போகப் போகத் தெரியும் – 31

சாமானியனுக்கு ஒரு சந்தேகம்

su-samuththiramஅந்தக் காலகட்டத்தில் காமராசரை கடுமையாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரை– குறிப்பாகக் கலைஞரை– எனக்கு அறவே பிடிக்காமல் போயிற்று. அந்த இளம் வயதில் அவரை நான் எனது சொந்த எதிரியாகவே நினைத்தேன். எனக்குக் கிடைத்த முழுக் கல்வியை இவரும் அண்ணாவும் எங்கே பறித்து விடுவார்களோ என்று அநியாயமாகப் பயந்தேன்….

ஒரு பனையேறி வீரர் ‘காமராசர் காமராசர் என்கிறார்களே அவரு நம்ம ரிவன்யூ இன்ஸ்பெக்டர் அய்யாவவிட பெரியவரா’ என்று ஒரு பெரிய கேள்வியாகக் கேட்டார். இப்படி எங்களைப்போன்ற எளியவர்களை உய்விக்க வந்த காமராசரை, படிக்காதவர் என்றும், பாமரர் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேடைகளில் திட்டித் தீர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காமராசரின் எதிரிகள் சிறுவனான எனக்கும் எதிரிகளே. இந்த எதிரிப் பட்டியலில் முன்னணியில் இருந்த கலைஞரும் என் எதிரியே …

படிக்காத மனிதர்கள் கூட, மேடையில் திமுக-வினர் kamarajarகாமராசரை படிக்காதவர் என்று சொல்லும்போது இவர்கள் என்னவோ லண்டனில் படித்துவிட்டு பாரிசில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் கைதட்டுவார்கள். இத்தகைய அரசியல் சூழலில் நான் காமராசரை பார்க்காமலே அவர் பக்தனானேன்.

பாரதியார் மனைவி செல்லம்மா பிறந்த கடையத்தில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பாரதியார் வாழ்ந்த விதம் பற்றி பல பெரியவர்களிடம் கேட்பேன்.

barathiyarஉண்மையாகவே, பாரதியார் கழுதையின் வாலைப் பிடித்துக்கொண்டு அதன் பின்னால் ஓடியிருக்கிறார். கொஞ்ச நஞ்சம் கிடைத்த அரிசியை செல்லம்மா புடைக்கும்போது ஓடிப்போய் அவற்றில் ஒரு குத்தை எடுத்து பறவைகளுக்கு வீசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கவிஞனை பார்ப்பனக் கவி என்று வர்ணித்த திராவிட இயக்கப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஆகையால், கலைஞர் இந்த அணியில் இருந்தாரோ இல்லையோ, இந்த இயக்கத்தின் முன்னோடியாகச் சித்தரிக்கப்பட்ட அவர்மீது எனக்குத் தீராப் பகை ஏற்பட்டது.

சு. சமுத்திரம் / பக் 42, 43, 44, என் பார்வையில் கலைஞர்.

சு. சமுத்திரம் மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையாளர்களுக்கு, கலை, இலக்கியத் தொடர்பு உடையவர்களுக்குக் கழகங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இருந்ததாகத் தெரியவில்லை.

எனவே இந்த முறை இலக்கியம்.

கழகத்தவர்களே ஒருவருக்கொருவர் பட்டம் கொடுத்துக்கொண்டும் பாராட்டிக்கொண்டும் நாவலர் என்றும் காவலர் என்றும் பாவலர் என்றும் நாலுவிதமாகப் புகழ்ந்துரைத்துக்கொண்டதை நேர்மையான இலக்கியவாதிகள் புறக்கணித்தனர்.

இது குறித்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னணியில் இருக்கும் சில எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

prabanjan’நல்ல இலக்கியத்தைப் படைப்பதும், படிப்பதும் ஆன்மாவை மேம்படுத்தும் என்பதை நினைவில்கொண்டு உலகம் திரும்பிப் பார்க்கிற மாதிரி எழுத வேண்டும்’ என்று சொல்பவர் பிரபஞ்சன். இவருடைய கருத்து இதோ:

’வாழ்க்கைக்கும் பேச்சிற்கும் இடைவெளி அதிகமாக அதிகமாக இலக்கியம் பொய்யாகிவிடும். திராவிட எழுத்துக்களில் பொய் அதிகம். தவிர மோசமான சுவையை முதன்முதலில் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான்.’

கலை இலக்கியங்களை வரலாற்று வழியாக ஆராய்ச்சி செய்தvaanamaamalai ‘இலக்கிய கலாநிதி’, பேரா. ந. வானமாமலை எழுதுகிறார்:

’படித்த இளைஞர்களையும் மாணவர்களையும் தங்கள் பக்கம் கவர்ந்து கொள்ள, தொடர் நடை, நீளமான சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர். திமுக எழுத்தாளர்கள்.

இந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்து விட்டது. பிரசாரக் கருவியாக இந்நடை பயன்பட்டதேயன்றி, சிறந்த இலக்கியப் படைப்புகள உருவாக்க இயலவில்லை…

எனவே செயற்கையான திமுக நடை இப்போது இலக்கியம், சினிமா முதலிய துறைகளில் எடுபடுவதில்லை.’


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான ச. செந்தில்நாதன் சொல்வது இது:

’விதிவிலக்காகச் சில படைப்புகள் இருந்தபோதிலும் திராவிட இயக்கப் படைப்பாளிகள் எதார்த்தப் படைப்பாளிகளாக மலராமல் போனார்கள். அதனால்தான் இலக்கிய உலகில் சில தரப்பினரால் திராவிட இயக்கப் படைப்பாளிகள் இலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை. திராவிட இயக்கப் படைப்பாளிகள் எல்லாம், ஆட்சியில் இருக்கும்போது ‘அரசு விருது’ பெறுபவர்களாகவே ஆகிப்போனார்கள்.’

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் கருவோடும் உருவோடும் கலாபூர்வமாகப் பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். திராவிட இயக்கத்தாரைப் பற்றிப் பண்பாட்டுத் தளத்தில் இவர் செய்யும் விமர்சனம் இது:

’தேசத்திற்காகவும் கட்சிக்காகவும் தியாகங்கள் பல செய்தவர்கள்jeyakanthan1 எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் எந்தவிதமான தேசிய மரியாதைக்கும் லாயக்கற்றவர்களான திமுக-வினர் பதவியும் அதிகாரமும் பெற்று, காங்கிரசுக்கு சவால்விட்டுத் திரிகிற கொடுமை சகிக்க முடியாமலிருந்தது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் நோய்மாதிரிப் பரவிவந்த அவர்களது போலிப் புகழும் பேசிய பொய்களும் மறுத்துரைக்கப்படாமலிருப்பது ஒரு தேசிய அறிவுலக அவமானம் என்று நான் மனம் புழுங்கினேன்.’

indirapaarthasarathyசாகித்ய அகாதமி விருது பெற்றவரும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்படி எழுதுபவருமான இந்திரா பார்த்தசாரதி தில்லி மற்றும் வார்ஸா பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். இவருடைய கருத்து:

’திராவிட இயக்கம் தமிழ் மொழியை பலப்படுத்தி பிரபலமாக்கியதே தவிரவும் இலக்கியத்தில் ஒன்றும் சாதிக்கவில்லை.’

விடுதலைப் போராட்ட வீரரான ம. பொ. சிவஞானம் சிலப்பதிகாரத்தின் சிறப்பை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தவர். ம. பொ. சி. எழுதுகிறார்:

maposi’தமிழ்மொழிக் கலைகளுக்கோ காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அது மட்டுமல்ல; அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மானத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப் பேசுவதும் அவர்களின் அன்றாட வேலை. ஆங்கிலேயன் இந்த நாட்டைவிட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்பாள், மிஸஸ் மிராண்டா என மேல்நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப்பட்டார்கள். ஆனால் தேசிய எழுச்சியாலும் பாரதியாரின் உழைப்பாலும் மக்களிடையே நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது. ஆகவே தமிழை வாழ்த்தினாலொழிய தாம் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடர்கள். அதனால் சைமன் ஸ்டாலின், எட்வர்டு மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலைமுழுக்குப் போட்டுவிட்டு நாராயணசாமி நெடுஞ்செழியரானார்; ராமையா அன்பழகனரானார்; நடராஜர் கூத்தரசரானார். ஆம் விலை போகாத பண்டத்திற்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல் புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர்.’

venkat-swaminathanநம்மிடையே வாழ்கின்ற இலக்கியப் பிதாமகர், கலை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர் வெங்கட் சாமிநாதன். இவர் சொல்கிறார்:

’தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்க் கலாசாரம் இவற்றைப் புத்துயிர்ப்பதாக, காத்து வளர்ப்பதாகக் கோஷமிட்டு இயங்கிய அரசியல் இயக்கங்கள் எல்லாம் அண்மையில் இம்மூன்றின் தேய்வுக்கே வழிவகுத்துள்ளன.’

பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் சிலப்பதிகார மாநாட்டில் பேசும்போது கூறினார்:

meenakshisundaram’திராவிட இயக்கத்தார் வளர்த்துள்ள தமிழும் தமிழ்ப் பற்றும் என்ன? இப்படி நாடு கெடும், மக்களுக்கு இழிநிலை வரும் என்று கனவில்கூட நான் நினைக்கவில்லை.’

இதெல்லாம் அறிஞர்களின் கருத்துகள். என்னைப் போன்ற சாமானியனுக்கு ஒரு சந்தேகம்.

தமிழ் வாசகர்கள் விரும்பிப்படிக்கும் எந்த இதழாவது திராவிட இயக்கத்தவரின் கதை, கவிதை அல்லது கட்டுரையை வெளியிட்டிருக்கிறதா?

கலைஞர் கருணாநிதி தன் குடும்பப் பத்திரிகையில் தன்னுடைய எழுத்துக்களை வெளியிடுகிறார். அது அவருடைய வசதியைப் பொருத்த விஷயம்.

கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைகள் இதழ்களிலும் புத்தக வடிவிலும் தொடர்ந்து வெளிவருகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசனை திராவிட இயக்கத்தவர் என்று சுட்டிக்காட்ட முடியாது. அந்த மர்மலோகத்தின் ரகசியங்களை வெளிச்சம்போட்டுக்காட்டியவர் அவர்.

திராவிட இயக்கத்தவர் எழுத்துக்கு விலையும் இல்லை; விற்பனையும் இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால் திரைப்பட துறையில் கழகத்தவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை நான் மறுக்கப்போவதில்லை.

அந்த சரித்திரத்தையும் சாரத்தையும் இன்னொரு சமயம் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி வட்டத்தில் உள்ள கல்குறிச்சி பெரியார் சமத்துவபுரத்தில் ஆறுமுகம் என்கிற தலித்தின் குடும்பத்தினர் அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி செருப்பாலும் கம்பாலும் தாக்கியிருக்கின்றனர். இது குறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கமுயன்றபோது ‘நீ சமத்துவபுரத்தில் இருக்கிறாய். அதனால் சாதி பற்றிப் பேசக்கூடாது. எனவே நீ அடிபட்டதற்கு வேறு ஏதாவது காரணம் சொல்’ என அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள்.

– குமுதம் ரிப்போர்ட்டர் – 09. 07. 09

(தொடரும்…)

13 Replies to “போகப் போகத் தெரியும் – 31”

 1. சமுத்திரம், நான் அவரை அறிந்த கடைசி வருடங்களில், கருணாநிதியின் பரம பக்தராயிருந்தார். கோபாலபுரம் போன உடனே, கருணாநிதியின் காலைத் தொட்டு வணங்கித்தான் மற்ற காரியங்கள். ‘வயதான பெரியவர்கள் காலைத் தொட்டு வணங்குவது வடக்கே மிக சாதாரணம்” என்பார். அப்படி அவர் வேறு எந்த வயதானவர் முன்னும் வணங்கிப் பார்த்ததில்லை. செய்தியும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில், “ஏன்யா, வானொலி நிலையத்தில் இருக்கிறீர். உங்க ஆட்கள் என்னை ‘கலைஞர்” என்று சொல்வதில்லை. இந்திராவை ‘அன்னை’ என்று சொல்ல மறப்பதில்லை” என்று கேட்டதையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் எழுதியிருக்கிறார். இது ஒரு காட்சி மாத்திரமே.

  ஜெயகாந்தனும், கருணாநிதியின் பக்த கோடிகளில் ஒருவர். ஹாஸ்பிடலிலிருந்து ட்ஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்குப் போகாமல் முதலில் கோபாலபுரம் போய் கலைஞருக்கு நன்றி சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி. படத்தோடு.

  பிரபஞ்சன் எழுத்தில் அவ்வப்போது பல குரல்கள் கேட்கும். பருவத்தைப் பொருத்து.

  செந்தில் நாதன் விஷயம் கட்சிக் கொள்கை சார்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியிலா அல்லது அதிமுக அணியிலா என்பதைப் பொறுத்து. வாய் கூசாமல் பொய்களை உற்பத்தி செய்து சொல்வார், எழுதுவார். அவர் நடத்திய சிகரம் என்ற பத்திரிகையில். அவை கட்சி அரசியல் சார்ந்தவை.

  கண்ணதாசனின் வனவாசம் மிக சுவாரஸ்யமான புத்தகம். தயக்கம் ஏதும் இல்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல், அதில் அக்காலத்திய தன் பங்கையும் மறைக்காமல் எழுதியிருப்பார். அவரது கவிதைகளும் சில மிக சுவாரஸ்யமானவை.

  திராவிட இயக்கம் பற்றிய விஷயங்களில் இந்திரா பார்த்தசாரதி என்றும் ஒரே குரலில் பேசுகிறவர், எழுதுகிறவர். அவர் நாவல்களிலும் நிறைய கிண்டலைக் காணலாம். அவரை இதற்காகப் பாராட்டலாம்.

  அனேக மற்ற தமிழ் எழுத்தாளர்கள்,’என்னத்துக்கு வம்பு”, இப்போ எத்தையாவது சொல்லி பின்னாலே ஏதாவது காரியம்னா கெட்டுப் போய்டும். என்று ஜாக்கிரதையோடு வாய்மூடி இருப்பவர்கள்.

 2. Ve Saa is right. It is better the author considers removing comments of Su Samudram, Prpanjan, Sentilnathan and JK. It will help retain the quality of the book.

  MALARMANNAN

 3. இருக்கட்டும். அவர்களின் யோக்யதையையும் வாசகர்கள் தெரிந்துகொள்ளட்டும். பலருக்கு சமுத்திரம், பிரபஞ்சன் போன்றவர்கள் திராவிட தலைவர்கள் பற்றியும், அவர்கள் எழுத்துக்கள் பற்றியும் இப்பேர்ப்பட்ட கருத்துக்களும் சொல்லியிருக்கிறார்கள் என்பது புதிய செய்தியாக இருக்கும். [(:-))) அவர்களின் ஆட்களின் வார்த்தைகளை வைத்தே அவர்கள் முகத் திரையை கிழித்ததாக இருக்கும்.

  மேலும், ஜெயகாந்தன் போன்றவர்கள் காலத்தின் சூழ்நிலையால் எவ்வாறு மாற்றப் படுகிறார்கள் என்பதும் தெரியட்டும்.

  இங்கே உதைக்கும் ஒரே விஷயம், இந்த பட்டியலுடன் சேர்ந்து, மபொசி, வெசா, இபா போன்ற பெரியவர்களின் பெயரும் வந்துவிடுவது தான். [(:-))) இவர்களின் எழுத்துக்களை வேறு இடத்தில் உபயோகித்துக் கொள்ளலாம்.

  மேலும், கண்ணதாசன் திராவிடத் தலைவர்களைக் கிழித்ததை தனியாக சில அத்தியாயங்களில் எழுதலாம். [(:-))) படு சுவாரஸ்யமாக இருக்கும்

 4. அது ஒரு விதத்தில் சரிதான். ஆனால், மலர்மன்னன், இவர்கள் ஒவ்வொரு கால கட்டத்தில் சொன்னது, சொன்ன தேதி மற்றும் பிரசுர விவரங்களோடு வெளிவருமானால், இவர்களது மாறும் தேவைகள், அதற்கேற்ற மாறும் குரல்கள் எல்லாம் வெளிப்படும் தானே.

 5. In that case, I feel, let there be some kind of indirect indication to their opportunism, instead of flat quotations. Also, as Sri Haran says, it is better the quotations from Ve. Saa and similar others find place elsewhere. It is however, author’s propriety; mine is just a friendly loud thinking.
  Malarmannan

 6. //***********”ஹாஸ்பிடலிலிருந்து ட்ஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்குப் போகாமல் முதலில் கோபாலபுரம் போய் கலைஞருக்கு நன்றி சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி. படத்தோடு.” *********\\

  ஆம், வாஸ்தவம் தான் அதற்காக ஒரேயடியாக ஜெயகாந்தன் அவர்களும் கருணாநிதியின் பக்த கோடிகளில் ஒருவர்தான் என்பது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்து.

  போகப் போகத் தெரியும் தொடர் சமீபகாலமாக படித்து வருகிறேன், அருமையான படைப்பு, ஒவ்வொரு இந்தியத் தமிழனும் படிக்க வேண்டிய படைப்பு. வாழ்த்துக்கள்.

 7. இனியாவது விழித்துக்கொள்வோம்! நம்மை உணரச்செய்த கட்டுரைகளுக்கு நன்றியை செயலில் காண்பிப்போம்!

 8. Surprised to know from Sri. V.S and Sri M.M that even mighty JK is fan of Karu.

 9. அன்புள்ள நரேந்திரன்,

  ஜெயகாந்தன் மருத்துவ மனையிலிருந்து நேராக கோபாலபுரம் போய் நன்றி சொன்ன கட்டத்திற்கு வரும் மனநிலைக்கு அவர் அதற்கு முன்னரே தயார் செய்யப் பட்டுவிட்டார், தன்னைத் தயார் செய்து கொண்டுவிட்டார். நான் அதை முதலில் கவனித்தது, அதற்கு ஒரு சில ஆண்டுகள் முன்னரே கணையாழி பத்திரிகையில் கருணாநிதி பற்றி சினேகபாவத்துடன் தந்துள்ள நேர்காணல். ஜெயகாந்தனின் மனநிலையில் மாற்றமில்லாமல், கருணாநிதியின் அரசியலையோ “இலக்கியத்தையோ”, ஜெயகாந்தன் பாராட்டுவது என்பது நினைத்தும் பார்க்க இயலாதது.

  மருத்துவ மனையிலிருந்து கோபாலபுரம் சென்று நன்றி தெரிவித்த கணத்திலிருந்து இன்று வரை 1956 லிருந்து நான் அறிந்த ஜெயகாந்தனைக் காணவில்லை. திமுக பற்றி, “க்லைனர்” பற்றி ஒரு வார்த்தைகூட பாதகமாக ஜெயகாந்தனிடமிருந்து வெளிப்பட்டதில்லை. ஒரு சாதாரண சுய சிந்தனையாளனுக்கு இது சாத்தியமில்லை.

  மருத்துவ மனையிலிருந்து கோபால புரம் சென்ற நிகழ்வை அதற்கு முன்னும் பின்னுமான மாற்றத்திற்கு ஒரே ஒரு உதாரணமாகத் தான் சொல்லப்பட்டது. எல்லாக் கதையையும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தால்.

 10. கருணாநிதி அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருந்ததை விட அவர் செய்தது வேறொன்றும் இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு இரண்டாம் தர அரசியல் வாதிதான் கருணாநிதி.

  திருட்டு ரயில் ஏறி வந்தவர் மத்த அரசியல் வாதியை ஊழல் வாதி என்பது வேடிக்கை. கருணாநிதியை சரியாக கையாண்டது ஜெயலலிதா மட்டுமே.

 11. திருவாளர் சுப்பு தன் போக்கில் எழுதுவதில் ஒரு உள்ளமைதி இருக்கிறது. அதைக் குலைக்க வேண்டாம். திரு.வெ.சா அவர்கள் சொன்னது போல மேற்கோள் காட்டும்போது அந்த நபர்கள் எந்த வருடங்களில் சொல்லப் பட்ட கருத்துகளை மொழிந்தார்கள் என்று சுட்ட முடிந்தால் ஒரு வாச்கருக்குக் கால ஓட்டத்தில் பலர் எப்படி மாறி இருக்கிறார்கள் என்பது புரியும்.
  மைத்ரேயா

 12. அய்யா, நீங்கள் ப்ரபஞ்சனைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள், இவரும் ஒரு இந்து விரோதிதான்! ஒரு சனிக்கிழமை காலை, பா.ம.கா. நடத்தும் மக்கள் தொலைக்காட்சியில் அவர் பேசினார்! 2002 குஜராத் கலவரத்தைப் பற்றி யாரோ ஒரு புத்தகத்தை எழுதியிருந்தாராம்! அதற்க்கு விமர்சனம் தந்துகொண்டிருந்தார். அப்பொழுது அவர் கூறிய வரிகள்:- “முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த குற்றத்திற்காக அவர்கள் கொல்லப்பட்டனர். நரேந்த்ர மோடிக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியாக இருக்கலாம், அவர் இருக்கின்ற கட்சிக்கு வேண்டுமானால் அது மகிச்சியாக இருக்கலாம். பிராமண சங்கத்துக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியாக இருக்கலாம்…” என்று சொன்னார். அய்யா, குஜராத்தில் நடந்த கலவரத்திற்கும் பிராமணர் சங்கத்திற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்படி பார்ப்பனீய வெறுப்பை காட்டுபவர் கருப்புச்சட்டைக்காரராகத் தானே இருக்க முடியும்?

  அய்யா வெங்கட் சுவாமிநாதன், கட்டுரையில் குறிப்பிடப்பட்ட நபர் நீங்கள்தானா? ஒரே பெயராக உள்ளதே??

 13. “Makkal TV” is out and out anti-Hindu topped with Brahmin hatred. Vanniyars are supposed to be Vaishnavites! It is unfortunate that the Ramadoss-family has brought immense disrepute to this community and it is also sad that the majority of this community has got carried away by Ramadoss’s antics, which have the full backing of Christian and Islamic establishments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *