சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4

எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி

முந்தைய,  மற்ற பகுதிகள்

சரி. அப்படியானால் இந்து தருமத்தினால் உந்துதல் பெற்று, தற்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்ற பாடுபட்ட தலைவர் யாராவது உண்டா? அவர் பற்றிக் கூற முடியுமா?

aiyan-kali-1கேரளத்தில் பிறந்த ஐயன் காளி எனும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சமூகப்போராளியின் வரலாறு ஒவ்வொரு இந்துவுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

1863 ஆகஸ்ட் 23 அன்று பிறந்த ஐயன் காளி சிறுவயது முதலே இந்து தருமத்தின் கோட்பாடுகளில் தோய்ந்தவர் ஆவார். நிலங்களை சீர் படுத்தியதற்காக ஐயன் காளிக்கு ஒரு சிறிய நிலத்தை அவரது நாயர் முதலாளி கோவிந்தபிள்ளை வழங்கினார். இது அன்றைய நாயர் சமுதாயத்தில் சலசலப்பான எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒருநாள் ஐயன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து பக்கத்தில் இருந்த ஒரு நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து ஐயன் காளியை எச்சரித்தான்.

அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார். தாழ்த்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமுதாய விடுதலை பெறும் போராளியாக உருவெடுத்தார் ஐயன் காளி. இதற்காகவே அவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவை இந்து புராணங்களை ஆராய்ந்து அதில் சமுதாய விடுதலைக்கான தரவுகளை வடித்தெடுத்து உருவாக்கப் பட்டதாகும். உதாரணமாக கக்கல ரிஷி நாடகம், அரிச்சந்திர நாடகம், வள்ளி சுப்பிரமணியர் திருமணம் ஆகிய நாடகங்கள் இவற்றில் அடங்கும். இவற்றினை நாடெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நடத்தி கட்டுக்கடங்காத விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஐயன் காளி.

ayyankali_statueஅப்போது சதானந்த சுவாமிகள் என்ற சாமியாரும் சாதீயக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வந்தார். பூர்வாசிரமத்தில் நாயர் குடும்பத்தைச் சார்ந்தவர் அவர். சதானந்த சுவாமியின் உரையினை ஐயன் காளியின் தாய்வழி உறவினரான தாமஸ் வாத்தியார் கிழக்கே கோட்டையில் கேட்டார் (திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் முன்னால் இருக்கும் கோட்டைக்கு ’கிழக்கே கோட்டை’ என்று பெயர்). இந்த உரையினைப் பற்றி அவர் அய்யன் காளியிடம் கூறினார்.

1904 இல் சதானந்த சுவாமிகள் இந்து எழுச்சி மாநாடு ஒன்றை நடத்தினார். தாமஸ் வாத்தியார் தான் யார் என வெளிப்படுத்தாமலேயே இந்த மாநாட்டின் இறுதிவரை இருந்தார். ஒருவேளை சுவாமிகள் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் மேல் அக்கறை கொண்டவரா என பார்க்கக்கூட அவர் எண்ணியிருக்கலாம். அவர் சதானந்த சுவாமிகளால் கவரப்பட்டார். பின்னர் அவர் ஐயன் காளியிடம் துறவியை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே தாமஸ் வாத்தியார், நாடாங்கோடு ஹென்றி, மூலக்கோணம் ஹாரிஸ் மற்றும் கறுப்பு தாமஸ் வாத்தியார் (அய்யன் காளியின் உறவினர் வெளுப்பு தாமஸ் வாத்தியார்) ஆகியோர் இணைந்து சாதீயத்திற்கு எதிராக இயக்கம் நடத்தி வந்தனர். இவர்கள் வெங்ஙனூருக்கு சுவாமிகளை அழைத்தனர்.

சுவாமியும் வெங்ஙனூர் சென்றார். சுவாமிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து அவர்களின் தலைவர் உருவாக வேண்டும் என அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் எழுத்தறிவு பெற்றவராக இருக்கவேணும் என்றும் சுவாமிகள் அபிப்பிராயப்பட்டார். இதனால் தைவிளாகத்து காளி என்பவர் தலைவரானார். ஆனால் விரைவில் அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தைவிளாகத்து காளியால் இயலவில்லை. படிப்பறிவற்றவரெனினும் முழு ஆளுமையுடன் தம் ஒரு சொல்லில் கூட்டத்தை ஒழுங்கடையச் செய்த ஐயன் காளியை சின்ன காளி என்றும், தைவிளாகத்து காளியை பெரிய காளி என்றும் தலைமைப் பொறுப்புகளில் சுவாமிகள் நியமித்தார்.

விரைவில் இந்து எழுச்சி மாநாடு அங்கு நடைபெற்ற அதே இடத்தில் சால்வேஷன் ஆர்மி காரர்கள் கிறிஸ்தவ கன்வென்ஷனை நிகழ்த்தினார்கள். அங்கு வந்த கர்னல் கிளாரா கேஸ் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஐயன்காளியை மதம் மாற்ற தீவிரமாக முயன்றார். அம்மையாரின் அனைத்து வாதங்களையும் ஆசையூட்டும் பேச்சுக்களையும் அமைதியாக செவி மடுத்த ஐயன் காளி இந்து தருமத்திலிருந்து விலக முடியாது என தெரிவித்துவிட்டார். இந்துவாக நிலைத்து நின்று இந்து அற உணர்வினை சமுதாயத்தில் தட்டி எழுப்பி தமது சமுதாயத்தினருக்கு உரிமைகளை வாங்கித் தருவதாக முடிவெடுத்தார் மாவீரன் ஐயன் காளி.

அம்மையாரின் நிர்ப்பந்தங்கள் ஆசையூட்டும் பேச்சுக்கள் அனைத்தும் அய்யன் காளியின் அற சங்கல்பத்தின் முன் தோற்று மண்ணைக் கவ்வின. சாதீயத்தால் கொடுமைப்பட்டு அதனை வேரறுக்க களமிறங்கிய ஐயன் காளி, அதே சாதீயத்தால் அன்னிய மதமாற்றிகள் தம் சமுதாயத்தினருக்கு செய்யும் கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்தார். இந்நிகழ்ச்சி நடந்த மறுநாளே அவர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாளுக்கு மனு ஒன்றை சமர்ப்பித்தார். தம்மை கிறிஸ்தவ மதத்தில் சேர்க்க நடத்தப்பட்ட தீவிர முயற்சிகளை அதில் விவரித்த ஐயன் காளி, மதமாற்றத்தால் தமது சமுதாயம் அருகி வருகிறது என்றும் எனவே கட்டாய மதமாற்றங்கள் நடப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் கோரினார். இதனைத் தொடர்ந்து மகராஜா கட்டாய மதமாற்றம் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்.

பிரம்மானுஷ்ட மடம் எனும் அமைப்பு அய்யன் காளியாலும் சதானந்த சுவாமிகளாலும் தொடங்கப் பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களை மகாராஜா பார்க்கக்கூட கூடாது என்னும் சாதிய தடையை விஜயதசமி நாளன்று ஐயன் காளி மீறினார். மேல்சாதி என தம்மை அழைத்துக் கொண்ட வெறியர்களின் தாக்குதல்களுக்கு ஐயன் காளியும் அவரது படையினரும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் சிலர் சதானந்த சுவாமிகளின் பூர்வாசிரம சாதியை எப்படியோ தெரிந்து கொண்டனர். அதன் அடிப்படையில் அவரிடம் அவரது சாதீய எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக நூறு கேள்விக் கணைகளை தயார் செய்து, மிகவும் சாதுரியமாக கேள்வி கேட்கும் ஒரு தூதனிடம் கொடுத்து அனுப்பினர். சதானந்த சுவாமிகள் செயல் வீரரே அன்றி வக்கணையாக பேசுவதிலும் அடுக்கு மொழிகளை உதிர்ப்பதிலும் வல்லவர் அல்லர். அவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, ‘தீய நோக்கத்துடன் ஒரு பத்திரிகையாளன் சாதுரியமாக கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரு சாமியார் பதில் கூற வேண்டிய அவசியமில்லை’ என கூறி அனுப்பிவிட்டார்.

பிரம்மானுஷ்ட மடத்தினால் ஐயன் காளிக்கும் அவரது தோழர்களுக்கும் சுவாமிகளின் ஊக்கம் கிடைத்தது. அதே நேரத்தில் கிறிஸ்தவர்களின் தொல்லை வளர்ந்தது. குறிப்பாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கையில் விவிலியத்தை ஏந்தியவாறு இவர்களை பார்த்து ‘மடப் புலையா’ ‘மடப் புலைச்சி’ என கேலி செய்து வந்தனர். பார்த்தார் ஐயன் காளி. மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் மீள்-அணைத்து ஏற்றெடுக்கும் ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டும் என அவர் சுவாமி சதானந்தரிடம் வேண்டினார். அவருடன் ஆலோசித்தார். அவரது ஆசியுடன் மடத்திலிருந்து வெளியேறி ஸ்ரீ நாராயண குரு, டாக்டர்.பல்பு, மகாகவி குமாரன் ஆசான், நீதிபதி கோவிந்த்ன் ஆகியோரை அணுகினார்.

sri-narayana-guruஸ்ரீ நாரயண குருதேவர் ஸ்ரீநாராயண தர்மபரிபாலன யோகம் தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ தொடங்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்றும், அந்த விடுமுறை நாளில் சங்க சேவையில் மக்கள் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார் ஐயன் காளி. இதற்கிடையில் 1896 தொடங்கி நடைபெற்ற ஈழவரின் கல்வி கோரிக்கை 1905ல் வி.பி.மாதவ நாயர் மூலம் மெய்ப்பட்டது. சாதி வெறியர்கள் ஈழவர் பள்ளிகளை சூறையாடிய போதிலும் பலர் இப்போராட்டத்தில் சாதி வரம்புகளை மீறி தம் சக-இந்து சகோதரர்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை மானுட உரிமைகளுக்காக ஒருங்கிணைந்தனர்.

திருவிதாங்கூர் முழுவதும் நாயர்-ஈழவர் கலவரம் பரவியது. இக்காலகட்டத்தில் சிவிராமன் பிள்ளை – காவாலம் நீலகண்ட பிள்ளை போன்றவர்கள் தலைமையில் ஈழவ-நாயர் நல்லிணக்க முயற்சிகளும் தீவிரமடைந்தன. கல்வி அதிகாரி டாக்டர் மிச்சேலின் தீரமான செய்கைகளை இத்தருணத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரது வாகனமே தீயிட்டு கொளுத்தப்பட்டும் கூட, சாதியின் அடிப்படையில் பள்ளிகளில் எவருக்கும் இடங்கள் மறுக்கப்படக் கூடாது என்பதனை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டவர் அவரே ஆவார்.

இந்நிலையில் திருவிதாங்கூர் திவானாக பி.ராஜகோபாலாச்சாரி பதவியேற்றார். அப்போது சாது ஜனபரிபாலன சங்கம் புலையர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வேண்டுமென்று அவரிடம் கோரிக்கை வைத்தது. அவர்களது கோரிக்கையை பி. ராஜகோபாலாச்சாரியாரும் ஏற்றுக்கொண்டார். பி.ராஜ கோபாலாச்சாரியாரை ‘தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மதித்த அரிய மனிதர்களுள் ஒருவர்’ என்கிறார் ஐயன் காளியின் மகள் வழிப் பேரன் அபிமன்யு. திவான் ஐயன் காளியிடம் இரண்டு வருடங்களூக்கு முன்னரே (1907 இலேயே) அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதகமாக இந்த விசயத்தில் தீர்ப்பு அளித்திருப்பதைக் கூறினார்.

ஆனால் நடைமுறையில் பள்ளிகளை அணுகிய போது நிலையோ வேறாக இருந்தது. ‘புலையர் குழந்தைகள் படித்தால் எங்கள் வயல்களில் யார் வேலை செய்வார்கள்?’ என்று இறுமாப்புடன் கேட்டனர் தங்களை மேல்சாதி எனக் கருதிக்கொண்ட அரக்க குணத்தவர்கள். ‘எங்கள் குழந்தைகள் கல்வி கற்க முடியாதென்றால் உங்கள் வயல்களில் நாங்கள் வேலை பார்க்க முடியாது’ என்றார் அய்யன் காளி.
ஜமீன்தார்கள் வேலை செய்ய மறுத்து அறப்போராட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்களைத் தண்டித்தனர். கொடூரமாக தண்டித்தனர். பற்களை உடைப்பது முதல் சாட்டையடிகள், சூடு போடுதல் எனப் பல கொடுமைகள் அரங்கேறின. அதிகார வர்க்கம் வேலை நிறுத்தம் செய்யும் விவசாயத் தொழிலாளர் மீது நடவடிக்கை எடுக்க திவானை அணுகியது. ஆனால் திவான் பி.ராஜ கோபாலாச்சாரியார் மறுத்துவிட்டார்.

அன்னை காளியும் நம் சோதரர் மேல் கடைக்கண் வைத்தாள்! ஐயன் காளி படை களமிறங்கியது; தொழிலாளர் மீதான வன்முறை நின்றது. ஆனால் எத்தனை நாள் ஏழைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்வார்கள்? அதிர்ஷ்டவசமாக கடலோர மீனவர் கை கொடுத்தனர். அப்போது தான் மேல்சாதிக் காரர்களுக்கும் வலி புரிய ஆரம்பித்தது. 1916 இல் இதை நினைவுகூர்ந்த ஐயன் காளி, ‘ஒரு புலையர் பெண் செய்த வேலையை, அட ஆறு நாயர் ஆண்கள் சேர்ந்து செய்யமுடியவில்லையே!’ என்றார்.

இந்நிலையில் புலையருக்கு சாதகமாக ஒரு கல்வி அறிக்கையை 1910 மார்ச் முதல் நாள் டாக்டர் மிச்சேலும் ராஜகோபாலாச்சாரியாரும் இணைந்து வெளியிட்டனர்.

உடனடியாக தாக்குதல் ஆரம்பித்தது. இம்முறை தாக்குதலில் ஈடுபட்டவர் முன்பு சுவாமி சதானந்த சுவாமிகளுக்கு எதிராக கேள்விக் கணைகளை விஸ்தாரமாக உருவாக்கிய அதே ஆசாமிதான். அவர் யார் தெரியுமா?

கேரளாவின் முதல் மார்க்சிய வாதியும் கார்ல் மார்க்ஸின் சரிதத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவரும் ஆன சுதேசாபிமானி ஆசிரியர் கெ.ராமகிருஷ்ண பிள்ளை தான். சமத்துவ கல்வித் திட்டம் குறித்து இந்த முற்போக்கு புண்ணியவான் எழுதினார்: “இது குதிரையையும் எருமையையும் ஒரே நுகத்தில் பூட்டுவதைப் போன்றதாகும்.”

(தொடரும்)

11 Replies to “சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4”

  1. அய்யன் காளி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போதுதான் ஓரளவு விவரம் தெரிகிறது.

    வரலாற்று அநீதிகளை எங்கும் நடந்தவையே, கீதையில் ஸ்வதர்மம் என்றே சொல்லப்படுகிறது என்று “சமாளிக்க” முயற்சி செய்வதை விட இவையே பயனுடையவை, ஊக்கம் தருபவை. விஷயம் தெரிந்தவர்கள் நீங்கள், மேலும் இது போன்ற பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்!

  2. Great to read about Ayyankali here! He is such an icon in Kerala and adored by all communities. He was a true warrior against caste oppression.

  3. அய்யன்காளிப்படையின் வீரம் மிகப்ப் பிரசித்தம். ப‌ய‌னுள்ள‌ த‌கவ‌ல்க‌ளைத் த‌ந்திருக்கிறீர்க‌ள்.

    தமிழகத்துக் கீழவெண்மணி ஒரு கருப்பு அத்தியாயம். அது குறித்தும் எழுத வேண்டும். ஏனெனில் அதில் உள்ள உண்மைநிலையை மூடிமறைக்கவே அத்தனை அரசியல்வாதிகளும் முயல்கிறார்கள். கிட்ட‌த்த‌ட்ட‌ மூடியேவிட்டார்க‌ள்.

  4. Sri RV has told that you are justifying the system. I feel that he is determined to oppose any thing from Geetha. Any how, the article on Sri Iyankaliis most informative and the society will like to know about many such personalities.
    Great work.

  5. Excellent article. Feel proud to know the importance Sri.Ayanklali gave to his root. Converts to other religions from the so called upper castes should read this article. Thanks to the authors for tearing the filmsy secular mask of the old time commie Sri.Ramakrishana Pillai. Once again thanks to the authors. Please contribute more.

  6. Excellent article. Feel proud to know the importance Sri.Ayanklali gave to his root. Converts to other religions from the so called upper castes should read this article. Thanks to the authors for tearing the filmsy secular mask of the old time commie Sri.Ramakrishana Pillai. Once again thanks to the authors. Please contribute more.

  7. https://thamizhoviya.blogspot.com/2010/02/blog-post_4394.html

    உங்கள் புத்தகத்தில் இதுவரை நடந்த பயங்கரவாதத் தாக்குதல் அனைத்திலும் இந்துத்துவாவாதிகளே குற்றவாளிகள் என சொல்கிறீர்கள்? அப்படியானால், முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லையா?

    நிச்சயமாக முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லை. இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளிலும், தீவிரவாதத் தாக்குதல் மூன்றில் மட்டுமே முஸ்லிம்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.

    1. 1993 மும்பை குண்டுவெடிப்பு

    2. 1998 கோவை குண்டுவெடிப்பு

    3. கந்தகார் விமானக் கடத்தல்

    இவற்றில் முதல் இரண்டையும் (மும்பை, கோவை குண்டுவெடிப்புகள்) தீவிரவாதத் தாக்குதல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவற்றில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்களே தவிர, அவர்கள் தீவிரவாதிகள் கிடையாது. ஆனால், மாலேகான், ஒரிசா, கோவா என நாட்டில் நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புகளிலும் இந்துத்துவா பாசிஸ்டுகளின் சதி இருந்திருக்கிறது. ஆகவேதான் என்னுடைய புத்தகத்தில் இந்துத்துவாவாதிகளைக் குற்றவாளிகள் எனச் சொல்கிறேன்

    எஸ்.எம். முஷ்ரீப் அவர்களின் நேர்காணல் – நன்றி: சமரசம்,
    16-28, பிப்ரவரி, 2010

    This is an interview published in Samarasam a magazine published from Chennai.The book by this எஸ்.எம். முஷ்ரீப் is endorsed and promoted by D.K (Veeramani).Indian govt. accuses Pakistan for masterminding 26/11 and this book denies that.Why Veeramani and muslims are promoting it.Read sites like Satyamargam to know how muslims view the world.These muslim organizations and sites wont protest against Talibans and jihadis.They wont write against Pakistan.They will promote Zakir Naik who states that muslims should not wish christians Happy Christmas and he supports Osama if Osama is fighting enemies of Islam.
    He is a rabid fundamentalist with huge following in cyberspace. Tamil Hindu should write about this book and expose the link between DK, supporters of Pakistan and jihadis in cyberspace and in print media.Veeramani is promoting a person who justifies bomb blasts and killing of innocents. Cant legal action be taken against Samarasam for publishing this interview as it justifies killings and islamic terrorism.

  8. Sir,

    Without emotions, please answer my question.. THe main concern of the higher caste is that if pulayas get education, then who will work in their fields? This is a right question.. if the government had provided a solution for this, the higher caste would not have prevented education to pulayas..

    So the fundamental fault is that, the so called education is NOT suited to the society.. It tried to detach people from their base, and this is the reason for caste conflict..

    The education should have been converted on the lines of vocational training, and the pulayas should receive education in their own field, as agricultural workers and nayars should have got education in the field of agricultural research and management..

    But who will even think on these lines? I bet, none of the members here will accept mine because of inability to unlearn what has been already imposed..

    Can we think rationally?

  9. Mr. Self-Declared-Rational-Anonymous, I guess you or your forefathers should have opted for vocational courses first and set examples, rather than preaching. And you can trash your rationality for now.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *