முந்தைய கட்டுரைகள்:
1. அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
2. வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
(தொடர்ச்சி…)
எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழல் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. அவை கால் பங்கு தோன்றும் நிலையிலும், (manifest form) மீதி முக்கால் பங்கு தோற்றம் இல்லா நிலையிலும் இருக்கின்றன என்றும் பார்த்தோம். இவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதை சக்கரத்தாழ்வாராகவும், இவை அனைத்திலும் யோகேஸ்வரனாக அந்தப் பரம் பொருள் இருக்கின்றான் என்பதை யோக நரசிம்ஹர் நிலை கொண்டிருப்பதிலும் காணலாம்.
முடிவில்லா இப் பிரபஞ்சங்கள் எந்நேரமும் இயக்கத்தில் இருக்கின்றன என்பதை நடராஜர் உருவில் காண்கிறோம். ரிக் வேதத்தில் சொல்லப்படும் பிரபஞ்சப் படைப்பு பற்றிய பாடலானது இருளிலும், தோற்றமில்லா நிலையிலும் தொடர்ந்து இந்த இயக்கம் நடந்து கொண்டிருப்பதைக் கூறுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும் இயக்கம் நடக்கிறது. தோற்றம் இல்லாப் பிரபஞ்சத்திலும் (unmanifest) நம் அறிவுக்கு எட்டாத நிலையில் இயக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் அணுவிலும் காணப்படுகிறது. பிரம்மாண்டத்திலும் காணப்படுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும், ஜடப் பொருளிலும், அணுவுக்குள் அணுவாகவும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது– என்னும் இவை அனைத்தையும் காட்டுவது நடராஜத் தத்துவமே.
இடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.
ஏனோ தானோவென்று ஏற்பட்டதல்ல இந்த இந்து மதம். இந்த மதத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் பின் சீரிய பலப் பல உண்மைகள் பொதிந்துள்ளன. அறிவியலார் அறிந்துள்ளதோ, முடிவில்லாத இயக்கம் ஒன்றை மட்டுமே. ஆனால் அந்த இயக்கத்தில் நடராஜர் அறிவிக்கும் படைப்புக் கோட்பாடுகளை அவர்கள் அறிந்திலர். அவை என்னவென்று பாப்போம்.
உடுக்கை எழுப்பும் ஒலி
நடராஜரது உடுக்கை ஒலியில் படைப்பு ஆரம்பமாகிறது. உடுக்கை எழுப்பும் ஒலி ஓங்காரமாகும் . தோற்றமில்லா நிலையிலிருந்து ஓடிக்கொண்டே வரும் பிரபஞ்சம், ஓங்கார ஒலியால் மாறுபாடு அடைந்து, தோன்றும் பிரபஞ்சமாக, (manifest Universe) அதாவது படைக்கப்பட்டதென உருமாறுகிறது. இன்றைய அறிவியலில், படைப்பு என்பது பெரும் வெடிப்புச் சிதறலாகவோ (Big Bang) அல்லது கோர்க்கப்பட்ட அமைப்பிலோ (String theory) இருக்கலாம் என்பவையே அனுமானங்கள். ஆனால் நடராஜர் காட்டும் படைப்பு ரகசியம் வேறு. அது ஓங்காரப் பிரம்மத்திலிருந்து ஆக்கம் உண்டாகிறது என்று காட்டுவது.
ஓங்காரப் பிரம்மத்தில் அகரம் முதல் அக்ஷரம். ஓங்கார ஒலியின் தொடர்ச்சியாக, பல்வேறு கூறுகளாக இருப்பவை பீஜாக்ஷரங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவித இயல்பையும், சக்தியையும் கொண்டவை. அவற்றைப் பகுத்து அந்தந்த சக்திகளை ஒவ்வொரு கடவுளாக, அவரவர் மன, குண, ஆன்மிக நிலைக்கு ஏற்ப வழிபட உதவுமாறு அமைத்துள்ளனர் வேத ரிஷிகள். மந்திர, யந்திர, தந்திர வழிகள் என இன்னின்ன சக்திகளை அடைய, இன்னின்ன வழிகள், இன்னின்ன பீஜாக்ஷரங்கள் என்று அமைத்துள்ளனர். இவை யாவுமே எங்கும் வியாபித்துள்ள பரம் பொருளின் உட்-கூறுகள்.
இதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.
எந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனை நினைக்கலாம், வணங்கலாம், துதிக்கலாம். அவரவர் விருப்பம். இன்னும் சொல்லப்போனால் மனத்தின் மூலமாகத்தான் உள்நோக்கி அவனை நினைக்கிறோம். ஆனால் கோயில் விஷயம் வேறு. கோயில்களில் மந்திர, யந்திர அல்லது தந்திர வழியில் ஆதார பீஜாக்ஷரங்களை நிலை நிறுத்தியிருப்பர். மேலே கூறப்பட்ட அடிப்படை விஷயங்களைப் பாருங்கள். தெய்வங்கள் தொடங்கி, கிரகங்கள் வரை பீஜாக்ஷரத்தால் குறிக்கப்பட்டுள்ளன. அவை அவ்வவற்றின் ஆதார சுருதி. அந்த ஆதாரத்தின் அலை வரிசையை அடையுமாறு அமைக்கப்பட்டவைகளே மந்திரங்கள், உச்சாடனங்கள் முதலியன. அப்படி அமைந்த அலைவரிசையில் அர்ச்சனை நடந்தால் ஆதாரத்தைப் போய் அடையும். அங்கே பார்க்க வேண்டியது என் மொழியா உன் மொழியா என்பது அல்ல. எந்த அலை வரிசை என்பதுதான் முக்கியம். அது அமைந்த மந்திரம் மற்றும் அர்ச்சனைதான் முக்கியம். அது இல்லாமல், தான் விரும்பும் மொழியில்தான் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு, கோயிலுக்குப் போய்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சொல்லிக் கொள்ளலாம். எனவே அந்தந்த கோயில்களில் வழி வழியாக இருந்து வரும் ஆதாரமான வழிமுறைகளைச் சிதைக்கக்கூடாது.
மீண்டும் உடுக்கை ஒலிக்கு வருவோம். ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் படைத்தல் (Creation) ஆரம்பமாகிறது என்று உடுக்கை ஒலி உணர்த்துகிறது. இப்படி இருக்கலாம் என்று அறிவியலாரில் ஒரு சாரார் இப்பொழுது எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். படைக்கும் நேரத்தில் நடராஜர் அடித்த உடுக்கையின் ரீங்காரம், தோன்றும் பிரபஞ்சம் முழுவதையுமே ஆக்ரமிக்கும். ஓங்கார ரூபமாக அவனே எங்கும் வியாபித்துள்ளான் என்று பிரமாண நூல்கள் சொல்வதால் அண்டம் முழுவதும் அவ்வொலி– அந்த ஓங்கார ஒலி இருக்க வேண்டும். எந்தச் செயலைச் செய்யும் முன்னால், நம்மைச் சுற்றி என்றென்றும் இருக்கும் அந்த ஓங்கார ஒலியை உச்சரித்து, அதன் மூலம் அந்த ஓங்கார ரூபியை நம் செயலுக்கு அதிகாரியாகவும், சாட்சியாகவும் வைக்கிறோம்.
ஓங்காரமே எங்கும் வியாபித்துள்ளது என்பதற்கு சாட்சி என்ன என்றால், இப்படியும் சொல்லலாம்:
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அண்டத்தில் பிரம்மாண்டமாக, இடைவிடாத இயக்கத்துடன் நடராஜர் உருவில் பிரபஞ்சங்கள் அடுத்தடுத்து சுழன்று கொண்டிருப்பதைப் போல, அணுவிலும் வட்டப் பாதையில் இடைவிடாமல் இயக்கம் நடந்து கொண்டுருக்கின்றது.
ஓங்காரமும் அப்படியே. அண்டத்தில் எங்கும் ஓங்காரம் ஓடிக்கொண்டிருந்தால், பிண்டத்திலும் அது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஆம். ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது உண்மையே என்று தெரிந்து கொள்ள நம் உடலில் ஓடும் இயக்கமான ரத்த ஓட்டத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஸ்டெதெஸ்கோப்பை ரத்த நாளங்கள் உள்ள கை மீது வைத்துக் கவனியுங்கள். அற்புதமான ஓங்கார ஒலியே கேட்கிறது. வாழ்வாதாரமான ரத்தம் ஓங்கார ஒலியுடன் நம் உடலைச் சுற்றிச் சுற்றி வருகிறது– படைப்பின் ஆதாரமாகிய அணுத்துகள்கள் அண்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓங்கார ஒலியுடன் வருவதைப்போல.
இங்கே ஒரு கேள்வி எழலாம். ஒலி அலைகள் பயணிக்க ஒரு மீடியம் வேண்டுமே, ஒலி அலைகள் வெற்றிடத்தில் பயணிக்காதே என்று கேட்கலாம். அங்கும் நடராஜரது உடுக்கை ஒலி ஒரு க்ளூ கொடுக்கிறது.
எண்ணில்லாத இந்தப் பிரபஞ்சங்கள் முழுவதும் நடராஜரின் இயக்கம் ஊடுருவி இருக்கிறது என்பதை அவரது நடனம் காட்டுகிறது. அப்படி இருக்க அங்கே வெற்றிடம் எப்படி இருக்க முடியும்? வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் பரம் பொருள் ஊடுருவியிருக்கிறான் என்பதல்லவா வேதம் காட்டும் அறிவு? அதன்படி வெற்றிடம் என்பதே கிடையாது. வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் நாமும், நம் அறிவியலாரும் அறியாத ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும். (அதை இன்று அறிவியல் dark matter என்ற பெயரில் ஒத்துக் கொள்கிறது.) உடுக்கையின் ஓங்கார ஒலி அவற்றின் வழியே ஊடுருவி பல நிலைகளிலும் படைப்புக்கு உறுதுணை ஆகிறது என்பதே உடுக்கை ஒலி காட்டும் ஞானம்.
இந்த ஒலி நம் காதுக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைக்கேட்க வேண்டுமானால், அந்த மூலாதாரத்தை நோக்கி பக்தியோ, முக்தியோ, சித்தியோ, வித்தையோ (32 வித்தைகள் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு உபநிஷத்துக்களில் காணப்படுகின்றன.)— ஏதோ ஒரு வழியில் நாம் பயணிக்க வேண்டும்.
அப்படிப் பயணிக்கவில்லை என்றாலும், அந்த ஒலி அலைகள் அடைந்த பரிணாம வகைகளை இன்று நாசா (NASA) விஞ்ஞானியர் செவிமடுத்து, பேச்சிழந்து நிற்கின்றனர்.
சமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம் நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ‘பேசி’க் கொள்வதை செவிமடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் கிரகங்கள் ரேடியோ அலைகளை வெளிவிடுகின்றன. இவற்றைக் காதால் கேட்கும் வண்ணம் ஒலி அலைகளாக மாற்ற முடியும். அப்படிச் செய்த போது, இந்த ஓசையை ஓர் இசையாக இந்த கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று தெரிய வந்துள்ளது. அப்படிக் கேட்ட ஒலியில், சனிக் கிரகத்தின் ஒலி பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அதை இங்கே கேட்கலாம்.
நாதப் பிரம்மம்
இசை என்று சொல்லும்பொழுது, நாதப் பிரம்மம் என்பது நினைவுக்கு வருகிறது. நாதமே பிரம்மம் என்றால், நான்முகப் பிரம்மன் வெளிப்பட்ட இடமான, தோன்றும் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஓங்காரம் எழும்பிய போது, நாதமும் வெளிப்படிருக்க வேண்டும் அல்லது நாதமாக வெளிப்பட்டிருக்க வேண்டும் என்றாகிறது. இதை விஞ்ஞானம் இன்னும் அறியவில்லை.
இந்த நாதப் பிரம்மம் ஏழு ஸ்வரங்களாக உள்ளது. இவை சாம வேதத்தின் ஆதார ஸ்வரங்கள். எண் வடிவிலும் இவற்றைக் குறிப்பர். அவை தரும் வெவ்வேறு ராகத்தில் கடவுளை அடையும் அலை வரிசை உண்டாகிறது. சாம கானத்தில் இறைவன் இறங்கி வருதல் அதனால் சாத்தியமாகிறது.
தோன்றும் பிரபஞ்சத்தில் அணுக்கள் பயணித்தபோது அவை ஓங்காரத்தையும், நாதத்தையும் சுமந்து கொண்டோ, அல்லது அவற்றால் செலுத்தப்பட்டோ இன்னும் இயக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியலாருக்கு எட்டியுள்ள Doppler Effect அவற்றுக்கிடையே இருக்கும் ஒருவித பேச்சு அல்லது நாதம் என்று கொள்ளலாம். அவற்றுக்கு அலைவரிசையும், நிறமும், வடிவும் இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் மூலமே தெரிந்து கொள்கிறோம்.
இந்த அணுக்களும், அவை கொண்ட பொருள்கள் அனைத்தும் தத்தமக்கென்று பரிபாஷையைக் கொண்டிருக்கும் என்பது சாத்தியமென்று தெரிகிறது. நம்முடைய பிரதேசம் என்று பார்க்கையில் சில விஷயங்கள் முன்னோரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, சாயாக் கிரகங்கள் எனப்படும். ராகு, கேது நீங்கலாக மீதி ஏழு கிரகங்களும் இந்த ஏழு ஸ்வரங்களையும் கொண்டவை என்பதே. அவற்றுக்கு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் உருவாக்கினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அடிப்படை என்று ஏதோஒன்று உள்ளது என்று தெரியப்படுத்தும் வண்ணம், சில விஷயங்கள் நம் சிற்றறிவுக்குத் தென்படுகிறது.
நிறம் என்று பார்க்கையில், ஆதார நிறங்கள் பச்சை, சிவப்பு, நீலம் ஆகியவை. கிரகங்களில் இவை முறையே, புதன், செவ்வாய், சனி ஆகும்.
இப்பொழுதுதான் அதிசய ஒற்றுமை வருகிறது. இவற்றின் ஸ்வரங்கள்:
புதன் – ஸ
செவ்வாய் – ரி
சனி – ப
தமிழ்ப் பண்ணில் (ஆய்ச்சியர் குரவையில் காணலாம்) இவை முறையே குரல் (கிருஷ்ணா), துத்தம் (நப்பின்னை), இளி (பலராமன்) ஆவர்! இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பல வித இசை எழுந்துள்ளன.
இவற்றின் தெய்வங்கள் யார் என்றால் (இவை நக்ஷத்திர சூக்தம் என்று யஜுர் வேதத்தில் உளளன.)
புதன் – ஸ – த்ரிவிக்ரமன் (வாமனன்)
செவ்வாய் – ரி – பூமி
சனி – ப – பிரஜாபதி (இவரிடமிருந்து உயிர்கள் உற்பத்தியாகின்றன.)
இவை மூன்றும் படைக்கப்படும் ஆதாரமான விஷயங்கள் மற்றும் அவற்றின் காப்பாக மூவுலகமும் அளப்பவன் (த்ரிவிக்ரமன்). சுருக்கெழுத்துப் போல ஆதாரமான அலைவரிசையிலும், நிறத்திலும், அக்ஷரத்திலும் இவை உள்ளன. ஆரம்பத்தில் இவை ஓங்காரத்தில் கிளம்பி, பிரபஞ்சம் விரிய விரிய இவையும் எளிய பகுப்புகளாக உருமாறி, யாருக்காக இந்த படைத்தலைச் செய்தானோ, அந்த ஜீவர்களாகிய நாம் வாழ வகை செய்துள்ள பாங்கே இவை எல்லாம்.
இதில் இன்னொரு அதிசயமும் உள்ளது.
புதனைக் குறிக்கும் கடவுள் மால் என்னும் மாயோன். மால் என்றால் மயக்குபவன் என்பது பொருள். செவ்வாயைக் குறிக்கும் கடவுள் சேயோன் எனப்படும் மால் மருகன் ஆன முருகன். மருகன் என்றால் மரபில் வந்தவன் என்று பொருள். மாலின் மரபில், அதாவது வழியில் தானும் மயக்குபவன் என்று அர்த்தம். இவர்கள் இருவருமே, சாதாரண மக்களை எளிதில் மயக்கித் தம் பக்கம் திருப்புகின்றனர். அப்படியும் மயங்காதர்களை சனீஸ்வரன் மாற்றுகின்றான்.
கிரகங்களுக்குள்ளே, சனிக்குத்தான் சனீஸ்வரன் என்று ஈசன் பட்டம் உண்டு. கிரகங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது தரவென்று இறைவனிடம் தத்தமக்கென்று வரம் பெற்ற போது, சனி மட்டும் மக்களுக்குத் துன்பம் தருபவனாக தான் இருக்க வேண்டும் என்று கேட்டாராம். ஏன் அப்படி என்று கேட்டதற்கு, துன்பம் வரும் பொழுதுதான் மக்கள் இறைவனை நினைப்பர். அதனால் சர்வேச்வரனான உன்னை நினைத்துக்கொண்டே இருக்க, நான் அவர்களுக்கு அடுத்தடுத்துத் துன்பம் தரவேண்டும் என்று சொன்னாராம். தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை, மக்கள் இறை பக்தியைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சனிக் கிரகம் கேட்கவே, அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், சனீஸ்வரன் என்று ஈஸ்வரப் பட்டத்தையும் சேர்த்து அழைக்கும்படி இறைவன் செய்தாராம்.
இதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், படைப்பின் கடைசிக் கட்டம் வரை அந்தப் பரம் பொருளை அடைய வேண்டுவதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் அமைத்துள்ளான்.
கொப்பூழ் தாமரை
படைப்பின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள மற்றொரு வர்ணனை, திருமாலின் நாபியிலிருந்து எழுந்த தாமரையில் நான்முகப் பிரம்மன் அமர்ந்து உலகத்தைப் படைத்தான் என்பது. இங்கே ஓங்காரம் வரவில்லையே, இந்த வர்ணனையும், உடுக்கை ஒலி வர்ணனையும் ஒத்துப் போகவில்லையே என்று கேட்கலாம்.
இங்கேயும் ஓங்காரம் இருக்கிறது. திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரை, லக்ஷ்மியின் வடிவம். திருமாலின் இதயம் என்னும் தாமரையில் குடி கொண்டுள்ள லக்ஷ்மியே, தோன்றும் உலகில் தாமரையில் எழுந்தருளுகிறாள். படைப்புக் காலத்தில் கொப்பூழில் மலர்ந்த தாமரை, திருமாலின் அங்கமே. அந்த லக்ஷ்மியைப் பாடும் ஸ்ரீ சூக்தம் என்னும் ரிக் வேதப் பாடல் அவளை எல்லாப் பொருளிலும் உறைபவள் என ‘ஈச்வரீம் சர்வ பூதானாம்’ என்கிறது. அவளை அடைபவர் கேட்கும் ஒலி யானையின் பிளிறல் ஒலி. யானையின் பிளிறல் ஓங்காரமாகும். யானையும் ஓங்கார ஒலியால் அவள் துதிக்கப்படுகிறாள் என்று இந்தப் பாடல் கூறுகிறது. அவள் இருக்கும் இடத்தில் என்றும் ஓங்காரம் கேட்டுக் கொண்டிருக்கும்.
இயக்கத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடராஜர் என்றால், படைப்புக்குள் நிழைந்து கொண்டிருக்கும் அண்டங்களுக்கு சுபிட்சத்தை வழங்கிக் கொண்டிருப்பவள் கொப்பூழ் தாமரையான லக்ஷ்மி.
உடுக்கை ஒலி கிளம்பிய அதே மூலத்தில் நான்முகப் பிரமம்னும் ஓங்காரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். வேதத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அதை வெளிப்படுத்துவது படைப்பின் அந்த மூலத்தில்தான். இந்த மூன்று கடவுளர்களது ஆதார ரூபத்தை ஒருங்கே வணங்கியவர் முற்காலத் தமிழர்.
‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூ’ போல இருந்தது மதுரை மாநகர் என்னும் பரிபாடல் இதைப் பறைசாற்றுகிறது. மதுரையை ஆண்டவன் சோம சேகரக் கடவுளை வணங்கிய பாண்டியன். அவன் ஆண்ட நாடு மாயோன் அளித்த தாமரை போன்றது. (இன்றும் மதுரை நகரம் தாமரை வடிவில்தான் இருக்கிறது). அதனால் சுபிட்சம் பெருகியது. அங்கே ‘பூவினுட் பிறந்தோன் நாவினில் பிறந்த’ – அதாவது பூவில் தோன்றிய நான்முகப் பிரமனது நாவில் தோன்றிய வேத ஒலியைக் கேட்டுத்தான் மதுரை மன்னனும், மக்களும் துயில் எழுவர் (கோயிலில் விடிகாலை வேத முழக்கம் நடந்தது என்று பொருள்).
ஆனால் மற்ற இரு மன்னர்களது தலை நகரங்களான வஞ்சியிலும், உறையூரிலும் கோழி கூவுவதைக் கேட்டுத்தான் துயில் எழுவர் என்கிறது இப்பாடல். சங்க காலத் தமிழர் மும்மூர்த்திகளையும் ஒருங்கே போற்றினர் என்பதற்கு இது ஒரு சான்று. சமயச் சண்டை உருவாகாத காலம் அது.
ஓங்கார ஒலியில் ஆரம்பித்த படைப்பு, மேற்கொண்டு சென்ற விதத்தை இந்தப் பிரபஞ்சவியல் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்…)
ஆசிரியர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,
மிகச் சிறந்த கட்டுரை.அருமையான,அறிவுப் பூர்வமானக் கருத்துக்கள்.சனி கிரகத்தின் ரேடியோ ஒளியும்,நிழலுடன் கூடிய நடராஜர் -புகைப் படமும் மிக அருமை.
/// இந்த ஒலி நம் காதுக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைக்கேட்க வேண்டுமானால், அந்த மூலாதாரத்தை நோக்கி பக்தியோ, முக்தியோ, சித்தியோ, வித்தையோ (32 வித்தைகள் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு உபநிஷத்துக்களில் காணப்படுகின்றன.)– ஏதோ ஒரு வழியில் நாம் பயணிக்க வேண்டும்///
20 ஹீரட்ச்க்கு (Hertz) குறைந்த மற்றும் 20 கிலோ ஹீரட்ச்க்கு (Kilo Hertz)அதிகமான ஒலி அலைகளை கேட்க்கும் திறன், ஆறறிவு படைத்ததாகச் சொல்லப்படும் மனிதனுக்கு இல்லை. ஆனால் சில மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் இத்திறன் உள்ளது. தலைக்குள் டிஜிட்டல் நேவிகேட்டரை வைத்துக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள், கிரகங்களின் நிலைகளை வைத்தே சென்றடையும் இடத்தையும், புறப்பட்ட இடத்தையும் துல்லியமாக கண்டு கொள்கின்றன. வரப்போகும் மழை பற்றி நமக்கு முன்னரே தெரிவிக்கின்றன எறும்புகளும், ஈசல்களும். பூமி அதிர்வினை உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்புகின்றன விலங்குகள்.
கையிலுள்ள கண்ணாடியை வைத்து கலிலியோ கண்டுரைத்த அறிவியல் உண்மையை, அவர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த கபிலர் புல்லின் மீதுள்ள பனித்துளியில் கண்டுரைத்தார். ஆன்மீகமே வாழ்க்கை முறை என்ற காலத்தில் வாழ்ந்த ஆர்யபட்டா, பாஸ்கரா போன்றோர் எந்தக் கருவிகளும் இல்லாமல், வெருங்கன்களால் காண முடியாத தொலைவிலுள்ள பிரபஞ்ச உண்மைகள் பலவற்றை உலகுக்கு உணர்த்தினர். இது எவ்வாறு முடிந்தது????? . கையிலே டேலேச்கோப்ப் இருந்தும் கிரகங்கள் பலவற்றை நம்மால் இனங்காண முடியவில்லை.
பிரபஞ்ச, இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்ளும் முயற்சியில் நாம் வழிமாறி சென்று கொண்டிருக்கின்றோமா??. சில கூட்டத்தாரால் வழி மாற்றம் செய்யப் படுகின்றோமா??
இதற்கு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட பக்தி, முக்தி, சித்தி………ஒரு தீர்வாக அமையக்கூடும்..
அன்புடன்,
ஆரோக்யசாமி
ஜெயஸ்ரீ அவர்களே,
மிக நுட்பமான விஷயங்களை வெளிகொண்டுவந்துள்ளீர்கள் பிரமிப்பாக உள்ளது.
//ஏனோ தானோவென்று ஏற்பட்டதல்ல இந்த இந்து மதம். இந்த மதத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் பின் சீரிய பலப் பல உண்மைகள் பொதிந்துள்ளன. அறிவியலார் அறிந்துள்ளதோ, முடிவில்லாத இயக்கம் ஒன்றை மட்டுமே
//
நமது முன்னோர் மொழிந்ததை இன்றைய அறிவியல் நிலை, வாழ்கை தன்மைக்கு ஏற்ற வாறு synchronize செய்து மிக அழகாக சொல்லி உள்ளீர்கள் – பழசெல்லாம் குப்பை அது ஒரு tribal thought என்று சொல்லிவரும் இந்த காலத்தில், வெறும் etymology, பாத்திங்கள், குதிரை எப்போ வந்தது ரிக் வேதத்தில் குதிரையே இல்லையே என்பதை எல்லாம் வைத்து எதோ நவீனமாகே சிந்திக்கிறோம் என்ற பேரில் நமது வேதத்தை எடை போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்களின் இந்த முயற்சி மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது
முன்னோர் மொழிந்த மொழி தர்ம மொழி, தப்பாகாது. அதையும் அரவணைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் சிந்தித்து அவர்கள் ஏன் இதை சொல்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு புரிந்துகொண்ட இல்லையேல் கற்றுக்கொண்டு (புதிய பரிமாணத்தை) பேசுவது மிக அவசியம் இதை ஏதும் செய்யாமல் பலர் உன்னதமான பழைய விஷயங்களை அப்படியே தள்ளிவிடுகின்றனர்
ஒரு சின்ன விஷயத்தை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் – intha second name என்கிற ஒன்று ஆங்கிலேயர் வந்த பின்பு தான் நமது நாட்டில் வழக்கில் வந்தது என்று நாம் அறிவோம் – இன்னும் ஒரு ஆயிரம் வருடம் கழித்து இதை ஒருவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் – பாருங்கள் இந்தியாவில் ஆங்கிலேயருக்கு முன் பெண் அடிமை இல்லவே இல்லை ஆங்கிலேயர் வந்த பின் தான் பெண்கள் ஆண்கள் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள், அடிமை தனம் அப்பொழுதான் ஆரம்பித்தது என்று நிர்ணயம் செய்வார் – கிட்டத்தட்ட இதை போல் தான் இன்றைய ஆராய்ச்சிகள் இருக்கின்றன
பண்பாட்டை ஆழமாக புரிந்து கொண்டால் என்னென்ன கோணங்களில் நமக்கு அறிவு பிறக்கும் என்பதற்கு நீங்களும், உங்களின் எழுத்தும் ஒரு எடுத்துக்காட்டு
ஆ வென வாய் பிளந்து ரசிப்பதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை அம்மா
அன்புடையீர்,
தமிழ் வேதம் -தேவாரம்,திருவாசகம் மற்றுமுள்ள திருமுறை அனைத்தும் இப்போது நம் வழங்கும தமிழ் எழுத்துகாலத்தில் தோன்றியவையா?
திருமந்திரம் காலத்தால் மூத்தது என்றால், அப்போதைய எழுத்து வடிவம்
எது? எங்காவது அந்த எழுத்து வடிவில் திருமந்திரம் முழுதும் கிடைக்குமா? என்ற விவரம் அறிய விரும்புகிறேன். அல்லது, பழைய தமிழ் எழுத்து முழுதும் கிடைக்குமா? அறிந்தவர்கள் அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
ஜம்புநாதன்
அன்புடன் வணக்கம் ;
சனீஸ்வரன் இல்லை சனைசரண்
//சனீஸ்வரன் இல்லை சனைசரண்//
சனி என்ற பெயரும் சமஸ்க்ருதத்தில் உண்டு. ‘சனிவாஸர’ (சனிக் கிழமை) என்பது சமஸ்க்ருதச் சொல்லே. சனை = மெதுவாகச் செல்லுதல் என்னும் பொருளிலிருந்து வந்த சனைஸ் சரண் என்னும் பெயர் உட்பட பத்து பெயர்களில் சனீஸ்வர ஸ்துதியும், மந்திரமும் உண்டு. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் பதப் பொருளும், அது சார்ந்த கதையும், தத்துவங்கள் பலப் பலவும் உள்ளன.
இக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட சனீஸ்வரன் குறித்த கதை, புராணத்தில் வருகிறது என்று ஜோதிடப் பாடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஈஸ்வரன் என்ற நாமத்தைச் சேர்த்து வருவது, கிரகங்களுக்குள் சனிக்கு மட்டுமே.
என்னவொரு அற்புதமான கட்டுரை.
From
https://media.radiosai.org/Journals/Vol_06/01FEB08/04-musings.htm
That is, the Universe is about 13.7 billion years old with an uncertainly of about 200 million years. This is the number most often quoted these days, and it is a pretty good estimate I would say; however, one must be careful about what exactly this means.
It means that 13. 7 billion years have passed after the Big Bang is presumed to have occurred.
If we believe that an inflation occurred after the Big Bang [as I described earlier], then it could well be that the Universe is much larger that we see it to be! And that part that is “invisible” to us could have a much longer history than the number quoted above would indicate. In other words, 13.7 billion years denotes the age of just that part of the Universe that is “visible/accessible” to us!
If we come up with another perfectly plausible model for the Universe that does NOT involve birth in a Big Bang [but explains all facts that must be – and this could well happen!], then in that case, 13. 7 billion years is an experimental number that must certainly be accepted but cannot necessarily be pressed forward as the AGE of the Universe!
So you see, there are all kinds of ifs and buts, if one wants to be very careful, and scientists often are that way! Why did I bring in all this? Because they all are relevant to us. In much of what I have said thus far, including about the history of the Universe and the fate it might face, I have said hardly anything about a model of existence called the Cyclic Model. Basically, in this model, the Universe is born, dies, is born again, dies again, and so on; I suppose you get the idea! Rather like humans, it is not? Well interestingly this is how ancients in many lands thought about it all, and Paul Steinhardt and Neil Turok say something very interesting about these ancients concepts. This is what they say:
From
https://media.radiosai.org/Journals/Vol_06/01FEB08/04-musings.htm
“Ancient Hindu cosmology presents a remarkably detailed and quantitative version of cyclic evolution. The full picture has cycles within cycles within cycles, where each level of cycle has a different duration. The levels correspond to various timescales in the lifespan of Brahma, the god of creation. For example, one kind of a cycle corresponds to a day and night in Brahma’s life, another to a year, yet another to one hundred years, and so on. Converted to Earth years, some of these levels have surprisingly similar timescales of interest to contemporary cosmology. A day and night in the life of Brahma lasts a kalpa, a period of 8.64 billion years, roughly the duration of the matter-dominated epoch in modern cosmology, during the period in which galaxies formed.
The Vishnu Puranas say that each of these cycles is followed by a drought that lasts until all the waters dry up. In modern cosmology, matter domination is followed by dark energy domination during which no new galaxies form. The next level of cycle, corresponding to a year of Brahma or 360 kalpas, last 3.11 trillion years. The duration is roughly that of a single cycle in the [current versions of] the cyclic model. The lifetime of Brahma is a factor of one hundred longer, after which the Universe takes a respite. Exactly what happens after that is less clear. There have been numerous Brahmas before and there will be numerous ones to follow. The Hindu texts do not say how the interval between Brahmas is. The evolution may be cyclic or sporadic.
https://www.bharathgyan.com/crea.htm
My thanks to one and all who recorded their views.
Thanks to Mr Desamitran for providing the links. I hope the readers go through them and the other parts provided in the link pages.
I am synchronizing Vedic model of cosmology, Time and Consciousness into one, in such a way as to rationalise many beliefs of Hindu Thought.
What I have so far covered is just the beginning spot of the very beginning of this universe which happened 360 X 10 billion X 50 solar years ago.
Of this, the current theory of scientists on Big bang is just 15 +billion years. (Vedic concept does not support Big Bang. I will come to that part when I proceed to write the pulsating Manifest Universe )
Of this, the age of the Sun is 5 billion years with another 5 billion years to last before it explodes as a red giant.
Of this, the age of earth is 4.32 billion years.
From here onwards Hindu Thought offers valuable inputs.
The present Kalpa (day of Brahma ) when Brahma woke up to see the Swetha varaha – the rise of lands – happened 2.16 billion years ago.
Of this the last 1.97 has been the period when earth became “earth” fit enough for habitation. Of this the last 1.95 billion years is the time, when some form of life had come into existence. Since it is the same (our) Jiva which is supposed to take births as sthavara (plants) and jangama (animals) in accordance with the purva karma, it might have been said like this. (Curious question is – does virus or microbes also have the Soul? – Expect the readers to articulate this issue:-) )
Interesting feature is that the entire day (day kalpa + night kalpa ) of Brahma is equal to the life of Sun. The ‘day’ of Brahma started 2.16 billion years ago and will end (night starts then) 2.16 billion years from now on. Inference is that earth / sun / solar system will become hostile to support any form of life after 2.16 billion years from now. (a sigh of relief for Copenhagenites?)
There is also a mind blowing concept on how the universe is inflating and moving ahead, and in which direction. I will try to bring them in simple language in the upcoming articles.
Hindu Thought is all-encompassing and enables you to analyze from atoms to universes from your arm chair:-) Sojourning into the realms of Vedic cosmology is an ecstatic experience. The nearest to which we can explain this sojourn is as how William Blake said in Auguries of Innocence
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
Hold infinity in the palm of your hand,
And eternity in an hour.”
Yaqubi, Shiite historian, wrote in the ninth century: “Hindu are more exact in astronomy and astrology than any other people.
Nancy Wilson Ross (1901 -1986)
The World of Zen and Time’s Left Corner
many of India’s ancient theories about the universe are startlingly modern in scope and worthy of a people who are credited with the invention of the zero, as well as algebra and its application of astronomy and geometry; a people who so carefully observed the heavens that, in the opinion of Monier-Williams, they determined the moon’s synodical revolution much more correctly than the Greeks.”
” Many hundreds of years before those great European pioneers, Galileo and Copernicus, had to pay heavy prices in ridicule and excommunication for their daring theories, a section of the Vedas known as the Brahmanas contained this astounding statement
Marquis Pierre Simon de Laplace ( 1749-1827) French mathematician, philosopher, and astronomer, a contemporary of Napoleon. Laplace is best known for his nebular hypothesis of the origin of the solar system. wrote:
“Nevertheless the ancient reputation of the Indians does not permit us to doubt that they have always cultivated astronomy, and the remarkable exactness of the mean motions which they assign to the Sun and the Moon necessarily required very ancient observation.”
Huston Smith, born in China to Methodist missionaries, a philosopher, most eloquent writer, world-famous religion scholar who practices Hatha Yoga. He has said
While the West was still thinking, perhaps, of 6,000 years old universe – India was already envisioning ages and eons and galaxies as numerous as the sands of the Ganges. The Universe so vast that modern astronomy slips into its folds without a ripple.”
நன்றி – ஹிந்து விஸ்டம்
அன்புடன்,
ஆரோக்யசாமி
.
மிக சிறந்த கட்டுரை.
//இதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.//
தமிழில் மனமுருக பாடி இறைவனுக்கு அருச்சனை செய்து பாருங்கள். அதன் அனுபவம் அலாதி. இதில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்பதை விட, தமிழில் பாடி அவன் அருளை எளிதில் பெறலாம் என்பது என் கருத்து.
//சோமசுந்தரம்
4 March 2010 at 3:50 pm
மிக சிறந்த கட்டுரை.
//இதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.//
தமிழில் மனமுருக பாடி இறைவனுக்கு அருச்சனை செய்து பாருங்கள். அதன் அனுபவம் அலாதி. இதில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்பதை விட, தமிழில் பாடி அவன் அருளை எளிதில் பெறலாம் என்பது என் கருத்து.//
நீங்கள் குறிப்பிட்டுள்ள paraவிற்கு அடுத்த paraவையும் படியுங்கள்.
//நீங்கள் குறிப்பிட்டுள்ள paraவிற்கு அடுத்த paraவையும் படியுங்கள்.//
சமஸ்க்ரிதம் மட்டுமே அதிர்யு அலைகளை ஏற்படுத்தும் என்று கூறுவதாலும் எழுதுவதாலும் தான் சமஸ்க்ரிதம் வெறுப்பு மொழியாக பலர் எண்ணுகின்றனர். இதனால் தான் தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழ் ஆகமங்கள் பல கோவில்களில் புறக்கணிக்கப்படுகின்றன.
தமிழ் நாட்டில் இந்த அவலம் சில நூறு ஆண்டுகளாக தான் உள்ளது.
தமிழ் மொழியில் அதிர்யு அலைகளை ஏற்படுத்த முடியாத? முடியும் என்பதே என் தாழ்மையான கருத்து. இதை தமிழ் மொழி பற்றின் காரணமாக எழுதவில்லை. இதை “திராவிடம்” என முத்திரை குத்தாதிர்.
தமிழ் திருமுறைகள் தான் இறந்த பூம்பாவையை மீட்டது.
தமிழ் திருமுறைகள் தான் மழையை வரவழைத்தது.
தமிழ் திருமுறைகள் தான் கொடிய சூலை நோயை நீக்கியது.
தமிழ் பாடல்களுக்கும் அதிர்யு அலைகளை ஏற்படுத்த முடியும். அதை முறையாக செய்ய வேண்டும்.
மிக்க நன்றி திரு சோம சுந்தரம் அவர்களே.
நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்கிறேன். அதே போல் நான் சொல்ல வருவதையும் புரிந்து கொள்ள வேண்டும் – புரிந்து கொள்ளும் வகையில் என்னை எழுத வைக்க வேண்டும் என்றும் என்னை இயக்கும் இறைவனை வேண்டிக் கொண்டு இதை எழுதுகிறேன்.
தமிழும், சம்ஸ்க்ருதமும் இந்த பாரத தேசத்திற்கே இரு கண்களாக 10,000 வருடங்களுக்கு முன்னிலிருந்தே – இன்னும் சொல்லப் போனால் நடப்பு மன்வந்திரத்தில் – வேத பாஷை என்றும், மனுஷ்ய பாஷை என்றும் இருந்து வந்திருக்கின்றது என்பது என் கருத்து. இந்தக் கருத்தைத் தோற்றுவிக்கும் வகையில் ஆதாரங்கள் உள்ளன. மேலும் ஆதாரங்களை சேகரித்து வருகிறேன்.
இதை இங்கு சொல்வதற்குக் காரணம், என் கட்டுரையில், தமிழைக் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக, கோயில் – அதுவும் புராதானக் கோயில்களில் வழிபாடு அமைத்த விதத்தை சிதைக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்த – sequence – ஆக எடுத்த ஒரு விளக்கத்தின் மூலமாகச் சொல்லியுள்ளேன். அதை எழுதும் போது, அது குறித்து ஒன்றல்ல, பல பின்னூட்டங்களை எதிர் பார்த்தேன். தங்களிடமிருந்து வந்தவுடன், மேலும் எழுத வாய்ப்பு வந்ததற்கு மகிழ்கிறேன், நன்றி சொல்கிறேன்.
இறைவனது அருளை வெளிப்படையாக அறிய நிறைய வழிகள் இருக்கின்றன. பக்தி, நாதம் மூலமும், தமிழில் அல்லது அவரவர் மொழியில் பாடி, வேண்டி, உருகி கடவுளால் ஆட்கொள்ளப்பட்டதும் , அதிசயம் கண்டதும் என்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன. தமிழ் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரிலும் பாருங்கள். அவரவர் மொழியில் பாடியும், வேண்டியும் அதிசயங்கள் நடந்துள்ள விவரங்கள் உள்ளன.
ஆனால் கோயில்கள் எழுந்த காரணங்களும், கட்டப் பட்ட முறைகளும் சில Universal கோட்பாடு அடிப்படையில் ஆனவை, தெய்வம் ஐந்து ரூபங்களில் உள்ளது. அவற்றில் கடைசியாக சொல்லப்படுவது விக்கிரக ரூபம். கடைசி என்றால், மிக எளிமையான முறையில் கடவுளிடம் தொடர்பு ஏற்படுத்த என்று அர்த்தம் செய்ய வேண்டும். அந்த தொடர்புக்கு, இடம், சூழ்நிலை, எளிமைப்படுத்தப்பட்ட அந்தக் கோட்பாடுகள் என்று பல விஷயங்களையும் கருத்தில் கொண்டு கோயிலும், கர்பக் கிரகமும், அங்கே இறைவன் எழுந்தருளப் படும் விதமும், அவனுக்குப் பூஜைகளும், இன்ன பிறவும் வசிஷ்டர், கர்கர் போன்ற ரிஷிகளால் என்றோ தோற்றுவிக்கப் பட்டு, காலப்போக்கில் – அதுவும் கலி காலத்தில் அதிகம் எழுப்பப்பட்டன. அந்தக் கோட்பாடுகள் விஞானம் தான்.
அதில் சம்ச்க்ருதத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது. அந்தக் காலத்தில் யாகங்கள் மூலமாக தெய்வ ஆராதனை நடந்தது. வேத ஒலி மூலமாக தெய்வங்களுக்கு ஆராதனை நடந்தது. வேத ஒலியின் மூலமாக என்ன பலன் தேவையோ, அந்த பலன் கிடைத்தது. இந்தக் கட்டுரையின் கடைசியில் சொல்லியுள்ள பரிபாடலில், கோயிலில் ஓதப்பட்ட வேத ஒலி கேட்டுத்தான் மக்கள் துயில் எழுந்தனர் என்று வருகிறது. அந்த ஒலியின் மூலமாக சுவர்க்கம் வரை செல்ல முடியும். பாலைக் கௌதமனார் அவ்வாறு சென்ற வரலாறு தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இவை அனைத்துக்கும் ஒலி அவசியம், அதை சரியானஅமைப்பில் கொண்ட வேதம் வேண்டும்.
ஆனால் சுவர்க்கம் சாச்வதமல்ல. ஏனென்றால் அது தோன்றும் பிரபஞ்சத்தில் உள்ளது. அதற்கு மேலும் உள்ள பதம் இறைவனின் அழிவில்லாத பதம். அதை அடைய, வேதம் வேண்டாம். மனோ பாவம் மட்டுமே போதும். இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனோபாவம் என்பது, நினைப்பு, எண்ணம் – அதுவே பக்தி, சாதனை, யோகம், வித்தை என்று பல விதங்களில், பல பெயர்களில் இருக்கிறது. அவற்றை பின்பற்ற வேதம் வேண்டாம், வேதாந்தம் தெரிந்திருக்க வேண்டாம். மெத்தப் படித்திருக்க வேண்டாம். இவர் என்ன சொன்னார் அவர் என்ன சொன்னார் என்று தெரிந்திருக்க வேண்டாம். அந்த மனோபாவத்திலும், சிந்தனையிலும் இருப்பவர்களுக்கு தானாக ஞானம் பிறக்கும். கீதையில் (10-10) ‘ததாமி புத்தி யோகம்’ – நான் அவர்களுக்கு புத்தி யோகம் அருளுவேன் என்று பகவான் சொல்கிறார். அது இப்படித்தான்.
மகான்கள் சிறு வயது முதற்கொண்டே, இயல்பாகவே ஞானத்துடன் இருப்பது அவர்கள் அடைந்த மனோபாவத்தையும், அந்த நிலையில் அவர்களுக்கு சித்தித்த ஞானத்தையும் காட்டுகிறது. அவர்கள் சொன்னால் கோயில் கதவு திறக்கும், இறைவன் திசை திரும்பி நிற்பான். இறந்தவர் உயிர்த்தெழுவார். தீராத நோய் தீரும். அங்கே மனோபாவம் முக்கியம். மற்றவை இரண்டாம் பட்சம்.
ஆனால் மனோபாவமே இல்லாத – மனோபாவம் வரப் பெறாத நம் போன்றவர்களுக்கும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது, கோயிலும், கோயில் பூஜைகளும். கோயில்களின் அமைப்பே யாக சாலை அமைப்பை ஒட்டியது. யாகத்தில் வேத ஒலி மூலமாக அந்தந்த தெய்வங்களை வரவழைத்தது போல, கோயில்களில் அந்தந்த கோயில்களுக்கென்று விதிக்கப்பட்ட வழிகள் மூலமாக தெய்வத்துடன் தொடர்பு ஏற்படுத்துகிறோம். நான் சொல்வது, இவற்றை சிதைக்காதீர்கள். இவற்றை சிதைக்காமல் மற்ற பாராயனங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை எடுத்துவிடக் கூடாது.
கோயில் ஒருவருக்காக அல்ல. அது ஊருக்காக. ‘கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறது. கோயில் வழிபாட்டு முறைகளில், கோயிலில் எழுந்தருளும் சக்தி, சுற்றியுள்ள ஊர் முழுவதையும் அணைத்தவாறு உள்ளது. கோயில் வழிபாட்டில் ஒரு தவறு இருந்தாலும், அந்த சக்தி மாறுபாடு அடையும், அதனால் ஊருக்கு, ஊராருக்குத் துன்பம் ஏற்படும். கண்கூடாக இதைப் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
இப்படிச் சொல்லவே, அது என்ன சக்தி – மாறு பாடு அடையும் சக்தி ? அப்படிப்பட்டது தெய்வமா? என்று கேட்கலாம். ஊர் நன்மைக்காக, உலக நன்மைக்காக உள்ள கோயிலில் அது குறித்த, தேவையான விதி முறைகள் அடிப்படையிலேயே – விஞான பூர்வமாக அமைந்திருக்கவே, அந்த விதிகள் சிதைக்கப்படும் போது சக்தியும் மாறுபாடு அடிக்கிறது. இதை விளக்க ஒரு விஞான ஆராய்ச்சியும் இருக்கிறது.
(cont’d)
அந்த ஆராய்ச்சியின் தூண்டுதல், 1984 – ஆம் வருடம் போபால் நகரில் விஷ வாயு கசிந்து பலரும் மாண்ட போதும், இரண்டு குடும்பத்தினர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம். விஷ வாயு கசிந்த போது, ஊரை விட்டு எல்லோரும் ஓடி வெளியேறிய போது, இரண்டு குடும்பத்தினரால் ஓட முடியவில்லை. அவர்களுக்கு வயதான பெற்றோர். அவர்களை அங்கேயே விட்டு விட்டுச் செல்ல மனமில்லை. அவர்கள் அங்கேயே இருந்து உயிர் விடுகையில், தாங்கள் மட்டும் தப்பி ஓடி உயிர் வழ விருப்பமில்லை. எனவே தங்கள் வீட்டிலேயே தங்கி விட்டனர். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, தாங்கள் நிதமும் செய்யும் அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைச் செய்ய ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் சுற்றி இருந்த வீடுகளில் இருந்த மக்களெலாம் மடிந்த பின்னும், இந்த இரண்டு குடும்பத்தினர் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்.
இந்த செய்தி வெளியானவுடன், ஐரோப்பிய ( முக்கியமாக ஜெர்மனி ) விஞானிகள் அவர்கள் வீட்டுக்கு வந்து ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் செய்த ஹோமத்தின் விவரங்களை வாங்கிக் கொண்டனர். அவர்கள் அன்று மட்டுமல்ல. தினமுமே அந்த ஹோமம் செய்பவர்கள்.
அந்த விஞானிகள் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது, அக்னி ஹோத்திரம் காற்றை சுத்தப் படுத்தும். காற்றிலுள்ள கிருமிகளையும், விஷத்தையும் முறியடிக்கும். அதாவது அக்னி ஹோத்திறத்தில் தரப்படும் அரிசி, வாயு பகவானுக்கு உணவு ஆகும். உணவை வாங்கிக் கொண்ட வாயு பகவான், நமக்கு அருளாக சிறந்த வாயுவை, மாசு படாத காற்றை மூச்சாக இழுக்க அளிக்கிறான்!
கீதையில் பகவான், தேவர்களும் மனிதர்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னது இந்தக் காரணங்களுக்காகத் தான். வாயு பகவானை ஆராதியுங்கள். அவன் உண்ணும் உணவு, அவனை எப்படி அடைய முடியுமோ அந்த ஹோமத்தில் அளியுங்கள். அவன் திருப்பி உங்களைக் காப்பாற்றுவான். இதுதான் மூலக் கருத்து.
இதை, தெய்வம் நம்மிடம் வாங்கிக் கொண்டு நமக்குச் செய்யுமாம். நாம் ஏதாவது கொடுத்தால் தான் திருப்பித் தருவேன் என்று சொல்லும் தெய்வம், ஒரு தெய்வமா? என்றெல்லாம் கேட்பது இன்றைய பகுத்தறிவு. ஆனால் இவற்றிலுள்ள விஞானத்தைப் பாருங்கள். பரஸ்பர கொடுக்கல் – வாங்கல் மூலமாக உலகம் சம நிலையில் (equilibrium) செல்ல முடிகிறது. அதைதான் கிருஷ்ணன் சொன்னார். இந்த ஆராய்ச்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.
ஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிலும், உலக நிமித்தம் ஏதோ விஞானம் இருக்கிறது. அதனால்தான் சொன்னேன் , ஏனோதானோவென்று எழுந்ததல்ல இந்து மதமும், அதன் பழக்க வழக்கங்களும்.
முக்கியமான விஷயத்திற்கு வருவோம். அக்னி ஹோத்திறத்தில் இன்னின்ன ஹோம சாமான்கள், இன்னின்ன வகையில் உபயோகப் படுத்த வேண்டும் என்ற விஷயங்களை விஞானிகள் ஆராய்ச்சியில் அறிந்தனர். அதில் மந்திர உச்சாடனை முக்கியம் என்று தெரிய வந்தது. இந்த ஹோமத்தில் பல மந்திரங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட இரண்டு வரி மந்திரங்களை, காலையில் சூரிய உதயம் ஆகிக் கொண்டிருக்கும் போதும் , மாலையில், மறைந்து கொண்டிருக்கும் போதும், சொல்லும் போதுதான், அதிக பட்ச சிறப்புப் பலன்கள் (Release of more than 100 oxides into the atmosphere) ஏற்பட்டன. இந்த மந்திரங்கள் இல்லை என்றால் பலன் ஏற்படவில்லை.
இந்த மந்திரங்களை, உலகில் வழங்கும் பல மொழிகளிலும் (லத்தீன், தமிழ் உட்பட) மொழி பெயர்த்து ஆராய்ந்தனர். அவை எவற்றிலும் பலன் வரவில்லை. சமஸ்க்ருதத்தில் மட்டுமே பலன் ஏற்பட்டது!!
எந்த மொழி ஆர்வலர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சம்ஸ்க்ருத ஒலியில்தான் material world குறித்தும், – முன்பு சொன்னாற்போல் சுவர்க்கம் வரை செல்ல வேண்டியும் பலன்களை ஏற்படுத்த முடியும். கோயிலிலும் அங்கு குடி கொண்ட தெய்வம் குறித்த பலனை அடைய, அதற்கென ஆகமத்திலும், ரிஷிகளாலும் ஏற்படுத்தப்பட்ட வழியில், உச்சாடனத்தில் முடியும். இந்த விஞானத்தை சிதைப்பதில் கோயில் தரும் பலன் சிதைகிறது. ஊர் நன்மை சிதைகிறது. இதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அந்த ஆராச்சியில் தெரிந்த பிற உண்மைகள் :- யார் வேண்டுமானாலும் அக்னி ஹோதிரத்தை செய்யலாம். மத, இன, ஜாதி, பால், வயது வேறுபாடு இல்லை. குளித்து விட்டுத் தான் செய்ய வேண்டும் என்றும் இல்லை, இப்படிப் பல வகையிலும் ஆராய்ந்து சொல்லியுள்ளார்கள். ஒரே ஒரு விதி விலக்கு. மாத விடாய் நாட்களில் பெண்டிர், ஹோம செய்தாலோ, ஹோம சாமான்களைத் தொட்டாலோ (வரட்டி, சமித்து போன்றவை உட்பட) பலன் ஏற்படவில்லை. அவர்கள் மிக அருகில் இருந்தால் பாதிப்பில்லை. ஆனால் அவர்கள் தொடுகை (physical contact) இருந்தால் பலனை இல்லாமல் செய்து விடுகிறது. ஏன், எப்படி இது ஆகிறது என்று என்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பலன் தரும் அந்த சம்ஸ்க்ருத மத்திரங்கள் மிக எளியவை.
காலையில்:-
சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் ந மம/
பிரஜாபதியே ஸ்வாஹா பிரஜாபதியே இதம் ந மம//
மாலையில்:-
அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம/
பிரஜாபதியே ஸ்வாஹா பிரஜாபதியே இதம் ந மம//
எளிதான – சாதாரணமாகத் தெரியும் மந்திரங்கள். ஆனால் இவை வாழ்வாதாரமாக இருக்கின்றன.
1993 ஆம் ஆண்டு இதைப் பற்றித் தெரிந்து கொண்டு அன்று முதல் அக்னி ஹோத்திரம் செய்து வருகிறேன். அணு குண்டு வெடிப்பில்கூட அழியாத கரப்பான் பூச்சி கிட்டே வரவில்லை. இட்லி மாவு கூட புளிப்பதில்லை. காற்றில் உள்ள ஈஸ்டை அழித்து விடுகிறது என்று நினைக்கிறேன்.
//இட்லி மாவு கூட புளிப்பதில்லை.//
இட்லி மாவுகூட பொங்குவதில்லை என்று படிக்கவும்
திருமதி .ஜெயஸ்ரீ (author) அவர்களே சம்ஸ்கிருத மந்திரம் தொடர்பான உங்கள் பின்னூட்டம் மிக அருமை.
ஜெயஸ்ரீ அவர்களுக்கு,
ஹிந்து மதத்தை பற்றி மேலும் எழுத இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்று வேண்டுஹிறேன்.
“தமிழும், சம்ஸ்க்ருதமும் இந்த பாரத தேசத்திற்கே இரு கண்களாக 10,000 வருடங்களுக்கு முன்னிலிருந்தே – இன்னும் சொல்லப் போனால் நடப்பு மன்வந்திரத்தில் – வேத பாஷை என்றும், மனுஷ்ய பாஷை என்றும் இருந்து வந்திருக்கின்றது என்பது என் கருத்து. இந்தக் கருத்தைத் தோற்றுவிக்கும் வகையில் ஆதாரங்கள் உள்ளன. மேலும் ஆதாரங்களை சேகரித்து வருகிறேன்”
தங்களின் இந்த கருத்தை நானும் அமோதிக்கிறேன். சமீபத்தில் அதிச்சனல்லுரில் சில தொல்பொருள் ஆய்வு நடத்திய அதிகாரிகள் கண்டெடுத்த பாண்டங்கள் எல்லாம் சிந்து சமவெளி நாகரிஹத்தை போலவே உள்ளதாகக் கூறினர். ஏற்கனவே சிந்து சமவெளி மற்றும் இந்தியா முழுவதுமே இருந்தது தமிழர்கள்தான என செய்திகள் சொல்லுகின்றன.
அப்படி இருக்கையில், ஏன் தமிழர்கள், பேச ஒரு மொழியும் தெய்வ ஆராதனைக்கு என்று ஒரு மொழியும் உருவாக்கி இருக்க கூடாது என்பது ஒரு கேள்வி? முதலில் வடநாட்டில் வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தியதை பின்னர் பேசும் மொழியாகவே மாறியிருக்கலாம். ஏனெனில் இந்தியாவில் தமிழும், சமஸ்க்ரிதமும் மட்டுமே வேறு எதில் இருந்தும் தோன்றாமல் முதல் மொழியாக இருக்கின்றன.
அதனால் தமிழை சுத்தமாக பேசவும் சமஸ்க்ரிதத்தை மந்திரம் உச்சரிக்க பயன்படுத்தவது ஹிந்து தர்மத்தை பின்பற்றும் நமக்கு உசிதமாகும்.
சிவா
//அதனால் தமிழை சுத்தமாக பேசவும் சமஸ்க்ரிதத்தை மந்திரம் உச்சரிக்க பயன்படுத்தவது ஹிந்து தர்மத்தை பின்பற்றும் நமக்கு உசிதமாகும்.//
தமிழிலேயே ‘ழ’ ‘ள’ ‘ல’ ‘ண’ ‘ந’ ‘ன’ போன்ற எழுத்துக்களை உச்சரிப்பது கூட brahiminismஆக பார்க்கும் எண்ணம் தென்படுகிறது. தமிழுக்கே இப்படி என்றால் brahminsஉடன் மட்டுமே identify ஆகும் சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டம்தான். அதுவரை சுந்தரத்தெலுங்கு என்று பாடிய பாரதியை தமிழ் கவி என்று ஏற்றுக் கொண்டுள்ளார்களே!
ஜெயஸ்ரீ அவர்களுக்கு,
சிறந்த விளக்கங்களுக்கு நன்றி.
//இந்த மந்திரங்களை, உலகில் வழங்கும் பல மொழிகளிலும் (லத்தீன், தமிழ் உட்பட) மொழி பெயர்த்து ஆராய்ந்தனர். அவை எவற்றிலும் பலன் வரவில்லை. சமஸ்க்ருதத்தில் மட்டுமே பலன் ஏற்பட்டது!!
எந்த மொழி ஆர்வலர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சம்ஸ்க்ருத ஒலியில்தான் material world குறித்தும், – முன்பு சொன்னாற்போல் சுவர்க்கம் வரை செல்ல வேண்டியும் பலன்களை ஏற்படுத்த முடியும்.//
இதில் தான் என்னுடைய கருது மாறுபடுகின்றது. தமிழ் திருமுறைகளுக்கும் ஒலி அலைகளை ஏற்படுத்த முடியும். அவாறு செய்கின்றவர்கள் சிலர் உள்ளனர்.
௧. நான் சிறுவயதில் இருந்து பார்த்தது. என் தந்தை மழை வேண்டி “திருபறைத்துறை” பதிகத்தை படும்பொழுது மொழி பெய்ததை.
௨. திருநாஉகரசர் பாடி அருளிய “விடம் திர்த்த” பதிகத்தை பாடி விடத்தை நீக்கியவர்கள் பலர்.
இது போன்ற பல திருமுறை பதிகங்கள் மந்திர ஆற்றலை பெற்று உள்ளன. இதை செய்பவருக்கு முறையான பயிற்சியும் மற்றும் பக்தியும் அவசியம்.
சமஸ்க்ருதத்தில் உள்ள மந்திரங்களை மொழி பெயர்த்து கூறுவதால் எவ்வித பயனும் இல்லை. மாறாக, அதற்க்கு இணையான தமிழ் மந்திரங்களை பக்தியுடன் படலம்.
தமிழ் திருமுறைகளும் “சுவர்க்கம் வரை செல்ல வேண்டியும் பலன்களை ஏற்படுத்த முடியும்”.
ஜெயஸ்ரீ அவர்களுக்கு,
என்னுடைய மறு மொழிகள் உங்கள் கட்டுரையின் நோக்கத்தை மற்றுமானால், அதற்காக வருந்துகின்றேன்.
தமிழ் திருமுறைகளுக்கும் மந்திர ஆற்றல் உண்டு. தமிழ் பாடல்களும் அதிர்யு அலைகளை ஏற்படுத்த முடியும். இது என் தாழ்மையான கருத்து.
திரு சோம சுந்தரம் அவர்களே,
நான் இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை என்று தெரிகிறது.
நீங்களே சொல்லிவிட்டீர்கள் –
>>>இது போன்ற பல திருமுறை பதிகங்கள் மந்திர ஆற்றலை பெற்று உள்ளன. இதை செய்பவருக்கு முறையான பயிற்சியும் மற்றும் பக்தியும் அவசியம்.<<>>அங்கே மனோபாவம் முக்கியம். மற்றவை இரண்டாம் பட்சம். <<<
ஆனால் அக்னிஹோத்ரம் ஹோமத்தில் பாருங்கள். அங்கே பக்தி, எண்ணம், மனோபாவம் பேசப்படவில்லை. வேறு மதத்தினரும், ஏன், ஒரு சிறுவனும் கூட செய்யலாம் – என்ன வென்று தெரிந்துகொள்ளாமலேயே. அது ஒரு பௌதிக விதிக்கு உட்பட்டது. சம்ஸ்க்ருத மந்திரம் – குறிப்பிட்ட ஓசை நயத்துடன் (சந்தஸ்) சொல்லப்படுகையில் (பத்தி, மனோபாவம் இங்கு தேவையில்லை என்பதை கவனியுங்கள் ) பலன் வந்து விடுகிறது. என்ன, எது என்று விஷயமே தெரியாமல் கோயிலிலும், ஹோமம் செய்தும் பலன் வருவதற்கு அதுவே காரணம். இதன் அடிப்படியில்தான் பரிஹார பூஜைகள் வேலை செய்கின்றன.
பலன் வரும் மற்ற விஷயங்களில், (நீங்கள் சொல்வது உட்பட) மனோ பாவம் முக்கியம். பாடலாகப் பாடப்படுகையில் கூட (நாதப் பிரம்மம் பற்றிக் கட்டுரையில் எழுதியுள்ளது பார்க்க) ஒரு பாவம் வந்து விடுகிறது.
இறை பக்தி என்பதே அல்லாமல் வேறு வித மனோபாவங்களில் கூட இயற்கையை வெல்ல முடியும். சான்று :- தெய்வம் தொழாமல் கணவனை அன்றி வேறு எண்ணமே இல்லாத பதி பக்தியிலும் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. வாசுகி முதல், கண்ணகி கூறும் புகார் நகரத்து ஏழு பத்தினிப் பெண்கள் வரை, ( மற்றும் கண்ணகி உட்பட) பதி பக்தியால் இயற்கையை தாங்கள் விரும்பிய படி செய்ய முடிந்திருக்கிறது. அங்கும் அவ்வாறு செய்ய வைத்தது – எண்ணம் அல்லது மனோபாவத்தால்.
ஜெயஸ்ரீ அவர்களுக்கு,
//சம்ஸ்க்ருத மந்திரம் – குறிப்பிட்ட ஓசை நயத்துடன் (சந்தஸ்) சொல்லப்படுகையில் (பத்தி, மனோபாவம் இங்கு தேவையில்லை என்பதை கவனியுங்கள் ) பலன் வந்து விடுகிறது.//
//இறை பக்தி என்பதே அல்லாமல் வேறு வித மனோபாவங்களில் கூட இயற்கையை வெல்ல முடியும். //
இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மலையாள மந்திர வித்தை செய்பவனுக்கும் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவனுக்கும் (பத்தி, மனோபாவம் இன்றி) எவ்வித வித்தியாசமும் கிடையாது.
பரம்பொருளின் மீது பக்தி (எல்லையற்ற அன்பு) இல்லாமல் , இது போன்ற மந்திரங்கள் செய்வதால் எவ்வித பயனும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அது நிரந்திரம் ஆகாது. இதனால் பரம்பொருளின் திருவடி பேரு கிடைக்காது.
பக்தி ஒன்று தான் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவனுக்கும் தமிழ் திருமுறைகள் மற்றும் பாசுரங்கள் படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
//பக்தி ஒன்று தான் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவனுக்கும் தமிழ் திருமுறைகள் மற்றும் பாசுரங்கள் படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு.//
அப்படி என்றால் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவன் பக்தி இல்லாமல் சொல்கிறான் என்று சொல்கிறீர்களா?
//இறை பக்தி என்பதே அல்லாமல் வேறு வித மனோபாவங்களில் கூட இயற்கையை வெல்ல முடியும்.// இங்கு சொல்லப் படுவது இயற்கையை வெல்வது பற்றிதான். இறையருளைப் பெறுவதைப் பற்றி அல்ல.
திரு armchaircritic
//அப்படி என்றால் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவன் பக்தி இல்லாமல் சொல்கிறான் என்று சொல்கிறீர்களா?//
இல்லை. என்னுடைய கருது என்னவென்றால், எந்த மந்திரம் ஓதினாலும் அதன் கூடவே இறை பக்தி வேண்டும்.
அறிவியல் ரீதியாக பலர் “சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்” என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை என்று கூறுகின்றனர். என்னக்கு இதில் உடன்பாடு இல்லை.
// இங்கு சொல்லப் படுவது இயற்கையை வெல்வது பற்றிதான். இறையருளைப் பெறுவதைப் பற்றி அல்ல.//
இயற்கையை வெல்வது என்பது இறையருளைப் பெறுவது தான்.
இறையருள் இல்லாமல் இயற்கையை வென்றால் அது அழிவை தான் தரும்.
//அறிவியல் ரீதியாக பலர் “சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்” என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை என்று கூறுகின்றனர். என்னக்கு இதில் உடன்பாடு இல்லை.//
அறிவியல் ரீதியாக நீங்கள் இதை தவறு என்று நிரூபிக்க முடியுமா. முடியாதென்றால் இதற்கு சம்ஸ்க்ருதம் மேல் உங்களுக்கு உள்ள வெறுப்பு என்றுதானே அர்த்தமாகும்?!
இறைவன் மேல் கொள்ளும் பக்திக்கு படிப்பெதற்கு? பாட்டெதற்கு? மந்திரம்தான் எதற்கு? உங்களுக்குள்ள பக்தியை புரிந்துக் கொள்ள முடியாதவரா அவர்? உங்கள் பக்தியை வெளிப்படுத்த உள்ள ஒரு கருவிதானே உங்கள் மொழி?
சம்ஸ்க்ருத மந்திரத்தை பக்தி இல்லாமல் சொன்னாலும் இறை அருள் கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லையே?!
//அறிவியல் ரீதியாக பலர் “சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்” என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை என்று கூறுகின்றனர்.//
விவாதத்தில் அவ்வாறு சொல்லப்பட்டது. எந்த இறை எண்ணமும் இல்லாமலேயே கூட பலன் தரக் கூடியது என்று காட்ட இன்று அக்னி ஹோத்திரம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்து மதத்தினரைக் காட்டிலும், இன்று வேறு மதத்தைச் சார்ந்த வெளி நாட்டவர் பலரும் அக்னி ஹோட்திரத்தைச் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் அக்னி ஹோத்திரம் என்னும் சொல்லை என் வலைப்பதிவில் எழுதும் போது , google alert -இல் அதைக் கண்டு, என்னை விசாரிப்பவர்கள் வெளி நாட்டவரே. இந்து மதத்தை பின் பற்றவில்லை என்றாலும், அக்னி ஹோட்திரத்தைச் செய்வதற்கு முன்னால் மனத்தை ஒருமுகப் படுத்திக் கொள்ள சில நியமங்களை அவர்கள் அனைவருமே பின்பற்றுகின்றனர். ஆனால் பக்தியுடன் செய்தால், இறைவனை நெருங்குதல் என்பது பிளஸ் பாயிண்ட். தன இந்திரியங்களை சமாதானம் செய்து கொண்டு, ஹோமம் செய்யத் தயாரானார் வசிஷ்டர் என்றும் ராமாயணத்தில் வருகிறது.
இயற்கையை வெல்லுதல் குறித்து:-
//இயற்கையை வெல்வது என்பது இறையருளைப் பெறுவது தான்.
இறையருள் இல்லாமல் இயற்கையை வென்றால் அது அழிவை தான் தரும்.//
இறை அருள் இருந்தால் இயற்கையை வெல்ல முடியும்.
இலக்கியம் அடையாளம் காட்டியுள்ள பத்தினிகள் விஷயத்தில், பதி பக்தியால் இயற்கையை வென்றுள்ளனர். அப்படி என்றால் அவர்களுக்கு இறை அருள் பூரணமாக இருந்திருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அவர்கள் வழிபட்டது தங்கள் கணவனை!
இது எப்படி சாத்தியம் என்று பார்க்கலாம்.
component ‘x’ enabled the devotee to conquer Nature.
Component ‘y’ enabled the பத்தினி to conquer Nature.
Therefore component ‘x’ = component ‘y’.
பத்தினியின் மனோபாவமும், பக்தனின் மனோபாவமும் ஒன்று. பக்தன் தெய்வத்தை நினைக்கிறான், பத்தினி, கணவனை தெய்வமாக நினைக்கிறாள். இங்கே கணவன் தெய்வமாகவில்லை. அவன் தெய்வமும் இல்லை. ஆனால் தெய்வத்திடம் காட்டும் அர்ப்பணிப்பை, கணவனிடம் காட்டி அவள் மிகச் சிறந்த உலகங்களை அடைகிறாள் என்று பரம சிவன் பார்வதியிடம் சொல்வதாக, பீஷ்மர் அம்புப் படுக்கையிலிருந்து யுதிஷ்டிரரிடம் சொகிறார். இந்த மனோபாவம்தான் இறை பக்தியிலும் இருக்கிறது. இந்த் மனோபாவத்தைக் கொண்ட பக்தன் சொன்னால் மழை பெய்யும், பத்தினி சொன்னாலும் மழை பெய்யும் (தெய்வம் தொழாள் குறள் காண்க).
இங்கே ஆற்றல் எதற்கென்றால், மனோபாவத்திருக்கு. இதை காஞ்சி பரமாச்சரியரும் சொல்லியிருக்கிறார். இந்த மனோபாவத்தை, கண்ணால் பார்க்கும் கணவனிடம் காட்டி, அமையப் பெறுவது எளிது. மனைவி பாவத்தில் எளிது. அதனாலேயே, நாயகி பாவத்தில் இறைவனிடம் பக்தி புரிதல் எளிது. பேசும் மொழியும், பாடும் பாடலும் அந்த மனோபாவத்திருக்குத் துணையாகத் தான்.
ஆனால் சம்ஸ்க்ருத மந்திரங்கள் வேறு வகையானவை.
எவ்வாறு என்று முன்னமே சொல்லப்பட்டுள்ளது.
அக்னிஹோத்ரம் செய்யும் முறை பற்றி விளக்கினால் மிக நன்றாக இருக்கும் ஜெயஸ்ரீ அவர்களே – maybe as a new topic.
திரு armchaircritic அவர்களே.
////அக்னிஹோத்ரம் செய்யும் முறை பற்றி விளக்கினால் மிக நன்றாக இருக்கும் ஜெயஸ்ரீ அவர்களே – maybe as a new topic./////
எழுதலாம்.
ஆனால் இதைப் பற்றிய எல்லா விஷயங்களும் வலைத்தளத்தில் உள்ளன.
ஆராய்ச்சிகள் மூலம், இந்த ஹோமத்திற்கான செப்புப் பாத்திரங்கள் standardize செய்து optimum benefit வரும்படி கொடுத்துள்ளார்கள். இந்தியாவில் சோலாபூர் என்னும் இடத்தில் மைய கேந்திரம் இருந்தது. அப்பொழுதெல்லாம் internet கிடையாது. நேரிடையாகவே volunteers ஊர் ஊராகச் சென்று பரப்பினார்கள். அவர்கள் மூலமாக ஹோமப் பாத்திரங்களை வாங்கினோம். அப்பொழுது இருநூறு ரூபாய்க்குள் ஆனது. இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை. திருச்சியைச் சென்ற திரு ஸ்ரீனிவாசன் என்பவரும், கோயம்பத்தூர் perks educational group -ஐச் சேர்ந்த ஒரு பெரியவரும் தமிழ் நாட்டில் பல இடங்களிலும் சென்று பிரபலப் படுத்துனார்கள். ஸ்ரீனிவாசன் அவர்களைப் பற்றி இந்து பத்திரிக்கையில் செய்தியும் போட்டார்கள்.
இந்த ஹோமத்தை நான் உங்களுக்கு விளக்கினாலும், அதைச் செய்ய பாத்திரங்கள் தேவை. அவை கிடைக்கும் contacts என்னிடம் இல்லை. வலைத் தலத்தில் தேடின போது, சோலாபூர் அட்ரஸ் கிடைத்தது.
Institute for Studies in Vedic Sciences
Shivpuri, Akkalkot – 413216
Dist : Solapur; Maharashtra
INDIA
Phone : 0091-2181-220708
இங்கே தொடர்பு கொண்டு ஹோமப் பாத்திரங்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன்.
இவர்கள் website கீழே கொடுத்துள்ளேன். ஹோமம் பற்றிய எல்லா விவரங்களும் இதில் உள்ளன. பார்க்கவும்.
https://www.agnihotraindia.com/shivpuri.asp
கீழே கொடுக்கப்பட்டுள்ள website -இலும் விவரங்கள் அறியலாம்.
https://www.agnihotra.org/home.htm
https://www.beam.to/homaservices
Thanks Jayasree madam.
” நம் உடலில் ஓடும் இயக்கமான ரத்த ஓட்டத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஸ்டெதெஸ்கோப்பை ரத்த நாளங்கள் உள்ள கை மீது வைத்துக் கவனியுங்கள். அற்புதமான ஓங்கார ஒலியே கேட்கிறது.”
இதனை மேலும் விளக்க முடியுமா?! stethoscope வைத்து கேட்டால் லப்டப் என்ற ஓசை தானே நமக்கு பொதுவாக கேட்கும்..
அறிவியல் என்ற வார்த்தைக்கும் தமிழன் மட்டுமே பொருள் சொள்ளமுடித்த காலம் அது …. சிறு உதாரணம் ,,, நமது முன்னோர்கள் பலவற்றை குறிபெளுதி வைத்தனர் ,, 100 கணக்கான கோவிகளை ,எந்த கோவில்களை எப்படி வழிபடவேண்டு ,எந்த நேரத்தில் வழிபடவேண்டும் எத்தனைநாள் வழிபடவேண்டும் என்பதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் …ஒருவன் தனது வாழ்நாள் முழுவது சுற்றி பார்த்தல்குட அவனால் இதை சரியாக செய்யமுடியாது ,,,,,,, பிறகு எப்படி ? astrotravel ஆம் தவம் செய்யும் பொழுது தன்னுடைய ஆன்மாவை கொண்டு இத பிரபஞ்சத்தை சுற்றிவரமுடியும் ….இவ்வாறு தன 9 கோள்கள் ,,உலகின் இயக்கன் கண்கன்னிக்கபட்டது
தெய்வீகம்
மிக, மிக அற்புதமான , விளக்கமான கட்டுரை. சமஸ்கிருதம், தமிழ் குறித்த விவரணைகள் மிக சிறப்பு. சரியான பார்வை.
நன்றி… ஜெய ஸ்ரீ அம்மா அவர்களே.