அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் நான்முகப் பிரமனும், விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. இதன் தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மொத்தம் நான்கு சிவராத்திரிகள் உள்ளன என்று கந்த புராணம் கூறுகிறது.

முதலாவதாகச் சொல்லப்படுவது  நித்ய சிவராத்திரி.

இது தினந்தோறும் பகல் மடங்கியபின், உயிர்களை உறங்கவைக்கும் இரவாக வருவது. ஒவ்வொரு இரவும் சிவனது ராத்திரிதான்.

முத்தொழில் செய்யும் மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம் பிரமனது தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும் நேரம். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரம்.

இதன் அடிப்படையில்தான் நாளைப் பகுத்துள்ளனர் பெரியோர். விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை (1 மணி = 1 ஓரை = 2 1/2 நாழிகைகள்) உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல், மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.

மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உணவும் உடலில் ஒட்டும் நேரம் இது.

இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.

நம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சமும் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. நாம் அறியாத நிலையில் உள்ளே சலனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கே தான் மஹா சிவராத்திரியின்  முக்கியத்துவம் வருகிறது. அது என்ன என்று பார்ப்பதற்குமுன், மற்ற மூன்று சிவராத்திரிகளைப் பார்ப்போம்.

இரண்டாவது சிவராத்திரி மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளிர்ந்த சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.

மூன்றாவது சிவராத்திரி வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது.

அது முடிந்த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும்.

இந்த மகா சிவராத்திரி முடிந்த மறுநாள் கலியுகம் ஆரம்பித்த நாள். ஒரு அழிவைத் தொடந்து இன்னொரு ஆக்கம் வரும் என்று காட்டுவது இது. ஆயினும், பிறப்பது கலியுகம் என்பதால், அழிவிலிருந்து உண்டாகும் ஆக்கம் சுமாரான ஒன்றாகத் தானே இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி வரும்போது, சுமாரான காலம்- அது அழிந்தாலும், அதனிலிருந்து உருவாவது ஏனோ தானோ என்றுதானே இருக்கும்? சிறந்த ஒன்று உருவாக வேண்டுமென்றால், ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் அழித்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்தால்தானே உண்டு?

இதுதான் அடி முடி காணா சிவராத்திரியின் போது நிகழ்ந்து, ஒரு புது சுழற்சி உண்டாக ஏதுவாகிறது. இதைப் புரிந்து கொள்ள வேதம் கூறும் பிரபஞ்ச நிலையை– A Vedic Model of Creation-ஐத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேதம் கூறும் பிரபஞ்ச அறிவியல்

இன்றைய அறிவியலார் Big Bang என்னும் வெடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்கின்றனர். சமீபத்திய ஆராய்ச்சிகள் இந்த ஊகம் தவறென்றும், மாறாக, படைப்பு என்பது நுண்ணிய அணுக்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும் காட்டுகின்றன. வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள் அறிவியலார் இன்னும் விரிந்த சிந்தையை அடையவில்லை என்று தெரிகிறது.

அப்படி என்ன விரிந்த சிந்தனையை வேதம் காட்டுகிறது என்றால், இதோ சில முக்கியக் கருத்துக்கள்.

1) நாம் இருக்கும் இந்த அண்டவெளி மட்டுமல்ல, கோடானு கோடி அண்டவெளிகள், பலப் பல உலகங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.

2) நமக்கு மேலும் கீழும் நமக்கு அப்பாலும் நம்மை அப்பால் கொண்டும் பிரபஞ்சங்கள் இருக்கின்றன.

3) அவை எல்லாம் பிரம்மன் என்றும் ஹிரண்யகர்பன் என்றும் சொல்லபடும் அந்த முழுமுதல் இறைவனின் கர்ப்பத்தில் உள்ளன.

4) கணக்கிட இயலாதவையாக அவை உள்ளன.

5) இந்த உலகங்கள் என்று ஆரம்பித்தன என்றும் தெரியாத, சொல்ல முடியாத ஆதியும் இல்லாமல், அந்தமும் இல்லாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கின்றன.

6) புருஷ சூக்தம் கூறும் குறிப்பிடத்தக்க அமைப்பு, கவனிக்கத் தக்கது. இறைவனே படைத்து, எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தாலும், தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்றதான விண்ணில் இருக்கிறது. பரம்பொருளின் முக்கால் பங்கு மேலே விளங்குகிறது. எஞ்சிய கால் பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது என்று 3, 4 -ஆம் ஸ்லோகங்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்தால், அது சக்கர வடிவுடையதாக இருக்க வேண்டும். இதற்கும் பிரமாணம் உள்ளது. ச்வேதாஸ்வதர உபநிஷதத்தில், இந்தப் பிரபஞ்சம் பிரம்மச் சக்கரமாக உள்ளது என்று விவரிக்கப்படுகின்றது. இதன் பலவித பாகங்களும் விவரிக்கப்பட்டு, இதில், கர்மம் என்னும் பாசக் கயிற்றில் கட்டப்பட்டு ஜீவன் சுழன்று வருகிறான். மீண்டும் மீண்டும் சுழலுகையில், பிரம்ம ஸ்வரூபத்தைப் புரிந்துகொண்டு, இந்தச் சக்கரத்தில் சுழலச் செய்யும் பிறவிப் பிணியிலிருந்து முடிவில் விடுபடுகிறான்.

ஆக, உலகங்களையும், பால்வெளி போன்ற கலாக்சிகளையும் தன்னகத்தே கொண்ட பிரபஞ்சம் சுழலும் சக்கர வடிவினதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பில்தான், ஆதியும் இருக்காது, அந்தமும் இருக்காது. சக்கர அமைப்பில்தான் எங்கே தோன்றியது, எங்கே முடிந்தது என்று சொல்ல முடியாமல் இருக்கும். கணக்கிலடங்காத பல சக்கரங்கள் ஒன்றுக்கு அப்பால் ஒன்றென infinity அளவில் இருக்க முடியும். ஒன்றுக்கு மேலும், அல்லது கீழும் என்றும், Concurrent circles- ஆக முடிவில்லாமல், கணக்கில்லாமல் ஒன்றை அடுத்து ஒன்றாகவும் இருக்க முடியும்.

கால நேமி என்று உபநிஷத் சொல்லும் இந்த அமைப்பில் தோற்றம் என்னும் நிலையில் கால் பங்கு உள்ளன. முக்கால் பங்கு என்றுமே தோன்றாதவை.

இந்த அமைப்பில் உலகங்கள் நுண் அணுத் துகள்களாக unmanifest எனப்படும் வெளிப்பாடு இல்லாத முக்கால் பகுதியில் சுற்றி வரும். தோற்றம் இருக்கும் கால் பகுதியுள் நுழையும்போது ஸ்ட்ரிங் தியரி (String theory) போல, தெரியா நிலையிலிருந்து, தெரிநிலைக்கு, அதாவது manifest நிலைக்கு மாறி தோற்றம் அல்லது படைப்பு என்னும் பகுதிக்குள் விரையும்.

அப்படிப்பட்ட அமைப்பு நடராஜரின் தாண்டவக் கோலத்தில் காணப்படுகிறது!

chakraநடராஜர் உருவ அமைப்பு, நாட்டியத்திலும், சிற்ப சாத்திரத்திலும் சில குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டது. ஒரு வட்ட வடிவத்தினுள், இரண்டு முக்கோணங்களை மேலும், கீழுமாக உள்ளடக்கியது.

இந்தப் படம் சுதர்சனச் சக்கரமும் தான்!

நடராஜர் உருவத்தை இந்த அமைப்புக்குள்தான் வடிவமைப்பர். சுதர்சனரும் யோகா நரசிம்ஹரும் இணைந்த உருவமும் இந்த அமைப்புக்குள்தான் அடங்கும்.

nataraja-in-chakra-form

நடராஜரைக் கவனித்தால், ஒரு அரிய காஸ்மிக் அமைப்பு புலனாகும். அவரது மேல் இரண்டு கைகளிலும், ஒன்றில் உடுக்கையும், மற்றொன்றில் அக்கினியும் வைத்திருப்பார். இந்த இரண்டு கைகளையும், அவரது நாபியுடன் இணைத்து, கோடுகளாக நீட்டினால், அவை சக்கரத்தை 90 பாகைகளிலான 4 சம கூறுகளாகப் பிரிக்கும். இங்குதான் வேத மதம் கூறும் Theory of Creation- பிரபஞ்சத்தின் அமைப்பு காணப்படுகிறது.

nataraja-theory-of-creation-1

வலக் கை உடுக்கையிலிருந்து, இடக் கை அக்கினி வரை இருப்பது ‘தோன்றும் பிரபஞ்சம்’ (எ) ‘the visible part of Creation’. அக்கினியிலிருந்து, உடுக்கை வரை unmanifest பிரபஞ்சம் (–) the invisible part of Creation. அதன் மையப்பகுதி அந்தகாரம் என்னும் அதி இருட்டு. அது, அசுரனை மிதித்து அடக்குவதாகக் காட்டப்படுகிறது.

நடராஜர் தன் இடது காலை வீசி உயர்த்திய வீச்சு காட்டும் பகுதி முதல், தோற்றத்திற்குத் தயாராகிற – இன்னும் உருவம் கொள்ளாத பிரபஞ்சத் துகள்கள் இடித்தும், வெடித்தும் அழிவின் மூலம், ஆக்கம் நோக்கிப் பாயும் பிரபஞ்சப் பகுதியைக் காட்டுகிறது.

nataraja-theory-of-creation-2

அந்தப் பகுதியில், மற்ற இரு கைகளின் முத்திரைகளும், Force- அதற்குப் போட்டியான Anti-Force தத்துவங்களாக சிவா- பார்வதி போட்டியைக் காட்டுகின்றன. உடுக்கை அடிக்கும் கைப் பகுதியை நெருங்க நெருங்க, ஊர்த்துவ முகமான, மேல் நோக்கிய கை செல்லும் பாதையைக் காட்ட, ஓம்கார நாதத்திலிருந்து உலகங்கள் பிறக்கின்றன.

nataraja-theory-of-creation-3

மேல் காட்டிய படத்தில் உடுக்கை முதல், மறுகையில் உள்ள அக்கினி வரை, இருக்கும் பகுதி சக்கரத்தின் கால் பகுதி. இதுவே புருஷ சூக்தம் கூறும் மீண்டும் மீண்டும் தோன்றி வரும் கால் பங்கு பிரபஞ்சம். இந்தப் படத்தில், உடுக்கைப் பகுதியில், படைப்புக் கடவுளான நான்முகப் பிரமனின் வேலை தொடங்குகிறது. இங்கே சிவனுக்கு வேலை இல்லை. மேலும் கீழும், எல்லை இல்லாத இந்தப் பகுதியில், பல பிரமன்கள் பல்வேறு பிரபஞ்சங்களில் படைப்புக்கு ஆதாரமாக விளங்குகின்றார். இங்கே சிவனும் தென்படுவதில்லை. விஷ்ணுவும் தென்படுவதில்லை.

படைப்பு தொடங்கியவுடன், அது விஷ்ணு பதம் ஆகிறது. உடுக்கைப் பகுதி முதல், அக்கினிப் பகுதி வரை, விஷ்ணுவின் காக்கும் பகுதியும், காலமும் ஆகும். இது பிரமனின் ஆயுளில் 100 வருடங்கள். (31104000,00,00,000 மனித வருடங்கள்) நாம் இன்று இருப்பது பிரமனின் ஆயுளில் 50 வருடங்கள் தாண்டி, முதல் நாள் மத்தியானம். அதாவது, நடராஜரது தலை உச்சி காட்டும் பகுதியில் நாம் இப்பொழுது இருக்கிறோம். இன்னும் பாதி காலம் தாண்டினால் இந்தப் பிரபஞ்சம், அக்கினிப் பகுதியைச் சென்றடையும்.

படைத்து, காத்த இந்தப் பிரபஞ்சம், முழு அழிவைச் சந்திக்கும் இடம் அது. அங்கே பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் வேலை இல்லை. மேலும், கீழும் பார்த்தாலும், எல்லை இல்லாத அக்கினிப் பிழம்பாக இருக்கும் அதுதான் மகா சிவராத்திரி. அது தான் அடி முடி காண இயலா அதிசயம் நிகழும் இந்தப் பிரபஞ்சத்தின், அதன் தோற்றத்தின் முடிவு நாள்.

nataraja-theory-of-creation-4

தோற்றம் உள்ள பிரபஞ்சத்திலிருந்து, தோன்றவியலாத முக்கால் பங்கு பிரபஞ்சத்திற்கு உலகங்கள் விரையும்போது, சிவபெருமானின் பிரளய அக்கினியில் உலகங்கள் எல்லாம் அழிகின்றன. இந்தப் பகுதியில், குறுக்குவாட்டிலும், நெடுக்குவாட்டிலும் அக்கினிதான் உள்ளது. ஒரு சுவராக, ஒரு மா மலையாக இந்த Exit- zone-இல் சிவபெருமான் அக்கினி ரூபத்தில் நிற்கிறார். அதுதான் அடி முடி காண இயலா உருவம். அது நடந்தது அல்லது நடக்கப்போவது மாசி மாத தேய்பிறை சதுர்தசியில். அதுவே மகா சிவராத்திரி எனப்படுவது.

மகா சிவராத்திரியின் முக்கியக் கதை, அழிவிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுமாறு பார்வதி வேண்டிகொண்டது. கால் பங்கு தோற்ற வெளியில், பிரமனின் 100 ஆண்டு காலமும், உயிர்கள் கர்ம வினையில் பிணைபட்டு உழன்று விட்டன. இப்பொழுதோ ‘ஆட்டம் க்ளோஸ்’ என்று சிவபெருமான் தாண்டவம் ஆடுகிறார். அப்படி என்றால், இன்னும் முக்கால் பங்கு பிரபஞ்சமும், அதாவது பிரமனின் வயதுக் கணக்கில் 300 வருடங்களும் உயிர்கள் பிணைபட்டுக் கிடக்க வேண்டுமா? அவற்றுக்கு விடிவு கிடையாதா என்று பார்வதி வேண்டிக்கொள்ளவே ‘கடைசி சான்ஸ்’ என்று மகா சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படவே, சிவபெருமான் உயிர்களுக்கு விடிவு கொடுக்கிறார்.

அந்தகாரமான இருளிலும், அழிவிலும் கூட நடராஜரது ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவரது பலம் வெளித்தெரியும் சிவராத்திரியில், பக்தர்களும், அந்தச் சலனத்தை மேற்கொண்டு, கண்விழித்து அவரைத் தியானிக்கிறார்கள். அந்தத் தியானம் கடவுள்களுள் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக அல்லது தெரிந்து கொண்டதற்காக அல்ல. பிரளயாக்கினியிலிருந்து தப்ப, அதைத் தரும் சிவபெருமானை வேண்டி விடுதலை பெறவே, அடி முடி காண இயலாத இறைவனாக வழிபடுகின்றனர் .

இந்தத் தாத்பரியத்தின் ஒரு அடிப்படைதான், நான்முகப் பிரமனுக்குக் கோவில் இல்லாமல் இருப்பது (சில இடங்களில் விதிவிலக்காக இருக்கின்றன.) பிரமனின் ‘கெம்பா’ (எ) உடுக்கை காட்டும் படைப்பின் ஆரம்ப இடம். பிரமனிலிருந்துதான் மற்ற கடவுள்கள் தோன்றுகின்றனர். அவர்கள் தத்தமது செய்யல்பாடுகளாக படைப்பை மேலும் எடுத்துச் செல்கின்றனர். அதனால் தோற்றம் உள்ள கால் பகுதியில் பிரமனைக் காண இயலாது. அங்கே பிரமனுக்குக் கோயில் கிடையாது. மாறாக, எல்லாக் கோயில்களிலும், வருடாந்திர பிரம்மோத்சவத்தின் போது, பிரமன்தான் அங்கு உற்சவத்தை நடத்திச் செல்பவராக முதலில் இருக்கிறார். அதுதான் பிரம்மோத்சவத்தின் பெயர்க் காரணமும் ஆகும்.

படைப்பு என்று உயிர்கள் கால் பதித்தவுடன், அங்கு தானும் கால் பதிப்பவர் விஷ்ணு. பிரமனின் 100 வயது காலமும், ஓடி ஆடி, அவதாரங்கள் பல எடுத்து, உயிர்களைக் காத்து, வழிப்படுத்தி என்று, ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ வேலை விஷ்ணுவுக்கு.

மேலே காட்டிய படங்களில், ஒவ்வொரு சுற்றும், ஒரு குறிப்பிட்ட பௌதிக விதிகளுக்குட்பட்ட பிரபஞ்சம். இதைப் போல், கணக்கிடமுடியாத பல பிரபஞ்சங்களும் அதனதன் விதிகளுக்கு உட்பட்டு கால் பங்கு தோற்றமாகவும், முக்கால் பங்கு தோற்றம் இல்லாத சஞ்சரிப்பாகவும் உள்ளன. எந்நேரமும் கால் பங்கு பகுதியில் நுழைவும், நீங்குதலும் நடந்து கொண்டே இருக்கின்றன. எந்நேரமும் புதிது புதிதாக பிரமன்கள் தோன்றிப் படைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். விஷ்ணுவும், சிவனும் தொழில் செய்துகொண்டே இருக்கின்றார்கள். எல்லா பிரமன்களுக்கும் ஆயுள் 100 தான். சக்கரத்தின் அச்சின் அருகில் உள்ள பிரபஞ்சத்தில் வேகம் அதிகம். சீக்கிரமே 100 வயது ஆயுள் முடிந்து விடும். ஆனால் ஆயுள் 100 என்பதற்கு ஏற்றார்போல் நாள், வருடக் கணக்குகள் அங்கே இருக்கும்.

இவை எல்லாமே சக்கர வடிவான அமைப்பில் சௌக்கியமாக இருக்கின்றன. ‘சௌக்கியமாக’ என்று ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், வாஸ்து சாத்திரப்படி, 16 வித நில அல்லது கட்டமைப்புகளுள், ‘விருத்தாகாரம்’ என்னும் வட்ட வடிவ அமைப்பு சிறந்தது. பாதுகாப்பனது. அது மட்டுமல்ல, அறிவு ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுவது. கல்விச் சாலைகளும், ஆன்மிகம் போதிக்கும் மடங்களும் வட்ட வடிவில் இருப்பது சிறந்தது.

சக்கரத்தாழ்வாராக இந்த அமைப்பு இருப்பதால்தான், அவரது பாதுகாப்பில் பிரபஞ்சமே சுழன்று கொண்டிருக்கிறது.

chakkaraththaalwar-and-yoga-narasmihar

இந்த பிரம்மாணடமான சக்கரத்தில், யோக நரசிம்ஹரும் யோகத்தில் ஆழ்ந்து, சக்கரத்துடனேயே, பயணிக்கிறார். பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து, எல்லாப் பொருள்களிலும் உள்ளிலிருந்து கடையும் கடவுளாக, யோகேஸ்வரனாக இருக்கிறார்.

இவை எல்லாம் நாராயணன் என்னும் பரப் பிரம்மத்தின் கருவில் உள்ளன என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன. நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். கால் பகுதியின் படைப்புக் கடவுளான பிரமனை நான்முகப் பிரமன் என்பர். நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பிக்கவே அவருக்கு நான்கு முகங்களும், இந்தப் பெயரும் ஏற்பட்டன.

ஆனால் பிரபஞ்சத்தையே தன் கருவாகக் கொண்ட பிரம்மம், முழு முதல் பிரம்மம். பிரம்மம் என்றால் பெரியது என்றும், விரிந்துகொண்டே இருப்பது என்றும் பொருள். அந்த பிரம்மமே அனைத்து உலகிலும், மூன்று மூர்த்திகள் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களிலும் வியாபித்துள்ளார்.

அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் இருக்கும் என்பதற்கு ஏற்றார்போல இந்த அண்டம் சார்ந்த கடவுள் நிலைகளை, நம் மனித உடலிலும் காணலாம். நம் உடலெங்கும் பல பாகங்கள் பல வேலைகளைச் செய்கின்றன. கண் பார்க்கிறது, காது கேட்கிறது, உள் உறுப்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம், கழிவு நீக்குதல், என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன- ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு வேலைக்கு அதிபதிகளாக இயங்குவதைப் போல.

இந்த உறுப்புகளுக்கெல்லாம் அதிபதி மூளை. மூளையின் செயல்பாடே இவ்வுறுப்புகள் மூலம் நடைபெறுகிறது- முழு முதல் பிரம்மன், மற்ற கடவுள்கள் மூலம் இயக்குவதைப் போல.

நம் உடல் முழுவதும், உயிர் வியாபித்துள்ளது- நாராயணன் எங்கும் வியாபித்து இருப்பதைப் போல.

ஜடப் பொருளிலும் அவன் வியாபித்துள்ளான். இதைப் புரிந்துகொள்ள, நடராஜ தத்துவம் தெரிய வேண்டும். தோற்றம் இல்லா முக்கால் பங்கு பிரபஞ்சத்திலும் நடராஜரது நடன அசைவு உள்ளது போல, ஜடப் பொருளிலும் அவற்றின் அணுவுக்குள் இருக்கும் அசைவாக நாராயணன் வியாபித்துள்ளான்.

நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.

சக்கரம் போன்ற நம் உடலிலும், ஒரு உறுப்புக்கும் மற்றொரு உறுப்புக்கும் போட்டி கிடையாது, பொறாமை கிடையாது. கண், ஒலியைக் கேட்காது, காது, காட்சிகளைப் பார்க்காது. அவை அவை தத்தம் செயல்களை ஆற்றுகின்றன. ஆனால் நாம் எப்பொழுதுமே மூளையை நினைவில் கொள்வதில்லை. உறுப்புகளின் செயல்பாடுகள் மூலமாக மூளையின் முக்கியத்துவத்தை அறிகிறோம். மூளையைப் போல அந்தப் பரம்பொருள் இருக்கிறான். அவன் இருக்கிறான், அவனே நம் குறிக்கோள் என்று புரிந்து கொள்ள, நம் உடல் உறுப்புகள் போல பல கடவுளர்களும் உதவுகின்றனர்.

அக்கடவுளர்களுக்குள் போட்டி என்றோ, சண்டை என்றோ கதைகள் வழங்கி வந்தால், சிறிய குழந்தைகள் போல வெளிப் பார்வைக்குத் தெரியும் கதையை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ உள்ளர்த்தம் இருக்க வேண்டும் என்று தேட வேண்டும். அப்படி நம்மைத் தேடச் செய்வதற்குத் தான் அப்படிப்பட்ட கதைகள் எழுந்துள்ளன. தேடினால் தான் கிடைக்கும், சு-தர்சனம்- இறைவனின் சிறந்த தரிசனம்.

64 Replies to “அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்”

 1. //தோற்றம் உள்ள பிரபஞ்சத்திலிருந்து, தோன்றவியலாத முக்கால் பங்கு பிரபஞ்சத்திற்கு உலகங்கள் விரையும்போது,//

  நிபுணர்கள் நம் கேலக்ஸிக்கல் ஏதோ ஒரு இடத்தை நோக்கி அதிவேகமாக பிரயாணித்துக் கொண்டே இருக்கிறது என்றே கூறுகின்றனர். ப்ளாக் ஹோல் என்று பெயரிட்ட இடத்தை அடையும் போது கிரஹங்கள் அனைத்தும் மிகப்பெரிய தீப்பிழம்பாகி பின் கருமை நிறம் அடைந்து காணாமல் போவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆக நிபுணர்கள் உயிரைக் கொடுத்து ஆராய்ச்சி செய்வதெல்லாம் இந்து தர்ம வழிபாட்டு முறைகளின் அர்தங்களிலேயே புதைந்திருக்கின்றது தெளிவாகிறது. அவற்றைப் புரிந்து கொள்வதே நமது கடமையாகும்.

  ///வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள் அறிவியலார் இன்னும் விரிந்த சிந்தையை அடையவில்லை என்று தெரிகிறது.///

  உண்மை.

  நன்றி
  ஜெயஸ்ரீ அவர்களே.

 2. ஒரு யுகம் என்றால் எத்தைனை வருடம்? கலியுகம் இன்னும் எத்தைனை வருடங்கள் போகும் என்று சொல்வீர்களா ஜெயஸ்ரீ அவர்களே! அறிந்து கொள்ள ஆசை.

  நன்றாக விளக்குகிறீர்கள். தொடருங்கள்.
  நன்றி.

 3. அப்ப்ப்பப்ப்ப்ப்பாடா………………. என்ன சொல்ல! போகப்போக தெரியும்…. ஓடிப்போனானா பாரதி அடுத்து புத்தகமாக ………………..

 4. // இன்றைய அறிவியலார் Big Bang என்னும் வெடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்கின்றனர். சமீபத்திய ஆராய்ச்சிகள் இந்த ஊகம் தவறென்றும், மாறாக, படைப்பு என்பது நுண்ணிய அணுக்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும் காட்டுகின்றன. வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள் அறிவியலார் இன்னும் விரிந்த சிந்தையை அடையவில்லை என்று தெரிகிறது. //

  கண்களைத் தெளிவிக்கும் அற்புதமான விஞ்ஞான மார்க்க நம்பிக்கை சார்ந்த கட்டுரைக்கு நன்றி..நன்றி..நன்றிகள் பல..!

  இறை நம்பிக்கையினை வளர்க்கும் இதுபோன்ற பல்வேறு ஆராய்ச்சிகள் முடிவுகள் இன்னும் வரட்டும்;
  பொய்மை ஒழிந்து வாய்மை வெல்லட்டும்..!
  அல்லவை தேய்ந்து அறம் பெருகட்டும்..!!

 5. Respected Madam

  Thanks for your writing. Please keep writing more on many subjects.

  regards

 6. //ஒரு யுகம் என்றால் எத்தைனை வருடம்? கலியுகம் இன்னும் எத்தைனை வருடங்கள் போகும் என்று சொல்வீர்களா ஜெயஸ்ரீ அவர்களே! அறிந்து கொள்ள ஆசை//

  கண்டிப்பாக எழுதுகிறேன். வேத மதத்தைப் பின்பற்றிய தமிழர் வரலாறு பற்றி சொல்லுவதற்கு முதல் படி, காலக் கணக்குதான். செம்பு காலம், வெண்கல காலம், இரும்பு காலம் என்பதெல்லாம் வெளிநாட்டவர்களுக்குத்தான். நமக்கு அவையெல்லாம் வினாடிப் பொழுதுகள் போல. கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இருக்கும், தமிழ் மற்றும் வேத கலாசாரத்தை மன்வந்திர மற்றும் யுக அடிப்படையிலேதான் சொல்ல முடியும். அதிலும் இந்த யுகம என்பது குறித்து தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே ஆணித்தரமான் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதில் ஆரம்பித்து, தமிழ் ஹிந்துவின் பெருமையைச் சொல்ல வேண்டும். இதைச் செய்யும் கருவியாக தெய்வம் என்னை செலுத்தினால், திறம்படச் செய்வேன் என்று நம்புகிறேன்.

  நிற்க, இந்தக் கட்டுரையிலேயே, சில முக்கிய விஷயங்கள் சொல்ல இருக்கின்றன. மூலக் கருத்தை விட்டு வெளியே போகக் கூடாது என்ற காரணத்தால், இதனுடம் தொடர்பு கொண்ட பிற விஷயங்களைக் கட்டுரையில் சொல்லாமல், மறு மொழியாகச் சொல்லலாம் என்று இருந்தேன். கேள்வி கேளுங்கள். இரண்டு முக்கிய விஷயங்களும், இன்றைய பிரபஞ்ச அறிவியலை, இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துடன் எப்படி இணைப்பது (synchronise) என்பதும் இன்னும் சொல்லப்பட வேண்டும்.

 7. இந்து மதம் என்பது அறிவியலை உள்ளடக்கியது என்பதை
  தகுந்த முறையில் ஆக்கம் செய்தமைக்கு வாழ்த்துகிறேன் நண்பரே

  தொடரட்டும் உங்கள் பணி..

 8. Excellent Jayashree madam. Thanks for such a wonderful article. Keep writing more and educate people like me.

  Thanks to Tamilhindu for the wonderful service you are doing.

 9. அன்புள்ள ஜெயஸ்ரீஜி,

  இப்போது தான் நிதானமாக இந்தக் கட்டுரையைப் படிக்கிறேன். Tao of physics ஐயும், Carl Sagaon ஐயும் சிவராத்திரியையும், சுதர்சன தத்துவத்தையும் ஒரே இழையில் அருமையாகக் கோத்து அளித்திருக்கிறீர்கள்.

  சுதர்சன சக்கரத்தில் உள்ள ஜோதி வலயம் (திருவாட்சியை) பலமுறை தரிசித்திருக்கிறேன். ஆனால் நடராஜரைச் சுற்றியிருக்கும் திருவாட்சியுடன் அதை இணைத்துக் காணத் தோன்றவில்லை. சுதர்சன வழிபாடு என்பது லௌகீகமாக ரட்சைக்காக செய்யப் படுவது என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதன்பின் எப்பேர்ப் பட்ட பிரபஞ்ச தரிசனம் இருக்கிறது என்று இந்தக் கட்டுரை விளக்கி விட்டது.

  இந்துக் கண்ணோட்டத்தில் காலம் என்பது பிரம்மாண்டமானதாகவும், சுழற்சியாகவும் கூறப் படுகிறது. யுகங்கள் போன்ற பெரிய பெரிய எண்கள் அதையே உணர்த்துகின்றன என்று நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் (மார்க்சியர், இந்து விரோத நிலைப்பாடு கொண்டவர்) மேற்கத்திய உலகின் நேர்கோடான காலமுறை (linear time) தான் அறிவுபூர்வமானது, இந்துக்கள் காலத்தை சுழற்சி முறையில் கணக்கிட்டது பாமரத் தனமானது, அதனால் தான் இந்துக்களுக்கு வரலாற்று உணர்வு இல்லாமல் போய்விட்டது என்றும் கருத்து தெரிவித்திருந்ததாகப் படித்தேன்.. இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை விளக்க முடியுமா? விரிவாக எழுதவேண்டுமென்றால் தனிக் கட்டுரையாகவே கூட எழுதுங்கள்.

  அன்புடன்,
  ஜடாயு

 10. S.Raman

  தங்களது கட்டுரை வெகு நன்றாக உள்ளது. மகிழ்ச்சி.
  ஸ்ரீ அருணாச்சல மகாத்மியத்தில் வரும் வெண்பா இது:

  “ஆதி அருணாச்சலப் பேரற்புத லிங்கத்துருக் கொள்
  ஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் – சோதி எழும்
  ஈசனை மால் முன்னம் அரர் ஏத்திவழி பட்ட நாள்
  மாசி சிவராத்திரியாம் அற்று”

  மார்கழி திருவாதிரை அன்று எழும் சோதியின் வெப்பம் தாங்காது திருமால் முதல் கொண்டு தேவர்கள் வழி பட அதுவே மலையாய் குளிர்ந்து மாசி சிவராத்திரியன்று அருணாச்சல லிங்கம் ஆயிற்று, என்பதுவே இதன் வெளிப்படைப் பொருள். இதன் உட்கருத்தாக மார்கழி திருவாதிரை சம்பந்தப்பட்ட நடராஜராகிய (ஓயாது ஆடி ஓடி உழைக்கும்) “சலம்” என்று மாசி சிவராத்திரி சம்பந்தப்பட்ட (அமைதியான) அருணாசலமாக “அசலம்” ஆகுதோ அதுதான் முக்தி எனக் கொள்ளலாமோ? அல்லது சலம் – அசலம் இரண்டையும் வெவ்வேறாகப் பார்க்காது இரண்டிலும் இருக்கும் இறைவனை உணர்வதே முக்தி எனவும் கொள்ளலாமோ?

 11. திரு ராமன்,

  இந்த பிரபஞ்ச படைப்பியலில், முக்தி பற்றிய விஷயத்தை நான் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

  அதை படித்துவிட்டு, அவரவர் தங்கள் வழக்கப்படி பின்பற்றும் கடவுள் கொள்கைகளுக்கு, in the frame work of a Grand Design of God – விளக்கம் காணலாம்.

 12. நன்றி திரு ஜடாயு.

  Thanks for your suggestion.
  It is a waste of time listening to or reading what the likes of Ms Thapar does and countering them.
  You can not change those who refuse to change.
  Instead let me concentrate on what Hinduism says.
  There is a lot more that our people must know.
  First task is to clear the confusion on how to understand the existence of the many Gods and how to view the gods other than the one who is dear to us.
  I think I can devote my time and thoughts on this.

 13. Brilliant Maam,

  Yes I do understand that we need to SCIENTIFICALLY talk about Hinduism and you are doing brilliant job. I always feel Hinduism and the seers have gone beyond Science ( Science I mean Knowledge that can be attained through Karmendriyam, Manas and Intellect). I do not think our seers would have attained the knowledge of “Time is relative” as Science has arrived very late. Their mode ( I feel ) should be very different.

  Regards
  S Baskar

 14. Jatayu,

  is it not Einstein way back proved Time and Space are curved rather than linear. In one of his thought experiment the cause is seen after the effect..

  We should not waste time on romillas

  Regards
  S Baskar

 15. //பிரமனின் ‘கெம்பா’ (எ) உடுக்கை காட்டும் படைப்பின் ஆரம்ப இடம். பிரமனிலிருந்துதான் மற்ற கடவுள்கள் தோன்றுகின்றனர். அவர்கள் தத்தமது செய்யல்பாடுகளாக படைப்பை மேலும் எடுத்துச் செல்கின்றனர். அதனால் தோற்றம் உள்ள கால் பகுதியில் பிரமனைக் காண இயலாது. அங்கே பிரமனுக்குக் கோயில் கிடையாது. மாறாக, எல்லாக் கோயில்களிலும், வருடாந்திர பிரம்மோத்சவத்தின் போது, பிரமன்தான் அங்கு உற்சவத்தை நடத்திச் செல்பவராக முதலில் இருக்கிறார். அதுதான் பிரம்மோத்சவத்தின் பெயர்க் காரணமும் ஆகும்.//

  தெளிவான விளக்கம். காலை வேளையில் அற்புத தரிசனமும் கூட. சுதர்சனமும், நரசிம்மரும் இணைந்த யோகமுறையை, நடராஜரின் தாண்டவத்தோடு ஒப்பிட்டது பற்றிய விளக்கமும் அற்புதமாய் இருக்கிறது.

 16. Thanks for everyone who have recorded their comments.

  Some of my thoughts on what Mr S.Baskar has said:-

  * This Vedic religion is perfect science and everything that it speaks can be explained in scientific language. By science we also mean that it must be subject to test and must be repeatable. All that can be done with every facet you come to understand of Vedism.

  * It is because the athman is Vigyaana mayan which is the penultimate state that one passes before realising Brahman of the nature of Ananda mayan. It is also because That Supreme Being who is equated with Gyaana is housed in the Athman. Through Him we realise Him!! It is this Gyaana which is in the nature of Bhakthi – bhakthi because you are over-awed at what you understand through this gyaana – is the state of Realizing Brahman.

  *There is only one thing that can not be explained by science or intelligence. That is the ultimate experience of Realization of Brahman Himself.
  Let me explain it this way.

  It is established in Taittriya passages that the Soul is capable of possessing knowledge (by virtue of Brahman having entered it as an Intelligent Being) and using it for realization of the Brahman but it is found wanting in achieving its goal (of describing Realisation of Brahman) because ‘yatho vaacho nivarthanthe’. (Without being able to attain Him, speech returns with the mind).

  The following is what I request the readers to ponder over.
  From the above verse of Taittriya upanishad, one inference can be made.
  When does a thing, sent to reach another thing, return?
  When it strikes it but unable to go further, it is returned back to its source.
  This is the principle of echo.

  If it be said that speech and mind are returned without attaining Him, does it not imply that the Intelligent soul, the Vigyana mayan though capable of knowing him till his boundary level (if something like that exists) but can not go further because if it goes further that amounts to Liberation from where it would not return to tell us what had happened?
  (kandavar vindilar, vindavar kandilar).

  But until that threshold level, the Soul’s speech and mind keep doing the shuttle and re-shuttle trips.
  If this logic is accepted as plausible, then we say that the Soul’s urge to employ whatever means of Knowledge that it has at its disposal is justified because it is only too natural for that Soul and it is almost possible to go almost near the Supreme Brahman.

  It is like this.
  We can understand the meaning of every word of Sage Bhrigu’s version of his search for Brahman in the 3rd chapter in Taittriya upanishad.
  We can also recite his words with full knowledge of the meanings but only until he says ‘ha vu, ha , vu, ha, vu’.
  What he experienced when he screamed in Bliss, these words can not be understood by us nor can it be measured by any instrument.
  But until he reached that level we are able to follow his mind.

  This is similar to establish scientifically what kind of satisfaction that a mother experiences when she rushes to the crying baby, lifts it and feeds it.
  We do have instruments to measure every type of activity in her brain at that moment of experience but no instrument to measure the real satisfaction that is something special to her.

  By this it is being stated that science and other branches of knowledge are capable of going farther than we believe but shorter than the real experience of Brahman. This is due to the upanishadic injunction of the shred of difference between vigyana mayan and ananda mayan whereby it is held that Intelligence can not explain Bliss (ananda).

  In my limited knowledge of science I can think of only one comparison with Realization of Brahman. The status of Liberation is something akin to osmosis.

  * Sri Baskar said
  //I do not think our seers would have attained the knowledge of “Time is relative” as Science has arrived very late. Their mode ( I feel ) should be very different.//

  Their mode is also discernible from Vedic Vigyana.
  The seers realized “Maha kaala” (The stationary Time which we can visualise as the Chakra with Nataraja imposed on it – explained in this article – to show how the 3 and 5 states of Time and Space occur in the Grand design of Time and Space.)
  This is possible only when you escape from the ‘Kaala krama” (Relartive time) which is happening inside the Chakra.

  When viewed from outside the system – you can see this with a bird’s eye and say what is what and where it happens.

  When you are part of the system and within the system, you can see only the time and space at that place.

  Your consciousness must expand to see the Whole and the parts in the Whole.
  Vedism gives ready-made knowledge of how to do this.

 17. On linear time and Ms Thapar’s poor understanding of Vedic cosmology, she has overlooked the concept of escape velocity! I read that Voyager which left the Solar system is on the come back trail!!

  She has also forgotten Cause and effect theory.

  When a cause begets an effect, it also means the effect will beget another effect for which it becomes the cause. This puts them in a cycle of no beginning and no end. Such a model will not be linear but circular or elliptical or what ever else that can be similar to them.

 18. அருமை ஜெயஸ்ரீ!

  படிக்க படிக்க யோசிக்க வைக்கும் பதிவு. தொடருங்கள் உங்கள் ஆன்மீக-அறிவியல் பணியை..

  அன்புடன்
  திவாகர்

 19. நன்றி திரு திவாகர் அவர்களே,

  ஒரு கேள்வி,
  தாங்கள் ‘திருமலைத் திருடன்’ தந்த திவாகரா?

 20. என்ன ஒரு அருமையானக் கட்டுரை..!!!!!!!!!
  அனைவரும் படித்து அறிய வேண்டிய ஒன்று..

  ஆசிருயருக்கு நன்றிகள்..

  திருச்சிற்றம்பலம்..

 21. திரு ஜெயஸ்ரீ அவர்களே …
  கட்டுரை நன்றாக இருந்தது …
  படித்தவுடன் எனக்கு ஒரு கேள்வி ஒரு எண்ணம் தோன்றியது …

  கேள்வி:
  சிவன், பிரம்மா என்று அதிகம் அலசப்பட்டு இருக்கிறது. ஆனால் விஷ்ணு அவ்வளவாக அலசப்படவில்லை … பிரம்மாவிற்கு நான்முகம் கருத்து அருமை … நான் அறிந்த செய்திகளில் இருந்து பார்க்கையில் சிவனும் விழுனுவும் இரு கடவுளர் .. காத்தல் , அழித்தல் இவர்களது தொழில் .. இதில் பிரப்பென்பதும் விஷ்ணுவிடம் வந்ததால் .. சிவனும் விஷ்ணுவும் இணைந்து உருவாக்கிய ஒருவர் தான் பிரம்மா என்று கூறினார்கள். இதனால் தான் பிரம்மாவிற்கு கோவில்கள் இல்லை என்றும் ஒரு கருத்து …

  எண்ணம்:
  உங்கள் கருத்து முழுவதும் ஒரு ஆன்மீகவாதியின் கருத்தாகவே உள்ளது. உங்களது விமர்சனங்களில் மிஸ் தாபர் அவர்களின் கருத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு கூட ஒத்துக்கொள்ளாமல் இருப்பதும், அவர் ஹிந்து மதத்திற்கு எதிரே நிற்கிறார் என்ற ஒரே காரணத்தினாலும், அவரது கருத்துக்களை உதாசினப்படுத்தி, அவரது கருத்துக்களை கேட்பதே நேரக்கொடுமை என்று சொல்கிறீர்கள்.
  இதை நான் இரு கண்ணோட்டத்தில் பார்கிறேன்.
  1 ) எனது கருத்தை ஒத்துக்கொள்ள முடியாவிட்டால் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்ற பெருமிதப்பு.
  2 ) நீ ஒரு நாத்திகவாதி , உனக்கு இது புரியாது என்ற ஏளனம்.

  எனக்கு உங்களைப்பத்தியும் தெரியாது அந்த மிஸ்.தாபர் பற்றியும் எதுவும் தெரியாது.

  ஆனால் உங்களது கட்டுரை மற்றும் உங்களது விமர்சனங்கள் இப்படி ஒரு தாக்கத்தைத்தான் எனக்கு ஏற்ப்படுத்தியது.

  நீங்கள் கண்மூடித்தனமாக ஒரு கடவுளை நம்பிக்கொண்டு அந்த நம்பிக்கை தான் சரி என்று முடிவெடுத்துக்கொண்டு, அந்த நம்பிக்கையை நியாப்படுத்த காரணங்கள் தேடும் ஒரு சராசரி ஆன்மீகவாதி போலவே புலப்படுகிறீர்கள் !

  எனது வேண்டுகோள் :
  இப்படி ஒரு கட்டுரையை ஒரு பகுத்தரிவாளறது பார்வையில் இருந்து பார்க்க / படிக்க விரும்புகிறேன்.
  பகுத்தறிவாளன் என்று இங்கு நான் கூறியது, இரு எல்லைகளுக்கு மத்தியில் சிந்திக்கும் ஒரு திறன் உடையவன் என்று .
  உங்களது கருத்திற்கு ஆமாம் சாமி என்று தலையாட்ட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது எல்லா கருத்திற்கும் பொருந்தும்.
  ஆனால் உங்களது கருத்தை அதற்க்கு மாற்றுக்கருத்து அல்லது நேரெதிரான கருத்து உள்ளவர்களிடம் உரையாடிபாருங்கள். உங்களது கருத்தைப்பற்றி உங்களுக்கே தெரியாத சில விசயங்களை அவர் சொல்லகூடும். முடிவு எடுப்பது உங்களது சுதந்திரம்…

  (“there is always 2 sides for a coin, please don’t take ‘a’ side. rather, try to be the value of the coin” – i dont know whether these English lines are told by somebody before in this world, but it just came out of my mind after typing all those tamil lines above.)

 22. திரு அரவிந்த் அவர்களே,
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

  //கேள்வி:
  சிவன், பிரம்மா என்று அதிகம் அலசப்பட்டு இருக்கிறது. ஆனால் விஷ்ணு அவ்வளவாக அலசப்படவில்லை …//

  இனி வரப்போகும் கட்டுரைகளில் – இரண்டு இடங்களில் மட்டுமே – ஹிந்து வாசகர்கள் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படிப்பட்ட இரண்டு இடங்களில் மட்டுமே, விஷ்ணுவைப் பற்றி எழுதலாம் என்று இருந்தேன்.
  இப்படி நான் சொல்வதால், நான் ஏதோ பெரிய அறிவு ஜீவி மாதிரி பேசிக்கொண்டு, என் நம்பிக்கையை நிலை நாட்டத் தேவையானதை மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்றும் நீங்களும், மற்றவர்களும் சொல்லலாம்.

  என்னைப் பொறுத்த வரை, ஒரு விஷயத்தை அப்படியே சொல்லிவிட முடியாது. படிப்படியாக ஒவ்வொரு நிலையாகச் சொல்லி, தெளிவு படுத்தி, அதன் பிறகுதான் மேற்கொண்டு செல்ல முடியும். (ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்குச் செல்வதற்கு ஒருவருக்கு பல பிறவிகள் கூட ஆகலாம்!!).
  அது மட்டுமல்லாமல், இந்து மதத்தைப் பற்றி தற்காலக் கட்டத்தில் இருக்கும் அபிபிராயங்கள், நம்பிக்கைகள் – அவற்றில் எந்த அளவு இந்து மதத்தின் சாராம்சம் உள்ளது என்ற அடிப்படையிலும், இடம், காலத்திற்குத் தேவையானவற்றை இந்தத் தளத்தில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

  அதுவும் ஆசிரியர் குழுவின் விருப்பம் இருந்தால் தான் எழுத வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. இப்படி சொல்லிவிட்டுத்த்தான் இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த தளத்தின் குறிக்கோள் என்ன, அதன் அடிப்படையில் எவற்றைப் பிரசுரிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு சில reservations இருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு வரும் பட்சத்தில், தொடர்ந்து எழுத விருப்பமில்லை.

  ******
  //பிரம்மாவிற்கு நான்முகம் கருத்து அருமை//

  இது முன்னோர் கருத்து. இதுவரை நான் எழுதிய எதுவுமே என் சொந்தக் கருத்து கிடையாது. எல்லாமே மூல நூல்களில் உள்ளவை அல்லது ஆச்சார்யா புருஷர்கள் சொன்னவையே. இன்றைய கண்ணோட்டத்தின் படி showcase செய்கிறேன். அவ்வளவுதான்.

  *****

  //நான் அறிந்த செய்திகளில் இருந்து பார்க்கையில் சிவனும் விழுனுவும் இரு கடவுளர் .. காத்தல் , அழித்தல் இவர்களது தொழில் .. இதில் பிரப்பென்பதும் விஷ்ணுவிடம் வந்ததால் .. சிவனும் விஷ்ணுவும் இணைந்து உருவாக்கிய ஒருவர் தான் பிரம்மா என்று கூறினார்கள். இதனால் தான் பிரம்மாவிற்கு கோவில்கள் இல்லை என்றும் ஒரு கருத்து …//

  இது ஆதார கருத்து அல்ல.
  எந்த தெய்வமாக இருந்தாலும், வருடாந்திர உத்சவம், பிரம்மோத்சவம் என்று வருவதில் புதைத்துள்ள கருத்தே நான் எழுதியது.

  (Cont’d)

 23. திரு அரவிந்த் அவர்களே,

  //எண்ணம்:
  உங்கள் கருத்து முழுவதும் ஒரு ஆன்மீகவாதியின் கருத்தாகவே உள்ளது. //

  பதில்- 1:-
  இந்தத் தளம் ஆன்மீகக் கருத்துக்களை தருவது என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

  பதில்-2 –

  ஆன்மீகவாதி என்று என்னை சொல்லிக் கொள்ள மாட்டேன். எனக்கு ஆன்மீக வாதி என்றால் யார் என்று தெரியாது. அதைப் போன்ற வார்த்தைகள், இந்நாளைய வார்த்தைகள்.
  தெய்வத்தை நாடுபவர்கள் நான்கு வகையானவர்கள். அந்த நான்கு வகைகளுக்குள் நான் வருகிறேன். கீதையில் கிருஷ்ணர் சொன்ன அந்த நான்கு வகைகளை அடுத்த கட்டுரையில் கொடுத்துள்ளேன். நீங்கள் சொல்லும் ஆன்மீகவாதி இந்த நான்கு பிரிவுகளுக்குள் வருகிறாரா?

  அந்த நான்கு பிரிவுகளுக்குள் தெய்வத்தை வழிபடுகிறவர்கள் அடங்கி விடுகிறார்கள். அவற்றுக்குள் வராதவர்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தொலைத்தவனும், எங்கே என்று தெரியாதவனும் தேடுவான்.

  நீங்கள் சொன்னீர்களே, “உங்களது கருத்திற்கு ஆமாம் சாமி என்று தலையாட்ட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.” என்று..
  இந்த நான்கு பிரிவுக்குள் வருபவர்கள் – தெய்வம் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பி அவனை வழிபடுகிறவர்கள் – அவன் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் வழிபடுகிறவர்கள் – ஒரு குழந்தை தன் தகப்பனிடம் கேட்டால் அவன் நிச்சயமாக் செய்து கொடுப்பான் என்று கேட்பதைப் போல துளியும் சந்தேஹம் இல்லாமல் அவனை வழிபடுகிறவர்கள், கேட்கிறவர்கள் – அவர்களால் ஆமாம் சாமி போட முடியும்.

  அந்த நான்கு வகைகளில் நான் மூன்றாவது வகையான ஜின்ஞாசு வகைக்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றேன் என்பது என்னைப் பற்றிய எனது எண்ணம்..
  மூன்றாவது நிலையில் நின்று நான் பேசுவதால், என் பேச்சு – நீங்கள் சொல்வது உட்பட பல எண்ணங்களை, தாக்கங்களை உண்டாக்கலாம். புரியாமலும் போகலாம்.

  ******

  ///நீங்கள் கண்மூடித்தனமாக ஒரு கடவுளை நம்பிக்கொண்டு அந்த நம்பிக்கை தான் சரி என்று முடிவெடுத்துக்கொண்டு, அந்த நம்பிக்கையை நியாப்படுத்த காரணங்கள் தேடும் ஒரு சராசரி ஆன்மீகவாதி போலவே புலப்படுகிறீர்கள் !

  எனது வேண்டுகோள் :
  இப்படி ஒரு கட்டுரையை ஒரு பகுத்தரிவாளறது பார்வையில் இருந்து பார்க்க / படிக்க விரும்புகிறேன்.
  பகுத்தறிவாளன் என்று இங்கு நான் கூறியது, இரு எல்லைகளுக்கு மத்தியில் சிந்திக்கும் ஒரு திறன் உடையவன் என்று .
  உங்களது கருத்திற்கு ஆமாம் சாமி என்று தலையாட்ட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது எல்லா கருத்திற்கும் பொருந்தும்.
  ஆனால் உங்களது கருத்தை அதற்க்கு மாற்றுக்கருத்து அல்லது நேரெதிரான கருத்து உள்ளவர்களிடம் உரையாடிபாருங்கள். உங்களது கருத்தைப்பற்றி உங்களுக்கே தெரியாத சில விசயங்களை அவர் சொல்லகூடும். முடிவு எடுப்பது உங்களது சுதந்திரம்…///

  * இப்படி நீங்கள் சொல்வதன் மூலம் நீங்கள் அந்த நான்கு வகைக்குள் வரவில்லை என்று தெரிகிறது. உங்களைக் convince பண்ண வேண்டும் என்ற அவசியம் எனக்கிலை. அது தெய்வத்தின் வேலை.

  * பகுத்து அறிதலுக்குப் புறம்பாக இந்தக் கட்டுரையில் என்ன உள்ளது என்று சொல்லுங்கள்.

  * மாற்றுக் கருத்து என்று நீங்கள் சொல்வது கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது என்று தெரிகிறது. அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவற்றைப் பேசுபவர்கள் விஷயம் அவர்களுக்கு. அவற்றை செவி மடுக்க என் நேரத்தை செலவிட விருப்பமில்லை.

  *******

  (”there is always 2 sides for a coin, please don’t take ‘a’ side. rather, try to be the value of the coin” – i dont know whether these English lines are told by somebody before in this world, but it just came out of my mind after typing all those tamil lines above.)

  கடவுள் இருக்கிறானா இல்லையா என்பதை, நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது போல என்றால், அதற்கு பதில் நம்மாழ்வாரிலிருந்து:-

  “உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்,
  உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்,
  உளனென இலனென இவை குணம் உடைமையில்
  உளனிரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே.

  இதை நம்மை வைத்தே சொல்லலாம்.
  From star to star dust ஆனது இந்தப் பிரபஞ்சம்.
  இதை நான் இப்பொழுது எழுதும் கணினிப் பலகையும், மேலே சுழலும் மின் விசிறியும், மற்ற பல சௌகரியங்களும் எங்கிருந்து வந்தன? ஒரு காலத்தில் இவை இல்லை. இன்று உருவமும், சக்தியுடனும் இருக்கின்றன. இவை வந்தது இந்த star dust லிருந்துதானே ?

  இவற்றை யார் செய்தது? என்னைப் போன்ற மனிதன் தானே? இவற்றைச் செய்த மனிதனுக்கு – தான் வருவதும் போவதும் அவன் கையில் கிடையாது.

  முன்பு இல்லாமலும், இனி ஒருநாள் இல்லாமல் போகவும் போகிற இந்த ஜெயஸ்ரீயால், இந்த star dust லிருந்து உருவாகி, உருவத்தோடு உலாவி, இந்த star dust லிருந்து உருவான சௌகரியங்களை அனுபவிப்பது சாத்தியம் என்றால், இதைச் செய்தேன், அதைச் செய்வேன் என்று செய்து உலவுவது சாத்தியம் என்றால், இந்தப் பிரபஞ்சத்தின் ஊடே செலுத்தும் – சென்று கொண்டிருக்கும் அந்த சக்தியும், என்று நினைத்தாலும், எப்படி விரும்பினாலும், உருவம் கொண்டு, சக்தி கொண்டு – என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமே?
  அதுதான் நம்மாழ்வார் சொன்ன:-‘உளனிரு தகைமை’

  இதில் என்ன ஆச்சர்யம் என்றால், விண்ணைத் தொட்ட ஆராய்ச்சியாளனும் சரி, அணுவைப் பிளந்த அறிவியலானும் சரி, இந்த சக்தியை – இது நம்மை மீறின, நம்மை இயக்கும் சக்தி என்று உணர்ந்திருக்கின்றனர். அதிக விஞானம், அதிக மெய்ஞானம் கொண்டவர்களுக்கு இது தெய்வம் என்று தெரிகிறது.

  (cont’d)

 24. தாப்பர் பற்றி

  // உங்களது விமர்சனங்களில் மிஸ் தாபர் அவர்களின் கருத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு கூட ஒத்துக்கொள்ளாமல் இருப்பதும், அவர் ஹிந்து மதத்திற்கு எதிரே நிற்கிறார் என்ற ஒரே காரணத்தினாலும், அவரது கருத்துக்களை உதாசினப்படுத்தி, அவரது கருத்துக்களை கேட்பதே நேரக்கொடுமை என்று சொல்கிறீர்கள்.
  இதை நான் இரு கண்ணோட்டத்தில் பார்கிறேன்.
  1 ) எனது கருத்தை ஒத்துக்கொள்ள முடியாவிட்டால் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்ற பெருமிதப்பு.
  2 ) நீ ஒரு நாத்திகவாதி , உனக்கு இது புரியாது என்ற ஏளனம்.

  எனக்கு உங்களைப்பத்தியும் தெரியாது அந்த மிஸ்.தாபர் பற்றியும் எதுவும் தெரியாது.

  ஆனால் உங்களது கட்டுரை மற்றும் உங்களது விமர்சனங்கள் இப்படி ஒரு தாக்கத்தைத்தான் எனக்கு ஏற்ப்படுத்தியது.////

  இந்து மதத்தின் அடிப்படை தெரியாதவர்களுக்கு – விளக்கம் சொல்வது வீண் என்பது என் கருத்து. இதில் என்ன பெருமிதம், ஏளனம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

  தாப்பர் போன்றவர்கள் பேசுவதற்குப் பதில் சொல்ல்வது வீண் என்றதற்குக் காரணம் – அவர்கள் basic assumptions -இத் தொடவில்லை. ஒரு ஆராய்ச்சி என்று எடுத்துகொண்டீர்கள் என்றால், அதைச் செய்ய விதிமுறைகள் உள்ளன. முதல் விதி you must get your axioms right. You must have the right set of assumptions. இவை இல்லாமல் எந்த விஞானியும் ஆராய்ச்சி செய்ய மாட்டான். எந்த மெய்ஞானியும் ஞானத்தைப் பற்றிப் பேச மாட்டான். Basic assumption -எ தவறு என்கையில், அவர்கள் இதைச் சொன்னார்கள், இது எனக்கு ஒப்புமை, அல்லது நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று மேற்கொண்டு எப்படி போக முடியும்?

  ஆரியப் படையெடுப்பு, வேத கால வரையறுப்பு இவை அனைத்தும் தவறான axiom அடிப்படையில் எழுந்தவை. அதனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் கவிழ்ந்து விடும்.

  அந்த axiom :-
  *வரலாற்றை அறிந்து கொள்ள ரிக் வேதத்தை அடிப்படையாக எடுத்தது.
  வரலாற்றை அறிந்து கொள்ள வேதங்கள் அடிப்படை அல்ல. வரலாற்றை புராண, இதிகாசங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
  ரிக் வேதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது, அதனால் ஆரியன் வந்தான், மற்றவர்களை விரட்டினான் என்பதை வேதம் அறிந்தவர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
  வேதம் – ஒதுவதற்குத் தான்.
  வேதம் ஓதுதலின் பயனை, ஒலி அலைகளுக்கே முக்கியத்துவம் என்பதை, போபால் வாயிக் கசிவு சமயத்தில் அக்னி ஹோத்ரா ஹோமம் செய்து ஒரு குடும்பத்தினர் உயிர் தப்பிய காரணத்தை ஆராய்ச்சி செய்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் அறிவர். இப்படி ஒரு பக்கம் வேத ஒலியின் மேன்மை தெரிந்து கொண்டு இருக்கையில், வேதத்தை ஒரு வரலாற்று நூலாகப் பார்பவர்களை யார் சீந்துவார்கள்?

  தாபர் மட்டுமல்ல, அவரைப் போன்ற பலரது கருத்துக்களும் என் inbox -இல் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. எங்கே எந்த ஆராய்ச்சியாளர் அத்தகைய கருத்துக்களை எதிர் கொள்கிறாரோ, அங்கே அவர்களுக்கு, எனக்குத் தெரிந்த ஆதாரங்களைத் தந்து கொண்டிருக்கிறேன்.

  From one of my write-ups to give supportive evidence to a scholar working on ‘stones’ in cremation practices found in saraswathy civilisation to counter the mis interpretations by a foreigner:-

  “It is incorrect to interpret practices and traditions on the basis of Rig Vedas. No one trained in Vedic tradition or Vedic knowledge would ever do that. Vedas are not meant for knowing or learning their meanings and using them for deciphering history (like the concept of the Aryan invasion ) nor for deducing the practices. We have the hierarchy in this. Vedas are mystic hymns capable of invoking Gods. We dont look for quotes or authentication from them. Even the acharyas (shankara or ramanuja) – though they have taken Rig vedas as one of their pramana sastras for writing commentary for Brahma sutras, have quoted sparingly from Rig vedas. Where they have done, that was for establishing some tattwa.. ……

  ……What Vedas convey can be learned from Upanishads. Upanishads are the mouthpiece of Vedas. Vedas are like the clouds that give rains and the Upanishads are like the rain water. Let all those who want to look for Vedic authentication for practices, look for them in Kalpa sutras. They are like the readily available tap water.”

  *****
  Such being the case, it is a phenomenal waste of time and scholarship for nearly 2 centuries by digging into Vedas to substantiate Aryan invasion.

  On cosmology, Vedic wisdom is logical and feasible. Some scientist – thinkers have started conceding that while Ms Thapar is still caught up with outdated thought.

 25. மீண்டும் ஒரு மிகச் சிறந்த ஆன்மிகம்-அறிவியல் இரண்டும் சேர்ந்தப் பதிவு.

 26. ஜெயஸ்ரீ அவர்களே

  இந்த தாபரின் பரமார்த்த சிஷ்யர் frits stall எழுதிய discovering vedas புத்தகத்தை படித்துவிட்டு தான் மேலே முன்னோட்டம் இட்டிருந்தேன் – அவர் புதிதாக ஒன்று சொல்கிறார் – இதெல்லாம் சீனாவிலிருந்து (xinjiang) ஆரம்பித்ததாம் – இப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் – இவர்கள் சீனாவிலிருந்து வந்தார்களாம், ஈரானிலிருந்து வந்தார்களாம் – இந்திய மண்ணை தொட்டவுடன் இவர்களுக்கு ஞானம் வந்துவிட்டது – அவர் சொல்லும்படி பார்த்தல் அவர்கள் இந்தியாவுக்கு வருவதும் ரிக் வேதம் இயற்றப்பட்டது ஒரே காலமாக உள்ளது – இந்தியாவிற்கு வது, இகுள்ள மொழிகளை சன ஏறத்தில் கற்றுக்கொண்டு ஆர்யா இடிய மொழியை உருவாக்கி ஷா என்ரத்தில் கவிகளாகி ரிக் மிக நுட்பமான அறிவை பெற்று திடீர் என்று ரிக் வேதம் இயற்றினார்கள் – இதை எப்படி நிரயம் செய்கிறார்கள் – ரிக் வேதத்தில் 752 தடவை அஸ்வம் எட்று வருகிறது ஆனால் இந்தியாவில் குதிரைகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லையாம் [அதாவது ரிக் வேதம் எபது கிட்டத்தட்ட ஒரு wordsworth poem போல இயற்கை வர்நிக்கிரதி என்பது போல எழுதிகிறார்கள் இந்த கிறுக்கர்கள்]
  இந்தியாவில் ரதமே இல்லையாம் அதும் வெளியிருது வந்ததாம் – எப்படி அப்பா ரத்தை ஒட்டிக்கொண்டு மா மலைகளை கடந்தார்கள் என்று யாரவது கேட்டுவிட போகிறானே என்று அதற்கும் ஒரு சமாளிப்பு அளிக்கிறார் frits stall – அற்புதமான சமாளிப்பு – அதாவது ரதம் பற்றிய அறிவு மட்டுமே நாடு கடந்து வந்ததாம் ரதம் இல்லையாம்

  அக்னிஸ்,அக்னிம், அக்னிக்ப்யஸ் என்பது கிரேக்க ignis, ignem, ignibus என்பதுபோல் இருப்பதனால் சீனவில்ருந்தான் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று முடிவு செய்கிறார் இந்த அறிவு ஜீவி

  இப்படி ஒரு வரலாற்று நூல் என்று சிலர் கொள்ளும் பைதியக்கரதனத்தயும் தாண்டி ரிக் வேதம் ஒரு wordsworth கவிதை என்பது போல இவர் பேசுகிறார்

  யாரவது இப்படி ஒன்றுக்கும் உபகொகம் இல்லாத விஷ்யத்த்தை உயிரை கொடுத்து மனப்பாடம் செய்வார்கள, அதற்காக எல்லா சுகத்தையும் விட்டு விட்டு காட்டிலும் மலையிலும் யாகம் செய்வார்கள – சோறு தண்ணி இல்லாமல் வாடி வதந்குவார்கள – இப்படி எல்லாம் கேட்டால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் – புதிதாக ஏதாவது ஆராய்ச்சி செய்து புதிதாக காரணம் சொல்வார்கள் – சீனாவில் இருந்ந்து இல்லை அண்டார்டிக்கா குளிர் தாங்காமல் எல்லோரும் இந்திய வந்ததார்கள் என்று அடுத்து ஓர் பெரிய ஆராச்சி கண்டுபிடிப்பு வரப்போகிறது – அதுக்கப்புறம் ஆர்டிக் – இப்படி சுத்திக்கொண்டே இருப்பார்கள்

 27. நன்றி சாரங் அவர்களே.

  சீனா என்றவுடன் போகர் ஞாபகத்திற்கு வருகிறார். வேதக் கருத்தைக் கற்ற சீனர் அவர் ஒருவர் தான். ‘போகர் 7000’ மூலம் அவர் த்ருனதுமாக்னி (தொல்காப்பியர்), அகத்தியர், தேரையார் ஆகியோர் வாழ்ந்த காலத்தில், கடல் கொண்டுவிட்ட கபாட புரத்தில் இருந்தது தெரிகிறது. இதற்கெல்லாம் எழுத்து பூர்வமாக ஆதாரம் இருக்கிறது. ஆனால் அந்த மேதைகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நம்ம ஊர் தமிழ்க் காவலர்களும் வாயைத் திறக்க மாட்டார்கள். வாயைத் திறந்தால், தமிழும், சமக்ருதமும் கூடிக் குலாவி இருந்த தமிழ் நாட்டை வெளிக் காட்ட வேண்டியிருக்கும். அப்படி காட்டினால் என்ன தவறு? யாருக்கு நஷ்டம்?
  தமிழுக்கு அல்லவே.

  தமிழ் பேச்சு மொழியாக எங்கணும் இருந்தது என்று உலகுக்குக் காண்பிக்கலாம் அல்லவா? வட வேங்கடம் முதல், குமரி வரை தமிழ் கூறும் நல்லுலகம் என்றது அதற்குப் பிற்பட்ட காலத்தில்தானே? அதற்குமுன் – கபாடபுரம் சங்கத் தலைமையகமாக இருந்த காலத்தில், எங்கணும் தமிழ்தானே இருந்திருக்கின்றது? சீனரான போகர் தமிழில்தான் பேசி எழுதினார்.

  ரோமக சித்தரும் (இவர் பெயரில் சமஸ்க்ருதத்தில் ஜோதிட சித்தாந்தமும் உள்ளது. அதைப் பஞ்ச சித்தந்தங்களில் ஒன்றாக, வராஹா மிஹிரர் எடுத்தாண்டுள்ளார் ), ம்லேச்ச நாடு என்னும் வட மேற்குப் பகுதியிலிருந்து வந்து, தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் பாடல்களில் ம்லேச்சர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. திருவிளையாடல் புராணம் ( பழையது ) நடந்த , கடல் கொண்ட அந்நாள் தமிழகத்தில் அவர் வந்ததாகக் குறிப்பு உள்ளது என்றும் அறிகிறேன்.

  சீனத்துக்கு வருவோம்.
  சமீபத்திய மரபணு ஆராய்ச்சியின் மூலம், சீனா, மலேசியா, சிங்கபூர், ஜப்பான் என்று கோபால் பல்பொடி விளம்பரம் போல எல்லா கிழக்காசிய நாடுகளில் உள்ள மக்களும், இந்தியாவிலிருந்துதான் சென்றவர்கள் என்று தெரிகிறது. தாபரும் அவரது சிஷ்யரும் இதற்கு எப்படி சப்பை கட்டு கட்டப் போகிறார்கள்?

  துக்குணியூண்டு நாடு இந்தியா. அங்கிருந்து எப்படி வேறு வேறு ஜாடையில் மரபணு கிளம்பி போயிருக்க வேண்டும் என்று கேட்பார்கள். அங்கும் நம் தமிழ் இலக்கியம் தான் ஆதாரம் காட்டுகிறதே? கடல் வடிம்பலம் நின்ற பாண்டியன் ஆண்ட நாடு ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா வரை பரவி இருந்ததே? மூன்று ஊழி பார்த்த இடம் கடல் கொண்ட குமரி நாடு. ஆழ்கடல் படத்தை எடுத்துப்பாருங்கள். நம் கிழக்குத் தொடர்ச்சி மலை அதே கோணத்தில் மடகாஸ்கர் வரை செல்கிறது. பன்மலை அடுக்கம் கொண்ட குமரி மலைத் தொடர் என்று தெரிகிறது. அப்படிப் பரந்து இருந்த நாட்டில் இருந்த மக்கள் ஒவ்வொரு ஊழியின் போதும், சிதறி – பரவி ஜப்பான் வரை சென்றிருக்க சாத்தியக் கூறு இருக்கிறதே! அப்படிப் பார்க்கும் பொழுது சீனாவில் வேதம் இருந்தால், அது போன ரூட் இங்கிருந்துதான் என்றாகிறது.

  மரபணு ஆராய்ச்சி சொல்லும் இந்த ஒற்றுமையை, தமிழ் இலக்கியமும் வழி மொழிவது போலக் காட்டும் போது, கடல் கொண்ட குமரியை நாம் முன்னிறுத்த வேண்டும்.
  இதைப் பற்றிய என் கட்டுரையை இங்கே காணலாம்.
  https://jayasreesaranathan.blogspot.com/2009/12/india-as-base-of-asian-populations.html

 28. ஜெயஸ்ரீ அவர்களே,

  தமிழ் இலக்கிய கொட்ப்ட்டிருக்கும் போகரை பற்றிய குறிப்பிற்கும் மிக்க நன்றி

  எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை – இவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு இந்தியாவிற்கு வர வேண்டிய அவசியம் தான் என்ன – இந்த ஆராயிச்சி கூட்டத்தின் கூற்றுப்படி வேத காலத்தில் பித்தளை ஏஜ் கூட இல்லை – நீர் வளம் ஒன்று மட்டும் தான் இருக்க முடியம் – அதற்காக இமயத்தை கடப்பவன் முட்டலாகதான் இருக்கணும் – சீனாவில் இல்லாத நீர் வளமா

  இவர்கள் ரதத்தை பற்றி இன்னொரு பைதிக்கார விளக்கம் தருகின்றனர் – அதாவது இந்தியாவில் spoked wheel இல்லையாம் – full wheel தான் இருந்ததாம் (இதுவரை நொண்டி எடுத்த ஆராய்ச்சியில் full wheel மட்டும் தான் கிடைத்திருக்கிறதாம் – இதக்கு தேரை கட்டுகிறார்கள்)

  இதனால் என்ன முடிவென்றால் – spoked wheel சீனவிளிருந்தான் இங்கு வந்திருக்க வேண்டுமாம் – இந்தியாவிலாவது full wheel கிடைத்தது – அங்கு எங்குமே ஒரு சக்கரமும் கிடைக்கவில்லையே – அப்புறம் எப்படி அது சீனாவிலிருந்து வந்திருக்க வேண்டும் – இப்படியே போனால் இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டு கழித்து – சைக்கிள் சீனவில்ருந்து (spoked wheel) வந்தது – பஸ் இந்தியாவிலிருந்து (full wheel) வந்தது என்பார்களோ?

  இந்தியாவிலிருந்து சென்று வேறு வேறு மரபணு சென்றிருக்க முடியாது – ஆனால் சீன, இரான், மெக்ஸிகோ, கிரேக்கம், செகச்லோவகிய, ரஷ்ய, கம்போடிய, அலாஸ்கா, அண்டார்டிக்கா, இப்படி பல ஊரிலிருந்து (டீ சாப்பிடுவதற்காக) வந்து இந்தியாவில் அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு புது மரபணு கலாசாரம் உண்டு பன்னார்களோ? – அப்படி எல்லா மரபணுவையும் சேர்த்தல் அதிலிருத்து மனிதன் வந்திருக்க மாட்டான் ஒரு விந்தையான காண்ட மிருகம் தான் வந்திருக்கும் – இனியாவிளிருந்து சென்றவரல் தான் அங்கிருக்கும் மக்களுள் கலந்ததன் மூலம் சற்று மாறுபட்ட தோற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்

  தாபர் குழுவினருக்கு இதெல்லாம் ரொம்ப சுலபம் – உண்மையை சொல்ல தான் கஷ்டப்பட வேண்டும் – புதிதாக – இந்த மரபனுக்கேல்லாம் உலா மரபணு அலாஸ்காவில் உள்ள ஒரு மக்களிடேய தான் இருக்கிறது – அவர்கள் பேசும் மொழி அப்படியே அச்சு அசல் சமஸ்க்ரிதம் மாதிரி தான் உள்ளது அங்கும் ஆ, ஆ, இ,ஈ எல்லாம் உள்ளது அதானால் அலச்காவிளிருந்து அவர்கள் ஒரு கட்டையை பிடித்துக்கொண்டு பசிபிக் மஹா கடலை கடந்து ஜப்பான் வந்தார்கள் அங்கிருந்து மொங்கோலியா மக்களுண்டன் சேர்த்து கொண்டு சீன வந்தார்கள் – அங்கிருந்து புறப்பட்டும் இந்தியாவிற்கு பெரும் திரளாக டீ சாப்பிடுவதற்காக வந்தார்கள் – டீ கிடைக்காததால் தேடி கொண்டே இருந்தார்கள் – அந்த ஆதங்கத்தில் தான் வேதம் படைத்துத் டீ வேண்டும் என்று வேள்வி செய்தார்கள் – கிடைத்தபாடில்லை – டீ கிடைக்கவிட்டாலும் அவர்களுக்கு வேள்வி செய்வது பழகி விட்டபடியால் அதை தொடர்ந்து செய்து வந்தார்கள்

 29. இந்தியா (குமரி நாடு) ஆப்பிரிக்காவுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் இடையேயான பாலம். அப்பிரிக்காவின் இந்த மன்வந்திரத்தின் முதல் தோற்றமான மனித வகைகள் கிழக்கிலும் வடக்கிலும் பரவ, குமரிக் கண்டம் பாலமாக இருந்திருக்க வேண்டும்.

  போகர் , ரோமசர் போன்றவர் எங்கணும் உலவும் வகையில் பாரத தேசம் பரந்து இருந்தது இந்நாளில்.

  You will get lot of details in this :-

  https://www.hinduwisdom.info/index.htm

  Also read Dr N.S. Rajaram’s works

 30. “அந்நாளில்” என்று படிக்கவும் .

  >> போகர் , ரோமசர் போன்றவர் எங்கணும் உலவும் வகையில் பாரத தேசம் பரந்து இருந்தது அந்நாளில் .

 31. திரு.ஜெயஸ்ரீ அவர்களே …

  மிக மிக நன்றி !!!

  எனது கேள்விகளுக்கும் , கருத்துகளுக்கும் பொறுமையாகவும், பொறுப்புடனும், அழகாகவும் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி …
  பெருமிதம் அடைந்தேன் …

  சரியான விளக்கம் தான் … Axioms and Assumptions விளக்கம் மிக அருமை …
  வேதங்கள் வெறும் ஒதுவதர்க்குத்தான்… அந்த விளக்கமும் நன்று !

  உங்களது எழத்துக்களை தொடர்ந்து படிக்க வைத்து விட்டீர்கள் …

  எனது எண்ணம் :
  ஒரு மனிதன் வாழ்வதற்கு நம்பிக்கையே ஆணிவேராக அமைகிறது.
  சிலர் தன் மீதே முழு நம்பிக்கையை வைத்து வாழ்கிறார்கள், பலர் அந்த நம்பிக்கையை கடவுள் எனும் ஒரு விசயதிடம் சில மதங்களை பின் பற்றுகிறார்கள் … மற்றும் சிலர் இவர்களது நம்பிக்கை பொய்யானது , அறிவற்றது என்று கூறி வாதிடுகிறார்கள்,
  இதில் நான் முதலாம் வகுப்பை சேர்ந்தவன் …
  நீங்கள் இரண்டாம் என்று நம்புகிறேன். நீங்களும் சரி நானும் சரி அதிகம் அலட்டிகொள்ளாமல் ஒதுக்குபவர்கள் அந்த மூன்றாம் ரகம்.

  உங்களிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  என்னை பொறுத்தவரை .. Hinduism is not a Religion, Its a Culture and a way of Life. இந்த கருதைபற்றி உங்களது எண்ணம் ?
  —————————–
  கடவுள் இருக்கட்டும், நம்புங்கள், போற்றுங்கள், அதில் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சந்தோசம்…
  கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு வீண் வாதம் செய்பவர்களை ஒதுக்குங்கள் .. அதுவும் சரி .. ஒரு விசயத்தை சரியாக தெரிந்து கொள்ளாதவர்களிடம் வாதித்து என்ன பயன் ?
  ஒரு வாதமோ அல்ல உரையாடலோ, அது முடிந்த பின்பே அதில் பங்கேற்றவர்கள் ஒரு முடிவுக்கு வர இயலும், அதுவே சரியும் கூட.
  ஆனால் முடிவை முன்பே எடுத்து வைத்துக்கொண்டு அதை மற்றவர்களிடம் திணிக்க முயற்சிக்கும் வீனர்களிடம் உரையாடுவதே நேரக்கொடுமை தான்.

  சொல்ல வந்ததை மறந்து விட்டேன் போலும் …

  every researcher before proposing his findings to the public, does a lots and lots of rigourous testing and does lot of references and he puts his logic to qn from different perspectives… he get to think whether his topic really can sustain those targetted qns..
  but when the research is about the existence of god.. people are either afraid to test their logic, nor all the references just say god exist and sing the same song with different tunes.. thats the society we have and thats the way we have been raised.
  thats why i am not “convinced” on those concepts of god and any such external entity.

  i was said, i will be doomed to qn the existence of god and i will be the great sinner if i doubt him… now i find its so awful stupidity that my parents have thought me(on this topic of god not everything, its not their mistake, they have been raised the same way and everyone of us for more than 1000yrs..) not that i am saying i am non-believer of god neither am i a believer.. i just wish to believe in myself and i am contended with it.. most people when listen to my way of belief and my life’s base they just categorise that i am Athiest.. no i am not Athiest and i am not agnostic and if every human has a belief system then i believe on myself…

  my wish is .. every single human being born to live must believe on themselves.. on the due course of their life and their experiences and readings and their free will they can choose to believe on ‘a’ god or many gods or even the word ‘god’ itself.
  believing god should never be inherited thru heredity.. i dont want to blindly go to vinaayaga temple and give arugampul, i dont want blindly to go to perumal temple and put naamam and i dont want to go to amman temple and put kungumam on the forehead.. just because my mother and my father said so…

  intha ennam thappu endru karuthugireergala ? parents ethu sonnaalum nallathuku than endru vazhakkam pol oru sareera vaarthaigalai sollatheergal..
  muttalgalum, arivaligalum ellaa kaalangalilum samamaagave irukirargal..
  5 or 10 thalaimuraigalukku mun oru muttaal thanakku pugazh varavendum endru oru kallai eduthu vaithu. atharku ‘ondiveera’ endro ‘ayyanar’ ‘muneeswaran’ endro peyar vaithuvittu.. atharkku kadaa vettungal.. poosai podungal.. mazhai maaripozhiyum endru koora.. monsoon rain pothukondu pozhiya.. athai pin varum thalaimuraigal kaathu vazhiyaaga kathai kathaiyaaga ketu.. indru athu kulatheiva vazhipaadu aagivittathu…

  our muttaal tharperumaikkaaga uruvaakiya oru visayam(kadavul) indru kuladeivam aagum endraal ? yen ithu ulagalavil ellaa mathangalukkum ellaa kadavul saarntha nambikaigalukkum adippadai yaaga amaiya koodathu ?

  ithu en vivaatham alla.. nan vidai ariyaatha kelvi..
  kandipaaga ungalidam oru bathil irukum ena nambugiren..

  (i think i typed sooo much.. sorry )

 32. திரு அரவிந்த் அவர்களே,

  கடைசியில் எழுதினதற்கு முதலில் சொல்லிவிட்டு பிறகு, மற்றவற்றுக்குச் செல்கிறேன்.
  // kandipaaga ungalidam oru bathil irukum ena nambugiren.. //

  நம்பிக்கை!!
  பதில் இருக்கும் என்று என்னிடம் நம்பிக்கை!!!
  ஏன் என்னிடம் நம்பிக்கை?
  என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், என் மீது நம்பிக்கை வைத்து கேட்கிறீர்கள்?

  பார்க்காத என்னிடம், பேசி அறியாத என்னிடம், ஏன் நம்பிக்கை வைக்கிறீர்கள்?

  நான் எழுதியதும் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் கட்டுரைகளிலேயே, என்னால் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வருகிறது.

  உங்களுக்கு அப்படி வரும் நம்பிக்கை மற்றவர்களுக்கும் என் மீது வர வேண்டும் என்று அவசியமில்லை.
  அல்லது என் மீது அதீத நம்பிக்கையும் சிலர் வைக்கலாம்.

  நீங்களும், மற்றவர்களும் என்னால் பதில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் எழுதவில்லை.

  நம்பிக்கை கொள்ளாதீர்கள் என்றும் சொல்லவில்லை.

  நம்புவதும் நம்பாததும் நீங்கள் என்னை எந்த அளவு (என் எழுத்துக்கள் மூலம்) புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.
  இதில் ( உங்கள் நம்பிக்கையில்) என் பங்கு ஒன்றும் இல்லை.

  *****
  இதுவரை சொன்னதில், என்னைப் பற்றி என்று வரும் இடங்களில் கடவுள் என்று போட்டு படியுங்கள்.

  என் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை வருகிறது என்னும்போது, கோடிகணக்கான மக்களுக்கு , அவரவர் கோணத்தில், அவரவர் அனுபவங்களில், அவரவர் வாழ்க்கையில் – கடவுள் மீது நம்பிக்கை வருவதில் என்ன அதிசயம், என்ன முரண்பாடு, என்ன மூடத்தனம், என்ன தவறு இருக்கிறது??

  (cont’d)

 33. புரிமானம்தான் நம்பிக்கையை நிர்ணயிக்கிறது.
  அந்த புரிமானம் அம்மா சொல்லி, அப்பா சொல்லி வந்து விடாது.
  அது பல பிறவிகளிலும் உருப்பெற்று, ஒரு பரிணாம வளர்ச்சியாக வருகிறது. அந்த வளர்ச்சி எந்த அளவில் உள்ளதோ, அதைப் பொருத்து அம்மா, அப்பா சொல்லிக் கேட்டு மேலும் வளரும். அல்லது பிறர் சொல்லியும் வளரும். அல்லது அவர்கள் சொன்னாலும் கேட்காமல் அபப்டியே இருக்கலாம், அல்லது பருவ வேறுபாடு, பூச்சிகளால் சிதையும் பயிர் போல சிதையவும் செய்யலாம்.

  உங்கள் கையில் என்று எதுதான் இருக்கிறது?
  சிதைவா அல்லது வளர்ச்சியா என்று எப்படி நீங்கள் கணிக்க முடியும்?
  இன்றைக்கு நீங்கள் வளர்ச்சி என்று நினைப்பது, பின் ஒரு நாளில் சிதைவாகத் தெரியலாமே?

  வளர்ச்சியா, சிதைவா – அது என்ன என்று கணிக்க ஒரு bench mark வேண்டாமா?
  அந்த benchmark தான் மகான்களும், பெரியோர்களும் ரிஷிகளும் சொன்னவை.
  அவர்கள் எவ்வளோவோ டெஸ்ட் பண்ணி, சரி பார்த்து, அராய்ந்து சொன்னவை. They are ready references. நமக்கு சந்தேஹம், அல்லது கேள்வி வரும்போது, அவற்றை refer செய்து விடை பெறுகிறோம் – பள்ளியிலும், கல்லூரியிலும், ஏன் வேலையிலும் books or authors or principles or precedence -ஐ refer செய்து விடை தேடுகிறோம் அல்லவா?

  தெரிந்து கொள்வதற்கு இப்படி எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. இதில் என் தேவை இருக்கிறது என்று நேரிடும் போதுதான், I wish to come to the picture. வாதிட்டு, தெளிவு படுத்தவேண்டும் என்று வாதிடுவதில் என் நேரத்தை செலவிட எனக்கு விருப்பமில்லை. எனது மூச்சே எனக்குச் சொந்தம் இல்லை. அடுத்த மூச்சு எனக்கு உண்டா என்று சாஸ்வதமில்லை. அடுத்த கணம் என்பதும் என் கையில் இல்லை. இப்படி இருக்கையில், சாஸ்வதமாக இருக்கிற இந்த கணத்தில் இன்னும் என்ன தெரிந்து கொள்ள முடியுமோ அதைத் தெரிந்து கொள்வோம் என்பதுதான் என் வழி.

  *********
  உங்கள் கேள்விகளுக்கு, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ உபயோகமாகும் என்று நினைக்கிறேன். அவற்றைப் படித்தும் உங்களுக்கு நிறைவு வரவில்லை என்றால் இந்தக் கேள்விகளைக் கேட்டு விடை தேடுங்கள். தன மீதே நம்பிக்கை என்று, உங்களையே நம்புகிறேன் என்று சொல்கிறீர்களே, உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன, எவ்வளவு தெரியும் என்று இவற்றுக்கு விடை தேடுங்கள்.

  * நான் யார்?
  * நான் ஏன் பிறந்தேன்?
  * பிறப்பதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தேன்?
  * ஏன் அரவிந்தாகப் பிறந்தேன்?
  *ஏன் வேறு யாராகப் பிறக்கவில்லை?
  * இறந்தபிறகு நான் யார்?

  ***********
  இவற்றுக்கு விடை கிடைத்தவுடன், இப்படி சிந்தியுங்கள்.
  Matter is neither created, nor destroyed.
  இது இயற்கையின் விதி.
  Matter மட்டுமல்ல, இயற்கையில் எல்லாமே என்றும் இருப்பவை. உருமாற்றம என்பதுதான் அவற்றை இருப்பதுபோலும், இல்லாததுபோலும் காட்டுகின்றன.
  ஆனால் இருப்பதுதான் இயற்கையின் விதி.
  It exists.
  That which exists for ever is God!

  இதில் அரவிந்தின் existence எவ்வளவு காலம்?
  அரவிந்த் எங்கே, எதில் exit ஆகிறார்?
  நீங்கள் உடல் என்றால், அது நீங்கள் மறைந்ததும், உருமாறி எப்படியும் இருக்கிறது.

  உடல் அல்லாத ‘நீங்கள்’ என்று ஒருவர் அப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்?
  அல்லது நீங்கள் என்ற ஒருவர் இல்லை என்கிறீர்களா?
  நீங்கள் என்ற ஒருவர் எப்படி இல்லாமல் இருக்க முடியும், இயற்கையின் விதிப்படி?
  நீங்கள் வேறு ஏதேனும் உருமாற்றத்தில் exist ஆகிக் கொண்டுதானே இருக்க முடியும்?

  அபப்டி உருமாறி எங்கே இருக்க முடியும்?
  பஞ்ச பூதங்களிலான உடல் எப்படி பஞ்ச பூதங்களிலேயே அடங்கி விடுகிறதோ, அப்படித்தானே, ‘நீங்கள்’ என்ற ஒன்றும் அதன் மூலப் பொருளில் அடங்க முடியும்?

  உடலுக்கு ஆதாரக் கூறு பஞ்ச பூதம் என்பது போல, ‘நீங்கள்’ , – மேலும் உங்களைப் போன்ற அனைத்து ‘நீங்கள்’, ‘நான்’ என்று எல்லோருக்கும் ஒரு மூலக் கூறு – ஆதாரக் கூறு ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?

  அந்த மூலக் கூறுக்கு பல பெயர்கள் உள்ளன .
  அவற்றுள் ஒரு பெயர் – இறைவன்
  எப்பொருளிலுந் தங்குதலுடயதால் அவன் அல்லது அது இறைவன் எனப்படுகிறது.
  எல்லாப்பொருளும் அதில் இயந்துள்ளதால் அது இயவுள் எனப்படுகிறது. (பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் (திருமுரு. 274)

  அதன் (மூலமான இறைவனின்) முழு வீச்சினை ஓரளவேனும் (இனி வரப்போகும் ) என்னுடைய அடுத்த கட்டுரையில் கொணர்ந்துள்ளேன். வெளியானதும் படிக்கவும்.

  *********
  எங்கும் இருப்பது கல்லில் இருக்க முடியாதா?

  கல்லில் இறைவனைக் காண்பது நீங்கள் நினைப்பது போல் 5, 10 தலைமுறைகளுக்கு முன் ஏற்பட்டது அல்ல. தொல்காப்பியத்திலேயே, தொன்று தொட்டு வருவது என்று – காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் என்று வருகிறது. அதிசயமாக ஒரு காட்சி தெரிந்தால், அது குறித்தவரை கல்லில் வடித்து, நீராட்டி, நட்டு வழிபடுதல் தமிழர் முறை.

  சிலப்பதிகாரத்தில், கண்ணகியை வேட்டுவர் காட்சி எனக் காணவே ( கணவனுடன் மேல் உலகம் சென்றமை), அது கண்ட இடத்தில் அவளைச் சிலையாக வடித்து வழிபட்டனர். எப்படி என்று காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் என்னும் நான்கு காதைகளில் வருகிறது.

  தெய்வமான கண்ணகி (refer another thread in this series – கடவுள் பக்தி இல்லாமலும், பதி பக்தியால் கண்ணகி கடவுளாகவே ஆகி விட்டாள்) கடவுளாகி, தெய்வம் தெளிமின் என்று உபதேசமும் செய்கிறாள்!!

  மேலும் கல்லில் கடவுள் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. இது குறித்த ஆராய்ச்சி ஒன்று உள்ளது.

  A research on what happens inside a temple.

  The following report is from ‘Indian Express’ published on 31st December, 1980. The research was conducted in a model garbha graha. As far as I know no such research has happened after that. There is an opinion that doing such a research amounts to disrespect to God. But in the absence of knowledge about what temple – worship means, stones are used in consecration of deities, I think we must encourage such research so that temples do not lose their purpose for which they were developed by our ancestors.

  *********************

  This is about the HR and CE stall at the Tourist Trade Fair held at Chennai then.

  ‘Teachers and students of Parasakthi College, Courtallam, through a set of experiments using laboratory gadgets, make a scientific interpretation of the chanting of slokas, abhisheka of the idol and offering of fruits and leaves. “Temple worship has a definite scientific reasoning behind it”, the assistant professor in charge said.

  First it is explained how there is a proportionate configuration to the sanctum sanctorum and the idol it houses – the sanctorum is structured in such a way that the idol in it reflects any sound wave to the maximum effect.

  A tuning fork is vibrated in the hall with little sound reproduction, but when it is struck and placed before the entrance of a small model sanctorum, a loud hum is heard. The forks invariably produce a sound resembling the chant “OM”.

  The lecturer explained that among the various chants, “OM” had the largest resonant effect and displaced a sizeable amount of atmosphere inside the sanctum. This is possible only when the sanctum and the idol are made of granite.

  Next it is explained how the presence of negative ions increases in moist condition rather in dry condition using a condenser to infer why the sanctum sanctorum is always kept moist by pouring water over the idol and washing it with water continuously. Similarly the conduction of the stone idol also increases when it is moist – this is demonstrated by comparing the conductivity of dry granite and that of a wet idol.

  The materials used for the abhisheka of the idol increases the conductivity of the stone through their own pH values. pH value of a substance is the negative concentration of the ion it possesses. Most of the materials used for abhisheka – milk, curd, sandalpaste, turmeric powder, vermilion powder, vibuthi have high pH values, a simple chemical experiment shows. And when they are poured over the idol they increase the conductivity of the idol, also ionizing it.

  A resistance reading on the ohmmeter of the idol after these elements have been poured shows the increased conductivity of the idol. The chanting of the mantras and the more frequent “OM” sets the air column inside vibrating and the highly sensitized idol conducts the ions of the abhisheka substance to the moist atmosphere.

  The lighting of camphor during the deeparadhna displaces the air, which is partially charged with ions, and the devotees inside the sanctum inhale these ions. These negative ions have the physiological function of fixing oxygen with hemoglobin in the blood, the lecturer explained. They are concentrated on beach shores and mountaintops in the early morning, which explains doctor’s advice to heart patients for early morning beach walks.

  In the final inference, it is explained, a devotee’s presence in the sanctum during abhisheka helps his system induct more negative ions than he usually inhales. A visit to the temple is a good substitute for morning walk, the lecturer explained, and a tonic for good health.

  But with temples becoming overcrowded, it would not be a wonder if these negative ions are submerged by the excessive carbon dioxide exhaled in the packed sanctum which is meant to house only ten people at a time. Similarly the chanting of “OM” has also been reduced to a mere inaudible mumble, affecting its highly resonant quality.”

  (end of news report )

  இந்த விஷயம் குறித்து தொடர் ஒன்றை என் வலைப் பதிவில் எழுதி வருகிறேன். இன்னும் முடியவில்லை.
  இதுவரை வந்ததை இங்கே படிக்கலாம.

  https://jayasreesaranathan.blogspot.com/2010/02/ac-to-be-installed-in-garbha-graha-of.html

  https://jayasreesaranathan.blogspot.com/2010/02/importance-of-vigrahas.html

  https://jayasreesaranathan.blogspot.com/2010/03/stone-binds-energy.html

  https://jayasreesaranathan.blogspot.com/2010/03/iso-certification-for-temples-does-it.html

 34. “இந்த எண்ணம் தப்பு என்று கருதுகிறீர்களா? parents எது சொன்னாலும் நல்லதுக்கு தான் என்று வழக்கம் போல் ஒரு சரீர வார்த்தைகளை சொல்லாதீர்கள்..
  முட்டாள்களும், அறிவாளிகளும் எல்லா காலங்களிலும் சமமாகவே
  இருகிறார்கள்..
  5 or 10 தலைமுறைகளுக்கு முன் ஒரு முட்டாள் தனக்கு புகழ் வரவேண்டும்
  என்று ஒரு கல்லை எடுத்து வைத்து அதற்கு ‘ஒண்டிவீர’ என்றோ ‘அய்யனார்’ ‘முனீஸ்வரன்’ என்றோ பெயர் வைத்துவிட்டு.. அதற்கு கடா வெட்டுங்கள்.. பூசை
  போடுங்கள்.. மழை மாரிபொழியும் என்று கூற.. monsoon rain பொத்துக்கொண்டு
  பொழிய.. அதை பின் வரும் தலைமுறைகள் காது வழியாக கதை கதையாக
  கேட்டு.. இன்று அது குலதெய்வ வழிபாடு ஆகிவிட்டது…

  our முட்டாள் தற்பெருமைக்காக உருவாக்கிய ஒரு விஷயம் (கடவுள்) இன்று
  குலதெய்வம் ஆகும் என்றால்? ஏன் இது உலகளவில் எல்லா மதங்களுக்கும்
  எல்லா கடவுள் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைய கூடாது?

  இது என் விவாதம் அல்ல.. நான் விடை அறியாத கேள்வி..
  கண்டிப்பாக உங்களிடம் ஒரு பதில் இருக்கும் என நம்புகிறேன்..

  (i think i typed sooo much.. sorry )”

  ஆம், அரவிந்த் அவர்களே. Transliterate பண்ண வேண்டும் என்று தோன்றாத அளவுக்காவது கொஞ்சம் sooo much ஆகத்தான் எழுதிவிட்டீர்கள். பரவாயில்லை. அதை நான் செய்துவிட்டேன். தங்கள் கேள்விகளுக்கு பதில் ஆசிரியர்
  கொடுப்பார்.

  நான் சொல்ல வந்ததைச் சொல்லுகிறேன். நம்மாழ்வார் பாசுரத்தை ஆசிரியர் சொன்னார் அல்லவா? அதைப் படித்தபோது எனக்கு ரமணரின் பாடல் ஒன்று ஞாபகம் வந்தது. அது:

  “நின்னை யான் உருவென எண்ணியே நண்ண
  நிலமிசை மலையெனு நிலையினை நீதான்
  உன்னுறு அருவென உன்னிடின் விண்ணோக்குற
  உலகு அலைதரும் ஒருவனை ஒக்கும்
  உன்னுறு உனலற உன்னிடம் உன்ன நீர்
  உரு சர்க்கரை உருவென உரு ஓயும்
  என்னை யான் அறிவுற என்னுறு வேறேது
  இருந்தனை அருணவான் கிரி என இருந்தோய்.

  அதன் பொருள்: அருணாச்சலா, உன்னை உருவமுள்ளவனாக நினைத்து நான் அடையவேண்டுமென்று நாடவும், இப்பிரபஞ்சத்தில் நீயோ அருணாசலம் எனும் மலை வடிவ நிலையில் இருக்கின்றாய். உனது சொரூபமானது உருவமற்றது என்று நினைப்பது எங்கும் நிறைந்த ஆகாயத்தைப் பார்ப்பதற்காக உலக முழுவதும் அலைந்து திரிகின்ற ஒருவனுடைய முயற்சிக்கு நிகராகும். உனது உண்மை சொரூபத்தை மனதினால் நினையாமல் உள்ளபடி உணரும்போது சமுத்திரத்தில் மூழ்கிய சர்க்கரை பொம்மையின் உருவம் கரைவதுபோல மனம் தன்னுடைய உருவத்தை இழக்கும். இவ்வாறு எனது ஆத்ம சொரூபத்தை நான் விசாரித்து அறியும்போது எனக்கென்று தனி உருவம் வேறு எது இருக்கிறது? அருணாசலமென்னும் வான்புகழ் மலையாக விளங்கிக்கொண்டு என்றும் நீயே இருக்கின்றாய்.

  ஆக, உரு என்றோ அரு என்றோ அது ஏதும் இல்லையென்றோ ஆரம்பிக்க தன் உண்மை நிலையை எவரும் ஒரு நாள் உணர்வர். அது வரை மனத்தின் வழி சென்று, வாதம் செய்து, இதுவோ அதுவோ என்று மனோ மயமாம் காட்சியைக் கண்டு கொண்டு இருக்க வேண்டியதுதான்.

 35. திரு. ஜெயஸ்ரீ ….

  மிக்க நன்றி …

  ***இதுவரை சொன்னதில், என்னைப் பற்றி என்று வரும் இடங்களில் கடவுள் என்று போட்டு படியுங்கள்.***

  இந்த கருத்து மிக அருமை… இதற்க்கு மாற்று கருத்து என்னிடம் இல்லை. ஏனென்றால் நான் விவாதிக்கப்போவதில்லை …
  ஆனால் இந்த கருத்திற்கு பெரியார் என்ன விடை கூறி இருப்பார் என்று அறிய ஆர்வமாக உள்ளது… இவர்களைப்போல் (உங்களையும் சேர்த்து) உயரிய சிந்தனை(அறிவு/தெளிவு) இன்று இப்பொழுது என்னிடம் இல்லாததால். உங்களது கருத்தை ரசித்தேன் !!!
  ஆனால் ஒன்று, நான் உங்களிடம் அந்த நம்பிக்கையை வைத்தது உங்களது தமிழாற்றல், நீங்கள் கொடுக்கும் மேற்கோள்கள், உங்களது பொறுமை, விவாதிக்க நான் விரும்பவில்லை என்ற போதினுலும் ஒரு வகையில் விவாதம் போலவே இருக்கும் எனது கேள்விகளை பொருட்படுத்தி உங்களது நேரத்தை செலவிட்டு, முகம் தெரியாத இந்த நண்பனுக்காக விளக்கம் அளிக்கும் அந்த மிக உயரிய உள்ளம்.
  இதற்க்கு மேல் ஒரு தமிழனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் ?!?!
  மேலும் உங்களது பதில்கள் வெறும் ஆன்மீக மேற்கோள்கள் மட்டும் இல்லாமல் அறிவியலும் கலந்து சிறப்பாக இருப்பதனால்தான் !

  ***என் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை வருகிறது என்னும்போது, கோடிகணக்கான மக்களுக்கு , அவரவர் கோணத்தில், அவரவர் அனுபவங்களில், அவரவர் வாழ்க்கையில் – கடவுள் மீது நம்பிக்கை வருவதில் என்ன அதிசயம், என்ன முரண்பாடு, என்ன மூடத்தனம், என்ன தவறு இருக்கிறது??***

  நான் தவறென்று ஒருபோதும் கூறியதில்லை என்று பொய் சொல்லமாட்டேன்.. இரு வருடங்களுக்கு முன் அது மூடத்தனமாகவே எனக்கு பட்டது… ஆனால், ஒரு மனிதனுக்கு நம்பிக்கை தான் மூலதனம் அந்த நம்பிக்கையை கடவுள் என்ற ஒரு விசயதிடம் வைப்பதால்.. அந்த கடவுள் இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறான்.
  என்றும் புரிந்துகொண்ட பிறகு .. கடவுள் என்பது அவரவர் சுதந்திரம் என்றும் கருதினேன். இக்கட்டான சமயங்களில் எவ்வளவு தான் ”தன்”நம்பிக்கை இருக்குமாயின் பல மனிதர்கள் ஒரு ஊன்றுகொளைத் தேடி போகிறார்கள், இந்த கொள் ஒரு நண்பனாகவோ, பெற்றோர், உறவினராகவோ இருக்கலாம், அதையும் தாண்டி அந்த மனிதர்கள் கடவுள் என்று ஒரு விசயதிடம் செல்கிறார்கள்,
  பிறப்பால் அனைவரும் மனிதர்களாக இருக்கலாம், ஆனால் எல்லோராலும் எல்லா வலிகளையும் பொறுத்து கொள்ள முடியாது .. எல்லோராலும் மற்றொரு மனிதனிடமும் அதை பகிர்ந்து கொள்ளவும் முடியாது .. எனவே அப்படிப்பட்ட மனிதர்கள் இந்த கடவுளை நம்புகிறார்கள் … அவர்களுக்கு அந்த கடவுள் அவர்கள் எதிர்பார்ப்பதை கொடுக்கிறான் என்று அவர்கள் நம்புவதால் அவை அவர்களுக்கு கிடைக்கவும் செய்கிறது மேலும் நம்பிக்கையும் கூடிக்கொண்டே போகிறது… ஆனால் வெகு சிலரால் எவ்வளவு வலியையும் தாங்க முடியும், இல்லையென்றால் அதை தன்னை சுற்றியுள்ளவர்களிடம் மற்றும் பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையவும் முடியும்.. இவர்களுக்கு எதற்கு கடவுள் .. அப்படி ஒருவன் இருந்தே விட்டு போகட்டும், இருப்பினும் வீண் தானே …. ??? அந்த இவர்களில் ஒருவனாகத்தான் என்னை நான் இப்பொழுது பார்கிறேன்…
  இதுவே நான் கடவுள் நம்பிக்கை குறித்து எனக்குள்ளே ஆராய்ந்து கண்ட பதில். நான் கேட்ட , படித்த, பார்த்த, அனைத்து பதில்களை காட்டிலும் இந்த பதில் எனக்கு அதிகபட்ச தெளிவை கொடுத்ததாகவே உணர்ந்தேன்…
  இதைப்பற்றி உங்கள் கருத்து என்னவாக இருக்கும் ?

  ***இன்றைக்கு நீங்கள் வளர்ச்சி என்று நினைப்பது, பின் ஒரு நாளில் சிதைவாகத் தெரியலாமே? ***
  ***சாஸ்வதமாக இருக்கிற இந்த கணத்தில் இன்னும் என்ன தெரிந்து கொள்ள முடியுமோ அதைத் தெரிந்து கொள்வோம் என்பதுதான் என் வழி.***

  மிக சரியான எண்ணம் தான் !!! இருப்பினும் இந்த கணத்தில் எனக்கு அது வளர்ச்சியாக தெரியும் விஷயம் நாளை சிதைவாக தெரியும் பட்சத்தில் அப்பொழுது வேறொரு விஷயம் வளர்ச்சியை காட்டும். அதனால் வளர்ச்சியும் வீழ்ச்சியும் வாழ்க்கைச்சக்கரம் தான் என்ற சாராம்சத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ள ஆசை படுகிறேன் … சரிதானே ?

  ***உங்கள் கேள்விகளுக்கு, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ உபயோகமாகும் என்று நினைக்கிறேன். அவற்றைப் படித்தும் உங்களுக்கு நிறைவு வரவில்லை என்றால் இந்தக் கேள்விகளைக் கேட்டு விடை தேடுங்கள். ***

  கைவசம் இல்லை .. சென்னை திரும்பியவுடன் கண்டிப்பாக படிக்கிறேன்…

  ***தன மீதே நம்பிக்கை என்று, உங்களையே நம்புகிறேன் என்று சொல்கிறீர்களே, உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன, எவ்வளவு தெரியும்***

  கடவுளை நம்புகிறவர்கள் மட்டும் என்ன ஆதியும் அந்தமும் அறிந்துகொண்டா நம்புகிறார்கள் ? அப்படி நான் கேட்டால் நான் விவாதிக்கிறேன் என்று என் மீது சிறு நெருடல் வரக்கூடும். அதனால் இப்படி கேட்கிறேன்… எதுவுமே சொந்தம் இல்லாத இந்த மனித பயணத்தில் இந்தக்கணம் மட்டுமே இருக்கிறது அதில் முடிந்த வரை அறிந்துகொள்வோமாக என்பது சரி என்றால் .. நான் எதற்கு வீணாக எனது பிறப்பிற்கு முன்பும் பிறது இறப்பிற்கு பின்பும் என்னவென்று ஒரு கேள்விக்கு விடை தேடி இருக்கும் இந்தக்கனதையும் கழிக்க வேண்டும் ?
  மேலும் நான் இறந்த பிறகும் அரவிந்த் தான், இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து நூறாயிரம் கோடி ஆண்டுகள் ஆயினும் நான் அரவிந்த் தான். எப்படி என்று கேட்கிறீர்களா ? சொல்கிறேன் …
  ஆத்மா , பிறவிகள் (reincarnation) என்பது இருக்கட்டும் .. இறந்த பிறகு உடல் அழிந்து ஆத்மா வேறொரு புதிய உடலுக்கு போகிறதென்று வைத்துக்கொள்வோம் … அப்பொழுது என்னை “ABCD ” XYZ ” என்று கூட அழைக்கலாம் … ஆனால் அப்பொழுது இந்த உலகத்தில் நான் விட்டுசென்ற ஞாபகங்களும் எனது சமூகத்தினரும் என் “உடலை” அரவிந்தாகத்தான் கருதுவார்கள் .. உலகப்புகழ் இல்லாத ஒருவனாக இருந்தால் வருடங்களில் எனது பெயர் மறந்து போகலாம். புகைப்படம் இல்லாத பொது எனது முகம் மற்றவர் ஞாபகங்களிலிருந்து கரைந்தும் போகலாம் … ஒருவேளை நான் உலகப்புகழ் பெற்ற மாமனிதனாக இருந்தால் ? புத்தகங்களிலும் , விகிபெடியாவிலும் நான் அரவிந்தாகவே வாழ்வேன் … இந்த உலக வரலாறு இயங்கும் வரை என் பெயரை ஒரு 100 அல்ல 1000 தலைமுறைகளுக்கு அப்பால் இருக்கும் சந்ததியினர் மறந்து விட்டாலும் எனது புகைப்படம் என்னை அரவிந்த் என்று தான் கூறும். இந்த ஆயிரமாவது பிறவியில் நான் யார் என்று கூறாது. Socrates ஐ இன்னமும் Socrates என்று தானே அழைக்கிறோம். அதேபோல Alexander , Einstein போல பலபல உலகப்புகழ் பெற்றவர்கள் … So, நான் கூறுவது என்ன வென்றால் … இந்த பிறவியில் எனக்கு இந்த அழியும் உடலே சொந்தம்… உயிர் வரும் போகும்.. அரவிந்தாக பிறந்ததையே பெருமையாக கருதுகிறேன்… நான் மாட்டும் கருதினால் போதுமா ? குறைந்தபட்சம் என்னைச்சார்ந்தவர்களுக்கு நான் எந்த விதத்தில் பயன் படுகிறேன் என் Purpose என்ன என்ற கேள்விக்கு பதில் தேடலாம் .. அது ஞாயம் என்று தோன்றுகிறது ….
  மேலும் நான் யார் ? இந்த கேள்விக்கு பல சாராம்சங்களில் பதில் கூற முடியும் ஒரு கட்டத்திற்கு மேல் பதில் மௌனமாகவும் போகும்.
  “Life is a Learning Process” என்பதை நம்புகிறவன் நான் …

  ***Matter is neither created, nor destroyed.
  இது இயற்கையின் விதி.***

  முற்றிலும் உண்மை .. அப்படியே ஏற்றுகொள்கிறேன் .. அதற்க்கு கீழே நீங்கள் எழுதிய கருத்துகளும் அருமை.

  ***Matter மட்டுமல்ல, இயற்கையில் எல்லாமே என்றும் இருப்பவை. உருமாற்றம என்பதுதான் அவற்றை இருப்பதுபோலும், இல்லாததுபோலும் காட்டுகின்றன.***

  இருப்பதும் இல்லாமல் போவதும் பார்ப்பவனின் பார்வையில் தான் என்று தெளிவாக கூறி விட்டீர்கள் !

  ***உடலுக்கு ஆதாரக் கூறு பஞ்ச பூதம் என்பது போல, ‘நீங்கள்’ , – மேலும் உங்களைப் போன்ற அனைத்து ‘நீங்கள்’, ‘நான்’ என்று எல்லோருக்கும் ஒரு மூலக் கூறு – ஆதாரக் கூறு ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?***

  இருந்தே ஆக வேண்டுமா ? அப்படி என்ன ஒரு அதி தீவிரமான assumption ?
  நீங்கள் benchmark என்று ஒரு கருத்து கூறினீர்களே .. அதில் அந்த மகான்களும் , ரிஷிகளும், பெரியோர்களும் பல டெஸ்ட் பண்ணி ப்ரூவ் பண்ணி இருக்கிறார்கள் என்று … கடவுள் இருக்கிறார் என்று முழுவதுமாக நம்பிக்கொண்டு தேடுங்கள் அனைத்து references களும் உங்களுக்கு கை கொடுக்கும் .. ஏனோ தெரியவில்லை .. இப்படித்தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது …

  ***எங்கும் இருப்பது கல்லில் இருக்க முடியாதா?***

  ஏன் முடியாது, நிச்சயமாக முடியும், அப்படி அவர்கள் “நம்பினால்”
  பாருங்கள் நம்பினால் என்று நான் நம்பிக்கையைத்தான் கூறுகிறேன் …
  கடவுள் மீதோ கல் மீதோ நம்பிக்கையை வைக்கத்தான் முடியும். நம்பிக்கையே கடவுள் என்று கூறிவிட முடியாது. இந்த கருத்தில் தான் கடவுள் உருவாக்கியதாக கூறும் மனிதனிடமே அவன் முதலாம் இடத்தை பிடிக்க முடியாமல் இரண்டாம் இடத்திற்கு வந்து விடுகிறான்.

  ***கல்லில் இறைவனைக் காண்பது நீங்கள் நினைப்பது போல் 5, 10 தலைமுறைகளுக்கு முன் ஏற்பட்டது அல்ல. தொல்காப்பியத்திலேயே, தொன்று தொட்டு வருவது என்று – காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் என்று வருகிறது. அதிசயமாக ஒரு காட்சி தெரிந்தால், அது குறித்தவரை கல்லில் வடித்து, நீராட்டி, நட்டு வழிபடுதல் தமிழர் முறை. ***

  5 , 10 என்பதை நீக்கிவிட்டு 50 அல்லது 10000000 கோடி என்று நினைத்துகொள்ளுங்கள்.. அப்படிதான் நான் கூறினேன்.
  ஓலைகளுக்கு முன் கற்களும் உளிகளும் தான் பேப்பர் பேனாவை இருந்தன … நமது முன்னோர்கள் கற்களில் வடித்து வைத்தார்கள் என்றால் பின் வரும் நாம் படித்து பார்த்து தெரிந்து கொள்ளவே என்றும் அதை சுத்தப்படுத்தி நீராடி வழிபாடு செய்தமை அதை காலத்தாலும் இயற்கை சீற்றங்களில் இருந்தும் அழியாமல் காக்கவே என்ற சாதாரண கருத்தை ஒத்துகொள்ள நம் மனம் ஏன் மறுக்கிறது ?
  இந்த கல்வெட்டுகளும் , சிற்பங்களும் , பொக்கிஷங்களும், எழுத்துக்களும் அந்த கால மனிதர்களின் வாழ்கை முறையை அறிந்து கொள்ள கிடைத்த டைனசோர் முட்டைகளே … காலம் காலமாக இப்படி மனிதர்கள் தலைமுறை தலைமுறைகளாக காத்து வந்த விஷயங்கள் எப்படி கடவுள்கள் ஆயின ? அவர்கள் உயிரும் மேலாக அதை காதமைக்காகவா ? அப்படியானால் நம் முன்னோர்கள் அறிவாளிகள் தான் .. நாம் தான் அப்படி இல்லையோ என்று தோன்றுகிறது ..

  about the research on what happens inside the temple..
  well, it really disappoints me.. people want to strongly believe in onething and to proove it they can find any possible ways .. i feel like this.. the energy, positive or negative ions, conductivity of the stone.. keeping it moist.. the vibrations..
  ok.. i agree to all of it.. but how much of energy is being released from every square inch of that stone .. in that atmospheric conditions ? and how far such energy can travel.. can it really make a difference when its breathed ?? and wats the effect.. does it have side effects ? so wat are the positve effects? is the stone and temple the only way to get that energy or isnt there any alternatives.. like placing granite flooring and turning on your ac and keeping a candle and a fish tank in your living room ?
  then why are we wasting other people’s time and money with some belief system.. there are lot of things needs to be discovered, invented and explored rite ?
  besides.. if you say one must stand inside that garba graha to get that energy.. then only those stuffy big belly “iyer’s” and poosaari’s get them.. not the public people who stand 100 yards away.. i am sure that ions wont reach out pushing hard enough from the those heavy bellies interrupting the pathway…but i really appreciate their initiative…
  sorry ma..
  i am not asking these qns to you.. it aint your research.. i am sure these qns are laid in front of those people who conducted this research and presented to any academic society for verification and acceptance… besids.. it was done only by a media… the media tells what you want to hear… and show wat you want to see.. !!!

  முடிவாக என் கருத்தை கூறுகிறேன் / கேட்கிறேன் :
  கடவுள் என்பவன் ஒரு மாபெரும் சக்தி, எவராலும் உணர முடியாத சக்தி .. சிலர் மட்டுமே உணர்ந்த சக்தி , அங்கிங்கெனாதபடி ஒளியற்று , உருவமற்று , நிறமற்று என்றெல்லாம் வைத்துக்கொள்வோம் (assumption) … அவன் தான் எல்லாவற்றையும் படைத்தான், உருவாகினான் என்றே வைத்துக்கொள்வோம் (The Creator)
  அவன் நம் கண் முன்னே தோன்றியே விட்டான் என்றும் வைத்துக்கொள்வோம் .. இப்பொழுது பெரியார் அவர்கள் சரி ஒத்துக்கொண்டேன் என்று மிக சாதாரணமாக சொல்லிவிடுவார் … கமல் ஹாசனும் , அன்பே சிவம் என்றும் “இருந்தா நல்லா இருக்கும்” என்று நம்புவர்களும் சந்தோசபடுவார்கள் …
  நான் கேட்பது என்னவென்றால், அப்படி ஒரு கடவுளுக்கு வெறும் நன்றியைத் தவிர (நன்றி என்பது மிக மிக பெரிய விஷயம் தான் இருப்பினும்) வேறென்ன பெரிதாக செய்து விட முடியும் , முடியலாம் ?

  ஏனென்றால் நான் ஒரு கிருத்துவனாக பிறந்து “இருந்தால்” என் கடவுளாகிய ஜீசஸ் தான் எனது மாஸ்டர் என்று இப்பொழுது அவன் காலடியில் விழுந்து அவன் பாதங்களை “நக்கி” அவனிடம் நான் எந்த அளவிற்கு அடிமையாகவும் “விசுவாசமாகவும்” இருக்கிறேன் என்று காட்டி “scene” போட்டுக்கொள்வேன் மேலும் அவனிடம் “பாவமன்னிப்பு” கேட்டு மிக மிக “புனிதன்” ஆகிவிடுவேன் Heaven என்று சொல்லும் அவர்களது சொர்கத்திற்கு Free யாக டிக்கெட்டும் வாங்கி விடுவேன் (ஆம் இறைவனே இருக்கிறன் என்பது உண்மை ஆகும் பொது Heaven and Hell இருப்பதும் உண்மை தானே )….

  ஆனால் நானோ ஒரு தமிழனாக பிறந்து விட்டமையாலும் எனது தாய்நாட்டு கடவுளர்கள் எமது மனிதர்களிடம் ஒரு நண்பனாகவோ (கிருஷ்ணன்) ஒரு ஆசானாகவோ (விநாயகர்) ஒரு தந்தையாகவோ (சிவன்) தாயாகவோ (பார்வதி) இப்படிப்பலபல அவதாரங்களில் எங்களுக்குள்ளே , எங்களுடனே , எங்களுள் ஒருவனாகவே வாழ்ந்தான், வாழ்ந்துகொண்டு இருக்கிறான், வாழ்வான் என்பதினாலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஹிந்து தர்மப்படி “Karma” and “வினை விதைத்தவன் வினையறுப்பான்” , “உனது பாவ புண்ணியங்களுக்கு பலன் நீயே அனுபவிக்க நேரிடும் கடவுளேயானாலும் எதுவும் மாற்றமுடியாது” என்ற மிகப்பெரிய தத்துவத்தை வைத்திருப்பதாலும், அப்படி நேரில் காட்சி அளித்துக்கொண்டு நிற்கும் அந்த இறைவனுக்கு வணக்கம் கூறலாம், இல்லையனில், இன்ப துன்ப நேரங்களில் ஊன்றுகோலாக இருந்தமைக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவிக்கலாம், பிறகு என்னைப்போல் பகுத்தறிவாளன் என்று இவ்வளவு நாளாக “பிதற்றி” கொண்டிருந்தவர்கள் அவர்களது சந்தேகங்களை கேட்டு விடை பெற்றுக்கொள்ளலாம் ….
  இவ்வாறான நமது கடவுள் நம்பிக்கைக்கு ஏன் அனைவரும் மிக மிக மிக மிக மிக மிக மிக அதிகமாக அலட்டிக்கொண்டு, அடியேன் சரணம் போட்டுக்கொண்டு, அடிமைகளுக்கு அடிமைகளாக தன் சுயத்தன்மையை தொலைத்துவிட்டு கடவுளே கதி என்றும் , கோவிலே உலகம் என்றும், “காவி” உடையே அதற்க்கு வழி என்றும், தீ மிதித்துக்கொண்டு , அலகு குத்திக்கொண்டு , விரதம் இருந்துகொண்டு தன்னைத்தானே வருத்துகிரார்கள் ???

  ———————————
  பின் குறிப்பு :
  திரு. ஜெயஸ்ரீ அவர்களே ஒரு பாசமான வேண்டுகோள் …

  ***வாதிட்டு, தெளிவு படுத்தவேண்டும் என்று வாதிடுவதில் என் நேரத்தை செலவிட எனக்கு விருப்பமில்லை***

  இந்த கருத்தில் எனக்கு சிறு நெருடல் இருக்கிறது … இது உங்களது எண்ணம் தான் .. நான் கருத்து கூறுவது தவறு தான் இருப்பினும், வாதிடுவதும் ஒரு வகை கருத்து பரிமாற்றலே, எல்லா மனிதர்களும் பேரறிஞ்சர்கள் போல் பொறுமையாகவும் , தெளிவாகவும், சுய உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிக்காடாமலும் பேச இயலாது .. அதே நேரத்தில் சிலர் நம்மை மிகவும் சோதிப்பார் … (like people getting into our nerves) இதனால் வாதிடுவதே நான் வெறுக்கிறேன் என்று கூறினால் எப்படி ? சொல்லுங்கள் ?
  தமிழுக்கு அழகே சொற்களின் ஆழம் தானே ! தமிழனுக்கு அழகே சொல்லாடல் தானே ?
  மேலே நான் எழுதிய கருத்துகளில் பல இடங்களில் உங்களது கேள்விகளுக்கு எனது பதிலைத்தான் பதிவு செய்தேன் (என்ன செய்ய பல இடங்களில் எனது பதில்களும் மருகேள்விகலாகிவிட்டன).
  கண்மூடித்தனமாக விவாதம் மட்டுமே செய்து உங்களை வருத்தும் நோக்கம் துளியும் இல்லை. சில இடங்களில் பொதுவாக விடையறியா கேள்விகளை கேட்கிறேன் சில இடங்களில் உங்களது சொந்த கருத்தை அறிய கேள்விகளை கேட்டுளேன் …
  வார்த்தைகள் வன்மையாகவும், காயப்படுத்துவதாகவும் இருப்பதே ஒரு உரையாடல் விவாதமாகும் தருணம்.
  இது உண்மை என்றால் நான் இன்னமும் சொல்கிறேன் நான் விவாதிக்க வில்லை … உங்களது பதிலை ஆவலாக எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் !!!

 36. திரு SRaman அவர்களே
  Transliterate செய்ததிற்கு மிக மிக நன்றிகள் …
  பாடலை பாடலாக மிகவும் ரசித்தேன்.

  இதோ எனதிடமிருந்து சில வரிகள் ..
  ஒரு கவிதையை இங்கு எழுதுகிறேன் … எனது சொந்த எழுத்துக்கள் தான்.
  படித்துவிட்டு உங்களுக்கு தோன்றியதை கூறுங்கள் .. மேற்கொண்டு உங்களது விமர்சனத்திற்கு ஏற்றது போல் எனது கருத்தை சேர்த்து கூறுகிறேன்.
  கவிதை இதோ ….
  **********************************************************

  இந்த நூறாவது கடிதத்தை

  என் கண்ணீரில் நனைத்து

  கொடுக்கிறேன் என் அன்பே ! ஏனெனில்

  கிழிக்கும் போது கூட

  உன் விரல்கள் வலித்து விடக்கூடாது !!!

  – அரவிந்த் நாராயணன்

 37. திரு அரவிந்த் நாராயணன் அவர்களே,

  கடவுள் மறுப்புக் கொள்கையில் இரண்டு ரகங்கள் உள்ளன. இது இல்லை, அது இல்லை என்று மறுத்துக் கொண்டு, எது கடவுள் என்று தேடுபவர் ஒரு ரகம். கடவுளே இல்லை, கடவுள் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம் என்பவர் மற்றொரு ரகம். இவற்றுள் நீங்கள் இரண்டாம் ரகம் என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் காட்டுகின்றன.

  >>>>> ஆனால் வெகு சிலரால் எவ்வளவு வலியையும் தாங்க முடியும், இல்லையென்றால் அதை தன்னை சுற்றியுள்ளவர்களிடம் மற்றும் பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையவும் முடியும்.. இவர்களுக்கு எதற்கு கடவுள் .. அப்படி ஒருவன் இருந்தே விட்டு போகட்டும், இருப்பினும் வீண் தானே …. ??? அந்த இவர்களில் ஒருவனாகத்தான் என்னை நான் இப்பொழுது பார்கிறேன்…<<<<<<

  கடவுள் என்பவன் ஒருவன் இருந்து விட்டுப் போகட்டும், அவன் தேவை உங்களுக்கில்லை என்று தெரிகிறது. நீங்கள் தேவை என்று convince ஆகிறபோதுதான், என்னைப் போன்றவர்களுடைய கருத்துகள் உங்களுக்கு உபயோகமாகும். அதுவரை என்னைப் போன்றவர்கள் சொல்வது விழலுக்கு இறைத்த நீர் போன்றது. வலியைத் தாங்குபவனுக்கு கடவுள் வீண்தானே என்று நீங்கள் சொல்வது போல, கடவுள் தேவை என்று நினைக்காத உங்களுக்கு கடவுள் இருப்பதைப் பற்றி சொல்வது வீண், அதற்காக நேரம், வார்த்தைகள் செலவிடுவது வீண் என்று நான் சொல்வது சரிதான் என்பது, உங்கள் கடைசி பின்னூட்டம் மூலம் நிரூபணமாகிறது.

  அதனால் தேடிக் கொண்டிருங்கள். வாழ்கை தன் பங்குக்கு அனுபவங்களைத் தந்து விடைகளைக் கோடிக் காட்டும். அவற்றை உள் வாங்கிகொண்டீர்கள் என்றால் சீக்கிரமே விடை கிடைக்கும். My best wishes.

  நிறைய சயின்சும் தெரிந்து கொள்ளுங்கள். தீவீர சயின்ஸில், ஆழ்ந்தீர்கள் என்றால், ஒரு ஆச்சர்யமான காம்பினேஷனில் எப்படி மாலிகுலர்கள் முதல் மெகா பிரபஞ்சம் வரை சாத்தியம் என்றும் , மாஸ்டர் ப்ரோக்ராம் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகாதே என்றும் புலப்படும்.

  அரவிந்த் வாழ்வான், வாழ முடியும் என்று நீங்கள் கொடுத்த விளக்கத்திலேயே, கடவுளைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அரிய பெரிய தத்துவம் இருக்கிறது, அது என்ன என்று ஒரு க்ளூ Shelly அவர்கள் எழுதிய Ozymandias கவிதையில்.
  அந்தக் கவிதையை என்றும் நினைவில் வையுங்கள். கடவுள் இருக்கிறான் என்று உங்களுக்குப் புரிமானம் வரும்போது அதை நான் ஏன் படிக்கச் சொன்னேன் என்று தெரியும்.

  “Ozymandias”
  By
  Percy Bysshe Shelley (1792-1822)

  I MET a Traveler from an antique land,
  Who said, “Two vast and trunkless legs of stone
  Stand in the desart. Near them, on the sand,
  Half sunk, a shattered visage lies, whose frown,
  And wrinkled lip, and sneer of cold command,
  Tell that its sculptor well those passions read,
  Which yet survive, stamped on these lifeless things,
  The hand that mocked them and the heart that fed:
  And on the pedestal these words appear:
  “My name is OZYMANDIAS, King of Kings.”
  Look on my works ye Mighty, and despair!
  No thing beside remains. Round the decay
  Of that Colossal Wreck, boundless and bare,
  The lone and level sands stretch far away.

 38. அரவிந்த் அவர்களே

  முதலில் – நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் புளித்து போகும் அளவிற்கு பதில்கள் தரப்பட்டவை அதனாலேயே ஒருவரும் முதலில் இருந்து பதில்கள் தர விரும்புவதில்லை (அதாவது நான் சாமான்யன் என்று சொல்லிக்கொண்டால் பரவா இல்லை – நான் phd யாக்கும் என்பது போல இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கள் என்றால் யார் தான் நேரத்தை வீண் செய்வார்கள்]

  தன்னையே நம்புவேன் என்று சொல்லும் நீங்கள் ஒரு பேருந்திலோ, ஒரு ரயிலிலோ , விமானத்தில் கூட பயணம் செய்ய முடியாது – யாரை நம்பி ஏருவீர்கள் – யாரை நம்பி தூங்குகிறீர்கள் – இப்படி வேண்டுமானால வைத்துக் கொள்ளலாம் – நான் பார்ப்பதை – ஏன் அறிவுக்கு எட்டியதை மட்டும் நம்புபவன் – ஒரு சின்ன காரியம் நடத்திக்கொல்வதற்கே ஒரு நூறு பேரை நம்ப வேண்டி இருக்கு – நூறு பேர் தயை இருந்தால் தான் ஒரு குண்டூசி கூட நூலில் நுழைகிறது – ஏன் கட்டின வெட்டி கூட நிற்கும் சாத்தியமில்லை – நாம் பறக்காமல் இருப்பதற்கே புவி ஈர்ப்பு சக்தி தேவை படுகிறது – – இந்த என்னை மட்டுமே நம்பி இருப்பவன் என்பதேல்லாம் அகந்தையில் எழும் வெறும் வீண் பேச்சு மட்டுமே

  பிறந்த கன்னுக்குட்டி யாரும் சொல்லி தராமலேயே சரியாக பசுவின் மடி தேடி பால் குடிக்கிறதாம் எப்படி?

  அரவிந்தை அரவிந்தாக அறிபவது தான் உண்மை (சத்) நிலை – அரவிந்தை இல்லை என்று சொல்லும் நிலை தான் அசட்டு நிலை – அரவிந்த் வெறுமனே இருந்தால் யாரும் அறியமாட்டார்கள் அவருக்கு சில குணங்கள் இருக்க வேண்டும் – நல்லவர், ஞானி, கொடை வள்ளல் இப்படி – இந்த குணங்கள் மூலமே அரவிந்த் என்ற ஒருவர் அறியப்படுவார் – மேலும் அரவிந்த் என்பது எதோ புத்தம் புதிய விஷயம் இல்லை – ஏற்கனவே இங்கே இருந்த பெயர் தான் – அதனாலேயே அறியப்படுகிறார் – நீங்களும் புதுசல்ல, உங்கள் பெயரும் புதியதல்ல, உங்கள் குணங்களும் புதியதல்ல, நீங்கள் செய்யும் காரியங்களும் புதியதல்ல

  நீங்கள் சொல்லும் வாதங்கள் எல்லாம் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னரே எழுந்து நன்கு பதில் அளிக்கப் பட்டவை

  உங்களது கேள்விகளில் மற்றும் உங்களது தீர்மானத்தில் இருக்கும் இன்னொரு கோளாறு – இது இப்படி தான் இருக்கும் என்று அனுமாநித்துவிட்டு [நட்ட கல்லு இப்படி தான் குல தெய்வம் ஆச்சு போன்றவை] அதையே சாமான்யப் படுத்துதல் (generalization), இது எப்படி என்றால் ஆட்டியாம்பட்டியில் எப்படி ivory soap விக்கலாம் என்று அமெரிக்காவில் ரூம் போட்டு யோசிப்பது போலத்தான் [you must get to the steets of attiyampatti instead] – உங்களுக்கு விஷயம் புரிய வேண்டும் என்றால் ரிஷிகள் கடவுள் இருப்பதை எப்படி உணர்ந்தார்கள் அதை எப்படி உணர்த்துகிறார்கள் என்று கொஞ்சமாவது முயன்று படிக்க வேண்டும் (எதோ ஒரு உபநிஷத்) – அதில் ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொள்ளப்பட்டுள்ள்ளன – வெறுமே நட்ட கல்லை நம்பும் சமாசாரம் அல்ல – ஆச்சர்ய மூட்டும் சிந்தனைகள் கொண்டவை

 39. அரவிந்த் அவர்களே

  //
  இது உண்மை என்றால் நான் இன்னமும் சொல்கிறேன் நான் விவாதிக்க வில்லை … உங்களது பதிலை ஆவலாக எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் !!!
  //

  நீங்கள் விவாதிக்க வில்லையா?
  நீங்கள் சொல்வது உண்மையா? எப்படி நம்புவது? உங்களால் அற்துதியிட்டு நம்ப வைக்க முடியுமா?

  நீங்கள் யோசிப்பதற்கான கேள்விகளே இவை

 40. @jayasree
  ***கடவுள் மறுப்புக் கொள்கையில் இரண்டு ரகங்கள் உள்ளன. இது இல்லை, அது இல்லை என்று மறுத்துக் கொண்டு, எது கடவுள் என்று தேடுபவர் ஒரு ரகம். கடவுளே இல்லை, கடவுள் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம் என்பவர் மற்றொரு ரகம். இவற்றுள் நீங்கள் இரண்டாம் ரகம் என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் காட்டுகின்றன.***

  kadavul maruppu kolgaiyil ragangale illai.. neengal kooriyathu muttrilum thavaru…
  with respect to god concept, there is only a 0 or 1. the beleivers find it as 1 and athiests find it as 0. that doesnt mean athiests are finding some 0.5 or 1.5. for them its always 0. in my case i dont mind its 0 or 1 i just think 1 step beyond.. how to make sense of either 0 or 1 .. how can it add value for my life or whatever… i give equal importance to 0 and also 1. i just dont blindly have monotonous mindset.

  kadavul illai endru maruthavan ethu kadavul endru theda maatan. there is no logic in this point. kadavul irunthaal enna avasiyam enbavan kadavul maruppu kolgaiyin keezh varamaataargal.

  ***வலியைத் தாங்குபவனுக்கு கடவுள் வீண்தானே என்று நீங்கள் சொல்வது போல, கடவுள் தேவை என்று நினைக்காத உங்களுக்கு கடவுள் இருப்பதைப் பற்றி சொல்வது வீண், அதற்காக நேரம், வார்த்தைகள் செலவிடுவது வீண் என்று நான் சொல்வது சரிதான்***

  naan keta kelviyai purinthukondeergala endru doubt vanthuvittathu. naano thevaiyai pattri ketkiren.. neengalo iruppathai pattri solvathu veen endru solgireergal.
  un peyar enna endru kettal.. naan mathuraikaaran endru solvathu pol ullathu.

  sari pogatum vidungal.. paavam ungalathu ariya neramum , vaarthaiyum etharkaaga neengal veen seiya vendum.
  ennaippondravargalai kaanbathu thaan arithu, kadavulai nambikkondu atharkku avaravar vazhiyil vilakkam koduppavargalai kaanbathu elithey.. naan avargalidam ketkiren.. (actually i am not set out to seek answers for these qns…this aint my only goal or purpose of journey, so its ok … )
  iruppinum, ithu varai en kelvigallukku ungalathu vazhiyil azhagaaga bathil alithamaikku miga miga miga nanrigal.

 41. திரு. அரவிந்த் அவர்களே,
  தங்களின்
  “பாடலை பாடலாக மிகவும் ரசித்தேன்…..
  இதோ எனதிடமிருந்து சில வரிகள் ……”

  உங்கள் வரிகளிலேயே உங்களைப் பற்றி நீங்கள் கூறி விட்டீர்கள் என்றால் புரிகிறதா? நீங்கள் நன்கு பார்க்கக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். அடுத்த படிகளில் நோக்கவும் கற்றுக் கொள்வீர்கள். ஜெயஸ்ரீ, சாரங் கூறுவதற்கு மேல் நான் ஏதும் சொல்வதற்கு இல்லை.
  இருந்தாலும் – சற்றே திசை திருப்பப் பட்டாலும் – இதோ எனது பதில்:

  நூறென் ஆயிரமென் நீரிலே நனைந்ததால்
  கூறென் கிழிவதென் கூறத்தான் வந்ததென்?
  உருவமோ அருவமோ உருவருவமோ அது
  பருவமோ பாசமோ வலியுமோ தன்னிலே?

  இத்துடன் கவிதை பரிமாற்றம் நிற்கட்டும். கட்டுரை பற்றிய கருத்து பரிமாற்றங்களை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.

 42. @sarang:

  oh dear dear sarang, your reply seems like an open invitation for an argument.
  well, let metry to make sure i just type some answers.

  ***முதலில் – நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் புளித்து போகும் அளவிற்கு பதில்கள் தரப்பட்டவை அதனாலேயே ஒருவரும் முதலில் இருந்து பதில்கள் தர விரும்புவதில்லை (அதாவது நான் சாமான்யன் என்று சொல்லிக்கொண்டால் பரவா இல்லை – நான் phd யாக்கும் என்பது போல இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கள் என்றால் யார் தான் நேரத்தை வீண் செய்வார்கள்] ***

  do i really sound like an egoistic person with some superiority attitude.?
  well, i feel i am not. i wont say i am just yet another ordinary person,but i am certainly
  not a ph.d or world famous big shot guy like how you explained there.
  (but actually i am ph.d student in reality. hahaha)
  so, consider my apologies if by any chance my way of talking got on your nerves or made you feel bad about me.

  ***தன்னையே நம்புவேன் என்று சொல்லும் நீங்கள் ஒரு பேருந்திலோ, ஒரு ரயிலிலோ , விமானத்தில் கூட பயணம் செய்ய முடியாது – யாரை நம்பி ஏருவீர்கள் – யாரை நம்பி தூங்குகிறீர்கள் – இப்படி வேண்டுமானால வைத்துக் கொள்ளலாம் – நான் பார்ப்பதை – ஏன் அறிவுக்கு எட்டியதை மட்டும் நம்புபவன் – ஒரு சின்ன காரியம் நடத்திக்கொல்வதற்கே ஒரு நூறு பேரை நம்ப வேண்டி இருக்கு – நூறு பேர் தயை இருந்தால் தான் ஒரு குண்டூசி கூட நூலில் நுழைகிறது – ஏன் கட்டின வெட்டி கூட நிற்கும் சாத்தியமில்லை***

  according to this concept, i would rather worship and erect temples and statues
  for these 100 people who make sure to get things done in my life and help me
  in making my life better.

  ***நாம் பறக்காமல் இருப்பதற்கே புவி ஈர்ப்பு சக்தி தேவை படுகிறது ***
  gravity is sooo not to keep you on the grounds. if wright brothers thought that way,
  you would never be flying today…

  ***இந்த என்னை மட்டுமே நம்பி இருப்பவன் என்பதேல்லாம் அகந்தையில் எழும் வெறும் வீண் பேச்சு மட்டுமே ***

  i think you totally forgot my whole idea and my scenario. i said i believe on myself..
  i never said i believe on myself “alone”. if you dont believe in yourself then the chances are you dont believe in those 100 people either … and not on God too.
  dear.. you got my view in a completely different perspective which i never mean…
  also, when i say “I” that doesnt mean the single entity me… in just one I, there are 10 fingers 2 legs, muscles and spirit to work hard, ability to think, reason and so many things are embedded. its difficult dude… you wanted to see the “I” as an extremely egoistic word… if you have already decided then tell me how can i help on that ?
  hope you kno this can-do attitude.. put that “I” infront of can-do. you would know wat I mean by believing in myself.

  ***மேலும் அரவிந்த் என்பது எதோ புத்தம் புதிய விஷயம் இல்லை – ஏற்கனவே இங்கே இருந்த பெயர் தான் – அதனாலேயே அறியப்படுகிறார் – நீங்களும் புதுசல்ல, உங்கள் பெயரும் புதியதல்ல, உங்கள் குணங்களும் புதியதல்ல, நீங்கள் செய்யும் காரியங்களும் புதியதல்ல ***

  if you keep saying this, fragile and innocent hearts would go broken dude…
  pls,, dont pull their hearts down.. it would ache them and sure it does hurts too..
  coz everyone knows their name isnt new, they arent new, their characteristics arent new, and nothing about them is new and their actions too arent new…
  but they just want to be special to somebody.. the special one to your better half, the special individual to your frens, relatives, parents or your own kids… thats the feeling which fuels every of their next days to come..

  well if you just referred me in all those words.. then u are not all correct either..
  my name may not be new, so does me and my characteristics but my actions may be new..because you may never knew which seed has how many seeds in it unless it grows as a tree and lives?

  ***நீங்கள் சொல்லும் வாதங்கள் எல்லாம் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னரே எழுந்து நன்கு பதில் அளிக்கப் பட்டவை ***

  yeah u are rite, but neither you nor me were living for 1000 or 2000 years.. we were just living around 20, 30 or 40 yrs around.. so why not we set out to explore things by our own coz its afterall the our belief which we give the most importance than anything in our life.
  so why cant we, still be the same guys to ask such qns and get answers?
  coz i find believing things is our freedom..its not only freedom.. its for your own mind to decide all by yourself. we shouldnt blindly go with books or scriptures
  that were 1000 or 2000 yrs old.. just for the only reason they are 1000s of years old.

  you may ask me, why should we keep wasting time on same qns which we already have answer?
  well, its the answer you must seek every time you be born.. coz everytime you are fresh and new when you are born.
  because you see.. you dont have to prove e=mc^2 everytime you are born.. coz its simple laws of mathematics and physics.. but these believe system is something related your mind and psychology.. and you cant generalize a psychological entity with general laws of physics, maths or laws of nature or laws of religions…
  those rishi’s and those great guys said wat “they” found with their eye and with their vision and what “they” have believed.. now, its your turn in your own life and you have to do the same.. if you want to find things something new or something similar to what those guys found.. you just cant derive or inherit from them.. can you?
  you cant blindly follow them.. either… then the reasoning ability that we possess have no value.

  well, replace “You” with “Arvind” or “sarang” or “We” from above paragraph. the meaning remains same.
  its my way of seeing life.. its not the philosophy i insist upon you..
  coz you have your freedom to believe something and you chose to blindly believe in those rishi’s and their findings..and just inherit them without questioning.. or you may have convinced with them too.. i am not sure about you.. coz i dont know you in person.
  i cant interfere in your personal mind.. its not correct.

  ***உங்களது கேள்விகளில் மற்றும் உங்களது தீர்மானத்தில் இருக்கும் இன்னொரு கோளாறு – இது இப்படி தான் இருக்கும் என்று அனுமாநித்துவிட்டு [நட்ட கல்லு இப்படி தான் குல தெய்வம் ஆச்சு போன்றவை] அதையே சாமான்யப் படுத்துதல் (generalization), இது எப்படி என்றால் ஆட்டியாம்பட்டியில் எப்படி ivory soap விக்கலாம் என்று அமெரிக்காவில் ரூம் போட்டு யோசிப்பது போலத்தான் [you must get to the steets of attiyampatti instead] – உங்களுக்கு விஷயம் புரிய வேண்டும் என்றால் ரிஷிகள் கடவுள் இருப்பதை எப்படி உணர்ந்தார்கள் அதை எப்படி உணர்த்துகிறார்கள் என்று கொஞ்சமாவது முயன்று படிக்க வேண்டும் (எதோ ஒரு உபநிஷத்) – அதில் ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொள்ளப்பட்டுள்ள்ளன – வெறுமே நட்ட கல்லை நம்பும் சமாசாரம் அல்ல – ஆச்சர்ய மூட்டும் சிந்தனைகள் கொண்டவை***

  i have written clearly that its not my argument.
  ###ithu en vivaatham alla.. nan vidai ariyaatha kelvi..###

  dear sarang, your reply just shows one thing.. you dint understand my words the way i wrote them… you dint get to see my perspective from my angle of incidence.
  but i feel you wont gonna listen to my views nor my explanations anymore..
  coz now i am stamped to be an athiest and a useless argumentator.
  hmmm.. well..its ok..

  i just keep finding the same answer.. again and again..

  ITS HARD TO FILL A CUP, WHICH IS ALREADY FULL !!!
  (though i am not the one trying to fill the cup, i thought its good to share this proverb.,
  you might as well say it perfectly holds good for me too… yes you are correct.
  because you may strongly believe my cup is full and so it is.. )

  P.S: btw.. thank you so much for sharing your style of views.. it sure does help me.

 43. It seems Arvind hates/does not want inheritance from his ancestors. If he says the same thing about money/property, co-inheritors will be very happy:-)

 44. @armchaircritic:

  ***It seems Arvind hates/does not want inheritance from his ancestors. If he says the same thing about money/property, co-inheritors will be very happy:-)***

  the co-inheritors would be very happy, only if i stop asking qns and start accepting their answers blindly like the way they wanted it to be accepted.
  anger is the answer when you don’t have the answer for a question.
  but i believe in “Experience is what you get, when you didn’t get what you wanted”.

  even when i say, YES i say the same thing of not accepting inheritance from ancestors for money and property too.. you wont be satisfied… and trust yourself.. you wont be happy either.. your qn is just to nail me down.. the purest forms of direct argument. but its ok .. i understand your frustration..

  the next possible qn targetted to me could be..
  “then why on earth do you even exist in this article.. we never wanted your stupid qns and we dont spend(waste) our time answering them..if you want go find answers somewhere else.. you are a cursed soul and we pray for you… ”

  its already been told to me dear… i have got these final statements from many believers.

  நமது கருத்திற்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களை எந்த வித பிரகாரணங்கள் இன்றி உடனே வெறுப்பது தானே நமது இந்திய கலாசாரம் ! கடவுள் நம்பிக்கை தொடங்கி , அரசியல் வரை .. ஏன் தகப்பன் – மகன் மற்றும் அனைத்து உறவுகளின் உள்ளும் இப்படித்தானே இருக்கிறது …
  தவறில்லை, இப்படித்தான் நானும் இருந்தேன் .. என்னையே மாற்றிக்கொள்ள முயற்சிகள் எடுத்து .. சிறிது மாற்றியும் கொண்டுள்ளேன் … அப்படித்தான் நம்புகிறேன் … என் நண்பர்களையும் என்னுடன் தினமும் பழகுபவர்களைத்தான் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும் …

  – நன்றி

 45. அரவிந்த்,

  கிட்ட தட்ட நான் எதிர்பார்த்த படிகளே உங்களிடம் இருந்து வந்திருக்கிறது – தன்னம்பிக்கை பற்றி நீங்கள் சொல்லும் என்னையே என்னை மட்டும் போன்ற சினிமா வாதங்கள் ஒருபுறம் இருக்க – நான் சொல் வந்ததை சற்று யோசித்துபாருங்கள் – வெறுமே சுவையான பதில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே உங்கள் பதிலில் இருக்கிறது

  நீங்கள் ஒரு நூறு பேரை நம்பி – அந்த நூறு பேர் இன்னொரு நூறு பேரை நம்பி இப்படியே எல்லோரும் எல்லோரையும் நம்பி என்று சொல்லலாம் – எல்லோரும் எல்லோரையும் நம்பி என்ற நிலைமை ஏற்பட்டால் – அதுற்கு எதிரான எல்லோரும் யாரையும் நம்பி இல்லை என்ற நிலையும் ஏற்படும். இந்த எல்லோரில் அக்றிணை பொருள்களும் அடக்கம் – இங்கு காணப்படும் எல்லோரும், யாரும் இல்லோரும் தான் சத் என ஆன்மிக வாதிகள் சொல்கின்றனர்

  //
  yeah u are rite, but neither you nor me were living for 1000 or 2000 years.. we were just living around 20, 30 or 40 yrs around.. so why not we set out to explore things by our own coz its afterall the our belief which we give the most importance than anything in our life.
  //

  மின்சாரம் நான் இந்த மண்ணில் உயிருடன் இருக்கும் போது கண்டுபிடிக்க பட வில்லை என்பதற்காக நித்யம் motor போடும் போதோ, fan போடும்போதோ – மின்சாரம் எப்படி உண்டாகிறது என்பதை சோதனை செய்து பார்த்துவிட்டு, பிறகு மின்விசிறி எப்படி வேலை செய்கிறது என்று சோதனை செய்து பார்த்துவிட்டு மின்விசிறி பயன் படுத்தும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை, சொல்லப்போனால் விடிஞ்சிரும்

  //
  dear sarang, your reply just shows one thing.. you dint understand my words the way i wrote them… you dint get to see my perspective from my angle of incidence.
  //

  இதற்க்கு தான் நான் உங்களிடம் இன்னொரு பதிலில் இன்னொரு கேள்வி கேட்டிருந்தேன்

  நீங்கள் யார் பதிலிலும் உள்ள அல்லது உபநிஷட்களில் உள்ள அல்லது நீங்கள் பார்க்கும் விஷயத்தை சுத்தமாக புரிந்து கொள்ளாமல் ஏதோவெல்லாம் பேசலாம் அது மட்டும் சரியோ ?

  நண்பரே பிரதானமான பத்து உபநிஷட்களில் ஒரு உபநிஷத் மட்டுமாவது படியுங்கள் – ஏன் இந்த பத்து பிரதானம் என்று கேட்காதீர்கள்
  //
  i feel i am not. i wont say i am just yet another ordinary person,but i am certainly
  not a ph.d or world famous big shot guy like how you explained தேரே
  //

  நீங்கள் அப்படி நினைத்துகொண்டு இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் கேள்விகள் என்னவோ இந்த பாவனையிலே உள்ளது (literal ஆகா எடுத்துக்கொளாதீர்கள்) – சுருங்க சொல்லப்போனால் ப்ரஞவாதம் செய்கிறீர்கள்

 46. அன்புள்ள ஜெயஸ்ரீ அம்மா அவர்களுக்கு ,

  கடவுள் பற்றி விவாதம் பண்ண கூடாது என்று சொல்வது பாலைவன சர்வாதிகார மதத்தினரின் செயல் என்று எனக்கு ஒரு ஞாபகம்.

  கடவுள் கூட வாத விவாததிற்கு உட்பட்டவர் தாம் என்று உபநிஷத்கள் சொல்றதா ஒரு எண்ணம் எனக்கு.

  ஆத்தா!! அந்த கதா உபநிஷதம் பத்தி கொஞ்சம் சொல்லு தாயீ!

  அன்புடன்,
  பிரதீப் பெருமாள்

 47. நண்பர் அரவிந்த்

  //
  மேலும் அரவிந்த் என்பது எதோ புத்தம் புதிய விஷயம் இல்லை – ஏற்கனவே இங்கே இருந்த பெயர் தான் – அதனாலேயே அறியப்படுகிறார் – நீங்களும் புதுசல்ல, உங்கள் பெயரும் புதியதல்ல, உங்கள் குணங்களும் புதியதல்ல, நீங்கள் செய்யும் காரியங்களும் புதியதல்ல
  //

  பெயரை பற்றிய இந்த கேள்வி எழுந்தாதாலும் மேலும் நீங்கள் ஒரு உபநிஷத்தஎனும் படிக்கும் ஆர்வம் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தினாலும் ப்ரிஹுதாரன்யாக உபநிசத்தில் வரும் ஒரு விஷயத்தை பாப்போம்

  கேள்வி – மனிதன் இறந்த பிறகு எது நீங்காமல் இருக்கும்
  பதில் – அவனது பெயர் நீங்காமல் இருக்கும் – இந்த பெயர்களின் அதிபதி விச்வேதேவாஹ் (infinite deities)

  இது ஏன் நாம் ஐன்ஸ்டீனை ஐன்ஸ்டீனாக அறிகிறோம் என்பதற்கு விடை தருகிறது – மேலும் பல பதில்களை இது தருகிறது அதை நீங்களே கேள்வி பதில் மூலம் யோசித்துக்கொள்ளலாம்

 48. கட்டுரை ‘தவம் செய்யும் நிலை ‘ என்றும் ‘கட்டுரைகருத்துக்கள்’ அத தவநிலையைக் கெடுக்கும் ரம்பை, மேனகை, ஊர்வசிகளின் நிலைகளாகவும் தென்படுவதால், சம்பவாமி யுகே யுகே என்று சொல்லத் தோன்றுகிறது; அடிப்படைக் கட்டுரையின் ஆழ் நிலையைக் கலைக்கிறது.

 49. அண்ணாமலை தத்துவம் அறிய கடினம் ஆனது. அந்த மலை ௩ பில்லியன் வருடம் வயது உடையது. பகவான் ரமணர் அதை பூமியின்
  அச்சு என்று கூறுவார். அதன் மறு அச்சு தென் அமெரிக்காவில் பாச்சு
  மலையில் இருக்கிறது என்று நாலு வருழங்களுக்கு முன் கண்டு பிடிதுள்ளர்கள். நடராஜ தத்துவம் அதே போன்றே. நடராஜரின் அமைப்பு
  பிரபஞ்ச தததுவததை விளக்குவது. தீ, உடுக்கை, பாம்பு, நான்கு கைகள்,
  தூக்கிய கால், முயலகனை மிதிக்கும் கால், தலையின் சடா முடி –
  இவையெல்லாம் அர்த்தம் உள்ளவை. நடராஜர் சக்தியை சொல்லுவது. நகராத அண்ணாமலை ஆத்மா வை குறிப்பது. ஆத்மா வுக்கு நகர்தல் இல்லை. சக்தி நகர்வது.

  நமஸ்காரம்,

  சுப்ரமணியன். இரா

 50. அன்புள்ள ஜடாயு,

  தங்களது 28.1.2010 கடிதத்தை இன்று தான் படித்தேன். ரொமில தாபர் போன்றோருக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். அவர் மார்க்சீய விஷம் அருந்தியவர். நீங்கள் மருந்து கொடுத்து குணப்படுத்தமுடியாது. தூங்குவது போல நடிப்பவனை எழுப்பமுடியாது.

 51. ‘அடி முடி காணா அதிசயம்’, ‘வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்’ ஆகிய தங்களின் இரு கட்டுரைகள் படித்தேன்.

  இரண்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ள ‘…கருத்துக்களை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். …பிரம்மாண நூல்கள் சொல்லும் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தனர்…’ என்னும் சொற்கள் அக்ஷர லக்ஷம் பெறும்.

  அகத்தியர் முதல் நாரதர் வழியாக சங்கரர், இராமானுஜர், சித்தர்கள் மற்றும் முக்த புருஷர்கள் எக்காலத்திலும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம் என்று விளக்கியிருப்பது மிக மிக அருமை.

  தங்களின் முதல் கட்டுரை மட்டுமேயே இதுவரை உலகில் வலம் வந்து கொண்டிருந்த எதிர்வாதங்கள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்கியிருக்கிறது. இரண்டாம் கட்டுரை அதன் அற்புதத் தொடர்ச்சி.

  மூன்று மற்றும் நான்காவது கட்டுரைகளான ‘பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ்த் தாமரையும்’ மற்றும் ‘பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு கார்யத்தின் அவசியமும்’ ஆகியவற்றை உடனே படிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். விரைவில் அவற்றைப் படித்துவிடுவேன்.

  குறைந்த உங்கள் முதல் கட்டுரைச் செய்திகள் எல்லா மக்களுக்கும் போய்ச் சேர்ந்தாலே போதும். மக்களிடையே தோன்றியுள்ள/தோற்றுவிக்கப்படுகிற குழப்பங்கள் தீரும்.

  இந்த இலக்கை நோக்கி முன்னேறுவோம்.

 52. //மாலடியான் on January 26, 2012 at 9:22 pm //

  இந்த மறுமொழியின் ஏழாவது பத்தியில், ‘குறைந்த உங்கள்…’ என்பதை, ‘குறைந்த பட்சம் உங்கள்…’ என்று வாசிக்கவும்.

 53. ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் இந்த தொடர் கட்டுரைகள் படிப்பவர் அனைவரையும் சிந்திக்க தூண்டும். மிக அற்புதம். வெளியிட்ட தமிழ் இந்துவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்கள் இதே போன்று மேலும் பல தொடர்களை மிக உன்னதமாக வெளியிட எல்லாம் வல்ல வள்ளி மணாளனை வணங்குகிறேன்.

  பெரியசாமி அடியான்

 54. வணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே.

  மூளைக்குப் பதில் super computer ஏதேனும் வைத்திருக்கிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு சில நாட்களாகவே உண்டு. வாழ்த்துக்கள்.

 55. எஞ்சிய இரு கட்டுரைகளையும் படித்துவிட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை (என்னிடம்..!). இன்னும் இன்னும் அநேகக் கட்டுரைகளை எழுதும் ஆற்றல் உங்களுக்குச் சித்திக்கப் பிரார்த்திக்கிறேன். இந்திய சமுதாயத்துக்கு மற்றும் உலக ஹிந்து சமுதாயத்துக்கு உங்கள் கட்டுரைகள் பெரிய வரப்ரசாதம். மொழியறிவு, விஞ்ஞான அறிவு, ஆன்மிகம்… எல்லாம் சரிவிகிதமாய்க் கலந்த ஒரு அற்புதம். வாழ்க உங்கள் ஆக்கம். வளர்க பாரதப் பண்பாடு.

 56. Hi Jayashree,
  Excellent. your words are not letting me sleep. Your ideas are really great and truthful.
  star dust உதாரணம் மிகவும் நன்று. கடவுளே தங்கள் வடிவில் வந்து வேதத்தை கூறுகிறார் என்று சொன்னாலும் தகும்.

 57. பெருமதிப்பிற்கு உரிய ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு,

  இக்கட்டுரை அருமை, அருமை! கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனபிறகு இக்கட்டுரையை படித்துப் பரவசம் அறிந்தேன்.

  அதைவிட அருமை, ஒரு பகுத்தறிவுப் பாசறைக்கு நீங்கள் கொடுத்த விளக்கம்:

  //இதை நான் இப்பொழுது எழுதும் கணினிப் பலகையும், மேலே சுழலும் மின் விசிறியும், மற்ற பல சௌகரியங்களும் எங்கிருந்து வந்தன? ஒரு காலத்தில் இவை இல்லை. இன்று உருவமும், சக்தியுடனும் இருக்கின்றன. இவை வந்தது இந்த star dust லிருந்துதானே ?

  இவற்றை யார் செய்தது? என்னைப் போன்ற மனிதன் தானே? இவற்றைச் செய்த மனிதனுக்கு – தான் வருவதும் போவதும் அவன் கையில் கிடையாது.

  முன்பு இல்லாமலும், இனி ஒருநாள் இல்லாமல் போகவும் போகிற இந்த ஜெயஸ்ரீயால், இந்த star dust லிருந்து உருவாகி, உருவத்தோடு உலாவி, இந்த star dust லிருந்து உருவான சௌகரியங்களை அனுபவிப்பது சாத்தியம் என்றால், இதைச் செய்தேன், அதைச் செய்வேன் என்று செய்து உலவுவது சாத்தியம் என்றால், இந்தப் பிரபஞ்சத்தின் ஊடே செலுத்தும் – சென்று கொண்டிருக்கும் அந்த சக்தியும், என்று நினைத்தாலும், எப்படி விரும்பினாலும், உருவம் கொண்டு, சக்தி கொண்டு – என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமே?
  அதுதான் நம்மாழ்வார் சொன்ன:-‘உளனிரு தகைமை’//

  இதைவிட எளிய விளக்கம் யாரும் கொடுத்து நான் படித்ததில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் எழுதவேண்டும், அதை இந்து சமயத்தோர் மட்டுமன்றி, மற்ற அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

  நீங்கள் ஸ்டார் டஸ்ட் என்று எழுதியதைப் படித்ததும் எனக்கு “How Universe was made” என்ற, Science Channelல் சில மாதங்களுக்கு முன்னர் கண்ட விளக்கம் நினைவுக்கு வருகிறது.

  நமது ஆதவன் போன்ற சிறிய விண்மீன்களில், அணுச் சேர்க்கை (atomic fusion) முறையில் இரும்பு தோன்றினால், அது ஆதவனையே அழித்துவிடும். ஆதவனைப்போன்று ஆயிரம் மடங்கு பெரிதான விண்மீன்கள் அணுச் சேர்க்கையில் பொன்னையும், பிலாட்டினத்தையும் உருவாக்கி அழிந்து, அவற்றைச் சிதற அடிக்குமாம். எனவே, இப்புவியில் உள்ள, இரும்பிலிருந்து பொன் வரை உண்டான அனைத்து உலோகங்களும், வெடித்துச் சிதறிய விண்மீன்களின் துகள்களே (stardust) என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  இது இந்துசமயக் கோட்பாட்டின் அறியியல் விளக்கமும், மெய் அறுதிச் சான்றும் அல்லாது வேறென்ன!

 58. Very nice . No words to congratulate you mam . The comments , arguments all are very interesting .
  Some I can understand .some I can’t . But I have a deep belief in GOD .OM NAMA SHIVAAYAA

 59. அருமையான பதிவு ,ஆனால் இங்கே சிவம் என்பது ருத்திரன் என்று மாற்றிக்கொள்ளவும் ,சிவம் என்பது ஆதிபரம்பொருள் ,விவேகானந்தர் உணர்ந்து சொல்லி இருக்கிறார் கற்பனைக்கும் எட்டாத தத்துவம்.அதை உவமையோ ,இல்ல வேறு தொழில்களால் வரையறுக்க முடியாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *