வீட்டிற்கு வந்து புத்தக அலமாரிகிட்ட போகும்போது, “கர்ர்ர்…கர்ர்ர்” என்று சிரிப்புச் சத்தம் கேட்டது. ஓஷோபிரியன் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை.
ஏறிட்டுப் பார்த்தால் புத்தக அலமாரியில் படத்தில் இருந்த பாடிகார்ட் முனீஸ்வரன், சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். ஓஷோபிரியனுக்கு ஜிவ்வென்று உச்சியில் ஏறியது. ஆனால், படத்தைத் திட்ட முடியுமா? அதிலும் சாமி படம் வேறு. படத்தில் இருக்கும் சாமி லெட்டர் எழுதுவதும், வெளியே வந்து பேசுவதும் மேஜிக்கல் ரியலிஸக் கதைகளிலும், விட்டலாச்சார்யா-ராம. நாராயணன் படங்களிலும், இட்லிவடை ப்ளாக்கிலும் தான் நடக்கும். மேலும் இந்தக் கதை மேஜிக்கல் ரியலிஸக் கதை இல்லை. ரியலிசத்தைச் சொல்லும் கதை. இப்படி எல்லாம் எண்ணியவாறு வேறு எதையோ தேடுவது போல தவித்துக்கொண்டிருந்தார். களுக்கென்று சிரிப்புச் சத்தம்.
அவ்வளவுதான். ஓஷோபிரியன் சுத்தமாகக் கட்டுப்பாட்டை இழந்தார்.
“என்ன நெனச்சிட்ருக்க? இல்ல, என்னதான் நெனச்சிட்டிருக்க? உன்ன மாதிரி என்னயும் நெனச்சிக்கிட்டயா? எனக்கு சக்தி எதுவும் கிடயாதுப்பா. கேவலம், பெத்த புள்ளங்கள பள்ளிக்கூடத்தில சேர்க்கணும்னாக்கூட மதம் மாறச் சொல்றானுங்க, இல்லன்ன அந்த மதம் நடத்துற பள்ளிக்கூடத்துக்கு லட்சக்கணக்கில டொனேஷன் கேக்கறானுங்க. அதக்கூட தரமுடியாத வக்கத்தவன் நானு. எங்கிட்ட போய் நீ ஓன்னோடு சக்திய காட்டுறயா? ஆனா, நான் பயந்திருவனா? ஒன்ன மாதிரி மூக்க பிடிச்சுக்கிட்டு ஒட்கார்ந்தா ஒன்ன விட பெரிய ஆளாயிருவேன். ஏதோ, என்னோட தருமம் எதுன்னு நானே முடிவு பண்ணிக்கிட்டு சுதந்திரமா இருக்கலாம்னுதான் சும்மா இருக்கேன். நான் என்ன ஒன்ன மாதிரி போலி சாமியாரா? சவூதில ஒழுக்கம் பேசுறவனுங்கள்லாம், அந்த நாட்டத் தாண்டிப் போனா அஜால்குஜால்தான் பண்றான். ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் வந்து வயசுக்கு வராத சின்ன பொண்ணுங்கள தற்காலிகமா காசு கொடுத்து வச்சுக்கிறான். சவூதீல இருக்கறவரைக்கும் சுத்தமா மூடிட்டு இருக்கறவுளுங்க, வெளியே போனா வெள்ளைக்காரிகளே வெக்கப்படறாளுங்க.
அந்த மாதிரி, கர்நாடகாவுல கவுச்சி சாப்பிடாம சுத்தபத்தமா சைவ சாமியாரா இருக்கிற நீ தமிழ்நாட்டுக்கு வந்துட்டா ஊர்றது, பறக்கறதையெல்லாம் சாப்பிட்டுட்டு ஊறவச்சது ஊத்தறதுக்கு வச்சதெல்லாம் குடிச்சு எங்கள ஒளறவிட்டுட்டிருக்க. இது தெரியாம, கர்நாடகக்காரனுங்கள்ளாம் உன்ன சிவனோட அவதாரம், கேட்டா தருவான் வரம்னு சொல்லிக்கிட்டு ஒரு நாளைக்கு நாலு வேளை குளிக்கிறானுங்க. குளிக்கும்போதுகூட ஒனக்குப் பயந்துகிட்டு ஹமாம், மெடிமிக்ஸுன்னு ஆயுர்வேத சோப்தான் போட்டுக்கிறானுங்களாம். மத்த சோப்பில மிருகக் கொழுப்பு இருக்காம். நீ இங்க பண்ற ரவுசு அவனுகளுக்கு எப்படித் தெரியப் போவுது. அவனும் காவிரி தாண்டமாட்டான். காவிரியையும் தாண்டவிடமாட்டான். ஆடு. ஆடு. நீ எவ்வளவுதான் ஆடுவேன்னு நானும் பாக்கேன். மவனே, ஒரு நாளைக்கு ஏங்கையில மாட்டமலா போயிருவ.”
படத்தில் பாடிகார்ட் முனீஸ்வரன் கொஞ்சம் பயந்துபோனது போலத் தெரிந்தது. மேஜிக்கல் ரியலிஸம், நடைமுறை உண்மைகளைவிட பலம் வாய்ந்ததுதான்.
“ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும். ஆட்டம் காட்டற முனீஸ்வரன அதட்டித்தான் அடக்கணும் போலும்” என்று நினைத்துக்கொண்டார். கை தன்னிச்சையாக, பாடிகார்ட் முனீஸ்வரன் படத்துக்கு இடது பக்கத்தில் இருந்த புத்தகத்தை எடுத்தது. பிறகு அதைப் படிக்காமல் அப்படியே திருப்பி வைத்துவிட்டார். பிறகு, கைக்கு கிடைத்த புத்தகங்களை எடுத்து கண்ணுக்குப் பட்ட விஷயங்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தார்.
“அப்போது போப் இந்தியாவிற்கு வந்தார். அவரைத் தன்னோடு ஒரு பொதுவான அரங்கில் விவாதத்திற்கு வருமாறு அழைத்த ஓஷோ, அதே சமயம் போப்பின் வருகையை எதிர்த்து இந்துக்கள் நடத்திய போராட்டங்களையும் குறை கூறினார். இதன் பின்பு, ஓஷோவைப் பின்பற்றும் சன்னியாசிகள் இத்தாலி நாட்டு பாஸ்ப்போர்ட் பெற அனுப்பிய விண்ணப்பங்கள் நிரந்தரமாக காலதாமதப்படுத்தப்பட்டன. ஒருமுறை ஓஷோவினுடைய பேட்டியானது இத்தாலி நாட்டு தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பானது. அதற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டவுடன், போப் இனி ஓஷோவினுடைய எந்த நிகழ்ச்சியையும் தொலைக்காட்சியில் காட்டக்கூடாது என கட்டளையிட்டார். அது மட்டுமல்ல, ஓஷோவை எந்த கத்தோலிக்க நாடுகளும் அனுமதிக்கக்கூடாது என்றும் தடை செய்தார்.”
“ஆனால், இதே போப் உங்களுடைய காசைக் கரியாக்கிக்கொண்டு உலகம் முழுவதும் ஊர்வலம் வருகிறார். இந்தியாவிற்கும் வந்தார். அவர் எங்கே போனாலும், அந்த நாட்டை மண்ணை முத்தமிடுகிற ஒரு பழக்கம் வேறு அவருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் அதை வாத்திகனிலேயே செய்திருக்கலாம். எல்லா ஊரிலும் மண் கிடைக்கிறது, ஆனால் அதன் சுவைகள் வேறுபட்டவை. … போப் டெல்லிக்கு வந்தபோது நான் நேபாளத்தில் இருந்தேன். அவர் டெல்லியின் மண்ணை முத்தமிட்டபோது எனது அன்பர்களிடம் நான் சொன்னேன், ‘இந்து மதத்தினை முதன்முதலாக சுவைக்கிறார் போப்’. ஏனென்றால், பசுஞ்சாணியை சுவைக்காமல் இந்தியாவின் மண்ணை முத்தமிட்டுவிடமுடியாது. ஏனென்றால், பசுஞ்சாணிதான் இப்போது இந்து மதமாக இருக்கிறது.”
“போப்பானவர் இந்தியாவில் இருக்கும்போது அவரை ஒரு பொதுவான விவாதத்திற்கு நான் அழைத்தேன். ஆனால், ஒரு கோழையைப்போல அவர் அமைதியாகவே இருந்துவிட்டார் …….
அவரிடம் சொல்லுவதற்கு என்னிடம் பல விசயங்கள் உண்டு, ஏனென்றால் இந்த உலகின் இப்போதைய மிகப் பெரிய கிரிமினல் அவர்தான். இப்போது அவர் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கிரிமினல் வேலைகளையும் அவரிடம் எடுத்துச் சொல்ல நான் விரும்பினேன். இந்த பிரச்சினைகளையெல்லாம் யார் உருவாக்குகிறார்கள், இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமாக இருப்பது யார் என்பவற்றை ஒருவர் சுட்டினார் என்பது எதிர்கால நலனுக்காக குறித்துக்கொள்ளப்படவேண்டும்.
இவரிடம் நான் பல கேள்விகளைக் கேட்கவேண்டும். அவரிடமிருந்து ஒரு பதில்கூட கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த இருபது நூற்றாண்டுகளாக இருந்த போப்புகளில் ஒருவரால்கூட ஒழுங்காக பதில்சொல்ல முடிந்ததில்லை. ஏன், அவர்களின் ஏசுவிடம்கூட கேள்விகளுக்குப் பதில்கள் இருந்ததில்லை. …. கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், பகுத்தறிவுக்கு எந்த விதத்திலும் பொருந்தாத, விவாதத்தில் இறங்காமல் வெறும் அறிக்கைகளை மட்டுமே பேசியவர்தான் இந்த ஏசு.”
“போப்பின் இந்திய வருகையை இந்துக்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்துவது முற்றிலும் தவறு. ஏனென்றால், இது கீழை நாட்டின் மரபு இல்லை. இது மிகவும் ஆபாசமானது. போப்பைக் கீழைநாட்டுத் தொல்மரபின்படிதான் நடத்தவேண்டும். போப் எங்கு போனாலும், ஒரு பகிரங்கமான விவாதத்திற்கு அவரை நட்போடு அழைக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்.
மேலும், கிறுத்துவமானது ஒரு கேவலமான மூன்றாம்தர மதம். உயர்வான எதுவும் அதனிடம் இல்லை, சித்த புருசர்கள் யாரையும் அது தரவில்லை. மாபெரும் தத்துவவாதிகளை உருவாக்கவில்லை. அதனுடையது ஒரு பிச்சைக்கார பரம்பரை. போப் போகும் இடங்களில் எல்லாம் அவரை மரியாதையாகவும், அன்புடனும் விவாதத்திற்கு அழையுங்கள். இங்கே ஹிந்து ஞானிகள் இருக்கிறார்கள். பௌத்த ஞானிகள் இருக்கிறார்கள். ஜைன ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மதத்தின் அடிப்படைகள் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். அவை மிக மதிப்புமிக்கதாக இருக்கும், அத்தோடு மதம் என்றால் என்ன, அதன் சுவை என்ன என்பதை அவருக்குத் தெரியப்படுத்தும். இப்போது அவர் வெறும் மாட்டுச்சாணியைத்தான் சுவைத்துக்கொண்டிருக்கிறார்.
டெல்லி விமான நிலையத்தில் தரையை முத்தமிட்டபோது அவர் எதைச் சுவைத்தார் என்று நினைக்கிறீர்கள்? இந்த சுவையோடு அவரை அனுப்புவது சரியல்ல. அது சரியும் இல்லை. உண்மையான ஆன்மீகத்தை அவருக்குச் சுவைக்க நாம் தரவேண்டும்.
போப்பின் வருகையை இந்துக்கள் எதிர்ப்பதை நான் எதிர்க்கிறேன். இது அருவருப்பானது அத்தோடு கீழைத் தொல்மரபில் இல்லாத ஒன்று.
இந்தியாவில் பிறந்த மதங்களோடு ஒப்பிடக்கூடியதாக இந்தியாவிற்கு வெளியில் பிறந்த எந்த மதத்தையும் என்னால் காணமுடியவில்லை. மேற்கு நாடுகளின் ஒட்டுமொத்த அறிவியக்கமும் விஞ்ஞானத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதுபோல, இந்தியாவின் ஒட்டுமொத்த அறிவியக்கமும் மதத்தில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, (அந்த விஷயத்தில்) நம்மிடம் உரையாடத் தேவையான அறிவு எதுவும் இந்தக் குஞ்சன்களிடம் இல்லை. அவர்களது இறையியலுக்காகவோ, மதத்திற்காகவோகூட அவர்களால் வாதிட முடியாது – அதோடு அவர்கள் மதத்தன்மையுள்ளவர்களும் இல்லை. முக்கியமாக இந்த போப் வெறும் அரசியல்வாதி…
போப் வருகை குறித்து இந்துக்கள் செய்வதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அவர் ஒரு விருந்தினராக நடத்தப்படவேண்டும். ஆனால், கீழைமரபிற்கு சொல்லித்தர அவரிடம் எந்தப்
பாடமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டிவிடவேண்டும். கீழை நாடுகளுக்கு வரவேண்டுமானால் அவர் ஒரு மாணவராகத்தான் வரவேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக, இப்பேர்ப்பட்ட உயர்வான தத்துவ தரிசனங்களிடம் இருந்தும் மதங்களிடம் இருந்தும் விலகிப் போய், ஒரு மூன்றாம்தரமான – அதிலும் எந்தவிதமான அடித்தளமோ, வேர்களோ இல்லாத ஒரு இறையியலுக்கு – மாறியதன்மூலமாக அவர்கள் எப்பேர்ப்பட்ட தவறைச் செய்துள்ளார்கள் என்பது இங்கேயுள்ள கிறுத்துவர்களுக்குப் புரியவரும். போப்பினுடைய இந்த வருகையானது இந்த மண்ணுக்கேயுரிய படைப்பாற்றலோடு புத்திசாலித்தனமாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இப்போது இவர்கள் போராட்டங்களை நடத்தும் விதத்தால், ஹிந்துக்களுக்குக் கெட்ட பெயரும் போப்பின்மீது இரக்கமும் ஏற்பட்டுவிட்டது. அதற்கு இந்த போப் முற்றிலும் தகுதியற்றவர்.”
The Sword and Lotus புத்தகத்தை ஓரமாக வைத்தார் ஓஷோபிரியன். யோசிக்க ஆரம்பித்தார்.
என்னதிது, ஒரு இந்துத்துவவாதி சொல்லுவதையே இந்த ஓஷோவும் சொல்லுகிறார். மதிப்பிற்குரிய நண்பர் சொன்னது சரிதான். இந்துத்துவாவாதிகளுக்கும், ஓஷோவுக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருக்கின்றன.
ஓஷோ சொல்லுவதைப் பார்த்தால், இந்த ஹிந்துத்துவவாதிகளின் நோக்கம் தவறானதல்ல. ஆனால், அவர்கள் ஏன் தங்களுடைய தொல்மரபு குறித்த எந்தப் புரிதலும், அவதானிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்? எதனால், ஹிந்துக்களைப் போல போராடாமல், ஒரு கீழைமரபில் இல்லாத முறைகளில், ஆபாசமான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு கெட்டபெயரை வாங்கிக்கொள்ளுகிறார்கள்?
தங்களது தொல்மரபைக் கற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லாததாலா?
அல்லது தங்கள் தொல்மரபின்படி போராட, வாழ சுதந்திரம் இல்லாததாலா?
அல்லது தங்களுடைய வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் ஆபிரகாமிய இறையியலே ஆக்கிரமித்திருப்பதால், போராட்ட முறைகளில் இருந்து, உணவு, உடை, உறைவிடம், பிரச்சினைகளை அணுகும் முறை போன்ற அனைத்திலும் ஆபிரகாமியப் பார்வையையே பெற்று, அந்தப் பார்வையின்படி சரி, தவறு என்று போதிக்கப்பட்ட இறுக்கமான விஷயங்களை ஆராயாமல் உடலால் ஹிந்துக்களாகவும், உள்ளத்தால் ஆபிரகாமியர்களாகவும் இயங்குகிறார்களா?
புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் அவரது சிந்தனையில் குறுக்கிட்டது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
“நேற்றுத்தான் இத்தாலியில் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது – ஏனென்றால் நேபாளத்தில் இருந்து நேரடியாக நான் இத்தாலி போவதாக இருந்தேன். போப்பிடம் நான் பலமுறை சவால் விட்டேன், ஆனால் அந்த போப் ஒரு கோழை. எனவே, ரோமுக்கே போய், பைபிள் ஒரு புனித புத்தகம் என்பதை நிறுவுமாறு சவால் விட்டு, ஒரு பகிரங்கமான விவாதத்தில் ஈடுபட விரும்பினேன். அப்படி அவரால் நிறுவ முடியாவிட்டால் அந்த பைபிளை வாத்திக்கனிலேயே வைத்து சொக்கப்பானை கொளுத்தவேண்டும் – “நீ உடனடியாக உன்னுடைய இந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும், அத்தோடு இந்த புத்தகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கிறுத்துவம் என்கிற இந்த மடத்தனத்தை உடனடியாகக் கலைத்துவிடவேண்டும்”.
நேற்றுத்தான் எனக்கு தகவல் கிடைத்தது – நான் இத்தாலிக்கு வந்தால் என்னைப் பற்றி எந்தத் தகவலையும் செய்தித்தாட்கள், பத்திரிகைகள், வானொலிகள் வெளியிடக்கூடாது என்று அவருடைய சக்திக்குட்பட்ட அனைத்துக் கிறுத்துவ நாடுகளுக்கும் போப் கட்டளையிட்டிருக்கிறாராம் – பாராட்டும் தகவலானாலும் சரி-விமர்சனம் செய்யும் தகவலானாலும் சரி. ஏனென்றால் எப்படிப்பட்ட தகவலையும் இந்த ஆள் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுகிறான். எனவே, நீ ஆதரவாக இருப்பதோ எதிராக இருப்பதோ முக்கியமில்லை.
இந்த ஆள் என்னைப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரிகிறது; என்னை அவர் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒருவிஷயத்தை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்: குறைசொல்லும் பிரச்சாரம்கூட இறுதியில் எனக்குத்தான் உதவி செய்யும், ஏனெனில் இறுதியில் உண்மை என்னோடு இருக்கிறது.
அவருடைய கட்டளையானது எதிர்மறையாகவும் இல்லை. நேர்மறையாகவும் இல்லை. எந்தவிதமான விளம்பரமும் தரக்கூடாது. ஆனால், அவருக்குப் புரியாதது இத்தாலிக்குப் போனவுடன் நான் செய்யவிருக்கும் முதல்வேலையே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அறிவிப்பதுதான்: “எந்த பத்திரிக்கை என்னைப்பற்றி எழுதாமல் இருக்கிறதோ – பாராட்டியோ அல்லது அவதூறாகவோகூட – அது போப்பின் கையில் வெறும் பொம்மையாகவே இருக்கிறது. நீங்கள் உங்களுடைய புத்திசாலித்தனைத்தையும் விற்றுவிட்டீர்கள். ஒரு சில ரூபாய்களுக்காக நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள். செய்தியாகக்கூட ஒரு விசயத்தை உங்களால் தரமுடியாது. எனக்கு ஆதரவாக எழுதுங்கள் என்று நான் சொல்லவில்லை, நீங்கள் என்னவேண்டுமானாலும் எழுதுங்கள், என்னைப் பற்றி மோசமாகக்கூட எழுதுங்கள், எதுவும் என்னைப் பாதிக்காது”
யாராவது என்னைப் பற்றி அவதூறாக எழுதியிருந்ததை வாசித்துக் காட்டினால்கூட அவர் என்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறார். “எதனால் இவனுக்கு எதிராக அனைத்துப் பத்திரிக்கைகளும் எழுதுகின்றன?” நூலகத்திற்குச் செல்கிறார், சில புத்தகங்களைக் கண்டுபிடிக்கிறார், என்னைப் பற்றிப் புரிந்துகொள்ள முயல்கிறார்…..”
“பல நாடுகளுக்குப் போக நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவை கத்தோலிக்க நாடுகள் என்பதால் என்னை உள்ளேயே விடக்கூடாது என்று போப் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உலகம் இன்னமும் மனிதத்தன்மை அடையவில்லை, இது இன்னமும் நாகரீகம் அடையவில்லை. முற்றிலும் கலாச்சாரமற்று இருக்கிறது….”
“மூன்று வார சுற்றுலா விசா தருவதை அவர்கள் மூன்று மாதங்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமமந்திரி, வெளியுறவுத் துறை மந்திரி போன்றோர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்: “நாங்கள் கொடுக்கத்தான் போகிறோம். அதாவது, நாளைக்குக் கொடுத்துவிடுகிறோம்.” சன்னியாசிகள் தினமும் போகிறார்கள். அவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, “நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ, அப்போது நாங்களும் தயாராக இருக்கிறோம். உங்களுடைய “நாளை” என்றைக்கு வரப்போகிறது?” என்று சொல்லுகிறார்கள். மூன்று மாதங்கள் கழித்து அந்த அரசுப் பிரமுகர்களுக்கே வெறுத்துப்போய் விட்டது. ஏனென்றால், ஒருபக்கம் போப் அவர்களைக் கட்டுப்படுத்துகிறார். ஆனால், அதே சமயம் பாஸ்போர்ட் தரமுடியாது என்று சொல்லுவதற்குத் தேவையான வலுவான காரணஙக்ள் எதுவும் இல்லை.
இப்போது போப் உலக மதங்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறாராம். ….. ஆனால், என்னை அழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.”
ஓஷோபிரியன் நிலைகுலைந்து போய் உட்கார்ந்திருந்தார். எதற்காக நிறுவன மதங்கள் ஊடகங்களையும், கல்வித்துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் அச்சுறுத்தலில் வைத்திருக்கின்றன? எதனால், சாதாரண மனிதன் சுதந்திரனாக இருக்கக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றன?
இந்த உலகில் உள்ள அனைத்து அகதி முகாம்களும் இந்த ஆபிரகாமிய மதங்களால்தான் ஏற்பட்டவை. இந்த உலகில் உள்ள அனைத்து இன ஒழிப்புக்களையும் இந்த ஆபிரகாமிய மதங்கள்தான் நடத்திவருகின்றன. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் நடத்திவருகிற இன ஒழிப்பும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் கிறுத்துவம் நடத்திவருகிற இன ஒழிப்பும், சீனாவில் மாவோவாலும், கம்போடியாவில் போல்பாட்டாலும் நடந்த இனஒழிப்புகளுக்கும் ஆபிரகாமிய சிந்தனைப்போக்கல்லவா காரணமாக இருக்கிறது?
எந்த கிரகச்சாரத்திற்காக ஒரே ஒரு உண்மை இருப்பதாகவும், அந்த ஒரேஒரு உண்மையையும் ஒரே ஒரு இறுதித் தூதுவன் ஒருவன் சொல்லிவிட்டதாகவும், அந்த ஒரே ஒரு இறுதித் தூதுவன் சொன்னவை ஒரே ஒரு புத்தகத்தில் அடங்கிவிட்டதாகவும், இதைத் தாண்டி இருக்கிற அத்தனை மனித எத்தனங்களும் அழிக்கப்பட வேண்டியவை, அவற்றைப் பின்பற்றுபவர்கள் திருத்தப்பட்டு, மதம் மாற்றப்படவேண்டியவர்கள் என்று ஏன் இவர்கள் நினைக்கிறார்கள்?
ஏனெனில், மனிதத் தேவைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இவர்களுக்கு அளவுகடந்த அதிகாரம் கிடைக்கிறது. அந்த அதிகாரத்தால், அவர்களின் கீழான மனத்தின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
தனக்குத்தானே பேசிக்கொண்டும், யோசித்துக்கொண்டும் இருந்த ஓஷோபிரியன் தனது சிந்தனைமயக்கத்தில் இருந்து மீண்டு நனவுலகிற்கு வந்தார். மேலே பார்த்தபோது, பாடிகார்ட் முனீஸ்வரன் உர்ரென்று இருப்பதுபோலத் தெரிந்தது.
“என்ன ஆச்சுன்னு இப்படி உர்ர்னு இருக்க?”
பாடிகார்ட் முனீஸ்வரன் பதில் சொல்லவில்லை.
சரி. இந்த ஆபிரகாமிய மதங்கள் மனிதர்களுடைய சொத்துக்களையும், சுகங்களையும், சுதந்திரத்தையும்தான் சுரண்டுகின்றன. கடவுளுக்கு என்ன ஆகிவிடப்போகிறது? இந்த வீட்டில் என்னைவிட்டால் அவருக்கும் வேறு கதி ஏது? ஏதாவது கொடுத்து அவரைச் சமாதானப்படுத்துவோம் என்று நினைத்து, ஓஷோ பிரியன் அங்கும் இங்கும் பார்த்தார். புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் தவிர வேறு எதுவும் கண்ணுக்குப் படவில்லை. அவற்றில் இருந்து ஏதேனும் ஒன்றைத்தான் கொடுத்தாக வேண்டும்.
பாடிகார்ட் முனீஸ்வரனின் ஆர்வம் தினசரிகளையும், வாராந்திரிகளையும் தாண்டியதில்லை. எனவே, அவருக்கு ஓஷோ புத்தகத்தையெல்லாம் கொடுத்தால் ஆன்மீக ஹிந்துக்கள், அரசியல் ஹிந்துக்கள் என்று புதிதாகக் கண்டுபிடித்த ஜாதிகளின் பெயரைச் சொல்லி புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிடுவார். எனவே, அவருடைய ரேஞ்சிற்கு ஏற்றாற்போல ஏதேனும் தரவேண்டும். அங்குமிங்கும் பார்த்த ஓஷோபிரியனின் கண்களில் ஒரு செய்தித்தாள் பட்டது.
“இந்தா முனி. சும்மா கொஞ்ச நேரம் நீயும் கவலையில்லாம படி. ஆமா, உனக்கென்ன கவல. மனுசங்களைத்தான் இந்த மதங்கள் தின்னு தீக்குது. மனுசங்க சொத்துக்களைத்தான் கொள்ளையடிக்கிறானுங்க. ஒனக்கென்ன. நீ சாமி. இந்தா படி. சும்மா கோச்சுக்காமா படி”
தான் பேசுவதைக் கேட்கையில் தனக்கே ஏதேனும் ஆகிவிட்டதா என்ற பயமும் வந்தது. செய்தித்தாளை பாடிகார்ட் முனீஸ்வரன் முன்னால் வைத்துவிட்டு, மரியாதைக்குரிய நண்பரைப் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டார்.
அவர் போனபின்னால் புத்தக அலமாரி லேசாக ஆடியது. படத்தில் இருந்து வெளியே வந்த பாடிகார்ட் முனீஸ்வரன் நன்றாக சப்பணம்போட்டு உட்கார்ந்துகொண்டார். “என்ன வேண்ணா சவடால் விட்டுக்கோடா. ஆனா, நீ சாதாரண மனுசந்தான். நான் கடவுளாக்கும். எந்த வெண்ணையாலும் என்ன அசைச்சுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு, செய்தித்தாளைப் புரட்டினார். இந்தச் செய்திகள்தானா அவர் கண்களுக்குத் தெரிய வேண்டும்?
இது கோயில்களை மூட முதல்படி: ராம. கோபாலன்
சனிக்கிழமை, ஜூலை 4, 2009
சென்னை: கோயில் நிலங்களை அரசின் பிற துறைகளுக்கு விற்கும் செயல் கோயில்களை இழுத்து மூடுவதற்கு முதல்படி என்று இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
பயன்படாத கோயில் நிலங்களை அரசின் பிற துறைகளுக்கு விற்க முடிவு செய்துள்ளதாக சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து அறநிலையத்துறைக்குப் பயன்படாத கோயில் நிலங்களை அரசின் பிற துறைகள் சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
இது கோயில்களை இழுத்து மூடுவதற்கு முதல்படி. எனவே இந்த முயற்சியை இந்து அறநிலையத்துறையும், தமிழக அரசும் கைவிட வேண்டும். இது தொடர்ந்தால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.
வேதாரண்யம் கோயிலில் கொள்ளை
நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் உண்டியலை உடைத்து, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலில் அன்னதானம் செய்வதற்கான உண்டியல் உள்பட நேர்த்திக் காணிக்கை செலுத்தும் 7 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும்.
இந் நிலையில் நேற்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டபோது துர்க்கை அம்மன் சன்னதியிலிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில் நாணயங்கள் மட்டுமே மீதம் இருந்தன.
தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பனித்துளி அவர்களின் நையாண்டி நடை சிந்திக்கும் ஆற்றல் உடைய இந்துக்கள் உள்ளத்தைக் குத்திக் கிளர்ந்தெழச் செய்யும். ஒருவகையைல் பார்க்கப் போனால் தமிழ்நாட்டில் இந்துக்களை பாடிகார்ட் முனீஸ்வரனைப் போல மதுப்புட்டியும் சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் மாது குலுக்கல்களும் இலவசவண்னத் தொலைக்கட்சிப்பெட்டிகளும் கொடுத்து மழுங்கடைத்து ஓரத்தில் உட்கார்த்து வைத்துவருவது சிந்திப்போருக்குப் புரியும். போதையில் சிந்திக்க முடிவதில்லையே. நேற்றைய தினமணியில் ரூ 120 கோயில் நிலம் அபகரிப்பும் அதற்குத் தி.மு.க். மேயர் துணைபோதலும் பற்றிய செய்தியும் வந்துள்ளனவே. பனித்துளியின் கணிப்பு எவ்வளவு மெய்யானது! வியக்க வைக்கின்றது.
கோ.ந.முத்துக்குமாரசுவாமி
இஸ்லாமிய மதம் எப்படி அமைதி மார்க்கமோ அதைப்போன்றதே கிறிஸ்தவமும் என்பதை ஐயந்திரிபறக் கண்டுகொண்டேன்.. நரகத்தை சக மனிதனுக்கு பூலோகத்திலேயே காட்டிய பெருமை கிறிஸ்தவத்திற்கு மட்டுமே உண்டு என நினைக்கிறேன். எப்படி கிறிஸ்தவர்களால் அவர்களது இருண்ட பக்கத்தை மறைத்து மக்களை மதமாற்றம் செய்ய முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியம் எழாமல் இல்லை.
கிறித்தவர்கள் போடும் வாக்கரிசிக்காக இந்துக்கோயில்களை கொள்ளையடித்தும், இந்துக்கள் கோவில் வருமானத்தின் பெரும்பகுதியை இஸ்லாமியன் புனித யாத்திரை செய்யவும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் திமிரும் இந்த தீராவிட அரசுகளுக்கு மட்டுமே வரும்.. இந்துக்கள் விழிக்காத வரை கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் அரசாங்க ஆசியுடன் மதமாற்றமும், கோவில் நிலத்தைக் கொள்ளையடித்தலும், இந்துக்களின் காசை இதர மதத்தானுக்கும் மடைமாற்றம் செய்வதையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். என்ன இசம் இது என மூளையைக் கசக்க விரும்பவில்லை.. படிக்க அருமையாய் இருந்தது.. உண்மை எப்போதும் அப்படித்தானே இருக்கும்???
//போப்பின் இந்திய வருகையை இந்துக்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்துவது முற்றிலும் தவறு. ஏனென்றால், இது கீழை நாட்டின் மரபு இல்லை. இது மிகவும் ஆபாசமானது. போப்பைக் கீழைநாட்டுத் தொல்மரபின்படிதான் நடத்தவேண்டும். போப் எங்கு போனாலும், ஒரு பகிரங்கமான விவாதத்திற்கு அவரை நட்போடு அழைக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்//
சிலிர்க்க வைக்கின்றன.
”எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்”
இது என் டெஸ்க்டாப்பில் ஸ்கிரீன் சேவராக ஓடுகிறது.
/////
//போப்பின் இந்திய வருகையை இந்துக்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்துவது முற்றிலும் தவறு. ஏனென்றால், இது கீழை நாட்டின் மரபு இல்லை. இது மிகவும் ஆபாசமானது. போப்பைக் கீழைநாட்டுத் தொல்மரபின்படிதான் நடத்தவேண்டும். போப் எங்கு போனாலும், ஒரு பகிரங்கமான விவாதத்திற்கு அவரை நட்போடு அழைக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்//
சிலிர்க்க வைக்கின்றன.
”எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்”
/////
YES!!!
பனித் துளி தென்சீமைக் காரரோ. அந்தமண்ணின் நையாண்டி தான் வலுவான ஆயுதம். எதிராளிகள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் செய்வதறியாது திகைத்துப் போவார்கள்.
எனக்கு பனித் துளி புதிய அறிமுகம். தமிழ் ஹிந்து அனேகம் புதியவர்களைப் போய்ச் சேர்கிறது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இது இன்னமும் நமக்குள் பேசிக்கொள்ளும் ஒன்று தான்.
Excellent.
i wish you all the best
எந்த கிரகச்சாரத்திற்காக ஒரே ஒரு உண்மை இருப்பதாகவும், அந்த ஒரேஒரு உண்மையையும் ஒரே ஒரு இறுதித் தூதுவன் ஒருவன் சொல்லிவிட்டதாகவும், அந்த ஒரே ஒரு இறுதித் தூதுவன் சொன்னவை ஒரே ஒரு புத்தகத்தில் அடங்கிவிட்டதாகவும், இதைத் தாண்டி இருக்கிற அத்தனை மனித எத்தனங்களும் அழிக்கப்பட வேண்டியவை, அவற்றைப் பின்பற்றுபவர்கள் திருத்தப்பட்டு, மதம் மாற்றப்படவேண்டியவர்கள் என்று ஏன் இவர்கள் நினைக்கிறார்கள்?
மிக அருமையான வரிகள். முஸ்லிம் மதத்தில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மட்டும் இறை தூதர்கலாம். மற்ற ஞானிகள் எல்லாம் பிச்சைகாரர்கலாம். எந்த ஆன்மிக ஞானியும் அரிவாளை தூக்கிக்கொண்டு மனித உயிர்களை வேட்டை ஆடியதாக சரித்திரம் இல்லை. முகமது நபியை தவிர. அதனால்தான் அவரை பின்பற்றுகிறவர்களும் கொலை செய்ய அலைகிறார்கள். முஸ்லிமும் கிறிஸ்தவமும் ஒன்றுகொன்று சளைத்ததில்லை என்பது தெரிந்த விசயம்தானே.
அற்புதமான கருத்துக்கள் , மொத்தமாக இதை எங்கே படிப்பது? கொஞ்சம் சொல்ல முடியுமா?.
போப் எங்கு போனாலும், ஒரு பகிரங்கமான விவாதத்திற்கு அவரை நட்போடு அழைக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள்//
அருமையான வாி அற்புதமான வாி.ஆனால் எனது கட்டுரையைத்தான் வெளியிட மனம் இல்லை தங்களுக்கு