அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை

மூலம்: சுபிர் கோஷ் (Subir Ghosh)

தமிழில்: தண்புனலி

assam_illegal-migrantsசில வாரங்களுக்கு முன் அஸ்ஸாமில் நடைபெற்ற ஒரு நிகழ்வு இந்திய ஊடகங்களில் உரிய கவனத்தைப் பெறவில்லை என்று சொல்லலாம்.

மே மாதம் 6-ஆம் தேதி அதிகாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்களாதேஷிகள் சட்ட விரோதமாக தனசரி (Dhansiri) ஆற்றைக் கடந்து தரங் மாவட்டத்தில் உள்ள ஓரான் தேசியப் பூங்காவில் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிரம்மபுத்திரா நதியில் ஆங்காங்கே சிறு தீவுகள் உள்ளன. இந்த நதித்தீவுகளிலிருந்து அவர்கள் புறப்பட்டு இங்கு வந்தார்கள். அவர்கள் வெறுங்கையுடன் வரவில்லை. கட்டுமானப் பொருள்களுடனும் கால்நடைகளுடனும் வந்தார்கள். இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாகும்.

நண்பகலைக் கடந்து சிறிது நேரம் ஆனபிறகு பங்களாதேஷிகள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளது வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதற்குள்ளாக அவர்கள் தாங்கள் கொண்டுவந்த கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தி கட்டடங்களை எழுப்பிவிட்டார்கள். அந்தத் தற்காலிகக் கட்டடங்கள் வனத்துறைக்கு திகைப்பை ஏற்படுத்திவிட்டது. வனத்துறை அதிகாரிகளால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்களாதேஷிகளை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. ஏனெனில் பங்களாதேஷிகள் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தனர். இதையடுத்து ராணுவத்தினரின் உதவியை வனத்துறை அதிகாரிகள் நாடினார்கள்.

மாலையில் பங்களாதேஷிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணி தொடங்கியது. அது ஒன்றும் சுலபமான பணியாக இருக்கவில்லை. கட்டடங்களை அதிகாரிகள் இடித்தார்கள். பங்களாதேஷிகள் உடனே கல்லெறிந்து தாக்கினார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கேடயங்களாகப் பயன்படுத்தி பங்களாதேஷிகள் தாக்கியதால் அவர்களைச் சமாளிப்பது ராணுவத்தினருக்கு பெரும்பாடாக இருந்தது. வானத்தை நோக்கி ராணுவத்தினர் சுட்டார்கள். பங்களாதேஷிகளை அங்கிருந்து அகற்ற 3 மணிநேரத்திற்கும் அதிகமாகிவிட்டது. அவர்களை விரட்டியடிக்கும் பணியில் யானைகளைக்கூட வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தினார்கள். இறுதியில் தேசியப் பூங்காவிலிருந்து பங்களாதேஷிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர். இதுவொன்றும் அசாதாரண நிகழ்வு என்று சொல்லமுடியாது. ஆனால் கட்டுமானப்பொருள்களுடன் வந்ததுதான் சற்று அசாதாரணமான அம்சமாகும். 30 ஆண்டுகாலத்திற்கும் மேலாக பங்களாதேஷிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறார்கள்.

அஸ்ஸாமில் மொத்தம் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளார்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. இது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் பங்களாதேஷிகள் இவ்வாறு சட்டவிரோதமாக வந்துகொண்டேதான் இருப்பார்கள். நதித்தீவுகள் மற்றும் அடர்ந்த காடுகள், பங்களாதேஷிகள் ஊடுருவ உதவிகரமாக இருக்கின்றன. பங்களாதேஷிகளின் ஊடுருவலால் காடுகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவையெல்லாம் பாதிப்புக்கு இலக்காகியுள்ளன. பங்களாதேஷிகளின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

wildlife-crisis-in-assamமே மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வு நடைபெற இடம் கொடுக்கக்கூடாது. எனவே முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும். பங்களாதேஷிகள் தங்களது பலத்தைப் பிரயோகித்து நம் நாட்டில் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். வனங்களையும் சரணாலயங்களையும் அவர்கள் தங்களது புகலிடங்களாக மாற்றிவருகிறார்கள். காசிரங்கா, ஓரங் ஆகிய பகுதிகளில் காட்டெருமைகள் வேட்டையாடப்படுகின்றன. இதில் பங்களாதேஷிகள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் ஓரங் பகுதியில் உள்ள சில கிராமங்களில் ராணுவத்தினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். காட்டெருமைகளை வேட்டையாடுவதற்கான ஆயுதங்களையும், பொறிகளையும் ராணுவத்தினர் கைப்பற்றினார்கள். அதுமட்டுமல்லாமல் கொல்லப்பட்ட காட்டெருமைகளின் உடல் உறுப்புகளையும் ராணுவ அதிகாரிகள் கண்டெடுத்தார்கள். இது தொடர்பாக சிலரைக் கைது செய்தனர். அவர்கள் பங்களாதேஷிகள் என்ற சந்தேகமும் ராணுவத்தினருக்கு உண்டு. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் ஏமாற்று வேலை செய்து இந்தியாவின் குடிமக்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.

பல மாநிலங்களிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் பெயரளவில் மட்டுமே அப்படி உள்ளன. ஆனால் வனவிலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. அஸ்ஸாமில் காட்டெருமைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களையும் வெட்டி, கடத்திச் செல்கிறார்கள். சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலும் நடத்தப்பட்டு வருகிறது. காட்டுப் பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறியதுடன் காடுகளில் வாழ தங்களுக்கு உரிமை உண்டு எனவும் அவர்கள் வாதிட்டு வருகிறார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள் எல்லா வகையான சுதந்திரங்களையும் சலுகைகளையும் அனுபவித்து வருகிறார்கள். காட்டில் வாழ்வதற்கு அவர்களுக்கு எல்லா வசதிகளுக் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவர்களை வெளிநாட்டவர்கள் என்று சொல்லக்கூட காங்கிரஸார் தயாராக இல்லை.

இத்தகைய விரும்பத்தகாத போக்கால் அஸ்ஸாமின் நிலவரமே முற்றிலுமாக மாறியுள்ளது. காட்டுப் பொருள்களை வனவாசிகள் பயன்படுத்த உரிமை உண்டு என்பதை பங்களாதேஷிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்து வருகிறார்கள். இதனால் இந்திய வனவளம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. சரணாலயங்கள் சிதைந்துகொண்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே அஸ்ஸாமில் உள்ள காட்டுப்பரப்புதான் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு 485,674 ஹெக்டேராகும். அஸ்ஸாமுக்கு அடுத்தபடியாக ஆந்திராவில் காட்டுப்பரப்பு பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு 268,863 ஹெக்டேராகும். இந்தப் புள்ளி விவரத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மே 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு, ஊடகத்தில் முதன்மைப்படுத்தப்படவில்லை. இந்தச் செய்தி கண்காணாத மூலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. கூகுளில் இந்தச் செய்தியை தேடிப்பார்த்து உண்மையைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும். அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களின்படி அஸ்ஸாமில் வேறுநாட்டைச் சேர்ந்த யாரும் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கவில்லை என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சட்டவிரோதமாகக் குடியேறவில்லை என்று பங்களாதேஷ் சொல்லிவருகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஏறத்தாழ இவ்வாறுதான் சொல்லுகின்றன. ஆனால் அஸ்ஸாம் கனபரிஷத்தும், பாரதிய ஜனதாவும் ஊடுருவல் விவகாரத்தில் உறுதியாக உள்ளன. பாரதியா ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் அஸ்ஸாம் கனபரிஷத் அஸ்ஸாமில் ஆட்சியில் இருந்தபோதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு திட்டவட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதையும் பதிவுசெய்யாமல் இருக்கமுடியவில்லை.

அஸ்ஸாமைப் பொருத்தவரை இரண்டு வகையான மக்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் தீமை எதையும் பார்ப்பதில்லை என்று கூறி கண்ணை இறுக மூடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது தரப்பினர், தீமை நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் அதை எவ்வாறு சமாளிப்பது, எப்படி முறியடிப்பது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ஓரங் பகுதியை ஆக்கிரமிக்க ஊக்குவித்தவரே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர்தான் என உறுதிபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷிகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சகலவிதமான உதவிகளையும் செய்துவருகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் காங்கிரஸ் தலைவர்களைத்தான் பங்களாதேஷிகள் அணுகுகிறார்கள்.

all-assam-studentse28099-union-against-the-influx-of-illegal-immigrants-from-bangladeshஅனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் 80-களில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டம் நடத்தியது. இதனால் மாற்றமும் ஏற்பட்டது. ஆனால் அது நிலையானதாக இருக்கவில்லை. இப்போதுகூட பங்களாதேஷிகளின் ஊடுருவல் தங்குதடையின்றி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பங்களாதேஷின் ஊடுருவலால் அஸ்ஸாம் மக்கள் தொகை விகிதாசாரமே மாறுதலடைந்துள்ளது. இதை உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்பதுகூட இல்லை. புள்ளிவிவரங்களை சற்று கவனித்தாலே எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர். 1994 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் அஸ்ஸாமில் உள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

40 சட்டமன்றத் தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய அளவில் இந்த காலகட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் அஸ்ஸாமில் 16.4 சதவீதம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரமே அஸ்ஸாமில் எந்த அளவுக்கு வெளிநாட்டவர்களின் ஊடுருவல் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

protest1அஸ்ஸாம் போராட்டம், ஒப்பந்தம் கையெழுத்தான உடன் தணிந்துவிட்டது. ஆனால் எதற்காகப் போராட்டம் தொடங்கப்பட்டதோ அந்தக் காரணம் அடியோடு மறைந்துவிடவில்லை. பங்களாதேஷிகளுடன் கிளைமறைவில் தந்திரமாக உறவு வைத்திருக்கும் மாநில காங்கிரஸ் அரசு என்றாலும் சரி, மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ற செயல்படாத அரசானாலும் சரி, பங்களாதேஷிகள் பிரச்சினையை எவ்வாறு அணுகவேண்டுமோ அவ்வாறு அணுகுவதில்லை; அணுகப்போவதுமில்லை. மே 6-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு எதிர்கால சம்பவங்கள் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

அஸ்ஸாம் இன்னொரு போராட்டத்தைச் சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது. 80-களில் நடைபெற்ற போராட்டம் பெருமளவில் அமைதியாகவே இருந்தது. ’நெல்லிப் படுகொலை’ஒரு விதிவிலக்கான சம்பவமாகும். அந்தப் படுகொலையைக்கூட அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் திட்டமிட்டு நடத்தியது என்று சொல்லமுடியாது. வருங்காலத்தில் போராட்டம் வெடித்தால் அது முன்பு நடைபெற்ற போராட்டத்தைப் போல அமைதியானதாக இருக்காது. அது வீரியமிக்கதாக, வன்முறை நிறைந்ததாக இருக்கும் என்பதையே இப்போதுள்ள சூழ்நிலை புலப்படுத்துகிறது.

நன்றி: விஜயபாரதம் (04-06-2010)

subir-ghoshசுபிர் கோஷ் (Subir Ghosh)

தில்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்.

வலைப்பதிவு https://www.write2kill.in/

7 Replies to “அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை”

  1. ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

    மிக மிக முக்கியமான பிரச்சினையைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.

    இதில் சில விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    (1)பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் பஞ்சம் பிழைக்க
    வருபவர்கள். பங்களாதேஷ் என்னும் நாடு நம் நாட்டை விட அதிக
    ஏழைகளை கொண்டது. ஆகவே மனித உரிமை மாய்மாலர்களுக்கான
    “The Issue” இதுதான்.
    ஏழ்மையின் காரணத்தினால் இதை தடுப்பது அவ்வளவு எளிதல்ல. மூன்று
    வழிகளை முயற்சிக்கலாம். (கண்டிப்பாக காங்கிரஸ் அரசு முயற்சிக்காது).
    ஒன்று-நம் எல்லைகளை பலப்படுத்துவது.
    இரண்டு-தற்போதைய பங்களாதேஷ் அரசு இந்தியாவிற்கு நட்பு நாடாக
    இருப்பதினால் அவர்களின் எல்லையை ஒழுங்காக காவல் காக்க
    வற்புறுத்துவது.
    மூன்று-இங்கு குடியேறும் பங்களாதேஷிகளுக்கு எந்த காரணத்திற்காகவும்
    குடியுரிமை வழங்காமல் இருப்பது.

    முதல் இரண்டு வழிகளை எவ்வளவு முயற்சித்தாலும் Perfection கிடைக்காது.
    மூன்றாம் வழியை செய்ய “Political Will” வேண்டும்.

    அடுத்து, இராணுவம் பலப்பிரயோகம் செய்யும்போதும் நாம் ஆதரிக்க
    வேண்டும். (உயிரிழப்புகள் ஏற்பட்டாலும்)

    மறைந்த பிரமோத் மகாஜன் என்ற பா.ஜ.க வின் தலைவர் சரியாக
    கூறுவார். பங்களாதேஷில் அடக்குமுறைக்கு ஆளாகும் இந்துக்களை
    நாம் வரவேற்க வேண்டும். ஆனால் பஞ்சம் பிழைக்க வருபவர்களை
    துரத்த வேண்டும்.

    இங்கு அமேரிக்கா-மெக்ஸிக்கோவின் எல்லையை தாண்டி அமேரிக்காவிற்கு பஞ்சம் பிழைக்க வரும் மெக்ஸிக்கர்களை நினைவில் நிறுத்தலாம். அமேரிக்காவால் கூட அவர்களை தடுக்க முடியவில்லை.

    நீங்கள் கடைசியாக கூறிய விஷயம்தான் நடைபெற போகிறது.
    (நம்மால் ஏற்று கொள்ள முடியாவிட்டாலும்)
    உள்நாட்டு கலவரத்தின் மூலம் அவர்கள் விரட்டி அடிக்க படுவார்கள்.
    ஆனால் இது நடக்க பல சகாப்தங்கள் ஆகும்.

  2. இன்று பாரதம் எதிர் கொண்டிருக்கும் மிகப் பயங்கரமான பிரச்னைகளில் பங்களாதேஷிகளின் சட்ட விரோதமான ஊடுருவல் மிக
    முக்யமா னதாகும்
    காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வோட்டு வங்கியாக அவர்களை உபயோகப் படுத்துகின்றனர்
    எனவே இப்பிரச்னையை கண்டு கொள்ளாமல் விடுவதோடு அதை ஊக்குவிக்கவும் செய்கின்றனர்
    நமது நாட்டில் சட்ட பூர்வ குடி மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு வாங்குவதில் ஆயிரம் தொல்லைகள் .

    ஆனால் இந்த சட்ட விரோத ஊடுருவல்காரர்கள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் இவைகளை பெற்றுக் கொள்கிறார்கள் .
    இ்து எதிர்காலத்தில் மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்
    அஸ்ஸாம் மற்றும் வங்காளத்தில் இப்பொழுதே பல மாவட்டங்கள் முஸ்லிம் பெரும்பான்மையாக மாறிவிட்டன
    மேலு இது அதிகரித்தால் ஒவ்வொன்றும் ஒரு காஷ்மீராக அல்லது பாகிஸ்தானாக மாறும்
    அதனால் ஹிந்துக்களின் தாய்நாடு மேலும் தேயும் .

    கொல்கட்டாவிலிருந்து வந்த எனது நண்பன் வங்காளத்தில் அரசியல் வாதிகளுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தாலே போதும் , இந்த சட்ட விரோத பங்களாதேசிகளுக்கு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொடுகிறார்கள் என்று சொன்ன போது மிகவும் அதிர்ச்சியாகவும் ,கவலையாகவும் இருந்தது.

    பிரதான எதிர்க் கட்சியான பீ ஜெ பீ மற்றும் எல்லா ஹிந்து இயக்கங்களும் இதையெல்லாம் பற்றி நாடு தழுவிய தொடர் விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும் .

    காலம் தாழ்த்துவது மிக ஆபத்தாகும் .

    இரா.ஸ்ரீதரன்

  3. பூகோள அமைப்பு ரீதியாக , அஸ்ஸாம் நடுவில் அமைந்து, பங்களாதேஷ் கீழ் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது; அஸ்ஸாமைச் சுற்றியுள்ள பகுதிகளில், மணிப்பூரில் இந்துக்களும், மற்ற நாகாலாந்த், மேகாலயா போன்ற பகுதிகளில், கிறிததுவர்களாக்கப்ப்ட்ட பழங்குடியினரும் உள்ளனர். இதில் தான் பிரச்சனை ஏற்பட்டு, இஸ்லாமியர் புகுந்து, தங்கள் பங்குக்கு, இந்துக்களை முஸ்லிம்கள் ஆக்க வன்முறையைக் கையாள்கிறார்கள்; காங்கிரஸ் கட்சி வழக்கம்போல் வோட்டுக்காக குளிர் காய்கின்றது. அண்மை முதல் , முய்வா என்கிற கிறித்துவ பழங்குடி தலைவருக்காக, காங்கிரஸ் இந்துக்கள் போர்வையில், அவரைத் தடுத்து, மணிபூர் முழுவதும் மக்களை வாட்டி வதைக்கின்றது; காங்கிரஸ் கட்சி என்று ஒழிகிறதோ அன்று தான் இந்துக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.

  4. அஸ்ஸாம் அபாயத்தின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது. ஆசாம் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பெரும் அபாயத்தில் இருந்து வருகிறது. பல சர்வதேச குழுக்கள் நாடுகள் நமது வடகிழக்கு மாநிலங்களை துண்டாடிட தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. மதசார்பின்மை பேசுகின்ற அரசியல் கட்சிகள் எதுவும் வாய்திறந்து கண்டனம் செய்திடக்கூட தயாராக இல்லை. பாஜக ஒன்றுதான் விதிவிலக்கு. ஓட்டுவங்கி நாட்டின் நலனையே புறந்தள்ளுகிறது. சங்கப் பரிவார் அமைப்புகளைச் சார்ந்த பல தொண்டர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் அங்கு மக்களிடையே தொண்டாற்றி வருகின்றனர். தேசிய சக்திகள் ஒன்றுபட வேண்டும். அப்போது மட்டுமே தேசம் காக்கப்படும்.

    வித்யாநிதி

  5. இலங்கையில் உள்ள இந்த வந்தேறு குடிஹலான தமிழர்ஹல் என்று கூறப்படும் இந்து பயங்கரவாதிஹளை நாம் எமது வீரத்தை கொண்டும் வன்முறையை கொண்டும் விரட்டியடிப்பதில் தவறில்லை ……..

  6. ஹிந்துக்களை முஸ்லிமாக்குவதற்கு இந்துக்கள் வாயிலிருந்து முத்துக்களும் பவளங்கலுமா கொட்டுகிறது?
    அல்லது இந்துக்கள் என்ன அவ்ளோ முசுடுகளா?
    உண்மையையும் சத்தியத்தையும் காப்பாற்றி கடைபிடிப்பதை விட்டு விட்டு அடிக்கடி சாதி மதத்தை தூண்டி விடும் சிலரால் மனித இனத்துக்கே அவமானம்.

  7. Bangladeshis have over the years crossed the border & settled in west bengal.

    But no action has been taken simply because the communist govt have developed them ointo vote banks.

    The basis for all this is the pampering of the minorities, specially muslims.

    They have been pampered to such an extent by the politicians that they have begun to feel that they can get away with anything.

    We have Ghulam nabi azad, a former kashmir CM who says “If Fazal (who orchestrated the parlliament attck) is hanged, indian muslims will get angry”.

    Not 1 indian muslim leader has condemned this statement.

    We have the Imam of Jama Masjid opendly declaring ” I will complain to the OIC (Organisation of Islamic countries) that indian muslims are being treated badly”.

    India has the highest muslim population after indonesia.

    I am reminded of a joke (it is not a joke actually) which I read some years back.

    Interview :

    Questioner : Who is India’s best actor?
    Interviewee : Naseeruddin shah

    Questioner : Who is India’s best actress?
    Interviewee : Shabana Azmi

    Questioner : Who is India’s best hockey player?
    Interviewee : Zafar Iqbal

    Questioner : Who is India’s best cricket player?
    Interviewee : Azharuddin

    Questioner : Son, my last Q. What are hindus doing in this country?

    We allowed the muslims to stay back during partition & we are still paying a very heavy price – with our lives.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *