இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!

தமிழ்ஹிந்து தளத்தினைத் தாங்களாகவே தொடர்பு கொண்டு, இலங்கையில் திருமுறை வேள்விகள் நடத்துவது பற்றிய இந்த விவரணங்களை செயல்திட்டக் குழுவினர் நம்மிடம் அளித்தனர்.

இந்தச் செயல்திட்டம் இறையருளால் தடையின்றி நடந்து நிறைவுபெறுக என வாழ்த்தி அந்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பின்னணி:

sri-lanka-genocide-tamil-civilian-interment-camp-vavuniyaஇலங்கைத் தீவில் இரத்த ஆறு ஓடி ஓய்ந்திருக்கிறது. போர் முடிந்து விட்டாலும் மிகவும் குழப்பமுற்ற நிலை இருக்கிறது; சிங்கள இனவெறியும், பௌத்த மதவெறியும், கிறிஸ்தவ சூழ்ச்சியும் இணைந்து தமிழர் வாழ்வையும், உரிமைகளையும் பல பத்தாண்டுகளாக சூறையாடி, அதன் இறுதிக் கட்டமாக போர் முடிந்த பின்னும் இன்னும் விடியல் வரவில்லை.

இந்தப் போரில் பாதிக்கப்பட்டோரில் 85% தமிழ் இந்துக்கள். சைவ சமயத்தை உயிரினும் மேலாகப் போற்றி வரும் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள் . அழுது கொண்டிருக்கிறார்கள்; அலமந்து இருளில் மூழ்கி இருக்கிறார்கள். விம்மலும், வேதனையும், கண்ணீரும், கம்மலையும், அழுகுரலும் ஓயாத நிலமாகச் சைவத் தமிழ் மக்களின் நிலம் வரண்டு சிவந்து போயிருக்கிறது.

ஓய்ந்து உழன்று துவண்டு நாதியற்று, கேட்பாரின்றி துயரம் மீநிற்க, துன்பத்திற்கு மேல் துன்பம் சூழ முகாம்களில் இருந்து முகாம்களுக்கு அலைக்கழிந்து ஆற்றொண்ணாத் துயருடன் ஏங்குகின்றனர் தமிழ் மக்கள். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்களது உரிமைகளை மீட்பதுடன் கூடவே, அந்த மக்களின் நெஞ்சங்களுக்கு நம்பிக்கை ஒத்தடம் அளிப்பதும் மிக மிக முக்கியமானது.

”இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே”

என்று சம்பந்தரும்,

”கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே”

என்று அப்பரும் அருளிச் செய்துள்ளனர்.

nallurtempleசைவத் தமிழ் மக்களுக்குச் சைவ நெறிதான் உயிர்; வேத ஆகம வழிபாடுகள் நடப்பதற்கும், திருமுறைகள் ஓதுவதற்கும், திருநெறிகள் கைக்கொள்வதற்கும் உரிய இடங்களாக ஆயிரக் கணக்கான திருக்கோயில்கள் தமிழர் நிலப்பகுதியில் பல நூற்றாண்டுகள் வரலாற்றுப் பெருமை பெற்று இருந்தன. போரின் காரணமாகவும், திட்டமிட்ட கலாசார ஒழிப்பு மூலமாகவும் இப்பழம்பெரும் திருக்கோயில்களும் சிதைந்தன; மீதமிருப்பனவும் சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன. அண்மையில் கூட யாழ்-காங்கேசந்துறை நெடுஞ்சாலைத் விரிவாக்கத்திற்காக என்று சொல்லப்பட்டு  70க்கும் மேற்பட்ட பழைய சைவக் கோயில்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டப் படுவதாக கவலை தெரித்தனர் இலங்கைத் தமிழ் மக்கள்.

வழிபடலாம் என்று போனால் இடிபாடுகள். வழியிலேயே மாற்றுச் சமயத்தார் – “உங்கள் வழிபாடுகள் உங்களுக்கு விமோசனத்தைத் தரவில்லை; மதம் மாறுங்கள்; எங்கள் நெறியில் சேருங்கள்” என ஒரு கையில் அவர்களின் மத வெறி காட்டும் புத்தகம், மறுகையில் அயல் நாடுகள் அள்ளிக் கொடுத்த பணக்கற்றை! இது ஒரு புறம்.

சிவன் கோயிலோ, முருகன் கோயிலோ, துர்க்கை கோயிலோ, பிள்ளையார் கோயிலோ, அம்மன் கோயிலோ இலங்கையில் இருக்கவில்லை என்றும் அவை அனைத்தும் புத்தர்களின் பாதம்பட்ட இடங்கள், தேரர்கள் புத்த நெறியை ஓதிய இடங்கள், புத்தரின் ஈமச் சின்னங்கள் புதைத்த இடங்கள், என்றும் முழங்கிப் புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அரசு ஆதரவுடன் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன; தூபிகள் கட்டப்படுகின்றன; கண்மூடி விழிக்குமுன் விரைவாக கட்டப்படுகின்றன. இது மற்றொரு புறம்.

அலமந்து நிற்கும் மக்களுக்கு அடிக்குமேல் அடி, நம்பிக்கைக்கு உதைக்கு மேல் உதை, வாழ்வின் ஏக்கத்திற்கு இடிக்கு மேல் இடி; சைவ சமயத்தில், இந்து மதத்தில் தொடர்வதா, தமிழைப் பேசுவதா என்ற அச்சம் மீதூர அவர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.

நோக்கம்:

தமிழ் இந்துக்களை யார் காப்பாற்றுவது? சைவ நெறியும் இந்து மதமும் உகந்ததா? ஏற்றதா?, காப்பாற்றுமா? என்ற ஆதங்கம் மேவ ஒதுங்கிக் கொள்வோம் என்ற கண்ணோட்டத்துடன் விரக்தியுற்று இருப்பவர்களை நோக்கி அனைத்து இந்துக்களும் திருக்கண் நோக்க வேண்டும்.

thiru-ketheeswaramதமிழையும், இந்து தர்மத்தையும், சைவத்தையும் ஈழத்தின் தமிழ் நிலப் பகுதிகளில் மட்டும்தான் கைக்கொள்வோர் இருக்கிறார்களா? ஏறத்தாழ ஐந்தரைக் கோடி எண்ணிக்கையான தமிழ் இந்து மக்கள் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இந்திய மாநிலங்களிலும் இருக்கிறார்கள். வருவாய் தரும் இந்துத் திருக்கோயில்கள் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஏராளம். இந்து தர்மத்தையும், சைவத்தையும், தமிழையும் காக்கும் மடங்கள், ஆதினங்கள், அமைப்புகள் இந்தியாவில் பற்பல.

ஈழத்திலே ஊர் ஊராகச் சென்று சைவ மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய கட்டாயமும், கடமைப்பாடும், தேவையும், உரிமையும் தமிழகத்து இந்துக்களுக்கு, குறிப்பாக சைவப் பெருமக்களுக்கும், ஆதீனங்களுக்கும், சைவத் திருக்கோயில்களுக்கும் உண்டு.

இந்தக் கடமையை உணர்ந்து, தமிழகத்திலிருந்து ஈழம் சென்று சைவத் திருமுறைகள் ஓதி ஞான வேள்வி செய்து, தமிழக இந்துக்களின், சைவ மக்களின் ஆதரவு ஈழத்தமிழருக்கு என்றென்றும் உண்டு என்பதை நிலைநிறுத்திச் சிவநெறியில் ஈழத்தமிழரை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் கோவையைச் சார்ந்த இந்து அமைப்புகள், சைவ சமய மன்றங்கள் இணைந்து ஒரு செயல் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.

செயல் திட்டம்:

ஈழத்தமிழர் தாயகம் இலங்கைத் தீவில் ஒன்பது ஆட்சி மாவட்டங்களை (அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம்) உள்ளடக்கியது. மலையகத் தமிழரின் தாயகம், எட்டு ஆட்சி மாவட்டங்களை (கொழும்பு, இரத்தினபுடி, மாத்தளை, குருணாகல், கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை) உள்ளடக்கியது.

இந்தப் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாகத் திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம். சைவத் துறவிகள், திருமுறை ஓதுவார்கள், இசை விற்பன்னர்கள், தொண்டர்கள் தமிழகத்தில் இருந்து குழுவாகச் சென்று இந்தப் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள ஊர்கள் தோறும் திருமுறை வேள்விகளை நிகழ்த்துவர்.

jaffna-hindu-sivadeekshai1

ஒரு வேள்வியல்ல, இரண்டு வேள்வியல்ல, ஆகக் குறைந்தது நூற்றைம்பது வேள்விகளை நிகழ்த்த வேண்டும். நுற்றைம்பது ஊர்களைத் தேர்ந்தெடுப்பர். கதிர்காமத்தில் முதலாவது வேள்வி தொடங்கி, கிழக்குக் கரையோரமாகச் சென்று, பின்பு மேற்குக் கரையோரமாகத் திரும்பி, கொழும்பு வரை வந்து, மலையகத்தில் புதுந்து அங்கெல்லாம் திருமுறை வேள்விகளை நடத்திச் சைவ மக்கள், தமிழ் மக்கள் சைவ நெறியில் ஊடாட்டம் அற்ற நம்பிக்கை கொள்ளுமாறு உதவுவர்.

ஒருங்கிணைப்பு:

திருமுறை ஞான வேள்வி நடத்துவதில் கோயம்புத்தூரில் திருமிகு. கங்காதரர் ஓதுவார் பயிற்சி பெற்றுப் பல இடங்களில் செய்து வருகிறார். அவர் தலைமையில் துறவிகள் ஐவர், ஓதுவார்கள் ஐவர், தொண்டர்கள் ஐவர் எனப் பதினைந்து பேர் கொண்ட குழு இலங்கைக்குச் சென்று ஊர் ஊராகத் திருமுறை வேள்விகளை நிகழ்த்துவர்.

வேள்வியை முறைப்படுத்தி நெறிப்படுத்துபவர்:

பண்ணிசைமணி. சி. வைத்தியநாத தேசிகர் கங்காதர தேசிகர்
14பி, திருவள்ளுவர் வீதி, மணியக்காரன் பாளையம்,
கணபதி அஞ்சல், கோவை 641 006,
தொலைபேசி: +91-9843299222

குழுவில் இடம்பெறும் மற்ற தொண்டர்கள் பற்றிய விவரங்கள் கீழே பின்பு தரப்பட்டுள்ளன.

பயணம்:

நூற்றைம்பது திருமுறை வேள்விகள், நூற்றைம்பது நாட்கள், பதினைந்து பேர்கொண்ட குழுவாக, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வதாகத் திட்டம்.

கொழும்பு வரை விமானத்தில் பயணம், அங்கிருந்து இதற்காகவே ஏற்பாடு செய்த வாடகை கார் ஒன்றை அமைத்துக்கொண்டு இந்தப் பதினைந்து பேர்களும், வேள்வி வழிகாட்டிகளும் ஊர் ஊராக சென்று, தங்கி, திருமுறை வேள்வி நடத்தி சைவச் செஞ்சாலியானது துளிர்த்துக் கதிர் விட்டுப் பொலிகின்ற காட்சியை உண்டாக்குவர்.

நோக்க நிறைவு:

சைவ மக்களிடையே தன்னம்பிக்கை பெருகும். சைவ சமய நெறியில் நம்பிக்கை வரும்
அலமந்த மக்களுக்கு ஆதரவுக் கரம் தமிழ்நாட்டில் இருந்து நீள்கிறதே என்ற உற்சாகம் பிறக்கும்

காலம் :

பயணத்தில் ஈடுபடுவோர் கடவுச் சீட்டு மற்றும் பயண ஆவணங்களைத் தயார் செய்து வருகின்றனர். அறுவடை முடிந்த கோடை காலத்தில் வழக்கமாகத் தமிழ் இந்துக்கள் ஈழத்தின் கோயில்களில் திருவிழா கொண்டாடும் காலத்தில் இந்த வேள்விப் பயணம் நடைபெறத் திருவருள் கூட்டுவதாக.

இத்திட்டத்தில் பங்கு பெறவும், உதவிபுரியவும் விழைவோர் ஒருங்கிணைப்பாளர் திரு. கங்காதர தேசிகர் அவர்களை மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தொண்டர்கள்:

குழுவில் திரு சி. வைத்தியநாத தேசிகர் கங்காதர தேசிகர் உடன் கூட, பின்வருவோர் இடம்பெறுவர் –

1. தவத்திரு அனந்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள், காமாட்சிபுரம் ஆதீனம், ஒண்டிப்புதூர் அஞ்சல், கோவை.
2. திருப்பெருந்திரு சடாட்சர வேல் சுவாமிகள், கச்சியப்பர் மடாலயம், ஈச்சநாரி, கோவை.
3. தவத்திரு நாகசக்தி பீடம் சிவ சண்முகசுந்தரபாபு சுவாமிகள், மலுமிச்சம்பட்டி, ஈச்சநாரி, கோவை.
4. தவத்திரு கிருட்டினமூர்த்தி சுவாமிகள், கெம்பட்டி குடியிருப்பு, கோவை
5. தவத்திரு கணேசமூர்த்தி அடிகளார், நவக்கிரகக் கோயில், காவட்டி, நாயக்கன்பட்டி, சுப்பனாபுரம், பேரையூர், மதுரை.
6. தவத்திரு குமாரசுவாமி சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ஆன்மீகப் பேரவை, ஊஞ்சவேலாம்பட்டி, பொள்ளாச்சி.
7. ஓதுவார் முருகேசு பழனிச்சாமி, நாதேகவுண்டன்புதூர், ஆலந்துறை வழி, கோவை.
8. ஒதுவார் ஆறுமுகம் பால கிருட்டிணன், மீனாட்சிபுரம், பொள்ளாச்சி.
9. ஓதுவார் இராயப்ப கவுண்ட பொன்னுசாமி, சேடன் தோட்டம், கோவை.
10. ஓதுவார் இராமசாமி முருகானந்தம், மெல்லப்பமுதலியார் தோட்டம், அசோக் நகர், வேட்டைக்காரன் புதூர்.
11. ஓதுவார் ஆறுமுகம் தண்டபாணி, மூலத்துறை அஞ்சல், சிறுமுகை.
12. ஓதுவார் வெள்ளியங்கிரி ஆனந்தசிவம்,  மீனாட்சி தோட்டம், ஜிஎன் மில்ஸ், கோவை.
13. ஓதுவார் திருநாவுக்கரசு நாராயணன் தேசிகர், சிஎம் எம் வீதி, காரைக்குடி.
14. ஓதுவார் பழனிச்சாமி நடராசன், கிருட்டினராசா வீதி, சித்தாதோட்டம், கணபதி அஞ்சல், கோவை.
15. ஓதுவார் ஆர். கணேச தேசிகர், சிரவை ஆதீனம், சின்னவேடம்பட்டி அஞ்சல், கோவை.

நிகழ்வுகள்

srilankan_tamil_campsசைவத் திருமுறைகளை முன்னிலையாக்கி, பாடல்களைத் தமிழோடு இசைபாடி, இறைவனை நாடும் வேள்வி, காலையில் 8 மணிக்குத் தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிந்துவிடும், ஊர்வெளியிலே பந்தல் அமைந்து இவ்வேள்விகளை நடத்தும்போது ஊர் மக்கள் அங்குத் திரண்டு வருவார்கள்; வழிபாட்டில் ஈடுபடுவார்கள். திருமுறைகளை ஓதுவார்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபடுவார்கள், நம்பிக்கையூட்டும் நல்லுரைகளால் ஆறுதல் பெறுவார்கள். மாலையில் திருமுறை இசை நிகழ்ச்சி, சைவ நெறிகள் பற்றி உரைகள் நிகழ்த்தலாம்.

நிகழும் இடங்கள்

இலங்கையில் 22 ஆட்சி மாவட்டங்களும், அவற்றில் 150 திருமுறை வேள்வி நடக்கவுள்ள ஆட்சிக் கோட்டங்களும் அங்குள்ள அமைப்புகளும் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

1. கொழும்பு மாவட்டத்தில் 9 கோட்டங்கள், அவற்றுள் 6 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்.

1. கொலன்னாவை, 2 அவிசாவளை, 3. மகாரகமை, 4. நுககொடை, 5 மொரட்டுவை, 6. அவிசாவள.

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தும் அமைப்புகள்:

1. விவேகானந்த சபை
2. அன்னை அபிராமி ஆசிரமம்
3. கொழும்பு வடக்கு இந்து பரிபாலன சங்கம்
4. சைவ முன்னேற்றச் சங்கம்
5. கொழும்பு மகளிர் இந்து மன்றம்
6. சுங்கத் திணிகள இந்து ஊழியர் சங்கம்
7. ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம்
8. அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம்
9. இந்து கலாசார மன்றம்
10. இந்து வித்தியா விருத்திச் சங்கம்
11. கதிகாம யாத்திரீகர் தொண்டர் சபை
12. சட்ட மாணவர் இந்து மகாசபை
13. இரத்மலானை – மொடட்டுல இந்து மன்றம்
14. சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் பரிபாவன சபை
15. ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் தேவஸ்தானம் அறங்காவலர் சபை
16. கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் கோவில் அறங்காவலர் சபை

2. கம்பகா மாவட்டத்தில் 13 கோட்டங்கள், அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. நீர்கொழும்பு, 2. முனுவாங்கொடை, 3. வத்தளை, 4. ஜாஎல

நடத்துவோர்:
1. நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கம்


3. குருணகல் மாவட்டத்தில் 18 கோட்டங்கள் அவற்றுள் 4 கோட்டங்களில் 4 திருமுறை வேள்விகள்

1. குருணாகல், 2. குளியாப்பிட்டி, 3. பொல்காவலை, 4. நிக்கவரெட்டியா

நடத்துவோர்:
1. ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை, பொல்கவலை.

4. இரத்தினபுரி மாவட்டத்தில் 12 கோட்டங்கள், அவற்றுள் 5 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. எகலியகொடை, 2. குருவித்தை, 3. இரத்தினபுரி, 4. பலாங்கொடை, 5. நிவித்திகலை

நடத்துவோர்:
1. பலாங்கொடை இந்து மன்றம்
2. இரத்தினபுரி முருகன் கோயில்

5. கேகாலை மாவட்டத்தில் 10 கோட்டங்கள், அவற்றுள் 8 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. இரம்புக்கனை, 2. மானவலை, 3. கல்கமுவை, 4. கேகால, 5. வரக்காப்பொலை, 6. எட்டியாந்தோட்டம், 7. தெரணியகலை 8. தெகியோவற்றை

நடத்துவோர்:
1. கேகாலைப் பிள்ளையார் கோயில்


6. மாத்தளை மாவட்டத்தில் 11 கோட்டங்கள், அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. மாத்தளை, 2. இலக்கலை, 3. இரத்தோட்டை, 4 உக்குவெலை

அவற்றை நடத்துவோர்:
1. மாத்தளை பாக்கிய வித்தியாசாலை
2. மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்


7. கண்டி மாவட்டத்தில் 17 கோட்டங்கள் அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. குண்டசாலை, 2, கண்டி 3. எட்டிநுவரை, 4. தும்பன

அவற்றை நடத்துவோர்:
1. பேராதனைப் பல்கலைக்கழக குறிஞ்சிக்குமரன் ஆலய அறங்காவலர் சபை
2. மத்திய மாகாண இந்து மகா சபை

8. நுவரெலியா மாவட்டத்தில் 5 கோட்டங்கள், அவற்றுள் 5 கோட்டங்களில் 10 திருமுறை வேள்விகள்

1. கொத்தமல, 2. உடஜேவகதத்தை 3. வலப்பனை, 4. நுவரெலியா 5. அம்பலகமுவை

அவற்றை நடத்துவோர்
1. அட்டன் இந்து வாலிபர் சங்கம்
2. மஸ்கெலியா இந்து மாமன்றம்
3. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பரிபாலன சபை, சீதா எலிய

9. வதுளை மாவட்டத்தில் 14 கோட்டங்கள் அவற்றுள் 5 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. வதுளை, 2. பண்டாரவளை, 3. அப்புத்தளை, 4. வெலிமடை, 5. பாசறை

அவற்றை நடத்துவோர்:
1. பண்டாரவளை இந்து இளைஞர் மன்றம்
2. வதுளைப் பிள்ளையார் கோயில்

10. புத்தளம் மாவட்டத்தில் 10 கோட்டங்கள், அவற்றுள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. புத்தளம் 2. சிலாபம், 3. ஆனைமடு, 4. உடைப்பு

அவற்றை நடத்துவோர்:

1. முன்னேஸ்வர ஆலய அறங்காவலர்,
2. உடைப்பு அம்மன் ஆலய அறங்காவலர்,
3. புத்தளம் பிள்ளையார் கோவில் அறங்காவலர்.

11. அநுராதபுரம் மாவட்டத்தில் 19 கோட்டங்கள், அவற்றுள் 5 கோட்டங்களில் 6 திருமுறை வேள்விகள், பொவன்னறுவையில் ஒன்று

1. மதவாச்சி, 2. நொச்சியாகமம், கெக்கிராவை, 4. அநுராதபுரம், 5. பதவியா (6. பொலன்னறுவைச் சிவன்கோயில்)

அவற்றை நடத்துவோர்
1. அநுராதபுரம் விவேகானந்தசபை

12. வவுனியா மாவட்டத்தில் 4 கோட்டங்களில் 10 திருமுறை வேள்விகள்

1. நெடுங்கேணி, 2. வவுனியா தெற்கு, 3. வவுனியா … 4. செட்டிகுளம்

அவற்றை நடத்துவோர்.
1. சுத்தானந்த இந்து இளைஞர் மன்றம்
2. ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய பரிபாலன சபை வவுனியா
3. மகாதேவ ஆச்சிரமம், கிளிநொச்சி

13. மன்னார் மாவட்டத்தில் 4 கோட்டங்கள் 4 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. மன்னார், 2. மாந்தை மேற்கு, 3. நானாட்டான் 4. முசலி

அவற்றை நடத்துவோர்.
1. மன்னார் இந்து மகாசபை
2. மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம்
3. திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை

14. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 கோட்டங்கள், அவற்றுள் 13 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்

1. நெடுந்தீவு, 2. ஊர்காவற்றுறை 3. சங்கானை, 4. சண்டிலிப்பாய், 5. தெல்லிப்பளை, 6. கோப்பாய், 7. வடமராட்சி, 8. பருத்திதுறை, 9. உடுவில், 10. வேலணை, 11. யாழ்ப்பாணம், 12. நல்லூர், 13. சாவகச்சேரி

அவற்றை நடத்துவோர்

1. நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம்
2. தெல்லிப்பளை துர்க்கை அம்மன் அறங்காவலர்
3. காரைநகர், ஈழத்துச் சிதம்பர அறங்காவலர்,
4. நயினா தீவு நாகபூசனி அம்மன் அறங்காவலர்,
5. சாவகச்சேரி சிவன்கோவில் அறங்காவலர்
6. வல்வெட்டித்துறை சிவன்கோவில் அறங்காவலர்
7. ஊர்காவற்றுறை இந்து சங்கம்
8. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் அறங்காவலர்
9. நீலகண்ட இளைஞர் சைவ அபிவிருத்திச் சபை சாவகச்சேரி
10. உடுவில் இந்து இளைஞர் மன்றம்
12. யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை

15. திருகோணமலை மாவட்டத்தில் 10 கோட்டங்கள், அவற்றுள் 10 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்

1. பதவிசிறீபுரம், 2. குச்சவெளி, 3. குமரன்கடவை, 4. மொரவாவி, 5. நகரமும் புறமும், 6. தம்பலகாம, 7. கிண்ணியா, 8. மூதூர், 9. சேருவிலை, 10. கந்தளாய்

அவற்றை நடத்துவோர்:

1 இந்து இளைஞர் மன்றம்
2. திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை
3. திருகோணேச்சர ஆலய பரிபாலன சபை

16. மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 கோட்டங்கள், அவற்றுள் 8 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்

1. கோறளப்பற்று, 2. கோறளைப் பற்று வடக்கு, 3. ஏறாவூர்ப்பற்று, 4. மண்முனை வடக்கு, 5. மண்முனை தென்மேற்கு, 6. மண்முனை மேற்கு, 7. ஏராவில், 8. போரதீவு

அவற்றை நடத்துவோர்:

1. இந்து இளைஞர் மன்றம்
2. மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றம்
3. மட்டக்களப்பு – அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியம்
4. குருக்கள் மடம் இந்து சமய விருத்திச் சபை
5. மட்டக்களப்பு கதிரொளி இல்லம் கொக்கட்சிசோலை
6. கூழாவடி இந்து இளைஞர் மன்றம்
7. மட்டக்களப்பு சைவத் திருநெறி மன்றம்

17. அம்பாறை மாவட்டத்தில் 12 கோட்டங்கள், 12 கோட்டங்களில் 15 திருமுறை வேள்விகள்

1. பதியத்தலாவை, 2. மகாஓயா, 3. உகணஇ, 4. சம்மாந்துறை, 5. கல்முனை, 6. நிந்தாவூர், 7. அட்டாளைச்சேனை, 8. அக்கரைப்பற்று, 9. தமனை, 10, திருக்கோவில், 11. பொத்துவில், 12 இலகுகல்

அவற்றை நடத்துவோர்
1. கல்முனை இந்து இளைஞர் மன்றம்
2. ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் அக்கரைப்பற்று
3. மட்டக்களப்பு – அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியம்

18. களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் 55 கோட்டங்களில் 5 கோட்டங்களில் 5 திருமுறை வேள்விகள்

1. மாணந்துறை, 2. காலி, 3. மாத்தறை, 4. திசைமாகாராமம் (கதிர்காமம்) 5. மொனராகலை

சைவ அமைப்புகள் இல்லாத ஊர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் ஒழுங்குகளைச் செய்துதரும்.

17 Replies to “இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!”

 1. Tears filled my eyes when I saw the young boys with devotion. May God bless them with peace, health and wonderful life to every one.

 2. இலங்கைத் தமிழ் மக்களின் மனதுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் கொடுக்கும் இந்த முயற்ச்சியை மேற்கொண்ட இந்து அமைப்புகள், சைவ சமய மன்றங்கள் மற்றும் இச் சேவையில் ஈடுபடவிருக்கும் அனைவருக்கும் இந்தியத் தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் உங்களுடனே எப்போதும் இருக்கக் கடவதாக.

  அன்புடன்,
  ஆரோக்யசாமி

 3. மிக சிறந்த செயல். பெரும் துயரில் உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இது ஆறுதலை தரும். எல்லாம் வல்ல இறைவன் இந்த தொண்டை செய்பவர்களுக்கு துணை நிற்பான்.

 4. முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் இலங்கை மக்களுக்கு அமைதி கிடைக்க இறைவைனை வேண்டுகிறேன்

 5. I welcome the efforts taken but please note that when war victims are hungry sick tired and depressed do you think they will concentrate in parayes or velvis or lectures. What they need first is food. Then shelter, medical facilities and employment. We should give them tools to carry on their farming or fishing or provide financial support to start some job. Furthermore they need physchological support and educartion for their children. Without providing these assistance no religious discourses will keep them as Hindus.

  In this connection we should learn some lesson from other religious people specially from Christians. Thousands of Hindus have been converted to Christianiaty in the North and East of Sri Lank during the last few years. This was not by giving the lectures or prayers first but by providing material and physchological assistance first. When a bomb is exploded and people injured it was always Christian priests went there and helped the victims. Not a single Hindu priest or organisation went there. By doing this Christian priests gain easy access in Hindus heart. This clears the path for religious conversion easily.

  When a child is taken into their care, Christian fathers or nuns insist as a precondition that whole family should convert into christianity. Parents accept it because they wanted to save their child from starvation. This is the current situation in the North and East.

  History shows that Arumuga Navalar learnt lessons from Chrisitians and adopted thier methods to prevent conversion of Hindus. Let our Hindu leaders re think their mode of actions and do the needful to prevent religious conversion and to safeguard hindus and hinduism in Sri Lanka. Let first thing comes first.

  Anpudan,
  Rishi

 6. Whoever would harm us, whether it be one of our own people, or a stranger, or someone from far away, let all the gods ruin him. My inner armour is prayer.
  Realia. To Arms Rig Veda 6.71
  gb
  oru kallaikuda puratta mugiyathu. idhu satyam…

 7. “History shows that Arumuga Navalar learnt lessons from Chrisitians and adopted thier methods to prevent conversion of Hindus. Let our Hindu leaders re think their mode of actions and do the needful to prevent religious conversion and to safeguard hindus and hinduism in Sri Lanka. Let first thing comes first.”
  ரிஷி,

  வெகு நாட்களாகவே அங்கு ஹிந்து இயக்கங்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றன. சுனாமி சமயத்தில் சேவா இன்டர்நேஷனல் உதவியுடன் சேவா பாரதி மற்றும் ஹிந்து சேவா சங்கத் தொண்டர்கள் மீட்பு, புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்-இன்றும் தொடர்கிறது. மிகப்பெரிய எண்ணிக்கையில் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளனர்.

  அங்கிருந்து, ஒவ்வொரு வருடமும் ஹிந்து இயக்கங்களின் கோடைக்கால முகாம்களில்(தமிழகத்தில்) பயிற்சி பெற தமிழ் இளைஞர்கள் வருகின்றனர்.

  யுத்தகாலத்திலும் அதன் பிறகும் தேவையான முனைபோடு இந்தப் பணி தொடர்கிறது. இதற்காக தமிழகத்திலிருந்து, லட்சியத்திற்காக வாழ்வை அற்பணித்த முழு நேர ஊழியர் அங்கு செனறுள்ளார். ஏற்கனவே அப்படி பணி செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் அங்கு நடந்த ஒரு விபத்தில் அகால மரணமடைய பணி தொடர அடுத்தவர் சென்றுள்ளார்.

  இயக்கங்கள் எவ்வளவுதான் செய்தாலும் சாதாரண ஹிந்து சமுதாய ஹிந்துவாகப் பெருமளவில் மாறாதவரையில் இந்தப் பணி நிறைக்காது. இயக்கமும் சமுதாயமும் ஒன்றாக வேண்டும். அதற்குத் தொடர்ந்து முயலுவோம். அதுவே அவசர அவசிய தேவை.

  அன்புடன்,
  கண்ணன்.

 8. This has to happen not just in Srilanka, but also in Tamil Nadu. The regions of Kanyakumari, Nagercoil, Nellai, Tuticorin, Kumbakonam, Nagaipattinam are fast becoming centres of Christanity & Islam. Only by adopting door to door campaign and aggressive (but non-violent) campaign, we would be able to bring life back to Hinduism in these regions.

 9. Excellent work being done; it is surely the need of the hour. I also see sincere devotion in the eyes of the children , and surely God will answer the prayers. In addition to bringing solace through the Prayers, whatever help is needed for them to come back into normal life should also be done through service organisations like the SEWA BHARATHI INTERNATIONAL , who are already doing some good work there, I come to know. Let us also do our valuable bit for our Tamil Hindu brethren in Sri Lanka, who are in distress.

 10. Thanks Kannan. But when compared with the social work/ involvement of the other religious organisations we hindus are nothing. There are rich hindu temples in India who could compete with world bank in monetary terms but their social concern is despicable.

  According to today’s news in SUN TV Indian government is going to give another 500 crore to Sri Lankan sinhala buddhist government, under the pretext of helping Tamils.We all Sri Lankan Tamils know this money will never reach us.From the foreign aid money, SriLankan government gives Rs.5000.00 to a single Sinhala buddhist person and Rs30,000.00 to a family and encourage them to visit their “conquered land ” Northern Province of Sri Lanka ( Jaffna ) and celebrate their victory. Every day thousands of Sinhalese visit from the south to north of Sri Lanka.
  Shankar, Malaysia is another country where hundreds of hindu temples are destroyed by the Government recently.There is a strong Tamil hindu organisation and they need full support.

  Big thanks to Sewa Bharathi. I do not see their Srilankan branch name or their trained
  volunteers names among the list of organisations mentioned in the article. Why? Let the Sri Lankan organisers please answer.
  Sorry to write in English. I have not learnt tamil typing yet.

  Rishi
  London UK

 11. ஈழத்தமிழர் எங்கள் உடன்பிறப்பு என்று கூறி அவர்களின் நிராதரவான நிலையிலும் அவைகளை வைத்து இங்கே பிரிவினை தூபமிடும் கூட்டத்தினிடையே ,தமிழரின் உயிர் மூச்சான சைவம் மறுவாழ்வு பெற எடுக்கப்படும் இந்த முயற்சி சதுரகிரி தலைமை சித்தன் சுந்தரமஹளிங்கதின் அருளால் வெற்றியே பெரும், மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .

 12. இந்தியத் தமிழர்களைக் காட்டிலும் இலங்கைத் தமிழர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். அவர்களை ஏன் இந்தக் கடவுளர்கள் காப்பாற்றவில்லை. இப்படியிருக்கும் பொழுது உங்கள் வேள்விகளும், மந்திரங்களும் இலங்கைத் தமிழர்களைப் பொருத்தமட்டில், வெறும் சுடுகாட்டுச் சடங்குகளே.

 13. வேகும் நெஞ்சங்கள் . ஆம் .இங்கு இருக்கும் நமக்கே நெஞ்சங்கள் வெந்து கொண்டிருக்கின்றன. குண்டுகளுக்கு நடுவே ,பசியும் பட்டினியும் வருத்த கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீ என்று உழலும் அந்த ஹிந்து மக்களின் மனங்கள் எப்படி இருக்கும்?

  உயர்ந்த சைவ நெறியைக் கடைப்பிடிக்கும் அந்த நன்மக்கள் இந்த நிலைமைக்கு வந்ததேன் ?
  பண வெறியும், பதவி வெறியும் ,திமிரும்,சுயநலமும் உடம்பில் குருதி போல் பாயும் பாரத நாட்டு ஹிந்து அரசியல்வாதிகளால்தான் .
  எவ்வளவு வீரமும்,நேர்மையும்,நாட்டுப்பற்றும்,சமயப்பற்றும் ,உயர்ந்த எண்ணங்களும் கொண்ட மாமனிதர்கள் வாழ்ந்த இந்த பாரத நாட்டில் ,குறிப்பாக ராஜராஜ சோழனும் ,ராஜேந்திர சோழனும் ,அவ்வையும் கம்பனும் வாழ்ந்த தமிழ் நாட்டில் இன்று மிகவும் அருவருக்கத்தக்க, நாகரீகம் கொஞ்சமும் இல்லாத, கலாச்சார வாசனையே இல்லாத ,மமதையும் , அக்கிரமுமே உருவானவர்கள் ஆட்சி செய்வது காலத்தின் கோலமா
  அல்லது இந்த நாடு செய்த பாவமா?

  பொய்யும் புனை சுருட்டுமே வாழ்க்கையாக, யார் செத்தால் என்ன ,யார் இருந்தால் என்ன, எமக்கும் எமது குடும்பத்தாருக்கும் பதவியும் பணமும் அளவில்லாமல் இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கும் இவர்கள் மனிதர்கள் தானா ?
  தீயவர் வாழவும் நல்லவர் சாகவும் செய்வதேனோ இது தர்மம் தானோ என்று நாம் வணங்கும் கடவுளரைக் கேட்போமா
  விடிவு கிட்டுமா ?

  ரா.ஸ்ரீதரன்

 14. வேகும் நெஞ்சங்கள் . ஆம் .இங்கு இருக்கும் நமக்கே நெஞ்சங்கள் வெந்து கொண்டிருக்கின்றன. குண்டுகளுக்கு நடுவே ,பசியும் பட்டினியும் வருத்த கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீ என்று உழலும் அந்த ஹிந்து மக்களின் மனங்கள் எப்படி இருக்கும்?

  உயர்ந்த சைவ நெறியைக் கடைப்பிடிக்கும் அந்த நன்மக்கள் இந்த நிலைமைக்கு வந்ததேன் ?
  அன்பனே உங்களுக்கு யார் இப்படிப் பெயர் வைத்தது
  வெந்து கொண்டிருக்கும் நெஞ்சங்களும்,நைந்து கொண்டிருக்கும் உடல்களும் உங்கள் இதயத்தை வாட்டவில்லை .
  சாவு வீட்டில் கன்னம் வைப்பது போல் ,பிணங்களைத் தேடும் கழுகுகள் போல் ,துயரம் கவிந்திருக்கும் இடத்தில் உங்கள் மத வியாபாரம் நடத்த எண்ணுகிறீர்களே .இராமலிங்க வள்ளலார் சொன்ன ‘மதமெனும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும் ‘ என்பது உங்களைப் போன்ற பாலைவதில் இருந்து வந்த மதத்தை பிடித்துக் கொண்டு எக்காளமிடும் மாக்களுக்காகதான் ..

  ஸ்ரீலங்கா தமிழர்களின் இந்த நிலைமைக்கே உங்கள் தலைமையகமான ரோமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது
  எல்லாம் அந்த கர்த்தருக்கே வெளிச்சம் (மெழுகுவர்த்தி வெளிச்சம்)

  ரா.ஸ்ரீதரன்

 15. ஈழத் தமிழர்களின் இடர்கள், இன்னல்கள் நீங்கி அமைதியான வாழ்வு மைய சிவனருளை வேண்டுவோம், திருமுறை விண்ணப்பம் செய்வோம். வாழ்க உங்கள் தொண்டு! வளர்க திருமுறை வேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *