தர்மவழி நின்ற கர்மவீரர்

இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் .

காமராஜர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கான அடிப்படையை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர். காமாட்சி என பெயரிடப்பட்ட அவர் தாயார் அழைத்த பெயரான காமராஜர் எனும் பெயரிலேயே உலகத்துக்கும் அறிமுகமானார். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. சிறுவயதில் ஏனாதி நாயனார் வித்தியாலயத்தில் படித்த அவர் நம் பண்பாட்டின் மீதும் தேசத்தின் மீதும் பற்றுடன் வளர்ந்தார். பின்னர் படிக்க க்ஷத்திரிய வித்தியாலயத்துக்குச் சென்றார். அப்போது விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு படிப்பைப் பாதியில் துறந்து பாரத விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமது 16 ஆம் வயதில் காங்கிரஸ் இயக்க முழுநேர உறுப்பினராக சேர்ந்தார்.

மதிய உணவு திட்டம் காமராஜரின் பண்பாட்டுத் தோய்வையும் அப்பண்பாட்டை எப்படி மக்கள் நலனுக்காக பயன்படுத்துவது என்பதில் அவருள் புதைந்திருந்த பாரம்பரிய மேதைமையையும் காட்டுகிறது. ”அன்னம் பஹு குர்வீத” (அன்னத்தைப் பெருக்கிப் பகிர்வீர்) என்பதும் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பதும் நம் பண்பாடு. அன்னதானத்தை நம் சமுதாயம் நம் தருமம் மிகவும் வலியுறுத்துகிறது.

kamaraj-childrenஆனால் நவீன உலகில் “அன்னதானம் சோம்பேறித்தனத்தைதானே வளர்க்கும்” என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லலாம். அதே நேரத்தில் குருகுல மாணவர்கள் அரசகுமாரர்களாக இருந்தாலும் பிச்சை எடுப்பது நம் தருமத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு சமுதாயத்திடம் நன்றி உணர்வு ஏற்படும். காமராஜர் இந்த இரண்டு பண்பாட்டுத்தன்மைகளையும் மேதமையுடன் இணைத்தார். மதிய உணவு திட்டம் ஏழை மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தது. ஒட்டு மொத்த சமுதாயமும் அன்னதானத்தின் புண்ணிய பலனை அடைந்தது. படிக்கும் மாணவர்களிடம் சமுதாய நன்றிக்கடன்பாடு ஏற்பட்டது. காமராஜர் கொண்டு வந்த திட்டத்தை எம்ஜி ஆர் அவர்கள் புத்துயிரூட்டி விரிவுபடுத்தினார்கள். இன்று தமிழ்நாட்டில் மானுடவள மதிப்பீட்டு அளவைகள் சிறப்பாக உள்ளன என்றால் காமராஜர் நம் பண்பாட்டு மதிப்பீட்டை கூர்மையான மதியுடனும் முற்போக்கு சிந்தனையுடனும் செயல்படுத்தியதன் புண்ணியபலமே என்பதில் ஐயமில்லை.

காமராஜர் தமது கடவுள் நம்பிக்கையை மதப்பற்றை வெளியே காட்டியதேயில்லை. அதே நேரத்தில் திராவிட இயக்கத்தினர் பண்பாடற்ற முறையில் நம் ஆன்மிக பண்பாட்டையும் இதிகாசங்களையும் இழித்து செய்த பிரச்சாரங்கள் அவரை மிகவும் புண்படுத்தின. திமுக மீது அவர் வைத்த முக்கிய விமர்சனங்களில் இதுவும் ஒன்று. இராமாயணத்தை இழிவு செய்து நடத்திய நாடகங்களுக்காக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இத்தகைய கீழ்த்தர போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்பது அவரது பார்வையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ‘சத்குணவிகிருதி’ என சாவர்க்கர் சொல்லும் போக்குக்கு ஆட்பட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் போட்ட முட்டுக்கட்டையால் அதனை அவர் செயல்படுத்த முடியவில்லை. ஏனெனில் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மேலாக ஜனநாயகத் தன்மையை விரும்பிய மக்கள் தலைவர் அவர்.

(சத்குணவிகிருதி – நற்குணத் திரிபு. அதாவது அடிப்படையில் ஒரு நல்ல குணம், ஆனால் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மக்களுக்குப் பெரும் தீய விளைவைத் தரும் என்று தெரிந்தும் நல்ல குணத்தையே கடைப்பிடிப்பேன் என்று விடாப்பிடியாக நிற்பது. உதாரணமாக தவறை மன்னிப்பது என்பது நல்ல குணம். ஆனால் கொடியவனும், ஆக்கிரமிப்பாளனுமான கோரி முகமதுவைக் கொன்று அழிக்காமல் பிரித்விராஜன் மீண்டும் மீண்டும் மன்னித்து விட்டு, அதனால் தன்னையும், தன் நாட்டையுமே அழித்துக் கொண்டது சத்குணவிகிருதி)

இந்த ஜனநாயகத்தின் மீதான அவரது அன்பே அவரை பின்னர் ஜனசங்கத்துடனும்ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும் இணைந்து ஜனநாயக முன்னணியை உருவாக்கி இந்திராவின் சர்வாதிகார பாசிசத்தை எதிர்த்து போராட வைத்தது. “வகுப்புவாத ஜனசங்கத்துடன் காமராஜர் உறவு வைத்திருக்கிறார்” என இந்திரா பாராளுமன்றத்தில் கூறினார். அதை காமராஜர் பொருட்படுத்தவே இல்லை.

காமராஜர் நினைத்திருந்தால் இந்த தேசத்தின் பிரதமராக ஆகியிருக்கலாம். வயதானதும் அரசியல்வாதிகள் பதவிகளைத் துறந்து வழிநடத்தவும், கட்சிப்பணி செய்யவும் கீழிறங்கி அடுத்த தலைமுறைக்கு வழிவிடவேண்டும் என்பது அவரது கோட்பாடு. இதுவும் நம் பண்பாட்டின் வானப்பிரஸ்தத்தின் அரசியல் பிரதிதான். இதனை ஒவ்வொரு அரசியல் கட்சியும் நடத்திட முன்வந்தால் இந்த நாட்டின் ஜனநாயகம் கிழடுதட்டாமலும் பரம்பரை சொத்துக்குவிப்பு கும்பல்களின் கைகளில் சிக்காமலும் இருந்திருக்கும்.

15 Replies to “தர்மவழி நின்ற கர்மவீரர்”

 1. Your article on Kamaraj was great. This selfless leader had no money when he died. He did not have a lavish life style while in power. Compare his life with our current politicians! This site should bring out more news about leaders like Kamaraj, Lal Bahadur Sastri etc. These men are immortals,

 2. அரசியல்வாதி என்றால் எப்படி இருக்கவேண்டும் என வாழ்ந்துகாட்டிவிட்டுப் போனவர். காலடியில் ஒருத்தி, தலைமாட்டில் ஒருத்தி, வெளியே சொல்லிக்கொள்லாமல் ஒருத்தி, இது தவிர என்னற்ற வைப்பாட்டிகள், அத்தனை பேருக்கும் குழந்தைகள், அவர்களுக்கு அரசியலில் ஒரு இடம் பிடித்தல் இதையே சமூக சேவை என நினைத்து அரசியல்வாதிகள் வாழும்போது சமூக உழைப்பிற்காக திருமணம்கூட செய்துகொள்லாமல் நாட்டிற்காக வாழ்ந்த உத்தமத் தலைவர்களில் ஒருவர் காமராஜர். அவரை இன்று நினைவு கூர்ந்த தமிழ் இந்து தளத்திற்கு நன்றி.

 3. காமராஜரின் சாதி உணர்வைப் பற்றிய குறைந்த பட்ச விவாதத்தைக் கூட இக்கட்டுரை முன்வைக்கவில்லையே… அப்படி ஒன்று இல்லை என்று அர்த்தமா அல்லது இருந்தாலும் பரவாயில்லை என்று அர்த்தமா அல்லது பிறந்த நாள் அன்று வாழ்த்துச் சொல்வதுபோன்ற மரபா?

 4. இன்றைய அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது, – தமிழகத்திலும், இந்தியாவிலும், -காமராஜர் பற்றி நிறைய நல்லவையே சொல்லத் தோன்றும். சரிதான். இன்றைய சீரழிவில் அவர் உயர்ந்தவர் தான். ஆனால் முப்பது முப்பத்தந்து வருடங்கள் அவரது மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றிப் பேசும் போது, அதுவும் தமிழ் ஹிந்துவில், காங்கிரஸ் பத்திரிகையில் அல்ல – அது வெறும் ஸ்தோத்திரமாலையாகவே இருந்திருக்க வேண்டாம் தான். அவர காலத்திலும் தேவைக்கேற்ப் அவ்வப்போது சின்னத்தன அரசியல் செய்தவர் தான். சாதி உணர்வு கொண்டவர் தான். கண்ணியம் நேர்மை என்றெல்லாம் பேசும் கருணாநிதி உபதேசம் செய்யும் காலத்தில், காமராஜ் ஒரு தேவ புருஷன் தான்.

 5. காமராஜின் அரசியல் குரு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பற்றியும் அவர்மீது காமராஜ் கொண்டிருந்த அபார பக்தி பற்றியும் சத்தியமூர்த்தியைத் தலைதூக்கவிடாமல் செய்த அன்றைய அரசியல் தலைவரை காமராஜ் எப்படி முறியடித்தார் என்பது பற்றியும் சொல்லாமல் விட்டது அறமல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.

 6. ஆக, ஆசிரியர் குழுவோ அல்லது ஆசிரியர் ஒருவரோ மீண்டும் காமராஜர் பற்றி ஒரு முழுமையான கட்டுரை எழுதுவர் என்று நம்பலாம்.

 7. Though Sri Kamaraj did have an alliance with Jansangh in 1971 snap poll for Lok Sabha (in Tamilnadu, Sri Karunanidhi combined it with State Legislature) he did not allot even one single seat for Jansangh. Jansangh had very good scope to win in Park Town assembly constituency in Madras, Kumbakonam, and Sri Rangam besides a few more constituencies, where it had fair chance of winning (Madurai, Salem, Kanyakumari and Coimbatore districts) . We represented our case (JS people wanted me to acompany them ( I am distantly related to late Sri Jana. Krishnamoorthi) becasue Kamaraj knew me very well and would frequently ask me to meet him to know the public mood) but Kamaraj simply ignored to listen and scolded me after wards for meeting him along with them. I strongly expressed my dissent to Kamaraj saying JS should have been given atleast Park Town Madras, as our Sri Motilalji had already made a very good leg work -the constituency had large number of North Indians and Telugu speaking Arya Vaishya commmunity people who were our sympathisers . Kamaraj said that he had to give it to Swatantra Party because Dr Hande had already won there in 1967 . While ignoring our pleads, he took full advantage of our sincere FREE service (energetic RSS and JS workers). This was how Kamaraj entertained JS!
  It was DK that humiliated Sri Rama and Sita with M R Radha’s Keemaayanam. Kamaraj had very close understanding with EVR. DMK did not approve of humilitaion of Srimath Ramayana. Again about Kamaraj, he made permanent disservice to Tamil Nadu by simply ignoring Devi Kulam Peer Medu issue saying both were in Kerala, which is also part of Hindustan(those two areas had Tamils in majority) . The result is our everlasting wrangle with Kerala to get Periyaaru river water for irrigation in southern districts. Be sure Kamraj was anti Hindu and he was a stumbling block when we wanted to retain our culture at kanyakumari by initiating Vivekananda Kendra. He listened to Lourd Ammal Simon and rejected the request to construct Vivekananda Memorial on the rock where Swami meditated and had the vision of his mission. The Christian lobby was active to build a church on the rock claiming that the cyclone hit Portuguese sailors were saved and enabled to land on the shore some four hundred years ago by the grace of Mary, who guided them the route. During my personal chats with Kamaraj, he would praise the orderly worship in churches, saying our temples were like market place without haviing basic idea on the sdignificance of our temples. I used to tell him that our temples were never meant for worship only but promoting and encouraging culture and tradition. Yes, worship was also part of temple proceedings to remind that all our functions derive energy from divinity and we need the spiritual sanction for every human activity . Sri Kamaraj, could not understand this. He thought there were many wasteful expenditures in our temples! I could only pity on his very limited faculty of thinking (surprisingly, Anna would listen and agree with me about my views on our temples, as he was a connoissuer of fine arts and lover of cultural activities, whereas Kamaraj had no knowledge about all these matters but would argue everything depended on filling the stomach) .

  Kamaraj does deserve our praise for many other reasons. I had to give my version since you had praised him for entertaining JS in 1971 elections. I do have respect for Sri Kamaraj but I would not give him undue accolades!
  MALARMANNAN

 8. Let me remind one more thing. This ocurred aftrer reading Sri Ve. Saa’s comments. It was Sri Kamaraj , who introduced money power and caste preference in elections. Until guided by Anna, DMK did NOT consider these two aspects when selected its candidates. In DMK , we never knew who belonged to which caste except for a few like Nedunchezian and Anbazakan. In 1967, after DMK became the ruling party, caste oriented associations started inviting their community MLAs in DMK to honour and Anna humourously commented that now only we could know who belonged to which caste! He also expressed his dissatisfaction in DMK MLAs accepting such invitations. For instance, rama. Arangannal belonged to Yadava caste and he was the one associated with Anna for many years working in Dravida Naadu. Immediately after his election in 1967 from Myla[pore, he was invited by Yadava Sangam to receive its felicitation. and he agreed. Anna asked him since when he belonged to Yadava caste! However, Arangannal acepted and attended Yadava Sangam functuion and received felicitations.

  In 1957, when DMK contested elections for the first time, Sri Pon Chokkalingam was selected to contest from Chidambaram. He actually belonged to Pillai caste but all along, Anna was thinking he was a Vanniya! Congress, as usual, put Sri Vagheesam Pillai, a money bag and Pillai caste people were in large number in Chidambaram constituency. Seeing Kamaraj selecting candidates castewise, Anna jocularly asked Chokkalingam whether he can corner all Vanniya votes so that he can defeat Vagheesam Pillai, from another dominant community. Chokklaingam shyly revealed that he was also a Pillai! Those were the days!
  MALARMANNAN

 9. மகாபாரத கிருஷ்ணரையும், ராமரையும் அவர்களது குறை நிறைகளைப் பற்றிய வெளிப்படையான உரையாடலுடன் ஹிந்து தர்மம் அணுகுகிகிறது. கிருஷ்ணர் செய்த தவறுகள், தவறுகளாகவே மகாபாரதத்தில் காட்டப்படுகிறது. ராமரின் செயல்கள் குறித்த விமர்சனங்களோடுதான் நாம் வளர்ந்துவருகிறோம்.

  அனைத்திலும் சரியாக தெளிவாக நடந்துகொண்ட தலைவர்கள் யாரும் இல்லை. எவர், எந்த விஷயத்தில் சரியாக நடந்துகொண்டார், தவறாக நடந்துகொண்டார் என்பதை வெளிப்படையாக முன்வைத்தால் பிற்கால சமூகம் கற்றுக்கொண்டு முன்னேறும் என்பது ஹிந்துத்துவத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது.

  இங்கே எழுதப்பட்ட கட்டுரையும், அனுமதிக்கப்படும் விமரிசனங்களும் ஹிந்துத்துவம் எந்தத் தலைவரைக் குறித்தும் ஒரு முழுமையான பார்வையை முன்வைக்கிறது என்பதை மீண்டும் நிறுவுகிறது.

  அதனால்தான், கட்டுரையும் சரி, கட்டுரைக்கு வந்த விமரிசனங்களும் சரி. காமராஜரைப் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும், விமரிசிக்க வேண்டிய போது விமர்சிக்கவும் செய்கின்றன.

  வேறுபடும் கருத்துக்களையும், ஒத்துக்கொள்ளும் கருத்துக்களையும் வெளிப்படையாக, நாகரீகமாக, தரமாக முன்வைக்கும் போக்கினைத் தமிழ் இலக்கியப் போக்கில் ஆரம்பித்துவைத்த பெருமை இணைய தளங்களையே சேரும். அந்த இணைய தளங்களில் மதிப்பு மிக்க தளமாக தமிழ் ஹிந்து விளங்குகிறது.

  இந்த இணையதளத்தின் படைப்புகளும், அதன் வாசகர்களும் தரத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

  தமிழ் ஹிந்து தளத்திற்கும் நன்றி. வெங்கட் சுவாமிநாதன் அவர்களுக்கும், மலர்மன்னன் அவர்களுக்கும் நன்றி.

 10. மலர்மன்னன் அவர்களுக்கு நலவரவு.. பல அரிய செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  கணபதி கூறியதை முழுமையாக ஆமோதிக்கிறேன்.. காமராஜர் போன்ற ஒரு பழைய தலைவருடைய நிறைகுறைகளைப் பற்றி இவ்வளவு பக்குவமான விவாதம் இங்கு நடப்பது கண்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது.. தமிழ்ஹிந்து தளம் பாராட்டுக்குரியது.

 11. dear all…!

  kamaraj had links &respect all castes. He never support his own caste. Even to his own mother also.
  leaders belongs to every caste (gk.moopanar, c.s,his great guru srimaan sathyamoorthy,vandayars,pasumpon thevar,ramasamy padayachi , kakkan etc) supported him. Some of you
  forget his historical defeat in virudhunagar. Why??? he refused to support his caste”s big business people.
  I agree most of his caste people are till with congress because of him, that means they got respect because of him. Thats the only reason. According to me his one & only mistake was he prefer the congress interest than nation some times.(ex – he support indra insted of morarji.)

 12. Dear Mr. Malarmannan,

  It is great to know that you have been with such brilliant minds. Even better the next generations get to experience some their life momemnts through you.

  As some here suggested, I too believe it is healthy to get different views. However, I do have a humble request from the next generation – some of your comments, like, ‘I could only pity on his very limited faculty of thinking’ don’t do justice to someone like you who has been associated with these great leaders.

  Thanks

 13. Thank you, Sri Tirunavukkarasu, for the sentiments you have shown. I can understand, but we as media persons, have the opportunity to watch these leaders from a very close range/quqrters and witness all their weaknesses and their real worth. We could see them as any other individual, assess their contribution and lapses as well. My observations about Sri Kamaraj do not reflect any personal preference. As a leader, he should have foreseen in 1962 itself that the Cauvery accord was to expire in 1972. TEN years is not a long duration in a nation’s life. And Sri Kamaraj wielded enormous influence in those days and he could have very easily found a very good solution, instead of leaving it to the inexperienced Sri Karunanidhi and his DMK to handle. Kamaraj was wasting his time in petty politics, instead. He was also responsible for introducing money and caste elements to dominate in elections. He played very dirty things for the success of Congress in the elections. For instance, he made TTK to get through unopposed in Tiruchendur Loksabha constituency in 1962, by bribing Swatantra Party candidate. This made Rajaji to tell Anna that his DMK party men were safer than his Swatantra men and that Anna better have more seats for DMK. Kamaraj has also made a permanent loss to Tamilnadu by NOT insisting on Devikulam Peermedu, all typical Tamil localities. We are now at the mercy of Kerala govt. Nobody talks about all these facts when they speak on Kamaraj. All leaders are mortals like us and they had manoeuvered to what they are, whereas our priorities were elsewhere. Kamaraj was aftertall, a political party man; He looks great because you see him with eyes that are accustomed to today’s politicians.

  MALARMANNAN

 14. If the nadars today are a prosperous business community, it is thanks to kamaraj. He was casteist but never openly showed it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *