அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

thiruchivapuram-e1திருமாலும் பிரமனும் சிவத்தின் அடியையும் முடியையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குவது. அதன் ஒன்பதாவது பாடலில் இக்கதையைக் கூறுகிறார். அதனைக் குறித்து விளக்குவதற்கு முன் வாசகர்களை வேறு ஒரு பதிகத்திற்கு அழைத்துச் செல்லுகின்றேன்.

கும்பகோணத்திற்கு அருகில் திருச்சிவபுரம் என்றொரு தலம் உள்ளது. கடத்தற்காரர்களின் தயவில் அத்தலத்திலிருந்த நடராஜர் மேலைநாட்டுக்கு ஒரு ‘விசிட்’ போய் வந்ததிலிருந்து இந்தத் தலம் தமிழர் அனைவரும் அறிந்ததொன்றாகி விட்டது. இந்தத் தலத்துத் திருப்பதிகத்தின் முதலிரண்டு திருப்பதிகங்களின் பின்னிரண்டு வரிகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்.

முதல் பாடலின் பின்னிரண்டு வரி:

“பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில் நிலைபெறுவரே”

இதன் பொருள்: உயிர்கள் தத்தமது வினைக்கீடாக எய்த வேண்டிய எண்ணற்ற பிறவிகளாகிய படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டும் என்னு சங்கற்பத்துடன் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனாகிய கோலங் கொண்ட சிவபெருமானது சிவபுரத்தைத் தியானிப்பதாகிய அகப்பூசை புரிபவர்கள் வீட்டுலகத்தில் என்றும் சங்கும் ‘சாயுச்சிய’ நிலையை அடைவார்கள்.

அடுத்த பாடல்:

“அலைகடல் நடுஅறி துயிலமர் வியன்பர னுறைபதி
சிலைமலி மதில்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே.”

இதன்பொருள்: உயிர்கள் வாழும் உலகங்கள் உரிய கால எல்லை வரையும் அவை அழியாமல் நிலைபெறும் வண்ணம் அவற்றைக் காக்கும் தொழிலைப்புரியும் திருவுள்ளமொடு திருப்பாற்கடலின் நடுவிலே யோக நித்திரை மேவியுள்ள திருமாலின் உருவம் தாங்கிக் காத்தல் புரியும் இயல்பினைக் கொண்ட சிவபெருமானது மலைகள் போன்ற மதில்களால் சூழப்பட்ட திருச்சிவபுரத்தைத் தியானம் செய்வதாகிய அகப்பூசை செய்பவர்கள் முத்தித் திருவாகிய வீட்டின்பத்தை எய்தி இன்புறுவார்கள்.

மூன்றாவது பாடல்:

“முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகும் உலகிலே”

இதன்பொருள்: உலகம் முற்றிலும் மாயையில் ஒடுங்கவேண்டும் என்ற சங்கற்பத்துடன் உலகங்கள் அனைத்தும் தோன்றுவதற்குக் காரணமாக நின்ற முதல்வனான இறைவனே அச்சங்கற்பம் செயலாவதற்குப் பொருத்தமான உருத்திரன் வடிவங் கொள்ளும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள தலமாகிய செழுமையான சிவபுரநகரத்தைத் தொழுமவர் புகழ் பூவுலகிலே மேலும் மிகுதியாகும்.

எனவே, முழுமுதற் கடவுளான சிவமே நான்முகனாகப் படைத்தலையும் திருமாலாக காத்தலையும் உருத்திரனாக ஒடுக்குதலையும் செய்கின்றார் என்பதனைத் திருஞானசம்பந்தர் இம்மூன்று திருப்பாடல்கள் வழியே உணர்த்துகின்றார். எனவே சிவன் ஒருவனே இம்முத்தொழில்களை இம் மூன்று வடிவங்களைத் தாங்கிச் செய்கின்றான் என்பது பெறப்படும். இந்த உண்மையை ஏனைய திருமுறைகளும் கூறும்.

எடுத்துக் காட்டாகக் கருவூர்த் தேவர், திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில்,

“சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்
……… படர்சடை முக்கட்
பகவனாம் அகவுயிர்க் கமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்றெரித்த
ஏறுசே வகனுமாம்”

எனப் பாடுவதை காண்க.

சிவன் தானே இம்முச்செயல்களையும் செய்யும் நிலை சம்பு பட்சம் எனப்படும். சம்- இன்பம்; பு – உண்டாக்குபவன். சம்பு என்பது இன்பம் உண்டாக்குபவன் என்ற பொருளில் சிவனுக்கு உரிய பெயர்களில் ஒன்றாம். இதுவே சங்கரன் எனவும் வழங்கும். ‘இன்பஞ் செய்தலின் சங்கரன்’ எனக் காஞ்சிப் புராணம் கூறும். சம் – இன்பம்; கரன் – செய்பவன்.

சிவமாகிய இறைவன் பக்குவப்பட்ட ஆன்மாக்களை அதிட்டித்து இம்முத்தொழில்களையும் தன் ஆணை வழியே நடத்தும் அதிகாரத்தை அளிக்கின்றான். இவ்வாறு இறைவனால் அதிட்டிக்கப்பெற்ற ஆன்மாக்கள் அணுபட்சம் எனப்படுவர். அணு என்பது ஆன்மாவைக் குறிக்கும். இறைவன் ஆணை வழி நடக்கும் ஆன்மாக்களாகிய இவர்களுக்கும் பிரமன், திருமால், உருத்திரன் என்ற பெயர் உண்டு. இவர்களை மணிவாசகர் ‘சேட்டைத் தேவர்’ என்னும் பெயரால் குறிப்பிடுவார்.

அணுபட்சத்தில் உள்ள ஆன்மாக்களாகிய அயனும் அரியும் பிற தேவர்களும் பிறப்பிறப்பிற்பட்டு உழல்பவர் என்றும் சிவன் ஒருவனே பிறப்பிறப்பில்ல முழுமுதல் என்றும் திருமுறைகள் கூறும்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடி நாராயண ரங்ஙனே;
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே” (அப்பர்)

சம்புபட்சம், அணுபட்சம் பற்றிய விரிவான செய்திகளை சிவஞானபோதம் – இரண்டாம் சூத்திரத்து மாபாடியத்தில் காணலாம்.

சம்புபட்சத்தின்படி சிவனே பிரமன், சிவனே திருமால், சிவனே உருத்திரன். சிவனே பிரமனாகத் தன் முடியையும் திருமாலாகத் தன் அடியையும் தேடினான் என்பது அபத்தம்.

பின் சிவனின் அடிமுடி தேடிய பிரமனும் திருமாலும் யாரெனில் அந்த உயர் நிலையடைந்த ஆன்மாக்களே ஆவர். அணுபட்சத்தினராகிய அவர்கள் அசுத்த மாயையின் ஆட்சிக்கு உட்பட்டனவே. அந்த மாயையின் மயக்கினால் அறிவு மயங்கிக் குற்றமிழைத்துத் தண்டமும் பெறுவர். அந்தக் கதைகளை நாம் புராணங்களில் காண்கிறோம். கடும் முயற்சிக்குப் பின் பெரிய பதவியை அடைந்து பதவிச் சுகத்தால் பெருந்தவறு இழைப்பவர்களை உலகியலிலும் காண்கிறோம்..

sankaranarayanarதிருஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதிகங்களில் ஒவ்வொரு ஒன்பதாம் பாடலிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு முதலும் ஈறும் இல்லாத சிவபரம்பொருளின் அடிமுடிகளைக் காண முற்பட்டுப் பங்கப்பட்டவர்களாகக் கூறப்பட்டவர்கள் பிரமன் திருமால் பதவியில் இருந்த ஆன்மாக்களே.

எப்படி சக்தி வழிபாடும், முருகவழிபாடும், விநாயக வழிபாடும் சிவவழிபாடோ அப்படியே திருமால் வழிபாடும் சிவவழிபாடே. சைவதத்துவ அடிப்படையில் அந்த மூன்றையும் தனித்தனியே பிரிந்து போகாமல் சைவம் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. திருமாலைத் தனியாகப் பிரித்துக் கொண்டு போனவர்களைத் தடுக்க முடியவில்லை.

ஆனால் திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.

சைவம் போற்றும் சப்தகுருமார்களில் (குருக்கள் எழுவர்) தலைமைக் குருவாகத் திருமால் வழிபடப்படுகின்றார்.

“திருமால் இந்திரன் பிரமன் உபமனியன்
தபனன் நந்தி செவ்வேளாதி
தருமமுது குரவருக்குந் தனதருளால்
ஆசிரியத் தலைமை நல்கி
வருமெவர்க்கும் முதற்குருவாய் மெய்ஞ்ஞான
முத்திரைக்கைம் மலரும் வாய்ந்த
உருவழகும் குறுநகையும் காட்டியருள்
தருஞ்சிவனை உளத்தில் வைப்பாம்”
– சிவதத்துவ விவேகம், பாயிரம்.

சிவதத்துவ விவேகம் அப்பைய தீட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட நூல். இது திராவிட மாபாடிய கர்த்தர் மாதவச் சிவஞானயோகிகளால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. நாராயணன் முதலிய திருமாலின் நாமங்கள் சிவனுக்கு உரியனவேயாதலால் சைவர்கள் அந்தப் பெயர்களைச் சூட்டிக் கொள்வது இன்றும் உண்டு.

விஷ்ணுவுக்குச் சைவசமயம் எத்தகைய இடத்தைத் தந்துள்ளது எனத் தெளிவிக்க மற்றொரு சான்று. இது சைவ சாத்திரமான பரிபூரணானந்த போதம் கூறுவது.

”சைவத்து அச்சுதனை உயிரெனச்
சாற்றினுந் தாவில்
மெய்வத்து ஆயசிவ சத்தியின்
மேனி இஃது என்றும்
தொய்யற் றூயசிவ பேதமுள்
ஒன்று என்றும் சொலலால்
பொய்வத்து அன்றுஇது என்றுஉரன்
கோடலும் பொருந்தும்”

இதன்பொருள்: சைவநூல்களில் விட்டுணுவைப் பசு (ஆன்மா) என்று கூறினாலும், அழிவற்ற உண்மைப் பொருளாகிய சிவசத்தியின் உருவம் இது என்றும், ஆனந்த சுத்தசிவத்தின் ஒன்பது பேத வடிவங்களில் ஒன்று என்றும் கூறப்படும் சம்பிரதாயம் உண்டு. ஆதலால் விட்டுணு கற்பித தெய்வமன்று.

“சம்பு மார்க்கம் ஏய்ப்பவே
சனார்த்தனன் நெறிக்கணும்
அம்பரத்தை மேவு ஞான
வான்களோடுய் அன்பரும்
உம்பர் வாழ்த்த வேயு ளாரென்று
ஓது நூலுணர்ந் துளோர்
வம்பு பேசிடார்மெய்ஞ் ஞான
வாழ்விற் பேத மில்லையே”

இதன்பொருள்:சைவமதத்திலே ஞானாகாசத்தை அடந்துள்ள ஞானவான்களோடு, பத்தி மார்க்கம் பற்றி வாழும் அடியரும் தேவர்களும் வாழ்த்தும்படி உள்ளமை போல, வைணவத்திலும் அத்திறமுள்ளவர்கள் உள்ளார் என்று உரைக்கும் நூல்களை அறிந்தோர் குதர்க்க வாதத்தில் தலையிடார். ஞானத்தாலாகும் முத்தி வாழ்க்கையில் பேதமில்லை.

இந்தச் சான்றுகளால் திருமாலைச் சிவசத்தியின் ஒருவடிவமாகப் போற்றுகின்றதென்பதும் ஞானமார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகும் வைணவரும் சைவம் கூறும் முத்தியை அடைவர் என்றும் ஞானத்தாலாகும் முத்தியில் சைவ வைணவ பேதமில்லை என்பதும் சைவத்தின் கொள்கை என்பது தெளிவாகும்.

எனவே இந்தக் கதை சமயச் சண்டையைத் தூண்டும் என்பது அறியாமை.

இதற்கு முன்பு வந்த ஒரு கட்டுரைக்கான  ஒரு மறுமொழியில் குறிப்பிடப் பட்ட புத்தூரார் கூறியது பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மற்றொரு மறுமொழியில் போற்றுதற்குரிய சுவாமி சித்பவானந்தா அவர்கள் கூற்றாக இவ்வாறு குறிப்பிடப் பட்டது – “தற்பெருமை பூண்டிருந்த திருமாலும், படைப்புத் தெய்வமும் பரமனுடைய அருளுக்குப் பாத்திரமாகாது என்றென்றும் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தையும் திருவாசகத்தில் அவர் அடுத்தடுத்து சில இடங்களில் இயம்பியுள்ளார். தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து சமயப் பிணக்கை வளர்க்கும்; சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது.” இவ்வாறு கூறியது சரியல்ல. சுவாமி சித்பவாநந்தா அவர்களால் இந்து மதத்திற்குப் பொதுவான பல நன்மைகள் விளைந்தன என்பது உண்மையே. ஆனால் அவர் திருமுறைகளையும் சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகப் பயின்றவர் அல்லர். தத்துவ விளக்கத்திற்கே இந்தக் கதை கூறப்பட்டது. இதனால் மாணிக்கவாசகரின் உள்ளத்தை அவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.

dr-muthukumara-swamyமுனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள் தமிழிலும், சைவத்திலும் ஆழ்ந்த புலமை உடையவர். பண்டைத் தமிழ் இலக்கியம், திருமுறைகள், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து ஆய்வு நோக்கில் எழுதக் கூடியவர்.

தமிழ்ஹிந்து, திண்ணை, சொல்வனம், வார்த்தை முதலிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

43 Replies to “அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்”

  1. முனைவர் அவர்களே, நானோ சிறு பிள்ளை; முப்பது வயதையும் இன்னும் எட்டாதவன். உங்களுடைய பல்லாண்டு கால அனுபவத்திற்கும், முதிய வயதிற்கும், தமிழிலும், சைவ சித்தாந்தத்திலும் நிகரற்ற தேர்ச்சிக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்.

    கண்ணபிரான் கீதையில் (நான்காம் அத்தியாயம்)

    “அருச்சுனா, உனக்கும் எனக்கும் பிறவிகள் அநாதி. உனக்கோ கருமத்தினால் பிறவி விளைகிறது; நானோ கர்ம வசப்பட்டு பிறப்பவன் அல்லன், பபமோ புண்ணியமோ எனக்குக் கிடையாது, பிரமனுக்கே நான் தந்தை, என் பிறப்பு எப்படிப்பட்டதேன்றால், நானே இச்சைப்பட்டு எந்த ஒரு பாப, புண்ணிய கருமத்தின் உந்துதல் இல்லாமலும் சாதுக்களை சம்ரக்ஷிப்பதர்காக இப்பூவுலகில் இறங்கி வருகிறேன். உனக்கோ முன்ஜென்ம ஞாபகம் இல்லை; எனக்கோ முன்பு எந்தெந்த யுகத்தில் எப்படி எப்படிப் பிறந்து எந்தெந்த மகானுபாவர்களுக்கு இப்பொழுது கூறும் விஷயத்தையே முன்பு உபதேசித்துள்ளேன் என்பதெல்லாம், நான் சர்வஜ்ன்யனாக இருப்பதால், முற்றிலும் எனக்கு ஞாபகம் உண்டு. என் பிறப்பைப் பற்றி அறிபவன் மீண்டும் பிறப்பதில்லை (பரமபதத்தை அடைகிறான்)!!”

    என்று முழங்கியுள்ளார். இதையே மும்மதத்து (அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத) பிராசீன ஆசாரியார்களும் தொன்று தொட்டு பூரணமாக ஆதரித்துள்ளனர். உங்களுடைய இக்கட்டுரையிலோ, மேற்கூறிய மூன்று சித்தாந்திகள் ஆதரித்துள்ளதற்கு முரணாகப் பல விஷயங்கள் உண்டு என்பது தெள்ளத்தெளிவு:

    // அணுபட்சத்தினராகிய அவர்கள் (பிரமனும் திருமாலும்) அசுத்த மாயையின் ஆட்சிக்கு உட்பட்டனவே. அந்த மாயையின் மயக்கினால் அறிவு மயங்கிக் குற்றமிழைத்துத் தண்டமும் பெறுவர். அந்தக் கதைகளை நாம் புராணங்களில் காண்கிறோம். கடும் முயற்சிக்குப் பின் பெரிய பதவியை அடைந்து பதவிச் சுகத்தால் பெருந்தவறு இழைப்பவர்களை உலகியலிலும் காண்கிறோம்.. //

    // அணுபட்சத்தில் உள்ள ஆன்மாக்களாகிய அயனும் அரியும் பிற தேவர்களும் பிறப்பிறப்பிற்பட்டு உழல்பவர் //

    // இறைவன் ஆணை வழி நடக்கும் ஆன்மாக்களாகிய இவர்களுக்கும் பிரமன், திருமால், உருத்திரன் என்ற பெயர் உண்டு. இவர்களை மணிவாசகர் ‘சேட்டைத் தேவர்’ என்னும் பெயரால் குறிப்பிடுவார். //

    இதற்காக யாரையும் பகைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் “எல்லாம் ஒன்று, எல்லாமே பரம்பொருள்” என்று இன்றைக்கு கூறும் இந்துக்கள் இந்த சித்தாந்த வேறுபாடுகளை இனியாகிலும் மதித்து, அவரவர்க்கு ஏற்ற மாதிரி உள்முரண்பாடல்லாத ஒரு சித்தாந்தத்தை மட்டும் கடைப்பிடித்து வந்தால்தான் இன்றைய இளைஞர்களுக்கு இறைநம்பிக்கை வரும்.

  2. திரு கந்தர்வன் அவர்களே,

    தங்கள் பிராயம் முப்பதுக்கும் கீழ்ப்பட்டது என அறியும்போது, எனது கவலை சிறிது குறைந்தது. எனது அடுத்த தலைமுறை தமிழிலும், நமது பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும் நாட்டமில்லாமல் இருக்கிறார்களோ அதனால் இந்த பாரத தேசத்தின் பண்பாட்டுக்குக் குந்தகம் விளையுமோ எனக் கவலை எனை வாட்டுவதுண்டு. தங்களைப் போன்ற இளவயதினர் தமிழிலும், நமது தொன்மையான பண்பாட்டிலும் இத்துணை ஆர்வமாக இருப்பது பெரும் மகிழ்வைத்தருகிறது.

  3. Very good posting.
    Dear Hindu friends, Don’t fight for this.
    Worship the God in your own way, no one will object. But don’t criticise the other Gods.

    Somasundaram

  4. மதிப்பிற்குரிய திரு. உமாசங்கர் அவர்களே,

    தாங்கள் வயதில் என்னைவிட முதியவராக இருப்பீர்கள் என்று இப்பொழுது தான் அறிகிறேன். உங்கள் முதுமைக்கும் அனுபவத்திற்கும் கோடி நமஸ்காரங்கள். உங்களைப் போல் நானும் அத்வைத சம்பிரதாயத்தவன் தான். எனது தாய், தந்தையரின் ஆசிர்வாதத்தாலும், மானசீக ஆச்சாரியார்கள் அனுக்ராஹத்தாலும், ஸ்ரீபதியின் பரம கருணையாலும் தான் ஓரிரு ஆண்டுகள் காலமாக எனக்குச் சிறிதளவு அறிவு ஏற்பட்டுள்ளது. இதை ‘என்னால் சாதிக்கப்பட்டது, நான் புண்ணியம் பண்ணினதால் கிடைத்தது’ என்று ஒரு பொழுதும் சொல்லிக்கொள்ள எனக்குத் தகுதி இல்லை. ஏனெனில், இத்தனை குறுகிய நேரத்திலும், பாரதப் புண்ணிய பூமியின் சம்பந்தத்தை ஏழு ஆண்டுகளாக இழந்த போதிலும், இத்தகைய அறிவு ஏற்பட்டிருந்தால் அது என் சொந்த முயற்சியால் ஏற்பட்டிருக்க முடியாது.

    இன்றைய இளைஞர்களுக்கு நம் வைதிக தருமத்தில் நாட்டம் இல்லை என்பதற்குக் காரணம், கேள்விகளுக்குச் சரியான பதில்களோ, வரலாற்றுச் சான்றுகளோ, ஆராய்ச்சி நூல்களோ வெளிவராததன் காரணமே. நல்ல மனம் படைத்தவர்களில் கூட பலர், பூர்வாச்சாரிய நூல்களைக் கட்டிக் காத்து அவர்கள் வகுத்த வழியில் செல்லாமல், தான் தோன்றித் தனமாக “நம் நாட்டையும் கலாச்சாரத்தையும் குறித்து குறுக்கு வழியிலாவது அனுகூலமாக எழுத வேண்டும்” என்று கைக்கு வந்தவற்றை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். அதையாவது ‘எங்கள் சொந்த கருத்து இது, மரபில் இப்படி இதுவரை எழுதப்படவில்லை’ என்றாவது சொல்லலாம். இவற்றைப் படிக்கும் இளைஞர்கள் இவற்றுள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைப் படித்துவிட்டு ‘இதெல்லாம் மூடநம்பிக்கை’ என்று முடிவு பண்ணி எள்ளி நகையாடினால் அவர்கள் மேல் ஒரு குற்றமும் இல்லை.

    தர்க்க ரீதியில் தான் நம் முன்னோர்கள் வைதிக்கத்தைக் காத்து வந்தனர். நடுநிலை நின்று ஆராய்ச்சி பண்ணி விவாதம் நடத்த பயப்படுபவர்களுக்கு உண்மையில் வேதத்தில் நம்பிக்கை ஸ்திரமாக இல்லை. கலியின் இன்னடனத்தைச் சரி செய்ய பரமபுருஷன் தான் மறுபடி அவதாரம் எடுக்க வேண்டும்!

    நன்றி,

    கந்தர்வன்

    (edited and published)

  5. திரு.கந்தர்வன் அவர்களே, அந்த “அடி-முடி” வரலாற்றின் உண்மை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. முனைவர் அய்யா ஒரு சான்றோடு (திருமுறைகள், திருவாசகம், தேவாரம் முதலானவை) சிவன் பெரியவர் என்கிறார். நீங்கள் ஒரு சான்றைக்கொண்டு (கீதை, பாகவதம், விஷ்ணு புராணம் போன்றவை) திருமால் பெரியவர் என்கிறீர்கள். இரண்டையும் நான் மதிக்கிறேன். எது உண்மையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள நான் தயார். ஏனெனில், எனக்கு சிவனோ, திருமாலோ எந்த வேறுபாடுமில்லை!

    மேலும் அந்தக் கட்டுரையில் கூரியுள்ளதைப்போல இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாதங்களுக்கு ஒரு காரணம் இருக்கவேண்டும்.. திருபுராதி வதத்திற்கு முன்பு, ஈசன் விநாயகரை வணங்குகிறார். மகாதேவனான சிவபெருமானே முருகனிடம் பாடம் கற்கிறார். இதற்க்கெல்லாம் ஒரு காரணம் இருப்பது உண்மையானால், இந்த “அடி-முடி” கதைக்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும் என்பதுமட்டும் நன்றாக புலப்படுகிறது!

  6. //தங்கள் பிராயம் முப்பதுக்கும் கீழ்ப்பட்டது என அறியும்போது, எனது கவலை சிறிது குறைந்தது. எனது அடுத்த தலைமுறை தமிழிலும், நமது பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும் நாட்டமில்லாமல் இருக்கிறார்களோ அதனால் இந்த பாரத தேசத்தின் பண்பாட்டுக்குக் குந்தகம் விளையுமோ எனக் கவலை எனை வாட்டுவதுண்டு. தங்களைப் போன்ற இளவயதினர் தமிழிலும், நமது தொன்மையான பண்பாட்டிலும் இத்துணை ஆர்வமாக இருப்பது பெரும் மகிழ்வைத்தருகிறது.//

    உமாசங்கர் அய்யா, என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கவலை மேலும் குறையட்டும். ஏனெனில், நான் திரு.கந்தர்வன் அவர்களைவிடச் சிறியவன்!

  7. Mr Balaji and Mr Ghandharvan, my blessings and best wishes for both of you, (as I am entitled to, due to my age of 61 years!!)
    Mr Balaji, this article had served one purpose only: causing unnecessary divisions /ill feelings among Hindus. What the author is claiming, as you have noticed rightly,is that Shiva is superior to Vishnu, quoating Thevaram, Thiruvasakam, etc. (Such persons will not worry about the hurt they are causing to all Hindus, vaishnavites who consider not only Vishnu and Shiva as one and the same, but also all the 30 crores of gods as ONE Brhaman You see, they have proof here!)

    Shri Muthukumaraswamy Sir, we, the ordinary Hindus with limited knowldge of our Dharmi ways and of Thevaram, Thiruvasakam,etc, admit that Shiva is greater than Vishnu. You Sir, have made your point very clearly.

    Now ,let me go and worship Lord Venkateswara, Shiva, Parvathi and Lord Muruga, all situated under one roof, in our Venkateswara temple complex in Sydney. I will be praying for peace and unity of all Hindus.

    (Edited and published)

  8. இராமா அய்யா, தங்களின் ஆசிகளுக்கு என் மனமார்ந்த நன்றி! நீங்கள் சொன்னது சரிதான், இந்த கட்டுரை சில பிரிவினையை உருவாக்குகிறது. இந்த விஷயத்தில், திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதிய தாத்பரியக் கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. படித்துப் பாருங்கள்…

    //Now ,let me go and worship Lord Venkateswara, Shiva, Parvathi and Lord Muruga, all situated under one roof, in our Venkateswara temple complex in Sydney. I will be praying for peace and unity of all Hindus.//

    இந்த ஒற்றுமைதான் இன்றைக்குத் தேவை. இதுபோன்ற நடுநிலைதான் அவசியம்.. நாம் மாணிக்கவாசகரோ, சங்கரரோ, இராமானுஜரோ அல்ல! தர்க்கரீதியாக வாதாடி உண்மையை அறிந்துகொள்ள. யாரும் இயேசு கிருஸ்துவையோ, அல்லாவையோ வணகச் சொல்லவில்லையே…
    சைவர்கள் “திருமாலும் நம் தெய்வம்தானே, மதித்தால் குறைந்துவிடமாட்டோம்” என்றும் வைணவர்கள் “சிவன், விநாயகர் முதலானவர்களும் நம் தெய்வங்கள்தானே, வணங்கினால் குறைந்துவிடமாட்டோம்…” என்றும் எண்ணும் காலம்தான் வேத/வேதாந்த மதத்திற்கு நல்லது…

    வைணவர்கள் ஷாரியா சட்டத்தை ஏற்றுக்கொள்வதைவிட சிவஷங்கரனை ஏற்றுக்கொள்ளலாம், சைவர்கள் “ஆண்டவரே, ஆண்டவரே” என்று கூறும் மதமாற்றப் பேய்களுக்குப் பின் செல்வதைவிட ஆதிகேசவனுக்குப் பின் செல்வதே சாளச் சிறந்தது என்பது என் அபிப்பிராயம்.. தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!

  9. முனைவர் அய்யா நன்றாகவே எழுதியுள்ளார். சில வார்த்தைகள் மட்டுமே காயப்படுத்துவதாக உள்ளன. ஆனால், இதிலொன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அதாவது, எப்படி பிரம்மனும் சிவனும் கூட விஷ்ணுவின் அருளுக்காகவும் மோட்சத்திர்க்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைணவம் கொள்கிறதோ, அதுபோலவே பிரம்மனும் விஷ்ணுவும் சிவனின் அருளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சைவம் கொள்கிறது. இது “வேதத்திற்கும் கீதைக்கும்” புறம்பானது என்று வைணவர்கள் காட்டுகிறார்கள். ஆனால், இதிலிருக்கும் தத்துவம் என்னவென்று ஏற்கனவே மூன்று கட்டுரைகள் மூலம் திரு.எஸ்.இராமன், திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் மற்றும் இங்கு முனைவர் அய்யா கூறியுள்ளனர். பலர் சைவ சித்தாந்தம் ஒன்றே சைவம் என்றும் தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர். எப்படி ஸ்ரீ வைஷ்ணவம், மாத்வம், கௌடியம் போன்ற சம்பிரதாயங்கள் வைணவ மதத்திலுள்ளதோ அதேபோல சைவ சித்தாந்தம் சைவ மதத்தின் ஒரு சம்ப்ரதாயம்! இது தவிர வீரசைவம் (லிங்காயதம்), சித்த சித்தாந்தம் (நாத் சம்ப்ரதாயம்), பாசுபாயதம், காஷ்மீர் சைவம், தத்தாத்ரேய சம்ப்ரதாயம் போன்றவை சைவத்தில் உள்ளது. “சிவனே பெரியவன்” என்பது வேதத்திற்கு முரணானது, எனவே தான் ஆதிசங்கர பகவத்பாதர் போன்ற நடுநிலையாளர் (அத்வைதி) கூட இதை ஆதரிக்கவில்லை என்றும், அதனால்தான் எந்த வைதீக ஆசாரியரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், எனவேதான் வைணவம் ஆரிய மதம், சைவம் திராவிட மதம்; இந்திரனை நீக்கிவிட்டு வேதத்தில் சிவனை சேர்த்துவிட்டனர் என்றெல்லாம் பசப்புகிறார்கள் இஸ்லாமிய/கிறித்தவ/இடதுசாரி இந்து விரோதிகள். சற்று ஆராய்ந்தால், வைனவத்தைப்போலவே சைவமும் ஒரு வைதீக மதம் என்பது புலப்படும். முதலில் சைவ சித்தாந்தத்தையே எடுத்துக் கொள்வோம். எப்படி ஆழ்வார்களில் எல்லா வர்ணத்தினரும் இருந்தனரோ, அதேபோல நாயன்மார்களிலும் எல்லா வர்ணத்தினரும் இருந்தனர். ‘நால்வர்’ என்று அன்புடன் அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், அப்பர் (திருநாவுக்கரசர்), சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசகர் களில், அப்பர் பெருமானைத்தவிர மூவரும் வைதீக குடும்பத்தில் பிறந்தவர்களே. முனைவர் அய்யா எழுதிய ‘வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் நான்காம் பாகம்’ என்ற கட்டுரையிலிருந்து ஒரு குறிப்பைத் தருகிறேன்:-

    //தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தருடைய திருஅவதாரமே வேதநெறியைத் தழைத்தோங்கச் செய்தலையும் மிகுசைவத் துறையை விளங்கச் செய்தலையும் குறிக்கோளாகக் கொண்டதாகும்.

    அவருடைய தந்தையார் சிவபாத இருதயர் கவுணிய கோத்திரத்தவர்.( இக்காலத்தில் கவுண்டின்ய கோத்திரம் என வழங்கப்படுகின்றது.); ‘அந்தணர் தங்குடி முதல்வர்.’ ‘இப்புவி வாழத் தவஞ்செய் இயல்பினார்’;. சிவபாத இருதயர் தமிழ்நாட்டில் சமணர், சாக்கியர்களின் பொய்மிகுந்து, “ஆதி அருமறை வழக்கம்” அருகி, சிவனடியார்களிடத்தில் திருநீறு முதலிய சைவசாதனங்கள் போற்றப் பெறாதொழிதலைக் கண்டு வருந்தினார். இறைவனிடத்தில், “பரசமயம் நிராகரித்து நீறாக்கும் “ திருப்புதல்வனை வேண்டித் தவம் புரிந்தார். அவருடைய வேண்டுகோளுக் கிரங்கிய இறைவன்,

    “பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க ……
    சிவம்பெருக்கும் திருஞானசம்பந்தப் பிள்ளையார்
    திருவவதாரம் செய்தார்”

    என தெய்வச் சேக்கிழார் பெருமான் மொழிகின்றார். திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் பெருமான் ‘இருக்குமொழிப் பிள்ளையார்’ எனும் சிறப்புப் பெயராலும் குறிக்கின்றார். இருக்குவேதம் எனும் ஒரு வேதம் இருந்தாலும், இப்பெயர் வேதங்கள் நான்கினையும் பொதுவாகக் குறிக்கும். மேலும், அப்பர் பெருமானின் ஒன்பதாவது திருமுறையில் வேத கருத்துக்களையே பாடியுள்ளார் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    இதேபோல, 18 சித்தர்களுள் ஒருவரான திருமூலர் எழுதிய ‘திருமந்திரம்’ சைவ சித்தாந்தத்தில் ஒரு பெரிய சாஸ்திரமாகக் கருதப்படுகிறது. சித்தர்கள் ஏதோ வேத நெறிக்கு புறம்பானவர்கள் என்பதுபோல ஒரு தவறான கருத்து பரப்பப் படுகிறது. இந்த சித்தர்களுக்கேல்லாம் ‘குரு’ யார் என்று ஆராய்ந்தால் இந்த கேள்வியே தவிடுபொடியாகிவிடும். ஏனெனில், அவர்தான் ரிக் வேதத்தில் பல சூக்தங்களையும் மந்திரங்களையும் இயற்றிய அகத்திய மாமுனி. மேலும் ஜெயிமின்ய பிராமனத்திலும் (சாமவேதம்), கோபத்த பிராமனத்திலும் ‘சப்தரிஷிகளுக்குள் ஒருவர்’ ஆக கருதப்படுகிறார். மேலும், பழநியாண்டவரின் விக்ரகத்தை நவபாஷானன்களால் செய்த போகர் சித்தரும் இதே அகஸ்தியரின் குரு பரம்பரையில் வந்தவரே. யோக சூத்திரங்களை இயற்றிய பதஞ்சலி முனிவரும் ஒரு சித்தராக கருதப்படுகிறார். போகரது சீடரே நாக சித்தர் (மகாவதார் பாபாஜி). அவரது சீடர் லாகிரி மாகாசயர். அவரது சீடர் யுக்தேஸ்வர் கிரி. அவரது சீடர்தான் புகழ்பெற்ற “ஒரு யோகியின் சுயசரிதம்” என்ற நூலை இயற்றிய பரமஹம்ச யோகானந்தர். இவர்தான் சுவாமி விவேகானந்தரைத் தொடர்ந்து 1920 இல் அமெரிக்காவில் நடந்த “உலக மதங்களின் மாநாட்டில்” இந்துமதத்தை represent செய்தார்.

    அதேபோல, மற்ற சைவ மதத்தின் சம்பிரதாயங்களை தோற்றுவித்த ஆசாரியர்களும் (பாசவன்னர், கோரக்னாதர், மத்செந்த்ரனாதர், அபிநவகுப்தர், ஸ்ரிகாந்தர், அப்பய்ய தீட்சிதர்) போன்றவர்களும் வைதீக குடும்பங்களில் பிறந்து, வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களைக் கற்று பிறகு “சிவ சர்வோத்தமத்தை” நிலைநாட்டினர். லிங்காயதம் எனப்படும் வீரசைவ சம்பிரதாயத்தை ஸ்தாபித்த பாசவன்னர் வேதங்களை நிராகரித்தாலும், மற்ற சம்பிரதாயங்கள் அவற்றை ஏற்றுக் கொள்கின்றன.

    இதுகுறித்து முனைவர் அய்யாவே எழுதிய மற்ற கட்டுரைகளைப் பார்க்கவும்:-
    https://tamilhindu.com/author/knmuthuswamy/

    அத்வைதம் வேதத்திற்கு முரணானது என்று மத்வர் வாதாடினார். அதை இன்றும் இஸ்கான் அமைப்பினர் கூறுகின்றனர். முதலில் அத்வைதத்தை எதிர்த்தவர் இராமானுஜர். ஆனால் இராமானுஜர் கூறிய “எல்லா முக்திபெற்ற ஆன்மாக்களும் பெருமானைப்போன்றே உருவத்தை ஸ்ரீ வைகுண்டத்தில் பெறுகின்றன” என்ற சித்தாந்தத்தை மத்வர் நிராகரித்தார். ஜீவாத்மா எப்பொழுதுமே பரமாத்மாவை போல ஆகாது என்று வாதிட்டார். ஆக மத்வரின் வேதாதந்தப்படி இராமானுஜர் கூறியதையும் ஏற்கலாகாது. அப்படியென்றால் மத்வரைப் பின்பற்றுபவர்கள் “அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டுமே வேதங்களுக்கு முரணானது” என்று கொள்வர்.

    ஆனால், “எப்படியிருந்தாலும் எந்த வேதாந்தத்தையோ சித்தாந்தத்தையோ குரு பரம்பரயையோ பின்பற்றினாலும் சிவன் பெரியவன் விஷ்ணு பெரியவன் என்று கொண்டாலும் அனைவருக்கும் வேர் வேத சாஸ்திரமே”.

    எனவே, ‘சிவன் பெரியவன்’ என்ற கருத்து வேதத்திற்குப் புறம்பானது என்று சொல்லி ஆரிய/திராவிட இன வெறியர்கள் வெல்ல வழிவகுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்…

    வேத காலத்தில், யார் பெரியவர் என்ற வாதம் நடந்ததே இல்லை. அவரவர்கள் அவர்களது வேள்விகளையும் நித்ய கர்ம அனுஷ்டானங்களையும் செய்து நிம்மதியாக வாழ்ந்தார்கள். பரப்ரம்மம்/பரமாத்மா/இரண்யகர்பன்/விராட்புருஷன் போன்ற பெயர்களாலேயே அவன் வழங்கப்பட்டான்….

  10. அன்புள்ள முத்துக் குமாரசுவாமி ஐயா அவர்களுக்கு,

    திருமாலும், பிரமனும், சிவனும் ஒரே பரம்பொருளின் வடிவங்களே என்ற தத்துவத்திற்கு வலு சேர்க்குமாறு உள்ள திருமுறைப் பாடல்கள் நன்று. பின்னர் தாங்கள் அளித்துள்ள சித்தாந்த விளக்கங்கள் முழுக்கவே சமயவாதம் சார்ந்தவை. வேதாந்த தத்துவத்தையே மையமாகக் கொண்டு இந்து ஞான மரபை அணுகுபவர்களுக்கு, இறுகிய சமயவாதக் கருத்துக்கள் உவப்பளிப்பதில்லை. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் அனைவருமே இறுகிய சமயவாதத்தை விரும்பவில்லை.

    // சுவாமி சித்பவாநந்தா அவர்களால் இந்து மதத்திற்குப் பொதுவான பல நன்மைகள் விளைந்தன என்பது உண்மையே. ஆனால் அவர் திருமுறைகளையும் சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகப் பயின்றவர் அல்லர். தத்துவ விளக்கத்திற்கே இந்தக் கதை கூறப்பட்டது. இதனால் மாணிக்கவாசகரின் உள்ளத்தை அவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகின்றது. //

    இதில் தங்களுடன் மாறுபடுகிறேன். சுவாமி சித்பவானந்தரது பகவத்கீதை உரை, திருவாசக உரை இரண்டையுமே நான் ஓரளவு கவனத்துடன் கற்றிருக்கிறேன். சுவாமிகள் அடிப்படையில் வேதாந்தி, ராமகிருஷ்ண-விவேகானந்த மரபில் துறவு பூண்டவர். ஆயினும், சைவசித்தாந்தத்தையும், தாயுமானவரையும் ஆழ்ந்து கற்றவரும் கூட. அவரது திருவாசக உரை நெடுகிலும் சைவ சித்தாந்தத்தையும், உபநிஷத-கீதை விளக்கங்களையும் வேதாந்த நோக்கில் இணைத்தே உரை எழுதியிருக்கிறார். அத்வைத வேதாந்தமும், சைவசித்தாந்தமும் பாம்பும், கீரியும் போல விரோதிகள் என்பது போன்ற அபத்தமான கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் பரவிக் கொண்டிருந்தபோது, சமரசமான இணக்கக் கருத்துக்களைத் தக்க சான்றுகள் மூலம் எடுத்துரைத்தவர் அவர்.

    வாழும் துறவியாகவும், ஆத்ம சாதகராகவும், தன்னலம் கருதாது இந்து சமுதாயத்திற்குத் தம் வாழ்வையே அர்ப்பணித்த இறை அடியாராகவும் வாழ்ந்த சுவாமிகள் மாணிக்கவாசகரின் உள்ளத்தை அறிந்து கொள்ளவில்லை என்று சமயவாதத் தர்க்க அடிப்படையில் மட்டுமே கூறுவது தகுமா? தகாது என்றே படுகிறது என்று தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.

  11. திரு ஜடாயு அவர்களே,

    நீங்கள் அளித்துள்ள கமெண்ட் என்னை வியக்க வைக்கிறது. இந்த பதிவின் முதல் மறுமொழியில் நான் சில விஷயங்களைக் கூறியிருக்கிறேன். அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

  12. திரு பாலாஜி அவர்களே,

    இந்து ஒற்றூமைக்காக “‘எல்லாரும் ஒரே சித்தாந்தத்தைக் கடைபிடிக்க வேண்டும், எல்லாரும் எல்லா வழிபாடுகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும்’ என்பது இன்றியமையாதது” என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நான் மறுக்கிறேன். பல முறை கூறியிருக்கிறேன்; மறுபடியும் கூற ஆட்சேபணை இல்லை: அவரவர் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடித்து வரும் சித்தாந்தங்களை அந்தந்த ஆச்சாரியார்களிடம் கற்று , ‘இவை இவை நம் சம்பிரதாயத்தின் கொள்கைகள்’ என்று கடைப்பிடித்து வரட்டும். வாத-விவாதங்களுக்கு தக்க இடம் ஒதுக்கலாம். விவாதம் நடப்பதால் யாரும் எந்த வியக்தியையும் வெறுப்பதாக நினைக்க வேண்டாம். ஸ்ரீ உ. வே. எஸ்.ஏ.ஆர். பிரசன்னவேங்கடாசாரியார் ஒன்று சொல்லுவார் ஆங்கிலத்தில்: “this is not a bloodshed battle; it is only a bookshed battle”. வேறு சதசுக்களில் ஆச்சாரியார்கள் சேர்ந்து பொது நன்மைக்காக (common good) பாடுபடட்டும், ஒரு common agreement அல்லது declaration பண்ணலாம்.

    வைணவ, சைவ, சாக்த, காணாபத்திய, சௌர, கௌமார, பௌத்த, ஜைன மதங்கள் எல்லாமே நம் நாட்டில் தொன்று தொட்டுக் கடைப்பிடித்து வரப்படும் மதங்கள். இவை ஒவ்வொன்றிலும் எல்லோர்க்கும் ஏற்ற நல்ல விஷயங்கள் தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்த ஒரு சித்தாந்தத்தைப் பற்றியோ, நாட்டின் பொதுவான வரலாற்றைப் பற்றியோ (அயல் நாட்டார்களோ, நம் நாட்டில் இருப்பவர்களோ) துஷ்பிரசாரம் செய்தால் தக்க பிரமாணங்களுடன் பிரபல தொலைகாட்சி, செய்தித்தாள்களில் பல தரப்பின் தலைவர்களிடமிருந்தும் கண்டனம் வரட்டும். “ஒன்றுக்கொன்று முரண்பட்டு, அவர்களுக்குள்ளேயே வாத விவாதங்களை நடத்தும் இந்த பல்வேறு மதங்கள் எப்படி ஒன்று கூடி துஷ்பிரச்சாரங்களை முறியடிக்கிறார்கள்!!!” என்று அயல் நாட்டவர் வியக்கட்டும். இதுவே யுகமுடிவு வரை நிலைக்கும் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்!

    நம் நாட்டில் இன்று சில ‘நவீன வேதாந்திகள்’ மனு முதலிய ஸ்மிருதி நூல்களை தக்க முறைகளில் கற்காமல், அவற்றுள் சில வாக்கியங்களைத் தப்பாகப் புரிந்து கொண்டு ‘இவை எல்லாம் மூடநம்பிக்கையால் ஏற்பட்டவை; பிற்காலத்தில் கற்பிக்கப்பட்ட சகடு’ என்று கூறுகின்றனர். இப்படிச் சொல்வதெல்லாம் சரி அல்ல. உதாரணமாக, யஜுர் வேதமே “மனு கூறியது முழுவதும் மருந்து” என்று கூறுகிறது; சங்கரரும் இதையே சூத்திர பாஷ்யத்தில் சுட்டியுள்ளார். ருஷிகள் பரம சாத்வீகர்களே; உயிர்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே அவர்கள் கொள்கை. அப்படி இருக்க, “தருமத்தைக் கடைபிடிக்காமல் தீய வழியில் போய்விடுவார்களோ உலகத்தார்” என்று பரம கருணையினாலே கவலைப்பட்டு, “இவை இவற்றைச் செய்தால் இப்படி தண்டனை கிடைக்கும்” என்று கூறியுள்ளனர். இதில் வலியுறுத்தப்பட்டது “எதைச் செய்தும் எதைச் செய்யாமலும் இருந்தால் உய்வுக்கு வழி” என்பதே; “அப்படி மீறி நடக்கிரவர்களை மற்றவர்கள் தண்டிக்க வேண்டும்” என்பது அல்ல. கான்டெக்ஸ்ட்-ஐ புரிந்துக் கொண்டும், மற்ற ஸ்ருதி, ஸ்மிருதி, புராண, ஆசார்ய வாக்கியங்களைக் கொண்டும் அங்கே சொல்லப்பட்டதின் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இதில் எனக்கு வியப்பூட்டுவது என்ன என்றால், சிற்சில புராணக் கதைகளை ‘இடைச்செருகல்’ என்று சொன்னதற்கு எனக்கு கண்டனம் தெரிவித்த பலர், ஆதி ஆச்சாரியார்கள் ஆதரித்து வந்த மன்வாதி ஸ்மிருதிகள் முழுவதையும் ‘medieval corruption’ என்று பறைசாற்றும் நவீனர்களை ஒன்றுமே கூறியதாகத் தெரியவில்லை! இது மிகவும் வருந்தத்தக்கதே!!

    (edited and published)

  13. அன்புள்ள கந்தர்வன்,

    சாரமில்லாத இத்தகைய சமயவாதச் சிடுக்குகளில் புக எனக்கு அவகாசமும் இல்லை, ஆர்வமும் இல்லை. அடுக்கடுக்கடுக்காக “பிரமாணங்களைக்” காட்டி நீங்கள் பேசுவது

    காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவோரும்
    காசு தேடி ஈயாமல் வாழப் பெறுவோரும்
    மாது பாகர் வாழ்வே எனா நெக்குருகாரும்
    மாறிலாத மாகாளன் ஊர்புக்கலைவாரே

    என்ற திருப்புகழைத் தான் நினைவுபடுத்துகிறது. (ஜாகிர் நாய்க் என்ற டெலி-இஸ்லாமிஸ்டையும் தான், அவரும் இப்படித்தான் தன் பேச்சு முழுதுமே புத்தக மேற்கோள் காட்டிக் கொண்டிருப்பார்). 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளின் மாபெரும் இந்து மறு மலர்ச்சியும், இந்திய தேசிய எழுச்சியும் உருவாக்கிய சிந்தனைக் கிரணங்கள் உங்களைச் சென்று தீண்டவே இல்லையா? அருணகிரிநாதரும், தாயுமானவரும், ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், அரவிந்தரும், ரமணரும் உங்கள் பிரக்ஞை பக்கம் வரவே இல்லையா? உங்கள் சமய சிந்தனை முழுவதும் அப்படியே 15-ஆம் நூற்றாண்டில் உறைந்து விட்டது போலத் தோன்றுகிறது.

    நிற்க. சமயவாதத்தில் ஆர்வமில்லை எனினும் அது உருவாக்கும் சமூக, கலாசார பரிமாணங்களைக் கவனித்தே ஆகவேண்டி வருகிறது.

    “சைவ சமயமும், சைவ சித்தாந்தமும் வேதநெறிக்கும், வேதாந்த தத்துவத்திற்கும் புறம்பானவை” என்று நீங்கள் தலைகீழாக நின்று நிறுவ விரும்புகிறீர்கள். வேறு யார் யாரெல்லாம் இதே கருத்தை நிறுவ விரும்புகிறார்கள்? இனவாதம் பேசும் திராவிட இயக்க வாதிகள், தனித்தமிழ் தேசிய வெறியர்கள், “தோமா திராவிட கிறிஸ்தவ” மோசடிக் காரர்கள் ! இதில் இவர்களுக்கு உள்ள vested interest என்ன என்பது தெளிவாகப் புரியும் விஷயம். ஒருசில சைவ அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்குப் பலியாகவும் செய்தார்கள் என்பது வருத்தம் தரும் விஷயம். (ஜாக்கிரதை! இதே சதிவேலையை “மாலியம் என்பது தமிழரின் தனிச் சமயம்” என்ற கோஷங்களுடன் வைணவ மடங்களிலும் ஊடுருவி முயன்று வருகிறார்கள். போன வருடம் மயிலை சர்ச் நிகழ்ச்சி ஒன்றில் ஜீயர் சுவாமிகள் ஒருவரும் பலியாடாகக் கலந்து கொண்டார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை).

    ஆனால், உண்மையான சைவப் பீடங்களும், அறிஞர்களும் இந்தக் கருத்தைக் கடுமையாக மறுத்து வந்துள்ளனர். தருமபுரம் குருமகா சன்னிதானம் அவர்கள் தனது எல்லா உரைகளிலும் ”வேதம், ஆகமம், புராணம், தோத்திரம், சாத்திரம்” அனைத்தும் இணைந்தது தான் சைவ சமயம் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். நமது முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் இதே தளத்தில் “வைதிக சைவம் – வேற்றுமையில் ஒற்றுமை” என்கிற அருமையான கட்டுரையையும், இதே விஷயம் பற்றி வேறு சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்கள். அடியேனும் என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நான்கு பாகங்களாக ஒரு விவாதக் கட்டுரையை எழுதியுள்ளேன் –
    வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: https://jataayu.blogspot.com/2008/06/4.html

    இந்த சூழலில், உங்களது மேற்குறிப்பிட்ட கரட்டு வாதத்தின் நோக்கம் என்ன? அதை எண்ணிப் பார்த்தீர்களா? இந்த 21-ஆம் நூற்றாண்டில் இந்த வாதங்களைப் படித்து பரம்பரைச் சைவர்களாக இருப்பவர்கள் ”அவைதிகமான” சைவத்தை விட்டு “வைதிகமான” வைஷ்ணவர்களாக மாறி விடுவார்களா? அது சாத்தியமா? பின்னர் எதற்காக, யாருக்காக இந்த வாதம்? எவ்வளவு உரத்து இத்தகைய வாதங்களை நீங்கள் முழங்குகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு மேற்குறிப்பிட்ட இந்து விரோத முகாம்கள் அதைத் தங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    மேலும், இதே போன்ற ஒரு வாதத்தை வைஷ்ணவத்திற்கெதிராக வைப்பதும் சாத்தியமே.. ஆனால் சமயவாதம் ததும்பும் இந்தக் கட்டுரையிலும், முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் வைணவத்தின் மீது “அவைதிக” லேபிளை ஒட்டவில்லை என்பதைக் கவனியுங்கள். வைணவர்களுக்கும் முக்தி உண்டு என்று கூறி சமய சட்டகத்தில் இணைத்துக் கொள்கிறார். வெளியே தள்ளவில்லை. இது மிக மிக முக்கியமான விஷயம். இதற்கு மேல் நான் சொல்வதற்கொன்றுமில்லை.

    திருமால் மருகன், சிவகுமாரன், உமைபாலன் உங்களுக்கு சமய ஐக்கிய பாவத்தை நல்கட்டும்.

  14. ஜடாயு அய்யா, எனது வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். நானென்ன நினைத்தேனோ அதையே எழுதியுள்ளீர்கள்! திராவிட இனவெறியர்களைப் பற்றியும், தெய்வநாயகம்/தேவகலா செய்யும் “ஆராய்ச்சி” பற்றியும், மறைமலை அடிகள் போன்ற “ஞானி” களையும் நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். நிற்க, ஆனால் சாகிர் நாயக் ஒரு fraud. எவரையோ ஒருவரை அழைத்துவந்து இவர்தான் பூரி கோவர்தன மடத்தின் சங்கராச்சாரியார் என்று சொல்லி இஸ்லாமைப் பற்றி பெருமையாகப் பேசவைத்திருக்கிறான். அதேபோல, வேறு எவரையோ அழைத்துவந்து இவர்தான் இன்றைய ஆரிய சமாஜின் சுவாமிஜி என்றும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றியுல்லான் அந்த fraud! இதைப் பார்க்கும் ஒரு சாதாரண இந்து “ஆஹா! ஒரு சங்கராச்சாரியாரே இஸ்லாமைப் பற்றி பெருமையாகப் பேசுகிறாரே, அப்படியென்றால் அதுதான் சிறந்த மதம்” என்று மதம் மாறிவிடுவான். I am giving the links below, please check:-

    சாகீர் நாயக் காட்டிய அந்த போலி சங்கராசாரியாறல்ல என்பதற்கு ஆதாரம்:-

    https://hinduismcalls.blogspot.com/2009/08/drzakir-naik-exposed-series-1.html

    ஆரிய சமாஜின் சுவாமிஜி என்று பித்தலாட்டம் காட்டியது:-

    https://www.youtube.com/watch?v=Jbonykuq1Ws

    ஆரிய சமாஜின் உண்மையான சுவாமிஜியைப் பற்றி:-

    https://www.youtube.com/watch?v=2TiqxNhRGzk

    காலம் விரயமாவதர்க்குள் இதையெல்லாம் புரிந்துகொள்வாரா திரு.கந்தர்வன்????

  15. நீண்ட நாள்களுக்குப் பின் இன்றுதான் அன்பர்களின் மறுமொழிகளை வாசித்து மகிழ்ந்தேன். கந்தர்வன் அவர்களின் முதல் மறுமொழியை வாசித்தபோது அவர் புரிந்துகொள்ளும்படியாக என் கருத்தை நான் எழுதவில்லையோ என்ற ஐயம் எனக்கு உண்டாகியது. வேதம் “ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்ம:” என்னும் வேதவாக்கியத்திற்குத் தாற்பரியம் “பதிப்பொருள்(இறை அல்லதுக்டவுள்) ஒன்றே, இரண்டில்லை” எனச் சைவம் கொள்கிறது. அந்தப் பதிப் பொருள் எப்படி அகரவுயிர் எல்லா உயிரெழுத்துக்களுடனும் மெய்யெழுத்துக்களுடனும் கூடி அவற்றை இயக்குகின்றதோ அப்படியே இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களிலும் கலந்துநின்று அவற்றை இயஙக்குகின்றது, எப்படி அகரவுயிர் இல்லாதபோனால் அட்சரங்கள்(எழுத்துக்கள்) இல்லையோ அப்படியே பிரமப்பொருள் இல்லையாயின் ஒருபொருளும் இல்லை என்னும் கருத்தில், ‘அக்கரங்கள் இன்றாம் அகரவுயிர் இன்றேல், இக்கிரமத் தென்னும் இருக்கு” (இருக்கு – இருக்குவேதம்) என்று சிவஞானபோதம் கூறும். எனவே காக்கும் தொழிலைச் செய்கின்றபோது அந்தப்பதியாகிய சிவமே திருமால் என்று பெயர் பெறுகின்றது. சிவவழிபாட்டினருக்குத் திருமால் வழிபாடு வேறில்லை. இதனைவிளக்கச் சில சான்றுகள் எடுத்துக் காட்டியுள்ளேன்.

    இங்கு மேலும் சைவம் கூறும் சில கருத்துக்களை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். பரம்பொருளின் சொரூபநிலை வடிவமற்ற பரிபூரணமே. சைவ வைணத்துக்கிடையே பரம்பொருளின் சொரூபநிலையில் விவாதம் இல்லை.நம்மாழ்வார் பாசுரங்களில் சைவரும் ஈடுபடுவர். வழிபடும் நிலையில் விட்டுணுவுக்கு உருவமே சிரேஷ்டம். சைவம் உருவசகளம் கூறினாலும் அருவநிஷ்களத்தையும் வலியுறுத்தும்.

    மாணிக்கவாசகர் அணுபட்சத்தினராகிய(ஆன்மாக்களாகிய) பிரம்மனும் திருமாலும் தண்டனை பெற்ற புராணக்கதையை ஒருபயன் கருதிப் பேசினாரே ஒழிய சம்புபட்சமாகிய திருமாலைப் பற்றிக் கூறினாரல்லர். ஏனெனில் சிவமும் திருமாலும் சம்புபட்சத்தில் ஒருவரே. பெயரில்தான் வேறுபாடு. இதனை வலியுறுத்தத்தான் சிவன் கோவில்களில் சங்கரநாராயணமூர்த்தம் என்றும் விஷ்ணுதுர்க்கை மூர்த்தம் என்றும் வைக்கப்பட்டு என்னென்னவோ கதைகளும் சொல்லப்படுகின்றன.

    புராணக் கதைகள் கதைகளே. இட்டுக் கட்டப்பட்டனவே. எனினும் அந்தக் கதைகள் வேதத்திலும் உண்டு. எடுத்துக் காட்டாகக் கேனோபநிஷதத்தில் இங்கு விவாதத்தில் உள்ளகதை போல ஒருகதை உள்ளது.

    வைதிகசைவம் என்ற தொடரே சைவத்திற்கும் வேதத்திற்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டும். சைவம் என்ற அடைமொழி சைவத்திற்கு வந்த காரணத்தை, ‘வைதிகசைவம் வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இடுகையில் சுட்டியுள்ளேன். வேதத்தினுடன் மாறுபட்ட சமணபவுத்தர்களுடனும் கன்ம காண்டிகளுடனும் நடந்த போராட்டத்தின்போது அவைதிக மதங்களான பாசுபதம் காளாமுகம் காபாலிகம் முதலியவற்றையும் வைதிகமதம் தழுவிக்கொண்டதைத் திருமுறைகளும் நாயன்மார் வரலாறுகளும் அறிவிக்கின்றன. பாஷ்யகாரர்கள் இந்த அவைதிகமதங்களையே சைவம் எனத் தங்கள் நூல்களில் எடுத்துப் பேசினர். எது உண்மைச் சைவம் என வேறுபடுத்தி எடுத்துக்காட்டவேண்டிய இன்றியமையாமை மெய்கண்டாருக்கு ஏற்பட்டது.

    இன்று நமக்கு வேண்டியது தத்துவ சிந்தனைகளிலும் சமயச் சடங்குகளிலும் சமயச்சடங்குக்குப் பயன்படும் மொழியிலும் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் வேதத்தின் பெயராலோ அல்லது எந்தப் பெயராலோ பாரதப் புதல்வர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் ஆன்மீகத் தலைமை என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது.

  16. திரு ஜடாயு அவர்களே,

    விஷ்ணுவை “அழுக்கு மாயையில் சிக்கி, பிறப்பு-இறப்பு எனும் சூழலில் உழலும் கர்ம வசப்பட்டவன்” என்றெல்லாம் கட்டுரை ஆசிரியர் சொல்லியிருந்தாலும் “பேஷ், பேஷ்! சமய நல்லிணக்கத்திற்கு இது மிகவும் நல்லது” என்று சொன்ன நீங்கள், ஏனோ என் கருத்தில் மாத்திரம் “சாரமில்லாத சமயவாதச் சிடுக்குகள்” உள்ளதாகக் கூறுகிறீர்கள்!

    //
    இந்த சூழலில், உங்களது மேற்குறிப்பிட்ட கரட்டு வாதத்தின் நோக்கம் என்ன? அதை எண்ணிப் பார்த்தீர்களா? இந்த 21-ஆம் நூற்றாண்டில் இந்த வாதங்களைப் படித்து பரம்பரைச் சைவர்களாக இருப்பவர்கள் ”அவைதிகமான” சைவத்தை விட்டு “வைதிகமான” வைஷ்ணவர்களாக மாறி விடுவார்களா? அது சாத்தியமா? பின்னர் எதற்காக, யாருக்காக இந்த வாதம்?
    //

    எதற்காக இவ்வாதம் என்றால் இந்து சம்பிரதாயங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் பற்றி நன்கு அறிந்து கொண்டு, அனைவர்க்கும் உகந்ததான பொது கருத்துக்களை இத்தகைய தளத்தில் சொல்லி வந்தால் நன்று என்றே சொல்கிறேன். இக்கட்டுரையை நான் குறையே சொல்லவில்லை, ஏனெனில் “இந்து மத விளக்கங்கள் – சைவம்” என்று தான் இதை ஆசிரியரும் சொல்லியுள்ளார். இதை நீங்கள் “சமய நல்லிணக்கக் கட்டுரை” என்று கூறியது என்னை வியக்க வைத்தது. அதனாலே உங்களுக்கு எழுதினேன். மீண்டும் வைனவர்களைப் புண்படுத்தும் வகையில் ஜீயர் ஒருவரை நீங்கள் சாடியிருத்தல் வருத்தத்தைத் தருகிறது.

    (edited and published)

  17. திரு கந்தர்வன் அவர்களே, தயவு செய்து என் கட்டுரையை மீண்டும் ஒரு முறை அமைதியான மனநிலையில் இருந்து படித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்கின்றேன். பரம்பொருள் திருமாலாக இருந்து காத்தல் தொழிலைச் செய்கின்றது. இந்தப் பரம்பொருளைப் பற்றியதல்ல இந்தக் கதை.

    பரம்பொருளின் அருள் பெற்ற பக்குவம் அடைந்த நம்மைப் போன்ற ஆன்மாவும்( இவர்களைச் சகலர் என்று சைவ சித்தாந்தம் கூறும்) திருமால் என்ற பெயருடன், பரம்பொருள் காத்தற்றொழில் புரியும்போது எக்கோலம் கொண்டிருந்ததோ அக்கோலத்துடன் பரம்பொருளின் ஆணைபெற்றுப் பரம்பொருள்செய்யும் காத்தற்றொழிலைச் செய்யும். இது வெறும் பதமுத்திதான். இது மேலான பரமுத்தி அன்று. பதவி உயர்வு பெற்ற சிலர் பதவிச் சுகத்தால் கர்வமுற்றுப் பின் மேலுள்ளோரால் திருத்தப்படுவர். இத்தகையோரைப் பற்றியே இந்தக் கதை. சம்புபட்சம் அணுபட்சம் என்பது சைவசித்தாந்தம் பேசும் ஒருநிலை. திருமாலாகச் சிவம் சம்புபட்சத்தில் காத்தல் தொழிலைச் செய்கின்றது என்பதற்குத் திருமுறை எடுத்துக் காட்டுத் தந்துள்ளேன்.

    சைவர்கள் கூறும் இந்த உண்மையை ஆழ்வார்களும் ஆமோதித்துள்ளனர். பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியில்,
    “அரன்நா ரணன்நாமம்; ஆன்விடைபுள் ளூர்தி;
    உரைநூல் மறையுறயுங் கோயில் – வரைநீர்
    கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி;
    உருவமெரி கார்மேனி யொன்று”
    எனவும் நம்மாழ்வார் ,
    “அவாவறச் சூழரியை அயனை யரனை யலற்றி
    அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
    அவாவிலந் தாதிகளா யிரமும் முடிந்த
    அவாவிலந் தாதியிப்பத் தறிந்தார் பிறந்தா ருயர்ந்தே”
    எனத் திருவாய்மொழிந்தமையும்(10-11) சமயக் காழ்ப்பற்றவர்கள் கண்டு அறிந்து இன்புறுவார்கள்.
    இவ்வாறு அரனையும் அரியையும் ஒக்க வைத்துப் போற்றிய ஆழ்வார்கள் அடைந்த பேற்றினை யாராவது குறைத்துப் பேசத் துணிவார்களா?

  18. கந்தர்வன்,

    // சமய நல்லிணக்கத்திற்கு இது மிகவும் நல்லது” என்று சொன்ன நீங்கள், ஏனோ என் கருத்தில் மாத்திரம் “சாரமில்லாத சமயவாதச் சிடுக்குகள்” உள்ளதாகக் கூறுகிறீர்கள்! //

    முனைவர் ஐயாவின் சமீபத்திய மறுமொழியையும் கவனியுங்கள். திருமாலை உண்மையிலேயே இழிவு படுத்துவது தான் நோக்கம் என்றால் சங்கரநாராயண மூர்த்தங்கள், விஷ்ணு மூர்த்தங்கள், கஜலக்‌ஷ்மி, விஷ்ணு துர்க்கை மூர்த்தங்கங்கள் ஏன் சிவன் கோவில்களில் இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா? அவை நூற்றுக்கணக்கான சிவாலயங்களில் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன, பக்தர்களால் வழிபடப் படுகின்றன.

    எனக்குத் தெரிந்து முதல் சங்கரநாராயண மூர்த்தம் இராஜேந்திர சோழர் காலத்திலேயே உருவாக்கப் பட்டது. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சுற்றுச் சுவரில் உள்ளது. மிக அழகான மூர்த்தம். படம் இங்கே – https://tamilhindu.com/wp-content/uploads/shankara-narayanar-gangaikonda-cholapuram.jpg

    இதே கோவிலில் கருவறைக்குப் பின்புறம் (வழக்கமாக லிங்கோத்பவர் இருக்குமிடம்) ஸ்ரீதேவி பூதேவியுடன் சகல தேவர்களும் தொழும் ஆளுயர விஷ்ணு மூர்த்தம் உள்ளது. படம் இங்கே –
    https://tamilhindu.com/wp-content/uploads/sri-maha-vishnu-gangai-konda-cholapuram.jpg

    சமீபத்திய பயணத்தின்போது திருமூர்த்திகளும், அர்த்தநாரீஸ்வரரும் இணைந்த பிரம்ம-விஷ்ணு-சிவ-சக்தி வடிவமான இன்னொரு அற்புதத் திருமேனியை தாராசுரம் (கும்பகோணம் அருகில்) ஐராவதேஸ்வரர் கோயிலில் கண்டேன். படம் இங்கே –
    https://tamilhindu.com/wp-content/uploads/brahma-vishnu-shiva-shakthi-murtham-darasuram.jpg

    (நான் எடுத்த இந்தப் புகைப் படங்களை மின் அஞ்சல் மூலம் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி, வலையேற்றக் கோரினேன். அவற்றை இந்தத் தளத்தில் போட்டு, சுட்டியை உடனடியாக அனுப்பி வைத்த எடிட்டர் குழுவுக்கு நன்றி)

    ஒரு கிருமிகண்ட சோழனுடைய விதிவிலக்கான செயலை வைத்து இன்னும் victimhood கதைகளையும், வன்மத்தையும் உயிர்ப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்முன்னால் தெரியும் இந்த பிரம்மாண்டமான விஷயங்களை ஏன் கவனிப்பதில்லை என்பது விளங்காத மர்மமாக இருக்கிறது! அதை விட வருத்தம் தரும் இன்னொரு விஷயம். தமிழகத்தில் ஒரே ஒரு பெருமாள் கோவிலில் பழமைக் காலங்களில் இருந்தே வந்த சிவமூர்த்தம் இருந்தது – திருக்குறுங்குடி நம்பி கோவில். சில வருடங்களுக்கு முன் திருப்பணி செய்யும்போது அதை வேண்டுமென்றே அகற்றி விட்டார்கள், தங்களை வைஷ்ணவ அபிமானிகளாக பிரகடனம் செய்து கொண்ட இந்நாளைய கிருமி கண்ட சோழர்கள்.

    தமிழகத்தின் தத்துவ ஞானிகளும், மன்னர்களும், கவிஞர்களும், சிற்பிகளும் நூற்றாண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் அற்புதமான சமய சமரசச் செயல்களைக் கண்டுகொள்ளாதிருப்பது மட்டுமல்ல, அதைக் குலைக்கும் வகையில் உங்கள் கரட்டு வாதங்கள் அமைந்திருக்கின்றன. அதனாலேயே அவற்றைக் கண்டிக்கிறேன்.

    கண்முன்னால் தெரியும் பிரத்யட்ச உண்மைகளைக் கணக்கில் கொள்ளாமல் “பிரமாணங்களை” வீசும் வாதங்கள் பொய்மை வாதங்களே. “தீ சுடாது” என்று நூறு தடவை சுருதி சொன்னாலும், அது நிராகரிக்கப் படவேண்டியது என்று சொன்ன ஆதிசங்கரரின் ஞான மொழி இங்கே சிந்தித்துப் பார்க்க வேண்டியது.

  19. // மீண்டும் வைனவர்களைப் புண்படுத்தும் வகையில் ஜீயர் ஒருவரை நீங்கள் சாடியிருத்தல் வருத்தத்தைத் தருகிறது.//

    கந்தர்வன்,

    “வைணவ மடங்களி*லும்* ஊடுருவி முயன்று வருகிறார்கள்” என்று எழுதியதில் உள்ள *உம்*மைக் கவனியுங்கள். அதற்கு முன்பு ”ஒருசில சைவ அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்குப் பலியாகவும் செய்தார்கள் என்பது வருத்தம் தரும் விஷயம்” என்றும் எழுதியிருக்கிறேன்.

    நான் ஜீயர் சுவாமிகளைச் சாடவில்லை. கிறிஸ்தவ புரட்டர்களின் உள்நோக்கங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நல்லிணக்கத்திற்காக என்று அவர் அதில் கலந்து கொண்டிருக்கலாம்.. அதே நிகழ்ச்சியில் தன்னை “ஆதீனம்” என்று அழைத்துக் கொள்பவர் ஒருவரும் கலந்து கொண்டார் (அவர் அதிகாரபூர்வமாக ஆதினத்திலிருந்து விலக்கப் பட்டவர்).

    எனவே சைவ, வைஷ்ண சமய அமைப்புகள் இரண்டுமே இந்த மோசடிக் காரர்களால் குறிவைக்கப் படுகின்றன. அவை தங்களுக்குள் சண்டையிடுவதை விடுத்து இந்து-விரோத சக்திகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  20. நல்ல கட்டுரை. சிந்தனையைத் தூண்டுகிறது.

    குடிமல்லம் சிவலிஙக வடிவில் பரசுராமேஸ்வர் சிவன் வேடன் வடிவிலும் பிரம்மா யக்ஷன் வடிவிலும் உள்ளது. இச்சிவலிங்கல்ம் பொ.கா.மு.500 வாக்கிலானது என்கின்றனர் அறிஞர்.

    https://ankaraikrishnan.wordpress.com/2009/12/07/gudimallam-lingam/

    ஆங்கரை கிருஷ்ணன்

  21. அய்யா முனைவர் அவர்களுக்கு மிக்க நன்றியுடன் வணக்கங்கள்.

    சைவ சித்தாந்தத்தை அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். அடிமுடி காணாத வரலாறு முதலில் திருஞானசம்பத்தப் பெருமானின் பதிகங்களில் வருவதாகக் கூறுகிறீகள். ஆனால் திருமூலரின் திருமந்திரத்தில் வருகின்றதே. திருமூலரின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றொரு கருத்து உள்ளதே. இது தவிர காமிக ஆகமத்தில் இக்கருத்துக் காணப்படுகிறதே. இதன் அடிப்படையில்தான் இன்றளவும் நித்திய பூஜைகள் திருவண்ணாமலையில் நடைபெறுகின்றனவே. திருமூலரின் திருமந்திரம் காமிக ஆகமம் உள்பட ஒன்பது ஆகமங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது அல்லவா?

    இவை குறித்துத் தாங்கள் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

  22. அன்புள்ள பாலாஜி அவர்களுக்கு

    தாங்களும் கந்தர்வன் அவ்ர்களும் இளம் வயதினர் என்பதும் ஜடாயு அவர்கள் 35 வயதினர்தான் என்பதும் தங்களைப் போன்றோரின் ஆர்வமும் முனைப்பும், தொடர்ந்து வரும் நமது பாரம்பரியம் மிகவும் வலிமையானது என்பதைப் பறைசாற்றுகின்றன.

  23. முனைவர் அவர்களுக்கு வந்தனங்கள்.

    சைவ சித்தாந்தத்தை தெளிவுற விளக்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. சைவ சஹோதரர்களுக்கு நீங்கள் பண்ணும் இத்தொண்டு அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியும் பயனும் தரும் என்பதில் ஐயமில்லை.

    ஆனால், சங்கர, ராமானுஜ, மத்வ மதங்களின் சாரமான சித்தாந்தத்தைப் பின்பற்றும் எனக்கு இதில் கருத்து வேறுபாடு உள்ளது. இதற்காக சைவர்களைப் பகைக்கிறோம் என்றோ, அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி உண்டு என்பதோ அர்த்தம் கொள்ள வேண்டாம். காரணங்களைக் கீழே கூறுகிறேன்.

    (௦) முதலில் நாங்கள் கொள்ளும் பிரமாண நூல்கள் எவை எவை என்பதை விளக்குகிறேன். அவை வேதங்கள், இதிகாச புராணங்கள், ஸ்மிருதிகள் ஆகியவையே.

    “வேதங்கள்” என்றால் சங்கரர் முதல் அனைத்து அத்வைதிகளாலும், மத்வர் முதலான த்வைதிகளாலும், ராமானுஜர் முதல் அனைத்து விஷிஷ்டாத்வைதிகளாலும் ஆதரிக்கப்பட்ட நூல்களையே சொல்கிறேன். இதில், இருக்கு, யசூர், சாமம், அதற்வம் என்ற நான்கும், ஒவ்வொன்ருள் சம்ஹிதம், பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத்து என்ற பிரிவுகள் உண்டு. இவை அனைத்தும் எங்களுக்கு வேதமே. இதைத் தவிர சங்கரர், சுரேஸ்வரர், மத்வர் உள்ளிட்ட பலர் ஆதரித்துள்ள பல்லவ (bhallava) சாகை, பைங்கி ஸ்ருதி என்னும் நூல்களை வேதமாக ஏற்போம்.

    அதற்குப் பிறகு வியாசர் பண்ணிய பிரம்ம சூத்ரம் முழுமையும், பகவத் கீதை முழுமையும். மகாபாரதம், ராமாயணம் – இவற்றில் வரும் வாக்கியங்கள் எவற்றை முந்தைய மும்மத வேதாந்திகள் ஏற்றிருந்தாலும் அதை ஏற்கிறோம். அதற்கு அடுத்த படி அவற்றுள் எந்தெந்த வாக்கியங்களுக்கு அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைத மதங்களிலிருந்து ஆசாரியார்களால் பாஷ்யம் இட்டிருக்கப்பட்டனவோ, அவற்றையும் ஏற்கிறோம்.

    விஷ்ணு புராணம், பாகவதம், மார்கண்டேய புராணம், பத்மபுராணம், நாரதீய புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், வாமன புராணம், கருட புராணம், வராஹ புராணம், லிங்கபுராணம், சிவபுராணம், ஆக்நேய புராணம், பாவிஷ்யோத்தர புராணம், விஷ்ணு தர்மொத்தரம், பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், முதலிய பதினெட்டு புராணங்களிலிருந்து மும்மத வேதாந்த ஆசாரியர்கள் எடுத்துள்ளதை பிரதானமாகக் கொள்வோம்; மற்றவை வேதம் சொல்லியவற்றிற்கு முன்னுக்குப் பின் முரணாக இல்லாவிடில் அதையும் ஏற்போம். பதிநெட்டுள் விஷ்ணு புராணத்தையும் பாகவத புராணத்தையும் முழுமையாக ஏற்கிறோம்; ஏனெனில் அப் புராணங்கள் முழுமைக்கும் பிராசீன அத்வைத, விஷிஷ்டத்வைத பாஷ்யங்கள் பல உண்டு.

    இப்பிரமானங்களில் உள்ள கதைகளை என்றும் நாங்கள் “கட்டுக்கதை” என்று சொன்னால் ஏற்பதில்லை; ‘இதிகாசம்’ என்றால் “முன்பு இப்படி நடந்தது” என்று பொருள். “புராணம்” என்றால் “புரா அபி நவம்” அல்லது, “பழமையாக இருந்தாலும் புதிது போன்று புத்துணர்ச்சியைத் தருவது” என்று அர்த்தம். அவற்றை “கட்டுக்கதையாக்க” எங்களுக்கு உரிமை இல்லை; இதிகாச புராணங்களில் வரும் அர்த்தவாதங்களை “உண்மை அல்ல” என்று ஒருவர் சொன்னதற்கு ருஷிகள் அவரை “நீ கழுதையாகப் போ” என்று சபித்ததாக மகாபாரதத்தில் உள்ளது; இதை ஆதி சங்கரர் விஷ்ணுசஹஸ்ரநாம பாஷ்யத்தில் விளக்கியிருக்கிறார். இதை நாங்கள் பூர்வமாக ஏற்கிறோம்.

    மனு, அத்ரி, விஷ்ணு, முதலிய ஸ்மிருதி நூல்களையும் இப்பொழுது கூறியுள்ள criterion-ஐ வைத்தே ஆதரிக்கிறோம். அதைத் தவிர போதாயன, ஆபஸ்தம்ப சூத்ரங்கள்.

    கடைசியாக, பாஞ்சராத்ர சம்ஹிதையை ஏற்கிறோம். காரணங்கள்: (அ.) மகாபாரதத்தில் பாஞ்சராத்ரம் “நாராயணனால் கற்பிக்கப்பட்டது” என்று வந்துள்ளமையாலும், (ஆ.) ஆதி சங்கரர் அதை “ஒரு சில விஷயங்களைத் தவிர்த்து பாஞ்சராத்ர மதத்தை ஏற்கிறோம்” என்றும், (இ.) ராமானுஜரும் மத்வரும் “அதைப் பூரணமாக ஏற்கிறோம்” என்றும், (உ.) சங்கரருக்குப் பின் அத்வைத சித்தாந்தத்தை வளர்த்த, “கல்பதரு” என்ற நூல் இயற்றிய, அமலானந்த சரசுவதி என்பவர் அந்த நூலில் “பாஞ்சராத்ரம் பிரமானமே; மகாபாரதத்தில் வாசுதேவனால் கற்பிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது; சர்வேச்வரனான அவனுக்கு மயக்கமோ, குழப்பமோ கிடையாது” என்று கூறியுள்ளமையாலும், (ஊ) சங்கரர் கீதா பாஷ்யத்திற்கு, பிரபலமான “கூடாரத்த தீபிகை” என்ற அனுபாஷ்யம் இயற்றிய மதுசூதன சரஸ்வதி பாஞ்சராத்ர-சாத்வத கொள்கையை ஆதரித்ததாலும்.

    இப்படி மற்ற சைவ ஆகம நூல்களை பிராசீன மும்மத வேதாந்தியர் ஆதரித்ததாக இல்லை. மாறாக, சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூவரும் பாசுபத-மாஹெஷ்வர சித்தாந்தத்தை “வேதத்திற்குப் புறம்பானது” என்றே பாஷ்யங்களில் கூறியுள்ளனர். அவர்கள் இப்படிக் கூரியுள்ளமையால் யாம் கைக்கட்டுண்டோம்.

    (1) வேதங்கள் நீங்கள் சொன்ன படி “ஏகமேவ அத்விதீயம்” என்று சொல்வதை ஏற்கிறோம். இதிலிருந்து, “தெய்வம் ஒன்று” என்பதை நிர்ணயம் பண்ணிநீர். அதையும் ஏற்கிறோம். ” ‘சத்’ என்று சொல்லப்படுவது ஒன்று தான், அதையே ஞானிகள் பல பெயர்களால் கூறுகின்றனர்” என்று உரைத்தது ருக்வேதம்.

    விஸ்வகர்மா சூக்தத்தில் (ருக் 10-82) “பிரளய காலத்தில் எவன் ஒருவன் நாபியில் (கொப்பூழில்) தேவர்கள் உள்ளிட்ட ஈரேழு உலகங்களும் விளங்கியதோ” என்று கூறப்பட்ட தேவனே “அனைத்து தேவர்களுக்கும் பெயர் சூட்டுபவன், அல்லது அனைத்து தேவர்களின் பெயரையும் தன் பெயராக வைத்துக் கொண்டவன்; மற்ற ஜீவன்கள் அவனிடம் அடைக்கலம் வருபவை; அனைவர்க்கும் பிதா;படைத்தல், அழித்தலையும் செய்பவன் அவன் ஒருவனே பரம பதத்தை உடையவன்” என்று படிக்கப்படுகிறது.

    மேலும் வேதம் (ருக் 10-81) “ஆயிரம் ஆயிரம் கரங்களையும், தலைகளையும், கால்களையும் உடையவன், சர்வ வியாபி” என்றெல்லாம் சொல்லியதால், புருஷ-நாராயண சூக்தத்தின் நாயகன் என்று விளங்கிற்று. இத்துடன் முன்பாராவில் “பரம பதத்தை உடையவன்” என்று சொன்னதால் பல இடங்களில் “தத் விஷ்ணோஹோ பரமம் பதம்”, “த்ரிஷு விக்ரமேஷு”, “விஷ்ணுர் உருக்ரமே” என்றெல்லாம் படிக்கப்பட்ட விஷ்ணுவைச் சொன்னதாயிற்று.

    அடுத்தது, “எகோ ஹ வை நாராயண” என்று தொடங்கும் மகோபநிஷத் “பிரளய காலத்தில் நாராயணன் ஒருவனே இருந்தான்; பிரமன் இல்லை, ஈசானர் இல்லை, நட்சத்திரங்கள் இல்லை, பூமியும் இல்லை. பிறகு பரம புருஷன் சதுர்முகனையும், மூன்று கண்களையும், திரிசூலமும் ஏந்திய ஒப்பற்ற கடவுளையும் படைத்தான்” என்று கூறிற்று. அடுத்த படியாக வேதம் “நாராயணாத் பிரம்மா ஜாயதே, நாரயணாத் ருத்ர ஜாயதே” என்று நாராயணனிடம் இருந்து பிறந்தவர்களாக பிரம்மா, ருத்ரர் இவர்களைக் கூறிற்று. மிகவும் கவனத்துடன் “நாரயணாத் விஷ்ணு ஜாயதே” என்று கூறுவதை மறுத்தது. (இதைத் தமிழ்ப்படுத்திய திருமழிசை ஆழ்வார் “நான்முகனை நாரணன் படைத்தான், நான்முகனும் தான்முகனாய்ச் சங்கரனைப் படைத்தான் என்றார்).

    ஆகையால், “ஏகமேவ அத்விதீயம்” என்று சொன்னதற்குப் “பரம்பொருள் ஒன்றே” என்று கொண்டு, “அவனுக்கு அடங்கிய ஜீவர்களான பல தேவதைகள் உண்டு” என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். ஜீவர்களில் முதன்மையானவர் பிரமன் என்றும், அதற்கு அடுத்த படி சிவன் என்றும் பொருள் கொண்டோம்.

    “ருத்ரர் தான் பெரியவர்” (சுவேதாச்வதாரம்) , “சிவனே பிரம்மம்” (அதர்வசிகை), “ஹிரண்யகர்பனே பிரம்மம்”, “இந்திரனே பெரியவன்” (ருக்வேதம் பல இடங்களில்), என்றெல்லாம் வரும் இடங்களில், “பரந்தாமன் நாராயணனையே வெவ்வேறு பெயர்களால் அழைக்கின்றன” என்று கொண்டோம். இதையே பிரதிபலிக்கும் முறையில், இப்பெயர்கள் யாவும் விஷ்ணு சஹாஸ்ரனாமத்தில் வரும்; ‘நாராயணன்’ என்ற தனிச்சிறப்பு வாய்ந்த பெயரும் வரும். விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்திலும் சங்கரர், ” ‘ஸ பிரம்மா, ஸ சிவ’ என்றெல்லாம் சொல்லப்பட்டதால் இப்பெயர்கள் இங்கு ஹரியின் வந்தனத்திற்கு உரியவையே” என்றார். மற்ற தேவதைகளின் சஹாஸ்ரனாமங்களில், “நாராயண” நாமம் இருப்பதாகத் தெரியவில்லை; மாறாக “நாராயண பிரியஹ:” என்று தான் உள்ளதாகப் பார்க்கிறேன்.

    பரம்பொருளை “சிவம்” என்று நாங்கள் ஏற்கிறோம். அதாவது, “சிவம்” என்றால் “மிகவும் தூயவன்” என்று பொருள். ரஜஸ், தமஸ், இவை இல்லாதவனால் இப்பெயர் பொருத்தமே. அதற்காக, “முப்புரம் எரித்த முக்கட்பிறான்-த்ரிசூலதாரி-சிவன்” என்று சொல்லப்படும் பெருமானை “நாராயனனுக்குச் சமம்” என்று ஒத்துக் கொள்வதில்லை. எங்களைப் பொறுத்த வரையில், அது சிவபெருமானுக்கே ஏற்புடையதன்று. சிவனைப் பரம பாகவதராகவே பாவிக்கிறோம். புராணங்களில் சிவனே பல இடங்களில் வண்புகழ் நாரனனுக்கு துதி பண்ணியுள்ளார். வராக கவசம், கீதா மகாத்மத்ம்ய ஸ்தோத்ரம், முதலிய துதி நூல்களை இவ்வுலகிற்கே அளித்த பெருமான் அவர். காசியில் பூவுடலை நீக்குபவர்களுக்குக் காதில் “ராம, ராம” என்று சொல்லி அவர்களை பகவானுடன் சென்று அடைய வழி வகுக்கும் மகானுபாவர்.

    ஆனால், ஒன்று இங்கு நோக்கத்தக்கது: எங்கள் சித்தாந்தத்தில் பரம்பொருள் வெறும் அருவமாக மட்டும் இல்லாமல், சங்க-சக்ர-கதை முதலியவற்றைத் தரிக்கும் முதலான பல உருவங்களை எடுத்துக் கொள்கிறான். இவற்றுள் “விபவங்கள்” (அவதாரங்கள், அவதாரக் கதைகள்), “அர்ச்சை” (கோயில் விக்ரகங்கள் – கண்ணதாசன் ” ‘நாளைப் பொழுது என்றும் நமக்கென’ வாழ்க, அதை நடத்த ஒருவன் உண்டு கோயிலில் காண்க!” என்று இதை ஆதரித்துள்ளதாக தோன்றுகிறது! அனுபவத்திற்காக சொன்னேன். கண்ணதாசனைப் பிரமாணமாக எடுக்கவில்லை 🙂 ) எனப்படும். ருக்வேதத்திலேயே 10.155.1, 10.155.3, எனும் இடங்களில் முறையே திருமலை-திருப்பதியையும், பூரி ஜகன்னாத க்ஷேத்ரத்தையும் சொல்லப்பட்டுள்ளது! இந்த உருவங்களை அவன் தானாகவே (ஸ்வயம்-வ்யக்தனாக) திருப்பதி, திருவரங்கம், சாளக்கிராமம், ஸ்ரீமுஷ்ணம், முதலிய இடங்களில் எடுத்திர்க்கிறான்; தன் அடியவர்கள் அதற்கு மேலும் ஸ்தாபிக்கும் விக்ராஹங்களிலும் எடுக்கிறான்.

    “அவன் பிறந்தான்” என்ற அவதார ரஹஅச்யத்தைக் கேட்கக் கேட்க, நாம் பிறவி எடுத்து உழல்வதிலிருந்து வீடுபெருகிறோம். “யசோதையிடம் பால் குடித்தான்” என்று கேட்கக் கேட்க, தாய்ப்பாலை மீண்டும் குடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும். “பதினாறாயிரம் பெண்களை மணந்தான், கோபியர்களிடம் ராசக் கிரீடை பண்ணினான்” என்ற கதையைக் கேட்கக் கேட்க, நம்மைப் பிடித்துள்ள நீச்ச காம ஆசைகளிளிருந்து வீடு பெறுகிறோம்.

    இங்கு ஒரு கேள்வி கேட்கக்கூடும் – “எங்கும் இருப்பவனை ஒரு கல்லில் அடங்கியவனாக வழிபடுவது சரியா?” என்று. இது சர்வேஸ்வரன் நமக்காக கருணை புரிந்து நமக்கு எட்டியபடி தன்னைக் ‘குறைத்துக்’ கொள்கிறான் என்பது. இது உண்மையில் குறை ஆகாது; “எப்படி ஒரு தாய் தன் சேயை தூக்கிப் பிடிக்க குனிவதில், அத்தாய்க்கு தாழ்வு ஏற்படாதோ அவ்வாறே” என்று புரிந்துக் கொள்கிறோம்.

    இன்னொரு கேள்வி: “அந்தர்யாமியாக உபாசிக்க முடியாதா, கல்லில் தான் பண்ண வேண்டுமா?” என்பது. பதில்: “அந்தர்யாமியாக உபாசிக்க அனைவராலும் இயலாது. அதனால், சுத்த சத்த்வ ரூபம் ஒன்றை அவன் எடுக்கிறான். அவனைப் பிரதிஷ்டை பண்ண பிறகு கல் வெறும் கல் அல்ல; ப்ராக்ருதமான பஞ்ச பூதங்களால் ஆன வஸ்து அல்ல; அது கண்கூடாகத் தெரிந்தாலும் அப்ராக்ரிதமான ஐவகை பொருளால் ஆனது; ‘பெருமாள் சிலையைப் பார்த்தாயா?’ என்று ஒரு பொழுதும் நாங்கள் சொல்வதில்லை, மாறாக ‘கோயிலில் பெருமாளைப் பார்த்தாயா?’ என்றே சொல்வோம்.

    மூன்றாம் கேள்வி: “ஏன் அவனே நேரிடையாக சுத்த சத்வ ரூபம் எடுத்து வருகிறான்?” பதில்: “அந்த சுத்த சத்வ நாம, ரூபத்தை உபாசிப்பவனுக்கு ரஜோகுனமும், தமொகுனமும் அடங்கப்பெற்று முக்தி அடைகிறான்”.

    சரி, அப்படி எந்தெந்த உருவங்களாக அவனை தியாநிக்கலாம்? எந்தெந்த உருவங்களில் அவனுக்கு பிரதிமைகளை அமைக்கலாம்? என்ற கேள்வி வரும். இதற்கு பாஞ்சராத்ரம் என்று முன்பே பிரமாணமாக நான் சொன்ன ஆகமத்தில் உள்ளது. இதற்கு மேலும், கீதை, பாகவதம், ராமாயணம் முதலியவற்றை ஏற்ற எந்த ஒரு தூய பக்தன் செய்யும் கோயிலும் அவன் சுத்த சத்வ திருமேனியுடன் சாதிக்கிறான், அங்கும் வணங்குவோம்.

    விடைபெருவதற்கு முன் மூன்று விஷயங்கள்:

    (௧) நாங்கள் அப்பைய தீட்சிதர் பண்ணிய ‘சிவார்க்கமணி தீபிகை’, ‘சிவ தத்துவ விவேகம்’ முதலியவற்றை ஆதரிக்கவில்லை; ஏனெனில் சங்கரருக்கே விரோதமாக அங்கு தீட்சிதர் சொல்லியுள்ளார். உதாரணமாக ‘விஷ்ணோ பரமம் பதம்’ என்பதற்கு சங்கரர் கடவல்லியில் (1-3-9) “சர்வ வியாபியான, வாசுதேவன் என்னும் பரமாத்மா, பிரும்மம், அவனுடைய உயர்ந்ததான இடம்” என்று தான் பாஷ்யம் இட்டுள்ளார். தீட்சிதரோ, “விஷ்ணுவை விடவும், அதாவது நாராயணனை விடவும் உயர்ந்ததான ஸ்தானம்” என்று கூறியுள்ளார். இன்னொரு விஷயம்: சுரேஸ்வரர், ஜ்னாநோத்தமர் என்னும் பிராசீன அத்வைத ஆசார்யார்கலாகிய இவர்கள் முறையே பண்ணிய “நைஷ்கர்ம்ய சித்தி”, “சந்திரிகை” எனும் நூல்களில், “எப்படி விஷ்ணுவினுடைய இடது பத கட்டை விரல் நகத்தில் இருந்து புறப்பட்ட கங்கையானதை அந்த சங்கரர் உலகத்தோர் பயன்பெற தன் தலையில் தரித்தாரோ, அதைப் போல, அதே விஷ்ணுவினுடைய பாதத்தில் இருந்து புறப்படும் பிரம்ம வித்யை எனும் கங்கையானதை, இந்த சங்கரர் தரித்து உலகத்தோர் உய்வடைய வழிவகுக்கிறார்” என்று தன் குருவை வணங்குகிறார். அப்பைய தீக்ஷிதரோ, “இரண்டு கங்கைகள் உள்ளன; விஷ்ணுவின் பாதத்தில் இருந்து புறப்பட்ட கங்கை பயனற்றுப் போய் நேராகக் கடலில் விழுந்து விட்டது; பிறையனிந்த பிரான் முடியிலிருந்து பிறக்கும் கங்கை தான் நாம் இன்று காணும் கங்கை” என்று சொன்னார்.

    (௨) “பரம்பொருள் திருமாலைப் போலவே, அதே ரூபத்துடன் அதே பெயருடனும் ஒரு ஜீவன் திருமால் உள்ளார்”, “பரம்பொருள் சிவனைப் போலவே ஜீவன் ருத்ரன் ஒருவன் இருக்கிறார்”, என்றெல்லாம் நீங்கள் கூறுவது எங்கள் பிரமானங்களில் எங்குமே கானப்படாமையால், அதை நாங்கள் ஏற்கவில்லை. சிலர் “பிரமன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் என்று ஐந்து வகை மூர்த்திகள் உண்டு” என்று சொல்வதை ஏற்பதும், இன்னும் சிலர் “அந்த ஐவரை விடவும் உயர்ந்தவள் ராஜ ராஜேஸ்வரி” என்று சொல்வதை ஏற்பதும், எங்கள் சித்தாந்தத்திற்கு முரணானது.

    (௩) நாங்கள் சொல்லும் திருமால், “பிரளய காலங்களில் ஈரேழு உலகங்களையும், எல்லா ஜீவாத்மாக்களையும், ஒன்றாக ஒடுக்கி தன் வயிற்றுக்குள் வைத்து விடுகிறான்” என்று மேற்கூறிய ரிக்வேத வாக்கியத்தில் சொல்லப்பட்டமையால், நாங்கள் அனைத்து ஜீவர்களையுமே சஹோதரர்கலாக பாவிக்கிறோம். ஏனெனில், “சஹோதரர்” என்றால் “சக உதர” என்று பொருள் படும், அதாவது “ஒரே வயிற்றை மூலமாக உடையவர்கள்” என்று பொருள். ஆக, ஈரேழு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவர்களும் கலந்த “universal brotherhood” சித்தாந்தமே எமது. ஆகையால், சித்தாந்தத்தில் உங்களின் இருந்து வேறு பட்டாலும், நீங்கள் சொன்ன சிலவற்றை ஏற்கவில்லை என்பதாலும் எங்களுக்குச் சிறிதளவும் யார்மேலும் காழ்ப்புணர்ச்சி இல்லை என்று தாழ்வுடன் கூறி விடை பெறுகிறேன்.

  24. திரு கந்தர்வன், இதை ஏற்கிறோம், அதை ஏற்கிறோம் என்று எல்லாரையும் சேர்த்து கொள்கிறார்.. யாரெல்லாம் நாங்கள்? எல்லா வைஷ்ணவர்களுக்கும் இவர் அதிகாரி போல் பேசுவது சரி இல்லை.. இவர் சொல்லும் சிவனை பாகவதராக ஏற்று கொள்கிறோம் என்ற வார்த்தையை, வேளுக்குடி கிருஷ்ணன் ஏற்று கொள்வாரா?

    https://www.kinchitkaramtrust.org/viewReleasedQuestions.action

    இந்த சுட்டியில் கேள்விகள் 252 & 371 இற்கு அவர் கூறும் பதில்களை பாருங்கள்…

    வேளுக்குடி அவர்களின் காலக்ஷேபங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும், பல முறை கண்களில் கண்ணீர் வர எம்பெருமானை பற்றியும், அழ்வார்களை பற்றியும் கேட்டிருக்கிறேன்..

    அனால் வைஷ்ணவர்களுக்கு பிற தேவதை வழிபாடு கூடாது என்று அவர் சொல்லுவதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை… ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றில் சிவனும் திருமாலும் ஒருவரே என்று பொருள் படும் பாசுரங்கள் உள்ளன..

    அந்த சுட்டியில் கேள்வி 33 காண பதிலை பார்க்கவும்.. புற்றுக்கு பால் தெளிக்கும் வழக்கம் ஒரு வைஷ்ணவனான எங்கள் குடும்பத்திலும் உண்டு.. இவர் பேச்சை கேட்டு அதை நாங்கள் நிறுத்த வேண்டுமா? காலம் காலமாக எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் என்று பின்பற்றி வருவதை ஏன் நிறுத்த வேண்டும்?

    சும்மா சாத்திரம், வேதம், பிரமாணம் என்று சொல்லலாம், அனால் நம் தாய் தந்தையரே முக்கியமான பிரமாணம்..காலம் காலமாக அவர்கள் செய்ததை எம்பெருமானே வந்து சொன்னாலும், எம்பெருமானாரே வந்து சொன்னாலும், எப்படி என்னால் மாற்ற முடியும்?

    இன்னும் கொஞ்ச நேரம் போனால், வடகலை தென்கலை என்று அடுத்த சண்டை ஆரமித்து விடும் என்று நினைக்கிறேன்.. வேதமும் சாஸ்திரமும் ஆயிரம் சொல்லும், நீங்கள் உங்கள் தாய் தந்தையர், மற்றும் உங்கள் அனுபவம் இவற்றையும் பிரமாணமாக வைத்து வாழுங்கள்… அதுவே முக்கியம்…

  25. திரு கந்தர்வன் அவர்களே

    தங்கள் ஏற்கனவே சொன்னது:

    ///எதற்காக இவ்வாதம் என்றால் இந்து சம்பிரதாயங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் பற்றி நன்கு அறிந்து கொண்டு, அனைவர்க்கும் உகந்ததான பொது கருத்துக்களை இத்தகைய தளத்தில் சொல்லி வந்தால் நன்று என்றே சொல்கிறேன். ///

    இது சத்தியமாக தங்கள் மனத்தின் ஆழத்தில் இருந்து வந்ததாக இருந்தால், நாராயணனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும் நூல்களைப் பட்டியலிட்டு அவற்றை மட்டுமே ஏற்பேன் என்று கூறமாட்டீர்கள். சிவன் நாக்கிலிருந்து வந்த ஆகமங்களைத் தந்திரமாக இப்பட்டியலில் சேர்க்காமல் விட மாட்டீர்கள். சிவாத்வைதம் என்ற தத்துவத்தை அருளிய அப்பய்ய தீக்ஷித‌ர் நூல்களை உரைகளை ஏற்கமாட்டேன் என்று கூறவும் மாட்டீர்கள்.

    எப்படி வேதத்தில் அல்லது உபநிஷத்தில் இடைச்செருகல் உள்ளது என்று சொல்கிறீர்களோ அதே அல்லது அதைவிட அதிகமான அளவுக்கு உருவலும் உள்ளது என்பது உண்மை. செருகலும் உருவலும் இல்லாத ஒரே ஆதாரம் வானளாவ உயர்ந்து நிற்கும் அண்ணாமலையே. அதையும் தாங்கள் ஏற்கமாட்டீர்கள்.

    நாயன்மார்களின் தமிழ்ப் பதிகங்களோ, ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களோ வேதத்தைவிட எள்ளளவும் குறைந்தவை அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. இறைவனைக் குறித்து அன்னமாச்சாரியாரும், சங்கீத‌‌ மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துசாமி தீக்ஷிதர், ஸ்யாமா ஸாஸ்த்ரிகள் உள்ளிட்ட பிற்கால பக்த சிரோமணிகள் எழுதிய கீர்த்தனைகள் உள்பட எல்லா பக்தி, ஆன்மீக நூல்களையும் கருத்தில் கொள்வேன் என்ற பக்குவம் வரவில்லை என்றால், தங்கள் சொன்ன “அனைவருக்கும் உகந்ததான” பொதுக் கருத்து வரவே வராது என்பதை உணரவேண்டும். என்னென்னவோ சொல்லிவிட்டு, அப்பைய தீக்ஷித‌ர் நாயன்மார்கள் உள்ளிட்டவர்களின் இறை நூல்களை ஏற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு விடை பெறுகிறேன் என்று சொல்வது, ‘நாராய‌ண‌னே ப‌ர‌ம்பொருள் என்று ஏற்றால்தான் நான் உங்க‌ளுட‌ன் இருப்பேன், இல்லாவிட்டால் நான் போய்விடுவேன்’ என்றுதான் பொருள்ப‌டும், இந்தப் போக்கினால் தாங்க‌ள் கூறிய‌ “அனைவ‌ருக்கும் உக‌ந்ததான‌” பொதுக்க‌ருத்து எப்ப‌டி வ‌ரும்?

  26. After reading all these posts, like Sage Naradar, I feel like saying “Shiva, Shiva/Narayana Narayana”, depending on the situation!!!!!

  27. திரு உமாசங்கர் அவர்களே,

    // தங்கள் சொன்ன “அனைவருக்கும் உகந்ததான” பொதுக் கருத்து வரவே வராது என்பதை உணரவேண்டும். //

    கண்டிப்பாக வரும். ஹிந்து மரபுகளில் உள்ள எந்த நூலாக இருந்தாலும், அதில் தரும சிந்தன விஷயங்கள் இருந்தால் கண்டிப்பாக ஏற்போம். உதாரணமாக, தாயுமானவர் மனித நேயத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் (“படமாடக் கோயில்” என்று தொடங்கும் பாடல் நினைவிற்கு வருகிறது), நந்தனாரை எப்படி சாதி-வரண வித்தியாசம் இல்லாமல் சைவர்கள் பூஜிக்கின்றனர், முதலியவற்றைப் பற்றி தாராளமாக சொல்லலாம். வள்ளலாருடைய ஆதீனங்களில் எப்படி அமோகமாக அன்னதானம் பண்ணுகிறார்கள் என்று சொல்லுங்கள், கண்டிப்பாகப் பாராட்டுகிறோம். ஏழை எளியவர்கள், பிற்படுத்தப்பட்டோர் இவர்களுக்குச் சைவ சமூஹம் பண்ணுகிற நற்பணிகளைச் சொல்லிக் காண்பியுங்கள். நாயன்மார்கள், ரமண மகரிஷி, விவேகானந்தர், அரவிந்தர், காந்தி இவர்கள் வாழ்க்கையில் நடந்த நர்ச்சம்பவங்களையும் நல்ல morals கற்பிக்கும் கதைகளைச் சொல்லுங்கள். இவை எல்லாம் அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவான பொக்கிஷங்களே. அனைவரும் ஆதரிப்பார்.

    நன்றி. இதற்கு மேல் இனி எழுதவில்லை. சாதி, சமயப் பூசல்கள் அற்ற ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். சர்வேஸ்வரன் கிருபை இருந்தால் அது இங்கு வெளியாகும் என்று நம்புகிறேன். அனைவரும் ஆதரிப்பீர் என்றும் நினைக்கிறேன்.

    (edited and published)

  28. திரு.கந்தர்வன் அவர்களது வேத/உபநிடத/புராண/பாஷிய அறிவுக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடன் நான் வாதம் செய்தேன், இல்லை என்று சொல்லவில்லை; ஆனால் அவருக்கு உள்ள ஞானம் எனக்கில்லை! இருப்பினும், அவர் சொன்ன சிலவற்றை நான் நிராகரிக்கிறேன். அதற்குமுன்னால் அற்புதமான மறுமொழியளித்த திரு.மாதவன் அவர்களக்கும் எனது நமஸ்காரங்கள்!

    இந்த மறுமொழியில் நான் எழுதுவதை திரு.கந்தர்வன் அவர்களுக்கோ மற்ற வைணவர்களுக்கோ கேட்கும் கேள்வியாக என்ன வேண்டாம். மாறாக எனது சொந்த அபிப்பிராயங்களே…

    வேத சூக்தகள், உபநிடதங்கள், மகாபுரானங்கள், உபபுராணங்கள், இதிகாசங்கள், கீதை, பிரம்ம சூத்திரம் மற்றும் இவற்றிற்கு ஆசாரியர்கள் எழுதிய பாஷியங்களையும் பொறுமையாக கற்றுணர்ந்த திரு.கந்தர்வன் அவர்களுக்கு மீண்டும் தலை வணங்குகிறேன். இருப்பினும், சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அது ஏன் என்று கீழே எழுதியுள்ளேன்…

    முதலில் நாராயணனே சர்வோத்தமன் என்பது எனது நம்பிக்கையும் ஆகும்.. ஆனால் நான் வைணவன் இல்லை! பல தெய்வ வழிபாடு சிறிது சிறிதாக மருவி இன்று முனைவர் அய்யா சொன்னதுபோல சைவம் வைணவம் என்னும் இருபெரும் மதங்கள் மட்டுமே உள்ளன! தேவி, பிள்ளையார், முருகன், நவக்கிரகங்கள் ஆகிய எல்லா வழிபாடும் இன்று சைவத்திற்குள் வந்துவிட்டது!

    சிவனை சர்வோத்தமன் என்று சொல்லும் புராணங்கள் தாமச குணங்கள் உடையவை, எனவே அவற்றை பிரமாணமாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை என்று பத்ம புராணம் கூறுகிறது. ஆனால் சாத்வீக புராணங்களிலேயே சிறிய சிறிய முரண்பாடுகள் உள்ளன. சில உதாரணங்கள்:-

    -> “விஷ்ணு பிரம்மாவைப் படைத்தார், பிரம்மா சிவனைப் படைத்தார்” என்று வராக புராணம் கூறுகிறது. மாறாக, திரு.கந்தர்வன் காட்டிய மகா உபநிஷதத்தில் “விஷ்ணுவே பிரம்மா, சிவன், ஆகிய எல்லா தேவர்களையும் படைத்தார்” என்று கூறுகிறது. அப்படியென்றால் சிவைனைப் படைத்தது விஷ்ணுவா பிரம்மாவா??

    -> “பவுத்தம், சமணம் இரண்டுமே துர்மதங்கள். அரக்கர்களை குழப்புவதற்காக புத்தரையும் மகாவீரரையும் விஷ்ணுவே அனுப்பினார்” என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. ஆனால் “மிறுகபலியில் ஈடுபடுபவர்களைத் திருத்த திருமாலே புத்தராக அவதரித்தார்” என்று ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகிறது. அதாவது, ஸ்ரீமத் பாகவதத்தின் படி புத்தர் விஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒருவர், ஆனால் விஷ்ணு புராணம் இதை ஏற்கவில்லை!

    இதுபோன்ற இன்னும் சில முரண்பாடுகள் உள்ளன…

    சில விஷயங்களை மொழிபெயர்க்க நேரம் இல்லாததால் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளேன்.. மன்னிக்கவும்:-

    We cannot say that none of the Shaiva Acharyas have so far commented on the Brahma Sutras. Swami Harshananda mentions in his book ‘Six systems of Hindu philosophy: A Primer’ about all the Bashyakaras who have commented upon the Brahma Sutras. Without fail, he has included Srikantha (1270 AD) in the list. He has also given the name of his philosophy as ’Saiva Visishtadvaita’, i.e., Visishtadvaita with Shiva replacing Vishnu.

    Moreover, just because there are not enough Shaiva Bashyakaras, we cannot say Shaivism is contrary to Vedic faith! Amongst the grand Bashyakaras we have heard so far, only Shankara, Ramanuja, Madhva and Nimbarka are very popular. Neither Chaitanya Mahaprabhu (who started the Gaudiya sampradaya) nor Ramananda (who started the Ramanandi sampradaya from Sri Vaishnavism) wrote bashyas on Brahma Sutras. There is an incident of how the Gaudiya sampradaya’s separate bashya came to be written (till then they were using Madhvacharya’s bashya). I am giving the incident from Srinandanandana Dasa (Mr.Stephen Knapp’s) website:-

    “One day, in Jaipur, in the royal court, the Ramanuja sampradaya began arguing a case in connection with the Gaudiya sampradaya. They informed the king that the Gaudiya sampradaya had no commentary on the most important revealed scripture of Vedic religion—Vedanta; therefore they had no siddhanta and no real sampradaya, or school. As a consequence they should give up their service of the deities of Govinda and Gopinatha, and entrust with those who were bona fide members of a genuine sampradaya. At that time, the king of Jaipura was a follower of the Gaudiya sampradaya. He immediately sent word of the controversy by messenger to Vishvanatha Cakravarti Thakur in Vrindavan, wanting to know if the Gaudiya sampradaya actually did have any commentary on theVedanta. If there was, the king wanted that the commentary be sent immediately to Jaipur to satisfy the scrutiny of the pandits from the Ramanuja Sampradaya.
    At this time, Shri Vishvanatha Chakravarti was very old and infirm. It was impossible for him to make the arduous journey to Jaipur. He sent his student and disciple, Shri Baladev, in his place. Baladeva Vidyabhusan was an expert scholar in all the important scriptures. In the midst of a huge assembly of pandits from the Ramanuja sampradaya, Baladeva challenged them all to argue with him in scholarly debate. A long, and hard-fought debate took place, with tumultuous arguing from the Ramanuja school. Still, none of them could stand before his conclusive statements, keen scholarship, and penetrating intellect. Baladeva argued that the founder of the Gaudiya Sampradaya, Shri Chaitanya Mahaprabhu established the Shrimad-Bhagavatam as the topmost commentary on Vedanta. The Bhagavatam itself claims that it is bhashyanam brahma-sutranam, the natural commentary on Vedanta. This is confirmed on the basis of evidence given by Jiva Goswami in his Sat Sandarbha. Therefore, the Gaudiya sampradaya has chosen to accept Shrimad-Bhagavatam as the original commentary on Vedanta, and sees no need for a separate commentary.
    At that point, the pandits from the Ramanuja sampradaya shouted: “He admits that there is no commentary! They have no commentary!” Having no other recourse, Shri Baladeva Vidyabhusan promised to show them the Gaudiya commentary on Vedanta within a few days. The pandits were astonished to think that such a thing existed. They were suspicious that this might be some kind of trick, but were silenced for the time being.
    Very troubled within his mind, Shri Baladeva Vidyabhusana went to the temple of Shri Govinda, the deity of Rupa Goswami. After offering his eightfold obeisances before the deity, he related everything that had taken place. That night in a dream, Shri Govinda told him, you must compose the commentary. That commentary will be personally sanctioned by me. No one will be able to find any fault in it. Seeing this in his dream, Baladeva became very happy, and his heart was full of strength, ready for the task at hand. After this, he meditated on the lotus feet of Govinda and began writing his commentary. Within a few days it was completed. This commentary became known as the Govinda Bhashya commentary on Vedanta.
    In an addendum appended to the Govinda Bhashya, after it was published, Shri Baladeva has written, vidyarupam bhushanam ye pradaya, khatim nitye teno yo mamudarah, Shri govinda-svapna-nirdishtha bhashye, radhabandhurangah sa jiyat. “May Shri Govinda be all glorious. By his mercy, he revealed this commentary to me in a dream. The commentary revealed by him is especially appreciated by the highly learned, and as a result of this I have been given the name Vidyabhushan, but it is Shri Govinda who deserves all credit. May that Shri Govinda who is the most dear life and soul of Shri Radhika, be all-victorious.”
    With the Govinda Bhashya commentary in hand, Baladeva Vidyabhushan arrived at the assembly hall of the king, where the pandits were waiting for him. When he showed them his commentary, they were speechless. The Gaudiya sampradaya was proclaimed victorious. The king and all the Gaudiya Vaishnavas were supremely happy. At that time the pandits gave Shri Baladeva the name “Vidyabhushana,” or one whose ornament is knowledge, in honor of his great scholarship. The year was 1628, Shaka era. From the day forward, the king of Jaipur decreed, everyone would attend the aroti of Shri Govinda, the deity beloved by the Gaudiya Vaishnavas, who was ultimately responsible for such a wonderful commentary on Vedanta.
    The Ramanuja pandits, falling under the influence of Shri Baladeva Vidyabhusana, accepted him as their acharya and wanted to become his disciples. With great humility, Baladeva Vidyabhushana refused, explaining that there are four sampradayas, among which the Shri Sampradaya is a genuine school that preaches servitude to God as the best religious process. By advancing the views of the Gaudiya sampradaya, he meant no disrespect to the Shri sampradaya. To insult the Shri sampradaya would be a great offense, he said.”
    Source:- https://www.stephen-knapp.com/baladeva_vidyabhusana.htm

    Similarly, the Ramanandi sampradaya too did not have a separate bashya for these many years. Ramananda lived from 1400-1470 AD. But he did not write Brahma Sutra bashya. Only in 1977, the great revolutionary saint Sri Rambhadracharya has written a bashya for the Ramanandi sampradaya (all these years, they were using the Sri Bashya of Sri Ramanuja!).
    So then, were all the years before commentaries from Baladeva Vidyabhushana and Rambhadracharya, the Gaudiya and Ramanandi sampradayas considered non-Vedic or as in this case, anti-Vedic? Still Swaminarayan sampradaya does not have a separate Brahma Sutra bashya. This is required because they claim that their philosophy (Navya-Visishtadvaita) is different from that as established by Sri Ramanuja. Then are those following this sect non-Vedic?

    Similarly, why cannot some Acharya be born and establish (that is write a Brahma Sutra bashya) that Shaiva Siddhantha and other Shaiva sampradayas are also Vedic?

    trayi sankhyam yogah pasupatimatam vaisnavamiti
    prabhinne prasthane paramidamadah pathyamiti ca |
    rucinam vaicitryadrjukutilananapathajusam
    nrnameko gamystvamasi payasamarnava iva ||

    (Different are the paths laid down in the Vedas: Sankhya, Yoga, Saiva and Vaishnava scriptures. Of these, some people take to one and some to another as the best. Devotees follow these diverse paths, straight or crooked, according to their different tendencies. Yet, Oh Lord, thou alone art the ultimate goal of all men, is the ocean of all givers).

    – Sivamahimna Stothram, 7.

    Similarly, in the invocation of Brahma Sutras, Swami Sivananda (of Divine Life Society) while speaking about the Shariraka bashya of Adi Shankaracharya worships as following:-

    “He whom the Saivas worship as Lord Siva; the Vedantins as the
    Absolute (Brahman); the Budhists as Lord Buddha; the logicians, the experts in the theory of knowledge, as the Creator; those
    following the teachings of Jaina as the Arhat and the ritualists as the Sacrifice; may that Hari, the Lord of the three worlds, give you the desired object”.

    It says Shri Hari is the Supreme, no doubt about that. But please look for the mention of Shaivism here, which itself clarifies that Shaivism is also a Vedic religion followed by Vedic people.

    Sanatana Dharma is a very diverse path. The Hinduism known today is only a portion of it. Today’s Hinduism is based only on Vedanta. The other five Vedic philosophies such as Sankhya, Yoga, Nyaya, Vaiseshika and Mimamsa are either followed by very less people or not followed at all! When there have been so many paths, how is that we can say that only one sampradaya (or for that matter only one belief) is authentic and truly Vedic? Then what is the big difference between Sanatana Dharma and the Abrahamic religions which emphasize that ‘One God, One book, all else are evil’.

    மேலும், இதே கட்டுரையில் நான் எழுதிய மற்றொரு மறுமொழியை மீண்டும் எழுதுகிறேன்:-

    பலர் சைவ சித்தாந்தம் ஒன்றே சைவம் என்றும் தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர். எப்படி ஸ்ரீ வைஷ்ணவம், மாத்வம், கௌடியம் போன்ற சம்பிரதாயங்கள் வைணவ மதத்திலுள்ளதோ அதேபோல சைவ சித்தாந்தம் சைவ மதத்தின் ஒரு சம்ப்ரதாயம்! இது தவிர வீரசைவம் (லிங்காயதம்), சித்த சித்தாந்தம் (நாத் சம்ப்ரதாயம்), பாசுபாயதம், காஷ்மீர் சைவம், தத்தாத்ரேய சம்ப்ரதாயம் போன்றவை சைவத்தில் உள்ளது. “சிவனே பெரியவன்” என்பது வேதத்திற்கு முரணானது, எனவே தான் ஆதிசங்கர பகவத்பாதர் போன்ற நடுநிலையாளர் (அத்வைதி) கூட இதை ஆதரிக்கவில்லை என்றும், அதனால்தான் எந்த வைதீக ஆசாரியரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், எனவேதான் வைணவம் ஆரிய மதம், சைவம் திராவிட மதம்; இந்திரனை நீக்கிவிட்டு வேதத்தில் சிவனை சேர்த்துவிட்டனர் என்றெல்லாம் பசப்புகிறார்கள் இஸ்லாமிய/கிறித்தவ/இடதுசாரி இந்து விரோதிகள். சற்று ஆராய்ந்தால், வைனவத்தைப்போலவே சைவமும் ஒரு வைதீக மதம் என்பது புலப்படும். முதலில் சைவ சித்தாந்தத்தையே எடுத்துக் கொள்வோம். எப்படி ஆழ்வார்களில் எல்லா வர்ணத்தினரும் இருந்தனரோ, அதேபோல நாயன்மார்களிலும் எல்லா வர்ணத்தினரும் இருந்தனர். ‘நால்வர்’ என்று அன்புடன் அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், அப்பர் (திருநாவுக்கரசர்), சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசகர் களில், அப்பர் பெருமானைத்தவிர மூவரும் வைதீக குடும்பத்தில் பிறந்தவர்களே. முனைவர் அய்யா எழுதிய ‘வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் நான்காம் பாகம்’ என்ற கட்டுரையிலிருந்து ஒரு குறிப்பைத் தருகிறேன்:-

    //தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தருடைய திருஅவதாரமே வேதநெறியைத் தழைத்தோங்கச் செய்தலையும் மிகுசைவத் துறையை விளங்கச் செய்தலையும் குறிக்கோளாகக் கொண்டதாகும்.

    அவருடைய தந்தையார் சிவபாத இருதயர் கவுணிய கோத்திரத்தவர்.( இக்காலத்தில் கவுண்டின்ய கோத்திரம் என வழங்கப்படுகின்றது.); ‘அந்தணர் தங்குடி முதல்வர்.’ ‘இப்புவி வாழத் தவஞ்செய் இயல்பினார்’;. சிவபாத இருதயர் தமிழ்நாட்டில் சமணர், சாக்கியர்களின் பொய்மிகுந்து, “ஆதி அருமறை வழக்கம்” அருகி, சிவனடியார்களிடத்தில் திருநீறு முதலிய சைவசாதனங்கள் போற்றப் பெறாதொழிதலைக் கண்டு வருந்தினார். இறைவனிடத்தில், “பரசமயம் நிராகரித்து நீறாக்கும் “ திருப்புதல்வனை வேண்டித் தவம் புரிந்தார். அவருடைய வேண்டுகோளுக் கிரங்கிய இறைவன்,

    “பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க ……
    சிவம்பெருக்கும் திருஞானசம்பந்தப் பிள்ளையார்
    திருவவதாரம் செய்தார்”

    என தெய்வச் சேக்கிழார் பெருமான் மொழிகின்றார். திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் பெருமான் ‘இருக்குமொழிப் பிள்ளையார்’ எனும் சிறப்புப் பெயராலும் குறிக்கின்றார். இருக்குவேதம் எனும் ஒரு வேதம் இருந்தாலும், இப்பெயர் வேதங்கள் நான்கினையும் பொதுவாகக் குறிக்கும்.//

    மேலும், அப்பர் பெருமானின் ஒன்பதாவது திருமுறையில் வேத கருத்துக்களையே பாடியுள்ளார் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    இதேபோல, 18 சித்தர்களுள் ஒருவரான திருமூலர் எழுதிய ‘திருமந்திரம்’ சைவ சித்தாந்தத்தில் ஒரு பெரிய சாஸ்திரமாகக் கருதப்படுகிறது. சித்தர்கள் ஏதோ வேத நெறிக்கு புறம்பானவர்கள் என்பதுபோல ஒரு தவறான கருத்து பரப்பப் படுகிறது. இந்த சித்தர்களுக்கேல்லாம் ‘குரு’ யார் என்று ஆராய்ந்தால் இந்த கேள்வியே தவிடுபொடியாகிவிடும். ஏனெனில், அவர்தான் ரிக் வேதத்தில் பல சூக்தங்களையும் மந்திரங்களையும் இயற்றிய அகத்திய மாமுனி. மேலும் ஜெயிமின்ய பிராமனத்திலும் (சாமவேதம்), கோபத்த பிராமனத்திலும் ‘சப்தரிஷிகளுக்குள் ஒருவர்’ ஆக கருதப்படுகிறார். மேலும், பழநியாண்டவரின் விக்ரகத்தை நவபாஷானன்களால் செய்த போகர் சித்தரும் இதே அகஸ்தியரின் குரு பரம்பரையில் வந்தவரே. யோக சூத்திரங்களை இயற்றிய பதஞ்சலி முனிவரும் ஒரு சித்தராக கருதப்படுகிறார். போகரது சீடரே நாக சித்தர் (மகாவதார் பாபாஜி). அவரது சீடர் லாகிரி மாகாசயர். அவரது சீடர் யுக்தேஸ்வர் கிரி. அவரது சீடர்தான் புகழ்பெற்ற “ஒரு யோகியின் சுயசரிதம்” என்ற நூலை இயற்றிய பரமஹம்ச யோகானந்தர். இவர்தான் சுவாமி விவேகானந்தரைத் தொடர்ந்து 1920 இல் அமெரிக்காவில் நடந்த “உலக மதங்களின் மாநாட்டில்” இந்துமதத்தை represent செய்தார்.

    அதேபோல, மற்ற சைவ மதத்தின் சம்பிரதாயங்களை தோற்றுவித்த ஆசாரியர்களும் (பாசவன்னர், கோரக்னாதர், மத்செந்த்ரனாதர், அபிநவகுப்தர், ஸ்ரிகாந்தர், அப்பய்ய தீட்சிதர்) போன்றவர்களும் வைதீக குடும்பங்களில் பிறந்து, வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களைக் கற்று பிறகு “சிவ சர்வோத்தமத்தை” நிலைநாட்டினர். லிங்காயதம் எனப்படும் வீரசைவ சம்பிரதாயத்தை ஸ்தாபித்த பாசவன்னர் வேதங்களை நிராகரித்தாலும், மற்ற சம்பிரதாயங்கள் அவற்றை ஏற்றுக் கொள்கின்றன.

    இதுகுறித்து முனைவர் அய்யாவே எழுதிய மற்ற கட்டுரைகளைப் பார்க்கவும்:-
    https://tamilhindu.com/author/knmuthuswamy/

    விட்டுக் கொடுப்பது மனித இயல்பு மட்டுமில்லை, தெய்வங்களும் செய்துள்ளனர். மாகாபாரதத்தில் பதிமூன்றாம் பர்வமான அனுசான பர்வத்தில், கிருஷ்ணன் ‘சிவ சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். சிவன் பத்ம புராணத்தில் ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். நம் ஆராதனைக்குரிய தெய்வங்களே போட்டி, பொறாமையில்லாமல் விட்டுக் கொடுத்துக் கொள்ளும்போழுது, அவர்கள் பெயர்களில் நாம் போட்டி போடுவது மகாபாதகம் இல்லையா?

    ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர் போன்ற ஆசாரியர்கள் ‘சைவ ஆகமங்களை’ ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக அவை வேதங்களுக்கு புறம்பானது என்று ஒருபோதும் சொல்லமுடியாது. “கருமமே பிரம்மம்” என்று ஞான பாதையை நிராகரித்த மிமாம்சகர்களின் தலைசிறந்தவரான மண்டன மிஷ்ராருடன் வாதிட்டு “இந்த யுகத்தில் ஞானம் மற்றும் பக்தி மட்டுமே உகந்தது” என்று சங்கரர் நிரூபித்தார். இதனால் வேள்விகளும் மிமாம்சகமும் வேதத்திற்கு புறம்பானது என்று சொல்லக் கூடாது. அதேபோல, சங்கரர் ‘சைவ ஆகமங்களை’ நிராகரித்தார் என்பதற்காக அவை அவைதீகமானது என்றும் சொல்லக் கூடாது! வைணவ சம்ப்ரதாயங்களுள்ளேயே வேறுபாடுகள் உள்ளன. உதரணத்திற்கு “நாராயணனே பரம்பொருள், ஸ்ரீ வைகுண்டமே உயர்ந்த லோகம்” என்று இராமானுஜ மற்றும் மத்வ சம்பிரதாயங்கள் அனுசரிக்கின்றன. ஆனால் “கிருஷ்ணனே பரம்பொருள், நாராயணன் கிருஷ்ணனின் ஒரு பாகமே; கோலோக விருந்தாவனமே உயர்ந்த லோகம்” என்று நிம்பார்க்க மற்றும் சைதன்ய சம்பிரதாயங்கள் (இஸ்கான் உட்பட) கொள்கின்றன. இதுதான் சரி, இது தவறு என்று நாம் சொல்லமுடியாது.

    சைவ, வைணவ ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்ட சபரிமலையில் நித்திய தவம் புரியும் அய்யன் மீண்டும் எழுந்துவரட்டும் என்று பிரார்த்திக்கிறேன்… ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    //தாங்களும் கந்தர்வன் அவ்ர்களும் இளம் வயதினர் என்பதும் ஜடாயு அவர்கள் 35 வயதினர்தான் என்பதும் தங்களைப் போன்றோரின் ஆர்வமும் முனைப்பும், தொடர்ந்து வரும் நமது பாரம்பரியம் மிகவும் வலிமையானது என்பதைப் பறைசாற்றுகின்றன.//

    உமாசங்கர் அய்யா, “எப்படி இந்த கடலைக் கடந்து சென்று சீதாதேயவியை பற்றி தகவல் அறிவது” என்று அனைத்து வானரங்களும் சிந்தித்துக் கொண்டிருந்தன. “என்னால் என்ன செய்ய முடியும்?” என்று வருத்தத்துடன் அமர்ந்திருந்த அனுமனைப் பார்த்து பெரியவர் ஜாம்பவான் கூறினார்:- “அனுமான், உன்னால்தான் இது முடியும், நீதான் இதற்க்கு உகந்தவன்” என்று. உடனே, அனுமான் மகாபிரபு கவலைகளை மறந்து கடலைத் தாண்டி சென்றதுதான் இராமாயணத்தின் திருப்பு முனையே. அதேபோல நீங்கள், இராமா அய்யா, முனைவர் அய்யா போன்ற பெரியவர்களின் ஆசியுடனும் ஆலோசைனைகளுடனும் செயல்பட்டால் அனுமான் அந்த கடலைத் தாண்டியதுபோல, நாங்கள் இந்தப் பிறவிப் பெருங்கடலையாவது தாண்டிவிடுவோம்…..

  29. குணங்குறி இல்லாத எல்லையற்ற மனம் வாக்கு காயங்களுக்கு எட்டாத பரம்பொருள் தன்னுடைய கருணையினால் உயிர்களின் மனம் வாக்கு காயங்களுக்குக் கோசரமாகும்படி பல வடிவங்களைக் கொள்ளுகின்றது. அப்பரம்பொருள் ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியும் அல்ல உயர்திணையும் அல்ல அஃறிணையும் அல்ல. ஆனால் இவை அனைத்துமாகி அல்லாதனவுமாகி உள்ள பரம்பொருள் தானே தன்னைக் காட்டியருளாவிட்டால் இறையை அறிய ஆன்மாக்களால் இயலாது என்றும் இதன் பொருட்டே குருசந்தானம் விளங்கியது என்றும் சைவசாத்திரம் கூறுகின்றது. சிவம் என்ற ஆண்பாலுக்குரிய ‘ன’கர விகுதி கூடிச் சிவன் என ஆண்பாற்சொல்லாகவும், பெண்பாலுக்குரிய ‘ஐ’காரவிகுதி பெற்றுப் பெண்பாற் சொல்லாகவும் வழங்கப் பெற்றாலும் மங்கலமானது தூய்மையானது செம்மையானது என்னும் பொருளில் சிவம் என்றோ பதி என்றோ தான் வழங்கப்படுகின்றது.
    இந்தப் பரம்பொருளைப் ‘பெருமான்’ என்றோ “பெருமாள்” என்றோ அடியார் பெருமக்களும் பாகவதர்களும் உள்ளத்தால் அழுந்தி அனுபவித்தார்களே அன்றி சாத்திரப் பிரமாணங்களால் தீர்மானித்து வரையறுத்துக் காண முடியாது. எண்ணற்ற பிரமாணங்களால் மண்டை வீங்கிப் பிரமாணம் அறியாது உன்னைவிட நான் அறிவுடையவன், அதனால் பெரியன், இந்தப் பிரமாணங்களை அறிய வாய்ப்புத் தந்த என் பிறவிக் குலம் உன்னுடைய குலத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்ற அகந்தைக்கு அழைத்துச் செல்லும்.
    என்வே, சைவ ஆகமம்,
    “வாழ்வெனும் மையல்விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
    தாழ்வென்னும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும்
    ஊழ்பெறல் அரிது” என்று சைவநெறிக்கு உணர்த்திற்று. ஆழ்வார்கள் ஆழங்கால் பட்ட நெறியும் இதுவே. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறையனுபவத்திற்குக் காட்டிய வழி இதுவே.

    அணுபட்ச திருமால் தன்னுடைய செல்வமிக்க வாழ்வினால் பதவி அதிகாத்ரதால் ‘வாழ்வெனும் மயல்’ கொண்டான்; தன் வேதக் கல்வியினல் அணுபட்ச பிரமன் கர்வம் கொண்டு ‘தாழ்வென்னும் தன்மை’யை நீத்தான். பரம்பொருளால் இருவரும் தண்டிக்கப்பட்டனர்.

    கந்தர்வன் காட்டிய பிரமாணங்கள் எங்கு கொண்டுபோய் விடும் என்பதற்கு அவருடைய நூல்கள் ஒன்றிலிருந்தே காட்டுகின்றேன். ” ஒருவ்ன் ப்ராப்ய ப்ராபகங்களாகக் கொண்ட வைஷ்ணவனாக வாழ்ந்தானென்றால் அவனுக்குள்ள தாழ்ந்த ஜாதி நீங்கிவிடும். அவன் தொண்டக்குலம் என்னும் உயர்ந்த குலத்தில் சேர்ந்து விடுவான் என்று தென்னாச்சாரியர்கள் திருவுள்ளம் பற்ரினார்கள். இதில் கருத்து வேறுபாடு கொண்ட ஸ்ரீதேசிகன் ‘ஆழ்வாரானாலும் ஜாதி போகாது’ என்று திருவுள்ளம் பற்றினார்கள். தேசிகன் இந்த கொடூரமான முடிவுக்கு வந்தது கந்தர்வன் தங்களுக்கு இவை பிரமாணம் எனக் காட்டிய நூலறிவே.

    இந்து சனாதன தருமத்தைக் காலங்காலமாகப் பீடித்து இருக்கும் குட்ட நோய்க்குப் புனுகு போடுவதாக முடியும்.

    சாதியபிமானத்தால் வேத ஆகம சுருதிகளில் இடைச்செருகல் , நீக்கல் முதலியன நிகழ்ந்துள்ளமையை சைவ ஆச்சாரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஒரே ஒரு சான்று காட்ட விரும்புகின்றேன்.”அபிவா யச் சண்டாள: சிவ இதிவாசம் வதேத்தேநஸஹ ஸ்ம்வதேத் தேநஸஹஸம்வஸேத்தேந ஸஹபுஞ்சீத” என்னும் முண்டகோபநிஷத் தொடர் நீலகண்ட பாடியத்தில் உள்ளது.( கந்தர்வன் இந்த பாடியத்தை அறியாரோ அல்லது அறிந்து என்னைய்பாடிஅத்தோடு ஒப்ப மதிக்க விரும்பவில்லையோ அறியேன்) இது இக்காலம் அச்சிட்ட நுல்ல்களில் காணப்படவில்லை. ஸ்ரீகண்டரின் வழித்தோன்றலாகிய அப்பைய தீக்ஷிதேந்திரரின் கருத்தை ஒப்புக்கொள்ள கந்தருவனுக்கு எப்படி மனம் வரும்?
    கன்றின் நடுதறியிலும் குதிரைக்குக் கொள்ளு வைக்கும் ‘மொக்குணி’ என்னும் பையிலும் சிவத்தைக் காணும் எளிமையைக் காட்டுவது சிவநெறி. பாமரர்கள் வழிபடும் சிறுதெய்வங்களின் வழியே அவர்களின் எளிய வழிபாட்டை ஏற்று அவர்களுக்கும் அச்சிறுதெய்வங்களின் வழியே அருள்புரிவது சிவம் என்று எல்லாரையும் தழுவி அரவணைத்துச் செல்லக் கற்பிப்பது, வழிகாட்டுவது சிவநெறி. எனவே இதுவே உண்மை வைதிக சனாதன்நெறி என நான் எண்ணுகின்றேன். “யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாக மாதொரு பாகனார்தாம் வருவார்” என்றும், “மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல, இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி, சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமானால் யார்க்கும், முனமொரு தெய்வம் எங்கும் செயற்குமுன் நிலையாம்” என்று தமிழ் ஆகமம் கூறுவதே எனக்கு ஏற்புடையதாகத் தெரிகின்றது. இதுவே சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளோரையும் ஆன்மீக வழியில் வைதிக நெறியில் மேல் நோக்கி அழைத்துச் செல்லும் திருநெறி.

  30. உருவ மூர்த்தியின் துணையின்றி அருவ நிட்களமூர்த்தி இத்தகையது என அறியமுடியாது என்பதைச் சைவம் ஏற்ருக் கொண்டாலும் முத்தியில் சிவ வியாபகத்தில் கலந்துவிடும் சிவசாயுஜ்ஜியம் என்னும் மேலானது என்று சிவநெறி பேசுகின்றது, அந்தச் சாயுச்சியம் உருவவழிபாட்டால் அன்றி ஞான்வழிபாட்டினால்தான் பெற முடியும் என்ற கருத்தினால். தைத்திரீயாருண சாகை, நாராயணவசனம், அந்தத் தேவன் நம்மை ஞானத்தினாற் சேர்ப்பானாக” என்கின்றது. (ஸநோதேவச் சுப்யாஸ்ம்ருத்யாஸம் யுநந்து)
    சைவம் இக்கொள்கையது ஆனபடியால், “வைகுண்டமெனும் தலத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திலே நித்திய சூரிகளோடு கலந்து குணானுபவ கைங்கரியம் செய்வதே மோக்ஷம்” என்னும் நிலையை சாலோகம் என்னும் பதமுத்தி என்றும் உயர்ந்த பரமுத்தி அன்று என்றும் சைவம் கருதுகின்றது.

  31. மதிப்பிற்குரிய முனைவர் ஐயா அவர்களுக்கு,

    திவ்வியப் பிரபந்தங்கள் பற்றியது இந்த பதிவு. இவை எவையும் என் சொந்த ஆராய்ச்சி அல்ல; வைணவ மரபில் வந்த ஆச்சாரியார்களின் மொழி படி தான் எழுதுகிறேன். நீங்கள் திருவாய்மொழியையும் முதல் திருவந்தாதியையும் நேற்று மேற்கோள் காட்டியதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

    நீங்கள் சொன்ன பத்தாம் பத்து இறுதி திருவாய்மொழியைக் காண்போம். பத்தாம் பத்து இருது பாசுரங்களில் ஆழ்வார் “நாராயணனே சர்வ வியாபி” என்று பாடியுள்ளமை நோக்கத்தக்கது. “அரியை அயனை அரனை அலற்றி” என்று கூறியதற்கு அதற்குச் சற்று முன் பாடியுள்ள சர்வ வியாபித்துவத்தை நினைவிற் கொண்டு, “பிரமனுக்கும், சிவனுக்கும் அந்தர்யாமியான அரியே! என்று பாடுகிறார்” என்று பொருள் கொள்ளுதல் நன்று. “ஸ பிரம்மா, ஸ சிவ, ஸ இந்த்ர” என்று வரும் தைத்திரீய நாராயண சூக்தத்தை நினைவுபடுத்துகிறார் ஆழ்வார்.

    வைணவப் பூர்வாசாரியார்கள் பிள்ளான், நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, அழகிய மணவாள ஜீயர், பெரிய பரகால சுவாமி, வேதாந்த ராமானுஜ மகாதேசிகன், ஆகியோர் திருவாய்மொழிக்கு ஏழு ஈடுகளைப் (commentaries) பண்ணியுள்ளனர். அவர் அனைவரும் இவ்வாறே அர்த்தம் சொல்லியுள்ளனர். இவர்கள் சொன்ன அர்த்தங்களைத் தள்ளிவிட்டு வேறு ஒரு பொருளை ஆதரிப்பதற்கு ஏன் ஆசாரிய பக்தி இடம் கொடுக்காது என்று தாழ்வுடன் கூறுகிறேன்.

    (edited and published)

  32. ஜடாயு அவர்கள் தந்திருக்கும் படங்கள் அருமை.. வாத பிரதிவாதங்ங்களுக்கு மத்தியில், சிவ விஷ்ணு ஒருமையை கண்முன்னால் தரிசிக்கும்படி செய்தன அவை.

    அந்த மறுமொழியில் உள்ள பிரத்யட்ச உண்மைகளைக் கண்டுகொள்ளாத மாதிரி அப்படியே தவிர்த்து விட்டு கந்தர்வன் போய்க் கொண்டிருக்கிறார்.. கண்ணை மூடிக் கொண்டு வாதம் செய்வது என்பது இது தானோ?

  33. அன்புள்ள பாலாஜி அவர்களே

    //Similarly, why cannot some Acharya be born and establish (that is write a Brahma Sutra bashya) that Shaiva Siddhantha and other Shaiva sampradayas are also Vedic? //

    சைவ‌மும் வேத‌ ஆதார‌மான‌துதான், தொன்மையான‌துதான். சிவ‌பெருமானே ப‌ர‌மேஸ்வ‌ர‌ன் என்று கூற‌ வேத‌மேற்கோள்க‌ளும், பாஷ்ய‌ங்க‌ளும் ப‌ல‌ உள்ள‌ன‌. உதார‌ண‌த்துக்கு இந்த‌ நிர‌லியைப்ப‌ருங்க‌ள். ஹ‌ர‌த‌த்த‌ர் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ஸ்ருதி ஸுக்தி மாலை என்ற நூல் இதிலேயே உள்ள‌து. இந்த‌‌ நூலைப்ப‌டியுங்க‌ள். ச‌ம‌ஸ்கிருத‌ம் ஆனாலும், த‌மிழில் த‌ட்ட‌ச்சு செய்து, த‌மிழ் உரையை வார்த்தைக்கு வார்த்தை கொடுத்திருக்கிறார்க‌ள். எந்த‌ இடைச்செருக‌லும், உருவ‌லும் இந்த‌ நூலிலிருந்து செய்ய‌முடியாது. இதே தளத்தில் அப்பய்ய தீக்ஷிதரின் நூல்களும் உள்ளன.

    இத‌ன்பேரில் ஒரு வாத‌ம் தொட‌ங்க‌வேண்டாம் என்று கோருகிறேன். ஏனேனில் முத‌லிலிருந்தே நான் இவை போன்ற‌ வேத‌ப்பிர‌மாண‌ங்க‌ளைக் கார‌ண‌மாக‌வே காட்ட‌வில்லை. என்ன‌ கார‌ண‌ம்? ந‌ம‌து ம‌த‌த்தை வேத‌ங்க‌ளுக்குள் அட‌க்கி விட‌ முடியாது. அட‌க்க‌வும் கூடாது, அவ்வ‌ள‌வே.

    https://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_1to50.htம்
    https://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_101to151.hட்ம்

    //அதேபோல நீங்கள், இராமா அய்யா, முனைவர் அய்யா போன்ற பெரியவர்களின் ஆசியுடனும் ஆலோசைனைகளுடனும் செயல்பட்டால் அனுமான் அந்த கடலைத் தாண்டியதுபோல, நாங்கள் இந்தப் பிறவிப் பெருங்கடலையாவது தாண்டிவிடுவோம்…..//

    நான் வெகு எளிய‌வ‌ன். முனைவ‌ரைப்போலோ, ஜ‌டாயு அவ்ர்க‌ளைப்போலோ ஆழ்ந்த‌க‌ன்ற‌ அறிவின‌ன் அல்ல‌ன். இது த‌விர, “இந்த‌ப் பெருங்க‌ட‌லையே” நாம் தாண்டுவோமா என்னும் அள‌வுக்கு இங்கே வாத‌ம் ந‌ட‌க்கிற‌து, நீங்க‌ள் பிறவிப்பெருங்க‌‌ட‌லைப் ப‌ற்றிஎல்லாம் யோசிக்கிறீர்க‌ள்! (அதெல்லாம் சரி, க‌ட‌லை போடும் வ‌ய‌தில்கூட‌ இப்போதெல்லாம் பிற‌விப்பெருங்க‌ட‌லைப்ப‌ற்றி யோசிக்கிறார்க‌ள் என்ப‌து ம‌கிழ்வே)

  34. கந்தருவன் அவர்களுக்கு
    /இவர்கள் சொன்ன அர்த்தங்களைத் தள்ளிவிட்டு வேறு ஒரு பொருளை ஆதரிப்பதற்கு ஏன் ஆசாரிய பக்தி இடம் கொடுக்காது என்று தாழ்வுடன் கூறுகிறேன்./
    தங்களுடைய ஆச்சாரிய பக்தியை மதிக்கின்றேன். இது சாதகனுக்கு இன்றியமையாத தகுதிகளில் ஒன்று. ஏதாவது ஒரு வழியில் தொடர்ந்தால்தான் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைய வேண்டும். ஆச்சாரியர்கள் காட்டிய வழியில் சென்றால் யாரை ஆச்சாரியராகக் கொண்டிருக்கின்றோமே அவர்கள் அடைந்த கதிக்கு நாமும் செல்வோம் என்பது சாத்திர சம்மதமே.
    சர்வ வியாபகமாகிய ஒருபொருளை நீங்கள் நாராயணன் என்றும் திருமால் என்றும் ஒருபெயரிட்டு அழைத்தால் அதில் ஒன்றும் த்டையில்ல். எல்லாப்பெயர்களும் ஒரு பரம்பொருளையே குறிப்பன. ஆகாயத்திலிருந்து பொழிய்ம் மழைநீர் நிலத்திற்கு வந்த பின் அது வந்து சேர்ந்த நிலத்திற்கு ஏற்ப கங்கை, காவிரி, நைல் , காங்கோ என்ப் பெயர் பெறுகின்றது. மீண்டும் அது கடலை அடைந்தபின் அதனைக் கங்கை என்றோ காவிரியென்றோ காங்கோ என்றோ பிரித்துக் காணமுடியாது. அந்தப் பிரித்துக் காண முடியாத் அத்துவத்தை வேத ஆகமங்கள் போதிக்கின்றன எனச் சைவ சித்தாந்தம் கூறுகின்றது. இம்மாநிலத்தில் இப்பெயர்களோடு கூடிய ஆறுகளின் பயன்பாடுதான் நமக்கு வெளிப்படையாகத் தெரிகின்றது. கடலிலிருந்து மொண்டு கொண்டு வந்த நீர்தான் மழையாகவும் பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆறுகளாகவும் காணப்படுகின்றன என்று உணர்ந்து கொள்ளும் வரக்கும் நீங்கள் கூறும் ஆச்சாரியபக்தியும் சமய ஒழுக்கத்தில் பிறழாத உறுதிப்பாடும் கட்டாயம் வேண்டும்.

    மேலும் நாராயணன் முதலிய சிறப்புப் பெயர்களும் காரனப் பெயராயும், ஆகுபெயராயும் சிவபெருமானையே உணர்த்தி நிற்கும் எனவும் எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர் என்பதே வேதத்தின் துணிபு என்பது சுவேதாச்சுவதரோப உபநிடதத்தில் கூறப்பட்டதென்பதும் திராவிட மாபாடியத்தில் நான் படித்து அறிந்த உண்மை. எனவெ வியாபக நிஷ்களமான பரம்பொருளை நீங்கள் நாரயணன் என்ற பெரில் உங்கள் ஆச்சாரியர் காட்டிய வழி யில் வழிபட்டாலும் அது சிவவழிபாடே என்று நான் கொள்வதால் உங்கள் கொள்கையில் நான் குறுக்கிடவில்லை

  35. //சைவ‌மும் வேத‌ ஆதார‌மான‌துதான், தொன்மையான‌துதான். சிவ‌பெருமானே ப‌ர‌மேஸ்வ‌ர‌ன் என்று கூற‌ வேத‌மேற்கோள்க‌ளும், பாஷ்ய‌ங்க‌ளும் ப‌ல‌ உள்ள‌ன‌. உதார‌ண‌த்துக்கு இந்த‌ நிர‌லியைப்ப‌ருங்க‌ள். ஹ‌ர‌த‌த்த‌ர் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ஸ்ருதி ஸுக்தி மாலை என்ற நூல் இதிலேயே உள்ள‌து. இந்த‌‌ நூலைப்ப‌டியுங்க‌ள். ச‌ம‌ஸ்கிருத‌ம் ஆனாலும், த‌மிழில் த‌ட்ட‌ச்சு செய்து, த‌மிழ் உரையை வார்த்தைக்கு வார்த்தை கொடுத்திருக்கிறார்க‌ள். எந்த‌ இடைச்செருக‌லும், உருவ‌லும் இந்த‌ நூலிலிருந்து செய்ய‌முடியாது. இதே தளத்தில் அப்பய்ய தீக்ஷிதரின் நூல்களும் உள்ளன.//

    உமாசங்கர் அய்யா, எனக்கு சிவாசாரியார்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும், நீங்கள் தந்த லிங்கை படித்துப் பார்கிறேன்…

    //நான் வெகு எளிய‌வ‌ன். முனைவ‌ரைப்போலோ, ஜ‌டாயு அவ்ர்க‌ளைப்போலோ ஆழ்ந்த‌க‌ன்ற‌ அறிவின‌ன் அல்ல‌ன். இது த‌விர, “இந்த‌ப் பெருங்க‌ட‌லையே” நாம் தாண்டுவோமா என்னும் அள‌வுக்கு இங்கே வாத‌ம் ந‌ட‌க்கிற‌து, நீங்க‌ள் பிறவிப்பெருங்க‌‌ட‌லைப் ப‌ற்றிஎல்லாம் யோசிக்கிறீர்க‌ள்! (அதெல்லாம் சரி, க‌ட‌லை போடும் வ‌ய‌தில்கூட‌ இப்போதெல்லாம் பிற‌விப்பெருங்க‌ட‌லைப்ப‌ற்றி யோசிக்கிறார்க‌ள் என்ப‌து ம‌கிழ்வே)//

    என்னைவிட வயதில் சிறிய கிறித்தவர்கள் விவிலியத்தை நன்றாக படித்திருக்கிறார்கள். எந்த அத்யாயத்திளிருந்தும் மேற்கோள் காட்டுகிறார்கள். அதேபோல, என்னைவிட வயதில் சிறிய முகமதியர்கள் குரானை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களை அனைவரும் சாதாரண மனிதராகத் தான் பார்கின்றனர். ஆனால், நான் நமதுமத நூல்களைப் பற்றி ஏதாவதுப் பேசினால், கீதையிலிருந்து ஒரு முக்கியமான ஸ்லோகத்தைசொன்னால்கூட எனது நண்பர்கள்:- “என்னடா, சாமியாரப்போல பேசறே?” என்கிறார்கள். பாவம், சாமியார்களுக்கு எவ்வளவு தெரியும் என்று இவர்களுக்குத் தெரியாது. இன்று தனது மதத்தைப் பற்றி தனக்கே தெரியாத ஒரே மதத்தினர் இந்துக்களே. காரணம், தாமஸ் மெக்காலே என்ற நயவஞ்சகன் செய்த கொடூரமான மாற்றம். “We want to make Indians into a race that is Indian in blood and colour, but English in taste, in morals, in opinion and in intellect” என்ற அந்த பாவியின் சொற்களைத் தான் இன்று பெரும்பாலான இந்து இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அடியேனும் அப்படித் தான் இருந்தேன்… இந்த மெக்காலே கல்வி முறை இந்தியர்களை எப்படி சீர்குலைத்திருக்கிறது? நடுரோட்டில் கதாநாயகனும் கதாநாயகியும் உதடோடு உதடு சேர்த்துக் கொள்ளும் காட்சிகள் திரைப்படங்களில் வந்துகொண்டே இருக்கின்றன.. அதையே, மக்களும் பின்பற்றுகிறார்கள்! காம உணர்ச்சியை நான் தவறென்று சொல்லவில்லை. நான் அதை வென்றவனுமில்லை. உலகிலேயே, காமத்திற்கு ஒரு புத்தகம் (sex guide) அளித்த முதல் பாரம்பரியம் நமதுதான்! சிவபெருமான் காம சாஸ்திரத்தை பார்வதி தேவிக்கு உபதேசிக்கும்போது, வெளியில் அமர்ந்திருந்த நந்திஎம்பெருமானின் காதில் விழுந்ததைதான் அவர் காம சூத்திரமாக எழுதினர் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் எந்த தவறும் சொல்லமுடியாது. ஏனெனில் கணவன் மனைவிக்குள் நடப்பது பவித்திரமானது! தெய்வீகமானது!! ஆனால், அதை நாலுபேர் பார்பதுபோல கேமரா முன்பு படம்பிடித்து நாலாயிரம்பேர் பார்க்குமாறு செய்பவர்களை என்னவென்று சொல்லமுடியும்?

    இன்று நமது மதத்தின் பெருமைகளை இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். “நூறு இளைஞர்களைக் கொடுங்கள், இந்த நாட்டையே திருத்திக் காட்டுகிறேன்” என்று சுவாமி விவேகானந்தர் கூறும்போது நான் இருந்தேனா என்று தெரியாது. என்னால் முடிந்தது, கற்ற சிலவற்றை என் வயதினரிடமும், என்னைவிட சிரியவர்களிடமும் சொல்கிறேன். மேற்கத்திய நாடுகள் நம்மைவிட நமது மதத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். அயல் நாட்டிற்குச் சென்று நமது மதத்தின் வெவ்வேறு சம்பிரதாயங்களைப் பற்றியும், பவுத்த சமண மதங்களைப் பற்றியும் ஆராய்ந்து doctorate பட்டம் வென்று நமது நாட்டில் ஒரு ஆராச்சி அமைப்பு/கல்லூரி அமைக்கவேண்டும் என்பதுதான் எனது லட்சியம். ஆனால், இறைவன் மனது வைப்பானா என்று தெரியவில்லை!

  36. முனைவர் அய்யா அவர்களுக்கு,
    எனக்கு சைவ சித்தாந்தம் பற்றி சில ஆயங்கள் உண்டு. நீங்கள் விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்:-

    1. வியாக்ரபாதர் என்பவர் யார்?

    2. மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஏன் இந்த மூவர் அறுபத்துமூவர் பட்டியலிலில்லை? நாயன்மார்கள் தவிர வேறு யாரையெல்லாம் ஆசாரியர்கள் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது?
    அருணகிரிநாதர், வள்ளலார், அவ்வையார் இவர்களும் சைவ சித்தந்திகளா?

    3. சித்தர்களும் சைவ சித்தாந்தத்தில் போற்றப் படுகிறார்களா?

    4. கடைசியாக, சென்னையில் சைவ சித்தாந்த மடங்கள் ஏதாவது உண்டா? உண்டென்றால், எங்கு உள்ளன என்று சற்று சொல்லுகிறீர்களா? நான் இதுவரை வாசித்ததில்லை. உங்கள் கட்டுரைகளை படித்தபின்னர், சைவ சித்தாந்த மடங்களை தரிசிக்கவேண்டும் என்று ஆவலாக உள்ளது.

    நன்றி!

  37. முனைவர் அய்யா,

    வணக்கங்கள்.

    //
    எனவெ வியாபக நிஷ்களமான பரம்பொருளை நீங்கள் நாரயணன் என்ற பெரில் உங்கள் ஆச்சாரியர் காட்டிய வழி யில் வழிபட்டாலும் அது சிவவழிபாடே என்று நான் கொள்வதால் உங்கள் கொள்கையில் நான் குறுக்கிடவில்லை
    //

    மிக்க நன்று. எனது சித்தாந்தத்திலும், பிற தெய்வ வழிபாட்டினால் நரகமோ, அல்லது பாபமோ உண்டாகும் என்று சொல்வதில்லை. சைவ ஆகமங்களை நான் பின்பற்றாவிட்டாலும், அவையும் ஓரளவுக்கு வேதத்தை ஒட்டியே இருக்கிறது என்று இராமானுஜர் எழுதியுள்ளார். ஆகையால் நானும் குறுக்கிடுவதில்லை. சிவனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களை வேத மந்த்ரங்கள் (ருத்ரம், சமகம்) முதலியன வழியாகவும், சைவாகம, திருமுறை முதலியவற்றாலும், சிவபெருமானை நன்கு வழிபடட்டும் என்றே கோருகிறேன். எனக்குத் தெரிந்த வரையில் ஆதாரங்களுக்கும் பிரத்தியட்ச-அனுமானத்திற்கும் முரணாக ஒருவர் சொன்னால் மட்டும் அதற்கு மறுப்பு எழுதுகிறேன். அதுவும் bookshed battle தான், bloodshed battle அல்ல. வைணவப் பெரியவர் ஒருவர் “திருமாலே நமக்குக் கணவர் போல. அதற்காக மற்றவர்களின் கணவர்களை இகழ வேண்டாம். ஆகையால், மற்ற தெய்வங்களையும், ஹிந்துக்களையும் புண்படுத்தாதீர்.” என்றே கூறியுள்ளார்.

    நன்றி.

    கந்தர்வன்

    (edited and published)

  38. If author wants to be provacative, then me with my liitle knowldge can counter it simply.
    If i remember it right,Krishna says in Gita: Whoever /whichever God you worship does not matter, all the prayers eventually come to me only.
    As far as I can see,ONLY Bhagavath Gita is the original source, spoken by the Lord Himself.
    All other quoates here are all secondry sources only.
    So I pray to ALL Hindu Gods. I know my prayers will only go to Paramathma.

  39. திரு பாலாஜி
    /1. வியாக்ரபாதர் என்பவர் யார்?|/

    இவருடைய வரலாறு உமாபதிசிவம் அருளிய கோவிற்புரானத்தில் உள்ளது. மத்தியந்த முனிவரின் மைந்தரான இவர் பதஞ்சலி முனிவருடன் தில்லையில் தவம் புரியும் பொழுது வைகறையில் துயிலுணர்ந்து வழிபாட்டுக்காகச் சோலையில் உயர்ந்த மரங்களின் கோட்டுப் பூக்களைக் கொய்ய மரங்களில் ஏறுவார். பனி, மழைப்பருவங்களில் மரத்டினின்றும் கால்கள் வழுவாதிருக்கவும் இருளில் குற்றமற்ற மலர்களைக் கான்வும் புலியின் கால்களையும் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களைப் பெற்றதால் இவர் வியாக்கிரபாதர் என்னும் பெய்ர் பெற்றார். வியாக்கிரம் என்றால் புலி என்று பெயர். இவர் வழிபட்டதால் தில்லை புலியூர் என்னும் பெயர் பெற்றது. வேறு சில புலியூர்களும் உள்ளன. அவ்வுர்களினின்ரும் பிரித்தறிய தில்லை பெரும்பற்றப்புலியூர் என அழைக்கப்படலாயிற்று.

    //2. மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஏன் இந்த மூவர் அறுபத்துமூவர் பட்டியலிலில்லை? நாயன்மார்கள் தவிர வேறு யாரையெல்லாம் ஆசாரியர்கள் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது?//

    தேவாரம் பாடிய மூவரில் காலத்தால் பிந்தியவர் நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திசுவாமிகள். அவர் திருவாரூரில் அருளிய திருத்தொண்டத்தொகைதான் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்திற்கு அடிப்படை. அவர் மண்ணுலகில் வந்து தோன்றுமாறு இறைவன் செய்ததே இந்தத் திருத்தொண்டத்தொகையை உலகிற்கு அளிக்கத்தான் எனச் சேக்கிழார் பாடுகின்றார். இந்தத் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள தனி அடியார்களின் வரலாற்றைத் தாம் அறிந்த அளவில் சுருக்கமாக் நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலாகப் பாடினார். இந்தநூல் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இதன் விரிநூல்தான் சேக்கிழார் அருளிய பெரிய புராணம். திருத்தொண்டத்தொகையில் மணிவாசகர் இடம்பெறததால் அவர் வரலாறு பெரியபுராணத்தில் பாடப் பெறவில்லை. இதேகாரணம் சுந்தரர் கால்த்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறபட்ட ந்ம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோர் 63 நாய்ன்மார் பட்டியலில் இடம்பெறாமைக்குப் பொருந்தும்.
    //அருணகிரிநாதர், வள்ளலார், அவ்வையார் இவர்களும் சைவ சித்தந்திகளா?//
    அவ்வையார் எனப் பெயரிய பல புலவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் விநாயகர் அகவல் அருளிய அவ்வையார் உறுதியாக சைவசித்தாந்தி. அருணகிரியார் தத்துவ அடிப்படையில் சைவசித்தாந்தி. அவர் வழிபட்ட மூர்த்தி முருகன். ஞானசம்பந்தரை மானசீக குருவாகக் கொண்ட அவர், ‘புகலியில் வித்தகரைப் போல அமிர்தகவித் தொடை பாட” ஆற்றல் வேண்டிப் பெற்றார். திருவைந்தெழுத்தின் பெருமையைப் பல்பாடல்களில் அருளியுள்ளார். திருமாலை முருகனுக்கு மாமன் எனவும் மன்மதனை முருகனுக்கு மைத்துனன் என்றும் பாடும் சமரச பாவம் உடையவ்ர்.

    வள்ளலாரும் கொள்கை வேறுபாடு உடைய சைவசித்தாந்தியே.
    /சித்தர்களும் சைவ சித்தாந்தத்தில் போற்றப் படுகிறார்களா?/
    சிவபெருமானே ஒரு சித்தன். திருவிளையாடற் புராணத்தில் சிவன் சித்தராக வந்த திருவிளையாடல் பேசப்படுகின்ற்து. தருமையாதீன முதற்குரு குருநமச்சிவாயர், குகைநமச்சிவாயர், துறையூர் சிவப்பிரகாசர் முதலிய சைவஞானியர் சித்தர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுடைய கொள்கைக்கும் பதினெண்சித்தர் என்போரில் சிலர் கொள்கைகளுக்கும் வேறுபாடு உண்டு. பொதுவாக வைதிக சைவம் சித்தர் எனப்படுவோரின் மரபை ஏற்ருக் கொள்வதில்லை.

    எனக்குச் சைவ ஆதீனங்களுடன் தொடர்பில்லை. சென்னையில் தியாகராய நகரில் தருமபுர ஆதீன சைவசமய பிரச்சார நிலையம் உள்ளது என அறிகின்றேன். இப்பொழுது தருமை ஆதீனத் தலைவராக உள்லவர், இப்பொறுப்புக்கு வருமுன்னர் இந்த நிலையத்திலிருந்து தொண்டாற்றினாரென அறிவேன்.
    மிக்க மகிழ்ச்சி

  40. முனைவர் அய்யா அவர்களுக்கு,

    மிகவும் பொறுமையாக விளக்கம் அளித்ததற்கு நன்றி!

  41. அய்யா ஹிந்து சமய பெரியோர்களே நான் மிக சிறு பிரயமுள்ளவன் ஹிந்து எனும் மஹா சமுத்திரத்தில் என்னை சிறு தூசியாக உணர்கிறேன் துரதிஷ்டமாக சில நாட்களுக்கு முன்பு தான் இத்தளத்தை பார்வையிட நேர்ந்தது . இப்போதுதான் ஹிந்து மதத்தை பற்றி அறிய முடிகிறது பிற மதங்களின் இடயுருகளையும் உணர முடிந்தது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி அப்போதே தோன்றியது நம் ஹிந்து மதம் . பல நூற்றாண்டுகளாக பல்வேறுபட்ட மததர்கழலும் இனத்தர்களாலும் சிதைக்கப்பட்டது நம் மதம் ஆனாலும் சிவனருளாலும் நம் கோட்பாடுகளாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று ஓங்கி தளைத்து வளர்ந்தது நம் சமயம் அதை அற்ப கிறிஸ்துவர்களோ முஸ்லிம்களோ சிறிதும் அசைத்து விட முடியாது . என்னை போன்ற இளைஞர்களை வழிகாட்ட யாரும் இல்லாததால் நம் மதத்தின் மகத்துவத்தை அறிய முடியாமல் போய் விடுகிறது எங்களுக்கு தேவை விவேகானந்தர் போன்ற மேதைகள்
    பணிவுடன் சிவா
    ஓம் நமசிவாய நம

  42. திரு முறை தரும் அறிவை சிவஞானம் – எனலாமா?
    இவற்றை அப்படியே, சிலர் மனம் ஏற்பதில்லை. பல மூலர் கேட்கும் சந்தேகங்கள் சமீப கால விஞ்ஞானம் சுலபமாக விளக்கும். அது மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகளும் பயன் படும்.

    ருத்திரன் பிரமன், மால் எல்லாம ஒருவரே என்றால், அது எப்படி என்பவர்கள் உண்டு.
    சின்ன ஊருக்குப் போனால், அங்கே ஒரு ஓட்டல் இருக்கும். கல்லாவில் உள்ள முதலாளி பயனாளியைக் கண்டவுடன் வரவேற்று, இலை ஒன்றை இட்டு, உண்ண என்னவெல்லாம் தயார் என்று சொல்லி என்ன வேண்டும் என்று கேட்டு , சர்வராகிறார். அவரே, அடுக்களையில் புகுந்து உணவு தயார் செய்யும் போது ஸ்மையல் காரராகிறார். பின்னர் சர்வராக ஒரு உருவெடுத்து, பில் கொடுத்து வசூல் செய்து காஷியராகி, மேசையை சுத்தம் செய்து பணியாளராகி, பின்னர் முதலாளியாக மாறி மோட்டுவளையைப் பார்த்து அமர்கிறார்.

    இப்படி, கம்ப்யூட்டர் முதலானவற்றிலிருந்தும் பல உதாரணங்கள் உள்ளன.

    அணுவுக்குள் சென்று ஏழேழு உலகம் கண்ட ஞானியார்?

    இந்தப் பாடல் எங்கோ படித்தது. மனதில் நிறுவிட்டது… ராமலிங்க அடிகளா? தேடினேன் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

    கிட்டத்தட்ட பிரமன் இருக்கும்மிடம், அவரைக்கண்டு கைகுலுக்குவது எப்படி என்று ஒருமாதிரியாக கண்டு கொண்டேன்.

    நடராஜன்
    https://science-of-good-living.blogspot.in/

    இது குறித்த ஆராய்ச்சி விளக்கத்திற்காக, இந்தப் பாடலை தேடுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *