதையும் காட்டி வருவதோடு, நாயகத்தைப் பின்பற்றி வழிபடுவதாகவே கூறுகிறார்கள்.

    வள்ளுவப் பெருந்தகையாரைத் தமிழகத்தில் வள்ளுவர் கொள்கைக்கு எதிரியான சைவன், தன் சமயத்தவர் என்று சொல்லி அவரது பெருமையைக் கெடுத்தான்.

    வள்ளுவப் பெருந்தகையாகரைத் தமிழகத்தில் சைவனாவது – வைணவனாவது நாயன்மார்களைப் போன்றோ, ஆழ்வார்களைப் போன்றோ கூட எவனும் கருதுவதில்லை. சைவனுக்குத் தேவாரம், திருவாசம், பெரியபுராணம் முதலிய பக்தி நூல்களும் புராணங்களும்தான் சமய ஆதாரமாகவும், சமய வழிபடு நூல்களாகவும், வைணவனுக்கு இராமாயணம், பாரதம், பாகவதம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய பக்தி நூல்களும், புராணங்களும்தான் சமய ஆதாரங்களாகவும், சமய நூல்களாகவும் இருக்கின்றனவே ஒழிய, இவர்களுக்குச் சமயத் தலைவரோ, சமயத் தலைவர் கூறிய ஒழுக்க நூல்களோ காண்பதற்கு இல்லை; மற்றும் நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோருக்குக் கடவுள் உண்டு; கடவுள் கட்டளை உண்டு; அக்கடவுளிடம் ஒழுக்கம், உயர்வு உண்டு.

    சைவர், வைணவர் ஆகியோருக்கும், வள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டுவோருக்கும் ஒரே கடவுள் இல்லை; ஆனால் பல கடவுள்கள் உண்டு; அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையும், பெயரும், நடப்பும் கொண்டதாகும் என்பதோடு, கடவுள்களுக்கும், ஒழுக்கம் என்பவற்றிற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாத தன்மை உடையனவாகவே இருக்கும். கடவுளிடம் ஒழுக்கம் இருப்பதாகச் சொல்லலாம்; ஆனால் நடத்தையில் இருக்காது.

    நபிகள் நாயகம், ஒரே ஆண்டவன் உண்டு; அவன் ஊர்பேர் உருவம்,பிறப்பு இறப்பு,விருப்பு வெறுப்பு வேண்டியது வேண்டாதது இல்லாதவன் என்று சொன்னதோடு, இருப்பதாகச் சொல்லுவது, பாபம்,தவறு, அறியாமை மடமை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

    சைவனும், வைணவனும், வள்ளுவரைப் பாராட்டுகிறவனும் நபிகள் நாயகம் சொன்ன கடவுள் தன்மைக்கு மாறாகப் பல கடவுள்களையும், அவற்றிற்குப் பல உருவங்களையும், பல பிறப்புகளையும், இறப்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், மனைவி மக்களையும், மற்றபடி கொலை, கூடாஒழுக்கம் முதலிய பாதகச் செயல்களையும், மற்றும் பல காட்டுமிராண்டித்தனமான குணங்களையும், நடப்புகளையும் கொண்டவைகளாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சிவனோ, விஷ்ணுவோ, பிரம்மாவோ மற்றும் சைவ, வைணவ சமயத்தவர் கடவுள்களாகக் கருதும் மற்றவர்களோ கடவுள்கள் அல்ல; தேவர்களே ஆவார்கள் என்பதுதான் அவர்களைப் பற்றிய ஆதாரங்கள், வேத, சாஸ்திரங்கள் கூறுவனவாகும்.

    ஏனெனில், இவர்கள் எல்லோரும் மேற்கண்ட ஒரு கடவுளை ஒரு கடவுள் வணங்கியதாகவும், அவைகளைக் குறித்து தவம் செய்ததாகவும், ஒருவரிடம் ஒருவர் வரம் பெற்றதாகவும், ஒருவரிடமிருந்து ஒருவர் தோன்றியதாகவும், ஒருவரை ஒருவர் தோற்றுவித்ததாகவும், மற்றும் பல ஆபாச காரியங்கள் செய்ததாகவும் கூறப்பட்டிருக்கின்றன. இப்படிக் கூறி இருப்பதானது வேத, சாஸ்திர, உபநிஷத், புராண இதிகாசங்களிலேயே ஒழிய, சமய விரோதிகளாலோ, வேறு சமயத்தார்களாலோ அல்ல; நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவதாகக் கூறி இஸ்லாம்களாக இருக்கிற மக்கள் யாவரும் நபிகள் நாயகம் சொன்னபடி நடப்பதாகவும், நாயகம் நடந்தபடி நடப்பதாகவும் சொல்லி நடித்து வருகிறார்கள். ஆனால் சைவனோ, வைணவனோ, வள்ளுவப் பெருந்தகையாரைப் பாராட்டிப் போற்றுபவனோ, அவரவர் கடவுள்கள் சொன்னது போலவோ, நடந்தது போலவோ நடப்பது கிடையாது; நடிப்பதும் கிடையாது. சாம்பலைப் பூசிக் கொண்டால் சைவன் செம்மன், களி மண் பூசிக் கொண்டால் வைணவன்; குறளில் இரண்டு பாட்டைப் பாடிவிட்டால் குறளன் என்று ஆகிவிடுகிறார்கள்.

    ஆனால், அதோடு கூடவே சிவன், விஷ்ணு முதலான கடவுள்களை அடைய எப்படிப்பட்ட கொலைபாதகச் செயலையும், ஒழுக்கம் கெட்ட செயலையும் செய்யலாம் என்கின்ற எண்ணத்தையும், நடத்தையையும் கொண்டவர்களாகவே பெரும்பாலான சைவர்கள், வைணவர்கள் நடந்து வருகிறார்கள்; நடக்க ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

    நபிகள் நாயகம் அவர்கள் பக்தி, அன்பு, – ஒழுக்கம் ஆகிய மூன்றையும் ஆண்டவன் கட்டளையாக அறி-வுறுத்தியிருக்கிறார். இன்று பெரும்பாலாக நாம் காணும் முஸ்லிம்களிடம் பக்திதான் அதிகமாக இருக்கிறது. அன்பும் ஒழுக்கமும் இருக்கின்றது என்றாலும், பக்தி இருக்கின்ற அளவில் 10 இல் 100 இல் ஒரு பங்கு கூட காண முடியாது. இப்படி இருப்பது முஸ்லிம்களிடையே மாத்திரம் அல்ல; இது மனித ஜீவ இயற்கையே ஆகும். எப்படி எனில் பக்திக்காகப் பொருள் நட்டமோ, ஆசை பங்கமோ அவசியமில்லை. உதாரணமாக 5 வேளைத் தொழுகையின் மூலம் பெரிய பக்தியைக் காட்டி விடலாம். இதற்குப் பொருள் நட்டம் அடைய வேண்டிய அவசியமில்லை; ஆனால் விவகாரம் கூடாது; திருட்டு கூடாது; மோசடி கூடாது; பொய் கூடாது; பித்தலாட்டம் கூடாது; உபகாரம் செய்ய வேண்டும்; அன்பு காட்ட வேண்டும் என்பன போன்ற விஷயங்களைக் கடைப் பிடிப்பதனால் இதில் பொருள் நட்டமும், லாபக் குறைவும், ஆசைப் பங்கமும், மனக்குறையும் (முதலிய பல) ஏற்படுகின்றன. இதனாலேயே உலகில் ஒழுக்கமுடையவர்களை விட பக்தர்களும், பக்திமான்களும் உலகில் மலிந்து கிடக்கிறார்கள். ஒழுக்க உபதேசிகளைவிட பக்தி உபதேசிகள் ஏராளமாய் கிளம்பிவிடுகிறார்கள். முஸ்லிம்களும் மனிதர்களே ஆதலால் மனிதத் தன்மையை அவர்களுக்கும் புகுத்தினேன்.

    வள்ளுவப் பெருந்தகையார் கடவுளையோ, பக்தியையோ காட்டவில்லை; ஒழுக்கத்தையும், அறிவையுமே அதிகமாக முக்கியமாகக் காட்டியுள்ளார். நபிகள் நாயகம் அவர்களும் அறிவைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்; என்றாலும், தான் சொன்னவற்றை எல்லாம், அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்; அறிவுக்கு ஏற்றால் ஏற்றுக்கொள்; இல்லாவிட்டால் தள்ளிவிடு என்று சொல்லவில்லை. ஏனெனில், நாயகம் தாம் சொல்லுவதாக எதையும் சொல்லவில்லை. எல்லாம் பெரிதும் ஆண்டவன் சொல்லச் சொன்னதாகப் பொருள்படும்படியாகவே சொல்லியிருக்கிறார். ஆண்டவனால் சொல்லச் செய்தவைகளை மனிதன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது என்றால், அப்போது ஆண்டவனின் கருத்து என்ன ஆவது? என்கின்ற பிரச்சினை எழும்.

    ஆதலாலேயே இஸ்லாத்தில் அறிவுக்கு மதிப்பு இருந்தாலும், நபிகள் நாயகம் சொன்னவற்றிலும், குர் ஆனில் சொல்லப்படுபவைகளிலும் அய்யம் கொண்டோ, தெளிவு ஏற்படவில்லை என்றோ, ஆராய்ச்சி செய்ய எந்த முஸ்லிமும் கருதக்கூடாது; அல்லது முயலக்கூடாது என்பது முஸ்லிம்களின் கொள்கைகளில் ஒன்று; (அது) அமலில் இருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு காரணம் என்னவென்றால் ஆண்டவன் சொன்னதாகச் சொல்லப்படுபவை எல்லாம் அறிவுக்குப் பொருத்தமானது என்பது மாத்திரமல்லாமல், எக்காலத்திற்கும் பொருத்தமானது என்றும் கருதப்படுகிறது.

    அவை இன்றைக்கு யாருக்கு எப்படிப்பட்டாலும், அவை நல்ல எண்ணத்தோடும், உண்மையான நம்பிக்கையோடும், மக்கள் பால் உள்ள மெய் அன்போடும் சொல்லப்பட்டவை என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக் கொண்டே தீருவான். வள்ளுவப் பெருந்தகையார் ஆண்டவன் எனக்குச் சொல்லி உனக்குச் சொல்லச் சொன்னான் என்று சொல்லாவிட்டாலும், அவர் தமக்குச் சரி என்று பட்டதையும், (தாம்) உண்மை என்று கருதியதையும் மக்களுக்கு நலம் பயக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மீதே பல கூறியிருக்கிறார். என்றாலும்,

    யார் யார் வாய்க் கேட்பினும், அவற்றின் மெய்ப் பொருள் காண்பது மனிதன் கடமை என்றும், எது பற்றியதாயினும் மெய்ப்பொருள் காணவேண்டியது மனிதனின் கடமை என்றும் கூறியிருக்கிறார். இவர் மாத்திரம் அல்லாமல் புத்தர் பெருமான், நான் சொல்வதைக் கூட நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டாம்; உன் ஆராய்ச்சி, அறிவு, என்ன சொல்லுகிறதோ அதை ஏற்றுக் கொள்; நம்பு என்றார். இவர்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள் என்றால், இவ்விருவரும் தாங்கள் மனிதர்கள் என்று தங்களை முடிவு செய்து கொண்டதோடு, மனிதத் தன்மையை உணர்ந்தவர்கள். ஆதலால் தங்கள் கருத்து என்கின்ற தன்மையில் பேசி இருக்கிறார்கள். அன்றியும் தங்களுக்கு மேற்பட்ட ஒரு கடவுள் இருந்து கொண்டு தங்களை நடத்துகிறார்; தங்களைச் சொல்லச் சொல்லுகிறார் என்கின்ற நம்பிக்கை இல்லாதவர்கள்; இருப்பதாகக் கூறாதவர்கள்.

    எப்படி இருந்தாலும், நபிகள் பெருமானும், வள்ளுவப் பெருந்தகையாரும் மக்கள் நல்வாழ்வுக்கு ஆகவேண்டிய கருத்துகளை – காரியங்களை நல்ல எண்ணத்துடன் எடுத்துக் கூறியவர்களேயாவார்கள். மதவேறுபாட்டால் பெரியோர்கள் எல்லாம் மதவாதிகளாகக் கருதப்படுபவர்களாக ஆகிவிட்டதால், மக்கள் யாவருமே மதக்காரர்களாகப் பிரிவினைப்பட்டவர்களாகி விட்டதால், ஒருவர் சொன்னதை அவர் மதக்காரர் அல்லாதவர் சரியானபடி மதிப்பதில்லை; கொள்ளுவதும் இல்லை. இதற்கு மற்றொரு இயற்-கைச் சங்கடம் என்னவென்றால், இப் பெரியார்கள் சொன்னவை எல்லா மக்களுக்கும், எக் காலத்திற்கும் பொருத்தமானது; ஏற்றுக் கொள்ளத் தக்கது என்கின்ற வாதமாகும். இந்த வாதம் இயற்கைக்கு முரண்பட்டதாகும். காலம் மாறுதல் அடையத்தக்கது; இயற்கை சக்திகள் என்பவை எல்லாம் மாறுதல் அடையத் தக்கவையாகும்; அவற்றிற்கு ஏற்பக் கருத்துகளும் மாறும் இயல்புடையதாகும்.

    எனவே, மாற்றம் ஏற்படவேண்டும் என்று சொல்லப்படுவதாலேயே பெரியார்களுடைய கருத்துகள் தவறுடையதாக ஆகிவிடாது.

    – தந்தை பெரியார் ,”விடுதலை”, 19-8-1955

  31. பெரியார் பற்றிய முழுமையான் ஆய்வின்றி… பார்ப்பன ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரை இது… ஒரு கருத்டிலிருந்து இன்னொரு கருத்துக்கு மாரும்போது பெரியார் அதற்கான காரணங்களை கூறாமல் இருப்பது இல்லை… இக்கட்டுரை அப்படியாக எழுதப்படவில்லை…. மாறுதல் என்பதே மாறாதது என்பதை கட்டுரையாளர் மறந்து விட்டு எழுதியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *