சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5

எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி

முந்தைய,  மற்ற பகுதிகள்

ஐயன் காளி வரலாறு – தொடர்ச்சி..

ayyankali_2புலையர் சமுதாய அக்கறையில் ஈடுபாடு கொண்ட மற்றொருவர் பி.கெ.கோவிந்தன் பிள்ளை. இவரும் பி.ராஜகோபாலாச்சாரியாருமாக இணைந்து புலையர்களுக்கு பட்டா செய்து தர வேண்டிய நிலத்தைக் குறித்து ஆலோசனை செய்தனர். கோவிந்தன் பிள்ளையே அந்த நிலப் பட்டாவைத் தயாரிக்க ஏற்பாடாயிற்று. இது பற்றி நடந்த கூட்டத்தில், புலையர்களுக்கு இன்னமும் பள்ளிகளில் கல்வி மறுக்கப்படுவது, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள் பெயரளவிலேயே இருப்பது ஆகியவை பற்றிய உண்மை நிலவரத்தை எடுத்துக் காட்டி, புலையர்கள் வாழும் இடங்களிலேயே இரவு கல்விக்கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும், அனைத்து மருத்துவமனைகளிலும் பாரபட்சமின்றி புலையர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் உணர்ச்சி ததும்ப ஆதார பூர்வமாக பேசினார் கோவிந்தன் பிள்ளை.

பிப்ரவரி 13 , 1911 இல் கோவிந்தபிள்ளை எனும் அந்த ‘மேல்-சாதி’ மனிதர் புலையர்களின் ஊனோடு கலந்து உணர்ச்சிகளில் உருகிப் பேசியது, இன்றைக்கும் புலையர்களால் மட்டுமல்ல, அவர்களைப் போன்றே சாதீய விலங்குகளால் விலங்கு பிணிக்கப்பட்ட அனைத்து சமுதாயத்தினரின் முன்னேற்றத்துக்கும் முக்கிய குரலாகக் கருதப்படுகிறது. இறுதியாக தமது பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினார் கோவிந்தன் பிள்ளை. இச்சபையில் தாம் பேசுவதைக் காட்டிலும் புலையர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரே தம் நிலைகளை விளக்குவதே தகுந்தது எனவும் எனவே அதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் கூறினார்.

கனத்த மௌனம் நிலவியது அங்கே. திவான் ராஜகோபாலாச்சாரியார் இது குறித்து சபையினைக் கேட்டார். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திவானைக் காண ஐயன் காளி சென்றார். ஆனால் திவானின் காவலாளிகள் அவரை உள்ளே விட மறுத்தனர். திவானுக்கு ஒரு தந்தி அனுப்பினார் ஐயன் காளி. ஐயன் காளியைக் கூப்பிடனுப்பிய திவான் அவர் வந்ததும் முதலில் காவலாளிகளை மன்னிப்பு கேட்கச் செய்தார். ஸ்ரீமூலம் மக்கள் சபைக்கு புலையர் பிரதிநிதியாக அய்யன் காளி நியமிக்கப்படுவது குறித்து பேச்சு நடந்தது. ஐயன்காளி மன நிறைவுடன் திரும்பினார்.

1911 டிசம்பர் 5: “சாது ஜனபரிபாலன சங்கத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய அய்யன்காளி திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் மக்கள் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்” என அரசாங்க கெசட்டில் அறிக்கை வெளியானது. ஐயன் காளி தம் சமுதாய மக்களின் பல நலன்களுக்காக குரல் கொடுத்தார்.

valmiki_smஐயன் காளி படிப்பறிவற்றவராக இருக்கலாம், ஆனால் சமுதாயத் துன்பத்தைத் தானேற்றவர். அந்தக் காலகட்டத்தில் ஐயன்காளி ஆற்றிய உரைகளைப் பார்க்கையில், அவர் இதயத்தில் வேத தருமமும் அவர் நாவில் அந்த தருமத்தின் தேவதையான அன்னை சரஸ்வதியுமே ஆட்சி செய்தனர் என்று கூறுவது மிகையாகாது. கிரௌஞ்ச பட்சிகளுக்காக இளகிய மனவேதனை வால்மீகி என்ற வேடனை ஆதிகவியாக்கியது.  ஐயன் காளியோ பட்சிகளுக்காக அல்ல, ஆறறிவு படைத்தும் சக-மனிதரை மாக்களாக நடத்துகிற ஒரு சமுதாய அமைப்பையே அல்லவா கண்டு வேதனைப் பட்டார்! எனவே கல்வியறிவுக்கு அப்பாலானதோர் இதயத்தின் நல்லறிவு அவரது வார்த்தைகளுக்கு ஆற்றல் அளித்தது.

1913, 1914 ஆம் ஆண்டுகளில் அய்யன் காளியைத் தவிர சரதன் சாலமன், வெள்ளிக்கர சோதி ஆகியோரும் ஐயன்காளியின் முயற்சியால் புலையர்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர். ஆனால் சரதன் சாலமன் தான் புலைய கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே பிரதிநிதி என்பது போல நடந்துகொண்டார்.
ஐயன் காளியின் பேரர் அபிமன்யுவின் வார்த்தைகளில், ‘1913 இல் ஐயன்காளியின் பரிந்துரையின் பேரில் சரதன் சாலமன் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பிந்தைய நடவடிக்கைகள் புலையக் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்தன. அச்செயல் ஐயன் காளிக்குச் சற்றும் பிடிக்கவில்லை.’ சபையிலேயே சாலமனது கருத்து சாது ஜனபரிபாலன சங்கத்துக்கு முற்றிலும் எதிரானது என ஐயன் காளி தெரிவித்தார்.

1912 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் ஐயன்காளி நுழைந்தார். ’மேல்சாதி’ என்ற வெறிபிடித்து அலைந்த சாதிய மிருகங்களுடன் இம்முறை இஸ்லாமிய வெறியர்களும் சேர்ந்து கொண்டனர். ஆனால் ஆதி சக்தி அருளுடன் அணிதிரண்ட ஐயன் காளி சேனை இந்த சாதி மத வெறி பிடித்த கும்பலை ஓட ஓட விரட்டியது. அதன் பின்னர் அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால் மீண்டும் பள்ளி உரிமைகள் கிடைக்காமல் போயின. ஐயன் காளி மனம் சோர்ந்த நிலை அடைந்த போது அவரது அகக்கண்ணில் அவரது குரு சுவாமி சதானந்தர் தோன்றினார். “உரிமைகளை யாரும் கூப்பிட்டுக் கொடுக்க மாட்டார்கள் நாம் அவற்றை தேடிச் சென்றடைய வேணும்” எனும் அவரது அமுத மொழி ஐயன்காளியின் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அர்ஜுனன் காண்டீபத்தை மீண்டும் உறுதியாகப் பிடித்தான். புலையக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிகளுக்குள் ஏறினார் ஐயன் காளி. தரும நெறிக்கு எதிரான மத மற்றும் சாதீய மிருகங்கள் தாக்கின. பதிலடி அளித்தார் காளி. கலவரங்கள் வெடித்தன.

1914 இல் கல்வித்துறை தான் வெளியிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உத்தரவு செயல்படுத்தப் படுகிறதா என பார்க்கலாயிற்று. புலையக்குழந்தைகள் நுழையும் பள்ளிகளில் மேல்சாதிக் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து மிச்சல் குழந்தைகள் வெளியேறுவதற்குக் தக்க காரணங்கள் தரப்பட்டு இருந்தால் அவற்றை ஆவணப் படுத்துமாறு தலைமை ஆசிரியர்களைப் பணித்தார்.

இந்நிலையில் சோதனையை சாதனையாக்கிட முடிவெடுத்தார் ஐயன் காளி. 1905 இல் அவர் ஏற்கனவே நிறுவிய பள்ளிக்கு இப்போது அரசு அங்கீகாரம் தரப் பட்டது. அடுத்து தகுந்த ஆசிரியரைத் தேடி அலைந்தனர். பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் முன்வந்தார். ‘ஹரி ஸ்ரீ ஓம்’ எனச் சொல்லிப் பாடம் நடத்தத் தொடங்கியதுதான் தாமதம், வெறி பிடித்த ஈன ஜன்மங்கள் பள்ளியைத் தாக்கின. அன்று இரவு பள்ளி தீக்கிரையானது. ஆனால் ஐயன் காளி ஓய்ந்துவிடவில்லை. இது ஒரு மாபெரும் இயக்கமாக மாறி, அனைவருக்குமான பள்ளிகள் பல இடங்களில் எழுந்தன.

pulaya_womenதாழ்த்தப் பட்ட சமூகப் பெண்கள் கல் நகை அணியும் வழக்கத்தினை கைவிட்டு நல்நகைகள் அணிய வைக்கும் உரிமையை வாங்கித் தந்தது இந்து மதப் பெரியவரான அய்யன்காளியின் மற்றொரு சாதனையாகும். இது குறித்து ஐயன் காளி நடத்திய பிரச்சார கூட்டங்களில் மேல்சாதி ஈனர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர் ஐயன் காளி படையினர். பெரும் கலவரங்கள் எங்கும் பெருகின.

இந்நிலையில் நாயர் சர்வீஸ் சொசைட்டி என்ற முற்போக்கு எண்ணம் கொண்ட அமைப்பு ஐயன் காளியுடன் இணங்கி வந்தது. இதன் மூலம் ஐயன் காளியின் தரப்பினர் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் சமுதாய நல்லிணக்கம் ஏற்படும் சாத்தியம் உருவானது. நாயர் சர்வீஸ் சொசைட்டி தலைவர்களில் ஒருவரான சங்ஙனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை தலைமையில் நடந்த சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பரமேஸ்வரன் பிள்ளை அறிவித்தார், “ஸ்ரீ ஐயன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்.” அந்த மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப்பட்டன. கலவரங்களால் ஏற்பட்ட வழக்குகளையும் ஐயன் காளி பொருளாதார நெருக்கடிக்களுக்கிடையே நடத்தி நல்லபடியாக முடித்தார்.

ஆனால் போக வேண்டிய தூரமோ இன்னும் நிரம்ப இருந்தது. தீண்டாமையையும் வறுமையையும் பயன்படுத்தி மதமாற்றங்கள் தொடர்ந்தன. மீண்டும் இப்பிரச்சனையை எழுப்பினார் அய்யன் காளி.

இதோ ஸ்ரீ மூலம் மக்கள் சபையில் ஐயன் காளியின் குரலைக் கேளுங்கள்:

“தற்போது நிலவி வரும் தீண்டாமை எந்த தெய்வ நம்பிக்கையையும் ஆதாரமாகக் கொண்டதல்ல. மிருகங்களை விடக் கேவலமான விதத்தில் நடத்தப்படும் புலையர் மக்கள் கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறினால் இக்கொடுமைகள் சட்டென்று அகன்று விடுகின்றதைப் பார்க்கிறோம்… எனது இனத்தவர்களுக்கு வீடோ, பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்குச் செய்வதை விடக் கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும், கோயில்களும் நிர்மாணித்துத் தரவேண்டும். நீதி மன்றம் போன்ற அரசாங்க அலுவலகங்களில் சில புலையர்களையேனும் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். புலையக்குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு ஊக்க தொகை வழங்கவேண்டும்.”

திவான்: பொது வழிபாட்டுக் கூடங்கள் நிர்மாணிப்பது அரசாங்கத் திட்ட வரம்புக்குள் இல்லை. மதமாற்றம் சம்பந்தமாக அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது (1923 மார்ச் 21).

இதுதான் சாதிய சமுதாயத்தின் தற்கொலை போக்கு!

ஆயினும் சாதுஜனபரிபாலன சங்கம் நன்றாகவே வளர்ந்து வந்தது. 1930ல் நடந்த ஆண்டுவிழாவில் ஹிந்து பத்திரிகையின் நிறுவனரும், தேசபக்தருமான வி.எஸ்.சுப்பிரமணிய அய்யர்  தலைமை தாங்கினார்.

ஐயன் காளிக்கு மிகவும் பிடித்த சங்க பிரார்த்தனை பாடல்களில் ஒன்றினை இன்றும் அவரது முதிய சகாக்கள் பாடுவதுண்டு –

ஆனந்த சின்மயா ஜோதி ரூப மூர்த்தியே ஆனந்த சின்மயா
அழகிய பாத மலர்களை வணங்குகிறோம் ஸ்ரீ ராம கிருஷ்ணா
ஆனந்த சின்மய தேவா
மாதாவும் நீயே பிதாவும் நீயே சுற்றமும் நட்பும் நீயே தேவா

இந்துமகாசபையின் சாதீய எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரித்தார் ஐயன் காளி.

ஐயன்காளியின் வாழ்வில் நடந்த மூன்று வரலாற்று நிகழ்வுகளை இங்கே குறிப்பிடவேண்டும்:

1933 : கோவில் நுழைவு பிரகடனம்.
1937 : ஜனவரி 14 வெங்ஙானூர் வந்து மகாத்மா காந்தி அய்யன் காளியை சந்தித்தது.
1939 : அய்யன் காளிக்கு கொடுப்புனா ஊர் மக்கள் கொடுத்த வரவேற்பு.

முதுமைப் பிராயத்தில் ஐயன் காளி ஆஸ்துமாவால் நோயுற்று தளர்ந்தார். அப்போது கிறிஸ்தவ மிஷநரிகள் தம் கைவரிசையை காட்டினர். ஜான் ஜோசப் என்கிறவரையும் ஜான் ஜோஷ்வா என்பவரையும் வைத்து ஐயன் காளிக்கு போட்டியாக மாற்றுமத பிரச்சாரகர்கள் செறுமன் சபை என்று ஒன்றை கூட்டினார்கள். இந்து புலையர்களை சாது ஜனபரிபாலன சங்கத்திலிருந்து விலகி இதில் வந்து சேர ஆசை காட்டினர். ஜான் ஜோசப் இதன் செயலாளர். ஆபிரகாம் ஐசக் என்பவர் தலைவர்.

ஐயன் காளியின் உற்ற துணைவர்களான கேசவன் சாஸ்திரி, டிவி தேவன், ஆரன்முள பி.கெ. தாஸ் ஆகியோர் இந்த மதவாதப் போக்கை எதிர்த்தனர். இந்த கிறிஸ்தவ சதியை முறியடிக்க, தனது இயக்க வாரிசாக ஐயன்காளி தேர்ந்தெடுத்த கேசவன் சாஸ்திரியால் உருவானதுதான் சமஸ்த கேரள புலையர் மகாசபை. புலையவர்களின் புதிய தலைவராக விளங்கிய டி.டி.கேசவன் சாஸ்திரி  பெரும் சமஸ்கிருத பண்டிதர்  என்பது குறிப்பிடத் தக்கது.

1941 ஜுன் 18 அன்று இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் தலித் போராளியும், மாபெரும் இந்து சமுதாய சிற்பியுமான ஐயன் காளி.

(தொடரும்)

3 Replies to “சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5”

  1. iraivanai vazhipada jaathi matham oru thadai alla. thiruvarangathil inrum 18 jaathiaarukku kovilil irai thondaatrum pani,urimai ullathu, adharkaaga avargalukku mariyadhai,maniyam alikapadugirathu. intha 18 jaathiaaril anaivarume the said upper caste or the said lower caste kidaiathu. anthanarum ullanar, kanakku pillaium ullanar,konaar ,vannaan kulathavar,kuyavar,naavithar ellorum undu. ivargal anaivarin ozhukkam matrum vazhviyal neri muzhukka vainava matha kotpaadugal matrum vazhimuraigalai kaiaalapadum. oru thagundha vainava guruvidam mudirai itudal,gyaana kalvi, irai vazhipaatu murai aagiyavatrai petru ivargal kovilukkul irai pani seia anumathikkapattu vanthanar. aanal inru ivargalil perumpaalanor kovilukku varuvathaiye izhivaaga karuthuvathaal pala irai thondugal ninru vittana allathu piraraal contract,subcontract,HR&CE board appointment enra vithathil kai maari poi vittathu. ivargalukku arasargalaal vazhangappatta maniyam,nilangal 1980 galil iruntha arasiyal oozhalgalinaal parikkapattana. intha jaathi verupaadatra irai thondu seium murai raamanujar enra vainava thuraviyaal muzhu nadaimuraikku kondu varappattadhu. adharku mun 8 or 12 jaathiyaargal mattume seithu vantha irai thondai innum pala vainava makkalai kondu perukki 18 jaathiyaargalai thiruvarangathai sutri kudi amarthi avargalai thiruthi panikondu irai thondu seiaveithaar. ivargalukku akkaalathil (for all the 18 castes), aazhwargal aruliya 4000 thamizh paakalum avatrukku vilakkangalum kattayam terinthu irukkavendum. illayel oru sila pathigangalenum avasiyam katru thelindhu irukka vendum. idhanal palar kalvi arivu petru irunthanar. samaskrutham oru silarukku mattume enru iruntha nilaiyai matriavarum ivare. ivargal anaivarukkum samaskrutham ezhuthavum,padikkavum,pesavum katru thara aadhaaramaage irunthaar intha vainava thuravi. enakku terinthu pookattum idamaana saathara veedhi enru azhaikkapadum teruvil pala brahmanar allatha vainava kulathu perior samaskruthathil nalla pulamaiodu aazhvargalin thamizh paakalum nanraagave terium. ivargal pulal, madhu, maadhu, thooimai atra unavu, matrum vainavathukku erkaatha neri muraigalai pinpatri odaamal nalla ozhukkam,pazhakka vazhakkangalundan irai thondu seia anumathikkapattu irunthanar. kovil,kulam,podhu koottangal,podhu idangalil ivargalukku ellorukkume sama urimaiye vazhangapattu vandhadhu. Theendamai enra pechukke idam illamal than nadanthu kondu irunthathu. idharku thiruvarangan ula, koil ozhugu, thiruvaranga kalambaga, tirumalai ozhugu enru pala noolgalil aadhaaram kattugirathu. nam makkal inthu mathathai patrium athil irukkum samaia pirivugal patria purithalukkaana thedalai kai vittadhum, thavaraana oru silargalin matta ragamaana bodhanaigalaalum thisai maari poga neridugirathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *