”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!

திராவிட இயக்க வரலாறு குறித்து பல அரிய, சுவாரசியமான  தகவல்களுடன்  நமது தளத்தில் சுப்பு அவர்கள் எழுதி வந்த  “போகப் பொகத் தெரியும்” தொடர்,   மேலும்  முழுமையாக செழுமைப் படுத்தப் பட்டு புத்தமாக வெளிவந்திருக்கிறது.  இணையத்தில் இந்தத் தொடரைப் படித்தவர்கள் கூட படித்துப் பயன்பெறும் வண்ணம் ”திராவிட மாயை – ஒரு பார்வை”  என்ற இந்தப் புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

dravidamayaiwrapper

ஜனவரி-29 முதல் தஞ்சாவூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் திரிசக்தி பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

திராவிட மாயை – ஒரு பார்வை
வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
பக்கங்கள்: 320
விலை: ரூ. 125.

புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் திரு. ரமணன் அவர்களை tavenkateswaran@gmail.com என்ற மின் அஞ்சல் மற்றும் 9500019189 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

39 Replies to “”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!”

 1. வரலாறு `குறித்த` என்று மாற்றிக்கொள்ளவும்.

 2. நூலாசிரியர் சுப்பு அவர்களிடமிருந்து மேலும் பல நூல்களை எதிர்பார்க்கிறேன்.

 3. சந்தோஷம். இது போன்ற நிறைய புத்தகங்கள் வரவேண்டும். இப்போது ஒரு அரகத்தனமான, பாமரத்தனமான சித்தாந்தத்துக்கு அரசுக்கு தமிழ் சமூகம் அடிபணிந்து வாய்மூடிக் கிடக்கிறது.

  தொடக்க்த்தில் இணையத்த்ல் எழுதப்படுபவை பின் அச்சில் வரவேண்டும். அது தான் இணையத்தின் மூடுண்ட நிலையிலிருந்து வெளியே வெளிச்சத்துக்கு வரும். முதலில் பண்பாட்டுக் கவலைகள். இப்போது திராவிட மாயை. இன்னும் பல புத்தகங்களுக்கு இணய்த்திலேயே சரக்கு நிறைய இருக்கு.

 4. அரைகுறைத் தகவல்களை ஆராய்ச்சி என்று சொல்லிக்கொள்ளும் சுப்புவின் புத்தகம் வெளிவந்ததில் மகிழ்ச்சிதான்.கத்திரிக்காய் மலிந்தால் கடைக்கு வரவேண்டியதுதான். நடுநிலையாளர்களின் பார்வையில் இந்தப் புத்தகம் பட்டால்தான் உண்மை வெளிவரும்.

 5. //நடுநிலையாளர்களின் பார்வையில் இந்தப் புத்தகம் பட்டால்தான் உண்மை வெளிவரும்///

  இத்தனை நாள் இந்த வலைப்பூவில் பல்லாயிரம் பேர் பார்த்துவிட்டார்களே! அதில் நடுநிலையாளர்களே இல்லையா? இல்லை நடுநிலையாளர்களுக்கு இதைப் படிக்க தைரியம் இல்லையா? நேரம் இல்லையா? யார் கண்டா.?

 6. சுப்பு அரைகுறைத் தகவல்களை ஆராய்ச்சி என்று சொல்லிக்கொள்வதாக குற்றம் சாட்டுபவர், ஏதாகிலும் ஒரு விஷயத்தில் சுப்புவின் அரைகுறைத் தகவல் என்ன, அதன் முழுத்தகவல் என்ன என்பதைச் சொல்லியிருந்தால், இந்தக் குற்றச் சாட்டிற்குப் பொருள் இருந்திருக்கும் நம்பிக்கை வரும். அதில்லாது வெற்றுக் குற்றச்சாட்டு மாத்திரமே உள்ள நிலையில் குற்றம் சாட்டுபவருக்கு சுப்பு எழுதியது வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கிறது, செய்வதறியாத கையாலாகத்த்னத்தில் ‘நடுநிலையாளரை’ தேடுகிறார். அவருக்கு அனுதாபங்கள். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? எரிச்சல் கிளம்பினால் அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.

 7. ஆதிக்க சாதிகளால் ஆயிரம் ஆண்டுகள் அடக்கிவைக்கப்பட்டிருந்தவர்கள் பெரியாரின் முயற்சியால் இன்று சகல வசதிகளோடு வாழ்கிறார்கள். இந்த நாட்டில் தமிழ்மொழிக்குத் தலைமைப் பதவி
  கிடைக்கக் காரணமாக இருந்தவர் பெரியார்.இந்தியாவில் எங்கும் இல்லாதபடி தமிழ்நாடு சாதி மதச் சண்டை இல்லாமல் அமைதியாக இருப்பதற்கும் காரணமானவர் பெரியார்.பல தலைமுறைகளை வாழ வைத்துள்ள பெரியாரின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய சுப்பு செய்யும் முயற்சி உள்நோக்கமுடையது. இந்தச் சரக்கு விலைபோகாது.

  (edited and published)

 8. இன்றைய அரசியலில் ஊழல் அதிகமாக இருக்கிறது. இதில் பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர யாரும் விதிவிலக்கல்ல.இதற்கும் பெரியாரின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்று போபர்ஸ் ஊழல் நடந்துவிட்டதால் விடுதலைப் போரில் காங்கிரசின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஊழலை சுட்டிக்காட்டி பெரியார் செய்த சமூகப் புரட்சியை மறைக்க முடியாது.சுப்புவின் கட்டுரைகள் தர்க்க முறைக்கு முரணாக உள்ளது.

 9. //ஆதிக்க சாதிகளால் ஆயிரம் ஆண்டுகள் அடக்கிவைக்கப்பட்டிருந்தவர்கள் பெரியாரின் முயற்சியால் இன்று சகல வசதிகளோடு வாழ்கிறார்கள். இந்த நாட்டில் தமிழ்மொழிக்குத் தலைமைப் பதவி
  கிடைக்கக் காரணமாக இருந்தவர் பெரியார்.இந்தியாவில் எங்கும் இல்லாதபடி தமிழ்நாடு சாதி மதச் சண்டை இல்லாமல் அமைதியாக இருப்பதற்கும் காரணமானவர் பெரியார்.பல தலைமுறைகளை வாழ வைத்துள்ள பெரியாரின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய சுப்பு செய்யும் முயற்சி உள்நோக்கமுடையது. இந்தச் சரக்கு விலைபோகாது.//

  திரு.ம.வெங்கடேசன் எழுதிய “பெரியாரின் மறுபக்கம்” தொடரையும் இந்த “போகப் போகத் தெரியும்” தொடரையும் நீங்கள் முழுவதுமாகப் படிக்கவில்லையோ? பாவம், அதையெல்லாம் படிக்க உங்களுக்கு ஏதுத் துணிவு?? இனியாவது படிக்க முயற்ச்சி செய்யுங்கள்:-

  https://tamilhindu.com/author/venkatesanvenki/

  https://tamilhindu.com/author/subu/

  திரு.சுப்பு அவர்களுக்கு,
  வயித்தெரிச்சல் காரர்களும் காமெடி பீசுகளும் கடக்கட்டும், நீங்கள் உங்கள் அறிய பணியைத் தொடருங்கள்….

 10. சாபமிடும் ‘பகுத்தறிவாளர்’:-

  பல தலைமுறைகளை வாழ வைத்துள்ள பெரியாரின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய சுப்பு செய்யும் முயற்சி உள்நோக்கமுடையது. இந்தச் சரக்கு விலைபோகாது.

  சிரிப்பாக இல்லை???

 11. ///இன்று போபர்ஸ் ஊழல் நடந்துவிட்டதால் விடுதலைப் போரில் காங்கிரசின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது///

  விடுதலைப் போரின்போது காங்கிரஸ் என்பது தற்போது இருப்பது போல வியாபார கட்சி அல்ல. அது ஒரு மக்கள் இயக்கமாகவே இருந்தது. இன்றைய திருடர்கள் இருக்கும் காங்கிரஸ் வேறு, காந்தி நடத்திய காங்கிரஸ் வேறு. அதை புரிந்து கொள்ளுங்கள் முதலில். என்னமோ ராஜீவும் அவர் மனைவி இத்தாலி சோனியாவும் தான் விடுதலைப் போரில் பங்கு பெற்றவர்கள் போல பேசுகிறீர்களே!

 12. விருதாவுரை என்பவர் சொல்லும் ஆதிக்க சக்திகளால் ஆயிரம் ஆண்டுகள் அடக்கிவைக்கப் பட்டிருந்தவர்கள் யார்? பட்டியலிட்டுக் காட்ட இயலுமா? சங்க காலத்திலும் பக்தி இயக்க காலத்திலும் கிழக்கிந்திய கம்பனி ஆளுகையின்போதுகூட தலித்துகள் உள்ளிட்ட வகுப்பார் அனைவரும் கல்வி வேலை வாய்ப்புக்ளில் தடங்கலின்றி வாழ்ந்தது தெரியுமா? அயோத்திதாசர் என்ற தலித் கல்வியறிவு பெற்றது ரெப்பஇ?

  தலித்துகளை எல்லா வகுப்பாருமே அடக்கியாணட உண்மை தெரியுமா? இந்த அடக்கியாளலை இன்று கிராமப் புறங்களில் செய்பவர்கள் யார்? ஜாதி ஒழிப்பே எமது லட்சியம் என்று சொல்லிவிட்டு ஜாதி அடிப்படையில் ஒதுக்கீட்டை நீட்டிப்பதோடு மேன்மேலும் பல ஜாதிகளை அப்படியலில் சேர்த்துக் கொண்டு போக வழி வகுத்து ஜாதியுணர்வை வளர்த்தது பெரியார்தான் என்று தெரியுமா? இன்று ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு சங்கம் வந்ததற்கு யார் காரணம்? பெரியார் வருகைக்கு முன்பே த்மிழ் நாட்டில் மதக் கல்வரம் ஏதும் நிகழ்ந்ததில்லை என்கிற வரலாறு தெரியுமா? வட நாட்டில் அது எப்போதுமே அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது என்பதாவது தெரியுமா? காரணம் அங்கு இஸ்லாமியத் தாக்குதலின் பாதிப்பு அதிகம் என்பதோடு அதற்கு அங்கு எதிர்ப்புணர்வும் கூடுதல் என்பது தெரியுமா? இங்கு மாலிக்காபூர் வந்தபோது த்மிழ் மன்னர் மூச்சுகூட விடாமல் அவன் சிறு எதிர்ப்புமின்றிக் கொள்ளையடித்தும் பெண்களைக் கவர்ந்தும் சென்றது கேள்விப்பட்டதுண்டா?

  த்மிழ் மொழி மீது பெரியார் என்றுமே மதிப்பு வைத்ததில்லை என்பதாவது தெரியுமா? ஆங்கிலத்திற்காகத்தான் இந்தியை எதிர்த்தேன் என்று அவர் வாக்கு மூலம் கொடுத்திருப்பதை அறிவீரா? தொல்காப்பியர், திருவள்ளுவர் தொடங்கி தமிழ்ப் புலவர்கள் அனைவரையும் சான்றோரையும் அவர் துரோகிகள் எனத் தூற்றிய்து அறிவீரா?

  இனி, மனோகரன் சொல்லும் பெரியார் செய்த சமூகப் புரட்சி யாது? அதனை ஆதாரப் பூர்வமாக அவரால் சொல்ல இயலுமா?

  இன்னும் எத்தனை காலம் பகுத்தறிவின்றிக் கண் மூடித்தனமாகப் பெரியார் பக்தியுடன் இருக்கப்போகிறீர்கள்? எனக்கு முட்டாள்கள்தான் வேண்டும் என்று அவர் சொன்னதால் அவர் போன பிறகும் முட்டாள்களாகவே இருப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்களா?

  தமிழ் நாட்டின் வரலாற்றைச் சரிவரப் படிக்கவே மாட்டீர்களா?

  அன்புடன், அக்கரையுடன், சத்தியபாமா என்னும்
  சராசரி அறிவுள்ள த்மிழச்சி.

 13. மனோகரனுக்கு ஒன்று சொல்ல மறந்தேன். பொதுவுடமைக் கட்சியினரும் ஊழல் செய்வதில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பத்ற்குக் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் ஆதாரங்கள் உண்டு. அத்ற்கு அந்த மாநிலங்கள் தொடர்பான செய்திகளைப் படிக்கத் தெரிய வேண்டும். மற்ற மாநிலங்களில் அதிகாரம் செலுத்த வாய்ப்பு இல்லாததால் அவ்ர்களால் ஊழல் செய்ய முடியவில்லை போலும்! ஆனால் எங்கும் தொழிற் சங்கம் என்ற பெயரில் தொழிலாளர்களைச் சுரண்டுவது தெரியமா?

  சத்தியபாமா.

 14. //ஆதிக்க சாதிகளால் ஆயிரம் ஆண்டுகள் அடக்கிவைக்கப்பட்டிருந்தவர்கள் பெரியாரின் முயற்சியால் இன்று சகல வசதிகளோடு வாழ்கிறார்கள்.//

  அட! ஸொம்மா ஒன்னோட இஸ்டத்துக்கு பேசர்த்துக்கு இது தி.க கூட்டம் இல்ல வாத்யாரே…., தமிழ் இந்து! இன்னா தெர்ஞ்சுக்கினியா?

  ஒரு பத்து நாள் முன்னால திண்டுக்கல்ல, மெய்கொவில்பட்டின்ற கிராமத்துல, இன்னா நடந்துச்சு தெர்மா? ஒரு தமிழ் இந்து தலித்து ஏஸ்து க்றிஸ்துங்க காலனீல செருப்பு போட்டுகினு நடந்தாருன்னுட்டு, அவுர அவுரோட செருப்பாலயே அட்ச்சு, அவுரு வாய்ல மலத்த திணிச்சு, சித்ரவத பண்ணிக்கரானுங்க கிறுஸ்து பார்டிங்க.

  அதே ஊர்ல நம்ம ஆள ஆஸ்பத்ரீல சேத்தாக்க ப்ரெச்சன பெர்ஸாயிரும் அப்டீன்னு, தூத்துக்குடில இட்டுனு போய் வச்சுட்டானுங்க போலீஸ் காரனுங்க. கிறுஸ்து பார்டிங்க அவுங்க காஸ்டு மந்திரி கைல ஸொல்லி மேட்டர் வெளில வராம அமுக்கிட்டானுங்க.

  நீ இன்னான்னா…ஈவெரா மொயற்சில அல்லாம் “சகல” வஸ்தியோட கீறானுங்கன்னு டைலாக் வுடுற, அஆங்!

  //இந்தியாவில் எங்கும் இல்லாதபடி தமிழ்நாடு சாதி மதச் சண்டை இல்லாமல் அமைதியாக இருப்பதற்கும் காரணமானவர் பெரியார்//

  அதே திண்டுக்கல் பக்கத்துல பெருமாள்கோயில்பட்டின்ற கிராமத்துல் இந்து வன்னியரு கோவில் முன்னால பொங்கல் கொண்டாட ஸொல்ல, கிறுஸ்துவ வன்னியனுங்க வெட்டிக் கொன்னுட்டானுங்க. அதையும் அவனுங்க மூடி மறெக்க பாக்கறானுங்க.

  திண்டுக்கல்ல முஸ்லிமுங்களும் கிற்ஸ்துங்களும் பண்ற அட்டகாசம் ரொம்ப மோஸமா போயிகினு கீது. தமில் நாடா, கேரளாவான்னு டௌட்டு வர்து நைனா!

  திண்டுக்கலு மட்டுமில்ல வாத்யாரே….தமில் நாடு முழ்சும் இப்டி தான் கீது,

  முந்தானாள், ஓமலூர் பக்கத்துல ஒரு பெருமாள் கோவில் திருவிழால திருமா ஆளுங்க கோவில் தேர எரிச்சுட்டானுங்க. இத்தினி வர்ஸமா ஊர்ல கீற மொதலியாருங்களும், தலித்துங்களும் ஒத்துமையா திருவிழா கொண்டாட ஸொல்ல ஒரு ப்ராப்லமும் இல்ல. ஊர் ஒத்துமையா இருந்தாத்தான் ஏஸ்து கிறுஸ்து பார்டிங்களுக்கு ஒத்துக்காதே! ஒடனே கிறுஸ்துவனுங்க அவனுங்க ஏஜெண்டுங்க கைல ஸொல்லி அவனுங்க தேர எரிச்சு ஊர ரெண்டாக்கிட்டானுங்க! அத்தொட்டு இப்ப ஊர்ல ஒரே ப்ரெச்சன!

  திருமா… மசூதி நுழைவு போராட்டம்னு ட்ராமா பண்றாரு; இந்து கோவில் தேர எரிக்கறாரு… ஆனாக்க ஒரு தலித்த ஏஸ்து பார்டிங்க மலத்த திங்க ஸொல்லி கொடும பண்றானுங்க… அத கண்டுக்க மாட்டேன்றாரு! இன்னா, புர்ஞ்சுக்கினியா அவுரு அர்ஸியல?

  நீ இன்னாடான்னா…..தமிழ் நாட்ல சாதி மத சண்ட ஒன்னியும் கடியாது, ஒரே அமைதியா கீது, அப்டீன்னு ஈவெரா பேர்ல டைலாக் வுடுற!

  //இந்த நாட்டில் தமிழ்மொழிக்குத் தலைமைப் பதவி
  கிடைக்கக் காரணமாக இருந்தவர் பெரியார்.//

  தமிழ் மொயி எப்பவும் டாப்ல தான் கீது. அதுக்கு ஈவெராவும் வாணாம்… தொரையும் வாணாம்… கலிஞரும் வாணாம்… இன்னா தெர்தா? இவுங்க அல்லாம் நேத்து வந்தவங்க… தமிழ் ஆய்ரம் ஆய்ரம் வர்ஸமா டாப்ல கீது! இவனுங்க ஸொன்னாலும் ஸொல்லாட்டாலும், அது டாப் தான்! செம்மொழி தான்!

  ஸொம்மா குந்திக்கினு, தமிழ் இந்துல வர கட்டுரைங்கள பட்ச்சு மூளைல ஏத்திக்க நைனா… அப்போ தான் இந்த மாரி டைலாக் வுடமாட்ட!

  // ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஊழலை சுட்டிக்காட்டி பெரியார் செய்த சமூகப் புரட்சியை மறைக்க முடியாது//

  சூப்பர் காமெடி வாத்யாரே! தமிழ் நாட்ல “புர்ச்சி” ஒன்னா, ரெண்டா? எத்தன கீது? புர்ச்சி தலைவரு… புர்ச்சி தலைவி… புர்ச்சி கலிஞரு… வாணாம் சாமி… ஆள வுடு.

  இன்னா… வர்டா…

  மன்னாரு.

 15. காய்த்த மரம் தான் கல்லடி படும். சுப்பு கட்டுரையின் தர்க்கம் எதிரணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது, விருதாஉரை அவர்களது சாபத்தில் தெரிகிறது. சகோதரர் சுப்புவின் நோக்கம் (தமிழ் ஹிந்துவின் நோக்கமும் கூட) நிறைவேறிவிட்டது. இத்தனை நாட்களாக இந்து மதம் பற்றியும் பாரதம் பற்றியும் காறி உமிழ்ந்து வந்தவர்களுக்கு, அவர்கள் மீது விமர்சனக் கணை பாய்ந்தவுடன் இருப்பு கொள்ளவில்லை. இதைப் பற்றி நாம பெருமை தான் பட வேண்டும்.
  திரு சுப்பு அவர்களுக்கு நன்றி.
  -சேக்கிழான்

 16. சுப்பு அவர்கள் பணி பாராட்டுக்கு உரியது. தமிழகத்தை பீடித்துள்ள வியாதி விரைவில் தீர்ந்திட இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் கைக்கூலிகள் மற்றும் வக்கிர புத்திக்காரர்களின் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இன்றைய திராவிட இயக்கங்கள் செயல் படுவதை தேசிய எண்ணம் கொண்டவர்கள் புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை – அரங்க. வரதராஜன்

 17. பெரியார் இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்டவர் அமைச்சர் ஆகமுடியுமா?ஒடுக்கப்பட்டவர் முதலமைச்சராக முடியுமா?பிற்படுத்தப்பட்டவர் நீதிபதி ஆக முடியுமா? இவர்கள் எல்லாம் முன்னுக்கு வந்துவிட்டார்களே என்று சிலர் பொருமுகிறார்கள். இவர்களுடைய மனத்தாங்கலைத்தான் சுப்பு ஜோடித்துக் கொடுத்திருக்கிறார்.

 18. தமிழகம் எங்கும் டாஸ்மாக் ஆறு ஓடுவதற்கும் ஊழல் இருட்டில் பொதுவாழ்வு புழுங்கிச் சாவதற்கும் குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறப்பதற்கும் பெரியாரின் சமூகப் புரட்சிதான் காரணம் என்பதையும் அறிவித்துவிடலாம்.மனோகரன் மகிழ்ச்சி அடைவார்.

 19. ஆயிரம் வருடங்களாக சமூகத்தின் ஒரு பகுதியினரை உயர் சாதி ஹிந்து சமயத்தவர் தொடக்கூடது என்று தள்ளிவைத்திருந்தார்கள்; இதை மாற்றிக் காட்டியவர் வெண்தாடி வேந்தர் பெரியார்.
  மன்னாரும் சுப்புவும் அதை மறந்துவிட்டு,ஒரே ஒருமுறை ஒரு கிறிஸ்தவர் கிராமத்தில் நடந்ததை ஊதிப் பார்க்கிறர்கள்.புத்தகத்தின் பெயரை திராபை மாயை என்று வைக்கவேண்டும்.
  சரி வர்ட்டா?

 20. //…திராபை மாயை என்று வைக்கவேண்டும்.
  சரி வர்ட்டா?//

  அட்றா சக்க… அட்றா சக்க… அப்டி போடு வாத்யாரே! மெய்யாலுமே சூப்பரா சொல்லிக்கினே நைனா!

  திராபைங்கள பத்தி எயுதின பொஸ்தகத்துக்கு “திராபை மாயை” ன்னு பேர் வெக்காங்காட்டி நல்லாத்தான் இருக்கும்.

  சுப்பு ஸார்! அட்த பாகம் எயுத ஸொல்ல இத்த மன்ஸுல வச்சுக்கினு எயுதுங்க. அல்லாம் முட்சுட்டு, பொஸ்தகத்துக்கு முன்னுரை எயுத ஸொல்ல, மறக்காம நம்ம இரும்பொறெக்கு ஒரு டாங்க்ஸ் ஸொல்டுங்க. ஸோக்கா டைடில் குட்துக்கறாரு, அஆங்!

  இன்னா வர்டா…

  மன்னாரு

 21. இரும்பொறை அவர்களே

  //
  ஆயிரம் வருடங்களாக சமூகத்தின் ஒரு பகுதியினரை உயர் சாதி ஹிந்து சமயத்தவர் தொடக்கூடது என்று தள்ளிவைத்திருந்தார்கள்; இதை மாற்றிக் காட்டியவர் வெண்தாடி வேந்தர் பெரியார்.

  //

  இப்போ டெய்லி எல்லாரும் எல்லாரையும் தொட்டு கட்டிபுடிச்சுகிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா – கலைஞர் டிவி மானாட மயிலாட மட்டும் பாத்திட்டு இப்படி சொன்ன எப்படி, இல்லை சாயங்காலமா டாஸ்மாக்ல பாக்குற காட்சிய வச்சு சொல்றீங்களா

  பெரியார் தான் தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லியே அவர்கள் மத்தியில் ஒரு “identity crisis” உண்டுபன்னார்- அப்படி சொன்ன தானே வீனா கோவம் வரும், வம்பு வளக்கலாம் – காந்தியோ நேர் மாறாக இவர்களை கடவுளின் மக்கள் (ஹரி ஜன்) என்று உயத்தி கூறினார்

  சமூக சீர் திருத்தங்கள் ஆயிரம் ஆண்டு காலமாக ராமானுஜர் தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது – கொஞ்சம் நந்தனார் சரிதம், ஆழ்வார்கள் வாழ்க்கை போன்றவற்றையும் படியும் – தமிழரின் பரந்த பண்பாடு புரியும்

  பெரியார் செய்தது முழுவதும் சுயநலதிர்க்காகவே – இதை தெள்ளத்தெளிவாக சுப்பு அவர்களும் மலர்மன்னன் அவர்களும் பற்பல ஆதாரங்களை காட்டி சொன்ன பிறகுமா உங்களுக்கு விளங்கவில்லை

  கடவுள் அனைவருக்கும் பகுத்தறிவை கொடுப்பாராக

 22. சாரங் சார், இவங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. அப்படி இருக்கறவங்க கிட்டபோய் இராமானுஜர், நந்தனார், திருப்பாண் ஆழ்வார் நு பேசுனா எப்படி? சரி, இரும்பொறை என்னதான் சொல்லறாருன்னு பாப்போமா??

  //ஆயிரம் வருடங்களாக சமூகத்தின் ஒரு பகுதியினரை உயர் சாதி ஹிந்து சமயத்தவர் தொடக்கூடது என்று தள்ளிவைத்திருந்தார்கள்; இதை மாற்றிக் காட்டியவர் வெண்தாடி வேந்தர் பெரியார்.
  மன்னாரும் சுப்புவும் அதை மறந்துவிட்டு,ஒரே ஒருமுறை ஒரு கிறிஸ்தவர் கிராமத்தில் நடந்ததை ஊதிப் பார்க்கிறர்கள்.புத்தகத்தின் பெயரை திராபை மாயை என்று வைக்கவேண்டும்.
  சரி வர்ட்டா?//

  அஹா, கிறித்தவ மிஷனரியும் வந்தாச்சு! சரி, நாம ஒன்னும் பதிலளிக்காம இருந்தா, அவங்க ஜெயிச்சிட்டமாதிரி மார்தட்டீப்பாங்க (இந்தன வர்ஷமா செஞ்சமாதிரி!).

  அய்யா இரும்பொறை, இந்து மதத்துல ஜாதிப் பாகுபாடு இருக்குனு எல்லாருக்கும் தெரியும். இத கண்டிபுடிச்சு சொல்ல ஒரு நியுடனோ ஐந்ச்டீனோ தேவையில்லை. ஆனால், நீங்க (kiristiyanunga) தான் ஏதோ “இயேசு கிரிஸ்துவோட பார்வையில எல்லாரும் சமம், கிரிச்டியாநிடியுல ஜாதி இல்லை” அப்படினெல்லாம் கதவிடரீன்களே, அப்படியிருக்க எப்படி கிரிச்டியனுங்க ஒரு தாழ்தப்பட்டவர மலம் திங்க வெக்கலாம்?? இதுக்கு போப் மோர்க்கொண்டு கிறித்தவ சமுதாயமே வெட்கப்படவேண்டும்… இதுதான் நீங்க சொன்ன ‘சமத்துவம், சகோதாத்துவம், சாக்கடையா’?????? ஒருதடவை நடந்தா என்ன, ஆயிரம் தடவை நடந்தா என்ன? தப்பு தப்புதானே?????????????? ஒரு கொலை செஞ்சாலும் தூக்குதண்டனைதான், பத்தாயிரம் பெயர கொன்னாலும் தூக்குதண்டனைதான்.. ஒரு கொலைதான் பண்ணானு மன்னிச்சா விடறாங்க?????
  இந்த அல்ப கேள்வியெல்லாம் எங்கள டச் கூட பண்ணது சார். தர்க்கம், விதர்கம், குதர்க்கம் மூணுமே எங்களுக்குத் தெரியும்….

  சரி, நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் விடையளித்து விட்டேன்.. இப்பொழுது நான் கேட்கிறேன், ஏதோ ‘பகுத்தறிவு’ நு சொல்றீங்களே, அது உண்மையிலேயே இருந்த விடயலீங்க பாப்போம்:-

  இந்து மதத்துல ஜாதி பிரிவு இருக்கு அதனாலே BC, MBC, OBC, DNC, SC, ST நு இட ஒதுக்கீடு தரோம், சரி! முஸ்லீம் மற்றும் கிறித்தவ மதத்துல ஜாதியே இல்லை, ‘சமரசம், சமத்துவம், சகோதரத்துவம்’ னெல்லாம் சொல்றீங்களே.. அப்படீன்னா ஏன் முஸ்லீம் மற்றும் கிறித்தவர்களுக்கும் இந்த ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு?????? “இயேசு கிறிஸ்து முன்பு அனைவரும் சமம், நபிகள் நாயகம் சல்லல்லாஹு முன்பு அனைவரும் சமம்” னுதானே சொல்றாங்க? அப்படி இருக்கையில் எப்படி நாடார் கிறிஸ்டியன்ஸ், தலித் கிறிஸ்டியன்ஸ், BC முஸ்லீம், MBC முஸ்லீம் நு எல்லாம் சொல்றீங்க????????

  இதுக்கு பதில் சொல்லுங்க, நீங்க எல்லாம் சொல்றமாதிரி பெரியார் மானுட குலத்தின் தெய்வம்னு ஒத்துக்குவோம்! முடியுமா?? எங்க தேடினாலும் இதுக்கு பதிலிருக்காது.. ஏன்ன பவுண்டு கனன்குல கடச்ச பவுண்டு, கிலோ கணக்குல கடச்ச டாலருந்தா இதுக்கெல்லாம் காரணமே ஒழிய வேறென்ன???

 23. பங்கு கேட்டால் பதட்டம், நீதி கேட்டால் நிலை தடுமாட்டம் இதுதானே ஹிந்துக்களின் அறம்.
  அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது பெரியார் இல்லாமல் நடந்திருக்குமா?திராவிட சக்தி இல்லாமல் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆக முடியுமா?
  இந்தப் புத்தகம் தொடராக வந்த போது பகுத்தறிவாளர் தமிழ் ஓவியா தொடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒதுங்கியவர் சுப்பு.இவரைப் பாராட்ட ஒரு கூட்டம் இங்கே உலவுகிறது.
  .திராபை மாயை என்றால் திராபையால் எழுதப்பட்டது என்று பொருள்.

 24. //அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது பெரியார் இல்லாமல் நடந்திருக்குமா?//

  பெரியார் ஆரிய/திராவிட இனவாதம் உண்மை என்றார். ஆனால் அண்ணல் அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லையே!

  ”சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக்காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்க வந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும் பிறராலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு அடக்கி மிருகமாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ”
  (நூல் ”திராவிடர் ஆரியர் உண்மை)

  ”ஆரியர்கள் என்பது ஒரு தனி இனம் அல்ல, ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை”
  (நூல்:- சூத்திரர்கள் யார்?)

  Dr.Bhimarao Ramji Ambedkar, who is considered to be the Godfather of the downtrodden thoroughly rejected the Aryan/Dravidian racial myth. It was nothing but a Colonial propaganda by the British to rule India and also to spread Christianity. See his “Who were the Shudras?”. Dr.Ambedkar points out to Rig Veda (6.22.10) which states that the Dasyus (the so-called Dravidians) being transformed as Aryans, and also Rig Veda (10.49.3) which states that bad Aryans being degraded as Dasyus. Thus Dr.Ambedkar himself showed that the terms ‘Aryan’ and ‘Dasyu’ were not racial. Further he states that such racial translations and interpretations of Prof.Max Muller and Ralph Griffith are ‘childish’. (Who were the Shudras?, Chapter-4). Some other points from Dr.Ambedkar’s works:-

  1. The Vedas don’t mention ‘Aryan’ as a race.

  2. The Vedas do not mention anything like an ‘Aryan invasion’ on the ‘native Dasyus’.

  3. There is no proof in the Vedas to say that the words ‘Aryan’ and ‘Dasyu’ were racial!

  4. The Vedas do not mention anything that the so-called Aryans had a different complexion from the Dasyus.

  He further shows Rig Veda (6.22.10) which says “Oh Indra! You transformed evil people into good ones, and Dasyus into Aryas with your grace. Similarly help us to win over our enemies”.

  Dr.Ambedkar further says:- “The word ‘Aryan’ is just for respect, and not for a race. What the Colonial Indologists have suggested is not true. It has not been proved at all. The supposed Invasion is a myth. It is neither proved that the ‘Aryans’ came from outside, nor the ‘Dasyus’ were indigenous people!”.

  //திராவிட சக்தி இல்லாமல் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆக முடியுமா?//

  டாக்டர்.அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் போது (2002). ஆனால், திராவிட சக்தியான கலைஞர் கருணாநிதி தான் ‘பெண்ணுரிமை’ என்ற பெயரில் டாக்டர்.அப்துல் கலாமை நீக்கி திருமதி.பிரதீபா படேல் குடியரசுத் தலைவராக காங்கிரசுக்கு ஆதரித்தார். ஆகவே, இதுவும் போச்சு…

  //இந்தப் புத்தகம் தொடராக வந்த போது பகுத்தறிவாளர் தமிழ் ஓவியா தொடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒதுங்கியவர் சுப்பு.இவரைப் பாராட்ட ஒரு கூட்டம் இங்கே உலவுகிறது.
  .திராபை மாயை என்றால் திராபையால் எழுதப்பட்டது என்று பொருள்.//

  ‘மாயை’ என்ற சொல் ‘மாயா’ என்ற சமஸ்க்ருத மொழிச்சொல்லிலிருந்து வந்தது!
  திரு.ம.வெங்கடேசன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ‘பகுத்தறிவாளர்’ தமிழ் ஓவியா பதிலைக்கவில்லையே. மேலும், நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் நீங்கள் வேறு எதையோ சொல்கிறீர்கள், பாவம்!

 25. //அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது பெரியார் இல்லாமல் நடந்திருக்குமா//
  //திராவிட சக்தி இல்லாமல் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆக முடியுமா?//

  இதைக் காட்டிலும் பிதற்றலகள் இருக்க முடியுமா? சுய முயற்சியால் அம்பேத்கர் முன்னேறியதற்கும் )அதனை அடையாளம் கண்டு ஊக்குவித்தோர் மேல் சாதியினர் என்று கருதப்பட்டவர்கள்தாம்) பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?. அம்பேத்கர் காலம், வாழ்ந்த இடம், தேசிய அரசியலில் அவர் வகித்த பாத்திரம் இவைபற்றியெல்லாம் சிறிதாவது தெரியுமா? மேலும் பெரியார் அம்பேத்கரைச் சந்தித்துத் தமது கிறிஸ்தவ மிஷனரி சார்பு ஆரிய-திராவிடக் கொள்கை விளக்கம் அளித்த போது, ’’உங்கள் வாதம் விலை போகாத சரக்கு, ஆரியராவது திராவிட ராவது’’ என்று விமர்சித்து அனுப்பியவர் அம்பேத்கர்! இந்த் சரித்திர உண்மைகூடத் தெரியாமல் பெரியார் பக்தி என்னும் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதா?

  அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக உயர்ந்தது அவரது சுய முயற்சியால். இட ஒதுக்கீடு சலுகையால் அல்ல. இட ஒதுக்கீடு என்பதாக ஒரு ஏற்பாடு இல்லாத காலத்தில் சுய முயற்சியின் காரணமாகப் பரம ஏழையான மேல்சாதி, நடுச் சாதி, கீழச் சாதி என எல்லாத் தரப்பினரும் உயர முடிந்துள்ளது. சுய முயற்சி இன்மையால் ஒதுக்கீடு கிடைத்தும் முன்னே றாது போனவர்களும் உண்டு!

  பெரியார் மயக்கத்தில் அம்பேத்கரையும் அப்துல் கலாமையும் அவமதிக்கா தீர்கள்!

  ஒதுக்கீடு இருந்தால்தான் முன்னேற முடியும் என்று எண்ணுவதே சுய மரியாதைக்கு இழுக்கு என்பதை உணராதவர்கள் சுயமரியாதை இயக்கத்தவர் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் விசித்திரத்தை என்ன சொல்வது?

  பெரியார் பிறக்கு முன்பே தமிழ்ச் சமுதாயத்தில் சுய முயற்சியால் முன்னேறியவர்கள் அனைத்து சாதியிலும் உண்டு என்கிற அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் கண்மூடித்தன்மாக பெரியார் பஜனை செய்வதுதான் பகுத்தறிவா?

  பெரியார் போதையிலிருந்து விடுபடுவீர், என் திராவிட மாயை அண்ணன் மாரே! நம் அனைவரும் ஹிந்துக்கள். கிறிஸ்தவரும் முகமதியரும் கூட, அண்மைக் காலம் வரை ஹிந்துக்களாய் இருந்தவர்கள்தானே! தொன்மை மிக்க ஹிந்து சமுதாயத்தின் அங்கம் எனப் பெருமை கொள்ளுங்கள். ஹிந்து சமூகம் பெரும்பானமையாகவும் பிளவுபடாமலும் இருக்கும் வரைதான் நீங்கள் தைரியமாகப் பகுத்தறிவின் பெயரால் நாத்திகம் பேச முடியும்!
  சத்யா

 26. இரும்பொறை அவர்களே

  //
  அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது பெரியார் இல்லாமல் நடந்திருக்குமா?
  //

  ஆஹா ஆஆஹா என்னே பெரியார் பக்தி – சந்தடி சாக்கில் அம்பேத்காருக்கு ஆச்சார்யர் பெரியார் என்று சாதித்தாகிவிட்டது

  நீங்கள் நிதமும் காலையில் அர்ச்சனை செய்ய இதோ இன்னும் கொஞ்சம்
  பெரியார் இல்லாமல் பெரியாறு (ஆறு) தான் இருக்குமா போற்றி போற்றி
  பெரியார் இல்லாமல் மத்ய பிரதேசம் இன்று ஜாதி சண்டை இல்லாமல் இருக்குமா
  பெரியார் இல்லாமல் இன்று அந்தமான் நிகோபார், கர்நாடகம் ஜாதி சண்டை இல்லாமல் இருக்குமா
  பெரியார் இல்லாமல் தந்தை பெரியார் பேருந்துதான் இருக்குமா
  பெரியார் இல்லாமல் மார்டின் லூதர் கிங் தான் இருப்பாரா
  பெறியார் இல்லாமல் ராஜா ராம்மோகன் ராய்தான் இருப்பாரா
  பெரியார் இல்லாமல் புதுமை பெண் கண்ட பாரதி தான் இருப்பாரா
  பெரியார் இல்லாமல் காந்திக்கு சமத்துவ எண்ணம் வந்திருக்குமா
  பெரியார் இல்லாமல் சர்தார் பட்டேலுக்கு எழுச்சிதான் எது
  பெரியார் இல்லாமல் சுபாஷ் சந்திர போசிர்க்கு வீரம் தான் எது
  பெரியார் இல்லாமல் இன்று “BC, MBC, SC/ST” ஏது
  “BC, MBC, SC/ST” என்று எங்களுக்கு மேன்மை வகுத்துகொடுதவா போற்றி போற்றி
  உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவா போற்றி போற்றி
  தொண்டர்களை முட்டாள் என்றவா போற்றி போற்றி
  முட்டாள் தொண்டர்களை கொண்டவா போற்றி போற்றி
  என் அய்யனே போற்றி போற்றி
  தள்ளட்டதிலும் குமரிக்கு வாழ்வளித்தவா போற்றி போற்றி
  (சு) விசேஷமே போற்றி போற்றி சிறிய கண்ணா போற்றி போற்றி
  கழக கண்மணியே போற்றி போற்றி
  கழகம் நீயே போற்றி போற்றி கண்ணும் நீயே போற்றி போற்றி
  முரண்பாடு நீயே – உன் துண்டோ கருப்போ, தாடியோ வெளுப்பு
  கழக தலையும் நீயே கழவாலும் (கழகக் காரன் என்று பொருள் கொள்க) நீயே
  (கழகத்தின்) உள்ளும் நீ (கழகத்தின்) புறமும் நீ
  (கழகத்தின்) காரணமே (கழகத்தின்) கர்த்தாவே நீ
  கழகமே நீ பகுத்துஅறிவு நீ, நீ மட்டுமே, நாங்கள் இல்லை இல்லவே இல்லை (கற்பூரம் அதிது சத்தியம் செய்கிறேன், தீங்க உடைக்கடுமா இல்லை தீ மிதிகட்டுமா என்னை நம்பு நாங்கள் வெறும் சொம்பு)

  மஞ்சள் துண்டு போட்டவரிடம் மட்டும் பேசும் நீ என்னையும் ஆட்கொள் – மஞ்சள் மஞ்சளாக பேசாவிடினும் பரவாஇல்லை பச்சை பச்சையாகவினும் என்னுடன் பேசு

 27. சில விழயங்களை நண்பர் இரும்பொறை விட்டுவிட்டார்.அப்பாலோ விண்கலத்தில் சென்று நிலவில் அமெரிக்கர் கால்பதித்தற்கும் சைனாவில் மாசேதுங் ஆட்சியைப் பிடித்ததற்கும் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்க மெடல் வாங்கியதற்கும் காடுகளில் மிருகங்களின் எண்ணிக்கை குறைவதற்கும் கல்லடியால் மாங்காய் விழுவதற்கும் காலையில் அனைவரும் கழிப்பிடம் போவதற்கும் பெரியார்தான் காரணம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியமே செய்யலாம்.

 28. –<>–

  பகுத்தறிவாளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் ஈ வே ரா வின் அடிமைக் கும்பல் எப்படி நாத்திகம், பகுத்தறிவு என்ற பெயரில் அண்டப் புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை அள்ளி வீசி எல்லோரையும் மடையர்களாக்கி பிழைப்பு நடத்துகிறது என்பதற்கு, இரும்பொறை என்பவர் மேலே திருவாய் மலர்ந்து அருளி இருக்கும் வரைமுறையில்லாத வரலாற்றுப் பொய்களே சாட்சி.

  திரு இரும்பொறை அவர்களே ஏன் இதோடு நிறுத்தி விட்டீர்கள்? ஆகாசப் புளுகு புளுகலாம், தப்பே இல்லை என்பதுதான் உங்கள் கூட்டத்தின் கொள்கை ஆயிற்றே. பட்டியலை ஏன் சுருக்கி விட்டீர்கள்? கொஞ்சம் விலாவாரியாகப் போட வேண்டியது தானே? அதையும் தமிழ்ஹிந்துவில் edit செய்யாமல் போடச் சொல்லிக் கேட்கலாமே?

  சரி உங்களுக்காக நானே அந்தப் பட்டியலைத் தருகிறேன். இதோ:

  அம்பேத்கரை அரசியல் சட்ட வரைவுக் குழுவில் நியமிக்கும் அரசாணையில் கையெழுத்திட்டதே ஈ வே ரா தான்.

  அம்பேத்கர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் viceroy council ல் தொழிலாளர் துறையின் பொறுப்பாளர் ஆனதற்குக் காரணமே ஈ வே ரா தான். அதற்காக பிரிட்டன் பொய் நேரடியாக பிரிட்டிஷ் அரசோடு போராடி அதைச் சாதித்ததே ஈ வே ரா தான். ( அந்த அரசாணையில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமருக்கே ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ஈ வே ரா தான். ஆனால் ஏமாற்று வேலைகளில் கில்லாடியான வெள்ளைக்கார குள்ளநரிக் கூட்டம், இந்தியாவில் இருந்த ஆரிய, பார்ப்பன இனவெறிக் கூட்டத்துடன் கூட்டாக சூழ்ச்சி செய்து இந்த வரலாற்று உண்மையை மறைத்து விட்டு ஒரு திராவிடனின் வரலாற்று சாதனையை இருட்டடிப்பு செய்து விட்டதாக ஒரு மணி நேரம் முன்னர் என் கனவில் வந்து சொன்னது – நம்புங்க சார் – சாட்சாத் ஈ வே ரா தான். பகுத்தறிவுத் தந்தையின் தற்போதைய பகுத்தறிவு வாரிசான மானமிகு வீரமணியார் அவர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்லி உடனடியாக பிரிட்டிஷ் அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரச் சொல்ல வேண்டும். )

  அம்பேத்கர் படித்த சட்டக் கல்லூரியில் அவருக்கு சட்டப்பாடம் எடுத்த பேராசிரியரே ஈ வே ரா தான்.
  அம்பேத்கரை அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படிக்க அனுப்பியது ஈ வே ரா தான்.
  அட அவ்வளவு ஏன்? கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அம்பேத்கருக்குப் பாடம் நடத்தியதே ஈ வே ரா தான்.

  இந்தியா 2020 புத்தகத்தில் இந்திய வளர்ந்த நாடாகப் பரிணமிக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்றெல்லாம் திரு அப்துல் கலாம் எழுதி இருக்கிறாரே அதெல்லாம் அவருடைய சொந்த சரக்கல்ல. அதை எல்லாம் கலாமுக்குக் கற்றுக் கொடுத்ததே ஈ வே ரா தான்.

  அப்துல் கலாம் இஸ்ரோ விலும் DRDO விலும் பணியாற்றிய பொது அவருக்கு ராக்கெட் பற்றியும் செயற்கைக்கோள் பற்றியும் ‘ஆனா ஆவன்னா’ சொல்லிக் கொடுத்ததே ஈ வே ரா தான்.

  இந்தியாவின் ஏவுகணைகள் தயாரிப்புத் திட்டங்களின் மூளையே ஈ வே ரா தான். ஈ வே ரா, அப்துல் கலாம் வீட்டு சமையல் அறையில் ஒளிந்து கொண்டு வெளியுலகத்துக்குத் தெரியாமல் அப்துல் கலாமுக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். அதையெல்லாம் கண்மூடித் தனமாக மனப்பாடம் செய்து விட்டு வந்து தனது அலுவலத்தில் உட்கார்ந்து கொண்டு தானே சிந்தித்துச் செய்ததுபோல் நடித்து நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டார் அப்துல் கலாம்.

  அட இவ்வளவு ஏன்? அப்துல் கலாம் aeronautics படித்த கல்லூரியில் அவருக்கு aeronautics கற்றுக் கொடுத்த ஆசிரியரே ஈ வே ரா தான்.

  எப்படி எல்லாம் நம் நாட்டுக்காகப் பாடுபட்டார் ஈ வே ரா? மற்றப் பிரபலமானவர்கள் எல்லாம் அவர்கள் கற்பனையிலும் எட்ட முடியாத உயரங்களை எல்லாம் எட்டுவதற்கு ஏணியாகச் செயல்பட்டவர் ஈ வே ரா தான். ஆனால் ஈ வே ரா வால் பயன்பெற்ற பிரபலங்கள் ஒருவர் கூட – அம்பேத்கர், அப்துல் கலாம் உட்பட – ஈ வே ரா தங்களுக்க்ச் செய்த இமாலய உதவியைப் பற்றி இந்த உலகத்தோர் முன்னிலையில் மூச்சு கூட விடவில்லை. சே! என்ன ஒரு வரலாற்றுத் துரோகம்?

  பகுத்தறிவு, சாதா அறிவு, இன்னும் இந்த உலகில் எத்தனை வகை அறிவு உண்டோ, அவற்றுக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருந்து, இந்த உலகுக்கே அறிவை wholesale ஆக சப்ளை செய்தவர் ஈ வே ரா தான். அதனால் தான் அவரைப் பகுத்தறிவுப் பகலவன் என்று இந்த உலகம் முழுதும் வாழும் ஆறரை பில்லியன் மக்களும் போற்றுகின்றனர்.

  இரும்பொறை சார் “அது சரி ஈ வெ ராவின் இந்த சாகசப் பட்டியலைப் பார்த்தால் யாரவது நம்புவார்களா?”ன்னு கேக்கறிங்களா? அட, சாதா அறிவு உள்ளவனுங்க இதை நம்பமாட்டனுங்கன்னு நமக்குத் தெரியாதா? இந்த ஆர்ய, பார்ப்பன அடிவருடிக் கூட்டம் எப்பவுமே மானமுள்ள திராவிடர்களின் இமாலயச் சாதனைகளை மூடி மறைக்கரவனுங்க தானே? அவனுங்களைப் பத்தி நமக்கு என்னங்க கவலை? நம்ம மானமிகு பகுத்தறிவுக் காவலர்கள் தங்கள் அடிமைகளை மூளைச் சலவை செய்ய syllabus தயாரிக்கும் போது இந்த மாதிரி ஏடாகூடமா எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது. “கேள்வி கேக்கறவன் எல்லாம் எனக்கு வேண்டாம். நான் சொல்றதை அப்படியே கேக்கற முட்டாள் கூட்டம் தான் எனக்கு வேண்டும்” ன்னு நம்ம பகுத்தறிவுப் பகலவனே சொல்லி இருக்காரே! நம்ம தலைவரின் பொன்மொழியை அதுக்குள்ள மறந்துட்டா எப்படி சார்?

 29. எத்தனையோ பேரை காணாமல் போகச் செய்தவர் பெரியார். சுப்புவின் சலசலப்புக்கு பெரியாரின் வழிவந்தவர்கள் அஞ்சுவதில்லை.தமிழ் ஓவியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் சுப்புவைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன்.

 30. பெரியாரின் சிந்தனைக்கு முன் ஆயிரம் எழுத்தாளர்கள் மண்டியிட்டு விட்டார்கள் .யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்கு வணக்கம் செய்கிறது.பெரியாரின் வழிவந்த அண்ணாவை அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைத்திருக்கிறது.சுப்புவைப் பாராட்ட ஒரு பள்ளிக்கூடமாவது முன்வருமா?

 31. அய்யா இரும்பொறை அவர்களே,

  //எத்தனையோ பேரை காணாமல் போகச் செய்தவர் பெரியார்.//

  இத்தனையோ பெரியார்களை காணாமல் போகச் செய்துள்ளது இந்து மதம்!

  //சுப்புவின் சலசலப்புக்கு பெரியாரின் வழிவந்தவர்கள் அஞ்சுவதில்லை.//

  எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்துக்கள் அஞ்சுவதில்லை!

  //தமிழ் ஓவியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் சுப்புவைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன்.//

  நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள், பெரியாரை மானுட குலத்தின் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று நான் சொன்னேன்.. ஆனால் எந்த வெங்காயமும் காணும்….

  //பெரியாரின் சிந்தனைக்கு முன் ஆயிரம் எழுத்தாளர்கள் மண்டியிட்டு விட்டார்கள்//

  உங்கள் பெரியாரைப் போல ஆயிரம் மடங்கு பகுத்தறிவாளர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த வோல்டயர். அவர் கூறிய ஒரு வாக்கியத்தைக் கூறுகிறேன்:-

  “” I am convinced that everything has come down to us from the banks of the Ganga (Ganges), – astronomy, astrology, metempsychosis, etc.”

  ” It is very important to note that some 2,500 years ago at the least Pythagoras went from Samos to the Ganga (Ganges) to learn geometry…”

  இவரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களுக்கு ‘பெரியார் புராணம்’ தவிர வேறு எதுவும் தெரியாதே?

  //.யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்கு வணக்கம் செய்கிறது.பெரியாரின் வழிவந்த அண்ணாவை அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைத்திருக்கிறது.சுப்புவைப் பாராட்ட ஒரு பள்ளிக்கூடமாவது முன்வருமா?//

  “வெள்ளைக்காரன் இதைச் செய்தான், வெள்ளைக்காரன் அதைச் செய்தான்” நு வார்த்தைக்கு வார்த்தை மார்தட்டுநீங்களே? நீங்க கேவலம் நு சொன்ன “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” நு வெள்ளைக்காரன் இன்னைக்கு தெருவுல பஜனை செய்யறானே, அதை எங்கே சொல்ல? நீங்க கொஞ்சம் ‘விடுதலை’, ‘முரசொலி’, இந்தேல்லாம் நிறுத்தீட்டு மத்ததையும் படிச்சீங்கனா அமெரிக்காவோட ‘நியூஸ்வீக்’ பத்திரிக்கயுல ஒரு கட்டுரை வந்துது. அதோட தலைப்பு “We are all Hindus now”.

  //America is not a Christian nation. We are, it is true, a nation founded by Christians, and according to a 2008 survey, 76 percent of us continue to identify as Christian (still, that’s the lowest percentage in American history). Of course, we are not a Hindu—or Muslim, or Jewish, or Wiccan—nation, either. A million-plus Hindus live in the United States, a fraction of the billion who live on Earth. But recent poll data show that conceptually, at least, we are slowly becoming more like Hindus and less like traditional Christians in the ways we think about God, our selves, each other, and eternity.

  The Rig Veda, the most ancient Hindu scripture, says this: “Truth is One, but the sages speak of it by many names.” A Hindu believes there are many paths to God. Jesus is one way, the Qur’an is another, yoga practice is a third. None is better than any other; all are equal. The most traditional, conservative Christians have not been taught to think like this. They learn in Sunday school that their religion is true, and others are false. Jesus said, “I am the way, the truth, and the life. No one comes to the father except through me.”

  Americans are no longer buying it. According to a 2008 Pew Forum survey, 65 percent of us believe that “many religions can lead to eternal life”—including 37 percent of white evangelicals, the group most likely to believe that salvation is theirs alone. Also, the number of people who seek spiritual truth outside church is growing. Thirty percent of Americans call themselves “spiritual, not religious,” according to a 2009 NEWSWEEK Poll, up from 24 percent in 2005. Stephen Prothero, religion professor at Boston University, has long framed the American propensity for “the divine-deli-cafeteria religion” as “very much in the spirit of Hinduism. You’re not picking and choosing from different religions, because they’re all the same,” he says. “It isn’t about orthodoxy. It’s about whatever works. If going to yoga works, great—and if going to Catholic mass works, great. And if going to Catholic mass plus the yoga plus the Buddhist retreat works, that’s great, too.”

  Then there’s the question of what happens when you die. Christians traditionally believe that bodies and souls are sacred, that together they comprise the “self,” and that at the end of time they will be reunited in the Resurrection. You need both, in other words, and you need them forever. Hindus believe no such thing. At death, the body burns on a pyre, while the spirit—where identity resides—escapes. In reincarnation, central to Hinduism, selves come back to earth again and again in different bodies. So here is another way in which Americans are becoming more Hindu: 24 percent of Americans say they believe in reincarnation, according to a 2008 Harris poll. So agnostic are we about the ultimate fates of our bodies that we’re burning them—like Hindus—after death. More than a third of Americans now choose cremation, according to the Cremation Association of North America, up from 6 percent in 1975. “I do think the more spiritual role of religion tends to deemphasize some of the more starkly literal interpretations of the Resurrection,” agrees Diana Eck, professor of comparative religion at Harvard. So let us all say “om.”//

  Source:- https://www.newsweek.com/id/212155

  வெங்காயம் இல்லை, கத்திரிக்கா இல்ல, வெண்டைக்கா இல்ல, பூசினிக்கா இல்ல, கோயம்பேடு காய்கறி அங்காடியே வந்தாலும், இந்து மதத்தை அசைக்க முடியாது சார்!

 32. இரும்பொறை அவர்களே

  //
  .யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்கு வணக்கம் செய்கிறது.பெரியாரின் வழிவந்த அண்ணாவை அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைத்திருக்கிறது.சுப்புவைப் பாராட்ட ஒரு பள்ளிக்கூடமாவது முன்வருமா?

  //

  சற்று சிந்தித்து பார்கிறேன் – நாம சரியாதானே பேசறோம் ……

  பெரியார் வழி வந்த திராவிடத்தின் இன்றைய கருவூலமானா பெனிபிட் பன்ட் புகழ் வீரமணியையும் தான் அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைக்கவில்லை, அன்ன அறிவாயத்தில் ஜனான சாமதியிலேயே இருக்கும் கலைஞர் அவர்களையும் அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைக்கவில்லை, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, அட கலைஞர் தயவால் ஆட்சி புரியும் சோனியா இப்படி யாரையும் அழைக்கவே இல்லையே – நாம வேணும்னா இதற்காக ஒரு நாள் கடற்கரையில் உன்ன விரதம் இருப்போமா?

  நீங்கள் பேசுவதை, எழுதுவதை சற்றே சிந்தித்து பார்த்தல் உங்களுக்கு பெரியார் விரும்பிய குண ஞானங்களுடன் கூடிய சிறந்த தொண்டர் என்பது விளங்கிவிடும். – நான் சொன்னதிலேயே முன்னுக்கு பின் முரண்பாடு உள்ளதோ?

 33. சுப்புவுக்கு வாழ்த்து சொல்ல தாமதம் ஆகிவிட்டது. Better late than never .

  இது நல்ல முயற்சி. பெரியாரை சுற்றி ஒரு ஒளி வட்டம் உருவாக்க நடக்கும் முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. என் வாழ்த்துக்கள்.

  இந்த புத்தகத்தைப் பற்றி நான் எழுதிய பதிவு இங்கே – https://koottanchoru.wordpress.com/2010/01/25/தமிழ்-ஹிந்து-தளத்தின்-போ/

 34. EVR’s policies took a beating even in his lifetime. He likened the thaali to a do’s collar but he himself conducted self respect marraiges by “blessing” the thali.

  He termed cine makers as “kooathadis” but all his followers had cineme links.

  He termed all politicians as scoundrels who are after money but he always supported the party & politicians in power.

  He criticised old men marrying young girls but he did exactly that.

  He talked about women emancipation but in real life????

  He was forced to eat humble pie even during his life time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *