பறிக்கப்படும் இந்துக்களின் இடஒதுக்கீடும் வாழ்வுரிமைகளும்

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை
திருப்திபடுத்தும் தன்மையில் வளரும் அரக்கத்தன்மை!

மூலம் : பேராசிரியர் ராகேஷ் சின்ஹா
தமிழில்: பி. சிவகுமார், பத்மனாபபுரம்

justice-ranganath-mishra1வரலாற்றில் ஏற்படும் தவறுகள், பிரமைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகியவற்றை நாம் ஆண்மையோடு எதிர்க்கவில்லையெனில் அது மீண்டும் தலைதூக்க நேரிடும். நாம் விட்டொழிக்க வேண்டியதை விடாததால் தேசப்பிரிவினை வரை நாம் ஏற்க வேண்டியதாயிற்று.

தேசப் பிரிவினைக்குப் பின் எல்லா தலைவர்களும் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. முஸ்லிம் லீக் அல்லது முஸ்லிம் சமுதாயத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கு காலனி ஆதிக்கத்திலிருந்தே வளர்ந்து வந்துள்ளது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வது அதில் ஒன்று. முஸ்லிம்கள் ஏழைகள்; கல்வி அறிவு இல்லை; பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதைப்  போன்ற விஷயங்கள் காரணங்களாகக் கூறப்பட்டன. 1909 ல் துவங்கி சிறிது சிறிதாக 1947ல் பிரிவினையில் முடிந்தது. பாரதம் சுதந்திரம் அடைந்தபின் காஜி செய்யது கரிமுதின் முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டபோது சர்தார் பட்டேல் அதற்கு பின்வருமாறு பதிலளித்தார்.

sardar-vallabai-patel-iron-man’அன்பு நண்பருக்கு,

தாங்கள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மாறிவரும் சூழ்நிலைகளைச் சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியதை பெற்று விட்டீர்கள். உங்களுக்கு தனிநாடு கிடைத்துவிட்டது. அத் தனிநாடு உருவாவதற்கு பாகிஸ்தானில் உள்ளவர்கள் மட்டுமல்ல, நீங்களும் அதற்குப் பொறுப்பாளிகள்தான். இதற்காக தான் நீங்கள் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் விரும்பியது கிடைத்தபின்பு, இனி உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஹிந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிறுபான்மையினரான நீங்கள் பிரிவினைக்காக போராட்டம் நடத்த தலைமை தாங்குவது விசித்திரமாக உள்ளது. இது ஏன் என்றே புரியவில்லை. நீங்கள் விரும்பிய பிரிவினை உங்களுக்கு கிடைத்துவிட்டது. இளைய சகோதரனின் அன்பைப் பெறுவதற்காக அவனுக்கு தேவையான பொருள்கள் கொடுத்தபின்பும் கூட மீண்டும் மீண்டும் கேட்பதை நான் ஏற்றுக்கொள்ளவா? ஒரு பிரிவினை வேண்டும் என்று கேட்டு, என்னை அதற்கு பதில் அளிக்கத் தூண்டியுள்ளீர்கள். எங்களுக்கும் சிறிது விவேகம் இருக்கிறது. இறைவனின் விருப்பம் இதுவே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.’

1947, ஆகஸ்ட் 28 ஆம் தேதி சர்தார் பட்டேல் நாடாளுமன்றத்தில் தனது உறுதியான தீர்மானத்தை சபையில் முன்வைத்தார். ஆனால் இன்று அதே மாமன்றத்தில் மதத்தின் அடிப்படையில் பிரிவினைவாத இட ஒதுக்கீடு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. ஓட்டுக்காக, பேராசைப்பட்டு நாடாளுமன்ற நெறிமுறைகள் மறந்து செயல்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை முஸ்லிம் தலைமையை விட செக்யூலரிஸம் பேசுவபவர்கள்தான் நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டுகின்றனர். 13% ஓட்டுக்காக பாரதத்தின் நிகழ்கால, கடந்தகால, எதிர்கால வரலாறு புறந்தள்ளப்படுகிறது. ஒரு கமிஷனுக்குப்பின் அடுத்து ஒன்று என அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி ஆகியவற்றின் நோக்கமும், செயற்பாடுகளும், அறிக்கைகளும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கின்றன.

சச்சார் கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முழுஅளவில் விவாதம் செய்யாமலே நடைமுறைப் படுத்தப்பட்டது. சச்சார் கமிட்டியின் அறிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அதன்பின் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும் வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 18ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை 2007, மே 22ல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பரிந்துரைக்கப்பட்டவைகள் அப்போதிலிருந்தே வெளிப்பட்டுவிட்டது. சச்சார் கமிட்டி மாநிலத் தலைநகரங்களில் இரண்டு நாள்கள் முகாமிட்டு முஸ்லிம்களின் உண்மை நிலை அறிந்துகொண்டதாம், முஸ்லிம் சமுதாயத்தை ‘பின்தங்கிய வகுப்பினர்’ என்று அறிவித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியதாக இருப்பதாக பாரத சமுதாயத்தைக் குற்றவாளியாக்கி குறை கூறிற்று. இவ்வாறு கூறப்பட்டது கூட நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.

சச்சார் கமிட்டி ‘செழிப்பான பூமி’ என்ற திட்டத்தின் கீழ் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டியை பின்தொடர்ந்து தனது வேலையை ஆரம்பித்தது.

hindus-statusரங்கநாத் மிஸ்ரா கமிஷன், அரசு வேலைகளில் 15% இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு தரவேண்டும் என்று கூறியிருக்கிறது. இதில் 10% முஸ்லிம்களுக்கும் 5% ஏனைய சிறுபான்மை சமூகத்தினருக்கும் கொடுக்க சிபாரிசு செய்திருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டிலிருந்து தரவேண்டும் என்றும் பரிந்துரை செய்யதிருக்கிறது. 27% இட ஒதுக்கீட்டில் 8.4% சிறுபான்மையினருக்கும் தரவேண்டும். எனவும், அதில் 6% முஸ்லிம்களுக்கும், 2.4% அந்நிய சிறுபான்மையினருக்கும் தரவேண்டும். பாரத நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு என்பது சொல்லப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட வேண்டுமாயின் அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

முஸ்லிம்களுக்கு, பின்வாசல் வழியாக அதிக உதவி செய்ய வேண்டும் என சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் கூட்டாகச் சேர்ந்து முயற்சிக்கிறது. பொருளாதாரத்தில் அவர்கள் பின்தங்கி இருப்பதாகவும், கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், சமூக அந்தஸ்து தாழ்ந்து இருப்பதாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

திரு. அலி அன்வர்தலித் முஸல்மான்’ என்ற நூலை எழுதினார். 2005 ஆம் ஆண்டு ‘ஜென்ரிக் போல் பவுண்டேசன்’ இந்நூலை வெளியிட்டது. 15% முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துக்கள் எனவும் தங்களின் அடிப்படை இங்கேதான் எனவும், சொந்த மண்ணில்தான் தனக்கு உரிமை தேடுகிறார்கள்; ஆனால் சில பேர்கள் தங்களின் முன்னோர்கள் அரேபியர்கள் எனவும், பாரதம் என்பது தங்களுக்கு வாடகைவீடு போன்றுதான் எனவும் பலவிதமான விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவாதங்கள் நேர்மறையாக இருந்தால் இதற்குத் தீர்வு காணமுடியும் என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம், ஜாதி மற்றும் தீண்டாமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்  முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் பரம்பரையான அரசியல் ஆட்சியாளர்களும் கூட இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சொல்லப் படுகிறது. அவ்வாறு எனில் ‘பின் தங்கிய ஜாதி’ என எப்படி வந்தது? ‘தலித் முஸ்லிம்’ எப்படி வந்தது? இந்த இரண்டிற்கும் என்ன அடிப்படை உண்மை இருக்கிறது?

முஸ்லிம் சமுதாயம் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அஸரஃப் செய்யது, பட்டாணி, மல்லிக், முகல் ஆகிய பிரிவைச் சார்ந்தவர்கள் உயர்ந்த ஜாதிப் பிரிவினராகக் கருதப்படுகிறார்கள்.

அஜலஃப் – இவர்கள் பின்தங்கிய ஜாதிகளாக கருதப்படுகின்றனர்.

முகலாயரின் ஆட்சிக் காலத்தில்தான் துப்புரவு பணி மற்றும் ஆடைகள் சுத்தம் செய்வதற்காக தனி ஜாதிப் பிரிவு உருவாக்கப்பட்டதாக எழுத்தாளர் அலி அன்வர் குறிப்பிடுகிறார்.

இடைக்காலங்களில் கூட மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பாகுபாடு உருவாயிற்று. இதற்குச் சான்றாக தில்லியை முகம்மது-பின்- துக்ளக் ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அவரது சபையில் பணியாற்றிய ஜியாவுதீன் பர்னி (த பத்வா – எ – ஜஹாங்தாரி) மூலமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று முகம்மது-பின்- துக்களக்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவர்கள் (கீழ்ஜாதியிலிருந்து முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் ) கல்வி அறிவு பெற தகுதியற்றவர்கள் எனவும், கல்வி புகட்டல் இவர்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது எனவும், அறிவு ஆற்றல் பெற கீழ்ஜாதிகள் தகுதியற்றவர்களாக சித்தரிக்கப்பட்டனர். குரானில் கூறப்பட்டுள்ள இறைவனை வழிபட மட்டும்தான் இவர்களுக்கு உரிமை தவிர அது படிக்கவோ, அல்லது கல்வி அறிவு பெற முயற்சித்தாலோ கடுமையான தண்டனைகளுக்கு ஆட்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்க்க நினைப்பது மிகவும் தந்திரமான சூழ்ச்சியாகும், இட ஒதுக்கீடு என்ற போர்வையை வைத்துக்கொண்டு வசதியாக வாழ வழிவகை செய்வதுதான். பர்னி, அன்வர். எலாஜ் அலி இவர்கள் கூறுவது போன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பு இருப்பின் மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி உண்மை நிலவரம் என்ன என்பதறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் ஏதேனும் செய்யலாம். உண்மையில் முஸ்லிம் சமூக அமைப்பில் சாதிப் பிரிவுகள் உண்டா? தீண்டாமை அவர்களிடமும் இருக்கிறதா? அவ்வாறு இருப்பின் சட்டத்தின் உதவியுடன் அவர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையை மாற்றுவது அவசியம் தானே? மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் தங்களின் ஜாதி, பிரிவு, தலித் இவைகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்களா? முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் உண்மையான நிலை என்ன? அவர்கள் கல்வி அறிவு பெறுவதும், வேலைகளுக்குச் செல்வதும் சுயமாகச் சிந்தனை செய்து தன்னிறைவு அடைவதற்கும் ஏன் மதத்தில் அடிப்படையில் கடுமையான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன? திருமணம், மணமுறிவு, சொத்துகள் சேர்த்தல் போன்றவற்றில் அவர்களின் முடிவுகள் ஏன் ஏற்கப்படுவதில்லை? இதுபோன்ற பெரும் பிரச்சினைகளை ஆராய்ந்து ஜனநாயக மரபுப்படி இவற்றிற்கு உரிய தீர்வு காண்பது தேச நலனுக்கு மிகுந்த தேவையாகும்.

ஜாதி, இன, பேதங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வராமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் கோரும் சிறுபான்மை வாதம் முழுவதும் ஓட்டு வங்கியை மையமாக வைத்துதான் செயல்படுகிறது. ஆகவே சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் கொஞ்சமேனும் நேர்மையாக அறிக்கை தாக்கல் செய்ய விரும்பினால் முஸ்லிம்களின் சமுதாய அமைப்பு, பண்பாடு போன்ற கேள்விகளுக்கு விடை காண முயன்றால் உண்மை நிலவரம் நிச்சயம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். இவ்வாறு செய்தால் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கித் திட்டம் தோல்வியுற்றுவிடும்.

acharya-kripalani1955 ஆம் ஆண்டு ஆச்சார்ய கிருபளானி நாடாளுமன்றத்தில் ஹிந்து சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்றபோது எடுத்துக்கூறிய வார்த்தைகளை இன்று நாம் கவனிக்க வேண்டும். “நமது நாடு ஜனநாயக மரபுகளை கடைப்பிடித்து வாழும் நாடாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் சட்டம் இயற்றப்படக்கூடாது. ‘நமது சட்ட அமைச்சர், ஒருவருக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது என்பதை எல்லா சமுதாயத்தினருக்கும் அமல்படுத்த தயாராக இருக்கிறாரா? இது உண்மையில் மதச்சார்பற்ற நாடாக இருப்பின் ஏன் இந்தப் பாகுபாடு? ஒரு சமுதாயத்தினருக்கு ஜனநாயக மரபும், இன்னொரு சாராருக்கு மதத்தின் அடிப்படையிலான வழியுமா? பெருவாரியாக வாழும் சமுதாயம் மட்டும் மரபை கடைப்பிடித்தால் போதாது? அரசும் அவசியம், அரசிற்குரிய மரபும் கூட எது நேர்ந்தாலும் கடைப்பிடித்தே ஆகவேண்டும்.”

திரு. கிருபளானி அவர்கள் அரசு கடைபிடிக்க வேண்டிய மரபுகள் குறித்து குறுப்பிட்டுள்ளார். அது எக்காலத்திற்கும்  பொருத்தமாக இருக்கும் சிறப்புடையது. ஆனால் தற்போது மரபுகள் யாது என கேள்வி கேட்பதே மரபாகக் கருதப்படுகிறது.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கும் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் உரிமை அளிக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக குடியரசுத் தலைவரின் ஆணை 1950, பத்தி – 3ஐ ரத்து செய்யப் பரிந்துரைக்கிறது. இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பிற்பட்ட மக்களின் தற்போதைய சமூக நிலைப்பாடு, பொருளாதார நிலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் அளவுகோல்கள் என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும் எனவும் பத்தி 3 நீக்கப்பட்டு அவற்றில் ’தலித்துகள்’ என்று கூறப்படுகின்ற முஸ்லிம், கிறிஸ்தவர்களையும் சேர்த்து, அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரவேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் மத்தியில் பிரிவினைகள், வேற்றுமைகள், ஒத்துழையாமை போன்றவை ஏற்படுத்தும்.

ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். தேசிய அளவில் பல்நோக்குக் குழு அமைக்கப்பட வேண்டும். நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்போது சிறுபான்மையினருக்கும் எளிதில் கடன் கிடைக்கும். முஸ்லிம் சமுதாயத்திற்கு மத அடிப்படையில் சலுகைகள் வழங்கவேண்டும் என்றும் இஸ்லாம் கூறியுள்ளபடி கடன் வழங்கவும், வசூல் செய்தலும் வேண்டும். ஆகவே கமிஷன் மதத்தின் பேரில் அநீதியை பெரும்பான்மைச் சமுதாயத்திற்கு இழைக்க நினைக்கிறது. மதச்சார்பின்மை என்பதைக் காட்ட பாடத்திட்டங்களும், கல்விக்கூடங்களும் சமமாக அமைய வேண்டும்.

சச்சார் கமிட்டியின் பரிந்துரையைத் தொடர்ந்து இக்கமிஷனும் அதே பரிந்துரைகளை முன்வைக்கிறது. சுனிந்தா நிலையங்கள், அலிகார் பல்கலைக்கழகம், ஜாமியாமிலியா இஸ்லாமியா போன்ற பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி பிரச்சாரம் செய்யவும், அவர்களை கல்விக்கு அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டிய நடைமுறைகளும் அரசு செய்ய வேண்டும். முஸ்லிம்கள் நடத்தும் எல்லா பள்ளி, கல்லூரிகளுக்கும் மிக அதிக அளவில் பொருளாதார உதவிகள் செய்தல் வேண்டும். உணவு பழக்கங்கள் கூட மத அடிப்படையில்தான் அமையவேண்டும். நகர்ப்புறங்களில் நடக்கும் மதச்சடங்குகள் கிராமப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்காக ‘நரேகா’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடும், ஏனைய சிறுபான்மையினருக்கு 5% இட ஒதுக்கீடும் அரசுதான் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

இஸ்லாமியர்களின் வளர்ச்சி விகிதத்தை கருத்தூன்றி கமிஷன் ஆய்வுசெய்து நோக்கின் பாரதத்தில் முஸ்லிம்களின் நிலை என்ன என்று அறிய முடியும். 53 உறுப்பு நாடுகளில், இந்தோனேஷியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா, எகிப்து ஆகிய முஸ்லிம் நாடுகளில் 50 கோடி முஸ்லிம் மக்கள் ஏழைகளாக வாழ்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், சூடான், மொசாம்பிக், துருக்கி, நைஜர் போன்ற நாடுகளில் 60 கோடி ஏழை முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாரதத்தில் 1953 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வரம்பு முறை மீறிய கோரிக்கை எழுந்து வருகிறது.

டி. இ. ஸ்மித் குறிப்பிடுவதாவது:

“பாரதம் ஒரு மதச்சார்பற்ற நாடு. பாரதத்தில் அரசு ஊழியர் பணிகளுக்கு தேர்வு வாரியங்கள் மூலமாக தேர்ந்து எடுப்பது மிகவும் சிறப்பானதாகும். மைசூரில் 20% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஆனால் அரசு வேலைவாய்ப்பில் 23% முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே பாரத நாடு மதச்சார்பற்ற தன்மையாக நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.”

ஆனால் இம்மாதிரிப்பட்ட சிறந்த உதாரணங்களை ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கருத்தில் கொள்ளவேயில்லை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மற்றும் சச்சார் கமிட்டி தேசத்தின் பாதுகாப்பு, வசதிகள், உள்கட்டமைப்புகள், தேச நலன் ஆகியவற்றைப் பற்றி சிறிதும் சிந்தியாமல் மத அடிப்படையில் எதிர்விளைவை உருவாக்கும் தூண்டுதலோடு அளித்திருக்கும் அறிக்கை, தேச நலனுக்கு விடுத்துள்ள மாபெரும் சவாலான கேள்வியாகும். இன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் தங்களுக்கு தனி நாடு பிரித்துக்கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.

முஸ்லிம் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் இபனிஸ் முகமது, பாரதத்தில் எங்களுக்கு என்று ஒரு தனி நிலை வேண்டும். அதாவது பாரதத்தில் 15% நாங்கள் வாழ்வதால் 15% நிலப்பகுதி எங்களுக்குத்தான் சொந்தம் என்ற மாறுபாடுடைய மனநிலை இருப்பதுடன், சமூக, பொருளாதார நிதிகூட தங்களுக்கு என்று தனியாக இருக்க வேண்டும்’ என்று விரும்புகிறார்.

‘இந்த தேசத்தில் எவரும் சிறுபான்மையினர் அல்லர். இத்தேசத்தின் நடைமுறையில் உள்ள் தேர்தல் நிலவரங்களினால் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. தேசத்தில் உள்ள அனைவரும் ஒன்றுதான். ஆட்சிமுறைப் போராட்டங்களினால் தான் இம்மாதிரி நிலைகள் ஏற்படுகின்றன’ என்றார் தஜ்முல் ஹுஸைன். அவரது உண்மை கூற்றுக்கள் முஸ்லிம்களுக்கு விரோதமானது என்று தவறாகச் சுட்டப்படுகிறது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளை நாம் நல்ல முறையில் செவிமடுக்கவில்லையெனில், மீண்டும் ஒரு 1947 போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய தருணம் ஏற்பட்டு தத்தளிக்கக்கூடும்.

[பேராசிரியர் ராகேஷ் சின்ஹா, தில்லிப் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறை (political science) பேராசிரியர்.  India Policy Foundation என்ற அமைப்பின் இயக்குனரும் ஆவார்.]

நன்றி: விஜயபாரதம்  12-02-2010 இதழ்

21 Replies to “பறிக்கப்படும் இந்துக்களின் இடஒதுக்கீடும் வாழ்வுரிமைகளும்”

  1. இப்போதாவது நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால், மிகப்பெரும் தவறினை செய்தவர்களாகின்றோம்.

  2. அருமையான கட்டுரையை தமிழில் தந்த ஆசிரியர் குழுக்கு நன்றி. தூங்கிக் கொண்டிருக்கும் நம்மில் பலரை, இக்கட்டுரை விழித்துக் கொள்ள வைக்கும் என்று நம்புவோம்.

    இதைப் போலவே ” டெய்லி பயோனீர் ” இதழில் சகோதரி அனுராதா தத் எழுதிய கட்டுரை ஒன்றையும் இவ்வலைத்தளத்திற்கு வரும் நண்பர்கள் பார்க்கலாம். அதற்கான இணைப்பு

    https://www.dailypioneer.com/235191/Say-no-to-Muslim-quota.html

    அதிலுள்ள சில முக்கியமான வரிகளை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.

    /// This move is totally in contravention of Islam, which is based on the premise of equality of all men and women, whose allegiance is to god. Provisions for caste and quotas go against the spirit of Islam .
    But their apparent willingness to avail of reservations on the basis of backwardness — a criterion alien to Islam and even Manusmriti — betrays duplicity.///

    நன்றி – டெய்லி பயோனீர்

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  3. //
    நாம் விட்டொழிக்க வேண்டியதை விடாததால் தேசப்பிரிவினை வரை நாம் ஏற்க வேண்டியதாயிற்று.
    //
    🙂
    நச் என்று உரைக்கனும்.

    இந்த அரசு இனிமேல் கீழ்க்கண்ட படியெல்லாம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

    இனி நாட்டில் உள்ள 30% சாலைகளுக்கெல்லாம் இஸ்லாமிய பெயர் வைக்க வேண்டும்.

    30 % பேர் கட்டாயமாக பாரசிக மொழி கற்க வேண்டும் – பள்ளிகளில் உருது, அரபிக் மொழி வழி கல்வி வேண்டும் – அரபிக் மொழியே இந்தியாவின் பொது மொழியாக கொள்ள வேண்டும்.

    நமது நாட்டில் 30 % இஸ்லாமியர் தான் இருக்க வேண்டும் – அதற்காக ஹிந்துக்களை நாடு கடத்த வேண்டும்.

    30 % ஹிந்துக்கள் மீசையில்லாமல் தாடி வைக்க வேண்டும், குல்லா போடவேண்டும்.

    30 % கடைகளில் இனி perfume முக்கு பதில் அத்தர் தான் விக்க வேண்டும்.

    இனி 30 % தினங்களில் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஹைதராபாத் பிரியாணிதான் போட வேண்டும்.

    30 % காஜா பீடி, செய்யது பீடி தான் விற்பனை செய்ய வேண்டும்.

    இனி யாரும் பன்றி கறி உண்ணக் கூடாது – இஸ்லாமியர் நிறைய பசு மாமிசம் உண்ணலாம்.

    எல்லோரும் ரம்ஜான் நோன்பு இருக்க வேண்டும் – ஏகாதசியாவது மணாங்கட்டியாவது – அன்னிக்கு காலைல தான் சிக்கன் சாப்பட முடியுமா இல்ல சாயந்தரம் தாம் ஆறு கிலோ கோழிய அப்படியே வெட்ட முடியுமா – துவாதசி அன்னிக்கு அகத்தி கீரை சாப்பிடணுமாம் – அந்த கீரை சாப்பிடும் ஆட்டையும் சேத்துல்ல எங்களுக்கு வேணும்!

    ஹைதராபாத் தான் இந்தியாவின் தலை நகரம் –

    இனி இரண்டு பிரதமர் தேர்ந்து எடுக்க வேண்டும் [ஒரு முஸ்லிம் இன்னொருவர் சோனியா சொல்லும் டக்கு வாத்து] ஐந்து ஆண்டில் இரண்டு ஆண்டு முஸ்லிமே ஆட்சி செய்வார்.

    இனி இஸ்லாமியரை யாரும் தொடக் கூடாது – அவர்களெல்லாம் மடி – அவர்களை பார்த்தல் துண்டு இடுப்பில் கட்ட வேண்டும் – இனி இஸ்லாமியர்க்கென்று தனி குளம் வெட்டப்படும் – தனி metro water line அராபியாவிலிருந்தே போட படும்.

    இனி எல்லா ஹிந்துக்களும் தங்களது பிள்ளைகளின் ஒரு பாதி பெயரை முஹம்மது என்று தான் வைக்க வேண்டும் – சங்கர ராம முஹம்மது தாசன் என்று தாச திருநாமம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

    இன்னும் எவ்வளவோ இருக்கே… எழுத கை வலிக்குதுப்பா!

    (edited and published)

  4. நன்றி , உங்கள் கட்டுரைக்கு . இந்த (ஹிந்து) தேசம் 300 ஆண்டுகள் முஸ்லிம்களிடம் அடிமையா இருந்தது , 300 ஆண்டுகள் வெள்ளையனிடம் அடிமையா இருந்தது. காரணம் என்ன தெரியுமா அன்று நம் மன்னர்களிடம் ஒற்றுமைஇல்லை இன்று நம் (ஹிந்து)மக்களிடம் ஒற்றுமை இல்லை . இன்றும் நம் ஆட்சி ஆளர்கள் இத்தாலி நாட்டினர் கட்டளையை கேட்டுத்தான் நடக்கின்றநேர்

  5. அய்யா அர்ஜுன்,
    அப்படியெல்லாம் இல்லை. இந்து மன்னர்களும் இந்து மக்களும் வீரதீரமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஒற்றுமையுடன் தான் போரிட்டு இருக்கிறார்கள்.
    ஆனால் இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும் அறப்போர் புரிபவர்கள் அல்லர். அவர்கள் ஒழுக்கக்கேடான போர் முறை தந்திரங்கள் மூலமே வெற்றி பெற்றார்கள் பல போர்களில்.
    இருந்தும் அவர்களால் இந்தியாவில் உள்ள இந்துக்களை மதம் மாற்ற முடியவில்லை. ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்.

    உலகத்தில் இஸ்லாமியர் போன இடமும் கிறிஸ்துவர்கள் போன இடமும் உடனே மதம் மாற்றப்பட்டிருக்கிறது.

    இந்தியா தவிர.

    இஸ்லாமியர்களாலும் கிறிஸ்துவர்களாலும், இந்துக்களை மட்டும் தோறகடிக்கவே முடியவில்லை. போரில் தோற்றாலும், அவர்களை மன ரீதியில் தோற்கடிக்கவே முடியவில்லை.

    முகலாய பேரரசால் இந்தியாவில் மதம் மாற்றப்பட்டவர்கள் இந்து மன்னர்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இந்துக்களாக மதம் மாறினார்கள். ராஜஸ்தானமும், ஹரியானாவும் உத்தரபிரதேசத்திலும் ஏராளமான மக்கள் மீண்டும் இந்துக்களாக ஆனார்கள். அது வரலாறு.
    இஸ்லாமோ கிறிஸ்துவமோ உலகத்தில் நிலை பெற்று நிற்காது. இந்து மதத்தை அழிக்கவும் முடியாது.

    உலக ஆன்மீக தர்மமாக ஆகப்போவது இந்து மதமே. கிறிஸ்துவ கல்டோ, இஸ்லாமிய கல்டோ அல்ல.

  6. Botoom line:What we Hindus can do about these Muslim quota? We need action. I am sure all hindu readers are aware of all the rubbish that is going on in India against our religion.What we need is practical workable measures to counter all anti hindu activities.

  7. //Rama
    What we need is practical workable measures to counter all anti hindu activities.//

    Rama…only practical workable measure is ‘unity’. But do we have that? A hindu will ask ‘unitya..kilo enna vela’. Every hindu is seperated in the name of caste and caste based politics. If an article like ‘adi mudi theidiya puranam’ is published in this site to show the greatness of the brahman, then there is a hue and cry in this group itself saying that its talking bad about one god. Given this case, how can we create unity?

    We have to come out such things and create a vote bank. Untill then nothing can stop such atrocities.

  8. இதுல ஹிந்துக்கள் செய்ய என்ன இருக்கு
    நம்மளால ஒரு …..புடுங்க முடியாது.

    CHRISTAVA மிநோரிட்டிகளுக்கு எதாவது இதனால் பேதங்கள் ஏற்பட்டால் சோனியா சிந்திக்க வாய்ப்புள்ளது
    இல்லையேல் அப்படி ஒரு நிலை ஏற்படும் பொழுது அந்த வகுப்பு சார்ந்த எதிர்ப்பு ஏற்பட்டால் உண்டு
    இதெல்லாம் புரியாத ஹிந்துக்கள் இதை பற்றி எதிர்ப்பது மிகவும் தூரம், சிந்திப்பது கூட கிடையாது – ட்ரைன் மிஸ் ஆயிடும்ல,, பஸ் போய்டுச்சுன்ன, என் பய்யன் அமெரிக்காவுல இருக்கான் அவன் கிட்ட இருந்து போன் வரும்

    அப்படியே செய்யும் ஹிந்துக்கள் – ஹிந்துத்வாவாதிகள் என்று அடையாளம் காட்டப் படுவார்கள்

    அதுக்கப்புறம், நந்திதா தாஸ் அதப் பத்தி படம் எடுப்பாங்க
    SHARUKH KHAN பேட்டி எடுப்பாங்க .
    BHARKHA DUTT – LIVE COVERAGE , why is this country so much agnostics about minority rights ???

  9. கவலை படாதீர்கள். ஹிந்து மதம் என்றும் நிலைத்து நிற்கும். ஹிந்து மதம் எளிமையானது மற்றும் அனைவராலும் எளிதில் பின்பற்றகூடியது.

  10. “True equality has never been and never can be on the earth. How can we all be equal here? This is impossible kind of equality implies total death. Inequality is the basis of creation. At the same time the forces struggling to obtain equality are as much a necessity of creation as those which destroy it” Swamiji

    மேலே குறிப்பிட்டுள்ள விவேகாநத்தரின் கூற்றுபடி ஒரு சமமான நிலையை அடைய நாம் எப்பொழுதும் போராடிக்கொண்டே இருக்கிறோம். இந்த சமநிலையை அடையவே உச்சநீதிமன்றம் 50 விழுக்காடுகளுக்குமேல் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியுள்ளது. இதைமீறினால் முன்னேற்றம் அடைந்தவர்களை பின்னுக்குதள்ளும் அபாயம் உருவாகும் என்பதால். உச்சநீதிமன்றத்தை மதிக்காமல் நமது தமிழக அரசு 69 விழுக்காடுகள் இடஒதுக்கீடு அளித்துவருகிறது. இதையே மற்ற மாநில அரசும் பின்பற்றமுயலுகிறது. இதன் வெளிப்பாடே சிறுபான்மையினருக்கு இடம் ஒதுக்க முயலுவது ஆகும். இதனால் பின்படுத்தப்பட்ட இந்துக்களின் இடஒது்க்கீட்டை விழுங்குகிறோம் என்பதை உணராமல் ஓட்டுக்காக சிறுபான்மையின் முதுகை தடவிக்கொண்டருக்கிறார்கள்.

    சசார் கமிஷன் மிஸ்ரா கமிஷன் என்ற கமிஷன்கள் இந்துக்கள் இஸ்லாமியருக்கு இதுநாள் வரை துரோகம் இழைத்துவிட்டார்கள் என்றும் இனிமேல் இந்தியாவின் எல்லாதுறைகளிலும் முன்னுரிமையை இஸ்லாமியருக்குதான் அளிக்கவேண்டும் என்று நமது பிரதமமந்திரியும் முன்மொழிகிறார்.

    சிறுபான்மையினர் என்பது இஸ்லாமியர் மட்டுமே என்ற நோக்கில் காங்கிரஸ் அவர்களது ஓட்டுவங்கியை முழுமையாக பெறவிரும்புகிறது. எனவே சசார் கமிடியின் பரிந்துரைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறது. இதற்க்காக முந்தியவருடம் ஒதுக்கிய தொகை 1000 கோடிக்குமேல். இதில் 200 கோடி மௌலானா எஜீகேசணல் பவுண்டேசனுக்கு 45 கோடி மதராஸகளை புதுப்பிப்பதற்கு 13 கோடி உருதுமொழி முன்னேறத்திற்கு இதைதவிர 554 இடங்களில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள இடங்களில் பாங்குகள் அமைபதற்கு என்று பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது. இதற்குபேர்தான் ஸெக்யூலரிஸமா.

    சசார் கமிஷன் அறிக்கைபடி 3.1 சதவிகிதமே முஸ்லீம்களே பட்டபடிப்பு படித்துள்ளார்கள் 1.2 சதவிகிதமே உயர் பட்டபடிப்பு படித்துள்ளார்கள். முல்லாக்களின் ஆணைபடி மதராஸாகளுக்கு சென்றால் எவ்வாறு முன்னேருவது. இந்த லஷ்சணத்தில் மதராஸாவில் படித்தவர்களுக்கு பல்கலை கழகத்திற்கிணையான பட்டம் அளிக்கவேண்டும் என்று அர்சுண்சிங் கூறுகிறார். சிறந்த மதவாதி (மதவெறி) என்றா ?

    யு.என். சட்டப்படி 10 சதவிகிதத்திற்குமேல் ஒரு மதத்தினர் மொத்த மக்கள் தொகையில் இருந்தால் அவர்களை சிறுபான்மையினராக கருதக்கூடாது. உண்மை நிலவரப்படி முஸ்லீம் கிருஸ்துவர்கள் இந்த சதவிகிதத்தை தாண்டிவிட்டார்கள். பிறகு ஏன் இந்த சிறுபான்மை கமிஷன். இதை முதலில் தடைசெய்யவேண்டும். உலகில் இந்தியாவைதவிர வேறு நாடுகளில் சிறுபான்மை கமிஷன் கிடையாது.

    வேண்டும் என்றால் இந்த 50 சதவிகிதத்திற்குள் எல்லாவிதமான இடஒதுக்கிட்டையும் கொண்டுவருவதுதான் சகஜ நிலைமையை உருதிப்படுத்தும்.

    இந்துக்களின் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுகிறது என்று பார்போம்.

    1. பெரும்பான்மையான மாநிலங்களில் பிராமிணர்களை தவிற மற்ற உயர் ஜாதியின் பல உட்பிரிவை ( OBC/MBC ) யாக அறிவித்துள்ளார்கள். இந்த உயர் ஜாதியினர் நொடிப்பொழுதில் போலிசான்றிதழ் பெற்று ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறே (OBC to SC to ST) பிரிவுக்கு போய் ஆதாயம் அடைகிறார்கள்.
    2. இதை ஒரு அரசாணை ழூலம் இவ்வாறு போலிசான்றிதழ் பெற்றவர்கள் தாமாக முன்வந்து ஒப்புகொண்டால் அவர்களுக்கு சிறிய அபராதம் விதித்து மன்னித்துவிடலாம். மற்றவர்களை அடையாளம் கண்டு சிறையில் வைக்கவேண்டும்
    3. இந்த போலிகள்தான் இன்று அரசியலை ஆக்கிரமித்துள்ளார்கள் அதிக இடஒதுக்கீட்டிற்கு குரல் கொடுக்கிறார்கள் கீரீமி லேயரை எதிர்கிறார்கள்.
    4. மேலும் இவ்வாறு ( OBC/SC/ST) குடும்பங்களில் உள்ள எல்லோரும் இடஒதுக்கிட்டால் படிப்பிலும் வேலையிலும் பயன் பெற்றபின் அவர்களின் குழந்தைகளுக்கு மீண்டும் சலுகை அளிப்பது என்னவிதத்தில் நியாயம் ஆகும். இவர்களது பெயர்களை ஒர் அரசாணைமூலம் (Gazette) வெளியிடவேண்டும். அப்படிசெய்தால்தான் இந்த பயன் மற்றவர்களுக்கும் போய்சேரும்.
    5. இந்து மதத்தை தவிர மற்ற மதத்தில் ஜாதிகள் கிடையாது எனவே இவர்களுக்கு ஜாதி அடிப்படையில் இட ஒதுகீடு கிடையாது என்று சட்டம் வகுத்துள்ளார்கள். ஆனால் மதம்மாறிய பலரும் தனதுபழய ஜாதியையும்விடாமல் அதற்கு ஒர் சான்றிதழ் மதம் மாறியதற்கு ஒர் சான்றிதழ் வைத்துக்கொண்டு பொதுபங்கிலும் சிறுபான்மையினர் கல்விகூடங்களிலும் ஊடுருவிறார்கள். இதை யாரும் தடுப்பதாகதெரியவில்லை.
    6. இதைப்போல் உயர் ஜாதியில் ஒர் ஆணோ பெண்ணோ கீழ் ஜாதியில் மணம்முடித்தால் அவர்களது சந்நிதிகள் இடஒதுக்கீட்டில் உயர் ஜாதி பிரிவில்தான் சேர்கவேண்டும்.
    7. இப்பொழுது உயர்மேல் பட்டபடிப்பில் கீரிமி லேயர் (வசதி உள்ளவர்களை) அடையாளம் கண்டுள்ளனர். (அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது) இதற்கு முதலில் 2.5 லஷ்சம் வருடாந்திற வருமானம் இலக்கு என்றார்கள். இதை இந்த போலிசான்றிதழ் அரசியல்வாதிகள் ஏற்கவில்லை. எனவே இதை இப்பொழுது 4.5 லஷ்கமாக உயர்திஉள்ளார்கள். ஆனால் பொதுமக்களின் வருடாந்திறவருமானம் 1.5 லஷ்கத்திற்குமேல் இருந்தால் வருமானவரி செலுத்தவேண்டும். இதையும் 4.5 லஷ்சமாக மாற்றி சமுக நீதியை நிலைநிறுத்த வேண்டியதுதானே ?
    8. கல்வியில் இடஒதுகீடு அளித்து முன்னேற்றியபின் வேலைவாய்பிலும் இடம் ஒதுக்குவது ஏற்புடையதா ? இத்தோடு நில்லாமல் பதவி உயர்விலும் இடம் ஒதுக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
    9. கல்வி இடஒதுக்கீட்டில் ஒருவர் பொது பிரிவிலும் ஒதுக்கப்கட்டபிரிவிலும் போட்டி போடலாம். பொதுபிரிவில் இடம் பெற்றால் பொதுபிரிவில் உள்ள ஒருவனுக்கு இடம் குறைவது பற்றி ஒருவரும் சிந்திப்பதில்லை அதனால் ஒதுக்கப்கட்டபிரிவில் ஒர்இடத்தை குறைத்துக்கொள்வதும் இல்லை. ஒதுக்கப்கட்டபிரிவில் பூர்தியாகவில்லை என்றால் இதை காரிஒவர் (Carry over) செய்கிறார்கள். என்ன நியாயமோ!
    10. கல்வியை அளித்தவர்கள் கூடவே சிறந்த நற்பண்புகளை போதிக்க தவறிவிட்டார்கள். அதன்பலனை நாம் இன்று கண்கூடாக காண்கிறோம். நிர்வாக திறமைஇன்மை லஞ்சலாவண்யம் கொடிகட்டி பறக்கிறது மக்கள் அவையிலும் மாநிலஅவையிலும் அடிதடி ரகளை கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள் மருத்துவர்கள் வக்கீல்கள் தெருவில் இறங்கி பேட்டை ரௌடிகள் போல் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். இன்று மிதமுள்ளது நீதீபதிகள்தான். அவர்களும் தெருவில் இறங்கும் காலத்தை எதிர்நோக்கி போய் கொண்டிருக்கிறோம்.
    11. நாங்கள் மேல்ஜாதியினர் என்ற மோகம்போய் எங்களையும் கிழ்ஜாதியாக அறிவிக்கவேண்டும் என்று போராட்டம் நடக்கிறது.
    12. எனவே கீரிமி லேயர் என்ற கொள்கையே நீண்டகால சமநிலையை ஏற்படுதும். இதில் வேண்டுமானால் 2 அல்லது 3 பிரிவாக பிரிக்கலாம். இதுவே ஜாதிமுறையை ஒழிக்கும்

  11. Reservation a threat to national integrity
    https://www.expressbuzz.com/edition/story.aspx?title=%E2%80%98Reservation%20a%20threat%20to%20national%20integrity“artid=hD379c15tGw=”type=

    LUCKNOW: The Lucknow Bench of the Allahabad High Court has stressed the need to end reservation, saying that its continuation is dividing society and poses the greatest threat to national integrity.The Bench, comprising Justice Devi Prasad Singh and Justice V D Chaturvedi, on Friday nullified the Uttar Pradesh government policy under which one of the two posts of chief engineer in the Irrigation Department was being filled through reservation.The Bench also nullified the government decision of August 27 last by which Chief Engineer, Design and Planning, was appointed under reservation policy “in contravention of the existing constitutional provisions.’’ Referring to the victory of Barack Obama in the US presidential election, the Bench said politicians in India were continuing the policy of reservation by seeking votes in name of caste, community and religion even though the most powerful country has proved the wisdom otherwise.The Bench said the Supreme Court had emphasised that the reservation system must be reviewed in five years and stopped once it seems to have served its purpose of helping raise the social status of those considered untouchable and backward, but no government or politician had taken note of the same.The Bench said the British had by way of proportional representation, the “first form of reservation”, ensured that the country was divided at the time of Independence.“The present form of reservation had the potential of further dividing the country,” the Bench observed.Pointing to historical research, the Bench said the ancient law giver Manu had not envisioned division of labour on the basis of caste, but “vested interests” had later given certain objectionable interpretations to Manusmriti.

  12. hindukalidam otrumai illai. hindu mathathai kevalapadttum hussainai adarippavargal hindukale. nam makkalin manapanbu mara vendum

  13. Because of our Government”s attitude Muslims take upper hand and encroach our temple lands. Almost total area of old Tanjavur district has become another Pakisthan. I strongly believe that the solution will come only on street fight. Please dont get carried away by the words ‘Nobody can ruin Hindu religion’.

  14. Sir,
    even if the next door Hindu is afffected,the Hindu will not learn anything from History. History is going to repeat.On that day ,we can see what these pseudo-secularalist will say.
    Ask any Hindu in kerala?Is he prepared to exchange his property to a Bigger property in Malappurum?
    Hariharakrishnan

  15. //
    50 விழுக்காடுகளுக்குமேல் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியுள்ளது. இதைமீறினால் முன்னேற்றம் அடைந்தவர்களை பின்னுக்குதள்ளும் அபாயம் உருவாகும் என்பதால். உச்சநீதிமன்றத்தை மதிக்காமல் நமது தமிழக அரசு 69 விழுக்காடுகள் இடஒதுக்கீடு அளித்துவருகிறது
    //

    உண்மையில் இல்லை – வெறும் ஓட்டுக்காக தான் 69 % தருகிறோம் என்று தம்பட்டம் எல்லாம் உண்மையில் 50% முறையில் தான் நிறைவேற்றப் படுகிறது – இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறேர்களா

    ஹ்ம்ம் – வேறு முறையில் பதில் சொல்கிறேன்

    அப்படி செய்யாவிடில் குறைஞ்சது சுப்பரமணிய சாமியாவது case போட்டிருப்பாரே

  16. முஸ்லிம்களின் அந்நிய செலாவணி மட்டும் இனிக்கிறதா?
    இந்திய சுகந்திரத்திர்க்காக 30%முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களால் கொருரமாக கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்லமட்டும் வாய் வலிக்குமே?
    அவர்களாலும் நமக்கு வாங்கித் தரப்பட்ட சுகந்திரத்தை அனுபவிக்கும் பொது
    அவர்களை ஒழிப்பதால் பகவான் நம்மை சும்மா விடுவாரா?
    முஸ்லிம்கள் நம் தேசத்தின் சுகந்திரத்திர்க்காகத்தான் ஆங்கிலமே கற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
    அவர்கள் நமக்கு துரோகமிழைத்து ஆங்கிலையனோடு கூட்டு சேர்ந்து நம்மைப்போன்று ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களின் வீட்டு நாய்களாக அவர்களும் மாறியிருந்தால் .
    நம் நாட்டின் சுகந்திரம் கனவாய்ப் போய் இருக்கும் .
    நீங்கள் இட ஒதுக்கீடு தராவிட்டால் என்ன ?
    நல்ல உள்ளங்களில் அவர்களுக்கு என்றுமே முழு இடம் உண்டு .

  17. ஓய்!
    அஸ்வின் குமார்:
    உன்னைப்போல நம் நாட்டில் உள்ள எல்லோரும்
    ஒற்றுமையாய் இருக்க ஆசைப்பட்டால்.
    நாம்
    நம் இராணுவ செலவிற்காக நம் வரிப்பணத்தில் 11.விழிக்காடு ஒதுக்கவே தேவை இல்லை,
    நம் விண்ணை தொடும் வளர்ச்சியை
    பார்த்து உலகமே வாய்ப்பிளக்கும் ,
    உனக்காக எனது ‘salute

  18. முஸ்லிம்கள் அந்நிய செலாவணி கொண்டு வருகிறார்களா?
    அது மொத்தமும் காஸ்மீர் பட்ஜெட்டுக்கு கொட்டப் படுகிறதே
    மேலும் அங்கு அவர்கள் போடும் ஓயாத சண்டையில் செலவாகிறதே

    சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு சுண்டைக்காய் அளவு கூட இல்லை
    இன்னும் கேட்டால் பிரிட்டிஷாரின் குள்ள நரி ஆலோசனைகளைக் கேட்டு முஸ்லிம் லீக் ஆரம்பித்து , நாட்டின் பிரிவினையை அரங்கேற்றியது தான் மிச்சம்
    முஸ்லிம் லீகர்களின் ஒரு கோஷம் என்னவென்றால் ‘ ஹன்சே லியா பாகிஸ்தான், லட்கே லெங்கே ஹிந்துஸ்தான்’ என்பதாகும்.
    அதாவது – சிரித்துக்கொண்டே ( ஒரு முயற்சியும் இல்லாமல்) பாகிஸ்தான் பெற்றோம். ஆனால் சண்டை போட்டு ( மீதம் உள்ள) ஹிந்துஸ்தானத்தை பெறுவோம்!
    ஐயா ,ஹிந்துக்களுக்கும் கொஞ்சம் அறிவிருக்கிறது
    போனதே எங்கள் நாடு பாகிஸ்தானுக்கும் ,பங்களாதேஷுக்கும் அத எவன் தருவான்?

  19. //முஸ்லிம்கள் ஏழைகள்; கல்வி அறிவு இல்லை; பின்தங்கிய நிலையில் உள்ளனர்//

    தமிழ் ஹிந்து வலைத் தளத்தில் பதியப்பட்டுள்ள இந்தக் கருத்தை வைத்து நான் கேட்கிறேன், ஏழையாக, பின தங்கியவராக, கல்வியறிவற்றவராக, ஒருவர் இருப்பதற்கு, இருந்ததற்கு அவருடைய மதம் காரணம் இல்லை போலிருக்கிறதே..! ஏன் ஹிந்து சமயத்தில் மட்டும் பின்தங்கியோருக்கு ஒதுக்கீடு ?

    முஸ்லிம்களில் ஏழைகள் இருக்கலாம், தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கலாம், ஹிந்து சமயத்தில் இருக்கக்கூடாதா? ஒரு மதத்தில் ஏழைகள் , தாழ்த்தப்பட்டவர்கள் , இருப்பார்களானால , ஹிந்து சமயம் மட்டும் ஏன் target செய்யப்படுகிறது, அரசியல் வாதிகள் மற்றும் பலரால்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *