இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3

 

tirupati10-vநான் பலமுறை திருப்பதி-திருமலைக்குச் சென்றிருக்கிறேன். முன்பு எப்போதுமே பெரிய க்யூவில் நின்று தரிசனம் செய்தவன்தான். வேண்டுதல் என்று எதுவும் சாதாரணமாக வைத்துக் கொள்வதில்லை.; வைத்துக்கொள்ளக் கூடாது என்பதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவரை 1969 -ம் வருடம்  முதலில் சென்றபோது சென்னையிலிருந்து மாலை ரயிலில் சென்று, இரவிலேயே மலை மேல் நடையாகச் சென்று, கோவில் நுழைவுவாயில் அருகில் இருக்கும் புஷ்கரணித் தீர்த்தத்தில் குளித்துவிட்டு, வாயிலுக்கு அருகிலேயே கால் செருப்பைக் கழற்றி விட்டு, அங்கேயே தரிசன வரிசை ஆரம்பித்து உள்ளே போய் பெருமாளை தரிசனம் செய்தேன். அதற்கு மொத்தமாகவே முப்பது நிமிடங்களே ஆனதால், திரும்பவும் வெளியே வந்து இன்னொரு முறையும் தரிசனம் செய்ய முடிந்தது. இப்போதெல்லாம் அதை நினைத்தும் பார்க்க முடியுமா?

அதற்கப்புறம் பலமுறை தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்துவிட்டு, சிறப்பு தரிசனத்திற்கு சீட்டும் வாங்கிவிட்டுத்தான் போய் வந்திருக்கிறேன். ஒரு முறை மலைமேல் நடையாகச் சென்றுவிட்டு, பெரிய க்யூவில் நின்று ஏழு மணி நேரம் ஆகியும் தரிசனம் செய்ய முடியாமலும், வெளியே வர முடியாமலும், கிடைத்த ஏதோ இடைவெளியில் புகுந்து தரிசனம் செய்யாமலேயே கோபத்துடன் திரும்பி வந்திருக்கிறேன். வேறொரு முறை எனக்குக் கிடைக்கவேண்டிய ஒன்று மிகவும் தாமதமாகித் தடைப்பட்டதால், அது கிடைத்தபின்தான் உன் சந்நிதிக்கு வருவேன் என்று சூளுரைத்து அது கிடைத்த பின்னரே பெருமாளை தரிசனம் செய்த அனுபவமும் உண்டு. ஆனால், இவை  எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும்படியான ஒரு அனுபவத்தைத்தான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
 
வெகு நாட்களாக என் சித்தி ஒருவர் எங்களை காளஹஸ்தி போய் தரிசனம் செய்து விட்டு வரச் சொன்னார். அப்படிப் போனால் திருப்பதியும் போய்விட்டு வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தோமே தவிர பிரயாணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தோம். அது 1993 -ம் வருடம் மே மாதம் என்று நினைக்கிறேன். அம்மாதம் ஒரு நாள் பம்பாயில் இருக்கும் நண்பன் ஒருவன் எனக்கு போன் செய்து அடுத்த மாதமான ஜூனில் ஐந்து நாட்களுக்கு மலை மேல் தங்கும்படி ஏற்பாடு செய்து இருப்பதாகவும், வர இயலுமா என்றும் கேட்டான். அப்போது முடியாது போலிருக்கிறது, இந்த மாதமே போகலாம் என்றிருக்கிறோம் என்று சொன்னேன். அப்படிச் சொல்லிவிட்டு மறுநாள் காலையே ரயில்வே ஸ்டேஷன் சென்று அன்றைய தினமே மதியம் ஒரு ரயிலில் இடம் இருந்ததால் திருமலைக்கு டிக்கெட் வாங்கிவிட்டோம். வீடு வந்து சாப்பிட்டு உடனே ஒரு ஆட்டோ பிடித்து கடைசி நிமிடத்தில் ரயிலையும் பிடித்து விட்டோம்.
 
tirupathi-8bஎங்கள் திட்டம் என்னவென்றால் மலை மீது ஏதாவது தரிசன டிக்கெட் வாங்கிக்கொண்டு  பெருமாள் தரிசனம் முடிந்ததும், அன்றிரவே கீழே இறங்கி திருப்பதியில் தங்கி விட்டு மறுநாள் காலை காளஹஸ்தி சென்று சென்னை திரும்புவது என்பதாகும். எப்போதும்போல் ரயில் சிநேகிதராக எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வைணவ்ரிடம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் “ஐந்து முறை ஒவ்வொரு வாரமும் வருவதாக வேண்டிக்கொண்டு இருக்கிறேன், இது  எனது ஐந்தாம் முறை” என்றார். எப்போதும் முதல் நாள் இப்படி ரயிலில் வந்துவிட்டு, கோவில் அருகில் ஒரு இடத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை தரிசனத்திற்கும் டிக்கெட் வாங்கி வைத்திருப்பாராம். எங்கள் திட்டம் பற்றி கேட்டதும் “ரயிலில் முன்பதிவு செய்து வந்திருக்கிறீர்களே, தங்குவதற்கும், தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்” என்றார். முதல் நாள் நினைத்துக் கொண்டு, அன்று காலைதான் ரயில் டிக்கெட்டே வாங்கினோம் என்று அவர் அறிந்ததும், ஆச்சரியத்துடன் “உங்கள் தரிசனத்திற்கு ஏதாவது miracle (அதிசயம்) நடந்தால்தான்  உண்டு” என்றார். நான் நொடிப்பொழுதும் யோசியாது “miracle நடந்தால் நடக்கட்டுமே” என்றேன். கீழிருந்து பஸ் ஏறி மலைமேல் கோவில் வாசலை அடைந்து விட்டோம். 
 
அங்கு சென்றதும் அவர் எங்களைப் பார்த்து புஷ்கரணிப் பக்கமாகக் கையை காண்பித்து அங்கு இருபத்தைந்து ரூபாய் டிக்கெட் விற்பார்கள், அதை வாங்கிக்கொண்டு “வைகுண்டம்” என்னும் ஒரு நுழைவாயில் பக்கம் வாருங்கள். உங்களுக்காக நான் அங்கு காத்திருப்பேன் என்றார். நாங்களும் அப்படிச் செய்யவே, அவர் தனது ID கார்டு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு எங்களை அவர் பின்னால் வரச் சொன்னார். அவர் கார்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்த அலுவலர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இது VIP க்யூ, நீங்கள் வேறு இடம் செல்ல வேண்டும்” என்றார்கள். ரயில் நண்பரோ “இல்லை, அங்கு கோபுரத்தின் அருகில்தான் supervisor  இருந்தார், அவர்தான் எங்களை இந்த வழியாக வரச் சொன்னார்” என்றார். அவர்களில் ஒருவன் “சரி போங்கள், இன்னும் நடை சார்த்த மூன்று நிமிஷம்தான் இருக்கிறது, ஜல்தி, ஜல்தி” என்றான்.

நாங்கள் உள்ளே போகிறோம், போகிறோம்; நேரே பெருமாள் முன்னால்தான் போய் நின்றோம். நாங்கள்தான் அந்த வரிசையில் கடைசி பக்தர்கள். நாங்கள் உள் மண்டபத்தில் நுழைந்தவுடன்  அங்கிருந்த மற்ற அலுவலர்கள் அந்த இரு பெருங்கதவைச் சாத்தினார்கள். எப்போதும் பெருமாளை அலங்காரத்துடனேயே பார்த்திருக்கிறேன். அன்றோ விசேஷமாக பெருமாளின் அலங்காரம் ஏதுமில்லாது திருமேனி முழுதையும் திவ்யமாகக் கண்டேன்.  இது போன்ற தரிசனம் எனக்கு அதற்கு முன்போ பின்போ கிடைத்தது இல்லை. நன்கு திவ்ய தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து கடியாரத்தைப் பார்த்தால், நாங்கள் திருமலையில் இறங்கி மொத்தம் இருபது நிமிடங்களே ஆகியிருக்கும்.
 
என்னைப் பொறுத்தவரை நான் வெளியே வந்து நடந்து கொண்டிருந்தேனே தவிர உள்ளூர ஸ்தம்பித்துவிட்டேன்.

ஏதோ அதிசயம் நடந்தால் என்றார் நண்பர்; நானும் நடக்கட்டுமே என்றேன். ஆனாலும் அங்கு நடந்ததை என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. அந்த வைணவரோ “சரி, தரிசனம் ஆகிவிட்டது. இரவு இங்கேயே தங்கிவிட்டுப் போகிறீர்களா? அல்லது உங்கள் எண்ணப்படி இப்போதே கீழத் திருப்பதி செல்கிறீர்களா? இங்கு இருப்பீர்கள் என்றால் நான் இருக்கும் அறையிலேயே தங்கலாம்” என்றார். எனக்கோ நடந்தது எல்லாம் அவன் செயல்தான் என்று உணர்ந்ததால், தானாக வரும் மலையில் தங்கும் பாக்கியத்தை விடுவானேன் என்றெண்ணியோ, அல்லது வேறு எதுவும் தோன்றாது முழித்துக் கொண்டிருந்ததாலோ அவருடனேயே தங்குகிறேன் என்று சொன்னேன். அப்படிச் சொன்னாலும், அன்றிரவு எனக்குத் தூக்கம் சரியாக வரவில்லை. அந்த வைணவர் நாங்கள் புறப்படு முன்னமேயே தான் அதிகாலையில் தரிசனத்திற்கு சென்று விடுவதாகவும், VIP க்யூவில் வந்ததால் எங்களது தரிசன டிக்கெட்டுக்கு உண்டான பிரசாத லட்டுவை தான் வாங்கி சென்னையில் கொடுப்பதாகவும் வாக்களித்துவிட்டு எங்கள் விலாசத்தை வாங்கி வைத்துக்கொண்ட பின்  நன்கு உறங்கிவிட்டார். நானோ புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு நடந்ததை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
 
நாங்கள் காலையில் எழுந்தபோது அவரைக் காணவில்லை. தனக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று அவர் சொல்லியிருந்ததால் நாங்கள் எழுந்து குளித்து விட்டு பஸ்ஸில் ஏறி மலையில் இருந்து இறங்கத் தொடங்கினோம். பஸ் வளைந்து வளைந்து இறங்கும்போது எனது நினைவுகளும் நேற்றைய தினத்திய நிகழ்வுகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

அப்போது மலையின் கீழே சமவெளியில் வரிசையாகச் சில கட்டிடங்களைப் பார்த்த எனக்கு ‘அங்கு ஏதோ பல்கலைக் கழகம் இருப்பதாகச் சொல்வார்களே அதன் கட்டிடங்களோ அவைகள்?’ என்று எண்ணத் தோன்றியது. அந்த மாதிரி அங்குள்ள எந்த பல்கலைக் கழகங்களுக்கும் நான் சென்று வந்ததில்லை; யாரையும் எனக்குத் தெரியவும் தெரியாது. ஆனாலும் எனக்கு வந்த எண்ணங்களின் தொடர்ச்சியாக அப்படிப்பட்ட இடத்திலிருந்து தேர்வுக்கோ, நேர்காணலுக்கோ ஒரு குழுவின் உறுப்பினராக அழைப்பு வந்தால் அவர்களுக்கு இருக்கும் தொடர்பாலும் முதல் நாள் கிடைத்த தரிசனம் போல் நிறையக் கிடைக்குமே என்ற நப்பாசையும் கூடவே வந்தது.
 
lovely_skinheads1அந்த எண்ணங்களோடேயே காளஹஸ்தி சென்று சென்னையும் வந்துவிட்டோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வைணவர் நண்பரும் அன்று விடுமுறையாக இருந்ததால் வீடு வந்து இரண்டு லட்டுக்களையும் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் தொலைபேசி அலுவலகத்தில் வேலை பார்த்ததால் மேலும் ஒன்று அல்லது இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதற்கு மேல் அவரிடம் எனக்குத் தொடர்பு ஏதும் இல்லாது போயிற்று. இன்று நினைத்தாலும் எங்கிருந்தோ வந்த நண்பர் தரிசனமும் செய்து வைத்து விட்டு, வீடு வரை வந்து பிரசாதமும் கொடுத்து விட்டுப் போனார் என்றால் நடந்ததெல்லாம் அவனருள் இல்லாது வேறு எதுவாக இருக்க முடியும்?

பொறுங்கள்; நடந்த கதை இதோடும் முடியவில்லை.
 
மறுநாள் திங்கட்கிழமை எனது அலுவலகம் சென்று கதவைத் திறக்கையில், கதவின் அடியே இருந்த ‘கவர்’ ஒன்று என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் அது திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருந்தது. அதற்கு முன் அங்கிருந்த யாரும் என்னைப் பார்த்ததுமில்லை, பேசியதுமில்லை.அங்கிருந்து முதன் முறையாக வரும் கடிதம் அது.

கடிதத்தைப் பிரிக்காமலேயே சிறிது நேரம் அவன் லீலைகளை நினைத்து புளகாங்கிதத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சற்றே அச்சமாகவும், மிகவே வியப்பாகவும் இருந்தது.

கடிதத்தைப் பிரித்துப் பார்த்தால், அவர்கள் என்னை ஒரு தேர்வு சம்பந்தமாக வர இயலுமா என்று கேட்டிருந்தார்கள். எந்தத் தேதியில் என்று பார்த்தால், என் பம்பாய் நண்பன் ஜூன் மாதத்தில் மலைமேல்  இட வசதி செய்திருந்த ஐந்து நாட்களின் நடுவில் ஒரு நாளாக இருந்தது. அவசியம் வருகிறேன் என்று பல்கலைக் கழகத்திற்கு எழுதிவிட்டு, என் பம்பாய் நண்பனிடமும் நடந்ததைக் கூறினேன். ஜூன் மாதத்தில் அங்கு சென்றால், என் நண்பனின் மனைவி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அழைப்பால் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்ததால், அவர்களே கச்சேரி முடிந்ததும் எங்கள் அனைவரையும் நேரே பெருமாள் முன்னே கொண்டு நிறுத்தி ஒரு சிறப்பு தரிசனமும் செய்துவைத்து அனுப்பினார்கள்.
 
இப்படியாக எனக்குத் தோன்றிய எண்ணங்கள் அவன் அருளால் நடந்தேறின. அவைகள் அப்படி நடந்ததற்கு நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றியது. இது மாதிரியான நிகழ்ச்ச்சிகளை அனுபவித்தபின், யாரேனும் இறைவன் இருக்கிறானா என்று பேசிக் கொண்டிருந்தால் எனக்கு சிரிப்புதான் வரும். அவர்களுக்கும் உரித்த காலம் வரட்டும் என்றும் வேண்டிக் கொள்வேன். அதற்கு மேல் அங்கு பிரசாதம் தயாரிக்கும் உரிமை உள்ளவர்களின் தொடர்பும் தானாகவே கிடைத்தது. அதன் மூலம் பல தரிசனங்களும் செய்ய ஏதுவாயிற்று. ஆனால், இன்றும் எனக்கு மேலே குறிப்பிட்ட இரண்டு தரிசனங்களும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துள்ளன. மற்ற அருளலைகளை மேலும் காண்போம்.

6 Replies to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3”

  1. Dear Thiru Raman
    Thanks for the artcile.With Lord Balaji of Tirumalai ,one cant say, what games he plays for his devotees.I have seen indifferent visitors look wonderstrck at the first sight of him. Second, third, umpteenth, its still the same.If he decides you should meet him, he makes all the arrangements! He is living consciousness itself.
    Saravanan

  2. Good flow sir. Everyone surely will have such experience, but you are correlating your experience very well.
    Reading this, I remember such incident in my life. In 1982, when i was around 8 years old, our family went to Varanasi. It was our first trip and my parents who have lived in north for a long time, too were not sure what to do and where to go. In the train, few people warned us that right from the station people will cheat left, right and center and be careful.
    When we (my grand parents, parents, my sister and me) landed in the railway station in the early hours, and were standing there not knowing what to do next, one elderly gentleman came to us and asked are you ‘Tamil’. My father said yes and he offered us to help, if we can come with him. He said, his daughter is in a nearby town and he visits this place atleast once every year and he knows every nook and corner well and again warned that new people will be chated in this city easily. Not knowing what to do, we followed him. He arranged for our stay, and took us to all the important places in kasi and by afternoon we finished the main places in the city. And then he bid good bye and vanished in the crowd. Till date, we dont know who he is, where he came from and where he went.

    Ava arul intri veru enna… 🙂

    Regards,
    Satish

  3. Hi Sri. Raman
    Thanks for sharing your miracles with Sri Hari.
    I would like to share mine briefly ..
    I am presently living in New Jersey and last month had the opportunity to witness Kalyana Utsavam done by TTD here. Before that Swami and Thayar were kept in a Kedayam and lifted by few devotees around Bridgewater temple. People were taking turns in carrying Swami, Ven Kudai and Samaram etc. I was interested in carrying the Ven Kudai and the one who was coordinating said (rather derisively) you cannot carry this (as you are not well built). I was feeling wounded to be said like this in front of the crowd but didnt say anything back.
    Then the miracle happened. I was standing next to the Swami pallakku and got a gap in there to carry the Swami murthys. I was able to carry the whole round for the next 30 min or so chanting Purusha Suktham and Prabhandam without any interruption. In that crowd to carry Swami for 30 min or so is indeed a great blessing. Had I carried the Kudai, I would have got it for only 5 min, but Swami understood my pain and made me carry his Kedayam for 30 min without any interruption.
    My mind was thinking about Swami’s leela in this. Maybe He wanted me to be in Physical contact rather than non physically holding the Kudai.

  4. Dear Sir
    Last year, we went for tonsure of my son to Tirupathi by arranging a tourist car.Everything was arranged and we had a good darshan of the Lord.We came down from the Tirumala to Tirupathi using the hairpin bend route.The minute we reached the end of the hill, the brake failed! The driver was able to park the car safely If the brake had failed even 1-2 minutes before when we were coming down the hairpin bend, we would have had a severe accident as there was a tirumala bus in front and a bus in back of us!!!

    My family was very astonished and we thanked the Lord for guiding us to safety!

  5. என்னுடைய அனுபவம்
    எனக்கு நினைவு தெரிந்து முதன்முதலாக திருப்பதிக்குச் சென்றது ஷ்ரீவாரி சேவை செய்வதற்காக. 1 வாரம் அங்கு தங்கி சேவை செய்தோம் என்பதை விட நன்றாக சுவாமி தரிசனம் செய்தோம் என்பதே சரி.

    அதன் பின் சென்னையில் வசித்தபோது பல முறை திருப்பதி சென்றிருக்கிறேன். எந்த விதமான முன்பதிவும் செய்யாமல் சென்று வருவது என் வழக்கம்.

    அவ்வாறு ஒரு முறை சென்ற போது முதல் நாள் இரவு கீழ் திருப்பதியில் சுதர்சன் டோக்கன் வாங்கிக் கொண்டு மேலே நடந்து மறுநாள் காலையில் மேலே சென்று சுவாமி தரிசனம் முடிய மாலை 4 மணி ஆகிவிட்டது. அதிலும் ஞாயிற்றுக் கிழமை ஆதலாம் தூர தரிசனம். வந்ததே கோபம். பெருமாளை பலவிதமாக கோபித்துக் கொண்டு திரும்பி விட்டேன். ஆனாலும் விடவில்லை பெருமாள். மீண்டும் அழைத்தரர். சனிக்கிழமை இரவு கிளம்பி மறுநாள் காலை 4 மணிக்கு சுதர்சன டோக்கன் கட்டிக் கொண்டு நடந்து மலையேறுவதாக திட்டம். கீழ் திருப்பதியில் சென்று பார்த்தால் கடலலை போன்று ஐயப்ப பக்தர்கள் கூட்டம். சுதர்சன கௌண்டர் மூடியிருந்தது. ஒருவர் மேலே சென்று வைகுண்டம் Q காம்ப்ளக்ஸில் செல்லுங்கள் என்றார். மனதில் பயத்துடன் திட்டத்தை மாற்றி பஸ்ஸில் மலையேறி குளித்து சுத்தப்படித்திக் கொண்டு வைகுண்டம் Q காம்ப்ளக்ஸ் சென்றேன். அப்போது ஒருவர் சம்பந்தம் இல்லாமல் என் கையைப் பிடித்து ஜல்தி ஜல்தி என்று அழைத்துக் கொண்டு கூண்டுக்குள் சென்று அமரும் வரை என்கையை விடவில்லை. பிறகு அவர் நெல்லூரில் வாழ்பவர். 111 முறை திருமலை வருவதாக சங்கல்பம் செய்துள்ளாராம். பேசிக் கொண்டிருக்கும்போது கூண்டு திறந்தது. அனைவரும் சென்று சுவாமி தரிசனம் செய்து கோவிலை விட்டு வெளியில் வரும் போது மணி 8:00 அட 70 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனம் முடிந்து விட்டது. அந்த நண்பருக்கு நன்றி கூறி வெளியில் வந்தேன்.

    இதே போன்று வேறு விதமான அனுபவம் என் மனைவியுடன் முதல்முறையாக சென்ற போது நடந்தது. அதை மற்றுமொறு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.

  6. Dear All,

    All the above experiences will definitely make the readers to feel like their own experience. Good way of writing and covered the topics that you wanted to convey.

    I request all of our readers to share their experiences if any.

    God Bless You All.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *