ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

ஓஷோபிரியனிடம் மதிப்பிற்குரிய நண்பர் கேட்டார்:

“எலே, ஆன்மிக ஹிந்துகளுக்கும், அரசியல் ஹிந்துக்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமாலே?”

ஓஷோபிரியனுக்குப் பதில் தெரியவில்லை. கொஞ்சம் குழம்பியவர், “என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகுது. எலக்சன் அன்னைக்கு ஓட்டுப் போடப் போகாம, டிவில கூனி், சகுனி மாதிரி ஆளுங்களுக்கு அன்பக் காட்டற விஷ்ணு அவதாரங்களப் பாத்து மெய் சிலிர்த்து நிக்கறவங்க ஆன்மீக ஹிந்துக்கள். கூனிகளையும், சகுனிகளையும் டிவியில் மட்டுமே பாக்க ஆசைப்பட்டு, தவறாம ஓட்டுப் போட்றவங்க அரசியல் இந்துக்கள்.”

நண்பரிடம் இருந்து பதில் இல்லை.

சொன்ன பதில் சரியா, தவறா? தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட ஓஷோபிரியன் நண்பரிடம் கேட்டார்.

“நான் சொன்ன ஆன்ஸர் சரியா?”

மும்தாஜ்
மும்தாஜ்

“இல்ல. தப்புலே. மும்தாஜின் “மல மல மல மருத மல” பாடலைக் கேட்காமல் இருப்பது ஹிந்து ஆன்மிகம், அந்தப் பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொடிபிடிப்பது ஹிந்து அரசியல். என்ன புரியுதா? நமக்கு ஏன் ஊர் வம்பு?” என்றார்.

ஓஷோப்ரியனுக்கு இருந்த தெளிவும் போய்விட்டது. சந்தேகம் பிடித்து ஆட்ட ஆரம்பித்தது. எப்போது சந்தேகம் வந்தாலும், கைக்குக் கிடைத்த ஓஷோ புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எப்படியோ ஒருவிதமாக பதில் கிடைத்துவிடும் என்று அவருக்கு நம்பிக்கை. ஆனால், புத்தகங்கள் வீட்டில் இருக்கின்றன. வீடு சாந்தோமில் இருக்கிறது. மதிப்பிற்குரிய நண்பரின் வீட்டில் இருந்து, சாந்தோமிலுள்ள தனது வீட்டிற்கு உடனடியாகப் போக ஓஷோபிரியனின் உள்ளம் துடித்தது. ஆனால்,பேருந்து கிடைக்கவேண்டுமே. மெட்ராஸில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மூலையில்.

சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். பஸ் ஸ்டாண்டிலிருந்து தாமஸ் மௌண்ட் தெளிவாகத் தெரிந்தது. அதன் பழைய பெயர் ப்ருங்கி மலையாம். ப்ருங்கி மலை பேச்சு வழக்கில் பரங்கி மலையானது புரிகிறது. ஆனால், பரங்கி மலை எப்படி தாமஸ் மௌண்டானது என்பது புரியவில்லை.

“அடக் கடவுளே. மலை என்றாலே குழப்பம்தானா?

பெயரை மாற்றினாலே உரிமை மாறிவிடுவது எப்படி?

அந்த மலை உண்மையில் என்னவாக எப்போதும் இருக்கிறது?

தாமஸ் மௌண்டாகவா, இல்லை ப்ருங்கி மலையாகவா?”

“எது எப்படியானா என்ன? அவனவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கான். இதில வேலை வெட்டி இல்லாமல் இந்த இந்துத்துவாதிகள் அயோத்தி கோயிலுக்கும், ராமர் பாலத்திற்கும், திருப்பதி கோயிலுக்கும், தென்காசி கோயில் நிலத்திற்காகவும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்? விட்டுக்கொடுத்து வாழவேண்டியதுதானே?”

ஓஷோப்ரியனின் மனது “மல மல மல” நடனம்போல அங்கும் இங்குமாய் அரைகுறையாய் அலைந்தது.

வீடுவந்து சேர்ந்ததும், செருப்பைக் கூட கழட்டாமல், புத்தக அலமாரிக்கு ஓடினார். பாடிகார்ட் முனீஸ்வரன் படத்திற்கு வலது பக்கத்தில், கைக்குத் தட்டுப்பட்ட ஓஷோ புத்தகத்தை எடுத்து கடகடவெனப் புரட்டினார். அவரது கண்களில் பட்டதெல்லாம் பதிலாகவே தெரிந்தது. புத்தகத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோ பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீ கேட்கிறாய்:

ஆர்ம்ஸ்டார்மில் உள்ள நமது அமைப்பான அமிதாபில் கடந்த சில வருடங்களாக நான் பணிபுரிகிறேன். அந்த நாட்டின் ஊடக மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் முயன்று வருகிறோம். இப்போது டச்சு நாட்டு அரசு நம்மை சமூகவிரோத கும்பல் என்று முத்திரை குத்தி, கண்காணிப்பில் வைத்திருக்கப்போவதாக வேறு அறிவித்திருப்பதால் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது.

ஓஷோ
ஓஷோ

இந்த நிலையில் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள நாங்கள் செய்யும் எந்த முயற்சியும் எங்களுடைய உள்ளார்ந்த அனுபவத்தைக் குலைக்கிறது. இந்தக் கொடுமைகளால், இனி மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கொஞ்சம் விட்டுக்கொடுப்பது, கொஞ்சம் சமரசம் செய்துகொள்வது, கொஞ்சம் பணிந்துபோவது போன்றவற்றையெல்லாம் குறைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது எனத் தோன்றுகிறது. எங்களுக்கு நீங்கள் வழிகாட்ட முடியுமா? ப்ளீஸ்.

ஆனந்த் நிகேதனா, உண்மையைக் காப்பாற்றுவது முடியாத விஷயம். இதை நினைவில் வைத்துக்கொள். காப்பாற்றப்பட்டுப் பிழைத்து கிடப்பது என்பது உண்மையின் இயல்பிலேயே இல்லை. கொஞ்சம் யோசி: தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கிருத்து முயன்றிருந்தால், மனித குலமானது மதிப்புயர்ந்த விஷயங்களை இழந்திருக்கும். எனவே, உறுதியாக சாதித்து தன் இருப்பை உண்மையை நியாயப்படுத்த வேண்டும். ஆனால், அதற்காக மூர்க்க குணத்தோடு இருக்க வேண்டியதில்லை. அதையும் நினைவில் வை. உண்மையானது பணிவானதோ அல்லது மூர்க்கமானதோ இல்லை, ஆனால் உண்மையானது உறுதியாக இருக்க வேண்டும்…..

எனவே, நிகேதனா, ஆரம்பத்தில் இருந்து தவறாகவே இந்த பிரச்சினையை நீ அணுகிவருகிறாய். விட்டுக்கொடுக்கவோ, பணிந்துபோகவோ, சமரசம் செய்யவோ அவசியமே இல்லை. விட்டுக்கொடுப்பதைவிட அழிந்துபோவது மேலானாது, ஏனெனில் களபலியாவதனால் உண்மை வெற்றி பெறுகிறது, களபலியாவதனால் உண்மை முடிசூட்டப்படுகிறது.

அதனால், களபலியாவது குறித்துத் தயங்காதே. உண்மைக்காக உயிர்விடுவது மிக அழகானது. பணிந்துபோய் விட்டுக்கொடுத்து பிழைத்துக் கிடப்பது அசிங்கம். சமரசம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தடவையும் உண்மையிலிருந்து நழுவி பொய்மை சாக்கடையில் நீ விழுகிறாய். சமரசம் செய்வது வேறு எதுவாக இருக்க முடியும்?

கிறுத்துவ விசாரணைக் குழு அன்றிலிருந்து இன்று வரை
கிறுத்துவ விசாரணைக் குழு அன்றிலிருந்து இன்று வரை

மதக் கும்பல்களைப் பற்றி “நடுநிலையான” ஒரு விசாரணையைச் செய்ய டச்சு நாட்டு அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை ஏற்பாடு செய்திருக்கிறது என்ற செய்தி எனக்கும் கிடைத்தது. இப்போது சொல்கிறேன், இது வடிகட்டின மண்ணைத்தனம். அவர்களால் எப்படி “நடுநிலையாக” விசாரிக்க முடியும்? இவர்கள், இந்த விசாரணைக் குழுவில் இருக்கிற பெரும்பாலான ஆட்கள், கிறுத்துவ டெமாக்ரேட் கட்சிக்காரர்கள். இப்போது கேட்கிறேன், நடுநிலையாக இருப்பது என்பது கிறுத்துவர்களுக்கு சாத்தியமான விஷயமா? அதிலும், அவர்கள் “மதக்கும்பல்களைப் பற்றிய விசாரணை” (an inquiry about cults) என்று பெயரிட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறார்கள். “மதக்கும்பல்” (sect அல்லது cult) என்று சொல்லுவதே வசவுதான். கிறுத்துவம் மதமாம் – ஆனால், எனது சன்னியாசிகள் மட்டும் மதக் கும்பல்கள், மூடர்களின் கூட்டம். ஆரம்பிக்கும்போதே முன் முடிவுகளோடுதான் ஆரம்பிக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், எதன் அடிப்படையில் ஒரு குழுவை மதக் கும்பல் என்றோ, மூடர்களின் கூட்டம் என்றோ கூப்பிடுகிறீர்கள்?

கிருத்து உயிரோடு இருக்கும்போது, அவர் என்னவெல்லாம் போதித்தாரோ அந்தக் கருத்துக்களும், அவரை யாரெல்லாம் பின்பற்றினார்களோ அவர்களும் மதத்தைப் பின்பற்றினார்களா அல்லது வெறும் மதக் கும்பலாகத் திரிந்தார்களா? யூதர்களின் கண்களுக்கு — ஒரு நிறுவன மதத்தின் பார்வைக்கு — கிருத்துவும் அவரது சீடர்களும் வெறும் மதக் கும்பல். மூடர்களின் கூட்டம்; ஆனால், நிறுவன மதம் ஒரு உண்மையான மதம் கிடையாது. அது உண்மையான மதமாக இருந்திருந்தால் கிருத்துவை அது சிலுவையில் அறைந்திருக்காது. ஒரு மதக் கும்பல் என்பது உன்னை மதத்தன்மையில் இருந்து தனிமைப்படுத்தி அப்புறப்படுத்தி, உண்மையான மதத்தில் இருந்து உனது கவனத்தைச் சிதறச் செய்கிறது; முதன்மையான பாதையில் இருந்து வழுவச் செய்கிறது.

உயிரோடு இருக்கும்வரை கிருத்துவும் ஒரு மதக்கும்பல்காரர்தான். இப்போது கேட்கிறேன், கிறுத்துவம் எப்படி ஒரு மதமாக இருக்க முடியும்? ஆரம்பத்தில் மூடர் கூட்டமாகவும், வெறும் மதக்கும்பலாகவும்தான் கிறுத்துவம் இருந்தது என்றால், இப்போது மட்டும் அது எப்படி மதமாக மாறிற்று? அதன் ஆரம்பம் வெறும் மதக் கும்பலாக இருந்தால், அதன் விதையானது வெறும் மதக் கும்பலாக இருந்தால், அந்த விதையிலிருந்து முளைத்த மரம் மட்டும் எப்படி மதமாக இருக்க முடியும்? கிருத்துவானவர் உயிரோடு இருக்கும்போது, அப்போது அது வெறும் மதக்கும்பல், ஆனால், இப்போது அவர் செத்துப்போய் இரண்டாயிரம் வருடங்களில், (சிலுவையில் தொங்குகிற) அவரது பிணத்தை முன் வைத்துத்தான் இந்த கிறுத்துவ மதம் இந்த அளவு வளர்ந்திருக்கிறது. புத்தர் உயிரோடு இருந்தவரை மதக்கும்பலாம். ஆனால், பௌத்தம் இப்போது ஒரு மதமாம். உங்களது வியாக்யானத்தின் வரையறைதான் என்ன?

…………… …………… …………… …………… …………… ……………

எனவே, நிகேதனா, அந்த முட்டாள்களிடம் சொல், “நீங்கள்தான் மதக் கும்பல். நாங்கள் பின்பற்றுவதுதான் மதம்”. அத்தோடு, நீயும் ஒரு விசாரணைக் கமிஷனை ஏற்படுத்து. ஏனென்றால், என்னுடைய சன்னியாசிகள்தான் சார்பற்றவர்களாக இருக்க முடியும்.

…. கிறுத்துவர்களால் எப்படி சார்பில்லாமல் இருக்க முடியும்? ஏற்கனவே அவர்கள் தங்களது கிறுத்துவ மூஞ்சிகளைக் காட்டிவிட்டார்கள். ஏசு மட்டும்தான் சரி, ஏசு சொன்ன கருத்துக்கள் மட்டும்தான் சரி, அதற்கு மாறான அனைத்துமே தப்பு என்று ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட முடிவோடு அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உண்மையை விசாரிக்க முடியும்? சந்தேகங்களும், முன்முடிவுகளும் இல்லாமல்தான் ஒரு விசாரணையானது அமைய வேண்டும்.

கிறுத்துவ சித்திரவதைக் கருவிகளில் ஒன்று
கிறுத்துவ சித்திரவதைக் கருவிகளில் ஒன்று

அதனால், நிகேதனா, ஒரு விசாரணைக் கமிஷனை நீ ஆரம்பி. இந்த இரண்டாயிரம் வருடங்களில் கிறுத்துவம் என்ன செய்தது என்று ஒரு விசாரணையை நடத்து — எல்லாவித கிரிமினல் வேலைகளையும் கிறுத்துவம் செய்திருக்கிறது – கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைப்பது, அழிவு — தங்களுடையதுதான் உண்மையான மதம் என்று சொல்லும் இவர்களால்தான் அனைத்துவித கிரிமினல் வேலைகளையும் செய்யமுடிகிறது. மனித குலத்திற்கு கிறுத்துவம் கேடு என்பதைத்தான் இவர்கள் நிறுவிவருகிறார்கள்.

சுயத்தை உறுதியாக வெளிப்படுத்து ! தற்காப்பாக இருப்பது குறித்த அனைத்து எண்ணங்களையும் கைவிடு ! ஆனால், நீ இப்போதும் தற்காப்பாகப் பேசுவதையே விரும்புகிறாய்.

நீ சொல்கிறாய்: “இந்தக் கொடுமைகளால், இனி மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கொஞ்சம் விட்டுக்கொடுப்பது, கொஞ்சம் சமரசம் செய்துகொள்வது, கொஞ்சம் பணிந்துபோவது போன்றவற்றையெல்லாம் குறைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது எனத் தோன்றுகிறது.”

கொஞ்சம் விட்டுக்கொடுப்பதா அல்லது நிறைய விட்டுக்கொடுப்பதா, கொஞ்சம் சமரசம் செய்துகொள்வதா அல்லது நிறைய சமரசங்கள் செய்வதா, கொஞ்சம் பணிந்துபோவதா அல்லது நிறைய பணிந்து போவதா, இவையெல்லாம் வெறும் அளவின் அடிப்படையில் விசயங்களை மதிப்பிடும் கேள்விகள். அவை உனது பார்வையிலோ புரிதலிலோ எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை. எனவே மொத்த புரிதலையும் மாற்றிக்கொள். கொஞ்சமாகவா, நிறையவா என்ற கேள்விகள் மாறுதலை ஏற்படுத்தாது — தற்காப்பாக இயங்குவதை விட்டேன் என்று தூக்கி எறி. அத்தோடு, இந்த நிலைக்கு மாறாக தீவிரமான எதிர்போக்கிற்கும் போய்விடாதே: மூர்க்கனாகிவிடாதே. ஆனால், சுயமரியாதையை உறுதியாக வெளிப்படுத்து. உனது இதயத்தில் இருப்பதை வெளிப்படையாகச் சொல், நீ உண்மை என்று உணர்ந்ததை அப்படியே கூறு, எப்படி உணர்கிறாயோ, அந்த உணர்வை அப்படியே விளக்கு.

புனிதக் கொலைகள்
புனிதக் கொலைகள்

நீ சொல்கிறாய்: “ இந்த நிலையில் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள நாங்கள் செய்யும் எந்த முயற்சியும் எங்களுடைய உள்ளார்ந்த அனுபவத்தைக் குலைக்கிறது.

எந்தக் காலத்திலும் உனது உள்ளார்ந்த அனுபவத்திற்கு துரோகம் செய்துவிடாதே. நீ அதற்குத் துரோகம் செய்தால் தற்கொலையே செய்துகொள்கிறாய். தனது உடம்பைக் கொல்லுகிற ஒருவன் உண்மையில் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனெனில், அவன் மீண்டும் பிறக்கிறான்; அவனுக்கு ஒரு புதிய உடம்பு கிடைக்கிறது. புது டிசைனில் ஒரு புது உடம்பு. அவ்வளவுதான். ஆனால், எவன் ஒருவன் தனது உள்ளார்ந்த அனுபவத்திற்கு எதிராகச் செல்கிறானோ, அவன் மிக ஆழமான தீய தற்கொலையைச் செய்துகொள்கிறான் — அவன் அவனுடைய ஆத்மாவையே அழிக்கிறான். அதற்குப் பதிலாக துன்பங்களை அனுபவிப்பது சிறந்தது; தர்மத்தின் பாதையில் துயரங்களை அனுபவிப்பது அழகானது. தர்மத்தின் பாதையில் உயிரைவிடுவதுகூட தனக்கான ஒரு அழகைக் கொண்டிருக்கிறது.

அதோடு, இந்த (கிறுத்துவ) அரசாங்கங்கள் எல்லா நாடுகளிலும் இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளிலும் இதைத்தான் செய்யவும்போகின்றன. ஏனெனில், எனது சன்னியாசிகள் உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஜெர்மனியில் ஒரு விசாரணைக் குழுவை ஏற்படுத்தினார்கள், இப்போது ஹாலந்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள், விரைவில் இத்தாலியிலும், அப்படியே படிப்படியாக எல்லா நாடுகளிலும். உலகின் அனைத்து இடங்களிலும் நீ கொடுமைப்படவே போகிறாய் ! இப்படித்தான் அது எப்போதும் இருந்திருக்கிறது.

எனவே, நிகேதனா, உனது பார்வையை முற்றிலுமாக மாற்றிக்கொள். நீ தற்காப்பாக நடந்துகொள்ளவே வேண்டியதில்லை. ஆனால், ஒன்றை நினைவூட்டுகிறேன் — ஏனெனில், மனமானது முற்றிலும் எதிரான நிலைகளையே தேர்ந்தெடுக்கிறது — நான் உன்னை மூர்க்கனாக நடந்துகொள்ளச் சொல்லவில்லை. நான் உன்னை மிகச் சரியான நடுநிலையில் இருக்கச் சொல்லுகிறேன். தற்காப்பு நிலை இல்லை, மூர்க்க நிலை இல்லை, ஆனால், சுயத்தை உறுதியாக நிலைநிறுத்தும் நிலை — சுடும் வெயிலில், ஊளைக் காற்றில், கொடூரமான மழையில் எந்த மறைத்தலும் பாதுகாப்புகளும் இல்லாமல் அச்சமின்றி நிற்பதாலேயே இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டு – சன்னியாசம் என்றால் என்னவென்பதை.”

ஓஷோபிரியன் புத்தகத்தை மூடினார். புத்தகத்தின் பெயரைக்கூட அப்போதுதான் கவனித்தார். Philosophia Ultima என்று போட்டிருந்தது. கையில் புத்தகத்தை எடுத்துக்கொண்டார். செல்ஃபோனை எடுத்துப் பார்த்தால், எழவு, சார்ஜ் இல்லை. பொதுத்தொலைபேசிக்குப் போய் எண்களைச் சுற்றி நண்பரை அழைத்தார்.

”அல்ல்லோ”

”அல்ல்லோ”

”அல்ல்லோ, நாந்தான் ஓஷோபிரியன் பேசறேன்.”

”அல்ல்லோ, என்னலே, இப்பத்தானல பேசிக்கிட்டிருந்தோம். என்னா விசயம்?”

“நீங்க சொன்னதையே யோசிச்சிட்டிருந்தேன்.”

“ஆமா. சும்மாவா. சும்மா சுர்ருன்னு ஏத்தற பாட்டில்ல. அதிலயும் அந்தப் பொண்ணு…”

“அது இல்லங்க.”

“அப்புறம்?”

“இதோ படிக்கிறேன் கேளுங்க.”

நண்பர் வாசித்து முடிக்கும்வரை பேசாமல் கேட்டார். கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னார்.

“இத பாரு. ஓஷோவும் சாமியார், அதுவும் திராவிட கட்சிகளின் பொற்காலங்களில் வெளியான தினசரிகளின் கூற்றுப்படி, வெறும் செக்ஸ் சாமியார். எனவே அவர் இந்துத்துவ காவி கும்பலைப்போல சுயத்தை உறுதியாக, வெளிப்படையாகச் சொல்லு என்றுதான் பேசுவார். கவனிச்சுப் பாத்தின்னா, எங்கள வெறும் சாமியார் கும்பல், மதக்கும்பல், மூடர்களின்கூட்டம்னு நெனக்காதீங்கன்னுதான் அவஞ்சளும் பேசறானுங்க. இவரும் பேசறாரு. இவருக்கும் அவனுகளுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. என்ன, அந்தாள் பாப்பான் கிடையாதுங்கறது ஒன்னுதான் நமக்கு ஆறுதல். நாளைக்கு வரும்போது அந்தப் படத்து சிடியக் கொண்டு வா. இப்ப நீ போனை வை.”

மறுமுனையில் தொடர்பு துண்டிக்கப்பட, ஓஷோபிரியன் திகைத்துப் போய் நின்றுகொண்டிருந்தார்.

11 Replies to “ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..”

 1. பனித்துளியின் ஒவ்வொரு சொல்லும் நெஞ்சைச் சுடும் கனல் துண்டந்தான்.

 2. ஆ கட்டுரையின் நீளத்தில் அதில் உள்ள ஆழம் தெரிகிறது. நானும் மலமலயை படித்தேன். மற்றவர்களெல்லாம் அரசியலில் ஒன்றுபட்டு முஸ்லிம் ஓட்டு வங்கி, கிறித்துவ ஓட்டு வங்கி. சர்சுகள் சொல்லும் வேட்பாளருக்கு ஓட்டு என்றிருந்தால் அதன் பெயர் அரசியல் அல்ல அதன் பெயர் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு.

  இந்து மதம் ஆத்ம முன்னேற்றத்தை போதிக்கின்றது. அத்வைதம் எல்லா பற்றையும் ஒழித்து உன்னுள் இருக்கும் இறைவனை காண் என போதிக்கின்றது ஆனால் அதே நேரம் தர்மத்திற்கு கேடு வரும்பொழுது அதை எதிர்த்து நில் என்றும் சொல்லிகிறது. 14ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடாதிபதியான வித்யாரண்யர் முற்றும் துறந்த துறவி. ஆனால் இந்து தர்மத்தை பாதுகாக்க ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்களை ஊக்கப்படுத்தி விஜயநகர சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தார். விஜயநகர சாம்ராஜ்யம் இல்லாதிருந்தால் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தின் கோரத்தாண்டவம் இன்னும் அதிக அளவில் நடந்திருக்கும். இதே போல ராமதாசரின் சீடரான சிவாஜியால் தான் ஒரு சிறந்த மராட்டிய சாம்ராஜ்யம் உருவாயிற்று. இந்து மத தத்துவங்களின் படி நடந்த இதுபோன்ற அரசர்கள் ஒரு சிறந்த ஆட்சியை தந்தனர்.

  நன்றி,
  ராம்குமரன்

 3. //புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எப்படியோ ஒருவிதமாக பதில் கிடைத்துவிடும் என்று அவருக்கு நம்பிக்கை//
   
  இதை வேற எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே !!! 🙂
   
  Just kidding.
   
  Excellent article. Finished reading it in one fell swoop.
   
  Keep up the good work.
   
  Thanks,
  -sreeni
   
   

 4. My god…you should not call yourself ‘panithuli’…you should call yourself as ‘theepori’….

  very good article. Thanks.
  Satish

 5. எலே! பாடிகார்டு சாமிக்கு பலான லெட்டர் போடுபவர்கள்தாம் ஆன்மீக இந்துக்கள்.

  இது தெரியாம, சின்னபுள்ளத்தனமா, நீங்க ஒரு “மலை”ப்பிரசங்கம் பண்ணிகிட்டு!

 6. இன்றைய நிலையை செருப்பால் அடிச்சது போல் சொன்னீர்கள் .இது ஹிந்துக்களுக்கு புரிந்தால் போதும் .இன்றைய நிலைமை மாறும்

 7. நிதர்சனங்களை ஓஷோவின் வாயிலாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். கிறித்தவத்தின் கோரப்பற்கள் முழு உலகையும் ஆக்கிரமிக்கும்போது மீதமிருக்கப்போவது குழப்பங்களும், அநியாயங்களும் மட்டுமே.. எத்தனைகோடி இன்பம் இறைவன் வைத்திருந்தாலும் உலகை இருட்டில் வைத்திருப்பதே இவர்களது வேலை.. சுயமாக சிந்தித்தல் கிறிஸ்தவத்திற்கு எதிரானது.. பிற மதங்களின் கடவுள்கள் பேய்களும், பூதங்களும்.. இப்படிச் சொல்லி சொல்லித்தான் கிறித்தவத்தை வளர்க்கிறார்கள்.. வெறுப்பையே மூலதனமாகக் கொண்டு இயங்குவது இந்த கிறித்தவம் …. .. ஓஷோ தெரசாவுக்கு எழுதிய கடிதத்தைப் படித்தாலே முழு உண்மையும் விளங்கும்.. அவர்கள் எவ்வளவு அன்பே உருவானவர்கள் என்பது…

 8. மாலன் ரெகுலராக படிக்கிற வலைப் பக்கங்களில் இதுவும் ஒன்று என்பதால் படித்தேன். மிக நேர்த்தியாக இருக்கிறது.

 9. திரு மாநோஜ் ராக்ஹித் என்பவர் ஹிந்துக்கள் எப்படி எல்லாம் கிறிஸ்தவர்களாலும், முஸ்லிம்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதை சேவை நோக்கத்துடன்
  ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை இணையத்தில் பதிப்பித்து வருகிறார். சில தமிழாக்களும் உள்ளன. ஹிந்து டாட் காம் வாசகர்களின் நன்மைக்காக ஆசிரியர் குழு அவற்றை படித்து பின்னர் செய்திகளை தமிழ் ஹிந்து டாட் காமில் வெளியிடலாம். அதற்கான இணைப்பு இதோ:
  WEBSITE https://www.maanojrakhit.com

 10. மல மல மல மலே மல இந்த அருமையான கவித்துவம் மிக்க பாடலை இயற்றிய பைந்தமிழ்க் கவிஞர் இலங்கையில் இருந்து வந்து நம் தமிழகத்தில் தமிழ் வளர்த்து வரும் அப்துல் ஹமீது என்பார்.அந்த அரும் பெருமைமிக்க பாடலுக்கு நாட்டியாஞ்சலி செய்தவர் நாட்டியப் பேரொளி நாட்டியத் தாரகை நாட்டிய ரத்னா கும்தாஜ் மன்னிக்கவும் மும்தாஜ் அம்மணி அவர்கள் என்பதை பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.———–ஈஸ்வரன், பழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *