தோற்றுப்போன நாடுகள்?

fsi_map_2010தோற்றுப்போன நாடுகளைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு இது.

வெற்றிபெற்ற நாடு என்பது மாக்ஸ் வெப்பரின் கருத்துப்படி, தனக்கு உரிய பலப்பிரயோகத்தை தனது நில எல்லைக்குள் முழுதும் பயன்படுத்த முடியும் ஒரு நாடு.

ஏதோ ஒரு காரணத்தினால் ( போராளிக்குழுக்கள், எதிர் இராணுவக் குழுக்கள் அல்லது பயங்கரவாதம்) தனது பலத்தையும், அதிகாரத்தையும் சமச்சீராகப் பயன்படுத்த முடியாமலும், நாடு என்றிருப்பது ஒரு பேச்சுக்காகவும் என்ற நிலைவருமானால் அது தோற்ற நாடு என்கிறார்

சுருங்கச் சொன்னால்,  ஒரு மக்கள் நலன்சார் அரசுக்கு இருக்க வேண்டிய சில குணாதிசயங்கள் இல்லாமல் இருப்பதும், ஒரு நாட்டிற்கான பொறுப்புகளைச் செய்யாமலோ, அல்லது செய்ய இயலாத நிலையில் இருக்கும் நாடுகளை தோற்றுப்போன நாடுகள் என்பர்.

 

தோற்றுப்போன நாடுகளின் குணாதிசயங்கள் என்ன?

  • அதன் எல்லைகளைக் காப்பாற்ற இயலாமலும்,
  • அந்த நாட்டின் இராணுவம், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமலும்,
  • ஓர் அரசாக அது எடுக்க வேண்டிய முடிவுகளுக்குப் போதுமான ஒத்துழைப்பு ( ஆளும் கூட்டனியிலோ அல்லது பொதுவாக மக்களின் ஆதரவு இல்லாத நிலையிலோ) இல்லாத நிலையிலும்,
  • குடிமக்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைச் செய்துதர முடியாமலும்
  • ஒரு நாடு என்ற பெயரில் இதர நாடுகளுடன் ராஜீய உறவுகளை மேற்கொள்ள இயலாத நிலையிலும்

… ஒரு நாடு இருக்குமானால் அது தோற்றுப்போன நாடு எனக் கொள்ளலாம்.

சில தோற்றுப்போன நாடுகளையும், முடிந்தால் அதன் காரணங்களையும் பார்ப்போம்.

கிட்டத்தட்ட நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகளில் எவை எவை தோற்றுப்போன நாடுகள் எனப்பார்த்தால் எல்லாமே தோற்றுப்போன நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வருகின்றன.

முதலில் ஆப்கானிஸ்தான் 6-ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 10-ஆம் இடத்திலும், பங்களாதேஷ் 24-ஆம் இடத்திலும் இலங்கை 25-ஆம் இடத்திலும் நேபாளம் 26-ஆம் இடத்திலும் வருகின்றன.

இந்தியா இந்தப் பட்டியலில் 79-ஆம் இடத்திலும் நான் வசிக்கும் கத்தார் 139-ஆம் இடத்திலும் நார்வே 177-ஆம் இடத்திலும் இருக்கின்றன. எவ்வளவுக்கு எண் அதிகமோ அவ்வளவுதூரம் அந்தந்த நாடுகள் அமைதியாய் இருக்கின்றன என்று அர்த்தம்.
qatar-map
1-ஆம் எண் எனில் முழுவதும் தோற்றுப்போன நாடு.

177-ஆம் எண் எனில் மிக சுபிட்சமான மக்கள், நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழும் நாடு எனப்பொருள்.

2005-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் அமைதிக்கான நிதி ( Fund for Peace) என்ற சிந்தனையாளர்கள் குழுவும், வெளிநாட்டுக்கொள்கை ( Foreign Policy) என்ற பத்திரிகையும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் தோற்றுப்போன நாடுகளின் பட்டியலை வெளியிடுகின்றன. இவை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்தினராக உள்ள நாடுகளை மட்டுமே பட்டியலிடுகின்றன. உலகின் பல பகுதிகள் ’நாடு’களாக இதர நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பினும், உலக நாடுகளின் சட்டத்திட்டங்களின்படி நாடுகளாக ஐக்கிய நாடுகள் சபையினரால் அங்கீகரிக்கப்படாததினால் விடுபட்டுள்ளன. உதாரணமாக, தைவான், பாலஸ்தீனப் பகுதிகள், வடக்கு சைப்ரஸ், மேற்கு சஹாரா மற்றும் கொசாவா ஆகிய பகுதிகளைச் சொல்லலாம்.

இந்தத் தரப்பட்டியல் 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படுகின்றன. சமூகக் காரணிகள் நான்கும், பொருளாதாரக் காரணிகள் இரண்டும், அரசியல் காரணங்கள் ஆறும் ஆகும்.

 

சமூகக் காரணிகள் 

01. மக்கள் பரவலினால் ஏற்படும் அழுத்தம்

இது தட்டுப்படின்றி உணவு கிடைத்தல் மற்றும் உயிர்வாழத்தேவையான இதர வசதிகள் கிடைப்பதற்கு ஈடாக ஓரிடத்தில் குவியும் மக்கள் அடர்த்தியினால்

எல்லைப்பிரச்சினை, நிலம் யாருக்குச் சொந்தம் அல்லது ஆக்கிரமிப்பின்பால் ஏற்படும் பிரச்சினைகள் இவைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் எங்கு/ எப்படிக் குடியிருக்க விரும்புகிறார்கள் என்பதால் ஏற்படும் அழுத்தத்தாலும்

போக்குவரத்துக்கான வழிகளாக இருத்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மத சம்பந்தமான இடங்களைக் கைப்பற்றுதல் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளுக்கு அருகிலிருத்தல் போன்ற காரணிகள் முதலாவதாகக் கொள்ளப்படுகின்றன.

 

02. அகதிகளாகுதல் மற்றும் உள்நாட்டிலேயே இடம்பெயரல் நடப்பது

வன்முறையின் மூலமும் அடக்குமுறையின் மூலமும் பெருந்திரளானமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தல், அதன் மூலம் ஏற்படும் நோய்கள், சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்காமலிருப்பது, இருக்கும் இடத்திற்கு ஏற்படும் கடும்போட்டி,

உள்நாட்டிற்குள் அல்லது அண்டை நாடுகளுடன் ஏற்படும் குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மையினால் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்.

 

03. பரம்பரையாகக் கடத்தப்படும் வெறுப்பினால் உண்டாகும் நிலையற்ற தன்மை

அரசாங்கத்தாலோ அல்லது பலமுள்ள ஒரு குழுவினாலோ, தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு குழுவிற்கு தற்போதோ அல்லது நூறாண்டுகளுக்கு முற்பட்டு எப்போதோ நடந்த அநியாயங்களுக்குப் பழிவாங்குதலும்

அமைப்பு ரீதியாக அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படுதல், அதிகம் சொத்து சேர்த்ததற்காகவோ ( சுரண்டல் மூலம்) அதிகாரம் செய்ததற்காவோ, பொதுவில் ஒரு குழுவையோ, அல்லது ஓரினத்தையோ தொடர்ந்த பொய்ப்பிரச்சாரம் மூலம் பலிகடாவாக்குவது

 

04. தொடர்ந்த மக்கள் நகர்வு

திறமைசாலிகளும் அறிவுஜீவிகளும் அரசியலில் எதிர்நிலையைக் கொண்டிருப்பவர்களும் புலம்பெயர்தல்

மத்திய வர்க்கத்தின் விருப்ப இடம்பெயர்வுகள், மற்றும் வெளிநாடு வாழ் மக்களின் எண்ணிக்கை உயர்வு.

 

பொருளாதாரக் காரணிகள்

05. சமூகக் குழுக்களுக்குள் சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சி

கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதாரத்தில் வகுப்புவாரியாக இருக்கும் ஏற்றதாழ்வுகள், குழந்தைகள் இறப்பு, கல்வியறிவு பெற்றவர்களின் அளவு.

 

06. தலைகீழ் மற்றும் மோசமான பொருளாதார வளர்ச்சிக் குன்றல்

தனி நபர் வருமானம், நாட்டின் மொத்த உற்பத்தி, கடன்கள், குழந்தை இறப்பு விகிதம், வறுமை, வியாபாரத் தோல்விகள் இவைகளை அடிப்படையாகக் கொண்டு சமுகத்தின் பொருளாதார வீழ்ச்சி கணக்கிடப்படுகிறது.

 

அரசியல் காரணிகள்

07. குற்றமயமாகுதல் மற்றும் அதிகாரமிழக்கும் அரசுகள்

பரவியுள்ள ஊழல், அதிகாரத்திலிருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் முறைகேடாக லாபமடைதல், வெளிப்படைத்தன்மையுடன் இயங்க மறுத்தல், பொறுப்பெடுக்க மறுத்தல், அரசியல் பிரதிநிதித்துவத்தை மறுத்தல் ஆகியன.

 

08. பொதுமக்கள் சேவை இயந்திரம் இயங்க மறுத்தல் அல்லது சேவையே செய்யாதிருத்தல்

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, அடிப்படை சுகாதாரம், போக்குவரத்து ஆகியவைகளை அளிக்க முடியாமலும், பொதுமக்களை பயங்கரவாதம், மற்றும் வன்முறைகளிலிருந்து பாதுகாக்க இயலாமலும் இருத்தல்.

பொதுமக்கள் சேவைக்கென இருக்கும் அரசு இயந்திரம் ஆளும் மக்களுக்கு சேவை செய்யத் திருப்பிவிடுதலும்..

 

09. மனித உரிமைகள் பரவலாக மீறப்படல்

அடக்குமுறை, இராணுவ ஆட்சி நடப்பது அல்லது மக்களாட்சியை முடக்குவது அல்லது அதன் பெயரில் அடக்குமுறை ஆட்சியை நடத்துவது.

அரசியலால் உந்தப்பட்ட கலவரங்கள் மூலம் அப்பாவிப் பொதுமக்களைத் துன்புறுத்துவது.

அரசியல் கைதிகளின் எண்ணிக்கை பெருகுவது, மற்றும் அவர்களுக்கு உலகநடப்புகளுக்கேற்ப அல்லாமல் அவர்களின் உரிமைகளை நசுக்குவது.

தனிமனிதர்கள், அமைப்புகள் மற்றும் கலாசார நிறுவனங்களின் மீது செலுத்தப்படும் அரசியல், நீதி மற்றும் சமூக அதிகார துஷ்பிரயோகம், உதாரணமாக பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குதல், நீதித்துறையில் அரசியல் கலக்குதல், சொந்த அரசியல் லாபங்களுக்காக இராணுவத்தைப் பயன்படுத்துதல், மத சுதந்திரத்தை நசுக்குதல்.

 

10. நாட்டிற்குள் நாடு அல்லது தனி அரசாங்கம்

அரசின் படைகளால் தொடமுடியாத அளவு அரசியல் பலத்தில் தனிப்படைகள் உருவாகுதல். அரசின் ஆசிபெற்ற அல்லது அரசாலேயே உருவாக்கப்படும் அரசியல் எதிரிகளை அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவய் இருக்கும் பொதுமக்களை மிரட்ட அல்லது ஒழிக்க உருவாக்கப்படும் கூலிப்படைகள் இருத்தல்

இராணுவத்திற்குள்ளேயே பலம் பொருந்திய இரண்டு இராணுவத் தலைமைகளின் போட்டியால் உருவாகும் இன்னொரு இராணுவம் அமைவது, கொரில்லப்பட்டைகள் உருவாவது, அரசுப்படைகளுடன் மோதும் தனிப்படைகள் உருவாவது.

 

11. பிரிவினைவாதிகள் உருவாவது

குழுமனப்பான்மையில் ஒன்று திரளும் ஆளும் வர்க்கத்தினரால் உருவாகும் பிரச்சினைகள். பழமையை மீட்டெடுப்போம் என்ற பெயரில் அரசியல் ரீதியாய் நெருக்குதல். அடிப்படைவாதம்.

 

12. பிற நாடுகளின் தலையீடு மற்றும் அவர்களின் கருத்துகளால் உந்தப்படுதல்

அரசியலில் இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் தலையீடு. நாட்டிற்கு உதவி செய்வோர்களினால் ஏற்படும் அழுத்தம் மற்றும் அரசியலில் அவர்களின் தலையீடு, மற்றும் அமைதிப்படையினரால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் தலையீடு.

மேற்கண்ட 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றுப்போன அல்லது வீழ்ந்த நாடுகளின் பட்டியல் உருவாக்கப்படுகிறது.

இந்த அளவுகோள்களின்படி பார்த்தால் நம் நாடு கிட்டத்தட்ட வீழ்ந்த நாடாக இருப்பதுபோலத் தெரிகிறது.

யார் மத்திய அமைச்சராவது என்பதை ஒரு தரகுப் பெண்மணி முடிவு செய்கிறார்.

நம்நாட்டின் மக்களின் சாவுக்குக் காரணமான குற்றவாளியை அரசே தப்பிக்க வைக்கிறது.

குண்டு வெடிக்காத நாளில்லை என நிலை.

நாட்டின் பல பாகங்களில் காட்டாட்சி.

அரசியல் லாபங்களுக்காக சிறுபான்மையினருக்கு அதீத சலுகைகள் அளித்தல், அவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமலிருத்தல் அல்லது தப்பிக்க வைத்தல்.

ஓரினத்தை மட்டும் குறிவைத்து செய்யப்படும் கோயபல்ஸ் பிரசாரம்; அதன் மூலம் சமூகத்தில் கிடைக்கவேண்டிய நியாயமான பங்கை மறுத்தல்; அதன் மூலம் புலம் பெயரவைத்தல்.

இராணுவம் நமது நிலப்பகுதியின் மீது முழுக்கட்டுப்பாடு இல்லாதிருத்தல்.

மதமாற்ற சக்திகள் உண்டாக்கும் குழப்பங்கள்.

வெளிநாட்டிலிருந்து வெள்ளமாய்ப் பாயும் பணத்தால் உண்டாகும் குண்டு வெடிப்புகள், அடையாள மாற்றங்கள்.

அரசின் உளவுப்பிரிவை தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்.

இப்படிப் பார்க்கும்போது நமது நாட்டைக்குறித்த அச்சம் இயல்பாகத் தோன்றுகிறது.

சரி நமது பக்கத்து நாடுகள் எப்படி இருக்கின்றன? நம்மீது என்ன மாதிரியான அபிப்ராயம் வைத்திருக்கின்றன?

 

நேபாளம்

அரசாட்சி நடந்து கொண்டிருந்த இடத்தில் கம்யூனிச மாவோ பிரிவினரால் நாடு சூழப்பட்டு அரசாட்சி அகற்றப்பட்டு இன்று பெயருக்கு மக்களாட்சி என்ற பெயரில் ஏதோ ஓர் ஆட்சி நடக்கிறது. மக்கள் ராஜாவின் ஆட்சியில் கஷ்டப்பட்டது போலவே இப்போதும் அல்லது அதைவிட சற்று அதிகமகவே கஷ்டப்படுகின்றனர். கிட்டத்தட்ட மூழ்கிப்போன நாடு. மதமாற்றக் கும்பல்களின் வேட்டைக்களம். மாவோயிஸ்ட்டுகளை வளரவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு நேபாளம் ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் தற்போதைய புதிய தலைவலி. ஒவ்வொரு நாடும் எவ்வளவு அமைதியாய் இருக்கிறது என்ற அட்டவணையில் நேபாளத்திற்கு 77-ஆவது இடம்.

 

பாகிஸ்தான்

மத அடிப்படைவாதம் தலைவிரித்தாடும் ஒரு நாடு. இராணுவத்தின் ஆட்சி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எப்போதும் நடைபெறும் ஒரு நாடு. இந்திய எதிர்ப்பே அல்லது அச்சுறுத்தலே அங்கிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தின் துருப்புச்சீட்டு, மக்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க. அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாய் இருந்து இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைப்பதை மட்டுமே தொழிலாகச் செய்துவிட்டு இன்று இருண்ட உலகில் வாழ நேர்ந்திருக்கும் நாடு. விடிவுகாலம் வர வாய்ப்பே கண்ணெதிரில் தெரியாமல் இருக்கிறது. இதன் உள்நாட்டுக் குழப்பம் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

 

பங்களாதேஷ்

பாகிஸ்தானின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவால் காப்பாற்றப்பட்டு தனிநாடாக ஆக்கப்பட்ட நாடு. அவ்வப்போது நமது ஜவான்களைச் சுட்டும், அங்கிருக்கும் இந்துக்களை கொடுமை செய்தும், வண்புணர்ந்தும், சொத்துகளை அபகரித்தும், கோயில்களைத் தீக்கிறையாக்கியும் நன்றிக்கடன் செலுத்தும் நாடு. மிக வேகமாய் மதவாதிகளின் பிடியில் வந்துகொண்டிருக்கும் நாடு. கூடிய விரைவில் இன்னொரு தாலிபான்கள் ஆண்ட ஆஃப்கானிஸ்தான் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாய் இருக்கும் நாடு.

 

இலங்கை

மூட்டைப்பூச்சியை நசுக்க வீட்டையே தீவைத்துக் கொளுத்திய அன்புமிக்க நாடு. புத்தரின் பேரால், சிங்களப் பேரினவாதத்தின் பேரால் அங்கு தமிழர்களை குவியல் குவியலாய் ஈவிரக்கமின்றி கொன்றழித்த நாடு. மீண்டும் அதே பாதைக்குத் திரும்பும் நிலையில் தற்போதிருக்கிறது. இந்தியாவிலிருந்து தனக்கான எல்லா உதவியையும் பெற்றுக்கொண்டு சீனாவைக் கொண்டும், பாகிஸ்தானைக் கொண்டும் இந்தியாவை மிரட்டும் இன்னொரு நன்றியுள்ள நாடு.

இந்த நிலையில் இந்தியாவுக்குக் கிடைக்கவேண்டியது ஒரு சீரிய தலைமையும், நாட்டைக்குறித்து உண்மையாய் சிந்திக்கும் ஆளும் கட்சியுமே. நாம் ஒரு நாடாக தோற்றுப்போவது நம்மை ஆள்வோர் உள்ளிட்ட யாருக்கும் நல்லதல்ல.

16 Replies to “தோற்றுப்போன நாடுகள்?”

  1. நல்ல பயனுள்ள கட்டுரை. இந்தியாவைச் சுற்றி இருக்கும் பல நாடுகள் சிதறிப் போகும் நாடுகள் இந்தியா ஸ்திரத்தன்மையுடன் வாழ இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.

  2. அமெரிக்க அரசாங்க நிதி உதவியுடன் முகமூடி கிறிஸ்தவ அமைப்புகள் வெளியிடும் இத்தகைய பட்டியல்களை ஒரு பொருட்டாகக் கருத வேண்டியதில்லை. இந்தியா தன் எல்லைகளைப் பாதுகாக்கவோ, உள்நாட்டில் அமைதியைத் தக்கவைத்துக் கொள்ளவோ தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால், மனித உரிமை மீறல், மத சுதந்திரம் மறுப்பு, போர் வெறி என்ற காரணிகளைக்கொண்டு, பட்டியலில் நம்மை இன்னும் பின்னுக்குத் தள்ளுவார்கள்.

    ‘Fund for Morality’ என்று ஓர் அமைப்பை நாமும் ஏற்படுத்தி, morally and ethically bankrupt நாடுகள் என்று ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும். அதில் அமெரிக்காவுக்கு முதல் இடத்தையும், பிற இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளுக்கு – அவற்றின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் – அடுத்தடுத்த இடங்களையும் கொடுத்து வெளியிட வேண்டும். அப்போதுதான் இவர்கள் இந்தப் பட்டியல் அரசியலை நிறுத்துவார்கள்.

    பா. ரெங்கதுரை

  3. Shri Rengadurai, i completely agree with your view. You have put it in a way that is precisely to the point . Well done sir

  4. பட்டியலுக்கு எதிர்ப் பட்டியல்
    ஆஹா, பேஷ் பேஷ் நல்ல தீர்வு
    அந்த மாதிரி பட்டியல் போட்டு விட்டால் பிறகு குண்டு வெடிப்பு,ஹிந்து அழிப்பு,கொலை, கொள்ளை,மாவோயிஸ்ட் அராஜகங்கள் , சிறுபான்மை அக்கிரமங்கள்,மத மாற்றம் எல்லாம் நின்றுவிடும்.
    அமெரிக்காவிடம் நாம் சொல்லலாம் – ‘இப்ப என்ன பண்ணுவ’ !

    இரா.ஸ்ரீதரன்

  5. அவர்கள் பட்டியல் போடாமலேயே நமக்குத் தெரியும்.
    நம் நாட்டை எப்படி பல அரசியல் மற்றும் வேறு இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கும் ,சிதைக்கும் நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது.
    அவர்கள் எல்லாம் தேச விரோத சக்திகளின் கைப்பாவைகளாக, அவர்களின் சம்பளப் பட்டியலில் உள்ளனர்.
    ஆகவே அபாயத்தை உணர்ந்து நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற நாட்டை நமது சந்ததியினருக்கு சிதையாமல் விட்டுச் செல்வது நமது பொறுப்பு.
    அதற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்

    இரா.ஸ்ரீதரன்

  6. கிருஸ்துவத்தின் குறிக்கோள் ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால்தான் அவர்களது மதமாற்று வியாபாரம் நடந்துகொண்டிருக்கும். கிருஸ்துவ காலணிஆட்ச்சியால் கிழேதரப்பட்டுள்ள நாடுகளின் ஏழ்மை நிலை
    (தேசம் – கிருஸ்துவர்களின் எண்ணிக்கை – வருமைகோட்டிற்க்குகிழே உள்ளவர்களின் விகிதாசாரம்)
    போலிவியா – 100 % (Christian ) – 64 % (below poverty line)
    ஆண்டுராஸ் – 100 % – 53 %
    பனாமா – 100 % – 37 %
    வெனிசுலா – 98 % – 47 %
    எய்டி – 96 % – 80 %
    இகுவேடார் – 95 % – 45 %
    மெக்ஸிகோ – 95 % – 40 %
    அர்சன்டைனா – 94 % – 44 %
    ராவான்டா – 93 % – 60 %
    இஸ்ட் டைமேமார் – 93 % – 42 %
    பிலிபைன்ஸ் – 92 % – 40 %
    கௌடமாலா – 90 % – 75 %
    நாமிபியா – 90 % – 50 %
    கோலம்பியா – 90 % – 55 %
    இஐ சால்வேடார் – 83 % – 36 %
    பெரு – 83 % – 54 %
    சவுத் ஆப்பிரிக்கா – 80 % – 50 %
    சாம்பியா 75 % – 86 %
    சிம்பாவே – 75 % – 70 %
    போட்ஸ்வானா – 72 % – 47 %
    புருன்டி – 67 % – 68 %
    ஆனால் அமெரிக்காவின் ஏழ்மை நிலை 12 (இதில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிலை 26 % இப்பிகள் 25 % ) ஆனால் இந்தியாவின் கிருஸ்துவர்களின் விகிதம் 10 % ஏழைமைகோட்டிற்க்கு கிழே உள்ளவர்களின் நிலை 25 % எனவே கிருஸ்துவர்களன் எண்ணிக்கை அதிகரித்தால் ஏழ்மைநிலை உயரும்.

  7. Pingback: Indli.com
  8. ஸ்ரீ. ஜெயக்குமார் ,
    மிக நல்ல கட்டுரை. வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். கடைசியில் இலங்கை,வங்காள தேசம் இவற்றைப் பட்டியலிட்டதற்கு பாராட்டுக்கள். ஆனால் ஏன் தமிழ் ஹிந்துவிற்கு, இலங்கை இனப்படுகொலைகளுக்கு, சிங்களவர் மட்டுமல்ல இந்தியாவும் காரணம் என்பதையும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள், பகிரங்கமாக தாங்கள் தமிழர் அல்ல முஸ்லிம் மட்டுமே என்றும், தமிழர்களுக்கு அவர்கள் எதிரிகள் என்றும் சொல்வதையும் எந்தக் கட்டுரையிலும் குறிப்பிடத் தோன்றுவதில்லை?

    ஸ்ரீ. ரெங்கதுரை,
    அமெரிக்க நாடுதான். எங்கெங்கே பல்வேறுபட்ட இனங்கள் சேருகின்றனவோ அங்கெல்லாம் கலாச்சாரம் அழியும். அதனால் அதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் இந்தியாவை விட ஒன்றும் கேவலமான நாடு இல்லை. இந்தியாவைப் போல் சிங்களவர்க்கும், வங்காள தேச முஸ்லிம்களுக்கும் நன்மை செய்துவிட்டு, காஷ்மீர ஹிந்துக்களையும், தமிழர்களையும் சாகவிட்டுப் பார்க்கும் சுயநலக் கூட்டமில்லை அமெரிக்கா. ஒரு வேலை நீங்கள் காந்தி இந்தியாவிற்கு சுதம்திரம் வாங்கி கொடுத்துவிட்டார் என்று நினைக்கிறீர்களோ என்னவோ, உண்மையில் அமெரிக்காதான் இந்திய சுதந்திரத்துக்கு ஓரளவுக்கு அடிகோலாக இருந்தது. இதே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவியாக பயங்கர ஆயுதங்கள் கொண்ட போர்க்கப்பலை இந்தியப பெருங்கடலில் நிறுத்த அதற்கு இலங்கை முழுமையாக ஒத்துழைத்தது. இந்த இலங்கைக்குத்தான் இந்தியா இப்போது தமிழர்களைக் கொல்ல உதவி செய்கிறது.

  9. கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் ஈழத் தமிழர்களுடன் ஒத்துழைக்கவே மறுத்தனர்
    அதனால் அவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் அடிக்கடி மோதல் நடந்தது
    அதைப் பற்றி இங்கு உள்ள கழகங்கள் மற்றும் போலியாக முதலைக் கண்ணீர் வடிக்கும் கட்சிகள் ,இயக்ககங்கள் மூச்சே விட்டதில்லை

  10. ஜெயக்குமார், அமெரிக்க அமைப்பின் புள்ளி விவரங்களையும் தந்து அதன் பின்னுள்ள அரசியலை நாம் எப்படி நோக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு அருமையாக, எளீமையாக எழுதியுள்ளீர்கள்.

    // வெற்றிபெற்ற நாடு என்பது மாக்ஸ் வெப்பரின் கருத்துப்படி, தனக்கு உரிய பலப்பிரயோகத்தை தனது நில எல்லைக்குள் முழுதும் பயன்படுத்த முடியும் ஒரு நாடு. //

    மாக்ஸ் வெபரும் மற்ற நவீன அரசியல் நிபுணர்களும் சொல்லும் இந்தக் கருத்துக்கள் நமக்கு முற்றீலும் புதியவை அல்ல. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும் வள்ளுவரும் குறளும் நமக்குப் போதித்த கருத்துக்கள் தாம் இவை.

    பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு.

    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேராதியல்வது நாடு.

    கேடறியாக் கெட்டவிடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை.

    நமது சுயநல அரசியல்வாதிகளும், சமூகமும் அவற்றை மறந்து நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர்..

  11. ஸ்ரீ. ஜெயக்குமார் ,
    மிக நல்ல கட்டுரை

    ஜடாயு
    23 July 2010 at 9:48 am
    wrote நமது சுயநல அரசியல்வாதிகளும், சமூகமும் அவற்றை மறந்து நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர்..

    very aptly said.

  12. எல் டி டி ஈ இருந்தவரை இலங்கை அரசின் சக்தி முழுக்க அதை அடக்குவதிலேயே செலவிடப் பட்டது.
    ஆனால் இப்போது அதை ஒழித்துக் கட்டிய பின் இந்தியாவை சிறிதும் மதிக்காமல் நமது எதிரியான சீனாவுக்கு கொழும்பு துறைமுக காண்ட்ராக்ட் ,மற்றும் ரோடுகள் போட காண்ட்ராக்ட் எல்லாவற்றையும் கொடுத்துள்ளது
    அதற்காக இருபத்து ஐந்தாயிரம் சீனக் கைதிகளை பணி செய்ய அனுப்பி உள்ளதாகவும் ,இவர்களாலும் அங்குள்ள தமிழர்களுக்கும்,அவர்களில் யாராவது ஒற்றர்கள் இருந்தால் அதனால் இந்தியாவுக்கும் ஆபத்து என்று கூறப் படுகிறது.
    இப்போது சீனா ‘முத்து மாலைத் திட்டம்’ என்ற பெயரில் இந்தியாவைச் சுற்றி பகை நாடுகளை உருவாக்கி உள்ளது – பாகிஸ்தான்,பங்களாதேஷ் ,பர்மா,ஸ்ரீலங்கா .நேபாளம், என்று நம் குரல் வளையை நெருக்குகிறது.

    துளியும் தேச பக்தி இல்லாத நமது அரசு சாணக்யனின் கோட்பாடுகளை மறந்து விட்டது
    அதாவது அண்டை நாடுகளில் கலகம் இருந்தால் சொந்த நாட்டுக்கு பாதுகாப்பு.

  13. அருமையான கட்டுரை! நமக்குத் தேவை வலிமையான திடமான முடிவெடுக்கக் கூடிய தலைமை! மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்! அப்போது தான் அது நடக்கும்! வாக்களிக்க உரிமை உள்ள அனைவரும் தங்கள் உரிமையை சரியான விதத்தில் பயன் படுத்தினாலே சரியாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *